அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 81🔥🔥

5
(7)

பரீட்சை – 81

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

தவறே செய்யாத 

ஒருவனுக்கு 

தண்டனை கொடுக்கும்

தப்பானவன் 

நீ இல்லை 

என

நிச்சயம் நான் 

அறிவேன்..

 

ஒரு குற்றமும் 

செய்யாத 

ஓர் உயிரை 

எடுப்பதற்கு 

உருக்கமோ இரக்கமோ 

அறவே 

இல்லாத மனம் 

வேண்டும்..

 

இன்னொரு உயிரைக் 

காக்க 

உன் இன்னுயிரை 

தருவாய் நீ 

மற்றோர் உயிருக்கு

மரணத்தை

பரிசாய் தரும்

இருதயமே இல்லாத

ஈனப்பிறவியாய்

பிறக்கவில்லை நீ..!!

 

####################

 

உன்னை அறிய.. ஆவல்..!!

 

வெகுநாட்கள் பிரிந்திருந்த தங்கள் வேதனையை இதழ் மூலம் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் ராமும்,தேஜூவும்..

வெகு நேரம் ஒருவர் இதழால் மற்றொருவர் இதழில் ஆறுதல் தேடிக் கொண்டிருந்தவர்கள் நடுவே சிறிது மூச்சுக்காற்று தேவைப்பட தங்களின் இதழை விலக்கினார்கள்..

 

அவள் முகத்தை அன்றுதான் புதிதாய் பார்ப்பது போல் பார்த்தவன்.. அப்படியே அவளை தன் கைகளில் ஏந்தி சென்று கட்டிலில்  படுக்க வைத்தான்.. வெகு நாளைக்கு பிறகு தொலைந்த பொக்கிஷம் திரும்பவும் கிடைத்தது போல் அவள் முகத்தையே கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

 

அவளும் ஏதோ அந்த இரவு போனால் அதன் பிறகு அவன் முகத்தை பார்க்கவே முடியாது என்று தோன்றியது போல் அவன் முகத்தில் இருந்து கண்ணை இந்த பக்கம் அந்த பக்கம் அசைக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..

 

அதன் பிறகு அவள் நெற்றியுடன் நெற்றி முட்டியவன் “தேஜூமா.. உனக்கு எந்த உண்மை தெரிஞ்சாலும் என்னை விட்டு போறதை பத்தி யோசிக்கவே யோசிக்காத டி.. நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல.. நீ இல்லன்னா நான் எல்லாத்தையும் இழந்த ஒரு எந்திர மனுஷனா ஆயிடுவேன்..  எந்த உணர்ச்சியும் இருக்காது எனக்கு.. என்னோட சந்தோஷம், துக்கம், என்னோட காதல் கருணை, பரிவு, ஏக்கம், கோவம்னு எல்லாத்திலயும் நீ மட்டும் தாண்டி இருக்க.. என்னை விட்டு போறதை பத்தி தயவு செஞ்சு இனிமே பேசாத.. அந்த அருண் என்ன பண்ணாலும் சரி உன்னையும் என்னையும் பிரிக்க முடியாது.. இதை மட்டும் என்னிக்கும் ஞாபகம் வச்சுக்கோ.. நீ எனக்கு மட்டும் சொந்தமானவ.. என்கிட்ட இருந்து உன்னை யாருமே எடுத்துட்டு போக முடியாதுடி..” என்று சொன்னவன் மறுபடியும் அவள் இதழை சிறை பிடித்தான்..

 

அவன் இதழ் சிறைக்குள் இருக்க மனப்பூர்வமாக தன் இதழை கொடுத்தவள்.. கண்களில் கண்ணீர் மழை கொட்டிக் கொண்டிருந்தது..

 

அதன் பிறகு அவளை தன் மீது ஏந்தியவன் அவள் கண்ணீரை இதழால் துடைத்து விட்டான்.. அதன் பிறகு அவளை கீழே கிடத்தி அவள் மேல் படர்ந்தவன் அவள் கழுத்தில் மெல்ல முகம் புதைத்து முத்தமிட்டான்..

