அத்தியாயம் 31

4.8
(8)

வீட்டின் அழைப்பு மணி ஒலித்திட பிரகாஷ் கொஞ்சம் யாருனு பாரேன் என்ற சுசீலாவிடம் சரிங்கம்மா என்ற பிரகாஷ் கதவைத் திறந்திட ஹாய் பிரகாஷ் என்றாள் எதிரில் நின்ற மங்கை. இந்து நீ எப்படி என்றவனிடம் ஏன் மாமா

நானெல்லாம் உங்க வீட்டுக்கு வரக் கூடாதா என்ன என்றவள் அட தள்ளு மாம்ஸ் பாதையை மறைச்சுட்டு என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

 

ஏய் இந்து நீ எப்போ வந்த என்ற சுசீலாவிடம் என்ன மாமியாரே அம்மாவும், மகனும் இப்படியே கேட்கிறிங்க ஏன் நானெல்லாம் உங்க வீட்டுக்கு வரக் கூடாதா என்ன என்றவளிடம் வாயாடி என்ற சுசீலா எப்போ வேண்டும்னாலும் வரலாம். எப்போ ஊர்ல இருந்து வந்திங்க அப்பா, அம்மா எல்லாம் எங்கே என்றார் சுசீலா.

 

 

அவங்க ஸ்ரீஜாவை பார்க்க போயிருக்காங்க என்றவள் மௌனமாகிட  அவங்க மகளை பார்க்க போயிருக்காங்க இதில் ஏன்டி அமைதியாகிட்ட வாயாடி என்ற சுசீலா அக்கா இங்கே வாங்க யாரு வந்திருக்காங்கனு பாருங்க என்றார் சுசீலா.

 

யாரு சுசீ என்ற மலர்கொடி ஏய் இந்து எப்போ வந்த என்ற  மலர்கொடி அத்தை உங்க பேத்தி வந்துட்டாள் பாருங்க என்று சத்தமிட யாரு ரோனியா வந்துட்டாளா. நாளைக்கு தானே டிஸ்சார்ஜ்னு உதய் சொன்னான் என்று வந்த கல்யாணி எதிரில் நின்றவளைக் கண்டு நீயா இந்து எப்போ வந்த என்றார்.

 

என்ன கிழவி வேற யாரையோ எதிர் பார்த்து ஏமாந்து போனது மாதிரி நிற்கிற என்னைத் தவிர யாரு உன் பேத்தி என்ற இந்திரஜாவிடம் நீ தான்டி என் பேத்தி வா எப்போ வந்திங்க. எங்கே உன் அம்மா, அப்பா என்றார் கல்யாணிதேவி.

 

அம்மா, அப்பா இரண்டுபேரும் ஸ்ரீஜா வீட்டுக்கு போயிருக்காங்க என்ற இந்திரஜா , ஆமாம் உதய் மாம்ஸ் எங்கே என்றாள்.

 

அவன் ஹாஸ்பிடல் போயிருக்கான் என்ற கல்யாணி சரி நீ வா வந்து உட்காரு. முதலில் ஜூஸை குடிடி மருமகளே என்ற மலர்கொடியிடம் உங்க மருமகளா ஆகத் தான் இந்த ஊருக்கே வந்திருக்கேன் என்றாள் இந்திரஜா.

 

என்ன சொல்லுற என்ற சுசீலாவிடம் ஆமாம் ஒன்னுக்கு இரண்டு மாமா பசங்க எலிஜிபிள் பேச்சுலரா இந்த வீட்டில் இருக்கும் பொழுது நான் எப்படி வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறது அதான் கனடால இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்துட்டேன் என்ற இந்திரஜா அத்தை ரொம்ப டயர்டா இருக்கு நான் போயி ரெஸ்ட் எடுத்துக்கிறேன் என்ற இந்திரஜா அர்ச்சனாவின் அறைக்கு சென்றாள்.

 

என்ன அத்தை சொல்லிட்டு போறாள் என்ற மலர்கொடியிடம் இது என்ன புது வில்லங்கம்னு எனக்கும் புரியலை. ஏற்கனவே ஒருமுறை நடந்த விசயமே அவன் இன்னும் மறக்காமல் இருக்கிறான் என்ற கல்யாணிதேவியிடம் அப்பத்தா அதெல்லாம் அண்ணன் மறந்துட்டாரு.

