அந்தியில் பூத்த சந்திரனே – 19

5
(6)

தன்னுடைய குழந்தைதான் அம்ருதாவின் வயிற்றில் வளர்ந்தது என்பதை அறிந்து, அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தான் ஹர்ஷா. அம்ருதாவுக்கும் அதே நிலைதான். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளாமல், சிறிது நேரம் அந்த இனிமையான நிமிடங்களில் மூழ்கி போயினர். இருவரது விழிகளில் இருந்தும் ஆனந்த கண்ணீர் வழிந்த படி இருக்க, தன்னையும் மீறி, ஐ லவ் யூ ஹர்ஷா.. என்றாள் அம்ருதா.

தன்னிடம் அவள் காதலை சொல்லி விட்டாள் என்பதில் அவன் மனம் முழுவதும் தித்தித்தது. அதுவும் உரிமையாக தன்னுடைய பெயரை  சொன்னதில் முகம் முழுவதும் புன்னகையாக, விழிகளில் வழிந்த கண்ணீருடன் அவளை ஏறிட்டான்.

அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன் ஐ லவ் யூ அம்மு.. ஐ லவ் யூ சோ மச் டி.. என்றவன் மென்மையாக அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான்.

அவனுடைய முத்தத்தை இமைகள் மூடி ஏற்று கொண்டவள் அவன் மார்மீது சாய்ந்து தன்னுடைய கரங்களால் அவனை சுற்றி வளைத்தபடி கட்டி கொண்டவள் மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை கூற தொடங்கினாள்.

“தாரிக்காதான் என்கிட்ட இப்போதைக்கு உங்க வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம். எந்த பெத்தவங்களும் இதுக்கு அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க. கரு உன் வயித்துல தங்கினதும், நானே வந்து உன்னோட பேரன்ட்ஸ்கிட்ட பேசி புரிய வைக்கிறேன். அவுங்க படிச்சவங்கதான? என்னோட நிலைமையை சொன்னா புரிஞ்சுப்பாங்க. தேவைப்பட்டா என் ஹஸ்பண்டையும் கூட்டிட்டு வந்து பேசுறேன்னு சொன்னா.”

“அவருக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா வருவாருன்னும் சொன்னா. ஆனா இதை பண்ணலாமா வேண்டாமான்னு ஆரம்பத்துல குழப்பமான மனநிலையில நான் இருக்கும்போது, என்னோட தங்கச்சி நிரஞ்சனாகிட்ட மட்டும் தாரிக்கா சொன்ன விஷயத்தை சொல்லி, என்ன பண்ணலாம்னு கேட்டேன்.

அவளும் அப்போ இருந்த நிலைமைக்கு அதுதான் சரியான முடிவு, அப்பா அம்மாகிட்ட பொறுமையா சொல்லிக்கலாம், நம்ம சொன்னா அவுங்க புரிஞ்சுப்பாங்கனு எனக்கு தைரியம் கொடுத்தா. எனக்கிருந்த பிரச்சனைக்கு நானும் ஒத்துக்கிட்டேன்.

ஹாஸ்பிட்டல்ல மெடிக்கல் ப்ராசஸ் பண்ணும்போதும் நிரஞ்சனா என்கூடதான் இருந்தா. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தாரிக்காகிட்ட எப்போ வந்து எங்க வீட்டுல பேச போற? எனக்கு ரொம்ப பயமா இருக்குனு கேக்கும்போதெல்லாம், எனக்கே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு இன்னொருநாள் பார்க்கலாம்னு சொல்லிடுவா.

உன்னோட ஹஸ்பண்டும் கூட வருவாருதானே? ஏன்னா.. நீ தனியா பேசுறதை விட, இரண்டு பேரும் சேர்ந்து வந்து பேசினா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்னு கேட்டேன். அவளும் என்  ஹஸ்பண்ட் கிட்ட சொல்லியிருக்கேன். ரொம்ப சந்தோஷப்பட்டாரு ஆனா இப்போ ஃபாரின்ல இருக்கறதுனால அவர் வந்ததும் உங்க வீட்டுல பேசுறேன்னு சொல்லி, இப்போ வரேன் அப்போ வரேன்னு இழுத்தடிச்சுட்டே இருந்தா. ஆனா கடைசி வரைக்கும் வரவே இல்லை.”

