அடியே என் பெங்களூர் தக்காளி..(22)

4.8
(20)

அத்தியாயம் 22

“என்ன டா தூங்கலையா? இந்த டைம்ல ஃபோன் பண்ணி இருக்க” என்றாள் பல்லவி. “தூக்கம் வரலை டீ உன் மடியில் படுத்து தூங்கனும்னு ஆசையா இருக்கு” என்றான் திலீப் வர்மன்.

 

 

“ஆசையா இருக்கா? இருக்கட்டும், இருக்கட்டும் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ உன் ஆசை எல்லாம் நிறைவேற்றலாம்” என்ற பல்லவியிடம், “தக்காளி” என்றான் கெஞ்சலாக.

 

“என்ன திலீப்” என்ற பல்லவியிடம், “மொட்டை மாடிக்கு வாடீ” என்றான் திலீப். “மொட்டை மாடிக்கு எதுக்கு டா?” என்றவளிடம், “சொன்னால் செய்யேன்டீ” என்ற திலீப், “ஐந்து நிமிசத்தில மாடிக்கு வாடீ” என்று கூறி விட்டு ஃபோனை வைத்தான்.

 

“இவனோட ஒரே இம்சை. ஒருவேளை பைப் பிடிச்சு ஏறி மாடிக்கு வந்துட்டானோ?” என்று நினைத்த பல்லவி, தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த தன் அண்ணன் பிள்ளைகளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு எழுந்து மாடிக்கு சென்றாள்.

 

“என்ன இவனைக் காணோம்” என்று நினைத்த பல்லவி அவனுக்கு ஃபோன் செய்தாள். “சொல்லு டீ செல்லம்” என்ற திலீப்பிடம், “நான் மாடிக்கு வந்துட்டேன் டா நீ எங்கே இருக்க” என்றிட , “நான் நம்ம வீட்டில் இருக்கேன் பால்கனியில் உட்கார்ந்து நிலாவை ரசிச்சுட்டு இருக்கேன்” என்றான் திலீப் வர்மன்.

 

“அடக் குரங்கே நீ அங்கே இருந்துட்டு என்னை ஏன் டா மாடிக்கு வரச் சொன்ன” என்றாள் பல்லவி.

 

 

“நான் கூப்பிட்டால் நீ வர்றியானு செக் பண்ணினேன் செல்லம் புருஷன் சொல்லுறதை கேட்கிற பொண்டாட்டி தான் எனக்கு வாய்ச்சுருக்காள் போல” என்றான் திலீப். “போடா நாயே நான் கீழே போகிறேன்” என்று அவள் கூறிட , “அப்போ நான் யாரைப் பார்க்க வந்தேனாம்” என்ற குரல் அவளுக்கு மிக அருகில் கேட்டிட மெல்ல திரும்பினாள் பல்லவி.

 

“திலீப்” என்று அவனைக் கட்டிக் கொண்டாள் பல்லவி. “பொறுக்கி, ஃப்ராடு நீ தான் நம்ம வீட்ல இருந்து நிலாவை ரசிச்சுட்டு இருக்கிறவனா” என்று அவள் கேட்டிட, “ஆமாம் நம்ம வீட்ல இருந்து நிலாவை ரசிச்சுட்டு இருக்கேன் அதுவும் என்னோட நிலாவை” என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான் திலீப் வர்மன்.

 

“எதே நம்ம வீடா இது என் நைனா வீடு மாமே” என்று அவள் கூறிட , “என் மாமனார் வீடுடீ அப்போ இதுவும் என் வீடு தான்” என்றவள் , “வீடு முழுக்க ஆளா இருக்காங்க போல” என்ற திலீப்பிடம், “ஆமாம் திலீப் அத்தை, அத்தாச்சி, அண்ணன்,‌ அண்ணன் பசங்க எல்லோரும் இருக்காங்க நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள் பல்லவி.

 

“நான் இப்போ உன் கூட இருக்கிறது உனக்கு பயமா இல்லையா?” என்று அவன் கேட்டிட , “பயமா எனக்கா ஏன் நீ என்ன பேயா, பூதமா, இரத்தக்காட்டேரியா உன்னை பார்த்து பயப்பட” என்றாள் பல்லவி.

 

“பேய், பூதம், இரத்தக்காட்டேரிக்கு தான் பயப்படுவீங்களா? உன்னை பயமுறுத்த எதுக்கு டீ பேய், பிசாசு எல்லாம் ஒரு நாய் போதாது பயந்தாங்கொள்ளி” என்று அவன் கிண்டலடிக்க , அவனது தலையில் கொட்டினாள் பல்லவி.