 

அண்ணிக்கு ஒன்னுனா அவர் எவ்வளவு துடிக்கிறாரு அதை உங்க கண்ணால பார்க்கிறிங்க தானே என்ற பிரகாஷிடம் சரி ரோனியோட அப்பா,அம்மா எல்லாம் வந்திருக்காங்களே இவள் வேற வந்திருக்கிறாள் அதான் என்று தயங்கினார் கல்யாணிதேவி.

 

பார்க்கலாம் அத்தை நம்ம மேல தப்பு தானே என்ன தான் கோபம் இருந்தாலும் உதய் கல்யாணம் பற்றி நாம சொல்லி இருக்கனும். சொல்லாமல் விட்டுட்டோம் இவள் மனசுல என்ன இருக்குனு தெரியலை. அண்ணியும் என்ன நினைச்சு வந்திருக்காங்கனும் புரியலை என்ற மலர்கொடியிடம் பார்த்துக்கலாம் விடு சீக்கிரம் சாப்பாடு ரெடி பண்ணு என்றார் கல்யாணிதேவி.

 

 

என்ன ரோனி கிளம்பலாமா என்ற உதயச்சந்திரனிடம் மாமா வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி அக்காவையும், குழந்தையையும் பார்த்துட்டு போகலாமா என்றிட சரி என்றான் உதயச்சந்திரன்.

 

அப்போ சரிங்க மாப்பிள்ளை நாங்களும் கிளம்புறோம் என்ற கணேசனிடம் என்ன மாமா மதியம் தான் வந்திங்க அதுக்குள்ள கிளம்புறேன்னா என்ன அர்த்தம் என்றான் உதயச்சந்திரன்.

 

சொன்னேன்ல மாப்பிள்ளை அறுப்பு வேலை நடக்குது. பயலுக இரண்டு பேருக்கும் அவ்வளவு சூதானம் இல்லை , தேனும் பாவம் தனியா எப்படி எல்லா வேலையும் செய்யும். வேலைக்கு வந்தவங்களுக்கு சாப்பாடு ஆக்கி போடனும் அதான் என்றவர், பிரபுவோட அம்மா வந்துருக்கு அது வினோதாவை பார்த்துக்கும் நாங்க கிளம்புகிறோம். அப்பா, அம்மா, அப்பத்தாகிட்ட சொல்லிருங்க. தப்பா எடுத்துக்க வேண்டாம்னு  வேலை கிடக்கு பிள்ளைக்கு அடிபட்டுருக்குனு சொன்னதால தான் உடனே வந்தோம்.

 

எங்களை விட எங்க பொண்ணை நீங்க நல்லபடியா பார்த்துக்கிறிங்க அப்பறம் என்ன என்ற கணேசன் அவனிடம் விடைபெற்றார்.

 

அம்மா நீயாவது என் கூட இருந்துட்டு போகலாமே என்ற வெரோனிகாவிடம் இல்லை ரோனி புரிஞ்சுக்கோடா உன் அத்தை வராங்கனு தான் நாங்க உடனே போகிறோம் என்ற பூங்கொடி ஜாக்கிரதையா இரு என்று கூறி விட்டு சென்றார்.

 

வெரோனிகா குழந்தையை கொஞ்சியவள் சாரிடா பட்டு சித்திக்கு கை உடைஞ்சுருச்சு இல்லைனா உன்னைத் தூக்கி கொஞ்சிருப்பேன் என்றவள் அத்தான் பார்த்துக்கோங்க என்று கூறி விட்டு கிளம்பினாள் வெரோனிகா.

 

என்ன ரோனி ஏன் டல்லா இருக்க அத்தை உன் கூட இல்லைனா என்ற அர்ச்சனாவிடம் இல்லை அண்ணி அம்மா ஒரு நாள் கூட தங்காமல் அதான் கொஞ்சம் வருத்தம். எக்ஸாம் முடிஞ்சதும் நீ லீவுக்கு ஒரு மாதம் அங்கே போயி தங்கு வெரோனிகா என்ற உதயச்சந்திரனிடம் சரிங்க மாமா என்றவள் அமைதியாக அமர்ந்தாள்.

 

 

அத்தை ரோனியை டிஸ்சார்ஜ் பண்ணி உதய் கூட்டிட்டு வரானாம் இப்போ தான் அர்ச்சனா போன் பண்ணினாள் என்றார் சுசீலா.

