அத்தியாயம் 18
“
இல்லைனா உன் மாமனாரு நட்புக்கு தோள் கொடுக்கிறேன்னு உன் வாழ்க்கையில் ஃபுட்பால் விளையாடி உன் காதலை உதைத்து தள்ளிருவாரு” என்றான் ரஞ்சித்.
“என்ன புரியாமல் பார்க்கிற ராகவ் அப்பாவும், பல்லவி அப்பாவும் உயிர் நண்பர்கள் எதையும் மறைச்சுக்க மாட்டாங்க இன்னைக்கோ, நாளைக்கோ ராகவ் அப்பா கிட்ட சாம்பவி செய்த வேலையை வாசுதேவன் அங்கிள் சொல்லிருவாரு. அதைக் கேட்ட சிவச்சந்திரன் அப்பா கண்டிப்பா சாம்பவியை தன் மருமகளாக ஏத்துக்க மாட்டாரு அடுத்த பேச்சு ராகவ், பல்லவி கல்யாணம் தான். அதனால் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ மச்சி” என்றான் ரஞ்சித்.
“என் பவியை நான் யாருக்காகவும், எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவள் தான் என் உயிர்” என்றான் திலீப் வர்மன்.
“என்ன யோசனை அப்பா” என்ற பல்லவியிடம், “இவள் பண்ணின காரியத்தை சிவா கிட்ட சொல்லனும் பவிம்மா ஆனால் எப்படி சொல்லுறதுனு தான் யோசிக்கிறேன்” என்றார் வாசுதேவன்.
“என்னப்பா சொல்லுறீங்க இதை அங்கிள் கிட்ட சொல்லப் போறீங்களா அப்படி சொன்னால் சாம்பவியோட கல்யாணம் எப்படி நடக்கும் அந்த வீட்டில் யாருக்குமே சாம்பவியை பிடிக்கவில்லை இந்த மாதிரி நேரத்தில் இந்த விஷயம் தெரிந்தால் ராகவ்வே கூட அவளை வெறுக்க சான்ஸ் இருக்கு அதனால் இந்த விஷயத்தை மறந்திருக்க” என்றாள் பல்லவி.
“எப்படி பவிம்மா இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி என்னால சிவா கிட்ட இருந்து மறைக்கிறது. அவன் இதுவரை என் கிட்ட எந்த விஷயத்தையும் மறைச்சதே இல்லை நான் எப்படி அவன் கிட்ட இந்த உண்மையை சொல்லாமல் மறைக்க முடியும். எனக்கு சாம்பவி வாழ்க்கை முக்கியம் தான் அந்த வாழ்க்கை நேர்மையாக தான் ஆரம்பிக்கனும். அவள் சொன்ன பொய்யால அவளுக்கு ஒரு வாழ்க்கை தேவையே இல்லை” என்று உறுதியாக கூறினார் வாசுதேவன்.
“என்னங்க நம்ம பொண்ணோட எதிர்காலமே சூன்யமாகிரும் தயவு செய்து கொஞ்சம் யோசிங்க பல்லவி சொன்னது மாதிரி இதை மறைச்சுருங்க” என்றார் வைதேகி.
“தப்பு மேல் தப்பு பண்ணாதே வைதேகி நாளைக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு இந்த உண்மை சிவா குடும்பத்திற்கு தெரிந்தால் அவன் என்னை துரோகின்னு நினைக்க மாட்டான். ராகவ் உன் பொண்ணு கூட வாழுவானா? பொய்யால தொடங்கும் வாழ்க்கை சந்தோசத்தை எப்பவுமே தராது அதனால என்னை தடுக்காதீங்க” என்ற வாசுதேவன் தன் நண்பன் சிவச்சந்திரனிடம் நடந்த உண்மைகளை சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் உறங்கச் சென்றார்.