 

“ஆ ஆ பாவி ,பாவி வலிக்குது டீ” என்று அவன் கூறிட, “வலிக்கட்டும் டா நாயே” என்று அவள் சிரித்தாள். “இரு டீ இரு” என்று அவளை நெருங்கியவன் அவளது கன்னத்தில் கடித்து வைக்க , “ஆ ஆ நாயே ,நாயே ஏன் டா இப்படி கடிச்சு வைக்கிற” என்றாள் பல்லவி.

 

“நீ கொட்டின நான் கடிச்சேன் அவ்வளவு தான் சரியா போச்சு” என்ற திலீப்பிடம், “சரி எதுக்கு வந்த” என்றாள் பல்லவி.

 

“எதுக்கு வந்தேன்னா என் செல்லக்குட்டி கூட சின்ன ,சின்ன ரொமான்ஸ் பண்ண தான்” என்று கூறினான் திலீப். “சின்ன, சின்ன ரொமான்ஸா இருந்தாலும்; பெரிய, பெரிய ரொமான்ஸா இருந்தாலும் கல்யாணத்திற்கு அப்பறம் தான்” என்று கூறினாள் பல்லவி.

 

“அப்படியா அப்போ காலையில் யாரோ என் லிப்ஸை கடிச்சு சிவக்க வச்சாங்களே அதெல்லாம் என்ன கணக்கு” என்று அவன் கேட்டிட, “டேய் எருமை போடா” என்று அவள் முகத்தை கைகளால் மூடிக் கொள்ள, “ஏய் தக்காளி என்னடீ வெட்கமா” என்று அவளது கைகளை பிரித்தான். “என் தக்காளிக்கு வெட்கம் எல்லாம் வருதா” என்று அவன் கேட்டிட, “பொறுக்கி போடா” என்று அவள் திரும்பிக் கொள்ள அவளை தன் பக்கமாக திருப்பியவன் அவளது தோளில் கை போட்டு சுவற்றில் சாய்ந்து கொண்டு அவளுடன் சேர்ந்து அமர்ந்தான்.

 

“பவி என்னவோ தெரியவில்லை டீ நீ லவ் சொன்னதில் இருந்து உன்னை பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு. உன் கூடவே இருக்கனும் உன் கையை பிடிச்சுட்டு உன் மடியில் படுத்து தூங்கிட்டு, உன்னை ரசிச்சுக்கிட்டே இருக்கனும் பவி. இத்தனை வருசமா உன்னை மிஸ் பண்ணி பெரிய தப்பு பண்ணிட்டேன் அதை ஈடுகட்ட இனி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும் உன் கூடவே இருக்கனும்” என்று அவன் கூறிட , “ஆக்கப் பொறுத்த என் மாமா உனக்கு ஆறப் பொறுக்காதா? இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணு உன் கூடவே இருக்கேன்” என்ற பல்லவி, “சரி, சரி கிளம்பு” என்றாள்.

 

“என்ன டீ விரட்டுற” என்ற திலீப்பிடம், “நீ போயி தூங்கு டா நாளைக்கு பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ண இங்கே தானே வரப் போற அப்பறம் என்ன” என்றாள் பல்லவி. “இன்னும் கொஞ்ச நேரம் உன் கூட இருந்துட்டு போறேன் டீ ப்ளீஸ்” என்று அவன் கெஞ்சிட, அவனை தன் மடியில் படுக்க வைத்து அவனது தலை முடியை கோதி விட்டாள் பல்லவி.

 

“பவி உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்” என்று அவன் கூறிட, “கேளுடா” என்றாள் பல்லவி. “உன் தங்கச்சி சாம்பவி பற்றி ஏன் நீ ராகவ் கிட்ட சொல்லவில்லை. அங்கிளையும் சொல்ல வேண்டாம்னு சொல்லிருக்க. ராகவ் பாவம் இல்லையா? அவன் சாம்பவியை ரேப் பண்ணவில்லை அவள் தான் அவனை ரேப் பண்ணி இருக்கிறாள் அவள் எப்படி ராகவ்க்கு ஒரு நல்ல வொய்ஃபா இருப்பாள்னு நீ நம்புற இந்த உண்மையை ராகவ் கிட்ட சொல்லி இருக்கலாமே” என்றான் திலீப் வர்மன்.

