ஆத்யாவை வாங்காமல் எங்கேயும் போக மாட்டேன் என திமிராக சோபாவின் மீது அமர்ந்து கொண்டாள் தாரிக்கா. இதை பார்த்த அருதாவிற்கு உள்ளத்தில் பயம் சூழ்ந்து கொண்டது. ‘எங்கே தன் பிள்ளையை வாங்கி கொண்டு போய் விடுவாளோ?’ என்ற பதறியவளாக அவள் நிற்க, ஆனால் அதற்க்கு நேர் மாறான மன நிலையில் நின்றிருந்தான் ஹர்ஷா.
‘இவளால் என்ன செய்து விட முடியும்? என்ன நடந்தாலும் தன் மகளை விட்டுவிடவே கூடாது’ என்று எண்ணியவனோ, தாரிக்காவிடம் நெருங்கி
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம என் பிள்ளைன்னு உரிமை கொண்டாடிட்டு வந்து நிப்ப? நீ பண்றதெல்லாம் உனக்கே கேவலமா இல்ல?” என்று கேட்டிட,
“எனக்கு என்ன கேவலம்? நான் என்னோட குழந்தையைதான கேக்குறேன். ஆத்யாவை வாங்காம நான் இங்கருந்து நகர்றதா இல்ல”
“இப்போ பிள்ளை வேணும்னு வந்து நிக்கிறவ குழந்தை பிறக்குறப்போ எங்க போன? அப்போவே ஹாஸ்பிடல் போய் குழந்தையை வாங்கி இருக்க வேண்டியது தானே?”
“அப்போதான் டைவெர்ஸ் பண்றதா முடிவாகி எல்லாமே முடிவுக்கே வந்துடுச்சே. அந்த நேரத்துல குழந்தையை வாங்கிட்டு போய் ஹும்.. நான் என்ன செய்ய போறேன்?” என்று நக்கலாக கேட்டிட,
“இப்போ மட்டும் குழந்தையை வாங்கிட்டு போய் செய்ய போற?”
“அதெல்லாம் உன்கிட்ட சொல்லணும்ன்ற அவசியம் எனக்கில்ல. சட்டப்படி நான்தான் அவளோட அம்மா. ஒழுங்கா என்கிட்ட ஆத்யாவை கொடுத்துடுங்க, நான் போயிட்டே இருக்கேன்.” என்றதும்
“அப்படியெல்லாம் போக முடியாது.” என்று கூறி கொண்டிருக்கும்போதே பார்த்திபனும், கீர்த்தனாவும் ஆத்யாவுடன் வந்து விட்டனர்.
அவர்களிடமிருந்து தாரிக்கா குழந்தையை பிடுங்க முயற்சிக்க, ஹர்ஷா வேகமாக வந்தவன் அவளது கரத்தை பற்றி இழுத்து கன்னத்திலேயே விட்டான் ஒரு அறை.
“அதில் ஐந்தடி தள்ளி போய் விழுந்தவளது கன்னம் முழுவதும் சிவந்து விட்டது. அவளது முகத்துக்கு நேராக குனிந்தவன், என் பொண்ணுமேல கைய வச்ச, உன்னை இங்கேயே குழி தோண்டி புதச்சுடுவேன். ஜாக்கிரதை.” என்று ஒற்றை விரலை உயர்த்தி எச்சரிக்கை விடுக்க,
“அவ்வளவு பாசம் இருந்தா, அதோ நிக்கிறாளே அம்ருதா. அவளை இந்த வீட்டை விட்டு வெளில அனுப்பிட்டு திரும்ப என் கழுத்துல தாலி கட்டு. நம்ம சேர்ந்து வாழ்ந்தா ஆத்யா நம்ம கூடவே இருப்பாதானே? என்று அவள் கூறியதை கேட்டதும் குடும்பமே அதிர்ந்து விழித்தது. அவள் என்ன திட்டத்தோடு வந்திருக்கிறாள் என்பது தெள்ளதெளிவாக புரிந்து போக,
‘என்ன பேசுகிறாள் இவள்? ஐயோ! இப்படி பட்ட எண்ணத்தில் தான் இங்கு வந்திருக்கிறாளா?’ என்று அம்ருதாவின் விழிகள் விரிந்தன.
“கீர்த்தனாவோ, அடச்சீ.. நீயெல்லாம் ஒரு பொண்ணா? உன்னால எப்படி டி இப்படியெல்லாம் பேச முடியுது?” என்று கேட்டிட,
“நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு? டைவர்ஸ் ஆனவங்க திரும்ப சேர்ந்து வாழுறது இல்லையா என்ன? அதுமாதிரிதான் இதுவும்” என்றதும்,
பார்த்திபனோ ‘இப்படி ஒரு பெண்ணை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை’ என்பது போல் முகத்தை திருப்பி கொண்டார்.