என்றதும் ஹர்ஷாவோ மனதுக்குள் ‘அடி பாவி.. எப்படியெல்லாம் பொய் சொல்லிருக்கா?’ என்று எண்ணிக்கொண்டான்.

ஐந்து மாதம் எப்படியோ சமாளிச்சுட்டேன். ஆனா அதுக்கப்புறமும் என்னால சமாளிக்க முடியல. நானே எங்க வீட்டுல உண்மைய ஒத்துக்கிட்டேன். எங்க அம்மா என்னை கோபத்துல அடிக்கவே செஞ்சுட்டாங்க. அப்பா நான் எது செஞ்சாலும் எனக்கு சப்போர்ட் பண்ணுவாரு, அவர்கூட அன்னைக்கு என்னை ரொம்ப மோசமா திட்டிட்டாரு.

உடனே அப்பா தாரிக்கவுக்கு கால் பண்ணி பேசினாங்க. அவளோட நிலைமை பத்தி சொன்னவ, பணம் தரதாவும் சொன்னா. ஆனாலும் எங்க வீட்ல யாரும் சமாதானம் ஆகல. மேல மேல கோபம்தான் பட்டாங்க.

தாரிக்காகிட்ட “யாருக்கு வேணும் உன்னோட பணம்? எங்களுக்கு தெரியாம, எங்ககிட்ட எதுவுமே கேக்காம, நீ எப்படிமா எங்க பொண்ணுக்கு இதையெல்லாம் பண்ணலாம்னு” கேட்டு அவளை ரொம்ப திட்டிட்டாரு. அவரை சமாதானம் பண்ணதான் தாரிக்கா ஃபோனை உங்ககிட்ட கொடுத்து அப்பாகிட்ட பேச வச்சா.

நீங்க அப்போ எவ்வளவு நல்லா பேசினீங்க? குழந்தைன்னா எவ்வளவு பிடிக்கும், அதுக்காக எவ்வளவு ஏங்குறேனெல்லாம் சொன்னீங்க? குழந்தை பிறந்ததும் எல்லாமே சரி ஆகிடும், டெலிவரி ஆன அடுத்த நிமிஷம், குழந்தையை நாங்களே வாங்கிப்போம், எங்களுக்கு இது நீங்க செய்யுற மிகப்பெரிய உதவினெல்லாம் பேசுனீங்களே? ” என்றதும்,

“நானா? நான் எப்போ அப்படியெல்லாம் பேசினேன்?” என்று அதிர்ந்தவன், “நான் பேசவே இல்லை. இதப்பத்தியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது.” என்றதும், இப்போது அதிர்ந்து விழிப்பது அம்ருதாவின் முறையாயிற்று.

“அப்போ அன்னைக்கு ஃபோன்ல பேசினது நீங்க இல்லையா? ஆனா அதுக்கப்புறம் கூட இரண்டு முறை பேசினீங்களே?” என்றாள்

“இப்படி ஒரு விஷயம் நடந்ததே எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா என் குழந்தையை பிரிஞ்சு நான் இவ்வளவு நாள் இருந்திருப்பேனா அம்மு?” என்று கேட்கவும்,

‘அவன் கூறுவதும் உண்மைதானே?. தன்னுடைய குழந்தையாகவே நினைத்து வளர்க்கிறேன் என்றதற்க்கே ஆத்யாவின் மீது இத்தனை பாசம் வைத்தவன், உண்மையிலேய அவள் தன்னுடைய குழந்தைதான் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் அப்படி விட்டிருக்க மாட்டான்’ என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

அதில், “நீங்க சொல்றதும் சரிதான். தெரிஞ்சிருந்தா பாப்பாவை நீங்க அப்படி விட்டிருக்கவே மாட்டீங்க” என்றதும் தன்னை புரிந்து கொண்டதில், அவளை மேலும் தன்னுடன் சேர்த்து அணைத்தவன்,

‘இதுவும் அந்த தாரிக்காவோட வேலையாதான் இருக்கும். எவன்கூடவோ போனாளே, அவனை வச்சுதான் பேச வச்சிருப்பா. ச்சே.. எவ்வளவு கேவலமான பொண்ணா இருந்திருக்கா? ஆனா இதெல்லாம் ஏன் செஞ்சா?’ என்றெண்ணி கொண்டிருக்கும்போதே அவள் மேலும் தொடர்ந்தாள்.

