பரீட்சை – 83
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உயிரையும் துறந்து
விடுவேன்..
உன்னை பிரிந்து வாழ
மாட்டேன்..
உலகமே என்னை
வெறுத்தாலும்
ஒரு கவலை கொள்ள
மாட்டேன்..
உயிரானவள் நீ
வெறுத்துவிட்டால்
உடைந்து நொறுங்கி
விடுவேன்..
வாழ்வில் வெளிச்சமாய்
வந்தவளே..
விட்டு போகாதேடி
என்னை..
எந்த நாளிலும்…
#####################
உயிரானவள் நீ..!!
குழந்தைகளைப் பார்த்த அருண் “அஸ்வின்.. பூஜா.. இந்த அங்கிள்ஸ் என்னோட ஃப்ரெண்ட்ஸ்.. அவங்க சாக்லேட்ஸ், டாய்ஸ் எல்லாம் நிறைய வெச்சிருக்கிறாங்க.. அப்புறம் அவங்க கிட்ட இருக்கிற டேப்லெட்ல நிறைய கேம்ஸ் இருக்கு.. உங்களோட அவங்க விளையாடுவாங்க.. அவங்க கூட போங்க.. இங்க ரொம்ப போர் அடிக்கும்.. கொஞ்ச நேரம் அவரோட விளையாடிட்டு இருங்க.. நம்ம அப்புறம் கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு போலாம்..” என்றான்..
அருண் சொல்லி முடிக்கவும் அடியாட்கள் இருவரும் தங்கள் கையில் இருந்த இரண்டு சாக்லேட்டையும் குழந்தைகளிடம் கொடுத்து டேபையும் இயக்கி அவர்களிடம் காட்ட “ஹே சூப்பர் கேம்ஸ்..!!” என்று சொன்ன அஸ்வின் ஒரே தாவலில் சின்ன பையனிடமிருந்து அந்த ராக்கியிடம் போனான்..
பூஜாவும் நிவேதாவிடம் இருந்து இறங்கி அந்த இன்னொரு அடியாளின் கையைப் பிடித்தவள் “வாங்க போய் விளையாடலாம்” என்று சொல்லி அவனோடு சென்றுவிட்டாள்.. அவர்களும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் சற்று தள்ளி இவர்கள் பேசுவது கேட்காத தூரத்தில் மலைமுகட்டில் இருந்த பாறையில் அவர்களை அமர வைத்துவிட்டு தாங்களும் அவர்கள் பின்னால் அமர்ந்து கொண்டார்கள்..
அவர்கள் லேசாய் அந்த பக்கம் தள்ளினால் பிள்ளைகள் மலை மேல் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விடுவது போல் அமர வைத்திருந்தார்கள் அவர்களை.. தேஜூவும் ராமும் நெஞ்சம் பதற அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
குழந்தைகள் தாங்கள் விளையாடும் விளையாட்டில் மூழ்கிப் போய் இருக்க தேஜுவை திரும்பிப் பார்த்த ராக்கியும் அவன் கூட்டாளியும் அவர்கள் இருவரின் தோளின் மேல் கையை வைத்து அருண் சொன்னபடி செய்யவில்லையானால் குழந்தைகளை மலையிருந்து அந்த பக்கம் தள்ளி விட தயாராய் இருப்பது போல் அமர்ந்து கொண்டு இருந்தார்கள்..
“என்ன அஷ்ஷூம்மா பாக்குற? என் வார்த்தைக்காக தான் அவங்க காத்துகிட்டு இருக்காங்க.. இப்ப நீ அந்த தாலியை கழட்டலைன்னா அடுத்த நிமிஷம் அவங்க..” அருண் அர்த்தத்தோடு குழந்தைகளின் பக்கம் பார்க்க அந்த தாய் நெஞ்சம் அப்படியே பதறி துடித்து போனது..
