பரீட்சை – 87
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
மர்ம முடிச்சுகள்
மணிக்கு மணி
கூடிக்கொண்டே
போனதே..
உயிர் விட
போன ஒருவனை
காணவில்லை என
கவலை கொண்டிருக்க
அங்கேயோ
இன்னொருவனின்
உயிர்
இலவச இணைப்பாய்
இறுதி ஊர்வலம்
போயிருந்தது..
என்ன நடக்கிறது
எங்களை சுற்றி..
எப்போது அவிழுமோ
அந்த அருணன்
போட்ட முடிச்சுகள்?
###########₹₹₹₹########
மர்ம முடிச்சுகள்..!!
இன்ஸ்பெக்டர் அனுப்பிய புகைப்படம் ராமின் கைபேசிக்கு வந்திருந்தது.. அதை திறந்து பார்த்த நிலவழகனும் ராமும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.. அங்கே புகைப்படத்தில் சவமாக இருந்தது சரண்..!!
“நிலவழகன்.. சரண் அங்க மயக்கம் போட்டு தான் விழுந்து இருந்தான்.. அப்புறம் அவன் எப்படி?..” என்று யோசனையில் இருந்தவன் தன் நெற்றியை கையால் தேய்த்தபடி “ஐயோ.. ஒரே குழப்பமா இருக்கே.. அந்த மலை மேல இருந்து விழுந்தது அருண்.. ஆனா சரண் எப்படி செத்தான்.. யாராவது மலையில இருந்து தள்ளி விட்டுட்டாங்களா.. இல்ல அவனே விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டானா? விஷ்வா வேற ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான்.. ஒருவேளை விஷ்வாக்கும் ஏதாவது ஆபத்து இருக்குமோ?”
புருவத்தில் ஒரு குழப்ப முடிச்சுடன் ராம் கேட்க நிலவழகன் “எனக்கும் அதுதான் பயமா இருக்கு ராம்.. எனக்கும் அப்படி ஏதாவது நடந்திருக்குமோனு தோணுது.. இதுக்கு மேல நம்ம லேட் பண்ண வேண்டாம்.. நீங்க உடனே இன்ஸ்பெக்டர்க்கு ஃபோன் பண்ணி அங்க நித்திலாவும் விஷ்வாவும் இருந்தாங்கன்னு சொலலுங்க.. விஷ்வா ஃபோன் கனெக்ட் ஆகலைன்னா நித்திலாக்கு ஃபோன் பண்ணி பார்க்க சொல்லுங்க.. ஒருவேளை அவ மூலமா ஏதாவது விஷயம் தெரியலாம் இல்லையா?” என்று நிலவழகன் சொல்ல அதுதான் சரி என தோன்றியது ராமுக்கும்..
உடனே இன்ஸ்பெக்டரை அழைத்தவன் “ஹலோ இன்ஸ்பெக்டர் நீங்க அனுப்புன ஃபோட்டோல இருக்கிறது மிஸ்டர் சரண்.. ஆக்சுவலா நாங்க கிளம்பும்போது சரண் அந்த மலை மேல மயக்கமா இருந்தாரு.. அவர் கூட விஷ்வாவும் நித்திலாவும் இருந்தாங்க.. விஷ்வா ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது.. நீங்க நித்திலாக்கு ட்ரை பண்ணி பாருங்க.. என்கிட்ட நித்திலா நம்பர் இல்ல.. ஒரு நிமிஷம்..” என்று கைபேசியில் சொன்னவன் நிலவழகனிடம் திரும்பி “உங்ககிட்ட நித்திலா நம்பர் இருக்கா?” என்று கேட்க “இருக்கு..” என்றான் நிலவழகன்..
“சார்.. நான் உங்களுக்கு நித்திலா நம்பரை அனுப்ப சொல்றேன்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க.. நாங்களும் ட்ரை பண்ணி பாக்கறோம்.. எப்படி இப்படி ஆச்சுன்னு தெரியல சார்.. பள்ளத்துல விழுந்தது அருண்.. ஆனா நீங்க இப்ப சரண் செத்துட்டான்னு சொல்றது எங்களுக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு..” என்றான் ராம்
“இதை ஃபர்தரா இன்வெஸ்டிகேட் பண்ணா தான் தெரியும்.. நாங்க அந்த இடத்துல சுத்தி இருக்கிற ஆளுங்களை விசாரிச்சு பார்த்தோம்.. எங்களுக்கு எதுவுமே இன்ஃபர்மேஷன் கிடைக்கல.. இப்போ நீங்க இவரு சரண்னு சொல்லி இருக்கீங்க.. முதல்ல இவருடைய ரிலேட்டிவ்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணனும்.. நீங்க சொல்ற மாதிரி அந்த நித்திலாக்கும் கால் பண்ணி பார்க்கிறோம்.. பார்க்கலாம்.. ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைக்குதான்னு..” என்று சொன்னார் இன்ஸ்பெக்டர்..
