அத்தியாயம் 20
“என்ன பங்கு யோசனையாவே இருக்க” என்ற திலீப்பிடம், “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா பங்கு” என்றான் ராகவ்.
“என்ன ஹெல்ப் டா” என்ற திலீப்பிடம், “எனக்கு பல்லவியை பிடிச்சிருக்குடா அவளை லவ் பண்ணுறேன். அவள் கிட்ட எப்படி சொல்லுறதுனு தான் தெரியலை ப்ளீஸ் எனக்காக நீ அவள் கிட்ட பேசுறியா” என்றான் ராகவ்.
“என்ன டா சொல்லுற பல்லவியை லவ் பண்ணுறியா” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் திலீப் வர்மன். “ஆமாம் டா அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா அது மட்டும் இல்லை சின்ன வயசுலையே அவளை தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு என் அப்பா, அம்மா பேசிக்குவாங்க. உனக்கு தெரியும் தானே அவளோட அப்பாவும், என்னோட அப்பாவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்” என்றான் ராகவ்.
“அவள் கிட்ட எப்படி ப்ரொபோஸ் பண்ணுறதுன்னு தெரியலை. ஒருவேளை நான் லவ் சொல்லி அவள் வேண்டாம்னு சொல்லிட்டா அதை என்னால தாங்க முடியாது டா அதான் நீ அவள் கிட்ட பேசிப் பாருடா எனக்காக ப்ளீஸ்” என்று கெஞ்சினான் ராகவ்.
திலீப்பிற்கு ஒன்றும் புரியவில்லை தான் நேசித்த பெண்ணையே தன் நண்பனும் நேசிக்கிறான் என்று தெரிந்ததும் அவனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் யோசிக்க ஆரம்பித்தான். தன்னை விட பல்லவிக்கு ராகவ் தான் பெஸ்ட்னு நினைத்தவன் தன் காதலைச் சொல்லாமல் மறைக்க முடிவெடுத்தான்.
அந்த சமயத்தில் தான் பல்லவி தன் காதலை அவனிடம் கூறிட அவளைக் காயப் படுத்தினால் தான் அவள் தன்னை வெறுத்து ராகவ்வை ஏற்பாள் என்று நினைத்த திலீப் அவளிடம் , “நீ எனக்கு அக்கா மாதிரி இருக்க” அது இதுன்னு சொல்லி அவளை காயப்படுத்தினான்.
அவளும் அழுது கொண்டே சென்று விட்டாள். அவள் அழுததை விட பல மடங்கு திலீப் தான் அவளுக்காக அழுதான். திலீப் எதிர்பார்க்காத ஒன்று பல்லவி வேறு ஊருக்கு சென்று படிப்பை தொடர்வாள் என்பது.
நடந்த விஷயத்தை அவன் கூறிட , “மனசுல பெரிய தியாகின்னு நினைப்பாடா” என்ற பல்லவியிடம் , “ஆமாம் அப்போ அப்படி தான் தோனுச்சு காதலிச்ச பொண்ணை நண்பனுக்காக விட்டுக் கொடுத்த புனிதமான காதல் என்னுடையதுன்னு ஆனால் அது எவ்வளவு பெரிய தப்புன்னு ராகவ் எனக்கு உணர்த்திட்டான்.
உன்னை காயப் படுத்தி வேண்டாம்னு சொன்னாலும் என்னால உன்னை மறக்க முடியலை பவி நீ இல்லாத ஒவ்வொரு நாளும் நரகத்தில் இருக்கிறது போல இருந்தது. வீக் என்ட் எப்போ வரும்னு காத்திருக்க ஆரம்பித்தேன். உன் அத்தை ஊருக்கு வந்து உனக்கே தெரியாமல் உன்னை ஃபாலோவ் பண்ணுவேன். நீ மிஸ் பண்ணின திங்க்ஸ் எல்லாம் உன் நியாபகமா எடுத்து வச்சுப்பேன். ராகவ்க்கு உன்னை விட்டுக் கொடுக்க நினைச்சாலும் என்னோட காதல் உண்மையானது பவி அதனால் தான் உனக்கே தெரியாமல் உன் பின்னால் சுத்திட்டு இருந்தேன். ஒருவேளை ராகவ் உன் கிட்ட காதலை சொல்லி உன்னை கல்யாணம் பண்ணி இருந்தால் கூட காலம் முழுவதும் உன்னை நினைச்சுட்டே வாழ்ந்திருப்பேன் பவி அந்த அளவுக்கு உன்னை நேசிக்கிறேன் டீ” என்றான் திலீப் வர்மன்.
“அவன் எப்போ உன்னை வேண்டாம்னு சொன்னானோ அப்போ தான் நான் ரொம்ப ஃபீல் பண்ணினேன் தகுதியே இல்லாத ஒருத்தனுக்காக என் காதலை தொலைச்சுட்டேன்னு என்னை மன்னிச்சிடு பவி” என்ற திலீப்பை அணைத்துக் கொண்டாள் பல்லவி.
