அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 94🔥🔥

4.9
(8)

பரீட்சை – 94

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

எந்த காலத்திலும்

உனக்கு ஒரு

ஆபத்து வரும்

என்று உணர்ந்தால்

அந்த நொடி

அந்த துயரை

உன் 

ஆருயிர் காக்க

 

என் தலைமேல்

இசைந்து 

ஏற்பேனடி என்

இளமானே..!!

 

###################

 

ஆருயிர் காவலன்..!!

 

நித்திலாவையும் அவள் தந்தை ஈஸ்வரமூர்த்தியையும் ஒரு வர்த்தக மாநாட்டில் சந்தித்தேன் என்று அருண் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போயிருந்தார்கள் ராமும் வைஷூவும்..

 

“அந்த கான்ஃபரன்ஸ்ல மதியானம் லஞ்ச் டைம் வந்தது.. நித்திலாவும் அவளோட அப்பாவும் அந்த கான்ஃபரன்ஸ்ல நான் இருந்ததை கவனிக்கல.. நான் என்னோட பிசினஸ் பார்ட்னர் ஒருத்தரோட பேசிகிட்டு இருந்தப்போ என் முதுகுக்கு பின்னாடி நித்திலாவோட குரல் கேட்டுச்சு.. அஸ்வினியோட பேரு அடிபடவும் நான் காதை கூர்மையா வச்சுட்டு அவ என்ன பேசுறான்னு கேட்டேன்..” என்று சொன்ன அருணை பார்த்து ராம் “அவ்வளவு தூரம் தேஜூவையும் உங்களையும் கொடுமைப்படுத்தின அப்புறமும் அவங்களுக்கு வெறி அடங்கலையா? அங்க வந்தும் தேஜூவை பத்தி பேசினாங்களா?” என்று கேட்டான்..

 

“நித்திலா ஒரு விஷப்பாம்பு.. அவ்வளவு சீக்கிரம் எங்க காலை சுத்தினவ எங்களை விடறதா இல்ல.. அவ அவங்க அப்பா கிட்ட “அப்பா.. நம்ப அந்த தேஜுவுக்கும் அருணுக்கும் எப்படியாவது தண்டனை கொடுக்கணும்னு சரணை உசுப்பி விட்டு அந்த அருண் கண் எதிரேயே தேஜூ வாழ்க்கையை நாசமாக்குற மாதிரியும் அதுக்கப்புறம் அந்த அருணை போட்டு தள்ற மாதிரியும் பிளான் பண்ணோம் இல்ல? ஆனா அந்த சரணால ஒண்ணுமே பண்ண முடியலப்பா.. அவன் ஒரு வெத்து வேட்டு.. எதுக்கும் லாயக்கில்லாதவன்..” அப்படின்னு சொல்லிட்டு இருந்தா..” என்ற அருணை பார்த்து வைஷூ.. “அப்படி சொல்லும் போது அப்படியே போய் அவ வாயை கிழிச்சு கொன்னு போட்டு இருக்கிறது தானே அருண் சார் நீங்க.. அந்த ராட்சசி பேசுறதை கேட்டுட்டே இருந்தீங்களா?” முகத்தில் கோவம் கொப்பளிக்க அதை அடக்க முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள்..

 

“எனக்கும் அப்படி தான் தோணுச்சு.. ஆனா அப்ப அவசரப்படக்கூடாதுன்னு நினைச்சேன் நான்.. அவ அப்படி சொன்னதுக்கு அவங்க அப்பா “நீ தான் அந்த அருண் எதோ மலை மேல இருந்து விழுந்து கோமாக்கு போயிட்டான்னு சொன்னியே..”ன்னு கேட்டாரு.. அதுக்கு நித்திலா “ஆமாம்பா.. நான் அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரு வாழ்க்கையே முடிஞ்சிடுச்சு.. நம்ம அவங்களை சரியா பழி வாங்கிட்டோம்னு தான் நினைச்சேன்.. அந்த தேஜூக்கு கூட தலையில அடிபட்டு இருந்ததுன்னு சரண் சொன்னான்.. ரெண்டு பேருமே செத்து போயிடுவாங்கன்னு அவன் சொன்னதை நம்பி அவங்க ரெண்டு பேருமே உயிரோட இருக்க மாட்டாங்கன்னு நான் நினைச்சேன்… ஆனா என்னோட காலேஜ் ஃப்ரெண்ட் கல்யாணத்துல நான் அந்த தேஜூவை பார்த்தேன் பா..” அப்படின்னு அவ சொன்னப்போ என் இருதயமே ஒரு நிமிஷம் துடிக்கறதை நிறுத்திருச்சு..” என்று அருண் சொல்ல அவனுக்கு அன்று இதயம் அதிர்ந்து துடிப்பதை ஒரு நொடி நிறுத்தியதை போலவே இப்போது ராமுக்கும் வைஷூவுக்கும் இதயம் அதி வேகமாய் துடித்து அடங்கியது..

