அத்தியாயம் 15

4.6
(23)

“வாடா வீட்டுல பஞ்சாயத்து” என வீட்டை அடைந்திருந்தனர் இன்னுழவன் அகரனும்.

இன்னுழவன் வீட்டிற்குள் நுழைய அவன் பின் அகரன் நுழைய.. வீட்டு நடுக்கூடத்தில் சக்திவேல் மற்றும் தங்கமணி அவரின் கணவன் ராஜசேகர் அமர்ந்திருக்க, வீங்கிய கன்னங்களுடன் விழிகளில் நீருடன் நின்று கொண்டிருந்தாள் நந்தனா.

நந்தனாவின் விழிகளோ முதலில் வந்த இன்னுழவனைத் தாண்டி பின்னால் வந்த அகரனின் மீது படிந்தது ஏக்கமாய்.

அகரனும் அவளை தான் பார்த்தான் விழி அதிர்வுடன். தன்னவள் கலங்கிய விழி கண்டு உள்ளமது பதைபதைத்தாலும் இருக்கும் சூழல் கருதி அமைதி காக்கும் பொருட்டு மௌனமாய் நின்றான் விழிகளில் அவளை நிரப்பி.

“டேய் பேராண்டி பைஸா எங்க?” என முன்வந்து நின்றார் அம்பிகாமா ஆர்வமாய்.

இன்னுழவனும் “வாங்கி வந்த பீட்சாவை” அவரிடம் நீட்டியவன், “என்னவாம்?” என்றான் அவர்களின் மீது பார்வையை செலுத்தாது.

“அந்த காமெடிய நீயே கேளு அதுங்ககிட்ட. நான் போய் புரஷ்ஷா ( ஃப்ரெஷ்) சாப்பிடுறேன். அடியே இனி பிரிஜிக்குள்ள ப்ரீசருல இருக்க கோக்க கோலாவ ஊத்திட்டு வாடி” என அவர்களுக்கு முன்னே சென்று அமர்ந்தார் பீட்சாவே விரித்த வண்ணம் அம்பிகாமா.

அப்பத்தா அலம்பலில் தலையில் அடித்து இனிதுழனி கிச்சனுக்குள் செல்ல, நடப்பற்றை பார்த்து ஓரமாய் நின்றார் கோதாவரி.

“ஏம்மா இங்க எவ்வளவு முக்கியமான விஷயம் நாங்க பேச வந்திருக்கோம். உனக்கு இப்போ சாப்பாடு தான் முக்கியமா. எப்ப பார்த்தாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்க, உன் வயசுக்கு ஏற்றவ மாறியாமா நீ நடந்துக்குற” என சீறினார் தங்கமணி.

அவரை பார்த்து முகத்தை சுழித்தவர், “ஏன் முக்கியமான விஷயம்னா சாப்பிடக்கூடாதா…? எனக்கு சாப்பாடு தாண்டி முக்கியம். நீயா வாங்கி தர.. இல்ல நீ ஆக்கி போடுறியா…?

என் பேரங்க முவநொடி இல்லாம எனக்கு வாங்கி தரானுங்க, ஏன் மருமவா சலிக்காம ஆக்கி போடுறா.. இளம் வயசு நான் வஞ்சனை இல்லாம சாப்பிடுறேன் இதுல நீ எதுக்கு அலுத்துகிறவ…” என்றவராய் அதில் ஒரு துண்டை பிற்று எடுத்தவரோ “மாப்பிள உங்களுக்கு ஒரு பீசு…” என்றார் ராஜசேகரிடம் நீட்டி.

“அம்மா…” தங்கமணி கத்த

“சோ அப்பா… ஏண்டி இவளே நீ முக்கியமான விஷயம் பேச வந்தன்னா அத என்கிட்டயா பேச வந்திருக்க?

பேச வேண்டிய உடையவன் அங்க நிக்கிறான். அவன் கிட்ட பேசு சும்மா சாப்பிடற நேரத்துல டிசிடப்பு பண்ணிட்டு இருந்த மூக்க பேத்துப்புடுவேன் பாத்துக்க… சாடிவிட்டு

அடியே இவளே… நீ இன்னுமாடி அந்த கோக்க கோலாவ ஊத்திக்கிட்டு இருக்குறவ…” என்றவராய் குரல் கொடுத்தார் இனிதுழனிக்கு.