“அவங்க ரெண்டு பேரும் ரொம்ப மோசமானவங்க.. நான் என்ன சொன்னாலும் செஞ்சுடுவாங்க.. என் பிசினஸ்ஸை தப்பான வழியில் அழிக்க நினைச்சவங்களை எல்லாம் சாய்ச்சுட்டு நேர்மையான வழியில நான் மேலே வந்து இப்படி நிக்கிறேன்னா அதுக்கு இவங்க ரெண்டு பேரோட பலமும் ஒரு காரணம்.. நான் இப்போ அவங்களையே இந்த மலை மேல் இருந்து குதின்னு சொன்னா கூட ரெண்டு பேரும் யோசிக்காம குதிச்சிடுவானுங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு என் வார்த்தைக்காக உன் குழந்தையை மலை மேல இருந்து தள்ளறதெல்லாம் ஒரு பெரிய வேலையே இல்லை.. நல்லா யோசிச்சுக்கோ.. கொஞ்சம் வேகமா அந்த தாலியை கழட்டிடுமா..” மிரட்டினான் அருண்..
அருணை நோக்கி குரோதமாய் ஒரு பார்வையை வீசிய தேஜூ அவனை தீர்க்கமாய் பார்த்து “நீ என்ன வேணா செஞ்சுக்கோ.. என் முடிவுல இருந்து நான் மாறவே மாட்டேன்.. என் குழந்தைங்க செத்துப் போனாலும் பரவாயில்லை.. நான் இந்த தாலியை கழட்ட மாட்டேன்.. அவங்க அம்மாவை ஒரு நடத்தை கெட்டவளா பார்த்துகிட்டு துரோகம் செஞ்சவளா பார்த்துகிட்டு இந்த உலகத்தில அவங்க வாழறதை விட அவங்க அம்மா ஒரு உத்தமின்னு நினைச்சுட்டு ஒருத்தருக்கு தான் பொண்டாட்டியா இருந்தவன்னு நினைச்சுகிட்டு அவங்க சாகட்டும்..” என்றாள் தேஜூ..
அதை கேட்ட அருண் ராக்கிக்கு கண்ணை காட்ட அந்த அடி ஆட்கள் குழந்தைகளை கூட்டிக் கொண்டு கோவிலுக்கு பின்னால் சென்று விட்டார்கள்..
“குழந்தைங்களை எங்க கூட்டிட்டு போறாங்க?” என்று தேஜு கேட்க “நீதான் அவங்க சாகட்டும்னு சொல்லிட்ட இல்ல? அப்புறம் அவங்களை எங்க கூட்டிட்டு போனா உனக்கு என்ன வந்தது? அவங்க இந்த உலகத்தை விட்டு போயிட்டதாவே நினைச்சுக்கோ.. குழந்தைங்களை காப்பாத்தணும்னு சொல்லி யாராவது நீங்க இருக்கிற இடத்தை விட்டு அசையணும்னு நினைச்சீங்கன்னா கூட குழந்தைங்க உயிருக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது.. அவங்க அவங்க இருக்கிற இடத்திலேயே நில்லுங்க..” என்றான் அருண் அழகப்பன் தான் இருந்த இடத்திலிருந்து குழந்தைகளை நோக்கி நகர்வதை பார்த்து..
பிறகு தேஜுவின் பக்கம் திரும்பியவன் “சரி.. அப்படின்னா எனக்கு வேற வழி இல்ல அஷ்ஷூம்மா.. ஒரே ஒரு வழி தான் இருக்கு.. சரண்..” என்று அழைத்தவன் பார்த்த பக்கம் தேஜூ பார்க்க அங்கே ராமின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு சரண் நின்றிருந்தான்..