 

இரவு முழுதும் கண்ணீருக்கும் கலக்கத்துக்கும் இடையே அவர்கள் இருவரும் தங்கள் காதல் ஏக்கங்களை தீர்த்துக் கொண்டார்கள்..  ஒரு புறம் கலக்கம் இருந்தாலும் மறுபுறம் அவர்களுடைய அந்த திடீர் கூடல் அவர்களுக்குள் சொல்லொணா மகிழ்ச்சியை நிரப்பி இருந்தது..

 

விடியல் பொழுதில் களைத்து போய் அவன் மார்பிலேயே படுத்து துவண்ட கொடி போல உறங்க ஆரம்பித்தாள் தேஜூ.. அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன் அடுத்த நாள் அவர்களுக்கு எப்படி விடிய போகிறதோ என்ற கவலையுடனே தன் கண்களை உறங்குவதற்கு மூடினான்.. ஆனால் உறக்கமோ அவன் கண்ணை விட்டு வெகு தூரம் போயிருந்தது..

 

அடுத்த நாள் காலை தன் மார்பில் பூ போல் உறங்கிக் கொண்டிருந்தவளை எழுப்ப மனம் இல்லாது அப்படியே படுத்து அவள் முகத்தையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தான் ராம்..

 

தன்னவனின் மார்புக்குள் முகத்தை வைத்து நிம்மதியாய் கவலைகள் குறைந்து ஒரு பூ போல உறங்கிக் கொண்டிருந்தவளை அப்படியே உறங்க விட்டு நாள் முழுதும் பார்த்திருக்கலாமோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் அவன் அறை கதவு தட்டப்பட்டது..

 

அறை கதவு தட்டப்படும் சத்தத்தில் விழி திறந்த தேஜு அப்போதுதான் தான் எங்கிருக்கிறோம் என்று உணர்ந்தாள்.. தன்னவனின் மார்பில் தன்னுடைய நிலையை பார்த்து விட்டு வெட்கத்தில் கன்னம் சிவந்தவள் சட்டென எழுந்து குளியல் அறைக்குள் ஓடிவிட்டாள்..

 

தன் உடையை ஒழுங்காக அணிந்து கொண்டு சென்று கதவை திறந்த ராம் அங்கே நின்று கொண்டிருந்த அருணை பார்த்து சிறிது கோபப்பட்டான்..

 

“காலங்காத்தால உனக்கு என்ன இங்க வேலை..?” என்று கேட்டவனிடம் “அங்க பூஜாவும் அஷ்வினும் எழுந்துட்டாங்க.. ரெண்டு பேரும் அம்மா எங்கே அம்மா எங்கேன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க.. நிவேதா அவங்களை கஷ்டப்பட்டு சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கா.. அதான் அஸ்வினியை கூப்பிட வந்தேன்..” என்றான் அலட்சிய பார்வையோடு..

 

அவன் சொன்னது குளியலறையில் இருந்த தேஜூவுக்கு கேட்டு விட அவசர அவசரமாக குளித்து உடை மாற்றி வெளியே ஓடி வந்தாள் அவள்.. 

 

அருணை எரிப்பது போல் முறைத்தவள் ராம் பக்கம் திரும்பி “நான் போய் குழந்தைகளை பார்க்கிறேன்..” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக அந்த அறையை விட்டு வெளியே போனாள்..

