அடியே என் பெங்களூர் தக்காளி…(19)

4.8
(16)

அத்தியாயம் 19

 

“நீயெல்லாம் திருந்தவே மாட்டியா எத்தனை தடவை சொல்லுறது” என்று அவள் திட்ட ஆரம்பிக்க, “இப்போ மட்டும் நீ என் பைக்ல உட்காரலைனுவை இது பப்ளிக் ப்ளேஸ்னு பார்க்க மாட்டேன் என்னோட ப்ரைவேட் ப்ளேஸான உன்னோட லிப்ஸை அப்படியே லிப்லாக் பண்ணிடுவேன் எப்படி வசதி” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான் திலீப் வர்மன்.

 

“பொறுக்கி நீ செஞ்சாலும் செய்வடா” என்ற பல்லவி , “கிளம்பு” என்று கூறிவிட்டு, அவனது பைக்கில் அமர்ந்தாள். “கையை கம்பியில் வைக்க கூடாது என் வயிற்றில் வைக்கனும் இப்படி” என்று கூறி அவளது கையை தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

 

விதியே என்று நொந்து கொண்டவள் அவனுடன் பயணப்பட்டாள்.

 

“இங்கே ஏன் கூட்டிட்டு வந்திருக்க இது ஏதோ அப்பார்ட்மெண்ட் மாதிரி இருக்கு நான் ஹோட்டல் தானே போறேன்னு சொன்னேன்” என்றாள் பல்லவி.

 

“ஹோட்டல் சாப்பாடு எல்லாம் ஒன்றும் வேண்டாம் நீ என் கூட வா” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் திலீப் வர்மன்.

 

“இது யாரோட ஃப்ளாட்” என்ற பல்லவியிடம், “என்னோட ஃப்ளாட் இல்லை இல்லை நம்மளோட ஃப்ளாட் தான்” என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான் திலீப் வர்மன்.

 

“முதல் முறையாக வீட்டுக்கு வந்திருக்க வா வந்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வை” என்றான் திலீப் வர்மன்.

 

அவனை முறைத்தவள், “நான் என்ன உன்னை கல்யாணம் பண்ணியா இந்த வீட்டுக்கு வந்திருக்கேன் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்க” என்றாள் பல்லவி கோபமாக.

 

“கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும் இப்போதைக்கு ஒரு ஒத்திகை நீ போயி தீபம் ஏற்றி வை” என்று அவளை வற்புறுத்தினான் திலீப் வர்மன். அவளும் அவனது தொல்லை தாங்க முடியாமல் சென்று விளக்கினை ஏற்றி வைத்தாள். அவளது நெற்றியில் குங்குமம் வைத்து விட்டவன் “நம்ம கல்யாணத்துக்கு உன் அப்பா சம்மதம் சொல்லிட்டாராம் பவி” என்றான் திலீப் வர்மன்.

 

“என்ன உளறிட்டு இருக்க” என்ற பல்லவியிடம், “உளறல் இல்லை டீ உண்மை” என்ற திலீப் செல்வராணியிடம் பேசிய விஷயங்களை கூறினான்.

 

“நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்ற திலீப், “இந்தா சாப்பிடு” என்று அவளுக்கு பூரியை பொரித்து கொண்டு வந்து வைத்தான்.

 

பூரியை பிய்த்து சாப்பிட ஆரம்பித்த பல்லவி, “உனக்கு என் கூட நடக்கும் போது அக்கா கூட நடக்குற மாதிரி தானே திலீப் இருக்கும் அப்போ மணமேடையில் என் பக்கத்தில் அமர்ந்து தாலி கட்டும் போது மண்டபத்தில் இருக்கிற எல்லோரும் அக்கா மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறாய்னு சொல்ல மாட்டாங்களா? உனக்கு அசிங்கமா இருக்குமே” என்று சமயம் பார்த்து குத்திக் காட்டினாள் பல்லவி.

 

“என்ன பவி குத்திக்காட்டுறீயா?” என்ற திலீப்பிடம், “உண்மையை தானே சொன்னேன்” என்ற பல்லவி தட்டை எடுத்து கொண்டு சிங்கில் கழுவினாள்.

 

“எவன் என்ன சொன்னால் எனக்கு என்னடீ நீ என் பொண்டாட்டி” என்ற திலீப் அவளது முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான்.

 

“என்ன பண்ணிக்கிட்டு இருக்க திலீப்” என்ற பல்லவியிடம், “என்னை காயப் படுத்த நினைச்சு ஓவரா பேசுற இந்த வாய்க்கு தண்டனை கொடுக்க போகிறேன்” என்று அவளது இதழை சிறை செய்ய ஆரம்பித்தான் திலீப் வர்மன்.

