பரீட்சை – 84
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உயிர் போகும்
நிலையிலும்
என் பெயர்
உன் நாவில்
வந்தால்
எனக்குள்
இனிக்குமடி..
மறு ஜென்மம்
எடுத்தாலும் இந்த
மாயவன் உன்னை
தேடி
மன்னவனாய் வருவதற்கு
மறுகி உருகி
ஏங்குவேனடி..
ஏழேழு ஜென்மத்திலும்
என்னவளாய் நீ
இருப்பாய் என
இயைந்து எனக்கோர்
உறுதிமொழி
கொடுத்திடடி கண்ணே…!!
####################
என்றும் என்னவள் நீ…!!
“நீ ஒன்னு ரக்ஷிகா கழுத்துல தாலி கட்டு.. இல்லன்னா உன் உயிரை விட்டுடு.. என்ன பண்ண போற?” என்று ராமை கேட்டுக் கொண்டிருந்தான் அருண்..
அங்கே நித்திலா, சரண், ரக்ஷிகாவை தவிர மற்றவர்கள் அனைவரையும் அவர்கள் பின்னால் கத்தி வைத்து ஒன்றிரண்டு அடியாட்கள் பிடித்து வைத்திருந்தார்கள்.. அருணின் கட்டளை படி.. அதனால் அவர்களால் அருணுக்கு எதிராக எதுவுமே செய்ய முடியவில்லை..
அது மட்டுமின்றி அவர்கள் இடத்தை விட்டு சிறிது நகர்ந்தாலும் கோவிலுக்கு பின்னே கூட்டிச் சென்ற குழந்தைகளை அந்த அடியாள் கொன்று விடுவான் என்று பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.. அதனால் அவர்களுக்கு அருணை எதிர்த்து பேச கூட தைரியம் இல்லாமல் இருந்தது..
“ராம்.. நீ எதுக்காக இன்னும் யோசிச்சிட்டு இருக்க.. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. நான் உனக்கு புரிய வைக்கிறேன் என் காதல் எவ்வளவு உண்மைன்னு.. உன் பசங்க நம்மளோட இருக்கணும்னு நீ சொன்னாலும் எனக்கு ஓகே தான்.. அவங்க ரெண்டு பேருக்கும் அம்மாவா இருக்க எனக்கு முழு சம்மதம்..” என்றாள் ரக்ஷிகா..
“யார் பிள்ளைகளுக்கு யாருடி அம்மா? கொன்னுடுவேன் உன்னை… என் பிள்ளைகளுக்கு அம்மாவா இருக்க உனக்கு என்னடி தகுதி இருக்கு?” அருண் கையில் இருந்து தன் கையை விடுவித்து வேகமாக சென்று ரக்ஷிகாவை பிடித்து அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள் தேஜூ.. அவள் கையை வந்து மறுபடி இறுக்க பிடித்தான் அருண்..
“அஷ்ஷூமா.. நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? உன் குழந்தைகளை அப்படி யார்கிட்டயும் நான் குடுத்துற மாட்டேன்.. அவங்க என்னோட குழந்தைங்களும் தான்.. ஒருவேளை ராம் ரக்ஷிகா கழுத்துல தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னா நம்ம குழந்தைகளை நம்மளோடயே கூட்டிட்டு வந்து ஒரு குடும்பமா சந்தோஷமா வாழலாம்.. ராம் அப்பப்போ அவங்களை கூட்டிட்டு போய் பார்த்துக்கட்டும்.. இல்ல ஒரு வேளை ராம் ஒரேயடியா போய்ட்டான்னாலும்..” என்று அருண் சொல்ல தேஜூ தன் சுட்டு விரலை அருண் முகத்திற்கு நேராய் நீட்டி “டேய்.. அவ்வளவு தாண்டா உனக்கு மரியாதை.. இன்னொரு வார்த்தை பேசினே நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..” என்று கத்தினாள்..
