அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 82🔥🔥

5
(7)

பரீட்சை – 82

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

என்னை காதல் 

அரக்கன் என்று 

சொல்லிக் கொள்..

இல்லை 

காதல் கிறுக்கன் 

என்று 

சொல்லிக் கொள்..

துளியும் அதில்

வருத்தமில்லை..

 

இந்த அரக்கனின் 

அரக்கத்தனமும் 

கிறுக்கனின் 

கிறுக்குத்தனமும் 

உன்னுடைய 

வெகுளித்தனமான

புன்னகையை..

 

நிரந்தரமாய் அந்த 

நிலாமுகத்தில் 

நிலைக்க 

வைப்பதற்காகவே 

ஒவ்வொரு 

நொடிப் பொழுதும் 

நிழல் போல

உன்னை

தொடர்ந்துக் கொண்டே

இருக்குமடி என்

நிலாப்பெண்ணே..!!

 

#####################

 

நிலாப்பெண்ணே..!!

 

 

“இனிமே உங்களுக்கு நான் தான் டாடி.. உங்க மம்மி என்கூட தானே இருக்காங்க.. இனிமேலும் என்கூட தான் இருக்க போறாங்க.. அதனால இனிமே என்னை  டாடின்னு தான் கூப்பிடணும்.. ஓகேவா?” என்று அருண் இரண்டு குழந்தைகளையும் பார்த்து சொல்ல “ஓகே நியூ டாடி” என்றார்கள் இருவரும்.. அதை பார்த்த தேஜு பதறினாள்..

 

“அஸ்வின்.. பூஜா.. இங்க வாங்க..” என்று தேஜு இருவரையும் அழைக்க “போங்க மம்மி.. நியூ டாடி எங்களுக்கு என்ன எல்லாம் வாங்கி தருவார் தெரியுமா?” என்று சொல்லி அருண் பக்கம் திரும்பிய பூஜா “இவ்வளவு நாள் எங்க மம்மியை கூப்பிட்டு எங்க போனீங்க? இனிமே நீங்க எங்களோடயே வந்துருங்க.. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்.. உங்களோட ஜாலியா இருக்கும்..” என்று சொன்ன பிள்ளைகளை அள்ளி எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு தேஜுவை பார்த்து ஒரு ஏளன சிரிப்பை சிரித்தான் அருண்..

 

அப்போது தேஜுவிடமிருந்து பார்வையை விலக்காமல் குழந்தைகள் காதருகே குனிந்து “பூஜா.. அஸ்வின்.. ஒரு சின்ன பிராப்ளம் இருக்கு.. என்னன்னா.. இப்போ அருண் டாடி இருக்கிற ஊர்ல ராம் அப்பா இருக்க முடியாது.. அதே மாதிரி ராம் அப்பா இருக்க ஊர்ல அருண் டாடி இருக்க முடியாது.. நீங்க யாராவது ஒருத்தர் கூட தான் இருக்க முடியும்.. நீங்க யாரோட இருக்க போறீங்க?” என்று கேட்க “எங்களுக்கு ராம் அப்பா தான் பிடிக்கும்.. உங்களோடு தான் பா இருப்போம்” என்று இருவரும் அருணின் மடியில் இருந்து எழுந்து ஓடி வந்து “எங்க செல்ல டாடி..” என்று சொல்லி ராமின் இரு கன்னத்திலும் ஆளுக்கு ஒரு கன்னத்தில் முத்தம் கொடுத்தார்கள்..

 

ராம் ஒரு புருவத்தை உயர்த்தி அருணை பார்த்து இப்போது ஒரு ஏளன சிரிப்பை சிரித்தான்..

 

இப்படியே சாப்பிட்டு முடித்தவுடன் “ஜாலியா ஒரு அவுட்டிங் போலாமா?” என்று சொல்லியபடி பூஜாவையும் அஸ்வினையும் தன் கையில் ஏந்தி கொண்டான் அருண்..

 

புருவத்தை சுருக்கி “அருண்.. நான் குழந்தைகளை கூட்டிட்டு வரேன்” என்றாள் தேஜூ..

 

“ஏன் அஷ்ஷூம்மா.. நானே வச்சிக்கிறேன்.. பூஜா அஸ்வின் என்னோட வருவீங்களா?” என்று கேட்க “மம்மி நாங்க அருண் டாடியோட தான் போவோம்.. ஊருக்கு வந்தப்பறம் உங்க ரெண்டு பேரோட தானே இருக்க போறோம்? இன்னைக்கு ஃபுல்லா அருண் டாடியோடயே இருக்கோம்..” என்று சொன்னவர்கள் அருணோடு இன்னும் நன்கு ஒட்டி கொண்டார்கள்..