 

“அப்படின்னா நித்திலா தேஜூ அக்காவை பார்த்துட்டாளா? அப்படின்னா அவ சும்மாவே இருந்திருக்க மாட்டாளே..” என்று பதறினாள் வைஷு..

 

அவள் சொல்லியதை ஆமோதிப்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டிய அருண் “எந்த விஷயத்தை சொன்னா என் அஸ்வினி வாழ்க்கையே கெட்டுப் போயிடும்னும்  அவ வாழ்க்கையை பொருத்தவரைக்கும் என்னை மாதிரி ஒரு ஆளு இல்லாமயே இருக்கட்டும்னும் அவகிட்ட எங்க காதலை பத்தின ஒரு விஷயத்தையும் சொல்லாம அவ சந்தோஷத்துக்காக அவ ராம் கிட்ட  அவளை விட்டுட்டு வந்தேனோ அந்த விஷயம் அவளுக்கு நித்திலா மூலமா தெரிஞ்சு இருக்குமோன்னு பதறினேன்.. அவ ஆனந்தமான வாழ்க்கையை கெடுக்கற மாதிரி பழசை எல்லாம் மறுபடியும் கிளறி அவளை இந்த நித்திலா காயப்படுத்தி இருப்பாளோன்னு அவ அவளை பார்த்தேன்னு சொன்னது என் மனசுக்குள்ள ஒரு பயத்தை கிளப்பி விட்டுச்சு..” என்ற அருண் “ஆனா அப்படியெல்லாம் எதுவும் ஆகல..” என்று சொன்ன அடுத்த நிமிடம் ராமும் வைஷ்ணவியும் பெருமூச்சு விட்டார்கள்..

 

என்னதான் ராம் தேஜூ கூடவே இருந்தாலும் அவனுக்குள் தனக்கு தெரியாமல் தேஜூ ஏதேனும் விஷயத்தை தெரிந்து கொண்டு உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்து மறுகி இருப்பாளோ என்று ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது..

 

“”எப்படி அந்த தேஜூ உயிரோட வந்தா? அப்படின்னா அந்த சம்பவத்துல அவ சாகலையா? ஆமாம்.. நீ பார்த்தப்போ அவ அந்த அருணோட இருந்தாளா? மறுபடியும்  அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்களா?” அப்படின்னு பதட்டமா கேட்டாரு ஈஸ்வரமூர்த்தி..” என்று அருண் சொல்லும் போதே அவன் முகத்தில் கோபக்கனல் வீசியது..

 

“அதுக்கு நித்திலா “இல்லப்பா அவ அந்த அருணோட இல்ல.. அவ ராம் சரண்னு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டா போல இருக்கு.. அவளுக்கு ரெண்டு குழந்தைங்க வேற இருக்கு போல.. சந்தோஷமா ஃபேமிலியா அவ முன்னாடி அருணை காதலிச்சது பத்தி எந்த நினைப்புமே இல்லாம சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருந்தா.. எனக்கு அதை பார்க்க பார்க்க உள்ளுக்குள்ள பத்திக்கிட்டு எரிஞ்சது பா..” ன்னு அவ சொன்னா..” என்று அருண் சொல்ல “அவங்க ரெண்டு பேரையும் அவ்வளவு கொடுமை படுத்தியும் அவளுக்கு வெறியே அடங்கலையா? என்னதான் வேணுமாம் அவளுக்கு..? யார் சந்தோஷமா இருந்தாலும் அவளுக்கு பிடிக்காதா?” என்று வெறுப்போடு கேட்டாள் வைஷ்ணவி.. 

 

“எனக்கும் அவ பேசுனதை கேட்க கேட்க அவளை அப்படியே கழுத்தை நெறிச்சு கொன்னுடனும் போல ஆத்திரம் வந்தது.. ஆனா நான் அவசரப்பட்டா அவ என்னென்ன வில்லங்கம் பண்ணி வச்சிருக்கான்னு எனக்கு தெரியாம போயிடும்னு பல்லை கடிச்சுக்கிட்டு பொறுமையா என்னை வெளிப்படுத்திக்காம அவ பேசுறதை கேட்டுகிட்டு இருந்தேன்..” என்றான் அருண்.. 