“தாரிக்காகிட்ட எந்த பணமும் வாங்க கூடாதுன்னு அப்பா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. அவரோட பி.எஃப் ஏற்கனவே கேன்சல் பண்ணிருப்பாரு போல. அந்த பணம் வந்ததும் வெளில இருந்த கடன் எல்லாத்தையும் அடைச்சுட்டோம். பேங்க்ல என் பேர்ல இருந்த கடன் மட்டும் அப்படியே இருந்துச்சு. அதை நானும் அப்பாவும் மாசம் மாசம் கட்டி இப்போ கிட்டத்தட்ட முடிச்சுட்டோம். ஆனா அந்த நேரத்துல,

நீங்களும் தாரிக்காவும் வந்துடுவீங்கன்ற நம்பிக்கையில எங்க வீட்ல எல்லாரும் காத்துட்டு இருந்தோம். ஆனா ஏழாவது மாசத்துக்கு அப்புறம் தாரிக்கவை காண்டாக்ட் பண்ணவே முடியல. அவ கூட்டிட்டு போன ஹாஸ்பிடல்க்கு போய் விசாரிச்சிச்சோம்.

 ஆனா அவங்களுக்கும் எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. எப்படியோ ஹாஸ்பிடல்ல அவ கொடுத்த அட்ரஸ்ச வாங்கிக்கிட்டு அவளை தேடி போனப்போ, அப்படி ஒரு ஆளே இங்க இல்லைனதும், நாங்க ரொம்ப ஒடஞ்சு போய்ட்டோம்.  என்ன பண்றதுனு எங்களுக்கு ஒன்னும் புரியல. உங்களை பத்தியும் எங்களுக்கு எந்த டீடெயில்ஸ்சும் தெரியாது. தாரிக்கா மேல இருந்த நம்பிக்கைல நாங்க எதுவும் கேட்டுக்கல.

ஊர்காரங்க, சொந்தக்காரங்கன்னு எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு போச்சு. எல்லாருமே ராஜேஷ் சொன்ன மாதிரி நான் வேற ஒருத்தன் கூட இருந்துதான் குழந்தையை சுமக்கிறேன்னு ரொம்ப மோசமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க எத்தனை பேர்கிட்ட நிரூப்பிக்க முடியும்? ஒரு கட்டத்துல சளிச்சுப் போய் விட்டுட்டோம். என்னால எங்க அப்பா அம்மாவுக்குதான் ரொம்ப கஷ்ட்டம் என்று கண்ணீர் சிந்தியவளை பார்க்கையில்

 ஹர்ஷாவோ ‘என் அம்மு எவ்வளவு கஷ்ட்டங்களை தனியா ஃபேஸ் பண்ணிருக்கா?’ என்று மனம் வெதும்பியவன், “எல்லாம் சரி ஆகிடும்டி. இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அவளது தலை முடியை கோதி விட்டான்.

“நாட்களும் போச்சு, பிரசவ வலியும் வந்துச்சு, அதே ஹாஸ்பிட்டல்க்குதான் போனோம். டெலிவரி டேட் வந்ததால குழந்தை பிறந்தா தாரிக்கா வரலைன்னாலும் நீங்களாவது வருவீங்களான்னு காத்துட்டு இருந்தோம். ஆபரேஷன் பண்ணிதான் குழந்தையை எடுத்தாங்க. ஆனா ஆத்யா பிறந்ததுக்கு அப்புறமும் நீங்க இரண்டு பேருமே வரவே இல்ல.

அதனால ஹாஸ்பிடல்ல இருந்து சைல்ட் வெல்ஃபேர்க்கு கால் பண்ணிட்டாங்க. அவங்க வந்து லீகள் பேரண்ட்ஸ் இல்லாததால குழந்தையை கவர்ண்மென்ட்கிட்ட ஒப்படைக்க சொன்னாங்க. எனக்கு மனசெல்லாம் பதறிடுச்சு.

ஆத்யாவோட முகத்தை பார்த்தப்போ என்னால அவளை விட்டுக்கொடுக்கவே முடியல. அவங்ககிட்ட  குழந்தையை நானே வளர்த்துகிறேன்னு கேட்டு அழுதேன். அதை பார்த்த அப்பாவும், அம்மாவும் மனசு கேக்காம அந்த ஆபீஸர்கிட்ட பேசினாங்க.