 

“அருண் உனக்கு என்னதான் வேணும்? எதுக்கு எங்களை போட்டு இப்படி படுத்துற? அவளுக்கு உன்னை பத்தின எந்த ஞாபகமும் இல்லை.. அப்புறம் அவளை கட்டாயப்படுத்தி உன்னோட இருக்க வைக்கணும்னு ஏன் நினைக்கிறே..? வேண்டாம்.. இஷ்டம் இல்லாத பொண்ணை உன்னோட வாழ சொல்லி கம்பெல் பண்ணறது ரொம்ப கொடூரமான விஷயம்.. முன்னாடி சரண் இதை தானே பண்ணினான்.. அப்போ அவன் மேல உனக்கு கோபம் வந்தது இல்ல? இப்போ அவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? நீயும் அதையே தானே பண்ற?” என்று சொன்னவனை பார்த்து தன் கையை “நிறுத்து..” என்பது போல் காட்டினான் அருண்..

 

“சரண் செஞ்சதுக்கும் நான் செய்யறதுக்கும் நிறைய டிஃபரன்ஸ் இருக்கு ராம்.. எந்த காலத்திலயும் சரணை அஸ்வினி விரும்பல.. ஆனா என் அஸ்வினி என்னை உயிருக்குயிரா விரும்பி இருக்கா.. என்னால அவளுக்கு எல்லாரும் கொடுக்கிற மாதிரி ஒரு காதலை கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சும் கூட நான் கொடுக்கிற காதலையே இந்த உலகத்துல இருக்குற அத்தனை பேர் காதலுக்கும் சமமா நினைச்சு வாங்கிகிட்டு கொண்டாடினவ அவ.. எங்களுக்குள்ள இருந்த காதல் அவளுக்கு மறந்து போய் இருக்கு.. அவ்வளவுதான்.. என் காதல் அவளுக்கு நினைவு வந்ததுன்னா அவ என்னை தவிர வேற யாரையும்… ஏன்..? உன்னையும் கூட..” என்று அவன் மார்பில் சுட்டு விரலால் தட்டி சொன்னவன் “நினைக்க மாட்டா..” என்றான் உறுதியான குரலில்..

 

“உண்மைதான்.. ஒத்துக்கறேன்.. ஆனா இதெல்லாம் எங்க கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் கழிச்சு நீ என் மாமாவை வந்து பார்த்தியே அப்பவே உனக்கு தெரியாதா? பேசாம அப்பவே வந்து உண்மையை சொல்லி இருக்கலாமே.. நீ அப்ப வராம ஆறு வருஷம் கழிச்சு இப்ப எதுக்கு வந்திருக்க? அப்ப இருந்த அதே தேஜூ தானே இப்பவும் இருக்கா.. இப்ப திடீர்னு உனக்கு என்ன ஞானோதயம்? அவளுக்கு மறந்தது எல்லாம் ஞாபகம் வந்தா உன்னை மட்டும் தான் நினைச்சுகிட்டு இருப்பான்னு..” என்று சரியாக கேட்டவனை பார்த்து “என்னோடதும் மனுஷ மனசு தான் ராம்.. மனுஷன் மனசு எப்ப வேணா மாறலாம்.. அப்போ அவ சந்தோஷத்துக்காக அவ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால வாழ்ந்துர முடியும்னு நெனச்சேன்.. ஆனா இந்த நாலு வருஷ வாழ்க்கையில அது முடியவே முடியாதுன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு.. அதான்.. அவளுக்கு எப்படியாவது என் ஞாபகத்தை வர வச்சு அவளோட வாழணும்னு முடிவு பண்ணி வந்துட்டேன்” என்றான் அருண்..

 

அவன் வாதம் எல்லாம் மிகச் சரியாகவே இருப்பதாக தோன்றினாலும் ராமுக்கு ஏனோ அவன் பொய் சொல்வதாகவே தோன்றியது.. மனதில் எதையோ வைத்துக் கொண்டு பேசுகிறான் என்று அவனுக்கு மிகவும் அழுத்தமாக தோன்றியது.. 