“பவி” என்ற திலீப்பை பிரிந்து அவனது கன்னத்தில் அறைந்தவள் , “ஏன் டா நாயே என்னை இத்தனை நாளா அழ வச்ச அன்னைக்கு நான் காதலை சொன்னப்பவே நீயும் அக்சப்ட் பண்ணிருந்தீனா இந்நேரம் நமக்கு கல்யாணம் ஆகி குழந்தை கூட பிறந்திருக்கும். இப்போ தான் இவரு பெரிய தியாகி டேஸ் நண்பனுக்காக காதலை விட்டுக் கொடுக்கிறாங்க” என்ற பல்லவி அவனை மீண்டும் மீண்டும் அறைந்தவள் அவனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
“பவி அழாதே டீ” என்று அவன் கூறிட, அவனுக்கு மீண்டும் அறை தான் விழுந்தது.
அவள் கொடுத்த அறைகளை பதக்கம் போல ஏற்றுக் கொண்டவன், “என் மேல கோபம் எல்லாம் போயிருச்சா பவி” என்றிட அவனை நிமிர்ந்து பார்த்தாள் பல்லவி.
அவன் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டவள் அவன் முகமெங்கும் முத்தமிட்டாள். இறுதியில் அவன் இதழில் நிறுத்தியவள் ஆழமாக முத்தமிட மங்கை அவளது இதழை சிறை செய்ய ஆரம்பித்தான் கள்வன்.
கள்ளி அவளும், அவனுக்கு சளைத்தவள் இல்லை என்று தன் மொத்த காதலையும் இதழால் அவனுக்கு உணர்த்திட அவனும் தன் காதல், பிரிவு, வலி, ஏக்கம் அனைத்தையும் அவளுக்கு இதழ் வழி உணர்த்தினான்.
தூரத்தில் இருந்தாலும் அவளையே , அவளை மட்டுமே நினைத்துக் கொண்டு வாழ்ந்திருந்தவனின் காதல் அவன் கையில் கிடைத்திட அதை பொக்கிஷமாய் பாதுகாக்க நினைத்தான்.
நிமிடங்கள் கடந்த இதழ் முத்தம் இறுதியில் முற்றுப் பெற மங்கை அவளோ நாணம் தாங்க முடியாமல் திரும்பி நிற்க அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான் திலீப் வர்மன்.
“என்ன பவி வெட்கமா உனக்கு அதெல்லாம் கூட வருமா” என்று அவன் கேட்டிட, “போடா எருமை” என்று அவள் அவனைப் பிரிந்து ஓடப் பார்க்க அவளை இழுத்து தன் அருகில் நிறுத்தியவன், “நான் சரியா தூங்கி ரொம்ப நாள் ஆச்சு பவி லாஸ்ட்டா அம்மா மடியில் படுத்து தூங்கினது. அம்மா, அப்பா இறந்த பிறகு எனக்குனு யாருமே இல்லை என்ற உணர்வே எனக்கு தூக்கமே வராது. நீ என்னை ஏத்துப்பியோ இல்லையோங்கிற கவலை வேற என் தூக்கத்தை கெடுத்திருக்கு. ஒரு ஒன் ஹவர் பவி உன் மடியில் படுத்து தூங்கவா” என்று அவன் கேட்டிட அவளோ அவனை அணைத்துக் கொண்டு , “தூங்கு திலீப்” என்றாள்.
அவள் சென்று மெத்தையில் சாய்ந்து அமர்ந்து கொள்ள அவளது மடியில் படுத்து உறங்க ஆரம்பித்தான் அவளது மணவாளன்.
“என்ன எல்லோரும் சந்தோஷமாக இருக்கீங்க” என்ற ராகவ்விடம், “நாளைக்கு நம்ம திலீப்புக்கு பல்லவியை பொண்ணு பார்க்க போகிறோம். அவனோட அப்பா அம்மா தவறிட்டதால என்னையும், உன் அப்பாவையும் மாப்பிள்ளை வீட்டு சார்பாக செல்வராணி அக்கா கூட வரச் சொல்லி வாசு அண்ணா ஃபோன் பண்ணினாரு அதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்தா ஸ்வீட் சாப்பிடு. அநேகமாக உன் கல்யாணத்திற்கு முன்னமே அவங்க கல்யாணம் முடிஞ்சுரும்” என்று கூறிய புவனேஸ்வரி மகனுக்கு ஸ்வீட்டை ஊட்டி விட ராகவ்விற்கு தான் கவலையாக இருந்தது.
“அன்னைக்கு மட்டும் நான் ட்ரிங்க்ஸ் சாப்பிடாமல் இருந்திருந்தால் இந்நேரம் பல்லவி என் மனைவியாக இருந்திருப்பாள் ச்சே” என்று நொந்து கொண்டான் ராகவ்.
அவன் சோகமாக வீட்டை விட்டு கிளம்பினான். கடற்கரை மணலில் அமர்ந்து கடலை வெறிக்க ஆரம்பித்தான். அவனது தோளில் ஒரு கை படவும் திரும்பி பார்த்தான் ராகவ்.