அவள் பேசியதை கேட்ட அருண் அவள் சொன்ன வார்த்தைகளால் சிறிதும் பாதிக்கபடாதவன் போல ராமை பார்த்து “என் அஷ்வினியை நான் அப்பறம் சமாளிச்சுக்கறேன்… அவளை சமாதானப்படுத்தி என் அஷ்ஷூவா எப்படி மாத்தணும்னு எனக்கு தெரியும்.. அதை விடு.. நீ என்ன முடிவு பண்ணி இருக்க? அதை சொல்லு..” என்றான் அருண்..
“என் தேஜூவை தவிர வேற எவ கழுத்திலயும் நான் தாலி கட்ட மாட்டேன் டா.. என் தேஜூ கழுத்துல இருக்குற தாலி இறங்கணும்னா அது நான் இந்த உலகத்தை விட்டு போனாதாண்டா நடக்கும்.. அதனால நீ சொல்ற மாதிரி நான் செத்துப் போறேன்.. அதுக்கப்புறம் அவ கழுத்துல இருக்குற தாலி தன்னால இறங்கிடும் நீ நெனைச்ச மாதிரியே… அதுக்கப்புறம் உன்னால முடிஞ்சா அவ கழுத்துல நீ தாலி கட்டிக்கோ.. ஆனா இந்த ஜென்மத்துல என் தேஜூ அதுக்கு சம்மதிக்க மாட்டா.. என்னை நினைச்சுக்கிட்டே தனியா கடைசி வரைக்கும் வாழ்வாளே தவிர அவ உனக்கு நிச்சயமா கிடைக்க மாட்டா அருண்.. இந்த ஜென்மத்துல அவ சம்மதத்தோட உன்னால அவளை அடைய முடியாது.. ம்ம்ம்ம்.. வேணும்னா அவளை கட்டாயப்படுத்தி பலாத்காரமா நீ அவளை அடையலாம்.. நீ அப்படி செய்ய மாட்டேன்னு எனக்கு முழுசா நம்பிக்கை இருக்கு.. ஏன்னா அவ மேல ஒரு துரும்பு பட்டா கூட துடிச்சு போற நீ மனசால கூட அவளை கஷ்டப்படுத்த மாட்டேன்னு எனக்கு தெரியும்.. அதனால நீ இப்போ செய்யறது எல்லாமே வேஸ்ட்.. இப்ப நீ என்னை செத்துப்போன்னு சொல்ற இல்ல? நான் செத்துப் போனா அப்பவும் உன் அஸ்வினி காலம் முழுக்க அதை நெனச்சு கஷ்டப்பட தான் போறா..” என்று சொன்னவன் தன் கழுத்தில் சரண் வைத்திருந்த கத்தி எடுத்து ஓங்கி தன் வயிற்றில் இறக்கப் போனான்..
சரியாக வயிற்றில் குத்த போகும் முன் அருணின் கையில் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு அந்த கத்தியை ஓடி வந்து பிடித்தாள்.. தேஜூ..
“உங்களுக்கு சாகணும்னா என்னையும் சேர்த்து கூட்டிட்டு போங்க... என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க.. வாங்க.. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா போயிடலாம்..” என்று ராமின் கையை பிடித்துக் கொண்டு அந்த மலைமுகட்டிலிருந்து குதிக்க போனாள் தேஜு..
அப்போது அங்கே இருந்த வைஷு “தேஜூக்கா… என்ன பைத்தியக்காரத்தனம் பண்றீங்க? உங்களை நம்பி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.. ரெண்டு பேரும் குதிக்கிறேன்னு சொல்றீங்க” என்று கத்தியவளை கவனிக்காது ராமின் கையை பிடித்துக் கொண்டு மறுபடியும் அந்த பள்ளத்தாக்கை நோக்கி போனாள் தேஜூ..