 

“ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்படி எதுவும் யாரும் தேஜூ கிட்ட பழைய விஷயத்தை எல்லாம் சொன்னதா தெரியல.. ஏன்னா நாங்க ரெண்டு பேரும் வெளியில போகும் போது ஒருத்தரை ஒருத்தர் விட்டு ரொம்ப நேரம் தனியா இருக்க மாட்டோம்.. ஒரு பத்து நிமிஷம் அவளை விட்டுட்டு நகர்ந்து போனாலும் பத்தாவது நிமிஷம் எனக்கு ஃபோன் பண்ணிடுவா.. என்னை பொறுத்த வரைக்கும் அவ்வளவு பொஸஸிவ் அவ..” என்று சிரித்தான் ராம்..

 

அவன் சொன்னதைக் கேட்டு ஒரு பக்கம் அருணுக்கு சந்தோஷமாக இருந்தாலும் ஒரு பக்கம் ஒரு சிறிய பொறாமை எட்டிப் பார்த்தது.. அவன் கண்களில் பளிச்சிட்ட பொறாமையை அந்த அரை நொடியில் கவனித்துவிட்ட ராம் தான் அப்படி சொல்லி இருக்க வேண்டாமோ என்று மனதிற்குள் சிறிது வருத்தப்பட்டான்..

 

அருண் அந்த சிறிய பொறாமை உணர்வை தள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து பேசினான்.. “அப்ப ஈஸ்வரமூர்த்தி “நீ அவளோட போய் பேசி பாத்தியா?” அப்படின்னு கேட்டாரு.. நித்திலா “பார்த்தேன் பா.. அப்போ அவ என்னை ஒரு கேள்வி கேட்டா பாருங்க.. அதுல அப்படியே எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு பா.. என்னை பாத்து நீங்க யாருன்னு கேட்டாப்பா அவ..” அப்படின்னு அவ சொன்னப்போ எனக்கு விஷயம் புரிஞ்சிடுச்சு.. ஐயோ என் அஸ்வினி சந்தோஷத்துல இவ கண்ணு பட்டுருச்சேன்னு ரொம்ப பதறி போனேன்.. ஆனா அவளை பாத்து என் அஸ்வினி யாருன்னு கேட்டான்னு ஆச்சரியமா அவ சொன்னது எனக்கு கொஞ்சம் சிரிப்பை தான் கொடுத்தது.. ஏன்னா என் அஸ்வினி அவ உயிருக்கு உயிரா காதலிச்ச என்னையே பார்த்து யார்ன்னு கேட்டவளாச்சே” என்று ஒரு விரக்தி சிரிப்போடு அவன் சொல்லும் போது அவன் குரலில் இழையோடிய வலியை உணர்ந்தான் ராம்..

 

“அவ அடுத்து என்ன பேசுறான்னு கேக்கறதுக்கு காதை தீட்டி வெச்சிருந்தேன்.. ஈஸ்வரமூர்த்தி அவ சொன்னதை நம்ப முடியாம அவகிட்ட “நீ யாருன்னு கேட்டாளா? ஏன் அப்படி கேட்டா?”ன்னு கேட்டார்.. அதுக்கு நித்திலா “எனக்கும் புரியலப்பா.. நம்ம கொடைக்கானல்ல ஒன்னா படிச்சோமே.. உனக்கு என்ன ஞாபகம் இல்லையான்னு நான் கேட்டதுக்கு அவ சாரி நீங்க வேற யாரோன்னு நினைச்சுக்கிட்டு என்கிட்ட பேசுறீங்க.. என் பெயர் தேஜஸ்வினி… இதோ இவர் என்னோட ஹஸ்பண்ட்.. நான் படிச்சது சென்னையில இருக்கிற காலேஜ்ல.. கொடைக்கானல்ல நான் படிக்கல அப்படின்னு சொல்லிட்டு அவ புருஷனோட அவ பாட்டுக்கு போயிட்டாப்பா..”ன்னு அவ சொன்னப்போ ஈஸ்வரமூர்த்தி “இது என்னம்மா? இப்படி போட்டு குழப்பறா இந்த தேஜு..?”ன்னு சொல்ல “இப்படியே குழம்பிக்கிட்டு இருக்கட்டும்னு நான் நெனச்சேன்..” என்றான் அருண்..