“ப்ளீஸ் இன்ஸ்பெக்டர்.. உங்க விசாரணையை கொஞ்சம் தீவிரமா பண்ணுங்க.. அருணை பத்தியும் விசாரிங்க.. அவரைப் பத்தி எதுவுமே தெரியாம எங்களுக்கெல்லாம் ரொம்ப கவலையா இருக்கு.. அவரை பத்தி என்ன விஷயம் தெரிஞ்சாலும் அதை உடனே எங்களுக்கு சொல்லுங்க இன்ஸ்பெக்டர்..” என்று ராம் சொல்ல “நிச்சயமா சொல்றேன்.. சரி நான் ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைச்சா உங்களுக்கு கால் பண்றேன்..” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார் அந்த இன்ஸ்பெக்டர்..
அப்போது தேஜூ இருந்த அறையில் இருந்து வந்த செவிலி அவள் கண் விழித்து விட்டதாக சொல்ல உடனே அந்த அறைக்குள் ஓடினான் ராம்.. தேஜூ விழித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவள் அருகில் சென்று “எப்படி இருக்க தேஜூம்மா?” என்று கன்னத்தில் கை வைத்து கேட்க அவனை அப்படியே தாவி அணைத்துக் கொண்டாள் தேஜூ..
“நான் பயந்து போயிட்டேங்க.. அந்த அருண் எங்கே என்னையும் உங்களையும் பிரிச்சிருவாரோன்னு.. ஆனா அப்படி எதுவும் நடக்கல” என்று சொன்னவளின் முகம் எங்கும் முத்தமிட்டவன் “அப்படி எதுவும் நடக்காது தேஜூம்மா.. நீ எனக்காகவே பொறந்தவ.. இந்த ஜென்மத்துல நம்மளை யாராலயும் பிரிக்கமுடியாது..” என்று சொன்னவன் அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்தி இதழோடு இதழ் பொருத்தி “இனி உனக்கும் எனக்கும் இடையில் ஒரு பிரிவும் இல்லை” என்பதை அந்த இதழ் பதிப்பால் அவளுக்கு புரிய வைத்துக்கொண்டு இருந்தான்..
அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் உதடுகள் இடையே கலந்து கரிப்பு சுவை கொடுக்க அவள் இதழை விட்டு தன் இதழை பிரித்தவன் “தேஜூம்மா.. எப்பவும் உன் லிப்ஸை டேஸ்ட் பண்ணா ஸ்வீட்டா இருக்கும்.. இப்பல்லாம் ரொம்ப சால்டியா இருக்கு.. என் பிபியை கன்னாபின்னான்னு ஏத்தி விட்டுடுவ போல இருக்கு..” என்று அவன் சொல்ல அவளோ கண்ணீரோடு புன்னகைத்தாள்..
“அப்பாடா.. என் தேஜூ செல்லம் சிரிச்சுட்டா.. இது போதும் எனக்கு.. ஆனா இனிமே எனக்கு பழையபடி ஸ்வீட் லிப்ஸ் தான் வேணும்.. இந்த அழுமூஞ்சி குடுக்கற ஸால்ட்டி கிஸ் வேண்டாம்.. அப்படி ஸால்ட்டி கிஸ் குடுத்தா உன் லிப்ஸை கடிச்சு வெச்சு தண்டனை குடுத்துடுவேன்..” என்றவனை முறைத்தவள் “நீங்க கடிக்கற வரைக்கும் என் வாய் என்ன பாட்டு பாடிட்டிருக்குமா?ஸால்டி லிப்ஸ்ல இன்னும் கொஞ்சம் மொளகா பொடி போட்டு கொடுக்கறேன்.. அப்பறம் எப்படி கடிக்கிறீங்கன்னு நானும் பாக்குறேன்..” என்றாள்..
“அப்போ இனிமே காரசாரமா கிஸ் கொடுக்கிறேன்கிற? எனக்கு அதுவும் ஓகே தான்…”
குறும்பாய் கண் சிமிட்டி சொன்னவனை பொய்யாய் முறைத்தவள் ” அப்போ நானும் உங்களோட இந்த கொடுமைக்கார லிப்ஸை கடிச்சு கொடுமைப்படுத்துவேன்..” என்று அவன் உதட்டை தன் இரு விரலால் பிடித்தபடி சொன்னவளின் விரலில் மென்மையாய் முத்தமிட்டான்..