தன் கையை உதறிவிட்டு ஓடிப்போய் ராமின் கையைப் பிடித்த தேஜுவின் மற்றொரு கையைப் அவள் குதிக்க முடியாமல் பிடித்த அருண் நித்திலா புறம் திரும்பி ஒரு அர்த்தமுள்ள புன்னகை சிந்தினான்…
நித்திலா தேஜூவை பார்த்து “இவ பின்னாடி ரெண்டு பேரும் உயிரை விடுறதுக்கு ரெடியா இருக்காங்க.. அப்படி என்னதான் இருக்குன்னு தெரியல இவ கிட்ட..” என்று கண்ணில் பொறாமையோடு பார்க்க அவளைப் பார்த்து அருண் உதடு விரிய சிரித்துக்கொண்டு.. “என்ன நித்திலா.. பொறாமையா இருக்கா.. என் அஸ்வினி.. உண்மையான அன்பை கொடுக்கிறவ.. அவளுக்காக யாரா இருந்தாலும் உயிரை கொடுக்க தான் செய்வாங்க.. வாழ்ந்தா அவளோட வாழணும்னு தான் ஆசைப்படுவாங்க… நீ இப்ப என்ன மனசுல நினைச்சேன்னு நான் சொல்லட்டா..? இவளை பத்தி எல்லாம் தெரிஞ்சும் இந்த ரெண்டு ஆம்பளைங்களும் இவளுக்காக உயிர் கொடுக்க தயாரா இருக்காங்களேன்னு யோசிக்கிறே.. உன்னை மாதிரி பொண்ணுங்க இப்படியே தனியா நின்னுட்டே இருக்க வேண்டியதுதான்… என் அஸ்வினி மாதிரி பொண்ணுங்க கிடைக்க மாட்டாளான்னு ஒவ்வொரு ஆம்பளையும் ஏங்குவான்.. ஆனா அதுக்காக அப்படி ஏங்குறவனுக்கெல்லாம் அவளை என்னால விட்டுக் கொடுக்க முடியாது..” என்று சொன்னவன் சரணை பார்த்து ஜாடை காட்ட சரண் ஒரு கட்டையை வைத்து ராமை சரமாரியாக தாக்க ஆரம்பித்தான்..
அதை பார்த்த தேஜூ அருணின் கையில் இருந்த தன் கையை விடுவித்துக் கொண்டு சரண் அருகே சென்று அவன் கையில் அடித்த படி “டேய் விடுடா அவரை.. விடு அவரை..” என்று சொல்லி சரணின் சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தாள்..
ஆனால் சரண் அவளை கீழே தள்ளிவிட்டு ராமை கட்டையால் மேலும் மேலும் அடித்துக் கொண்டே இருந்தான்.. ராமின் தலையில் அடித்ததில் அவனுக்கு முன் நெற்றியில் லேசாக ரத்தம் வர அதை பார்த்தவள் பதறிப் போனாள்..
“டேய்.. விடுடா அவரை..” என்று கத்தியவள் சுற்றி முற்றி பார்த்தாள்.. அங்கே ஒரு பெரிய பாறை போன்ற கல் இருக்கவும் அதை கையில் எடுத்தவள் நேரே சென்று சரணின் தலையில் ஓங்கி அடித்தாள்.. ராமை அடிப்பதில் மும்முறமாய் இருந்தவன் தேஜூ தன்னை அடிக்க ஓடி வருவதை கவனிக்கவில்லை..
அவள் தன் பின்னந்தலையில் அடித்து தனக்கு ரத்தம் வரவும் திரும்பி அவளை பார்த்தவன் ஆத்திரத்தில் அவள் கழுத்தில் கை வைத்து நெறிக்கவும் அவன் அருகில் வந்தான் அருண்.. “அஸ்வினி மேலேயா கைய வைக்கிற?” என்று சொல்லி அவன் கையில் இருந்த கட்டையை பிடுங்கி அவனை சரமாரியாக தாக்க தொடங்கினான்..