“இப்போ குழந்தைங்களும் சாவாங்க.. ராமும் செத்துடுவான்.. அதுக்கப்புறம் வேற வழி இல்லாம நீ ராம் கட்டின தாலியை கழுத்துல இருந்து இறக்கிட்டு என்னைத்தான கல்யாணம் பண்ணிக்கணும்.. என்ன அஷ்ஷூமா..? என்ன சொல்ற? மூணு பேரையும் கொன்னுடலாமா?” என்று அருண் கேட்க “ஏன்டா என்னை இப்பிடி கொடுமை பண்ற…? வேண்டாம்.. சொன்னா கேளு.. என்னை விட்டுடுடா.. இப்போ உன் மேல எனக்கு எந்த காதலும் இல்லடா.. என் ராம் தான் என்னோட உயிர்.. நீ என் மேல வச்சிருந்த காதல் மேல உனக்கு நிஜமாகவே மரியாதை இருந்ததுன்னா எங்களை வாழவிடுடா” கதறினாள் அவள்..
“நீதான் என்னை நம்பவே மாட்டேன்னு சொன்னியே அஷ்ஷூமா.. இப்போ நீ என் காதலை நம்பறியா? நம்ம ரெண்டு பேரும் காதலிச்சவங்க தான்னு நம்பறியா?”
“நம்புறேன்.. நம்புறேன்… மனப்பூர்வமா நம்புறேன்.. நம்ப ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்… விவாகரத்தும் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறம் எங்க அப்பா சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தோம்.. நான் உன் மேல உயிரையே வச்சிருந்தேன்.. இது எல்லாத்தையும் நம்புறேன்.. ஆனா இப்ப எதுவுமே இல்லயேடா.. இப்போ என் குழந்தைங்களும் ராமும் மட்டும்தான் என் வாழ்க்கையோட உண்மை… இப்ப என் மனசுல ராம் மட்டும் தானேடா இருக்குறாரு.. அவங்க மூணு பேரும் தான் எனக்கு வேணும்… அவங்களோட மட்டும் தான் நான் இருக்க முடியும்.. ப்ளீஸ்.. என்னை என் ராம் கூட வாழ விடு.. உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. அவங்க மூணு பேரையும் ஒன்னும் செஞ்சிடாத…” தரையில் முட்டி போட்டு அமர்ந்து கை குவித்து அவனிடம் வேண்டினாள் தேஜூ..
அவள் கீழே முட்டி போட்டு அப்படி கெஞ்சுவதை பார்த்த நித்திலாவோ உள்ளுக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தாள்..
“அவ்வளவு தூரம் உனக்கு கொடுமை நடந்தப்பறமும் நீ இந்த ராமை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கறதை பார்த்து மனசுக்குள்ள உன்னை முழுசா பழி வாங்குன திருப்தி இல்லாம புழுங்கிட்டு இருந்தேன்டி தேஜூ.. ஆனா இப்ப உன் வாழ்க்கைக்காக அருண் முன்னாடி முட்டி போட்டு கெஞ்சிக்கிட்டு இருக்கற உன்னோட இந்த நிலைமையை பார்க்கிறப்போ உன்னை முழுசா பழிவாங்கிட்ட திருப்தி எனக்கு கிடைச்சிருக்கு.. அந்த அருண் உன்னை விட்டுக் கொடுக்க முடியாம ஒன்னு அவனும் நீயும் இந்த மலையிலருந்து குதிச்சு சாகணும்… இல்ல உன் புருஷனும் நீயும் சாகணும்.. மொத்தத்துல என்னை நீ அவமானப்படுத்தினதுக்கு முழுசா உன்னை பழி வாங்குன திருப்தி எனக்கு கிடைச்சுடும்..” என்று நினைத்து வன்மத்துடன் ஒரு புன்னகை சிந்தினாள்..
தேஜூவை பார்த்த அருண் “சரி.. ஒரு நிமிஷம் இரு..” என்று சொன்னான்…
நேராக ராமிடம் சென்றான்.. “என் அஷ்வினி என்னை தாலி கட்ட கூடாதுன்னு சொல்றா… எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு.. நீங்க மூணு பேரும் இருக்கறதுனால தானே என் அஷ்வினி என்னை தாலி கட்ட கூடாதுன்னு சொல்றா..? அதுவும் நீ அவளுக்காகவே வாழ்ந்துக்கிட்டு இருக்கறதுனால தான் அவ அப்படி சொல்றா.. நீ மட்டும் வேற யார் கூடயாவது சேர்ந்துட்டன்னா என் அஷ்வினி என்னை கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொல்லிடுவா இல்ல?ரக்ஷிகா.. இங்க வா…” என்று அழைக்க அம்மன் கோவில் பின்னாலிருந்து ரக்க்ஷிகா வந்தாள்..