 

தேஜுவுக்கு அவர்கள் இருவரும் ஒவ்வொரு முறையும் அவனை “அருண் டாடி.. அருண் டாடி” என்று அழைப்பது வயிற்றுக்குள் நெருப்பை மூட்டி விட்டது.. அவனிடம் அவர்களை நெருங்கவே விடக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அவர்கள் நேரமாக ஆக அவனோடு ரொம்பவும் ஒட்டிக் கொண்டிருப்பதை எண்ணி மனம் கலங்கியது..

 

அவர்கள் இருவரையும் கையில் பூப்போல அள்ளிக்கொண்டு ஆறடி மனிதனான அருண் குழந்தையாய் மாறி குழந்தையோடு குழந்தையாய் கதை பேசிக்கொண்டே தன் காரில் அவர்கள்  இருவரையும் முன்னால் இருந்த  ஓட்டுனர் இருக்கையின் பக்கத்து இருக்கையில் ஏற்றி அமர வைத்துக் கொண்டான்..

 

பிறகு தேஜுவின் புறம் திரும்பி “என்ன அஷ்ஷூம்மா? இப்போ நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு வரீங்களா? இல்ல நான் அஸ்வின் பூஜாவை என்னோட த….னி.‌…யா கூட்டிட்டு போகட்டுமா?” என்று அந்த ‘தனியாக’ என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்தவனை கண்களில் தீவிரமான பயத்தோடு பார்த்தாள் தேஜு..

 

வேறு வழி இன்றி அவன் காரில் பின்பக்க இருக்கையில் ஏறிக் கொண்டாள் தேஜூ..

 

அவளும் ராமும் ஏறுவதை பார்த்து சிரித்தவன், “ம்ம்ம்ம்… அது..” என்று சொல்லி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் “எல்லாரும் போலாமா கல்யாணத்துக்கு? ரெடியா?” என்று அருண் கேட்க அஸ்வின் “யாருக்கு கல்யாணம் நியூ டாடி?” என்று கேட்டான்..

 

“அது சஸ்பென்ஸ்… அங்க வந்தப்புறம் உங்களுக்கு தெரியும்.. சரி போலாமா?” என்று கேட்டான் அருண்..

 

“போலாம் ஃபாஸ்டா..” என்று இரு குழந்தைகளும் சேர்ந்து கத்தினார்கள்..

 

மற்றவர்கள் எல்லோரும் சின்ன பையனுடன் அவனுடைய காரில் ஏறி வந்தார்கள்..

 

அருண் வண்டியை ஓட்டிக்கொண்டு அந்த அம்மன் கோவிலை நோக்கி போனான்.. அங்கே போனவர்கள் வியப்பிற்குள்ளாகுமாறு ஏற்கனவே அங்கு சுமி, நிலவழகன், நித்திலா, சரண் என அனைவரும் இவர்களுக்காக காத்திருந்தார்கள்.. இவர்களை தவிர இரண்டு அடியாட்களும் அங்கு நின்றிருந்தார்கள்..

 

அருண்தான் அவர்களுக்கு அழைத்து அவர்களை எல்லாம் வர சொல்லி இருக்கிறான் என்று தேஜூவுக்கு புரிந்தது..

 

நித்திலாவையும் சுமியையும் அடையாளம் கண்டு கொண்டவள் நிலவழகனையும் சரணையும் ஒரு கேள்வியோடு பார்த்தாள்..

 

நிலவழகன் “நல்லா இருக்கியா தேஜூ? என்னை ஞாபகம் இருக்கா? உனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்? நீ தான் உன் உயிரா இருந்த அருணையே மறந்துட்டியே.. பை த வே.. நான் தான் நிலவழகன்..”  என்று சொல்லி தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்..

 

தேஜு கையை குவித்து வணக்கம் சொல்ல அவனுக்கு என்னவோ போல் இருந்தது.. என்னதான் இருந்தாலும் அவனுக்கும் அவள் தோழிதான்.. இப்படி ஒரு முறையான வணக்கத்தை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை..