அந்த முத்தம் தந்த சிலிர்ப்பில் சிவந்தவள் சட்டென தன் கையை இழுத்துக்கொள்ள அவள் முகத்தின் அருகே இன்னொரு இதழ் பதிவுக்காக ஏங்கி வந்தவனின் மார்பில் கையை வைத்து பின்னால் தள்ளியவள் “ஐயோ.. இது ஹாஸ்பிடல்.. யாராவது வரப்போறாங்க.. சும்மா இருங்க..” என்றாள்..
“ம்ஹூம்.. இப்படில்லாம் சொன்னா செல்லாது.. சும்மா இருடா.. என்னை விட்டு தள்ளிப்போடான்னு சொல்லு.. நான் அப்படி போய் சமர்த்து புள்ளையா உக்காந்துக்கறேன்..” என்றான்..
அவளோ கண் கலங்க “ம்ஹூம்.. உங்களை எப்பவும் என்னை விட்டு தள்ளி போகச்சொல்லி என் வாயால சொல்லமுடியாது.. ஏன்னா ஐ லவ் யூ டா.. என் செல்லக்குட்டி..” என்று கலங்கிய கண்களுடன் சிரித்தவள் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்..
அவன் புன்னகைத்தபடி அவளை தன்னோடு இன்னும் இறுக்கி கொண்டவன் “இப்ப மட்டும் யாரும் வந்து பார்க்க மாட்டாங்களா?” என்று கேட்க “பார்த்தா பார்த்துக்கட்டும்.. என் புருஷன்.. நான் கட்டிக்குறேன்… என்னை யார் கேக்க முடியும்?” என்றாள்..
“அடிப்பாவி.. ரெண்டே நிமிஷத்தில இப்படி பல்ட்டி அடிக்கற.. சரியான ஆளு தான் நீ..” என்றவனின் முகம் பார்த்து “ஆமா.. இந்த ராமோட ஆளு..” என்று சொல்லி அவன் நெற்றியோடு நெற்றி முட்டினாள்..
பிறகு அவனிடமிருந்து விலகியவள் ஏதோ நினைவு வந்தவளாக “ஆமா.. அந்த அருணுக்கு என்ன ஆச்சுன்னு ஏதாவது தெரிஞ்சுதாங்க?” என்று கேட்க “இல்ல அதுக்கு தான் இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் பண்ணி கேட்டேன்.. அவனைப் பத்தி ஒரு தகவலும் கிடைக்கலைன்னு சொன்னார்.. ஆனா அவரு இன்னொரு விஷயம் சொன்னாரு தேஜூம்மா.. நான் சொல்றதை கேட்டு அதிர்ச்சி ஆகாத.. அந்த சரண் அந்த பள்ளத்தாக்குல விழுந்து இறந்து கெடந்தானாம்” என்றான் ராம்..
“என்னங்க சொல்றீங்க?” என்று அவள் கேட்க “ஆமா தேஜூம்மா.. சரண் இப்ப உயிரோட இல்ல..” என்றான் ராம்..
“ஒரு உயிர் போயிடுச்சுன்னு கேக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் எனக்கே அவன் உங்களை அடிக்கும்போது அவனை கொன்னு போடணும் போல தாங்க இருந்தது.. எப்படி அடிக்கறான் உங்களை?” என்றவளிடம் “உனக்கு ஞாபகம் இல்லைன்னாலும் முன்னாடி உனக்கும் அருணுக்கும் அவன் எவ்வளவு கொடுமை பண்ணி இருக்கான்னு மாமா சொல்லி கேட்டப்போ அவனை பார்த்ததும் கண்டதுண்டமா வெட்டி போடணும்னு எனக்கே தோணுச்சு.. கொஞ்சமாவா கொடுமை பண்ணிருக்கான் உங்க ரெண்டு பேருக்கும் அவன்.. அருண் மாதிரி ஒரு நல்ல மனுஷனோட வாழ்க்கையையே அழிச்சுட்டானே..” என்றான் ராம்..
“அந்த அருண் கொஞ்சம் நல்லவன் தாங்க.. என்ன செய்யறது அவன் புத்தியில் வந்த கோளாறுனால அவனை காப்பாத்த முடியாம போச்சு” என்று சொன்னவளிடம் “அவன் எங்க உன்னை இழுத்துகிட்டு குதிச்சிடுவானோன்னு பயந்துட்டே இருந்தேன் தெரியுமா?” என்று அவள் கன்னத்தை தன் கைகளில் ஏந்தி சொன்னவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தவளின் சிந்தனை எங்கோ போனதற்கு அறிகுறியாக அவள் கண்களில் கலவரம் தெரிய அவள் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர அவள் வேறு ஏதோ யோசனை செய்து கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கும் புரிந்தது..
“தேஜூமா.. தேஜூமா.. என்னை பாரு..” என்று சொல்ல அதற்குள் அவளோ அப்படியே மயங்கி சரிந்து இருந்தாள் அவன் தோளில்..