அப்பத்தாவின் அருகில் சென்று அமர்ந்தான் நிமிர்வாக இன்னுழவன் சக்திவேலை திரும்பி கூட பார்க்காது.

“வாங்க மாமா, என்ன முக்கியமான விஷயமா வந்து இருக்கீங்க” என்றவனின் பார்வை அவர்களின் பின் நின்ற நந்தனாவின் கலங்கிய விழிகளின் மீது படிந்து மீண்டது ஒரு கணம்.

“உனக்கும் நந்தனாவுக்கும் நாளைக்கு காலைல நம்ம ஊர் கோயில் வச்சு கல்யாணம் முடிவு பண்ணி இருக்கோம்” என கேள்வி ராஜசேகர் இடம் என்றால் பதிலோ சக்திவேலிடமிருந்து வந்தது.

இன்னுழவனோ ராஜசேகரை பார்க்க அவரோ இமை அசைத்து எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று வாக்குமூலம் கொடுத்தார்.

பின்னால் நின்ற நந்தனாவிடம் கேட்கவே வேண்டாம் அவளின் முழு பார்வை வீச்சும் படர்ந்திருந்தது என்னவோ அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அகரன் மீது தான்.

இன்னுழவனோ இப்போது கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்தவன், “அப்பத்தா ஐ ஹவ் அ டேக் ஒன் பீஸ்”

“யா… சோர்… சோர்… டேக்குட்டு பேராண்டி” என வேகப்பத்தை (pizza) அவன் புறம் நீட்டினார் அம்பிகாமா.

அந்நேரம் இனிதுழனியும் இரண்டு கண்ணாடி கோபையில் கருப்பு வண்ண குளிர் பாணத்தை வைத்திருந்தாள்.

இன்னுழவனும் வேகப்பத்தில்  இருந்து ஒரு துண்டை எடுத்தவன் “என் கல்யாணத்தை முடிவு பண்றதுக்கு நீங்க யாரு?” என சர்வ சாதாரணமாக கேட்டவனாய் உண்ண ஆரம்பித்தான் அதனை.

“நான் உன் அப்பாடா எனக்கு அந்த உரிமை இல்லையா?” சக்திவேல் சீற…

“ப்ச்… அதான் அன்னைக்கே சொல்லிட்டேனே உங்களுக்கு எங்க  வாழ்க்கையில முடிவெடுக்க எந்த உரிமையும் கிடைத்துன்னு.. திரும்பத் திரும்ப எல்லாம் சொல்ல முடியாது” என்றவன் எழுந்தான் பீட்ஸாவை முழுமையாக உண்று.

“இது என்ன பேச்சு அப்போ என் தங்கச்சிக்கு நான் கொடுத்த வாக்கு…!” என கொந்தளித்து சக்திவேலும் எழும்பினார்.

“அப்ப என் பொண்ணோட வாழ்க்கை, அவளுக்கும் உனக்குமான கல்யாணம்…?” என தங்கமணி மறுபுறம் ஆவேசம் கொண்டு எழும்பினார்.

“அப்பா இப்போ தான் என்டர்மன்ட்டு ஸ்டார்ட்டு ஆகிருக்கு” (என்டர்டைன்மென்ட்) என அப்பத்தா பார்த்தார் அவர்களை  வேகப்பத்தை உண்றவாரு குதுகலாமாக.

இன்னுழவனோ முதலில் சக்திவேல் புறம் திரும்பியவன்,

“என்ன கேட்டா நீங்க வாக்கு கொடுத்தீங்க. என் வாழ்க்கைக்கு வாக்கு கொடுக்க நீங்க யாரு?” என்றான் பார்வையில் அனல் வீச.

“இன்னுழவா… என்ன பேசுற…” தங்கமணி குறுகிட

அவர் மீது காரப்பார்வையை ஏகத்துக்கு தெளித்தவன், “எனக்கு விவரம் தெரிஞ்சுதுல இருந்து இப்ப வர உங்க பொண்ண நான் என்னைக்காவது கல்யாணம் பண்ணிக்கிறேன் உங்ககிட்ட சொல்லி இருக்கேனா…?

இல்ல அவகிட்ட தான் அப்படி சொல்லி இருக்கேனா, அந்த மாதிரி எண்ணத்துல நான் நடந்துருக்கேனா…?” கேட்டான் குரலில் கடுமை விரவ ஒற்றை விரல் நீட்டி.