 

அருண் அருகே வந்த சரண் “ரொம்ப தேங்க்ஸ் அருண்.. நித்திலாகிட்ட பேசி நீ தான் என்னை நேத்து பெயில்ல எடுத்தியாம்.. நீ என்னை வெளியே எடுத்ததுக்கு பதிலா நான் உனக்கு என்ன ஹெல்ப் பண்ணனும்னு உன்னோட கண்டிஷன்ஸ் எல்லாம் நித்திலா என்கிட்ட சொன்னா.. நீ தேஜூவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என்னால என்ன ஹெல்ப் எல்லாம் பண்ண முடியுமோ அது அத்தனையும் நான் உனக்கு பண்றேன்.. தேஜூ உனக்கு கிடைச்சுட்டா நீ பழசை எல்லாம் மறந்துடறேன்னு சொன்னதே எனக்கு போதும்.. ஏன்னா எனக்கு தெரியும்.. நீ இப்ப இருக்கிற நிலைமையில நீ நெனச்சா என்னை உரு தெரியாம அழிச்சுட முடியும்.. உன் கூட தேஜூவை சேர்த்து வச்சிட்டு நான் என் வழியை பார்த்துட்டு நிம்மதியா வாழ்ந்துடறேன்..” என்றான் சரண்.. 

 

அதைக் கேட்ட அருண் சத்தமாக சிரித்தான்.. “ம்ம்ம்ம்.. குட்.. அவ்வளவு பயம்…?! உன் கண்ணுல பயத்தை பார்க்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இப்படியே மெயின்டைன் பண்ணா உனக்கும் நல்லது.. எல்லாருக்கும் நல்லது..” என்று அவனையும் நித்திலாவையும் ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்து சொன்னான் அருண்..

 

அவன் தான் சரண் என்று தெரிந்தவுடன் விஷ்வாவும் வைஷூவும் அவனை எரித்து விடுவது போல் பார்த்தார்கள்.. 

 

முந்தைய நாள் அந்த உணவு விடுதியில் நித்திலாவை சந்தித்த அருண் காரில் ஏறியவுடன் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டிருந்தான்.. சரணை பெயிலில் எடுக்குமாறும் அந்த உதவிக்கு மாறாக அவன் தேஜுவை ராமிடமிருந்து பிரித்து தான் கல்யாணம் செய்து கொள்வதற்கு உதவ வேண்டும் என்ற இருவருக்குமான நிபந்தனையோடு அனுப்பி இருந்தான்..

 

அவளும் அவன் சொன்னதை ஏற்று பதில் செய்தி அனுப்பியிருந்தாள்.. சொன்னபடி சரணை ஜாமீனில் எடுத்திருந்தாள் அவள்..

 

அந்த கோவிலுக்கு சென்றார்கள் அனைவரும்.. அங்கே இருந்த கோவில் பூசாரி வெளியே வந்து “நீங்களா? ஒரு வழியா புருஷன் பொண்டாட்டியுமா வந்துட்டீங்களா? ஏன் ரெண்டு பேரும் தனித்தனியா நிக்கிறீங்க? ஒன்னா நில்லுங்க..” என்று சொல்லி அருணையும் தேஜூவையும் பார்த்து சொல்ல தேஜூ அவரிடம் “என் புருஷன் இவர்தான்.. இவர் பெயர் ராம்.. இந்த தாலி இவர் கட்டுனது..” என்று சொன்னாள்..

 

“என்ன? இவர்தான் உன் புருஷனா? என்ன சொல்ற மா? அப்போ உங்க ரெண்டு பேருக்கும் இங்க நடந்த கல்யாணம்? இவர் கட்டின தாலி எங்க?” என்று அருணை காட்டி அவர் கேட்க நித்திலா இடை புகுந்து “அவர் கட்டின தாலியை அவரே அறுத்து எடுத்துட்டார்..” என்றாள்..

 

சரண் அப்படி செய்திருந்தாலும் அதன் பின்னே அந்த சதி எல்லாம் செய்ய வைத்தது நித்திலா தான் என்று நன்றாகவே அறிந்திருந்தான் அருண்.. அது அங்கு இருந்த அனைவருக்குமே தெரிந்திருந்தது.. அருணையும் சரணையும் தவிர மற்ற எல்லோரும் நித்திலா மீது ஒரு வெறுப்பு பார்வையை படரவிட்டிருந்தார்கள்.. தேஜூ உட்பட..

 

“ஆமா ஐயரே.. தப்பு பண்ணிட்டேன்.. அவ கழுத்துல இருந்த தாலியை எவன் சொன்னதுக்காகவும் எவ அனுப்பி வச்ச ஆளு மிரட்டுனதுக்காகவும் அறுத்திருக்க கூடாது.. அவளை என்னோடயே இந்த மலையில இருந்து விழ சொல்லி ரெண்டு பேரும் ஒண்ணா செத்துப் போய் இருக்கணும்.. அதை விட்டுட்டு அவள் தாலியை அறுத்தது தப்புதான்.. அந்த தப்பை சரி செய்ய தான் நான் இப்ப வந்து இருக்கேன்.. இப்ப முறையா நான் கட்டற தாலி அவ கழுத்துல காலம் முழுக்க இருக்கும்…. இருக்கணும்… எந்த கோபம் வந்தாலும் அதை அவ கழுத்திலருந்து இறக்க முடியாது.. ஒருவேளை அதை அறுக்கணும்னு நினைச்சா நான் என் உயிரை விடறதும் இல்லாம அவளையும் கொன்னுடுவேன்..” என்று தீர்க்கமாய் சொன்னவனை பயத்துடனேயே எல்லோரும் பார்த்தார்கள்..

