அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 9🔥🔥

5
(16)

பரீட்சை – 9

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

என் உயிர் கவிதையே..

எங்கு சென்றாயோ நீ..

 

முகம் காண 

ஏங்கி தினம்

மருகி உருகி

கிடக்கிறேன் நான்…

 

பிள்ளைகளை மட்டும் 

பார்த்து சென்றாய்..

 

என்னை காண 

கண்ணில் ஒரு

ஏக்கம் இல்லையோ

கண்மணி..

 

இன்னல் என்ன 

படுகிறாயோ..

இளைத்து வாடி 

துடிக்கிறாயோ..

 

உன்னை நான் 

காணும் வரை 

நெஞ்சில்

ஒரு துளி 

அமைதியும் 

இல்லையடி..

 

எப்போது வருவாயோ … 

வந்து என்

ஏக்கம் தீர்ப்பாயோ?..

 

#############

 

ஏக்கம் தீரடி… ஏந்திழையே…!!

 

“அப்படின்னா நீ இனிமே நம்ம அப்பாவோட ஒரே வீட்ல எங்களோட இருக்க மாட்டியா அம்மா? எங்களை அப்பா கிட்ட இருந்து கூட்டிட்டு போயிடுவியா? நாங்க அப்பாவோட இருக்கவே முடியாதா?” 

 

பூஜா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அப்படியே சிலை போல அமர்ந்திருந்தாள் தேஜு..

 

அதற்கு மேல் தன் துக்கத்தை உள்ளுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் ” உங்களுக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு.. இதை பத்தி நாம அப்புறம் பேசலாம்… இப்போதைக்கு உங்க அப்பாவை விட்டு உங்களை கூட்டிட்டு போக மாட்டேன்.. நான் அப்பப்ப உங்களை இந்த மாதிரி வந்து பாத்துக்குறேன்.. நீங்க கிளாசுக்கு போங்க” என்று சொல்லி  அவர்கள் அந்த அறையை விட்டுப் போக திரும்பவும் அவர்களை ” ஹேய்.. குட்டீஸ்..” என்று அழைத்தான் அருண்..

 

“அதான் அம்மா சொல்லிட்டாங்க இல்ல.. என்கிட்ட எல்லாம் வாங்கிக்கலாம்னு… சாக்லேட் வாங்கிட்டு போக மறந்துட்டீங்களே!!” என்று சொல்லி அவர்களிடம் தான் வாங்கி வந்த சாக்லேட்டை கொடுத்தான்.. 

 

அவர்கள் அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து போனதும் அப்படியே உடைந்து போய் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள் தேஜஸ்வனி..

 

அவள் தோளில் கை வைத்த அருண்.. “அஷ்ஷூ டியர்.. எனக்கு புரியுது.. உன்னால உன் குழந்தைகளை விட்டு இருக்க முடியல.. கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு வழி பண்றேன்..” என்று சொன்னவனை முறைத்து பார்த்து அவன் கையை தன் தோளில் இருந்து உதறி எடுத்தாள்.. அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து வெளியே வந்தாள் அவள்..

 

காரில் ஏறி இருக்கையில் அமர்ந்தவள் யாரும் பார்க்காதபடி கார் கதவை சாற்றியவள் அப்படியே அந்த இருக்கையில் தலையை சாய்த்து கொண்டு  முகத்தில் கண்ணீர் கோடுகள் ஆறாய் வடிய அழுதாள்..

 

“ராம்.. என்னை மன்னிச்சிடுங்க.. நான் சொன்ன விஷயத்தை பசங்க உங்க கிட்ட வந்து சொல்லும் போது உங்க உயிரே வலிக்கும்னு எனக்கு தெரியும்.. ஆனா உங்க உயிரை காப்பாத்த எனக்கு இதை தவிர வேற வழி தெரியல ராம்… எப்படியாவது இந்த ராட்சசன் கிட்ட இருந்து தப்பிச்சு கூடிய சீக்கிரம் உங்ககிட்ட வந்து சேர்ந்துடறேன்.. அது வரைக்கும் என் மேல இருக்கிற நம்பிக்கையை மட்டும் இழக்காதீங்க.. நீங்க என் மேல வச்சிருக்கற நம்பிக்கையில ஒரு சதவீதம் குறைஞ்சுதுன்னு தெரிஞ்சா கூட என் உயிரே போயிரும்” வாய்விட்டு கதறி அழுதாள் தேஜூ..