 

எப்படியும் அது வெளியே வந்து தான் ஆக வேண்டும் என்று நினைத்தவன் “சரி முயற்சி பண்ணு.. நீ அவ மனசுல பழைய ஞாபகங்களை கொண்டு வந்து உன்னோட அஷ்வினியா அவளை அழைச்சிட்டு போறியா இல்ல என் தேஜூவை என்னோட தேஜூவா என்னோடயே நான் இருக்க வச்சிக்கிறேனான்னு பாக்கலாம்..” என்று சொன்ன ராம் “சரி.. அதான் தேஜூ போயிட்டா இல்ல? பிள்ளைகளை பார்க்க.. நீயும் கிளம்பு..” என்றான்..

 

“அப்புறம்.. உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்.. இன்னிக்கி நாங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கோயிலுக்கு போறோம்.. அங்க போய் நீ அஷ்வினிக்கு கட்டுன தாலியை இறக்கிட்டு நான் அவளுக்கு என் கையால தாலி கட்ட போறேன்.. ஏற்கனவே அங்கதான் எங்களுக்கு கல்யாணம் நடந்தது.. இப்போ அந்த கல்யாணத்தை ரிப்பீட் பண்ண போறேன் அவ்ளோதான்..” என்று அருண் சொல்ல “நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது நடக்காது.. உனக்கு வேணும்னா என்னை கொன்னுட்டு தேஜூ கழுத்தில தாலியை கட்ட முயற்சி பண்ணு.. ஆனா உன்னால அது முடியாதுன்னு எனக்கு தெரியும்.. நீ அவ்வளவு மோசமான ஆளும் இல்லை..” என்றான் ராம்..

 

“த்சு… த்சு.. த்சு.. த்சு.. ஆனாலும் நீ என்ன ரொம்ப நம்புறியே.. உன்னை பார்த்தா ரொம்ப பாவமா தான் இருக்கு.. பார்க்கலாம்.. நான் எந்த வயலன்ஸும் யூஸ் பண்ணாம அஸ்வினியை நல்லபடியா என்னோட வாழ வைக்கணும்னு நினைக்கிறேன்.. அப்படி இல்ல ஒரு உயிர் போனா தான் அவ நல்லபடியா வாழ்வான்னா நான் அதுக்கும் தயாரா தான் வந்து இருக்கேன்.. அஸ்வினியை நல்லபடியா வாழ வெக்க என்னால மட்டும் தான் முடியும்..” என்று உறுதியாக சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான் அருண்..

 

ராமுக்கு அவன் எதையோ மறைத்து பேசுவது போலவே இருக்க “இவன் என்னவோ மனசுல நினைச்சுகிட்டு தான் பேசறான்.. என்ன பண்ண போறான்னு தெரியல.. ஆனா ஏன்னே தெரியல.. இவனை தப்பா நினைக்கணும்னு தோணவே மாட்டேங்குது.. நடந்த இவனோட காதல் கதையை கேட்டதாலயா இல்ல இவன் குணத்தை பத்தி தெரிஞ்சதுனாலயான்னு தெரியல.. பார்ப்போம்..” என்று நினைத்தவன் உள்ளே சென்று குளித்துவிட்டு உடை மாற்றி வெளியே வந்தான்..

 

ராம் கீழே வரவும் தேஜூ அங்கே குழந்தைகளை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்துக் கொண்டிருந்ததை பார்த்தான்.. தானும் சென்று சாப்பாட்டு மேஜையின் முன்னால் தேஜுவின் பக்கத்து இருக்கையில் அமரப் போக வேண்டும் என்றே அவன் அமரப் போகும்போது அவனை தள்ளி விட்டு அருண் அமர்ந்து கொண்டான்..

 

ராம் அருகில் இருந்த மற்றொரு கதிரையில் அமர்ந்தான்.. பிள்ளைகள் இருவரையும் பார்த்து தேஜூ “அஸ்வின்.. பூஜா.. ரெண்டு பேரும் உள்ள போயி சமத்தா விளையாடுங்க..” என்று சொல்ல “ஓகே மம்மி..” என்றார்கள் இருவரும்.. பிறகு உள்ளே ஒரே ஓட்டமாய் ஓடி சென்று விட்டார்கள்..