 

அவனது இதழ் யுத்தம் தாங்க முடியாமல் பல்லவி தான் துவண்டு போனாள் உயிரை உறிஞ்சும் அவனது முத்தத்தால்.

 

அவளை அவன் பிரிந்ததும் அவனை முறைத்தவள் ஏதோ சொல்ல வர மீண்டும் அவள் இதழ் கொய்தான் கள்வன்.

 

அவளது இதழ் முத்தம் தந்த போதையில் அவனது விரல்கள் அவள் இடையை அழுத்திப் பிடிக்க அவனது பிடியில் சிக்கித் தவித்தாள் பேதை.

 

 

அவனை தன்னிடம் இருந்து கஷ்டப் பட்டு பிரித்தவள் , “இந்த முறை என்னை கல்யாணம் பண்ணிக் காட்டுறேன்னு பெட் கட்டுனியா? இல்லை தாலி கட்டும் முன்னே என்னை கர்ப்பமாக்கி காட்டுறேன்னு பெட் கட்டுனியா திலீப்” என்றாள் பல்லவி.

 

அவளைப் பிரிந்தவன், “என்ன சொல்லுற பவி” என்றிட, “இல்லை போன முறை பெட் கட்டி என்னை காதலிக்கிறேன்னு ப்ராங்க் பண்ணின இந்த முறை என்னை படுக்கையில் வீழ்த்த பெட் எதுவும் கட்டி இருக்கியான்னு கேட்டேன்” என்றாள் பல்லவி.

 

“என்ன பவி பேசுற” என்ற திலீப்பிடம், “வேற எப்படி பேச சொல்லுற திலீப் என்னால உன்னை நம்ப முடியலை. சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் ப்ராங்க் பண்ணி என்னை ஏமாத்துறது தானே உன்னோட வேலை. இந்த காதல் நாடகம் கூட ஒரு ப்ராங்க்னு தான் எனக்கு தோனுது” என்றாள் பல்லவி.

 

“ஷட் அப் பவி உன் கிட்ட எத்தனை தடவை தான் டீ சொல்லுறது நான் உன்னை உண்மையாவே லவ் பண்ணுறேன்னு அதை ஏன் டீ நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற , அன்னைக்கு ப்ராங்க் பண்ணினேன் தான். நீ எனக்கு அக்கா மாதிரி இருக்கனு சொன்னேன் தான் அதை மறுக்கவே இல்லையே பவி இப்போ நான் உன்னை காதலிக்கிறேன் பவி இது சத்தியமா ப்ராங்க் இல்லை இறந்து போன என் அப்பா அம்மா மேல சத்தியம் பவி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ. என்னை நம்பு டீ” என்று அழுதான் திலீப் வர்மன்.

 

“எனக்குனு யாருமே இல்லை பவி என் அம்மா, அப்பா இறந்துட்டாங்க. நீயும் என்னை தவிக்க விட்டு போனீனா நான் வெறும் பிணம் தான் டீ. அப்படி தான் வாழ்ந்துட்டு இருந்தேன் நீ என் வாழ்க்கையை விட்டு போன பிறகு. திரும்ப உன்னை பார்த்த இந்த இரண்டு வாரத்தில் தான் டீ நான் உயிரோடே இருக்கேன்னு எனக்கே தோனுது.

 

தயவு செய்து என்னை சந்தேகப் படாதே பவி” என்ற திலீப்பை அமைதியாக பார்த்தவள் எதுவும் பேசாமல் அங்கு இருந்த கதிரையில் அமர்ந்தாள்.

 

“உனக்கு தான் என் கூட வந்தால் நான் அக்கா மாதிரி இருப்பேனே என் மேல எப்படி லவ்” என்ற பல்லவியிடம், “ப்ளீஸ் பவி திரும்ப திரும்ப அப்படியே சொல்லாதே சத்தியமா சொல்றேன் பவி அன்னைக்கு நான் ஏன் தான் அப்படி சொன்னேன்னு இன்னைக்கு வரைக்கும் ஃபீல் பண்ணிட்டு இருக்கிறேன். அதுக்காக உன் காலில் கூட நான் விழுறேன் டீ” என்றான் திலீப் வர்மன்.

 

அவளோ அவனையும், தன் காலையும் மாற்றி, மாற்றி பார்த்திட , “என்ன பவி” என்றான் திலீப்.

 

“காலில் விழுறேன்னு சொன்ன” என்று அவள் கேட்டிட, “ஒரு பேச்சுக்கு சொன்னேன் டீ” என்றான். “அப்போ அதுவும் பொய்” என்று அவள் கூறிட, “ஆத்தா மகமாயி இப்போ என்ன காலில் விழனும் அவ்வளவு தானே இதோ விழுந்துட்டேன் இப்போவாச்சும் மனசு இறங்கு” என்று அவளது காலில் விழுந்தான் திலீப்.