 

அதுவரை இரண்டு குழந்தைகளையும் தன் இரு கைகளில் தூக்கிக் கொண்டு கோவில் அர்ச்சகரிடம் பேசிக் கொண்டிருந்தவன் குழந்தைகளை சின்ன பையனிடமும் நிவேதாவிடமும் கொடுத்தான்.. அதன் பிறகு தன் சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டவன் அதிலிருந்து ஒரு தாலியை எடுத்து வெளியே எல்லோருக்கும் காட்டினான்..

 

“உனக்கு ஞாபகம் இருக்குமானு தெரியல அஷ்ஷூ.. இது நான் உன் கழுத்துல நானே எதிர்பார்க்காத ஒரு நேரத்துல கட்டின தாலி.. அதுக்கப்புறம் நான் இந்த சரணும் நித்திலாவும் செஞ்ச சதியினால மறுபடியும் எதிர்பார்க்காமயே உன் கழுத்தில் இருந்து இந்த தாலியை அறுத்து எடுத்துட்டு மலை மேலிருந்து கீழே விழுந்துட்டேன்.. இந்த தாலியை அறுத்துட்டு கீழே விழுந்தப்போ அந்த பாறையில என் தலை மோதி இருந்தப்ப என் உயிரே போற நிலைமையில நான் இருந்தாலும் மயக்கமா இருந்தாலும் இந்த தாலி மட்டும் என் கையிலேயே தான் இருந்ததுன்னு என்னை அங்கிருந்து தூக்கிட்டு வந்த போலீஸ்காரங்களும் ஆம்புலன்ஸ்காரங்களும் சொன்னாங்க..” என்று சொல்ல ராம் அவனை பிரமிப்புடன் பார்த்தான்..

 

“நான் கண்ணு முழிச்ச அப்புறம் என்கிட்ட இந்த தாலியை கொடுத்தாங்க.. எப்போ இந்த தாலி என் கையை விட்டு போகலையோ அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சு.. என் கையால இதை உன் கழுத்துல கட்டணும்னு தான் இது என்னை விட்டு போகாம இருந்ததுன்னு.. இப்போ இந்த தாலியை கட்டுற நேரம் வந்துருச்சு.. அஷ்ஷூமா.. இப்ப நீ என்ன பண்ற? உன் கழுத்துல அந்த ராம் கட்டின தாலி இருக்குல்ல? அதை.. இங்க அம்மன் முன்னாலே கழட்டி அந்த உண்டியல்ல போட்டுடு” மிகவும் சாதாரணமாக சொன்னான் அருண்..

 

அவன் சொன்ன வார்த்தையை கேட்ட தேஜூவுக்கோ அவள் உடம்பை யாரோ தீ வைத்து எரித்து விட்டாற்போல் தலை முதல் கால் வரை பற்றி எரிந்தது.. கண்களில் அந்த கோபத்தீயை அனலாய் கக்கிக்கொண்டு.. “நீ சொன்னா நான் எதுக்குடா என் தாலியை கழட்டி உண்டியல்ல போடணும்? போட முடியாது.. என்னடா பண்ணுவ நீ?” தீர்க்கமாய் அவனைப் பார்த்தபடி கேட்டாள்..

 

தன் ஒற்றை விரலால் புருவத்தை நீவி விட்டவன் “என்ன அஷ்ஷூ டியர்..? உனக்கு அப்பப்போ டெமோ காட்ட வேண்டி இருக்கு.. அஷ்ஷூ பேபி.. நீ ஏன் என்னை இப்படி ரொம்ப வேலை வாங்குற? ஹே ராக்கி..” என்று அங்கிருந்த ஒரு அடியாளுக்கு கண்ணை காட்டியவன் அவனிடம் சின்னப் பையனிடமும் நிவேதாவிடமும் இருந்த தேஜுவின் இரு குழந்தைகளை நோக்கி ஜாடை காட்ட அங்கிருந்து அந்த இரு அடியாட்களும் வந்து அந்த இரு குழந்தைகளின் அருகில் சென்றார்கள்..

 

அதைப் பார்த்த தேஜூவும் ராமும் பதைபதைத்து போனார்கள்..

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!

 

மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி 

“❤️❤️சுபா❤️❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!