 

“ஆனாலும் உன் டெம்ப்ரரி புருஷன் மேல ரொம்ப தான் நம்பிக்கை வெச்சிருக்கே.. இவ்வளவு நம்பிக்கை எல்லாம் ஆகாது… நீயே என்னோட வந்து இங்க என்னை பத்தி இப்படி சொன்னேன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே பாரு.. உன் புருஷன் என்ன பண்றான்னு..  டிவோர்ஸ் ஃபைல் பண்ணிட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பான்.. நீயே உன் வாயால இன்னும் கொஞ்ச நாள்ல என்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்ன அப்புறம் அது எப்படி அஷ்ஷூ? அவன் உன்னையே நினைச்சுட்டு உக்காந்து இருப்பான்” என்று கிண்டலாக கேட்டான் அருண்..

 

“நீ நினைக்கிற மாதிரி எங்க உறவோட அஸ்திவாரம் அவ்வளவு பலவீனமானது கிடையாதுடா.. உன்னை மாதிரி கிடையாதுடா அவரு..  என் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வெச்சிருக்கார்.. அதைவிட எங்களுக்குள்ள இருக்கிற காதல் மேல அவருக்கு இருக்கிற நம்பிக்கையை எதாலயும் அசைச்சு கூட பார்க்க முடியாது.. இந்த விஷயம் தெரிஞ்சா கூட அவர் நிச்சயமா நம்ப மாட்டார்.. இதுல ஏதோ தப்பு இருக்குன்னு யோசிப்பாரே தவிர என்னை ஒரு அணு அளவுக்கு கூட சந்தேகப்பட மாட்டார்.. அவர் மேல எனக்கும் இந்த விஷயத்துல அவ்ளோ நம்பிக்கை இருக்கு.. நீ வேணா இதை ஒரு சேலஞ்சாவே எடுத்துக்கோ..” சத்தமாக சவால் விட்டாள் அவள்..

 

” ஓ.. இது நல்லா இருக்கே.. இந்த கேம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அஷ்ஷூ டார்லிங்.. ஒரு வேளை நீ சொல்ற மாதிரி உன் புருஷன் உன் பிள்ளைங்க இதை போய் சொன்ன அப்புறமும் நம்பாம எந்த ஆக்சனும் எடுக்காம நாளைக்கு  திரும்பி உன்னை தேடறதை கன்டினியூ பண்ணினான்னா நான் உன்னை உன் புருஷனை பார்க்க கூட்டிட்டு போறேன்.. நீ நேர்ல பார்க்க முடியாது.. மறைஞ்சிருந்து நீ பாத்துக்கலாம்..” என்றான் அவன்..

 

இதை கேட்ட தேஜூ முகத்தில் ஆனந்தம் தாண்டவம் ஆடியது.. 

 

“நிஜமாதான் சொல்றியா  அருண்..? நீ என்னை ஏமாத்தல இல்ல? நிஜமாவே அவரை பார்க்க என்னை கூட்டிட்டு போவியா? எனக்கு அவரை நேர்ல கூட பார்க்க வேண்டாம்.. எங்கேயாவது ஒளிஞ்சிருந்து பார்த்தா கூட போதும்.. அவரை என் மனசு என் கண்ணு ரெண்டும் தேடுது.. நீ உண்மையை தானே சொல்றே?..” 

 

 “அஷ்ஷூமா நான் எப்பவுமே உன் கிட்ட பொய் சொல்ல மாட்டேன் அஷ்ஷூம்மா.. நான் சொல்றது முழுக்க முழுக்க உண்மை.. ஆனா ஞாபகம் வச்சுக்கோ‌.. கண்டிஷன்ஸ் அப்ளை.. உன்னோட புருஷன் உன் மேல இருக்கிற நம்பிக்கை குறையாம மறுபடியும் இப்ப தேடற மாதிரியே நாளைக்கு காலையில உன்னை தேட ஆரம்பிச்சான்னா நாளைக்கு சாயந்தரம் இல்ல அடுத்த நாள் காலையில உன்னை கூட்டிட்டு போய் அவனை காட்டுறேன்.. இது என்னோட பிராமிஸ்..”

