அத்தியாயம் 27
“எப்படி சொல்லுற” என்ற ரஞ்சித்திடம், “சாம்பவிக்கு கண்டிப்பா பல்லவி சந்தோஷமா இருக்கிறது பிடிக்காது அவள் கண்டிப்பா ஏதோ வேலை பார்க்கிறாள். கண்டுபிடிப்போம்” என்ற ராகவ் , “மச்சி நீ அந்த சதீஷை வாட்ச் பண்ணு நான் இந்த சாம்பவியை பார்த்துக்கிறேன்” என்றான்.
“இரண்டு வருஷமா என்னை எப்படி எல்லாம் ஏமாத்துனா அவளை சும்மா விடவே மாட்டேன்” என்றான் ராகவ். “கண்டிப்பா மச்சி அவளை எல்லாம் சும்மாவே விடக் கூடாது” என்று கூறிய ரஞ்சித் சதீஷை கண்காணிக்க ஆரம்பித்தான். நான்கு நாட்கள் கடந்த நிலையிலும் சாம்பவியின் திட்டம் என்ன என்பதை ராகவ்வால் யூகிக்க முடியவில்லை. இயல்பாகவே அவள் இருப்பதைக் கண்டு ராகவ் குழம்ப ஆரம்பித்தான்.
“என்ன வாசு கல்யாண வேலை எல்லாம் கடகடனு நடக்குது போல” என்ற சிவச்சந்திரனிடம், “ஆமாம் சிவா அக்கா, சங்கவி இரண்டு பேரும் சொந்தக்காரங்க எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுத்துட்டு இருக்காங்க. வைதேகி கூட கல்யாண வேலையை இழுத்து போட்டு பார்க்கிறாள்” என்ற வாசுதேவன், “குலதெய்வம் கோவிலில் இன்னைக்கு ராத்திரி பூஜை இருக்கு நம்ம எல்லோரும் கோவிலுக்கு போயிட்டு வருவோம்” என்றார் வாசுதேவன்.
“முகூர்த்த அரிசி அள்ளிப் போட்ட பிறகு பொண்ணு, மாப்பிள்ளை வெளியே போக கூடாதே” என்ற சிவச்சந்திரனிடம், “நம்ம மட்டும் தான் போறோம் பல்லவி, மாப்பிள்ளை இரண்டு பேரும் வீட்டில் தான் இருப்பாங்க. அவங்களுக்கு துணைக்கு சங்கவியோட பிள்ளைகள் இருப்பாங்க” என்றார் வாசுதேவன். “அதுவும் சரி தான்” என்று கூறினார் சிவச்சந்திரன்.
“என்னம்மா உன் பொண்ணுக்கா கல்யாணம் ஊரில் எல்லோரையும் பத்திரிக்கை வைத்து அழைச்சிட்டு இருக்க” என்ற சாம்பவியிடம், “அவள் உன் அக்கா” என்றார் வைதேகி.
“அம்மா என்ன உங்களுக்கு அவள் மேல பாசம் ஓவராகிருச்சோ” என்ற சாம்பவியிடம், “அவளோட கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்ததும் உன் கல்யாணம் சாம்பவி அதனால் தான் அவளுக்கு நல்லபடியாக கல்யாணம் நடக்கனும்னு நான் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறேன்” என்றார் வைதேகி.
“கல்யாணம் நடக்கும் அம்மா ஆனால் அந்த திலீப் கூட இல்லை என் மாமா அதான் உன் தம்பி சதீஷ் கூட” என்று வில்லத்தனமாக சிரித்தாள் சாம்பவி.
“என்ன சொல்லுற சாம்பவி” என்ற வைதேகியிடம், “நான் தான் அன்னைக்கே சொன்னேனே அவள் எப்பவுமே எனக்கு கீழே தான் இருக்கனும்னு அவளுக்கு கட்டாயம் திலீப் கூட கல்யாணம் நடக்க நான் விட மாட்டேன்” என்று பற்களைக் கடித்த சாம்பவி தன் திட்டத்தை கூறினாள்.
அதைக் கேட்ட வைதேகி அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தார். “ஏற்கனவே ராகவ் கிட்ட உன்னை இழந்துட்டு இப்போ திலீப் கூட ச்சீ என்ன பொண்ணு டீ நீ” என்றார் வைதேகி.
“அந்த ராகவ் ஒரு வேஸ்ட் பீஸ் அவனை கல்யாணம் பண்ணி அவனோட அப்பா, அம்மாவுக்கு நான் சேவகம் பண்ணவா அந்த திலீப்க்கு அப்பா, அம்மா கிடையாது. நிறைய பணம் இருக்கு. சொந்தமா ஐந்து வீடு இருக்கு அதோட வாடகையே போதும் அவன் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. அவன் தான் எனக்கு சரியான ஆள்” என்ற சாம்பவி, “உன் தம்பிக்கு அந்த பல்லவியை கல்யாணம் பண்ணி வைத்தால் அவள் பெயரில் இருக்கிற சொத்து முழுக்க உன் தம்பிக்கு சொந்தமாகும் அது எல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா?” என்றாள் சாம்பவி.