“என்ன காரியம் டீ பண்ணி வச்சுருக்க உன் அப்பாவே உன் வாழ்க்கையை அழிச்சுருவாரு போல” என்று புலம்பினார் வைதேகி.
“புலம்பாமல் இருங்கம்மா” என்ற சாம்பவி, “அந்த பல்லவியை நான் சும்மாவே விட மாட்டேன்” என்று பற்களைக் கடித்தாள். “அவள் என்ன டீ பண்ணினாள் எல்லா தப்பையும் நீ தானே பண்ணி இருக்க எப்படி சாம்பவி இவ்வளவு கிரிமினலா யோசிக்கிற நீ பண்ணி வச்சுருக்கிற காரியம் மாப்பிள்ளை வீட்டில் தெரிந்தால் உன் கல்யாணம் நின்று விடுமே அதை நினைச்சாலே என் நெஞ்சே வெடிச்சுரும் போல” என்றார் வைதேகி.
“நெஞ்சு வெடிச்சா செத்துப் போங்க சும்மா சும்மா புலம்பிட்டு இருக்காமல்” என்று கத்தினாள் சாம்பவி.
“என்ன வாசு இங்கே வந்து இருக்க” என்றார் செல்வராணி அதிகாலை நேரத்தில் தன் வீட்டு வாசலில் நிற்கும் தம்பியை பார்த்து.
“மனசு சரியில்லை அக்கா அதான் தூக்கமும் வரவில்லை உன்னை பார்த்து பேசலாம்னு வந்தேன்” என்றார் வாசுதேவன்.
“சரிப்பா உள்ளே வா” என்ற செல்வராணி, தம்பிக்கு குடிக்க தேநீர் கொடுத்தார். அதை வாங்கி பருகியவர் ஏதோ யோசனையில் இருக்கவும், “என்னாச்சு வாசு உன் முகமும் சரியில்லை, மனசு சரியில்லைனு வேற சொன்ன என்ன பிரச்சினைப்பா” என்றார் செல்வராணி.
“பிரச்சினை எல்லாம் நான் பெத்து போட்ட தருதலை சாம்பவியால தான். பொண்ணா அவள்” என்று பல்லவி கூறிய விஷயங்களை கூறினார் வாசுதேவன்.
அனைத்தையும் கேட்டு முடித்த செல்வராணி, “உன் பொண்ணு இப்படி பண்ணுவதில் ஆச்சரியம் என்ன வாசு அவளோட அம்மா எப்படியோ மகளும் அப்படித்தான்” என்றார்.
“உன்னை கல்யாணம் பண்ணிக்க அவள் அம்மா கூட இப்படித் தானே நடந்துகிட்டாள். குழந்தையை பார்த்துக்க வேலைக்கு வந்தவள் தானே அந்த வைதேகி. மனைவி இறந்த துக்கத்தில் குடிச்சிட்டு வந்த நீ அவளை கெடுத்ததா சொல்லி தானே உன்னை கல்யாணம் பண்ணினாள். இன்னைக்கு அதே தப்பை உன் பொண்ணு செய்திருக்கிறாள். என்ன வைதேகி யாரோட வாழ்க்கையையும் தட்டிப் பறிக்க வில்லை. ருக்மணி இறந்த பிறகு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாள். இந்த சாம்பவி பல்லவி வாழ்க்கையை தட்டிப் பறிச்சுருக்காள் அவ்வளவு தான் வித்தியாசம்.
சரி விடு அதான் அவளுக்கும், அந்த ராகவ்க்கும் கல்யாணம் பிக்ஸ் ஆகிருச்சே அப்பறம் என்ன” என்ற செல்வராணியிடம், “இந்த விஷயம் பற்றி சிவா கிட்ட சொல்லலாம்னு ஒரு யோசனை அக்கா” என்றார் வாசுதேவன்.