அந்த இடைவெளியில் ஓடிச் சென்ற தேஜூ ராமின் தலையில் வந்த ரத்தத்தை தன் புடவையால் துடைத்து.. “ஐயோ என்ன ராம்… அவன் இப்படி உங்களை அடிச்சிட்டான்?” என்று சொல்லி அவனை அப்படியே கைத்தாங்கலாக பிடித்து ஒரு பாறையின் மேல் அமர வைத்தாள்..
அதற்குள் சரணை அடித்துக் கொண்டிருந்த அருணை பார்த்து நித்திலா “டேய்.. அருண்.. சரண் உனக்கு ஹெல்ப் பண்ண தானே வந்தான்.. நீ என்னடான்னா அவனையே அடிக்கிற?” என்று சொல்லி அவன் கையில் இருந்த கட்டையை பறிக்க முயற்சி செய்தாள்..
அந்த இடைவெளியை பயன்படுத்திய சரண் அங்கு கீழே விழுந்து இருந்த கத்தியை எடுத்து ராமின் அருகே சென்று “இவனுக்காக தானடி என்னை அப்படி போட்டு அடிச்ச? உன் கண்ணு முன்னாடியே இவனை கொல்றேன்..” என்று தான் வைத்திருந்த கத்தியை ராமை நோக்கி ஓங்கவும் அவன் கையைப் பிடித்து தடுத்த தேஜூ பத்ரகாளியாக மாறியிருந்தாள்..
ஒரு பெண்ணின் கையில் அவ்வளவு சக்தி இருக்கும் என்று அதுவரை உணர்ந்ததில்லை சரண்.. அவளுடைய பிடியில் தன் கையே நொறுங்கி விட்டதோ என்று பயந்தான் அவன்.. அவ்வளவு இறுக்கமாகவும் பலமாகவும் அவன் கையை பிடித்திருந்தாள் தேஜூ..
“என் ராமை கொல்லுவியா நீ?” என்று அப்படியே அவன் கையை முறுக்கி பின்னே கொண்டு வந்தவள் அவன் கையில் இருந்த கத்தியை பறித்து அவனை குத்த போக அவள் கையை பிடித்த ராம் “என்ன தேஜூ பண்ற? பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணி வைக்காத..” என்று சொல்லி அவள் கையில் இருந்து கத்தியை வாங்கி கீழே போட்டான்…
“தேஜுமா ரிலாக்ஸ்.. உன் கோபத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு” என்று அவள் இரு தோள்களை பிடித்து அவன் சொல்லிக் கொண்டிருக்க சட்டென கீழே கிடந்த அந்த கத்தியை எடுத்த சரண் தேஜூவை குத்த போக ராம் அதற்குள் சுதாரித்துக் கொண்டு அவன் முகத்திலேயே ஓங்கி ஒரு குத்து விட்டான்..
அதற்குள் அங்கு நித்திலாவை பிடித்து தள்ளி விட்டு வந்த அருண் ராமுடன் சேர்ந்து சரணை தாக்க தொடங்கியிருந்தான்.. இருவருமாக மாறி மாறி சரணை பந்தாட ஒரு நிலையில் சரண் சுருண்டு அப்படியே மயங்கி விழுந்தான்..
அப்போது நித்திலாவை பார்த்த அருண் “சரணை எனக்கு ஹெல்ப் பண்ண தான் சொன்னேன்.. ஆனா என் அஸ்வினியை யார் கஷ்டப்படுத்தணும்னு நினைச்சாலும் அவங்களை கொல்லறதுக்கு கூட தயங்க மாட்டேன்.. இவனை கொல்லாம இன்னும் உயிரோட விட்டு வச்சிருக்கேன்ல? சந்தோஷப்பட்டுக்கோ..” என்றான்..
நித்திலாவுக்கு புரிந்தது.. அதற்கு மேல் தேஜுவுக்கு எதிராக தான் ஏதாவது பேசினால் தன்னையும் கூட அவன் கொன்று விடுவான் என்று.. அவள் அதோடு தன் வாயை மூடிக்கொண்டாள்..