 

“ராகவ் பாவமா? அப்போ நான் பாவம் இல்லையா?” திலீப், “நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்ணுறேன். அவனுக்கும், எனக்கும் என்கேஜ்மென்ட் நடக்க இருந்த டைம்ல நீ என் வாழ்க்கையில் இல்லை. இனி வரவும் மாட்ட அப்படீன்னு தான் நினைச்சேன். முழு மனசோட தான் அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன். அஃப்கோர்ஸ் சாம்பவி தான் தப்பு. ராகவ் மேல எந்த தப்பும் இல்லை தான் அதை நான் மறுக்கவே இல்லை. அவன் சாம்பவியை கல்யாணம் பண்ணிக்க எடுத்த முடிவு அவனோடது அதில் நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவன் அத்தனை பேருக்கு முன்னாடி என்னை பிடிக்கவில்லை என் தங்கச்சியை பிடிச்சிருக்குனு சொன்னான். நீ என் இடத்தில் இருந்து யோசிச்சு பாரு திலீப் ஆல்ரெடி அந்த டைம்ல எல்லோரும் என்னை பிடிக்கவில்லை, குண்டா இருக்கேன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணினாங்க தான் ஆனால் அதெல்லாம் என் வீட்டில் அப்பா, சித்தி, சாம்பவி இவங்க முன்னால் தான். ஊரையே கூட்டி நிச்சயம் பண்ண வந்த மாப்பிள்ளை என்னை பிடிக்கவில்லை என் தங்கச்சியை பிடிச்சிருக்குனு எல்லோர் முன்னாடியும் சொல்லும் போது சத்தியமா செத்துட்டேன் திலீப்.

 

அந்த இன்சிடென்ட் நடந்து அன்னைக்கு ஈவ்னிங் தான் அவனுக்கும், எனக்கும் என்கேஜ்மென்ட் நடக்க இருந்தது. காலையில் இருந்து எவ்வளவோ டைம் இருந்தது. இவன் சாம்பவியை தான் கல்யாணம் பண்ணிக்க போறான்னு முன்னமே முடிவு பண்ணி இருந்தால் அட்லீஸ்ட் அதை என்கிட்டையாவது சொல்லி இருக்கலாம். நான் முன்னமே என்கேஜ்மென்ட்டை தடுத்திருப்பேன். ஊரைக் கூட்டி என்னை சிங்காரிச்சு மூக்கை அறுத்தது போல எல்லோர் முன்னாடியும் என்னை பிடிக்கவில்லை என் தங்கச்சியை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லுறான். அவன் ஈஸியா சொல்லிட்டு போயிட்டான் என்னை கல்யாணம் பண்ணினால் அவனை எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்கனு, அவன் என்னை பிடிக்கலைன்னு சொன்ன பிறகு எத்தனை பேரு எத்தனை தடவை கேளியும், கிண்டலுமா பேசிருக்காங்க தெரியுமா? எனக்கு எவ்வளவு வலிச்சது தெரியுமா? இந்த சாம்பவி ஒரு துரோகினா அந்த ராகவ்வும் ஒரு துரோகி தான். அதனால் தான் அந்த இரண்டு துரோகியும் எப்படியோ போகட்டும்னு அந்த விஷயத்தை நான் எனக்குள்ளே மறைச்சுட்டேன். அன்னைக்கு கோபத்தில் தான் அதெல்லாம் சொன்னேன். அப்பா போயி அங்கிள் கிட்ட உண்மையை சொன்னால் அடுத்து என்ன பண்ணுவாங்க தெரியுமா? என்னை அந்த துரோகி ராகவ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணுவாங்க ஏன்னா சிவா அங்கிள் வீட்டில் யாருக்குமே சாம்பவியை சுத்தமா பிடிக்காது. அவள் பண்ணின தப்பு தெரிஞ்சால் கண்டிப்பா என் வாழ்க்கையை தான் பலி கொடுப்பாங்க. போதும் திலீப் அந்த ராகவ்வால தான் அன்னைக்கு என் காதலை நீ நிராகரிச்ச இன்னைக்கும் அது போல ஒரு சூழ்நிலை வந்தால் நான் செத்துருவேன் டா. எனக்கு உன் கூட வாழனும், சந்தோஷமாக வாழனும் நானும் மனுஷி தானே திலீப் எனக்கு கோபம், ஆத்திரம் எல்லாம் இருக்க தானே செய்யும். என்னால கண்டிப்பா அந்த ராகவ் வை மன்னிக்கவே முடியாது என்ற பல்லவி நீ அவன் கிட்ட உண்மையை சொன்னால் நான் தடுக்க மாட்டேன் ஆனால் எந்த சூழ்நிலையிலும் என்னை மட்டும் விட்டுக் கொடுத்துறாதே திலீப் அப்பறம் என்னை நீ உயிரோடவே பார்க்க முடியாது” என்றாள் பல்லவி.

 

“பைத்தியம் நீ என்னோட வாழ்க்கை டீ உன்னை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன். சத்தியமா என் பவியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றான் திலீப் வர்மன்.

 

 

(…. அடியே…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!