 

தேஜூவுக்கு ஆபத்து வரவே கூடாது என்பதிலேயே அருணின் கவனம் முழுவதும் இருந்திருப்பதை உணர முடிந்தது ராமால்..

 

“ஆனா அந்த குழப்பத்தில் இருந்து ஒரு தெளிவுக்கு வரணும்னு அவங்க நினைச்சாங்க… அப்போ ஈஸ்வர மூர்த்தி சொன்னார்.. “ஈவினிங் இந்த கான்ஃபரன்ஸ் முடியும்போது அவ உன்னை பார்த்து ஏன் அப்படி கேட்டாங்கற காரணம் தெரிஞ்சுரும்… அவளுக்கு நிஜமாகவே எதுவும் ஞாபகம் இல்லையா… இல்ல சும்மா அவ அருணை லவ் பண்ணது அந்த ராமுக்கு தெரியக்கூடாதுங்கறதுக்காக உன்னை அடையாளம் தெரியாத மாதிரி நடிச்சாளா அப்படின்னு.. தெரிஞ்சுக்கலாம்.. நான் விசாரிக்கிறேன்…” அப்படின்னு சொன்னாரு…” என்றான் அருண்..

 

அப்போது வைஷு “அவளை உண்மையை தெரிஞ்சுக்க விடாம பண்றதுக்கு உங்களால உங்க இன்ஃப்ளூயன்ஸ்ல எதுவும் பண்ண முடியலையா அருண் சார்?” என்று கேட்டாள்..

 

“என் அஸ்வினிக்கு ஒரு ஆபத்து வருதுன்னு தெரிஞ்ச அப்புறம் அதை எப்படியாவது தடுக்குறதுக்கு முயற்சி பண்ணாம இருப்பேனா நான்.. நான் அந்த ஹாஸ்பிடல்ல காண்டாக்ட் பண்ணி என்னால ஏதாவது பண்ண முடியுமான்னு யோசிச்சேன்.. ஆனா என்கிட்ட அந்த டாக்டர் நம்பர் தான் இருந்தது.. நான் ஃபோன் பண்ணப்போ அவரு அந்த ஹாஸ்பிடல்ல இல்ல.. எங்கேயோ கேம்ப்க்கு போய் இருக்காருன்னு சொன்னாங்க..” என்றான்..

 

“அப்பதானா அவரு கேம்ப் போகணும்?” அங்கலாய்த்தாள் வைஷு..

 

“அன்னைக்கு சாயங்காலம் கான்ஃபரன்ஸோட பிரேக் டைம்ல அவங்க ரெண்டு பேரும் எங்க இருக்காங்கன்னு தேடி அவங்க பக்கத்துல போய் நின்னுகிட்டு அவங்களுக்கு தெரியாம அவங்க பேசறதை கேட்டுக்கிட்டு இருந்தேன்.. அப்போ ஈஸ்வரமூர்த்தி நித்திலா கிட்ட “அம்மா அந்த பொண்ணு பழசு எல்லாம் மறந்துட்டாளாம்.. அந்த ஹாஸ்பிடல்ல ஒரு வார்ட் பாயை கேட்டதுக்கு அவன் உண்மை எல்லாம் சொல்லிட்டான்.. அந்த அருண் கோமா ஸ்டேஜ்ல இருந்து வெளியே வந்துட்டானாம்.. ஆனா அவன் ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டான்னு டாக்டர் சொல்லிட்டாரு.. அதனால அவளுக்கு பழசை பத்தி எதுவுமே சொல்லாம அவங்க அப்பா அங்க இருந்து கூட்டிட்டு போயிட்டாரு.. இது தான் நடந்திருக்கு.. அவ உன்கிட்ட நடிக்கல.. அவளுக்கு நிஜமாகவே பழசு எல்லாம் ஞாபகம் இல்லை..” அப்படின்னு அவர் சொல்லிட்டு இருந்தப்போ மைக்ல “தி பிசினஸ் மேன் ஆஃப் தி இயர்” அவார்டு கோஸ் டு மிஸ்டர். அருண்குமார்..” அப்படின்னு சொல்லி என் பெயரை அனௌன்ஸ் பண்ணாங்க.. நான் அங்க இருந்ததை அப்பாவும் பொண்ணும் பாத்துட்டாங்க..” என்றான் அருண்..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!