ராமை பார்த்த அருண், “ம்ம்ம்ம்.. அப்ப நீ ரக்ஷிக்காவை கல்யாணம் பண்ணிக்க மாட்டே.. உன்னை என் அஸ்வினி தன் கண்ணு முன்னாடி சாக விடமாட்டா .. இப்போ எனக்கு வேற ஆப்ஷனே இல்ல.. நீ சாக வேண்டாம்.. அப்படியே நின்னுக்கிட்டு பாரு.. என் அஷ்ஷூவை நான் என்னோட கூட்டிட்டு போறேன்..” என்று சொன்னவன் தேஜூவின் கையைப் பிடித்து மலை முகட்டிலிருந்து அந்தப் பக்கம் குதிக்க போனான்..
அப்போது அவர்கள் இருவர் அருகில் வந்த ராம் அருணை பார்த்து, “அருண்.. வேண்டாம்.. சொன்னா கேளு.. கீழ குதிக்காத.. அவளை விட்டுடு.. ப்ளீஸ்.. பிடிவாதம் பிடிக்காத..” என்று தேஜுவின் இன்னொரு கையை பிடித்து எதிர்பக்கம் இழுக்க அருண் தேஜூவை தன் பக்கம் இழுக்க அப்போது தன் பின்னால் நின்றிருந்த அடியாளின் கவனம் அவர்களின் இழுபறியில் நிலைத்திருப்பதை பயன்படுத்தி கொண்ட வைஷூ அந்த அடியாட்களுக்கு தெரியாமல் தான் நின்ற இடத்திலிருந்து நழுவி தேஜூ அருண் ராம் மூவரின் அருகில் வந்தாள்..
“அருண் சார்.. சொன்னா கேளுங்க.. அவங்களை விடுங்க..” என்று சொல்லிக் கொண்டே தேஜுவின் கையை அருண் கையின் பிடியில் இருந்து விலக்க முயல அருணோ தன் கையின் பிடியை நன்றாக இறுக்கிக் கொண்டே போனான்..
தேஜுவின் கையை அழுந்த பற்றியவன் மறுபடியும் மலைமுகட்டை நோக்கி முன்னேற அப்போது வைஷு ராமின் பக்கம் ஜாடை காட்டினாள்.. அவள் ஒரு பக்கம் தேஜுவின் கையை இறுகப் பிடித்து அழுத்தமாய் இழுக்க ராம் ஒரு பக்கம் அவள் இன்னொரு கையைப் பிடித்து தன் பக்கமாக இழுக்க தேஜுவும் தன் கையை அருணிடமிருந்து விடுவித்துக் கொள்ள தீவிரமாக முயல மூவரும் தங்கள் முழு சக்தியை பயன்படுத்தி அருண் கையிலிருந்து தேஜுவின் கையை விடுவிப்பதற்காக இழுத்த வேகத்தில் தேஜுவின் கையிலிருந்த அருணின் பிடி விலக பார்த்துக் கொண்டே இருக்கும்போது தேஜுவின் கழுத்தில் கட்ட வேண்டிய தாலியை மற்றொரு கையில் பிடித்தபடி அருண் இரண்டாவது முறையாக அந்த பள்ளத்தாக்கில் விழுந்தான்..
அவன் அன்று விழுந்தது போலவே கையில் ஒரு தாலியை வைத்துக்கொண்டு மேலிருந்து தேஜுவை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே “அ…ஷ்ஷூ..ம்மா..” என்று அழைத்த படி கீழே விழ.. அவன் விழுவதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேஜு “அ..ர்ர்…ரு..ரூ..ண்..ண்ண்..” என்று கத்திக் கொண்டே அப்படியே அவன் விழுந்த திசையிலேயே வெறித்து பார்த்துக் கொண்டு சிலையாய் அமர்ந்து விட்டாள்..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!
மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
இந்த எபி படிச்சுட்டு ரொம்ப திட்டாதீங்க என்னை… கொஞ்சமா திட்டிக்கோங்க..🫣🫣🫣
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️❤️சுபா❤️❤️”