“இது என்ன பேச்சு உனக்கும் அவ தான்னு சின்ன வயசுலயே முடிவு பண்ணி வச்சது தானே…” தங்கமணி சாட

“சின்ன வயசுல லூசுத்தனமா நீங்க முடிவு பண்ணி வச்சதுக்கெல்லாம் நாங்க பலிகடாக முடியாது அத்த. அவரவர் வாழ்க்கைய பற்றி அவங்க அவங்களுக்கு யோசனைகள் இருக்கும்.

அழுத்தமாய் அதுபடி தான் இங்க எல்லாம் நடக்கும், நடத்துவேன்.

உங்க வெட்டி வீராப்புக்காகவும் கௌரவத்துக்காகவும் அப்புறம் இத்துபோன சாதி கொள்கைக்காகவும் எங்க வாழ்க்கைய நாங்க பணயம் வைக்க முடியாது, அப்பிடி வைக்கவும் விட மாட்டேன்.

இப்ப சொல்றேன் எனக்கும் நந்தனாவுக்கும் நீங்க நினைச்சிட்டு இருந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல” தீர்வாக என்றவன்,

ராஜசேகரைப் பார்த்தவனாய் “இதுல நீங்க ஏதும் சொல்றதுக்கு இருக்கா மாமா, உங்களோட கருத்து?” என்றான் சற்று குரல் தளர்ந்து.

அவரோ இட வலமாய் தலை அசைத்தவர், “எனக்கு இதுல எந்த கருத்தும் இல்லை இன்னுழவா. நாங்க வாழ்ந்து முடிச்சிட்டோம் இனிமே வாழ போறது நீங்க, உங்களோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். முக்கியமா என் மகளோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்” என்றார் உறுதியாக.

அதைக் கேட்டு மென்னகை உதிர்த்தவன், “ரொம்ப தேங்க்ஸ் மாமா நீங்க புரிஞ்சுகிட்டீங்க” என சக்திவேல் புறம் திரும்பியவன் முகம் இறுக குரலில் திண்மை குடியேற…

“உங்களுக்கும் புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்.. இனி அத விட்டுட்டு அவளுக்கு அவன் இவளுக்கு இவன் அப்படின்னு பேசிகிட்டு எனக்கு தெரியாம எதையாவது பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா வீடு இருக்கும் ஆனா வீட்ல நீங்க இருக்க மாட்டீங்க” என கட்டளையாய் சொன்னவன்,

“ஆமா எதுக்கு இவ்ளோ அவசரமான கல்யாணம் ஏற்பாடு முதல்ல, ஏன் ஊர்ல இருந்து சோமு மாமா வந்துட்டாரு என்றதாலயா! அவர் மகளுக்கு கல்யாணம் நடக்குதுன்னு அதுக்கு முன்னாடி எனக்கு நடத்தணும் வெறியா… ஹான்…”

தாடை இறுக பற்களை அரைத்தவன், “இங்க நான் தான் முதல்ல நீ தான் முதல்லன்னு போட்டியா நடந்துகிட்டு இருக்கு.

இல்ல அவர மாதிரி கலயாணந்த வைக்கணும் நீங்க நினைச்சா.. அப்போ அவர மாதிரி இந்த ஊரையும் சொந்த வீட்டையும் சொந்த பந்ததையும் விட்டுட்டு வருஷ கணக்கா வெளில இருக்கீங்களா…

சக்திவேல் அதிர… “ஒழுங்கு மரியாதையா எல்லாரும் வால சுருட்டி கிட்டு இருங்க. அதுமட்டுமில்லாமல் நாளைக்கு நம்ம வீட்டு சார்பில சோமு மாமா வீட்டு கல்யாணத்துல எல்லாரும் நிக்கணும்.

அத விட்டுட்டு நான் வரமாட்டேன், நீ போக கூடாதுன்னு சலம்பல் பண்ணிக்கிட்டு, உங்கள கொண்டு பிரச்சனை நடத்தி அலம்பல் பண்ணீங்க… நான் முதல்ல சொன்னது தான் வீடு இருக்கும் ஆனா வீட்ல நீங்க இருக்க மாட்டீங்க” என்றான் இன்னுழவன் கழுத்து நரம்பு புடைக்க.