“சொன்னால் கல்யாணம் நின்று விடுமோனு பல்லவி பயப்படுகிறாள்” என்ற வாசுதேவனிடம், “பல்லவி சொல்லுவதில் நியாயம் இருக்கு வாசு. நம்ம வீட்டு பொண்ணு அந்த பையன் கிட்ட தப்பு பண்ணி இருக்கிறாள் அவன் கூட தான் அவளுக்கு கல்யாணம் நடக்கனும். அவள் தெரிஞ்சே தப்பு பண்ணி இருந்தாலும் அவளோட மானம், மரியாதை நமக்கு முக்கியம் அவனைத் தான் அவள் கல்யாணம் பண்ணிக்கனும் அதனால் நீ பொறுமையா இரு. இப்போதைக்கு இதைப் பற்றி சிவா கிட்ட சொல்ல வேண்டாம்” என்றார் செல்வராணி.
“சரிங்க அக்கா” என்ற வாசுதேவன், “நீங்க சொன்ன மாதிரி நம்ம பவிக்கும், அந்த திலீப் தப்பிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நான் முடிவு பண்ணி இருக்கிறேன்” என்றார் வாசுதேவன்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷம் வாசு சாம்பவி கல்யாணத்திற்கு முன்னே பல்லவியோட கல்யாணத்தை முடித்து விடலாம்” என்று செல்வராணி கூறிட , “சரிங்க அக்கா” என்றார் வாசுதேவன்.
“ஹலோ” என்ற திலீப்பிடம் , “தம்பி நான் பல்லவியோட அத்தை செல்வராணி பேசுறேன்” என்றார் செல்வராணி. “அம்மா அது என்ன பல்லவியோட அத்தை உன்னோட அம்மா பேசுறேன்டா மகனேன்னு உரிமையா சொல்ல வேண்டியது தானே” என்றான் திலீப் வர்மன்.
“சரிப்பா உன் அம்மா தான் பேசுறேன்” என்று கூறிய செல்வராணியிடம், “சொல்லுங்கம்மா நல்லா இருக்கீங்களா? அக்கா நல்லா இருக்காங்களா?” என்று நலம் விசாரித்தான் திலீப் வர்மன்.
“எல்லோரும் நல்லா இருக்கோம் திலீப் அப்பறம் அம்மா இப்போ ஏன் ஃபோன் பண்ணுனேன்னா உன் மாமா அதான் என் தம்பி உனக்கு பல்லவியை கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதம் சொல்லிட்டான். நாளைக்கு நாம பொண்ணு பார்க்க போறோம் ரெடியா இரு” என்றார் செல்வராணி. “ஐயோ அம்மா எனக்கு சந்தோஷம் தாங்க முடியலை பவி என்ன சொன்னாள்” என்றான் திலீப்.
“அவள் என்ன சொல்லப் போறாள் இரண்டு பேரும் காதலிக்கிறீங்க தானே” என்ற செல்வராணியிடம், “ஆமாம் அம்மா” என்றவன் , “அம்மா இப்போ மட்டும் நீங்க என் பக்கத்தில் இருந்தீங்கனா உங்களை தூக்கி சுத்திருப்பேன்” என்று கூறினான் திலீப்.
“என்னை தூக்கி சுத்த போறீயா? டேய் மகனே என் மருமகளை தூக்கி வச்சு சுத்து அம்மா பாவம்ப்பா” என்று சிரித்த செல்வராணி, “நாளைக்கு அம்மா வந்துருவேன் நாம போயி பரிசம் போட்டுட்டு வந்திருவோம்” என்று கூறிவிட்டு ஃபோனை வைத்தார்.
விடாமல் அவளது மொபைல் ஃபோன் ஒலித்தது. அதை கண்டு கொள்ளாமல் கிளம்பி கொண்டு இருந்தாள் பல்லவி. திலீப் தான் என்று தெரிந்து தான் அவள் ஃபோனை அட்டன் செய்யாமல் கிளம்பி கொண்டு இருந்தாள்.