“பல்லவிக்கு சதீஷை கல்யாணம் பண்ணி வைக்கிறது இருக்கட்டும் அந்த திலீப் எப்படி உன்னை கல்யாணம் பண்ணிக்குவான்” என்ற வைதேகியிடம், “அதெல்லாம் என்னோட சாமர்த்தியம் என்ற சாம்பவி நாளை மறுநாள் கல்யாணம் நடக்கும் பல்லவிக்கும் உன் தம்பிக்கும் நீங்க எதுவும் குட்டையை குழப்பாமல் இருந்தால் சரி” என்றாள் சாம்பவி.
“இது தப்பு சாம்பவி நான் அப்பா கிட்ட சொல்கிறேன்” என்ற வைதேகியிடம், “நான் நினைச்சது நடக்கனும் இப்போ மட்டும் நீங்க இதை அப்பாகிட்ட சொன்னால் நான் செத்துப் போயிடுவேன்” என்று வைதேகியை மிரட்டினாள் சாம்பவி.
“ஒரே மகள் செத்துப் போய் விடுவாளோ?” என்று அஞ்சிய வைதேகி யோசிக்க ஆரம்பித்தார். அதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டாள் சாம்பவி.
“என்ன டீ கல்யாணப் பொண்ணு தனியா இருந்துருவ தானே இன்னும் இரண்டு நாளில் கல்யாணம் அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க” என்ற சங்கவியிடம், “அத்தாச்சி போங்க அதெல்லாம் பொறுமையா தான் இருக்கோம்” என்று வெட்கத்துடன் கூறினாள் பல்லவி. “சரி, சரி நிரஞ்சனா அத்தை கூடவே இரு” என்று கூறிய சங்கவி சென்று விட பல்லவி புத்தகம் படிப்பதில் தன் கவனத்தை செலுத்தினாள்.
“என்ன மாப்பிள்ளை பல்லவி மட்டும் தான் வீட்டில் இருக்கிறாள் நீ பாட்டுக்கு இன்னைக்கே” என்று ரஞ்சித் ஏதோ சொல்ல வர , “அடேய் குரங்கு வாயை மூடுடா” என்றான் திலீப். “பந்தக்கால் நட்டாச்சு, பத்திரிக்கை கொடுத்தாச்சுனு அவசரப் படாமல் கொஞ்சம் பொறுமையா இரு பஞ்சும், நெருப்பும் பத்திக்காமல்” என்று அவனை நக்கலடித்த ரஞ்சித்தை இழுத்துக் கொண்டு சென்றான் ராகவ்.
சாம்பவி வீட்டுக்கு தூரம் என்று பொய் சொல்லி கோவிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள். “என்ன மாமா எல்லாம் ஓகே தானே” என்ற சாம்பவியிடம், “எல்லாம் ஓகே தான்” என்றான் சதீஷ்.
“ஹலோ மச்சினிச்சி பால் யாருக்கு” என்ற திலீப்பிடம், “எனக்கும், பல்லவிக்கும்” என்று சாம்பவி கூறிட அவள் அசந்த நேரம் பல்லவிக்கு என்று அவள் தட்டில் வைத்திருந்த தம்ளரை எடுத்து தரையில் வைத்து விட்டு அவளுக்காக வைத்திருந்த தம்ளரை தட்டில் எடுத்து வைத்தான் திலீப் வர்மன்.
“மாப்பிள்ளை” என்று சதீஷ் அழைத்திட, அவனருகில் சென்றான் திலீப். சாம்பவி சதீஷிடம் கண்ணைக் காட்ட அவனும் தலையசைத்து விட்டு திலீப்பை அழைத்துச் சென்றான்.
“மாப்பிள்ளை இது ஒத்தைப் பனைமரத்துக் கள்ளு உங்களுக்காக கொண்டு வந்திருக்கேன் குடிச்சா ஜிவ்வுன்னு இருக்கும் குடிங்க” என்றான் சதீஷ்.
“ஐயோ எனக்கு வேண்டாம்” என்று திலீப் கூறிட, “உடம்புக்கு நல்லது அதுவும் கல்யாணம் ஆகப் போறவரு குடிங்க” என்று வற்புறுத்தினான் சதீஷ். திலீப்பிற்கு ரொம்ப நாட்களாக கள் குடிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததால் அவனும் வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான். அவன் குடித்து முடித்ததும் மட்டையாகி விட அவனை கை தாங்களாக வீட்டிற்குள் அழைத்து வந்தான் சதீஷ். சாம்பவியின் அறையில் விளக்கு எரிய சதீஷ் அங்கே சென்று விட்டான்.
“இவள் எதுக்கு நமக்கு பால் கொண்டு வந்து கொடுத்தாள் இதை குடிக்கிறதை விட கீழே கொட்டுறது தான் நல்லது” என்று நினைத்த பல்லவி அதை எடுத்துக் கொண்டு கீழே வர ஹாலில் ஷோபாவில் மட்டையாகி கிடந்தான் திலீப் வர்மன்.
