அடியே என் பெங்களூர் தக்காளி..(32).

4.8
(23)

அத்தியாயம் 32

 

 

“சதீஷ் என்ன பண்ணுற அவளைப் போட்டு இப்படி அடிக்கிற செத்துப் போயிறப் போறாள்” என்று தடுத்த சிவச்சந்திரனிடம், “செத்து ஒழியட்டும் சார். இவள் ஒருத்தி இருந்து எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினை பண்ணுறதுக்கு இவள் சாகலாம் மத்தவங்களாவது நிம்மதியா இருப்பாங்க” என்றான் சதீஷ்.

 

அவன் அடித்த அடியில் அவள் தலையில் அடி பட்டு மயங்கி விழுந்தாள். அவளையும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

“என்ன மதனி யாரை தேடிட்டு இருக்கீங்க” என்று வந்தார் சிந்தாமணி. “வாசு வை காணோம் சிந்தாமணி” என்ற செல்வராணி தம்பிக்கு ஃபோன் செய்தார்.

 

“என்ன சொல்லுற வாசு” என்ற செல்வராணி, “இதோ வரோம்” என்று ஃபோனை வைத்தார். “என்ன மதனி ஏன் பதட்டமா இருக்கீங்க” என்ற சிந்தாமணியிடம், “வைதேகி இறந்து போயிட்டாளாம்” என்றார் செல்வராணி.

 

“என்ன சொல்லுறீங்க” என்ற சிந்தாமணியிடம், “என்ன ஏதுன்னு ஒன்றும் புரியவில்லை ஹாஸ்பிடலில் வச்சுருக்காங்களாம் உடனே போகனும்” என்று பதறினார் செல்வராணி.

“ஆதி” என்று சிந்தாமணி அழைத்திட, “என்னங்கம்மா” என்று வந்தான் ஆதித்யன். “காரை எடுப்பா அந்த வைதேகி இறந்து போயிட்டாளாம் ஹாஸ்பிடல் போகனும்” என்று கூறிய சிந்தாமணி, “பைரவி, பார்கவி நீங்க வீட்டில் இருக்க. பல்லவியும், மாப்பிள்ளையும் எழுந்து வந்த பிறகு விஷயத்தை சொல்லுங்க” என்று கூறிய சிந்தாமணி செல்வராணியுடன் மருத்துவமனைக்கு கிளம்பினார்.

 

“என்னடா இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் இவங்க தூங்கிட்டு இருக்காங்க” என்ற ரஞ்சித்திடம், “எழுப்பலாமா? வேண்டாமா? தெரியலையே” என்றான் ராகவ்.

 

“அம்மா எழுப்ப வேண்டாம்னு தான் சொன்னாங்க” என்றாள் பைரவி. “அவங்க கிடக்காங்க சப்போஸ் பாடியை வீட்டுக்கு கொண்டு வந்தால் அந்த டைம் அவங்க தூங்கலாமா தப்பா போயிரும் ராகவ் நீங்க போயி கதவைத் தட்டுங்க” என்றாள் பார்கவி.

 

சரியென்று ரஞ்சித், ராகவ் இருவரும் கதவைத் தட்டினர். கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்து எழுந்த பல்லவி தன் கணவனை எழுப்பினாள்.

 

“திலீப், திலீப் எழுந்துருடா யாரோ கதவைத் தட்டுறாங்க” என்றாள் பல்லவி. “யாருடீ இப்படி டிஸ்டர்ப் பண்ணுறது” என்று சலித்துக் கொண்டு எழுந்தான் திலீப். “மணி பத்து டா” என்று பற்களைக் கடித்தவள் குளியலறைக்குள் நுழைந்தாள். தன் உடையை அணிந்து கொண்ட திலீப் சென்று கதவைத் திறந்தான்.

 

“ஸாரி திலீப் தப்பா எடுத்துக்காதேடா வைதேகி ஆண்ட்டி இறந்து போயிட்டாங்களாம் அதான் உங்களை எழுப்பினோம்” என்று கூறினான் ராகவ்.

 

“என்ன சொல்லுற ராகவ் எப்படி என்று திலீப் கேட்டிட சாம்பவி தான்” என்றவன், “பல்லவி கிட்ட விஷயத்தை சொல்லிட்டு இரண்டு பேரும் சீக்கிரம் கீழே வாங்க” என்று கூறிய ராகவ் சென்று விட திலீப் கவலையுடன் அமர்ந்தான்.