“இவ இன்னும் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கா.. உனக்கு ரெண்டு ஆப்ஷன் தரேன்.. ஒன்னு இவ கழுத்துல தாலியை கட்டிடு.. ஆட்டோமேட்டிக்கா அஸ்வினி கழுத்துல இருக்குற தாலியை கழட்டிடுவா.. இது முடியாதுன்னா நீ செத்து போயிரு.. இதுல எதுவுமே நீ பண்ணலைனா நான் அஷ்வினியோட இந்த மலை மேலே இருந்து குதிச்சு சாக வேண்டி இருக்கும்… என் அஸ்வினியோட வாழ முடியலன்னா அவளோட நான் செத்துடுவேன்.. இப்போ நீ தான் முடிவு சொல்லணும்.. என்ன பண்ணப் போற? ரக்ஷிகாவை கல்யாணம் பண்ணிக்க போறியா? இல்ல செத்துப்போக போறியா? இல்ல நானும் அஸ்வினியும் மலை மேலருந்து ஒன்னா குதிச்சு செத்துப் போக போறோமா?” என்று சொன்னவன் வேகமாக வந்து தேஜுவை தன் கையால் இழுத்துக் கொண்டு சென்று மலைமுகட்டில் குதிப்பது போல் நின்று கொண்டிருந்தான்..
ராமை நெருங்கி வந்த ரக்ஷிகா “ராம் டியர்… நானும் எவ்வளவு நாளா உன்னை கேட்டுட்டு இருக்கேன்.. உனக்காக காத்துகிட்டு இருக்கேன்.. இப்ப பாரு அந்த அருண் வந்துட்டான்.. அவங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிச்சு இருக்காங்க.. அந்த அருண் தான் தேஜூவை கண்ணுல வச்சு பாத்துக்குறேன்னு சொல்றான் இல்ல..? அனாவசியமா தேஜூவோட சாவுக்கு நீ காரணமாயிடாத.. தேஜூ தான் வேணும்னு அடம் புடிச்சு உயிரை விடுறதை விட அவளை அருணுக்கே விட்டு கொடுத்துடு... அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கட்டும்.. நீ பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்.. அருண் எப்படி தேஜு மேல உயிரையே வச்சிருக்கானோ அதே மாதிரி தான் நானும் உன் மேல உயிரையே வச்சிருக்கேன்.. நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.. அப்படி பண்ணிக்கிட்டா எல்லாருமே சந்தோஷமா இருக்கலாம்..” என்றவளை பார்த்து சிரித்தான் ராம்…
“ரக்ஷிகா.. முதல்ல உன் காதலையும் நான் என் தேஜூ மேல வச்சிருக்கற காதலையும் கம்பேர் பண்ணதே தப்பு… இதுல உன் காதலையும் அ..ரு..ணோட காதலையும் கம்பேர் பண்றது அதைவிட பெரிய தப்பு.. அருண் தேஜூவோட வாழ்க்கை கெட்டுப் போய்ட கூடாதுங்கறதுக்காக ஒவ்வொரு முறையும் எவ்வளவோ தியாகம் பண்ணி இருக்கான்.. தன் உயிரை விட கூட தயாரா இருந்திருக்கான்.. அவ உயிரையும் மானத்தையும் காப்பாத்தணும்ங்கிறதுக்காக மலை மேலிருந்து கீழே விழுந்து உயிரை விட போனவன் அவன்.. முதல் தடவை அவ மேல காதல் வந்தப்போ தன்னால ஒரு புருஷனா அவளுக்கு எந்த சந்தோஷமும் கொடுக்க முடியாதுன்னு அவளை விலகி தான் நின்னான்.. அவ தன்னை விரும்பினான்னு