 

ஊர்மிளா எங்கே என்ற பிரகாஷிடம் டியூசன்ல இருந்து இன்னும் வரவில்லை என்ற சுசீலா சென்று விட ஊர்மிளாவும் வந்து விட்டாள்.

 

என்ன அண்ணா என்னை தேடுறிங்க என்ற ஊர்மிளாவிடம் இல்லை உன்னைக் காணோமே அதான் என்றவன் உன் ப்ரண்ட் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துட்டு இருக்காங்க என்றான் பிரகாஷ். ரோனி வீட்டுக்கு வராளா என்ற ஊர்மிளா இந்த நிகி, அர்ஜுன்,கிஷோர், விஷால் தான் என்னை படுத்தி எடுத்தாங்க ரோனிக்கு எப்படி இருக்கு, ரோனிக்கு எப்படி இருக்குனு அவங்களுக்கு பதில் சொல்லியே ஓஞ்சு போயிட்டேன் . அப்பாடா ரோனி வீட்டுக்கு வரப்போறாள். நான் போயி அவங்க கிட்ட சொல்கிறேன் என்று ஓடினாள் ஊர்மிளா.

 

என்ன அம்மா சொல்லாமல் , கொள்ளாமல் திடீர்னு வந்திருக்கிங்க என்ற ஸ்ரீஜாவிடம் என்னடி பண்ண சொல்லுற இந்துவுக்கு அப்பா வரன் பார்க்க ஆரம்பிச்சாரு. அவள் மாமா பையனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிவிட்டாள்.

 

உன்னோட கல்யாணத்தில் பிரிஞ்ச நம்ம குடும்பம் அவளோட கல்யாணத்தில் சேரணும்னு சொல்கிறாள். எனக்கு எப்படி அம்மாகிட்டையும், அண்ணன்கள் கிட்டையும் பேசுறதுனு தெரியலை.

 

உதய் முதலில் இந்த கல்யாணத்திற்கு சம்மதிப்பானானு வேற தெரியவில்லை. நீ பண்ணின தப்புக்கு அவள் பிராயச்சத்தம் தேடனும்னு நினைக்கிறாள் என்றார் வசுந்தரா.

 

வசுந்தரா என்ன பேசுற என்ற நெடுஞ்செழியனிடம் இல்லைங்க உண்மையைத் தானே பேசுகிறேன். வலிச்சாலும் அதானே உண்மை என்ற வசுந்தரா குழந்தையை தூக்கிச் சென்றார்.

 

குட்டிமா என்ன பண்ணுறிங்க என்ற வசுந்தராவின் கன்னத்தில் முத்தமிட்டாள் அந்த இரண்டரை வயது குழந்தை உதயநிலா.

 

நிலாம்மா என்று வந்த ஸ்ரீஜாவின் கணவன் தேவச்சந்திரன் தன் மாமனார், மாமியாரைக் கண்டு  வாங்க அத்தை, வாங்க மாமா எப்போ வந்திங்க என்றவன் இந்து எங்கே என்றிட இந்து அண்ணன் வீட்டுக்கு போயிட்டாள் தேவ். மதியம் தான் வந்தோம்  என்ற வசுந்தரா எப்படி இருக்க தேவ் என்றார்.

 

நல்லா இருக்கேன் அத்தை என்றவன் மனைவியை பார்த்தான். அவளது பார்வையை தாங்க முடியாதவன் குழந்தையை தூக்கிக் கொண்டு தன்னறைக்கு சென்றான்.

 

என்னடி இன்னும் நீ மாறவே இல்லையா என்ற வசுந்தராவிடம் எதற்கு மாறனும் நான் என்ன தப்பு பண்ணினேன் மாற என்றவள் ஏதோ சொல்ல வர ஸ்ரீஜா ப்ளீஸ் அமைதியா இரு என்றார் நெடுஞ்செழியன்.

 

 

அம்மா வீட்டுக்கு எப்படி போகுறதுனு தான் தெரியவில்லை. மூன்றரை வருசமா சுத்தமா பேச்சு வார்த்தையே இல்லை இப்போ திடீர்னு போயி நின்னு என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொன்னால் எப்படி ஏத்துப்பாங்க அவள் வேற அந்த வீட்டில் தான் மருமகளா வாழுவேன்னு பிடிவாதம் பண்ணிட்டு இருக்கிறாள் என்றார் வசுந்தரா கவலையுடன்.

