பரீட்சை – 88
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
எங்கேயோ மர்மமாய்
ஏதேதோ நடக்கிறது..
எவனோ ஆட்டி வைக்க
எல்லோரும் ஆடுகிறார்கள்..
எதற்காக நடக்கிறது
ஏன் அது நிகழ்கிறது
என்ற காரணம் புரியாமல்
என் உள்ளம் தவிக்கிறது..
மர்ம முடிச்சை
அவிழ்த்திடுவேன்
மறைந்த உண்மையை
வெளிக்கொணர்வேன்..
#######################
மர்மம் என்ன?
“மிஸ்டர் ராம்.. சரணோட பேரன்ட்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டோம்.. அவங்க கிட்ட பாடியை ஹேன்ட் ஓவர் பண்ணியாச்சு.. ஆனா இப்ப மிஸ்.நித்திலாவும் மிஸ்டர்.விஷ்வாவும் ஸ்டேஷன்க்கு வந்திருக்காங்க.. நீங்க கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வரமுடியுமா?”
இன்ஸ்பெக்டர் கேட்க
“என்ன…?! நித்திலா விஷ்வாவும் அங்க வந்து இருக்காங்களா? சரி இன்ஸ்பெக்டர்.. நான் உடனே வரேன்… ஆனா நீங்க எனக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க.. அவங்க அருண் பத்தி ஏதாவது சொன்னாங்களா? வீட்ல எல்லாரும் அருணுக்கு என்னாச்சோன்னு கொஞ்சம் டென்ஷனா இருக்காங்க..” என்று கேட்டான்..
“இல்ல மிஸ்டர் ராம்.. அருண் பத்தி எதுவும் தெரியல.. ஆனா இவங்க வேற ஒரு கதை சொல்றாங்க.. இன்னும் இந்த கேஸ்ல என்ன எல்லாம் நடக்க போகுதுன்னு தெரியல.. ஒரே மர்மமா இருக்கு.. எதுக்கும் நீங்க நேர்ல வாங்க.. நான் உங்களுக்கு விவரமா சொல்லறேன்..” என்றார் இன்ஸ்பெக்டர்..
“ஓகே இன்ஸ்பெக்டர்.. நான் உடனே வர்றேன்..” என்றவன் அழகப்பனிடமும் சின்ன பையனிடமும் விஷயத்தை சொல்லிவிட்டு நிலவழகனை கைபேசி மூலம் அழைத்து விஷயத்தை சொல்லி காவல் நிலையத்துக்கு வர சொல்லிவிட்டு காவல் நிலையம் நோக்கி குழப்பத்துடனேயே போனான்..
காவல் நிலையம் வாசலில் நிலவழகன் ஏற்கனவே வந்து இவனுக்காக காத்திருக்க “ஹலோ.. நிலவழகன்.. வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்று கேட்க “இல்ல.. ராம்.. இப்ப தான் வந்தேன்.. ரெண்டு நிமிஷம் தான் ஆகுது..” என்றான்..
“சரி.. வாங்க உள்ள போலாம்…” என்று நிலவழகனோடு உள்ளே சென்றான்.. அங்கே இன்ஸ்பெக்டர் எதிரில் அமர்ந்திருந்த நித்திலா மற்றும் விஷ்வாவின் கோலத்தை பார்த்தவன் அரண்டு போனான்..
இருவரையும் பார்த்தால் யாரிடமோ நன்கு அடி வாங்கி எங்கிருந்தோ தப்பித்து பிழைத்து வந்தாற் போல் இருந்தார்கள்..
நேரே அவர்களிடம் சென்றவன் “விஷ்வா.. என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கீங்க? யாராவது உங்களை அடிச்சாங்களா?” என்று பதட்டத்துடன் கேள்விகளை அடுக்க இன்ஸ்பெக்டர் ராமை பார்த்து “மிஸ்டர் ராம்.. கொஞ்சம் அமைதியா இருங்க.. ரிலாக்ஸ் பண்ணுங்க.. நான் உங்களுக்கு எல்லா விஷயமும் சொல்றேன்..மொதல்ல நீங்க ரெண்டு பேரும் இப்படி உட்காருங்க..” என்று பக்கத்திலிருந்த கதிரைகளை காட்ட ராமும் நிலவழகனும் விஷ்வாவையும் நித்திலாவையும் ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே இன்ஸ்பெக்டர் காட்டிய கதிரையில் அமர்ந்தார்கள்..
“மிஸ்டர் ராம்.. ஆக்சுவலா சரண் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.. அதுக்கு இவங்க ரெண்டு பேரும் தான் சாட்சி..” என்றார் இன்ஸ்பெக்டர்..
“என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்? சரணை யாரு கொலை செஞ்சாங்க? அவருக்கு அப்படி யாரு எதிரி?” என்று கேட்டான் ராம்..