டெம்ப்ரவரி கார்டியனாவாவது நாங்க இருக்கோம் குழந்தையை எங்ககிட்டயே கொடுத்துடுங்கனு அப்பா கேட்டாரு. அம்மாவும் கவர்ண்மென்ட்கிட்ட கொடுக்குறதுக்கு பதிலா எங்ககிட்ட கொடுத்தா நாங்க நல்லா பார்த்துப்போம் சார்னு கேட்டாங்க. யோசிச்சு பார்த்தவங்க, டெம்ப்ரவரி கார்டியனா எங்களை இருக்க சம்மதிச்சு ப்ரொசீஜர் எல்லாத்துலயும் சைன் வாங்கி முடிச்சு ஆத்யாவை எங்ககிட்ட கொடுத்தாங்க.”

என்றதும் ஹர்ஷாவின் மனம் வலித்தது. ‘அப்போதே தெரிந்திருந்தால்? உடனே போய் ஆத்யாவை நான் வாங்கி இருப்பேனே? அம்ருதாவும் இவ்வளவு கஷ்ட்டங்களை அனுபவித்திருக்க மாட்டாள்.’ என்று எண்ணி கொண்டான்.

ஆரம்பத்துல என்னைக்காவது நீங்களாவது வருவீங்கன்னு வீட்ல ரொம்ப எதிர் பார்த்தாங்க. ஆனா எனக்கு மட்டும் யாரும் இனி வரவே வேண்டாம்னு தோணுச்சு. ஒரு கட்டத்துக்கு மேல அவங்களுக்கும் புரிஞ்சுடுச்சு, இனி யாரும் வரபோறது இல்லைன்னு. என்று கூறி கொண்டிருக்கும்போதே வெளியே தாரிக்காவின் சத்தம் கேட்டது.

“ஆத்யாவோட லீகள் மதர் நான்தான். ஒழுங்கா குழந்தையை என்கிட்ட கொடுத்துடுங்க. சட்டப்படி பெண் குழந்தை அம்மா கூடாதானே இருக்கணும்?” என்று கத்தி கொண்டிருக்க,

“இவ்வளவும் பண்ணிட்டு, எப்படி கத்திட்டு இருக்கா பாரு. இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? என்றவன் அவளை நோக்கி சென்றவனுக்கு சட்டென்று புத்தியில் ஒரு விடயம் தோன்ற, அம்ருதா புறம் திரும்பியவன்,

“ஆத்யாவை உன்னோட எக் செல்லை யூஸ் பண்ணிதான உருவாக்கினாங்க? ஏன்னா தாரிக்காவோட மெடிக்கல் செக்அப் பண்ணின ஃபைலை இங்கேயே விட்டுட்டு போய்ட்டா. அதுலையே அவளோட பிரச்சனைகள் எல்லாமே தெரிஞ்சுது” என்றதும்,

“ஆம்” என்று தலையாசைத்தவள்

“நான் ஒருநாள் அவகிட்ட கேட்டேன். உன்னோட எக் செல்லே யூஸ் பண்ணிருக்கலாமே? அப்போ குழந்தையை சுமக்குற ஆளா மட்டும் நான் இருப்பேன். எனக்கும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதேன்னு.

ஆனா ஒரு குழந்தையை உருவாக்குற அளவுக்கு குவாலிட்டியான எக் செல்ஸ் எனக்கில்ல. அதனாலதான் உன்னைவே முழுசா யூஸ் பண்றேன். இதுல உனக்கு ஏதும் பிரச்சனையான்னு கேட்டா.

 நான் அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டேன். அதனால தாரிக்காவுக்கும் ஆத்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறி கோண்டிருக்கும்போதே வேகமாக உள்நுழைந்தாள் தாரிக்கா.

“என்ன டி சொன்ன? எனக்கும் ஆத்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? உனக்கும் அவளுக்கும்தான் எந்த சம்பந்தமும் இல்ல. லீகளா நான்தான் அவளோட அம்மா. என்று கூறி கையிலிருந்த ஆதாரங்களை அவர்களின் முன்னிலையில் தூக்கி எரிந்தாள் தாரிக்கா.

இதெல்லாம் ஹாஸ்பிடல் ப்ரொசீஜர் நடக்கும் முன்னாடி, குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் உனக்கும் குழந்தைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லைன்னு நீ கையெழுத்து போட்டு கொடுத்த பேப்பர்ஸ்.

ஒழுங்கா என் குழந்தையை என்கிட்டயே கொடுத்திடு, இல்லனா நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்.” என்றவள் சொன்னதை செய்வேன் என்பது போல அங்கிருந்த சோஃபாவில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!