 

குளித்து முடித்து உடை மாற்றி வந்த பல்லவி “யாருடா கதவை தட்டுனது அத்தையா” என்றிட, “இல்லை பவி ராகவ் தான். உன் சித்தி இறந்து போயிட்டாங்களாம்” என்றான் திலீப் வர்மன்.

 

“என்ன சொல்லுற திலீப் சித்தி இறந்துட்டாங்களா? எப்படி எப்போ” என்று அவள் கேட்டிட, “தெரியலை சாம்பவி தான் காரணம்னு ராகவ் சொன்னான்” என்ற திலீப், “பத்து நிமிஷம் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்று குளியலறைக்குள் நுழைந்தான்.

 

“என்ன ஆச்சு ராகவ் திலீப் என்ன சொல்லுறான் சித்தி எப்படி” என்று பல்லவி கேட்டிட , “சாம்பவி தான் கொன்னுட்டாள்” என்று நடந்த விஷயத்தை தன் தந்தை சொல்லியதாக ராகவ் கூறிட பல்லவிக்கு கண்கள் கலங்கியது.

என்ன தான் அவர் அவளுக்கு நல்ல அம்மாவாக நடந்து கொள்ள வில்லை என்றாலும் இத்தனை வருடங்கள் அவர் கையால் சாப்பிட்டவள் இல்லையா அவள் அழ ஆரம்பிக்க திலீப் வந்து அவளை அணைத்து சமாதானம் செய்தான்.

 

“ஹாஸ்பிடல் போகலாம் திலீப்” என்று பல்லவி கேட்டிட, “வேண்டாம் பல்லவி ஆண்ட்டியை அவங்க தம்பி வீட்டுக்கு தான் கொண்டு வர்றாங்களாம் நாம அங்கே போயி பார்க்கலாம்” என்று ரஞ்சித் கூறிட அனைவரும் அங்கே சென்றனர்.

 

வைதேகியின் இறந்த உடலைக் கண்ட சாம்பவி அதிர்ச்சியில் பித்துப் பிடித்து அமர்ந்திருந்தாள். சதீஷ் அடித்ததில் தலையில் வேறு அடிபட்டு அவளுக்கு சித்தம் கலங்கிப் போனது.

 

வைதேகியின் இறப்பை வாசுதேவனாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருடைய மனைவி ஆயிற்றே. சதீஷோ தனக்கென இருந்த ஒரு உறவு தன் அக்கா அவளும் இறந்து விட்டாளே என்று கதறி அழுதான்.

 

வைதேகியின் உடல் நல்லபடியாக அடக்கம் செய்யப்பட்டது. சாம்பவிக்கு சித்தம் கலங்கிப் போனதால் அவள் மீது வழக்கு பதிவு செய்யவும் முடியாமல் போனது. அவள் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

 

ஆறு மாதங்களுக்கு பிறகு…

 

உறக்கத்தில் இருந்து கண் விழித்து எழுந்த பல்லவி தன் அருகில் தன் கணவன் இல்லாமல் போகவும் “திலீப், திலீப்” என்று அழைத்துக் கொண்டே கிட்சனுக்கு சென்றாள்.

 

அங்கே அவளது கணவன் சமையல் செய்து கொண்டு இருந்தான்.

 

அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டவள், “என்ன சமையல்” என்றாள். “உப்புமா” என்று அவன் கூறிட, “ரொம்ப தப்புமா” என்றாள் பல்லவி.

 

அவளை தன் புறம் இழுத்து தூக்கி கிட்சன் திண்டில் அமர வைத்து, “என்ன தப்புமா” என்றான் திலீப் வர்மன்.

 

“நீ கிண்டுற உப்புமா தான்” என்றவள் அவனது கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டாள்.

 

“என் செல்லப் பொண்டாட்டி மாசத்துல ஒரு நாளாவது உப்புமா சாப்பிடு டீ உடம்புக்கு நல்லது” என்று கூறினான் திலீப்.

 

“ஆமாம் ,ஆமாம் ரொம்ப ரொம்ப நல்லது ஆட்டோ பின்னாடி எழுதி வைப்போமா உப்புமா உடம்புக்கு நல்லதுன்னு” என்ற பல்லவியின் இதழில் தன் இதழைப் பதித்தான் திலீப் வர்மன்.

 

“டேய் விடுடா நான் இன்னும் ப்ரஸ் பண்ணலை” என்று அவள் கூறிட, அவளை விடுவித்தவன் “பொய் சொல்லி தப்பிக்கிறியா பிச்சுருவேன்” என்று மீண்டும் அவளது இதழைக் கொய்தான் திலீப் வர்மன்.