நிலவழகனும் “எனக்கு தெரிஞ்சு சரணோட தேஜூ விஷயமா எப்பவும் சண்டை போட்டுட்டு இருந்தது அருண் தான்.. அருணும் மலை மேல இருந்து விழுந்துட்டாரு… அப்புறம் சரணை வேற யார் கொலை பண்ணாங்க..?” என்று முகத்தில் ஒரு புதிரோடு கேட்டான்..
“சரண் உங்க காலேஜ் டைம்ல ட்ரக்ஸ் எடுத்திட்டு இருந்திருப்பான் போல இருக்கு.. அதுல அவன் ரெகுலரா ஒரு ஆள் கிட்ட டிரக்ஸ் வாங்கி யூஸ் பண்ணிட்டு இருந்திருக்கான்.. ஒருநாள் சரண் டிரக்ஸ் வாங்கிட்டு வரும்போது போலீஸ் அந்த பக்கம் வர தான் எங்கயாவது மாட்டிக்க போறோம்ன்னு சொல்லி அந்த ட்ரக்ஸ் வித்துட்டு இருந்த ஆளை அவங்களுக்கு காட்டி கொடுத்துட்டான்.. தனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிற மாதிரியும் அவங்க வேற சில ஸ்டூடண்ட்ஸ்க்கு ட்ரக்ஸ் விக்கறதை பார்த்து கம்ப்ளைன்ட் பண்ண மாதிரியும் காட்டிகிட்டு அவங்களை மாட்டிவிட்டு இருக்கான்.. அந்த ஆளு ஒரு ரெண்டு மாசம் முன்னாடி தான் அந்த கேஸ்ல இருந்து ரிலீஸ் ஆனான்.. சரணை ஃபாலோ பண்ணி இருப்பான் போல இருக்கு.. சரண் ஜெயில்ல இருக்கறது தெரிஞ்சு அவனால ஒன்னும் பண்ண முடியல.. ஆனா அவனை அருண் ஜெயில்லேர்ந்து வெளிய கொண்டு வந்ததை தெரிஞ்சுக்கிட்டவன் அவனை சமயம் பார்த்து கொலை பண்ணிட்டான்.. அந்த கொலைக்கு சாட்சியா இருந்த விஷ்வாவையும் நித்திலாவையும் அவனுடைய இடத்துல அடைச்சு வெச்சிருந்தானாம்.. இவங்க அங்க இருந்து கஷ்டப்பட்டு தப்பிச்சு வந்திருக்காங்க.. இவங்க ரெண்டு பேரோட ஃபோனையும் வாங்கி சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்திருக்கான்..” என்று விவரித்தார் அந்த இன்ஸ்பெக்டர்..
“சரண் ட்ரக்ஸ் எடுத்திட்டு இருந்தானா? நிஜமாவா இன்ஸ்பெக்டர்?” என்று கேட்க “ஆமா அது நிஜம்தான்.. அந்த ட்ரக் டீலரை அரெஸ்ட் பண்ணின இன்ஸ்பெக்டர் கிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நான் பேசினேன்.. அவரும் அதெல்லாம் உண்மைதான்னு சொன்னாரு.. ஆனா சரண் ட்ரக்ஸ் எடுத்துட்டு இருந்தான்னு இப்ப நித்திலாவும் விஷ்வாவும் சொன்ன அப்புறம்தான் எல்லாருக்குமே தெரியும்.. அவன் அந்த ஆளு கிட்டயே ட்ரக்ஸ் வாங்கிட்டு அவனையே மாட்டி விட்டதால ஜெயிலுக்கு போனவன் ரெண்டு மாசம் முன்னாடி உள்ள இருந்து வந்திருக்கான்.. அவன் குடும்பமே அதுக்குள்ள சிதறி காணாம போயிருச்சு.. அந்த கோவத்துல நித்திலா விஷ்வா கண்ணு முன்னாடி சரணை மலை மேலே இருந்து தள்ளிவிட்டு கொன்னிருக்கான்..” என்றார் இன்ஸ்பெக்டர்..
ஆனால் விஷ்வாவும் நித்திலாவும் வாயை திறக்காமல் இருந்ததை பார்த்து ராமுக்கு ஏதோ நெருடலாக இருந்தது.. இன்ஸ்பெக்டரே தொடர்ந்தார்..