பின் தங்கமணியின் புறம் திரும்பியவன் சிவந்திருந்து கை ரேகை பதிந்திருந்த நந்தனாவின் கன்னத்தில் பார்வையை பதித்து மீட்டவன் மீண்டும் ஒற்றை விரல் நீட்டியவனாய்,

“இன்னொரு தடவ அவ மேல உங்க கை பட்டுச்சு அப்படின்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என காரமாக எச்சரித்தான்.

“இனிமா கூட்டிட்டு போ நந்தனாவ உள்ள, அம்மா அவள சாப்பிட வைங்க என்றவன், மாமா நீங்களும் சாப்பிட்டு போங்க” என்றான்.

ராஜ சேகரோ புன்னகைத்தவர், “இல்ல இன்னுழவா மில்லுல வேலை எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கு, உங்க அத்தைக்காரி இழுத்துகிட்டு வந்துட்டா. நான் கிளம்புறேன் நந்தனவ அப்புறமா நீங்க அனுப்பி வைங்க” என்றவர் தங்கமணி புறம் திரும்பினார் தீயாய்.

“என் பொண்ணு மேல உன் கைபட்டது இதுவே கடைசியா இருக்கணும். இதுக்கப்புறம் என் பொண்ணு மேல உன் கை பட்டுச்சி இன்னுழவனை குறித்தவர் அவன் மனுஷனா தான் இருக்க மாட்டான். நான் உனக்கு புருஷனாவே இருக்க மாட்டேன் வெட்டி வீசிடுவேன் ஜாக்கிரதை” தங்கமணி கண்கள் நிலைகுத்த…

“எனக்கு என் மகளோட சந்தோசம் தான் முக்கியம். அவ தப்பான வழில போக மாட்டாங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு. பார்த்து நடந்துக்கோ” என்றவர்…

சக்திவேல் மற்றும் அம்பிகாமா புறம் திரும்பி வரேன் மச்சான், வரேன் அத்தை என வேஷ்டியை மடித்து கோத்தாவரியிடம் மௌன சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார் ராஜசேகர். தங்கமணியும் அவருடன் நகர…

சக்திவேல் உள்ளே சென்று கதவை டங்கென்று அடைத்துக் கொள்ள…

“மா ரொம்ப தலை வலிக்குது ஒரு சுக்கு காபி ஸ்ட்ராங்கா.. என்றவன் டேய் நீயும் சாப்பிட்டு போ…” என அகரன் தோள் தட்டி தாவி படியேறி அறைக்குள் அடைந்தான் இன்னுழவன்.

 அடுத்த பத்து நிமிடத்தில் சுக்கு காப்பியோடு கோதாவரி அடுக்களை விட்டு நகர்ந்தார்.

“டேய் போடா அவளுக்கு போய் மருந்து போடு, அதான் என் பேராண்டி நீயும் சாப்பிட்டு போன்னு சொல்லிட்டு போனதில்ல தெரியல” என கையை கழுவி அகரிடம் கூறிவிட்டு அப்பத்தா இனிதுழனி இருவரும் நகர்ந்தனர்.

இப்போது அடுகளை தடுப்பு சுவர் பின்புறம் நந்தனா நிற்க அவள் முன் சென்று நின்றான் அகரன்.

 தலை குனிந்து நின்றவளின் நாடி அவன் உயர்த்த அவன் மார்பில் தஞ்சமடைந்தாள் விழிகளில் நீருடன் நந்தனா.

பெருமுச்சுடன் அவளை தன்னோடு இருக்க அணைத்து அவன் நிற்க, அவன் விழி பார்த்தவள் “என்ன விட்ற  மாட்டல்ல…?” குரல் ஏங்க கேட்டவள் கன்னத்தில் படர்ந்த விழி நீரை இதழ் கொண்டு துடைத்தவன், “எப்பவும் விட மாட்டேன்” என்றான் அழுத்தமாய் அவள் உச்சந்தலை ஆழ இதழ் பதித்து.

செங்கோதை மணம் வீசும்… 

Story எப்பிடி இருக்குன்னு ஒரு one line இல்ல ஒரு like மூலமாவது சொன்னா நானும் happy ah ud type பண்ணுவேன் ஃப்ரெண்ட்ஸ் 👍🏻🙂🙂.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!