 

அவள் முகம் முழுக்க சிரிப்பு நிறைந்திருக்க “ஓகே அருண்.. நிச்சயமா நான் அவரை பார்த்துடுவேன்.. எனக்கு அந்த நம்பிக்க நிச்சயமா இருக்கு.. இந்த சேலஞ்சுல கட்டாயம் நீ தோத்துருவே..” மனம் நிறைந்த புன்னகையோடும் முகம் முழுதும் நம்பிக்கையோடும் சொன்னாள் அவள்..

 

“ஐ லைக் யுவர் கான்ஃபிடன்ஸ் அஷ்ஷூ பேபி.. ஆனா சேலஞ்சுல ஒருவேளை நீ தோத்துட்டன்னா என்னோட கண்டிஷன் என்னன்னு நீ தெரிஞ்சுக்கணும் இல்ல? பந்தயம்னா ரெண்டு சைடும் ஏதாவது வெலை கொடுக்கணுமே.. ஒருவேளை உன் புருஷன் அடுத்த நாள் உன்னை தேடாம உன் மேல நம்பிக்கை இல்லாம இருந்தான்னா அடுத்த ரெண்டு நாள்ல அவனுக்கு டிவோர்ஸ் கொடுக்க அப்ளை பண்ணிட்டு ஒரு வாரத்துக்குள்ள என்னை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.. ஓகேவா..?” என்று கேட்டான் அருண்..

 

அவள் எந்த தயக்கமும் இல்லாது சற்றும் தாமதிக்காமல் ஒரு வித இறுமாப்புடனே “எனக்கு ஓகே தான்.. நீ கனவு காணறதெல்லாம் நிச்சயமா எந்த காலத்திலயும் நடக்காது.. என் ராம் பத்தி எனக்கு நல்லா தெரியும்.. வெயிட் பண்ணி பாத்துக்கிட்டே இரு..” என்றாள்..

 

“ஓகே.. லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம்” என்று சொல்லிவிட்டு அவன் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்த அவளோ “ஆமா.. அவரு என் மேல நம்பிக்கை வெச்சிருக்கிறார்ங்கறதை நீ மறைச்சிட்டு என்கிட்ட வந்து அவர் என் மேல நம்பிக்கை இல்லாம பேசுறாருன்னு பொய் சொல்லமாட்டேன்னு என்ன நிச்சயம்? உன்னை நான் எப்படி நம்பறது? நீதான் என்னை அடையறதுக்காக என்னென்னவோ செஞ்சவனாச்சே.. ஒரு உயிரை எடுக்கறதுக்கு கூட தயங்கமாட்டியே.. அப்படி இருக்கும்போது இந்த மாதிரி ஒரு சின்ன பொய் சொல்லி என்னை ஏமாத்தமாட்டேன்னு நான் எப்படி நம்பறது?” என்று கேட்டாள் அவள்..

 

“ம்ம்ம்ம்.. பாயிண்ட்… பரவால்ல.. அஷ்ஷூமா.. நீ பயங்கர ஸ்மார்ட்டா இருக்க..  ஆனா விஷயம் என்னன்னா இந்த விஷயத்தை கேட்டு அவன் என்ன பேசுறான்னு உனக்கு நான் வீடியோவே எடுத்துட்டு வந்து காட்டுறேன்.. உன் குடும்பத்தை ஒவ்வொரு நிமிஷமும் நான் ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன்.. அவங்க ஒவ்வொரு நிமிஷமும் என்ன பண்றாங்க ஏது பண்றாங்க எல்லாமே எனக்கு தெரியும்.. அவங்களை நான் கண்காணிக்காத ஒரே இடம் உங்க வீட்டுக்குள்ள தான்.. இன்னைக்கு குழந்தைங்களை அவன் பிக்கப் பண்ண வரும்போது அவங்க சொல்ற விஷயத்தை கேட்டு அவன் எப்படி ரியாக்ட் பண்றான்னு உனக்கு வீடியோ எடுத்து நான் காமிக்கிறேன்.. ஓகேவா.. இந்த ஆதாரம் போதும்ல உனக்கு?” என்று அவன் சொல்லவும் அவள் அவனை முறைத்தாள்..