 

 

என்னம்மா பேசுறிங்க ஆயிரம் இருந்தாலும் அவங்க உங்க அண்ணன்கள் அதெல்லாம் கண்டிப்பா உங்க ஆசையை நிறைவேற்றுவாங்க என்ற ஸ்ரீஜா சாப்பிட வாங்க என்றாள்.

 

இல்லைடி இப்போ வேண்டாம் என்ற வசுந்தரா எப்படி இருக்க ஸ்ரீஜா என்றார். என்னம்மா கேள்வி இது என்றவளிடம் நான் உன் அம்மா ஸ்ரீஜா என்றவர் மகளையே பார்த்தார்.

 

இருக்கேன் ஏதோ பூமிக்கு பாரமா, என் பிள்ளைக்கு அம்மாவா என்றவள் கண்களைத் துடைத்துக் கொள்ள ஏன்டி அவன் பண்ணின தப்பை மன்னிக்க கூடாதா என்றார் வசுந்தரா.

 

தப்பாம்மா துரோகம் என்ற ஸ்ரீஜா என்னால என்னோட தயா மாமாவை மறக்க முடியலம்மா. அண்ணனை காதலிச்சுட்டு தம்பியோட வாழுறது எல்லாம் சாபம் தெரியுமா.

 

நீங்க அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் மட்டும் தான் உங்களுக்கு என்னோட நிலைமை புரியும் என்றாள் ஸ்ரீஜா.

 

எனக்கு புரியாமல் இல்லைடி ஆனால் நீ அவனை மறந்து தான் ஆகனும். தேவ் தான் உன்னோட புருசன். உன் குழந்தையுடைய அப்பா அதை மாற்ற முடியாது. அது மட்டும் இல்லை இந்திரஜா கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறது உதய்யை தான் என்ற வசுந்தராவைப் பார்த்த ஸ்ரீஜா என்னம்மா பைத்தியக்காரத்தனம்.

 

அவளுக்கு என்ன தலையெழுத்தா இரண்டாம் தாரமா வாழ்க்கைப்பட என்ற ஸ்ரீஜாவிடம் என்ன சொல்லுற ஸ்ரீஜா என்றார் வசுந்தரா.

 

தயா மாமாவுக்கு கல்யாணம் முடிஞ்சு ஆறேழு மாதம் ஆகிருச்சு. சின்ன மாமாவை எங்கேயோ ஒரு பங்க்சன்ல தேவ் பார்த்தானாம். அவர் தான் சொல்லி இருக்காரு என்றாள் ஸ்ரீஜா.

 

என்கிட்ட கூட கல்யாணம் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை என்ற வசுந்தரா கோபமாகிட சொல்லுற மாதிரி நாம நடந்துக்கலையே.

 

 

அம்மா இதில் கோபம் பட எதுவுமே இல்லை. நீங்க வேண்டுமானால் இந்துவோட கல்யாணம் பிரகாஷ் கூட ஏற்பாடு பண்ணுங்க நல்லதே நடக்கும் என்றாள் ஸ்ரீஜா.

 

 

உதய் மனைவி பற்றி எதுனாலும் தெரியுமா என்ற வசுந்தராவிடம் தெரியாதும்மா , தேவ்க்கும் தெரியாது என்ற ஸ்ரீஜா சரி் நான் நிலாவுக்கு சாப்பாடு ஊட்டனும் என்று கிளம்பினாள்.

 

என்ன சுசீ ஆரத்தி ரெடியா என்ற கல்யாணிதேவியிடம் எல்லாம் ரெடி அத்தை என்ற சுசீலா வாசலில் ஆரத்தி தட்டுடன் செல்ல யாருக்கு ஆரத்தி என்று வந்த இந்திரஜா வாசலில் பார்த்திட உதயச்சந்திரன், வெரோனிகா இருவரையும் ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைத்து வந்தார் சுசீலா.

 

என்னடி பார்க்கிற அவள் தான் நம்ம உதய் பொண்டாட்டி என்று மலர்கொடி கூறிட இந்திரஜாவிற்கு உலகமே காலில் நழுவுவது போல ஒரு மாயை ஏற்பட அப்படியே அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து விட்டாள்.

 

 

…..தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!