தெரிஞ்சப்பவும் அவளை விலக்கி வெச்சான்.. ரெண்டாவது தடவையா கோமாலருந்து வெளியில் வந்து அப்போதைக்கு உயிர் பிழைச்சிருந்தாலும் தன் உயிர் கொஞ்ச நாள்ல போயிடுனு தெரிஞ்சப்போ மறுபடியும் அவளை விட்டு விலகி போனான்.. அதுக்கப்புறம் அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சப்பவும் அவ வாழ்க்கையை என்னோட சந்தோஷமா வாழட்டும்னு அவளை விட்டுட்டு போனான்.. ஒவ்வொரு முறையும் அவ சந்தோஷத்துக்காக மட்டும் அவளை தன் கிட்ட இருந்து விலக்கி வச்சு அவ நல்லதை பத்தி மட்டுமே யோசிச்ச அருணோட காதல் உண்மையான ஆழமான காதல்… ஆனா இப்ப எதோ அவன் பிடிவாதம் பிடிக்கிறான் தேஜூவை கல்யாணம் பண்ணிக்கணும்னு.. ஆனா இதுக்கு கூட வேற ஏதாவது காரணம் இருக்கும்ன்னு நான் நம்புறேன்.. ஆனா உன் காதல் அப்படி இல்லை.. நான் கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சும் என் தேஜூ மேல நான் உயிரா இருக்கேன்னு தெரிஞ்சும் நீ என்னை அடையணும்னு பிடிவாதம் பிடிக்கிற.. நான் ஒன்னு சொல்லவா? உன்னை நான் கல்யாணம் பண்ணி ரெண்டு நாள் உன்னோட வாழ்ந்தேன்னா உனக்கு என்னோட வாழற வாழ்க்கை சலிச்சு போயிடும்.. ஆனா என் தேஜூவுக்கு அப்படி இல்ல.. அவ என்னோட வாழற வாழ்க்கை இன்னும் எத்தனை ஜென்மம் வாழ்ந்தாலும் எங்க ரெண்டு பேருக்குமே சலிக்காது.. இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ.. இந்த நிமிஷம் என் தேஜூவுக்கு அருணோட காதல் பத்தி ஞாபகம் வந்து அவனோட வாழனும்னு அவ முடிவு பண்ணினான்னா நானே அருணோட அவளை சேர்த்து வச்சிட்டு போயிருவேன்.. ஏன்னா எனக்கும் என் தேஜூவோட சந்தோஷம் தான் முக்கியம்.. அதனால உனக்கு என்னை அடையணும்னு ஆசை இருக்குன்னு வேணா சொல்லு.. காதல் இருக்குன்னு சொல்லாத.. அது காதலுக்கே கேவலம்..” என்று சொன்னான் ராம்..
“ம்ம்ம்ம்… பரவால்ல ராம்.. நீ ரொம்ப நியாயமானவன்தான்.. என்னதான் உன் பொண்டாட்டியை நான் உன்கிட்ட இருந்து பிரிக்க ட்ரை பண்றேன்னு தெரிஞ்சாலும் என் காதல் ரொம்ப ஆழமானதுன்னு சொல்ற பாரு.. கிரேட்.. ஆனா நீ அப்படி சொல்றதனால என்னால என் அஷ்வினியை உனக்கு விட்டுக் கொடுக்க முடியாது… என் அஸ்வினி எனக்கு மட்டும் தான் சொந்தம்.. அதனால நீ ஒன்னு ரக்ஷிகா கழுத்துல தாலி கட்டு.. இல்லன்னா உன் உயிரை விட்டுடு.. என்ன பண்ண போற?” என்று மறுபடியும் கேட்டான் அருண்..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!
மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க
விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️❤️சுபா❤️❤️”