 

“பார்கவி இன்னும் எவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைப்ப” என்று கத்தினான் ராகவ். “அட கொஞ்சம் பொறுடா அவள் ஒருத்தியே எத்தனை வேலை தான் பார்ப்பாள். கல்யாணம் பண்ணி வந்த மறுநாளே என்னை எந்த வேலையும் பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டாள்” என்று புவனேஸ்வரி கூறிட, “நீயும் இது தான் சாக்குனு ஒரு வேலையும் பார்க்கிறது இல்லை அப்படித் தானே” என்றார் சிவச்சந்திரன்.

 

“ஏன் மாமா அத்தையை கிண்டல் பண்ணுறீங்க” என்ற பார்கவி அனைவருக்கும் உணவினை பரிமாறினாள்.

 

“நீயும் உட்கார்ந்து சாப்பிடு பார்கவி” என்று புவனேஸ்வரி கூறிட அவளும் அமர்ந்து சாப்பிட்டாள். சிவச்சந்திரன், புவனேஸ்வரி இருவரும் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட தன் மனைவியின் கையைப் பிடித்த ராகவ் , “ஏன் அம்மாவை எந்த வேலையும் பார்க்க விட மாட்டேங்கிற நீ என்ன மிஷினா எல்லா வேலைகளையும் செய்ய” என்றான் ராகவ்.

 

“எங்க வீட்டில் என் அண்ணி இப்படி தான். அம்மாவை ஒரு வேலையும் பார்க்க விட மாட்டாங்க அவங்களைப் பார்த்து கத்துக்கிட்டேன். அப்பறம் நமக்குள்ள இருக்கிற இடைவெளி என் மனசை பாதிக்க கூடாது அதான் வீட்டு வேலையில் என் கவனத்தை செலுத்துறேன்” என்றாள் பார்கவி.

 

“ஸாரி பார்கவி” என்ற ராகவ் கை கழுவி விட்டு எழுந்து சென்றான். 

 

பார்கவி தான் வம்படியாக ராகவ்வை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டாள். அவன் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. “உங்க மனசுல இப்பவே எனக்கு இடம் கொடுக்கனும்னு எந்த அவசியமும் இல்லை உங்க மனசு மாறும் வரை காத்திருப்பேன்” என்று அவனை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டாள்.

 

மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் கணவன் அவன் அவளிடம் நல்ல தோழனாக பழகுகிறானே தவிர கணவனாக நடந்து கொள்ள வில்லை. அந்த வருத்தம் இருந்தாலும் அவள் அதை பெரிது படுத்தாமல் அவனது பெற்றோருக்கு நல்ல மருமகளாக வாழ்ந்து கொண்டு இருந்தாள்.

“எருமை, எருமை மணி எத்தனை இன்னும் என்ன தூக்கம்” என்று கணவன் ரஞ்சித்தின் தலையில் குட்டு வைத்து எழுப்பினாள் பைரவி. “மணி ஆறு தானேடீ ஆகுது” என்ற ரஞ்சித்திடம், “இன்னைக்கு சன்டே உன்னோட சமையல் நியாபகம் இருக்கா ஓடு, ஓடு” என்று அவனை விரட்டினாள் பைரவி.

 

“ராட்சசி இரு டீ இன்னைக்கு உனக்கு உப்புமா தான்” என்றான் ரஞ்சித். “அது என் ஃபேவரைட் ரஞ்சுக்குட்டி” என்று கணவனின் கன்னத்தில் முத்தமிட்டாள் பைரவி.

 

“ரொம்ப நாளா சிங்கிளா இருக்கோமே கொஞ்சம் மிங்கிளாகிக்கலாம்னு ஃபேஸ்புக்ல லவ் பண்ணி இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு என்னை சொல்லனும் தினமும் வேலை வாங்கியே சாவடிக்கிறாள்” என்று புலம்பிய ரஞ்சித்தை இழுத்த பைரவி “எப்போ பாரு புலம்பிட்டே இருக்காதடா” என்று அவனது வாயை அடைந்தாள் தன் இதழால்.

 

பிறகு என்ன ஹாப்பி ஹாப்பி சண்டே தான்.

 

“என்ன ராகவ் இது என்ன பண்ணுறீங்க கையை விடுங்க” என்ற பார்கவியிடம், “அப்பா, அம்மா பூர்வி வீட்டுக்கு போயிட்டாங்க தானே அப்பறம் யாருக்கு சமைக்கிற” என்றான் ராகவ்.