“என்ன இவன் கிட்ட ஏதோ புளிச்ச வாடை வருது” என்று அவனருகில் சென்று பார்த்தாள் பல்லவி. “அடப்பாவி கள்ளு குடிச்சுருக்கான். இவனுக்கு யாரு கள்ளு கொடுத்தது” என்று யோசித்தவள் அவனை எழுப்பினாள்.
“திலீப், திலீப் எழுந்திருடா” என்று அவனது கன்னத்தில் தட்டினாள் பல்லவி. “பவி” என்று குழைவாக அவன் அழைத்திட, “எருமை மாடு அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான் எந்த பரதேசி இவனுக்கு அளவுக்கு அதிகமா கள்ளு கொடுத்ததுனு தெரியலையே” என்று யோசித்தவள் அவனை கை தாங்களாக இழுத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றாள்.
“பவி என் செல்லம் ஐ லவ் யூ” என்று அவன் உலறிக் கொண்டு இருந்தான். “இன்னும் இரண்டு நாளில் நம்ம கல்யாணம் ஐ யம் வெரி ஹேப்பி” என்றவன், “ஐ லவ் யூ டீ என் பெங்களூர் தக்காளி” என்று கூறிக் கொண்டே வாந்தி எடுத்து வைக்க, “அட பஞ்சப் பரதேசி இப்படி வாந்தி எடுத்து வச்சுருக்கானே நாயே, நாயே” என்று அவனை குளியலறைக்குள் இழுத்துச் சென்று அவனை குளிக்க வைத்து அவனது உடையை மாற்றி விட்டவள் அவனை கை தாங்களாக இழுத்துக் கொண்டு வந்து மெத்தையில் படுக்க வைத்தாள். மூக்கில் துணியைக் கட்டிக் கொண்டு அவன் எடுத்து வைத்த வாந்தியை அள்ளிக் கொட்டி தரையை சுத்தம் செய்து விட்டு தானும் சென்று குளித்து விட்டு அவனது அறைக்கு வந்தாள்.
“வீட்டில் சாம்பவி வேறு இருக்கிறாள். இவன் வேற கள் குடிச்சு இருக்கிறான். அன்று ராகவ்வை செடியூஸ் செய்தது போல எங்கே திலீப்பையும் செடியூஸ் செய்து விடுவாளோ” என்ற பயத்தில் அவனது அறைக்கு வந்து விட்டாள்.
விடிய, விடிய கண் விழித்துக் கொண்டு இருந்தாள் பல்லவி. எப்பொழுது உறங்கினாளோ தெரியவில்லை அதிகாலை மீண்டும் கண் விழித்து எழுந்தாள். எழுந்து பார்த்தவள் மணியை பார்க்க மணி ஐந்தரை என்று காட்டவும் குளியலறைக்குள் நுழைந்தாள்.
உறக்கம் கலைந்து மெல்ல கண் விழித்து எழுந்தான் திலீப் வர்மன். “என்ன இது நான் என்ன இப்படி அறை குறையா இருக்கேன்” என்று நினைத்தவன், “என் டிரெஸ்ஸை யாரு சேஞ்ச் பண்ணினது. அதுவும் வெறு சார்ட்ஸோட இருக்கேனே” என்று நினைத்த திலீப் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க குளியலறையில் இருந்து வந்தாள் பல்லவி.
“பவி என்னடீ இது நீ என் ரூம்ல உள்ள பாத்ரூம்ல இருந்து வர, எனக்கு யாரு டிரெஸ் சேஞ்ச் பண்ணினது” என்று அவன் கேட்டிட, “மாட்டுனடா மவனே” என்று நினைத்தவள், “பொறுக்கி, பொறுக்கி நாளைக்கு நம்ம கல்யாணம் ஆனால் நேற்றே நீ பர்ஸ்ட் நைட்டை முடிச்சுட்டியேடா பாவி உன்னை போயி நல்லவன்னு நம்பி கூட தங்குனதுக்கு நைட்டு கண்ட கருமத்தை குடிச்சிட்டு வந்து பவி ப்ளீஸ், பவி ப்ளீஸ்னு கெஞ்சி, கொஞ்சி என்னை கன்வின்ஸ் பண்ணி என்னை கவுத்துட்டியே மாமு” என்று அவள் கூறிட, “பவி என்ன சொல்லுற நிஜமா” என்ற திலீப்பை பார்த்தவள், “மவனே எத்தனை முறை என்னை ப்ராங்க் பண்ணி ஏமாத்திருக்க இன்னைக்கு நல்லா ஏமாறு” என்று நினைத்த பல்லவி, “பின்னே நான் என்ன பொய்யா சொல்லப் போறேன். நீ இருக்கிற கோலத்தை பார்த்தும் உனக்கு புரியலையா திலீப். நாளைக்கு நம்ம கல்யாணம் ஆனால் நீ போடா” என்று அவள் திரும்பி நின்று சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு சிரித்தாள்.
(…அடியே…)