சாம்பவி தான் நின்றிருந்தாள். “என்ன ராகவ் ஏன் சோகமா இருக்கீங்க” என்ற சாம்பவி அவன் அருகில் வந்து அமர்ந்தாள். “சோகமா அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே” என்ற ராகவ் இயல்பாக இருப்பது போல் நடித்தான்.
“ஆமாம் நான் பீச்ல இருக்கேன்னு உனக்கு யார் சொன்னது” என்ற ராகவ்விடம், “நான் எதார்த்தமாக தான் வந்தேன் மனசு சரியில்லை. வந்த இடத்தில் உங்களை பார்த்ததும் மனசு கொஞ்சம் லேசா இருக்கு” என்றாள் சாம்பவி.
அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அவளிடம் இயல்பாக பேச முயன்றான். முன்பு கூட அவளிடம் ஓரளவு இயல்பாக பேசிக் கொண்டு இருந்தான் ஆனால் எப்பொழுது திலீப் பல்லவியிடம் நெருங்க ஆரம்பித்தானோ அப்போதிலிருந்தே பல்லவி அவனை விட்டு தூரமாக போவது போல உணர்ந்தான். அந்த உணர்வு அவனை நிம்மதியை இழக்க செய்தது.
“என்ன ராகவ் ஏதோ யோசனையாகவே இருக்கீங்க” என்ற சாம்பவியிடம், “ஒன்றும் இல்லை சாம்பவி” என்றவன், “நீ என்னை நிஜமாகவே காதலிக்கிறாயா?” என்றான் ராகவ்.
“என்ன கேள்வி ராகவ் இது நான் உங்க மேல உயிரையே வச்சுருக்கேன் அது ஏன் தான் உங்களுக்கு புரியவே மாட்டேங்குதோ? நம்ம என்கேஜ்மென்ட் அப்போ ஏன் நீங்க அந்த பல்லவியை பார்த்துக் கொண்டு இருந்தீங்க பழைய காதலை இன்னும் நீங்க மறக்கலையா? உங்க கிட்ட நான் என்னையவே இழந்திருக்கேன் அது உங்களுக்கு புரியுதா? புரியலையா? நமக்கு தான் கல்யாணம் நடக்க போகுது அதனால் பழைய நினைவுகளை உங்க மனசுல இருந்து அழிச்சுருங்க” என்ற சாம்பவி அவனை அணைத்துக் கொண்டாள்.
அவன் அவளை தன்னிடம் இருந்து பிரித்து , “எனக்கு புரியுது சாம்பவி எனக்கு பல்லவி எப்பவுமே ஃப்ரெண்ட்” என்று மென்று முழுங்கி கூறினான். “ஃப்ரெண்ட்டா மட்டும் இருந்தால் சரி” என்று சொல்லி விட்டு சாம்பவி அவனோடு கையைப் பிடித்து சுற்ற ஆரம்பித்தாள்.
ராகவ் வழக்கம் போல வேறு வழி இல்லாமல் அவளுடன் சுத்தினான்.
உறங்கிக் கொண்டிருந்த திலீப்பின் நெற்றியில் முத்தமிட்ட பல்லவி அவனை தன் மடியில் இருந்து எடுத்து மெத்தையில் தலையணையில் படுக்க வைத்து விட்டு எழுந்து கிட்சனுக்கு சென்றாள்.
தன்னவனுக்காக ஏதாவது சமைக்கலாம் என்று சென்றால் அவளுக்கு தான் சமைக்கவே தெரியாதே. “சரி யூடியூப் பார்த்து செய்யலாம்” என்று அவள் ஃபோனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“பேசாமல் மேகி கிண்டிருவோமா வேலை மிச்சம்” என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்க அவளைப் பின்னிருந்து அவளை அவன் அணைத்துக் கொண்டான்.
அவனது திடீர் அணைப்பில் அவள் அதிர்ந்து துள்ளிட, “ஏய் நான் தான் டீ என் பெங்களூர் தக்காளி” என்றான் திலீப் வர்மன்.
“பொறுக்கி நீ தூக்கிட்டு தானே டா இருந்த” என்ற பல்லவியிடம், “உன் மடியில் தான் தூக்கிட்டு இருந்தேன். நீ ஏன் என்னை தலையணையில் படுக்க வச்ச அதான் தூக்கம் போச்சு” என்றான் திலீப்.
“இல்லைடா பசிக்குது அதான் எதுனாலும் சமைக்கலாம்னு வந்தேன்” ஆனால் என்று அவள் இழுத்திட, “உனக்கு தான் சமைக்க தெரியாதே அப்பறம் எப்படி சமைப்ப வா வந்து உட்காரு நானே சமைக்கிறேன்” என்றான் திலீப்.
“எனக்கு மேகி கிண்ட தெரியும் டா” என்று அவள் கூறிட , “அடியே மேகி எல்லாம் பச்சைப் பிள்ளை கூட கிண்டிரும்டீ எவ்வளவு பெருமை பாரு இதுக்கு மேகி கிண்டுவாளாம், மேகி” என்று சிரித்து விட்டு, “ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்க ஒரு அரை மணி நேரம் மட்டும் வெயிட் பண்ணு நான் சமைக்கிறேன்” என்றான் திலீப் வர்மன்.