 

தேஜூ தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்று ராமின் மடியில் அமர்ந்து கொண்டாள்.. அருணைப் பார்த்து புருவம் உயர்த்தி சிரித்த ராம் “தேஜூமா. நீ சாப்பிடல?” என்று கேட்க “உங்களுக்காக தான் ராம் காத்துட்டு இருக்கேன்..” என்று சொன்னாள் தேஜூ..

 

“சரி.. தட்டு எடுத்து வை.. நம்ம ரெண்டு பேரும் ஒரே தட்டில சாப்பிடலாம்..” என்று சொல்லி ஒரே தட்டில் இட்லி வைத்து குழம்பு ஊற்றி இவன் ஒரு வாய் அவளுக்கு ஊட்ட அவள் ஒரு வாய் இவனுக்கு ஊட்ட இருவரும் அந்த தட்டில் இருந்த இட்லிகளை ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டு ஆனந்தமாக சாப்பிட்டு முடித்தார்கள்..

 

அதைப் பார்த்த அருண் “சாப்பிடுங்க.. சாப்பிடுங்க.. இன்னைக்கு ஒரு நாள் தான் நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒண்ணா சாப்பிட முடியும்.. நாளையில இருந்து இதே மாதிரி என் அஸ்வினியோட நான் சாப்பிட்டுட்டு இருப்பேன்..” என்று சொன்னான்..

 

அப்போது தேஜூவோ “எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அது நடக்க போறது இல்ல.. நீ கனவு கண்டுட்டே இரு..” என்றாள் அவனைப் பார்த்து..

 

“அதையும் பார்க்கலாம்.. அஷ்ஷூமா.. சரி இப்ப சாப்பிட்டு எல்லாரும் கிளம்புங்க.. நம்ம அந்த கோவிலுக்கு போறோம்.. கல்யாணம் பண்ணனும் இல்ல..?” என்று கேட்க “நான் எங்கேயும் வரல.. நான் என் ரூமுக்கு போறேன்” என்று சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தவளிடம் “அஷ்ஷூமா.. அதுக்குள்ள மறந்து போயிட்டியா?” என்று சொன்னவன் “அஸ்வின் பூஜா.. ரெண்டு பேரும் இங்கே வாங்க..” என்று அழைக்க இருவரும் “ஹாய் அங்கிள்..” என்று சொல்லிக் கொண்டு அவனிடம் சென்றார்கள்..

 

“ஆமா.. நான் உங்ககிட்ட என்ன சொல்லி இருக்கேன்?” என்று அவன் கேட்க “என்ன சொல்லி இருக்கீங்க?” என்று கேட்டான் அஸ்வின்..

 

“நான் உங்களோட நியூ டாடி.. என்னை டாடின்னு தான் கூப்பிடனும்னு சொல்லி இருக்கேன்.. இல்லையா?” என்று கேட்டவுடன் தலையை சொரிந்த பூஜா “ராம் டாடி தான் உங்களை அப்படி கூப்பிட வேண்டாம்னு சொன்னாங்க.. இப்ப நீங்க டாடினு கூப்பிட சொல்றீங்க.. ஒரே கன்ஃபியூஷனா இருக்கு அங்கிள்” என்றாள் பூஜா..

 

“இனிமே உங்களுக்கு நான் தான் டாடி.. உங்க மம்மி என்கூட தானே இருக்காங்க.. இனிமேலும் என்கூட தான் இருக்க போறாங்க.. அதனால இனிமே என்னை தான் டாடின்னு கூப்பிடணும்.. ஓகேவா?” என்று சொல்ல “ஓகே நியூ டாடி” என்றார்கள் இருவரும்.. அதை பார்த்த தேஜு பதறினாள்..

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!

 

மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி 

“❤️❤️சுபா❤️❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!