“சோ.. அருணை பத்தி இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை.. நாங்க இன்னும் கொஞ்சம் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு தான் இருக்கோம்.. அது தவிர அந்த ட்ரக் டீலரையும் தேடி கண்டுபிடிச்சு அவனுக்கு ஒருவேளை அருணை பத்தி ஏதாவது தெரியுமான்னு விசாரிக்கணும்.. பார்க்கலாம்.. இதுவரைக்கும் அருணோட பாடியும் கிடைக்கல.. அவர் பத்தி அந்த ஏரியால யாரும் எந்த தகவலும் சொல்லல.. அதனால இப்போதைக்கு பாசிட்டிவா அவர் உயிரோடு இருப்பார்ன்னு நம்பலாம்.. இந்த ட்ரக் டீலர் கிடைச்சா சரண் கேஸ் முடிஞ்சிடும்.. ஓகே மிஸ்டர். ராம்.. உங்களுக்கு வேற ஏதாவது கேட்கணுமா?” என்று கேட்க “ஒன்னும் இல்ல சார்.. அப்போ நாங்க கிளம்பறோம்” என்றான் ராம்..
“ஓகே..” என்று அவனோடு கை குலுக்கியவர் விஷ்வாவையும் நித்திலாவையும் பார்த்து ஒரு கோப்பில் கையெழுத்திட சொல்லி பிறகு அவர்களையும் அனுப்பி வைத்தார்..
வெளியே வந்த விஷ்வாவிடம் சென்ற ராம்.. “அப்படின்னா அந்த ட்ரக் டீலர் உங்க ரெண்டு பேரையும் அடைச்சு வைச்சிருந்தானா?” என்று கேட்க “ஆமா ராம் சார்.. அவன் எங்களை ஒரு பழைய வீட்ல அடைச்சி வச்சிருந்தான்.. ஆளுக்கு ஒரு ஓட்டை சேர்ல உட்கார வெச்சு சேரோட சேர்த்து கட்டி போட்டிருந்தான்.. அந்த மலைக்கு பக்கத்திலேயே தான் இருந்தது அந்த வீடு.. இன்ஸ்பெக்டர் கிட்ட அதோட அட்ரஸ் கூட கொடுத்திருக்கோம்.. அவர் இப்பவே அங்க போய் தேடுறேன்னு சொல்லி இருக்காரு..” என்று சொன்னான் விஷ்வா..
இப்போதும் அவன் கொஞ்சம் தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் பேசியது ராமுக்கு ஏதோ சந்தேகமாகவே இருந்தது.. “சரி அதை விடுங்க.. ஆமா வைஷு பத்தி உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சுதா?” என்று ராம் கேட்டான்..
“வைஷு வா? என்ன ராம் சார்.. நானே இப்பதான் அந்த கொலைகாரன் கிட்ட இருந்து தப்பிச்சு இங்க வந்து இருக்கேன்.. எனக்கு எப்படி வைஷூ பத்தி தெரியும்?” என்று கேட்டான்..
“நித்திலா.. நீ தான் சரணோட க்ளோஸ் ஃபரென்ட் ஆச்சே.. உனக்கு கூட சரண் ட்ரக்ஸ் எடுத்துட்டு இருந்தான்ற நியூஸ் தெரியாதா?” என்று கேட்க நித்திலா “எனக்கு தெரியும்.. ஆனா அவன் என் ஃப்ரெண்ட்.. அதனால நான் யார்கிட்டயும் சொல்லல.. ஆனா இப்பதான் அவன் செத்து போயிட்டானே.. இப்ப என்னை அந்த கொலைகாரன் கிட்ட இருந்து பாதுகாத்துக்கறதுக்காக அதை பத்தி சொல்றது தப்பு இல்லன்னு தோணுச்சு.. அதான் சொன்னேன்.. இன்ஸ்பெக்டர் எங்க ரெண்டு பேருக்குமே பாதுகாப்பு கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காரு..” என்று சொன்னாள் அவள்..
“ம்ம்ம்ம்.. சரி.. விஷ்வா.. நீ இப்போ என்னோட சின்ன பையன் வீட்டுக்கு தானே வர போற?” என்று கேட்க “ஆமா அண்ணா… உங்களோட தான் வரேன்..” என்றான்..
நித்திலா அவள் அழைத்திருந்த வாடகை காரில் ஏறி அவள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போய் சேர்ந்தாள்..
விஷ்வாவோடு வீட்டுக்கு வந்த ராமை எல்லோரும் கேள்விகளால் துளைக்க அவனும் விஷ்வாவும் நிகழ்ந்ததை கூறிவிட்டு அவரவர் அறைக்கு சென்று விட்டனர்..
ராமுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.. விஷ்வா எதையோ தன்னிடம் மறைப்பதாகவே அவன் மனதுக்கு தோன்றியது.. தன் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவனை பார்த்த தேஜூ “என்ன ஆச்சுங்க? தூக்கம் வரலையா? பொரண்டுகிட்டே இருக்கீங்க..?” என்று கேட்க “என்னமோ நடத்ததெல்லாம் நினைச்சா தூக்கம் வரமாட்டேங்குது தேஜூ.. நீ தூங்கு.. நான் கொஞ்சம் வாசல் வரைக்கும் போயிட்டு காலார கொஞ்ச நேரம் நடந்துட்டு காத்து வாங்கிட்டு வரேன்..” என்றான்..