 

“உங்களுக்கு தான்” என்று அவள் கூறிட, “எனக்கு சாப்பாடு வேணும் தான் ஆனால் இந்த சாப்பாடு இல்லை” என்று மனைவி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் ராகவ்.

 

“ராகவ் என்ன பண்ணுறீங்க” என்ற பார்கவியிடம், ஐ லவ் யூ பார்கவி. இப்போதும் என் மனசுல பல்லவி இருக்காள். அவள் என்னோட ஃபர்ஸ்ட் லவ் அது எப்போவும் மறக்காது ஆனால் நீ தான் என்னோட லைஃப். உன்னை ரொம்ப காக்க வச்சுட்டேன்ல” என்று அவன் கூறிட, “காதலில் காத்திருப்பது கூட சுகம் தானே ராகவ்” என்றாள் பார்கவி. அவள் அடுத்த வார்த்தை பேசும் முன் அவளது இதழை சிறை பிடித்தான் அவளது மணவாளன்.

சாம்பவி விட்டத்தை பார்த்து அமர்ந்து கொண்டு இருந்தாள். அவளருகில் வந்த சதீஷ் அவளுக்கு உணவு ஊட்டி விட அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள். அவள் ஆடிய ஆட்டம் எல்லாம் அவளது அன்னையின் உயிரோடு அடங்கிப் போனது. தான் யார் என்றே தெரியாத ஒரு நிலையில் அவள் வாழ்ந்து கொண்டு இருந்தாள். சதீஷ் தான் அவளை ஆதரவாக பார்த்துக் கொண்டு இருக்கிறான். அவன் உண்மையாக அவளை நேசித்தான் அவளை எந்த சூழ்நிலையிலும் விட்டு விடக் கூடாது என்று பாதுகாத்து வருகிறான்.

 

வாசுதேவன் தன் அக்கா செல்வராணியின் வீட்டில் அவருக்கு துணையாக தன் வாழ்நாளை கடத்தினார்.

 

“ஏன் டா நீ தனியா எதுனாலும் பிசினஸ் பண்ணுவேன்னு பார்த்தால் ருக்மணி கார்ட்ஸையே டெவலப் பண்ணி என் கூடவே சுத்திட்டு இருக்கியே உனக்கு என்னை பார்த்து பார்த்து போர் அடிக்கலையா” என்றாள் பல்லவி.

 

“இல்லையே என் பெங்களூர் தக்காளியோட அழகான முகத்தை எப்பவுமே பார்த்துட்டே இருக்கனும் அது தான் எனக்கு வேண்டும்” என்றவனிடம், “அப்போ நம்ம குழந்தையோட முகத்தை யாரு பார்க்கிறதாம்” என்றாள் பல்லவி .

 

“நாம சேர்ந்து பார்க்கலாம்” என்று கூறிய திலீப் , “என்ன சொன்ன, என்ன சொன்ன” என்று கேட்டிட, தன் மெடிக்கல் ரிப்போர்ட்டை காட்டினாள் பல்லவி. 

 

அதைக் கண்ட திலீப்பின் கண்கள் குளமாக மனைவியின் நெற்றியிலும், வயிற்றிலும் முத்தமிட்டான் திலீப் வர்மன்.

 

“நம்ம பாப்பாவுக்கு வயசு நான்கு வாரம்” 

என்று கூறி கணவன் அவனது கண்ணீரைத் துடைத்து விட்டு நெற்றியில் முத்தமிட்ட பல்லவி, “ஐ லவ் யூ திலீப்” என்றிட, “ஐ டூ லவ் யூ டீ என் பெங்களூர் தக்காளி. நம்ம காதலோட அடையாளம் நம்ம பாப்பா” என்று அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான் இன்னும் இறுக்கமாக…

…. முற்றும்….

இதுவரை கதையை படித்து ஆதரவு தந்த வாசகர்களுக்கு மிக்க நன்றி….

 

ராகவ், ரஞ்சித் லவ் ஸ்டோரி விரிவா சொல்லனும்னா தனிக் கதை தான் போடனும். அதனால் சார்ட்டா சொல்லிட்டேன். அவங்களுக்கு ஸ்டோரி கண்டிப்பா வேணும்னா சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் காம்பெட்டிசன் முடிஞ்சதும் சைட்ல எழுதுறேன்.  நன்றி..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!