 

“நல்லா இரு, நல்லா இரு” என்று சிரித்தாள் பல்லவி. அவள் சிரிக்கவும் எழுந்தவன், “அடிப்பாவி உன்னை” என்று அவளது தலையில் கொட்ட வந்தான் திலீப் வர்மன்.

 

“டேய் திலீப் வேண்டாம்” என்று அவள் அவனைத் தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள். வீடு முழுக்க அவள் ஓடிட அவனும் அவளை விரட்டிக் கொண்டே ஓடினான். அவனது பெட்ரூமிற்குள் ஓடியவள் அங்கிருந்த பொருளைக் கண்டு ஆணி அடித்தது போல் நின்றிட ,”மாட்டுனியா மவளே” என்று அவளைப் பிடித்தான் திலீப் வர்மன்.

 

“என்ன டா இது இதெல்லாம் உன் கிட்ட எப்படி” என்று பல்லவி கேட்டிட , “என் பொண்டாட்டியோட திங்க்ஸ் என் கிட்ட இல்லாமல் வேற யார்கிட்ட இருக்கும் சொல்லு” என்று அவன் கூறிட, “விளையாடாதே திலீப்” என்றாள் பல்லவி.

 

 

“உன் கூட விளையாட தான் ஆசை நீ தான் என்னை அவாய்ட் பண்ணுற” என்று அவளைப் பார்த்து கண்ணடித்திட, “இந்த ரிசின் ஃப்ரேம் என்ன” என்று அவள் கேட்டிட, “உன்னோட திங்க்ஸ் எல்லாம் சேர்த்து நானே செய்தது பவி. இது சின்ன வயசுல நீ போட்டிருந்த வளையல். இது உன்னோட டென்த் பர்த்டே அப்போ நீ கொடுத்த சாக்லேட் பேப்பர். இது நீ மிஸ் பண்ணின உன்னோட கொலுசு. இது ஒரு டைம் தொலைஞ்சு போச்சுன்னு ஸ்கூலையே அல்லோலப் படுத்துனியே உன்னோட ஜிமிக்கி அது. அப்பறம் உன்னோட ஹேர்க்ளிப், ஹேர் பேன்ட், உன்னோட ரிப்பன் இன்னும் நீ யூஸ் பண்ணின திங்க்ஸ் எல்லாம் தான். அப்பறம் உன்னோட ஃபோட்டோ ஐந்து வயசுல இருந்து இருபத்தி ஐந்து வயசு வரை உள்ள எல்லா ஃபோட்டோவும் சேர்த்து ரிசின் ஃப்ரேம் பண்ணி வச்சுருக்கேன். நம்ம கல்யாணம் முடிஞ்ச அப்பறம் இதை எல்லாம் உன் கிட்ட காட்டனும்னு நினைச்சேன் பட் முன்னமே நீ பார்த்துட்ட” என்று சிரித்தான் திலீப் வர்மன்.

 

“திலீப் ஒரு விஷயம் சொல்லு ஐந்து வயசுல இருந்து நான் தொலைச்ச எல்லாமே உன் கிட்ட பத்திரமா இருக்கு இதுக்கு என்ன அர்த்தம்” என்று கேட்டாள் பல்லவி. “அப்போ இருந்தே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதற்கு பெயர் காதலான்னு அந்த வயசுல எனக்கு தெரியாது. ஆனால் வளர வளர புரிஞ்சுது.

 

நாம டென்த் படிக்கும் போது நீ ஏஜ் அட்டன் பண்ணினதால ஒரு வாரம் நீ ஸ்கூலுக்கு வரவே இல்லை. அப்போ தான் ஃபீல் பண்ணினேன் உன்னை நான் லவ் பண்றேன்னு. உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் பவி” என்று அவளது கன்னத்தில் கை வைத்தான் திலீப்.

 

“அப்பறம் ஏன் டா அன்னைக்கு ப்ராங்னு சொன்ன” என்று அவள் கேட்டிட, “அன்னைக்கு நான் ப்ராங்க் பண்ணலை பவி நிஜமாகவே உன் கிட்ட ப்ரப்போஸ் பண்ணினேன். ப்ராங்க்னு சும்மா உன்னையும், ரஞ்சித்தையும் ஏமாத்தினேன். 

 

ஒரு நாள் கழிச்சு உன் கிட்ட உண்மையை சொல்லி ஸாரி கேட்டுட்டு என் லவ்வை சொல்லி உன் கூட ஊரெல்லாம் சுத்தனும், உன் கூடவே இருக்கனும் இப்படி நிறைய யோசிச்சேன் பவி” அப்போ தான்…

 

 

(…. அடியே…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!