“நானும் வரவா?” என்று அவள் கேட்க “இல்ல இப்பதான் நீ உடம்பு சரி ஆகி ஹாஸ்பிடல் இருந்து வந்து இருக்கே.. உனக்கு தூக்கம் ரொம்ப முக்கியம்… அது மட்டும் இல்லாம வெளியில கொஞ்சம் சில்லுன்னு இருக்கு.. நீ வெளிய வர வேண்டாம்.. நீ தூங்கு.. நான் போயிட்டு வந்துடறேன்.. சும்மா ஒரு 10 மினிட்ஸ் தான்.. ஓகே..?” என்று சொன்னவனை பார்த்து புன்னகைத்தவள் “சரி போயிட்டு சீக்கிரம் வந்துடுங்க..” என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டாள்..
அவள் காலடியில் இருந்த போர்வையை எடுத்து கழுத்து வரை போர்த்தி விட்டவன் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தான்..
கீழே இறங்கி கதவை திறந்து வெளியே செல்லலாம் என்று நினைத்துப் படியில் இறங்கியவனுக்கு வரவேற்பறையில் ஏதோ சலசலப்பு கேட்கவும் மெதுவாக சத்தம் போடாமல் அடிமேல் அடி வைத்து இறங்கி வந்தான்..
விஷ்வா அந்தப் பக்கமும் இந்த பக்கமும் பார்த்துக் கொண்டு ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் பதுங்கி பதுங்கி வரவேற்பறையை தாண்டி கதவருகில் சென்றான்..
படிக்கட்டு அருகிலேயே மறைந்து கொண்டிருந்த ராம் அவன் என்னதான் செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தான்..
கதவருகே சென்ற விஷ்வா இந்த பக்கமும் அந்த பக்கமும் பார்த்து யாரும் வரவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு மெதுவாக சத்தம் போடாமல் கதவை திறந்தான்.. பிறகு வெளியே சென்று கதவை மூட வேக நடை போட்டு கதவை அடைந்தான் ராம்..
வெளியே போய் பார்க்க விஷ்வா வேகமாய் அந்த வீடு இருந்த சாலையில் நடந்து கொண்டிருந்தான்.. அங்கே ஒரு ஆட்டோ நிறுத்தம் இருக்க அவன் அங்கு சென்று ஒரு ஆட்டோவில் ஏறி செல்லவும் ராம் வேகமாய் சென்று அதற்கு பின்னால் நின்றிருந்த இன்னொரு ஆட்டோவில் ஏறி முதலில் சென்ற ஆட்டோவை பின் தொடர்ந்து செல்லுமாறு சொன்னான்..
சற்று தொலைவிலேயே விஷ்வாவின் ஆட்டோவை தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது ராமின் ஆட்டோ.. அரை மணி நேரத்திற்கு பிறகு ஒரு இடத்தில் விஷ்வாவின் ஆட்டோ நிற்க ராமும் தனது ஆட்டோவை நிறுத்த சொல்லி அவரை அங்கேயே காத்திருக்க சொன்னான்..
அந்த ஆட்டோ நின்ற இடத்தில் ஒரு ஹோட்டல் இருக்க அதற்குள் சென்றான் விஷ்வா.. ராம் மெல்ல அவனைத் தொடர்ந்து சென்றவன் அவன் வரவேற்பில் ஏதோ சொல்லி கேட்டு படி ஏறி செல்லவும் ராம் அவனைத் தொடர்ந்து படியேறி போக அங்கு வரவேற்பில் இருந்தவர் “ஹலோ சார்.. ஒரு நிமிஷம்.. எங்க போறீங்க?” என்று கேட்க “அது நான் அவன் கூட வந்தவன் தான்.. அவன் அவசரத்துல என்னை விட்டுட்டு போயிட்டான்.. நீங்க வேணா விஷ்வாவை கூப்பிட்டு கேட்டு பாருங்க..” என்று அவன் பெயரை சொல்லவும் அந்த வரவேற்பில் இருந்தவர் நிஜமாகவே ராமுக்கு அவனை தெரிந்திருக்கும் என்று எண்ணி “சரிங்க சார்.. நீங்களும் போய் பாருங்க..” என்று சொல்லி அனுப்பினார்..
வேகமாக படியேறிய ராம் விஷ்வா முதல் தளத்தில் கடைசி அறைக்குள் நுழைவதை பார்த்தான்.. அவனை பின் தொடர்ந்து சென்றவன் அந்த அறையின் கதவை தட்ட அந்தக் கதவை திறந்து எதிரே நின்றிருந்த ராமை பார்த்து திகைத்து நின்றாள் வைஷு..
தொடரும்…