 

தன் குடும்பத்தை நாள் முழுதும் பின் தொடர்ந்து எந்த நேரமும் அவர்களுக்கு என்ன ஆபத்து விளைவிக்கலாம் என்று யோசிக்கும் அவனை அவள் வெறுத்தாள்..

 

“கேம்ன்னு வந்துட்டா நான் ரொம்ப ஜெனுவின் பிளேயர்.. எந்த விதத்திலும் சீட்டிங் பண்ண மாட்டேன்.. நீயும் உன் வார்த்தைல இருந்து மாற மாட்டேன்னு நம்பறேன்.. ஒரு வேளை இந்த சேலஞ்சில நீ தோத்துட்டனா ரெண்டு நாள்ல ராமுக்கு டிவோர்ஸ் கொடுக்க அப்ளை பண்ணிட்டு என்னை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.. இதை ஞாபகம் வச்சுக்கோ..” என்று சொன்னவன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்..

 

##############

 

வங்கியில் நாள் முழுவதும் கொஞ்சமும் வேலை ஓடாது ஏதோ கடனுக்கே என்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ராம் தன்னறைக் கதவை தட்டி அந்த வங்கியில் டெல்லராக வேலை செய்யும் மாலினி “மே ஐ கம் இன் சார்?” என்று கேட்கவும் “கம் இன்” என்றான்..

 

“சொல்லுங்க மாலினி.. என்ன விஷயம்?” என்று அவன் கேட்கவும் “சார்.. அது.. எங்க தூரத்து சொந்தக்கார பையன் ஒருத்தன்.. பிஸ்னஸ் ஒண்ணு ஆரம்பிக்க போறான்.. சார்.. அதுக்கு லோன் வேணுமாம்.. என்னை ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டிருந்தான்.. இதோ இந்த பேப்பர்ஸ்ல அந்த பிஸ்னஸோட டீடெய்ல்ஸ் எல்லாம் இருக்கு… கொஞ்சம் பார்த்து அவனுக்கு லோன் சாங்சன் பண்ணி விடுங்க சார்..” என்று அவள் கேட்க “குடுங்க..” என்று சொல்லி  அவள் நீட்டிய கோப்பை திறந்து பார்த்தான்..

 

“இந்த பிசினஸ் அவுட்லைன்ல எதுவுமே கிளியரா இல்ல.. இதுல எல்லாமே குழப்பமா இருக்கு.. அவன் என்ன பண்ண போறாங்கறதை கூட தெளிவா சொல்லல.. இதுக்கு எப்படி லோன் சாங்க்ஷன் பண்ண முடியும்? என்ன எஸ்டிமேட்.. ரிட்டர்ன்ஸ் எவ்ளோ எக்ஸ்பெக்ட் பண்றான்? இதெல்லாம் எதுவுமே இதுல தெளிவா இல்ல.. இப்படி இருக்கும்போது இந்த ப்ராஜெக்ட்டுக்கு எப்படி லோன் சாங்க்ஷன் பண்ண ரெகமெண்ட் பண்ண முடியும்? சாரி மிஸ் மாலினி..” என்று தீர்க்கமாக சொன்னான் அவன்..

 

மாலினி அவன் அருகில் வந்து “சார்.. அதான் பிஸ்னஸ் ப்ளான ஃபுல்லா அதுல போட்டு இருக்கானே சார்.. அதை பாத்தா நாமளே  அதோட எஸ்டிமேட் என்ன இருக்கும்னு தெரிஞ்சுக்கலாமே சார்.. கொஞ்சம் எனக்காக எப்படியாவது ஏற்பாடு பண்ணி விடுங்க சார்..” 

 

 அவன் மேல் தன் உடல் படுமாறு நின்று கொண்டு கோப்பில் எதையோ காண்பித்து கிறக்கமான குரலில் சொன்னவளை எரித்து விடுவது போல் பார்த்தான் அவன்..

 

“மிஸ். மாலினி.. உங்க லிமிட்டுக்குள்ள இருங்க.. கொஞ்சம் தள்ளி நின்னு பேசுறீங்களா?” என்று சொன்னவன் “நீங்க என்ன சொன்னாலும் சரி.. இந்த ப்ராஜெக்ட்டுக்கு என்னால லோன் சாங்க்ஷன் பண்ண சொல்லி ரெகமண்ட் பண்ண முடியாது.. நீங்க தயவு செஞ்சு வெளியில போங்க.. முதல்ல..” என்றான் அவன்..

