சரியாக நண்பகல் வேளையில் கிருஷ்ணகிரியை அடைந்திருந்தாள் மேக விருஷ்டி மணம் முழுவதும் வெறுமை சூழல.
அந்தியூர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற மஞ்சள் வண்ண பலகை அவளை வரவேற்க…
காரை செலுத்தாது அவ்வூரினுள் நுழைய இருந்த ஒரே நேரத்தில் ஒரு வாகம் மட்டுமே முன்னும் பின்னும் செல்லும் அளவிற்கு இருந்த பாலத்தில் காரை அணைத்தபடி ஸ்டியரிங்கில் தலைசாய்த்து அமர்ந்தாள் வாடிய முகத்தோடு.
ஒருபுறம் விரும்பியவன் விரும்பிய வேலை என அணைத்தும் இழந்த எண்ணம் ஒருபக்கம் வதைக்க, விருப்பம் இல்லா வாழ்க்கை எண்ணி மனம் மறுபக்கம் பறிதவிக்க ஒரு நிலையில் இல்லாது அமர்ந்திருந்தாள்.
அந்நேரம் அவளை அழைத்த அலைபேசிக்கு உயிர் கொடுத்து சலிப்புடன் காதில் வைத்தவளிடம்,
“ஹிம் சொல்லுங்க மா…”
“மேகா நீ எங்க இருக்க? ரீச் ஆகிட்டியா எப்படி?” கேட்டார் மைதிலி தீவிரமாக எதிர் முனையில் இருந்து.
பெருமூச்சு எடுத்து விட்டவள் “நான் இன்னும் ரீச் ஆகலமா. நான் இன்னும் ரீச் ஆக ரெண்டு மணி நேரம் ஆகும். செம டிராபிக் நான் ரீச் ஆயிட்டு கண்டிப்பா உங்களுக்கு கால் பண்றேன் ப்ளீஸ்” என மேலும் அவர் பேச்சை ஏற்காது அழைப்பை துண்டித்திருந்தாள் மேக விருஷ்டி.
மீண்டும் அவள் ஸ்டியரிங்கில் தலை சாய மீண்டும் அழைத்தது அவள் அலைபேசி அவளை.
இம்முறை பல்லைக் கடித்து பார்த்தவள் கண்கள் சற்று துளிர்விட உடனே அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
“என்ன சிசி போய் சேர்ந்துட்டியா அங்க?” நிவர்த்தனன் வினவ…
மைதிலி படுத்திய பாட்டில் “ஆமாண்டா போய் சேர்ற நிலைமைல தான் இருக்கேன் சீக்கிரமா பால் ஊத்தவா” என்றாள் சினம் எழும்ப.
விளையாட்டான அவள் பேச்சில் அதிர்ந்தவன் “அக்கா… என்ன வார்த்தை பேசுற நீ” எனப் பல்லை கடித்தான் நிவர்த்தனன் எதிர்முனையில்.
தமையன் அவன் குரல் அதிர்வில் தான் தான் பேசிய வார்த்தையின் கடுமையை உணர்ந்தவள் தலையை அடித்து “சாரி டா… சாரி டா… வெரி சாரி டா…” என்றவள் மன்னிப்பு யாசிக்க
“ஏன் அக்கா இப்படி பேசுற, அந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி தொலைனாலும் சொல்லி தொலைய மாட்டேங்குற. இப்பிடி உன்னையும் வறுத்திகிட்டு எங்களையும் வருத்திகிட்டு ஏன்கா?” என்றான் விட்டேரியாக.
“சரி சரி அதெல்லாம் பிரீயா விடு. நம்ம வேற பேசலாம்” என்று அவன் பேச்சை திசை திருப்ப, “அதான பார்த்தேன் கல்யாணத்த பத்தி பேசும் போதெல்லாம் என்ன மட்டும் தான் திசை திருப்புற உன்ன எல்லாம் வச்சுக்கிட்டு…” தலையில் அடித்துக் கொண்டவன்,
“சரி போய் அங்க ரீச் ஆயிட்டியா இல்லையா? அம்மா உனக்கு கால் பண்ணாங்களா?”
“இன்னுமா பண்ணாம இருப்பாங்க, கிளம்புன நேரத்துல இருந்து குறைஞ்சது 50 போன் கால் வந்திருச்சுடா. முடியலடா எங்கயாவது ஓடி போயிரலாம் போல இருக்குது”
“இப்பவும் ஒன்னு கெட்டுப் போல அக்கா உன் கையிலேயே பாஸ்போர்ட் இருக்கு தான. காரை திருப்பி ஏர்போர்ட்டு போ உனக்கு நான் டிக்கெட் ரெடி பண்றேன். ஒன்னு ஆஸ்திரேலியாவா இல்ல உனக்கு பிடிச்ச வேற எங்க வேணாலும் போ. இல்ல அமெரிக்காவே போறியா போ. நான் இருக்கேன் அந்த இன்னு…” என்னும் போது
பின்னோடு இருந்து பலமாக கேட்ட ஹாரன் சத்ததில் அதிர்ந்தவள் கையில் இருந்த போனை நழுவ விட்டிருந்தாள் பட்டென்று.
திடுக்கிட்டவள் யார் என்று உள்ளிருந்து ஜன்னல் வழி பார்க்க, ஐவிரல் பதித்து கார் கண்ணாடியை தட்டும் சத்தம் அவள் செவிமடல் அடைந்தது.
“யாருடா அவன்…?” என்று கார் கண்ணாடிய அவள் இறக்க, அங்கு நின்று கொண்டிருந்தது வேறு யாருமல்ல சாட்சாத் நம் இன்னுழவன் தான்.