அப்போது உள்ளே வந்த நிலவழகன் ராமிடம் ஏதோ சொல்ல வந்து மயங்கி கிடந்த தேஜூவை பார்த்து “என்ன ஆச்சு ராம்? இப்பதானே அந்த நர்ஸ் தேஜூ கண் முழிச்சிட்டான்னு சொன்னாங்க.. அவ என்ன இன்னும் மயக்கமா இருக்கா?” என்று கேட்டான்..
“ரெண்டாவது முறையா அருண் மலை மேலே இருந்து விழறதை பார்த்து இருக்கா இல்ல? அவளால அதை தாங்கவே முடியல.. அருண் விழுந்ததை நெனச்சாலே ஸ்ட்ரெஸ் ஆகி மயக்கம் ஆயிடறா.. இப்ப அருண் பத்தி பேசவும் மயக்கம் ஆயிட்டா.. இனிமே அருண் பத்தின ஞாபகம் வர்ற மாதிரி அவகிட்ட எதுவும் பேசக்கூடாது” என்றான்..
“ம்ம்ம்ம்.. நான் அந்த நித்திலாக்கு ஃபோன் பண்ணி பார்த்தேன்.. அவ ஃபோனும் ஸ்விட்ச்ட் ஆஃப்னு மெசேஜ் வருது.. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு ராம்.. அருண் பத்தி எந்த தகவலும் இல்லை.. சரண் திடீர்னு இறந்து போயிருக்கான்.. நித்திலா ஃபோனும் விஷ்வா ஃபோனும் ஸ்விட்ச்ட் ஆஃப்னு வருது… என்ன நடக்குது ராம்..?” என்று அவன் கேட்க.. “இன்னொன்னு மறந்துட்டிங்க.. அருண் விழுந்ததுலேர்ந்து வைஷூ நம்ம கண்லயே படல.. அவங்க ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப்னு தான் வருது..” என்றான் ராம்..
இருவருக்குமே நடப்பது ஏதோ கண்கட்டி வித்தை போல மர்மமாக இருந்தது.. தேஜூ ஒரு மணி நேரத்திற்கு பிறகு கண்விழிக்க மருத்துவர் அவளை வீட்டிற்கு கூட்டிப் போகலாம் என்று மாலையில் கூறினார்.. ஆனால் ராம் எண்ணியதை போலவே நிகழ்ந்ததை பற்றி அவளிடம் பேசவேண்டாம் எனவும் அது அவளுடைய மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் எனக் கூறினார்..
சின்ன பையனின் வீட்டிற்கு தேஜூவை அழைத்து வந்தான் ராம்.. அவள் வந்ததும் நிவேதாவுடன் பேசுவது சமைப்பது என்று நிகழ்ந்தவற்றை மறந்து மகிழ்ச்சியாய் நேரத்தை செலவிட ராமும் சிறிது நிம்மதியாய் இருந்தான்..
அவளுக்கு தெரியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் சரண் இறந்தது பற்றியும் நித்திலா, விஷ்வா, வைஷூ மூவரை பற்றி எதுவும் தெரியவில்லை எனவும் சொன்னான்..
அதை கேட்டு சின்ன பையனும் அழகப்பனும் ஏதோ கேட்க முனைய அவர்களை மொட்டை மாடிக்கு அழைத்து வந்து பேசத் தொடங்கினான்..
சின்ன பையன் “அண்ணா.. அருண் அண்ணா பத்தி எதுவுமே தெரியலயே.. எங்கண்ணா போனாரு அவரு..? நாம வேணா அந்த இடத்துக்கு போய் ஒருமுறை தேடி பார்த்துட்டு வரலாமா?” என்றான்..
அழகப்பனும் “ஆமாம் மாப்பிளை.. அருணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. இந்த விஷ்வா தம்பியும் வைஷூ பொண்ணும் என்ன ஆனாங்கன்னு தெரியல.. பேசாம சின்ன பையன் சொல்ற மாதிரி நாம அந்த இடத்துக்கு போய் ஒருமுறை தேடிட்டு வந்துடலாமா?” என்று கேட்டார்..
அதற்குள் ராமின் கைபேசி சிணுங்கியது.. அதில் இன்ஸ்பெக்டர் தான் பேசினார்..
“மிஸ்டர் ராம்.. சரணோட பேரன்ட்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டோம்.. அவங்க கிட்ட பாடியை ஹேன்ட் ஓவர் பண்ணியாச்சு.. ஆனா இப்ப மிஸ்.நித்திலாவும் மிஸ்டர்.விஷ்வாவும் ஸ்டேஷன்க்கு வந்திருக்காங்க.. நீங்க கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வரமுடியுமா?” என்று கேட்டார்..
தொடரும்..