 

மாலினிக்கு முகம் சுண்டைக்காயாய் சுருங்கி போனது.. அங்கே தனது பருப்பு வேகவில்லை என்று தெரிந்துகொண்டவள் “ஏன் சார்.. அவன் ஏதாவது பணம் வேணும்னாலும் உங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் கொடுக்கிறேன்னு சொல்றான்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி இதை சாங்க்ஷன் பண்ணி விட கூடாதா சார்..?” என்று அவள் கேட்க “இப்ப நீங்க இங்கருந்து வெளில போறீங்களா? இல்ல நீங்க இப்படி பேசினீங்கன்னு நான் மேல் இடத்துல கம்ப்ளைன்ட் பண்ணவா?” குரலில் கோபத்தோடு கேட்டான் ராம்..

 

அவள் அங்கிருந்து வெளியே போய்விட்டாள்..  தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து இருந்தவன் தன் பிள்ளைகளை பள்ளியிலிருந்து கூட்டி செல்லும் நேரம் ஆகி விடவே வங்கியில் இருந்து கிளம்பினான்..

 

பள்ளிக்கு சென்றவன் அங்கே வாசலில் தன் குழந்தைகள் இருவரும் காத்துக் கொண்டிருக்க அவர்கள் அருகே சென்றான்.. 

 

 “என்னடா.. இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது? சமத்தா இருந்தீங்களா?” என்று கேட்கவும் “அப்பா.. இன்னிக்கு ஸ்கூல்ல ஒரு முக்கியமான விஷயம் நடந்தது..” என்று சொன்னாள் பூஜா..

 

“என்னடா நடந்தது?” என்று ராம் கேட்க “அப்பா.. அன்னிக்கு சாக்லேட் கொடுத்தார் இல்ல ஒரு அங்கிள்.. எங்களோட நியூ டாடின்னு கூட சொன்னாரே… அவர் இன்னைக்கும் வந்தாருப்பா… இதோ எங்க ரெண்டு பேருக்கும் சாக்லேட் கொடுத்தார்..” என்று அவர்கள் இரண்டு சாக்லேட்டை எடுத்து அவனிடம் காட்ட அவன் முகத்தில் கோபத்தை காட்டினான்..

 

“நான் தான் உங்களை சொன்னேன்ல.. அவர் எது கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு.. அம்மா அப்பா வந்து கொடுத்தா மட்டும் தான் வாங்கணும்னு சொல்லி இருந்தேன் இல்ல? அப்புறம் எதுக்கு வாங்கினீங்க? உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்லறது? நான் சொல்ற பேச்சை கேட்கவே மாட்டீங்களா?” 

 

 அவன் கோபமாய் கேட்கவும் “அப்பா.. நானும் அவர்கிட்ட சொன்னேன் பா.. வாங்கிக்க மாட்டேன்னு.. ஆனா அப்போ அம்மா தான் அவர்கிட்ட வாங்கிக்கலாம்.. இன்னும் கொஞ்ச நாள்ல அவர் எங்களோட நியூ டாடியாக போறாருன்னு எங்ககிட்ட சொன்னாங்கப்பா” என்று அஸ்வின் சொன்னான்..

 

குரலில் ஒருவித கலக்கத்தோடு “என்ன அம்மா சொன்னாளா? அம்மாவை எங்க பாத்தீங்க?” என்று ராம் கேட்க “அம்மாவும் அந்த அங்கிள் கூட வந்திருந்தாங்கப்பா.. அவங்க உங்களை மாதிரி தான் அவரும்.. இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுக்கு நியூ டாடியாக போறாரு.. அதனால அவர் சொன்னதெல்லாம் கேட்கணும்.. அவர் சாக்லேட் கொடுத்தா வாங்கி சாப்பிடணும்.. அப்படின்னு சொன்னாங்க..” பூஜா சொல்ல சொல்ல அப்படியே அதிர்ந்து போய் அதே இடத்திலேயே தளர்ந்து போய் தரையில் அமர்ந்து விட்டான் ராம்சரண்…

 

தொடரும்..

 

வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்

) மற்றும்  ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!