அவன் செயலில் திடீரென்று திடுக்கிட்டிருந்தவள் அவனை முறைக்க, கொளுத்தும் வெயிலில் நெற்றி சுருங்க அவளுக்கு மேல் அவளை முறைத்தவனோ,
“ஏய் இந்தா புள்ள யாருமா நீ. நடுரோட்டில வண்டி விட்டுட்டு தூங்கிட்டு இருக்கிறவ. என் வீட்ல நைட்டு ஃபுல்லா தூங்கலையோ? ஓரமா வண்டிய விட்டுட்டு தூங்கு மா. இல்ல வீட்டுக்கு போய் தூங்கு. இப்படி வண்டிய நெடுவாள நடு ரோட்ல விட்டு நின்னனா மத்தவங்க போக வர வேண்டாமா” என்றான் ஏகத்துக்கு சினம் கொண்டவனாய்.
அவளோ கோவத்தில், “யூ பிளாடி ரஸ்க்கள், ஸ்டுபிட், நோன்சன்ஸ், கவுண்டர்” என்று ஆங்கில வார்த்தைகளால் அவனை அவள் அர்ச்சிக்க…
கையில இருந்து தவறி எதிர்ப்புறம் இருந்த சீட்டில் விழுந்த அலைபேசியில் திடீரென்று ஏற்பட்ட சத்தத்தில் நிவர்த்தனனோ “ஹலோ… ஹலோ சிசி…” என்று விடாது குரல் கொடுத்தான்.
பைக்கில் அமர்ந்தப்படி அவளின் ஆங்கில பேச்சிலும் அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த நிவர்த்தனன் குரலையும் கேட்டவன், “ஓ வெளியூர் பிள்ளையா நீ. எதுவோ இருந்துட்டு போ… அந்த பக்கம் ஓரஞ்சாரமா போய் கடலை போடுமா.
இனி உன் வண்டி ஊருக்குள்ள நடுரோட்டில் நிக்கிறத பார்த்தேன் நாலு டயரையும் பஞ்சராக்கி போடுவேன் பார்த்துக்கோ. அப்புறம் தள்ளிட்டு தான் போகணும். வீட்டுல மரியாதையா பேச சொல்லி கொடுக்கலையா உனக்கு? முதல்ல வண்டிய எடு” என்று மீண்டும் அவன் கார் கதவில் அடித்தான் பளார் பளாரென்று.
ஏனென்றால் காருக்கு பின்பு மாட்டு வண்டியில் காய்கறிகளை வைத்துக்கொண்டு வயதான முதியவர் ஒருவர் வெயில் பொழுதில் தலையில் துண்டை போட்டு அமர்ந்திருந்தார்.
டவுனில் வேலையை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தவனுக்கு இந்த காட்சி புலப்பட்டது. அதிலும் எசியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் மேக விருஷ்டி பார்த்தவனுக்கு கோவம் கொந்தளித்து.
அவன் பேச்சில் மட்டு பட்டிருந்த சினம் மீண்டும் கிளர்த்தெழ மேலும் எரிச்சல் கண்டவள் வேகமாக காரை ஓரமாக செலுத்தி நிறுத்தி கதவை திறந்த படார் என்று அறைந்து இறங்கினாள்.
இன்னுழவனும் பைக்கை ஓரமாக நிறுத்தியவன் இறங்காது திரும்பி, “நீங்க போங்கய்யா முதல்ல. அவங்க நின்னா போக சொல்லாம வெயிலேயே அவங்க போகும் வர கத்துக்கிட்டு நிற்பிரா நீரு… சத்தம் கொடுக்க வேண்டாமா…” என அவரை கடிந்து கொண்டு முதலில் அப்பெரியவரை அனுப்பி வைத்தான்.
இதையெல்லாம் அதன் பின்பு தான் கவனித்திருந்தாள் மேக விருஷ்டி.
தான் செய்த தவறின் விளைவை எண்ணி வருந்தியவள் “சாரி” என அவரிடம் மன்னிப்பு கூற வருவதற்குள் அம்முதியவர் முன்னே செல்ல… அவருக்கு ஓரம் வாங்கி பைக்கில் பறந்திருந்தான் இன்னுழவன்.
வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் மிடுக்காக புல்லட்டில் சென்று கொண்டிருக்கும் அவன் பின்புறத்தை தான் பார்த்து நின்றாள் மேக விருஷ்டி.
இங்கோ அலைபேசியில் விடாத அழைத்துக் கொண்டே இருந்தான் நிவர்த்தனன்.
“அச்சோ பாவம் அந்த தாத்தா, எவ்வளவு நேரம் நின்னாரோ இந்த வெயில்ல. எல்லாம் இந்த அம்மா பண்றதால” என மைதிலியை வறுத்தெடுத்து தன் மனம் வருந்தியவள் மீண்டும் காரில் ஏறி அலைபேசியை காதில் வைத்தாள்.
“என்னாச்சு அக்கா எதுவும் ப்ராப்ளம் இல்லையே? யாருக்காக அவன் குறுக்கே ஏதோ ஒரு வாய்ஸ் கேட்டுச்சு” என நிவர்த்தனன் கேட்க, நடந்துவற்றை கூறினாள் மேக விருஷ்டி.
“தப்பு உன் மேல தான் சிசி. ஓகே அந்த தாத்தாகிட்ட சாரி கேட்டியா?”
“எங்க அந்த தாத்தாவும் போயிட்டாரு. அவருக்காக என்ன திட்டுன அந்த வில்லேஜ் ஜென்ட்டில் மேனும் பைக்குல பறந்துட்டாரு.” என்றாள் மேக விருஷ்டி உதட்டை பிதுக்கி.