“பல்லவி , பல்லவி” என்று கத்திக் கொண்டே வந்தார் வைதேகி. “என்ன சித்தி” என்ற பல்லவியிடம், “உன் அப்பா எங்கே போனாரு காலையில் இருந்து அவரைக் காணோம்” என்றார் வைதேகி.
“நைட்டு உங்க அறையில் தானே தூங்கிருப்பாரு” என்ற பல்லவியிடம், “நான் சாம்பவி ரூம்லையே தூங்கிட்டேன் பல்லவி காலையில் எழுந்து பார்க்கும் போது வாசல் கதவு திறந்து இருந்தது. வாக்கிங் போயிருப்பாரு வந்துருவாருன்னு பார்த்தேன் மணி ஒன்பது ஆகுது இன்னும் உன் அப்பாவை காணோம் ஒருவேளை சிவச்சந்திரன் அண்ணா வீட்டுக்கு போயிருப்பாரோ?” என்று பதற்றத்துடன் கேட்டார் வைதேகி.
“சித்தி அப்பா அங்கே போயிருக்க மாட்டாங்க கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம்” என்று கூறிய பல்லவி, தன் தந்தையின் மொபைல் எண்ணிற்கு அழைப்பு விடுக்க அதை அட்டன் செய்தார் வாசுதேவன்.
“அப்பா எங்கே இருக்கீங்க” என்ற பல்லவியிடம், “உன் அத்தை வீட்டில் தான் பவிமா இருக்கேன். மனசு சரியில்லை அதான் அக்காவை பார்க்கலாம்னு வந்துட்டேன். ஸாரிம்மா உன் கிட்ட கூட சொல்லாமல் வந்துட்டேன்” என்றார் வாசுதேவன்.
“பரவாயில்லை அப்பா” என்ற பல்லவி ஃபோனை வைத்தவள், “சித்தி அப்பா அத்தை வீட்டில் தான் இருக்காங்களாம் பயப்படாதீங்க” என்றாள்.
“சரிம்மா நீ இன்னைக்கு மட்டும் வெளியே சாப்பிட்டுக்கிறியா நான் எதுவும் சமைக்கவில்லை” என்று வைதேகி கூறிட , “சரிங்க சித்தி” என்ற பல்லவி கிளம்பி வேலைக்கு சென்று விட்டாள்.
“ஏய் தக்காளி” என்ற திலீப்பை கண்டு கொள்ளாமல் அவள் சென்று கொண்டிருக்க, “கொழுப்பை பாரேன் கூப்பிட கூப்பிட கண்டுக்காமல் போகிறாள்” என்று நினைத்த திலீப் அவளது கையை பிடித்தான்.
“இப்போ எதுக்கு என் கையை பிடிக்கிற கையை விடு” என்றாள் பல்லவி. “விடுறதுக்கா பிடிச்சேன் காலம் முழுவதும் விடாமல் இருக்க தான் பிடிச்சுருக்கேன்” என்றான் திலீப் வர்மன்.
“சும்மா சினிமா டயலாக் அடிக்காமல் கையை விடு திலீப் எனக்கு பசிக்குது நான் சாப்பிட போகனும்” என்றாள் பல்லவி.
“ஏன் டீ வீட்டில் சாப்பிடலையா?” என்றவளிடம், “சித்தி இன்னைக்கு சமைக்கலை” என்று கூறிட “அப்போ வா என் கூட” என்றான் திலீப்.
“எங்கே” என்ற பல்லவியிடம், “சாப்பிட தான்” என்றவனை முறைத்தவள் , “எனக்கு ஹோட்டலுக்கு வழி தெரியும் நீ உன் வேலையை மட்டும் பாரு” என்றாள் பல்லவி.
“அடச்சே பைக்ல உட்காரு டீ இப்போ தான் ஓவரா சீன் போடுவாள் நீ மட்டும் இப்போ என் கூட வரலை உன்னை தூக்கிட்டு போயிடுவேன்” என்றான் திலீப்.
(…. அடியே…)