ஹர்ஷா எந்த பதிலும் கூறாமல் அமைதியாக நிற்பதை பார்த்த அம்ருதாவுக்குதான் மனதில் பதட்டம் அதிகம் ஆனாது. திருமணம் ஆகி மூன்று மாதமே ஆன நிலையில் மீண்டும் தன் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்று அஞ்சியவளாக ஹர்ஷாவின் பதிலுக்காக காத்திருந்தாள்.
ஹர்ஷா எந்த பதிலும் கூறாமல் நிற்பதை தனக்கு சாதாகமாக பயன்படுத்தி கொண்டவள், எழுந்து நேராக அம்ருதாவிடம் சென்றாள். “இன்னும் எதுக்குடி நீ இங்கையே நிக்கிற? முதல்ல என் வீட்டை விட்டு கிளம்பு. எங்களுக்குள்ள இருக்க பிரச்சனைய நாங்க பேசி தீர்த்தத்துப்போம்” என்றவள் அவளது கரத்தினை பற்றி இழுக்க,
“என்னை விடு.., என்னை விடு..” என்று என்று அம்ருதா விலக முயற்சிக்க அவள் விடுவதாக இல்லை. அறையை விட்டே வெளியேறிய நொடி சட்டென இருவருக்கும் இடையில் வந்த ஹர்ஷாவோ அம்ருதாவை தனது அருகில் இழுத்து நிறுத்தி கொண்டவன், தாரிக்காவை தரதரவென இழுத்து சென்று வீட்டிற்கு வெளியே நிறுத்தினான்.
“என்ன சொன்ன? உன்னோட வீடா? இது எங்க வீடு. அம்ருதாவோட வீடு. உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. உனக்கு இதுதான் கடைசி இனிமேல் எங்க வீட்டுப்பக்கம் வந்த, உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன்” என்றவன் கதவை இழுத்து அறைந்து சற்றினான்.
வெளியே நின்றவளோ என் பிள்ளையை “எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும். என்னை வெளில அனுப்பிட்டா.. எல்லாம் முடிஞ்சதுன்னு நினைக்காதீங்க. கூடிய சீக்கிரம் நான் சொன்னதை செஞ்சு காட்டுவேன்” என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்.
அவள் சென்ற பிறகு வீடே ஒரு நிமிடம் நிசப்தமாக மாறியது. வேலைகாரர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது போல் நடந்து கொண்டாலும் கவனித்து கொண்டுதான் இருந்தனர். ‘தங்கள் வீட்டு மானம் இப்படியா போக வேண்டும்?’ என்று மனம் வெதும்பினார் கீர்த்தனா.
ஹால் சோபாவில் அமர்ந்திருந்த குடும்பத்தினர் ஒவ்வொருவர் முகத்திலும் ஆத்யா தங்கள் வீட்டு குழந்தை என்ற உண்மை தெரிந்ததில் அளவற்ற மகிழ்ச்சி இருந்தாலும், இவ்வளவு நேரம் கீர்த்தனா நடத்திய பிரச்சனையின் தாக்கமும் இருந்தது.
ஒன்றுமே அறியாத ஆத்யாவோ தன் அன்னை அம்ருதாவின் விழிகளில் இருந்து வழியும் உவர் நீரை சோகமான முகத்துடன் துடைத்து விட்டாள். அதை பார்த்த கீர்த்தனா அவர்களுக்கோ தன் பேத்தியை அள்ளி அனைத்து கொஞ்ச வேண்டும்போல் இருந்தது.
ஆனால் தாரிக்கா வரும் முன்பு வரை ‘ஆத்யா இந்த குடும்பத்திற்கு வேண்டாம் என எவ்வளவு கடுமையாக பேசிவிட்டேன்? இப்போது எப்படி என் பேத்தி என்று உரிமை கொண்டாடுவது?’ என்று எண்ணிவர் வந்த நாளிலிருந்து ஆத்யா தன்னை பார்த்து சிரித்ததும், தன்னிடம் பேச வந்ததும், அவளை தான் நிராகரித்ததையும் நினைத்து தன்னை தானே நொந்து கொண்டார்.
சில நிமிடம் அமைதிக்கு பிறகு பேச தொடங்கினார் பார்த்திபன்.
“இதோ பாரும்மா அம்ருதா. உன் நிலைமை எனக்கு புரியுது. அந்த தாரிக்காவை நெனச்சு நீ பயப்படாத. அப்படியெல்லாம் உன்னை விட்டுட மாட்டோம். நீங்க போய் உங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க” என்றதும்
தனக்கு சாதாகமாக பேசும் தன் மாமனாரை, நன்றி கலந்த பார்வையுடன் பார்த்தவள் “தேங்க்ஸ் மாமா.” என்று அங்கிருந்து எழுந்து செல்ல ஹர்ஷாவும் அவளுடனே சென்று விட்டான்.
பார்த்திபனை கலங்கிய விழிகளுடன் பார்த்தார் கீர்த்தனா. “ஆத்யா நம்ம பேத்திங்க. இது தெரியாம நான் ஏதேதோ பேசிட்டேனே. இனிமேல் அம்ருதா முகத்துல எப்படி முழிப்பேன்?” என்றவர் கண்ணீர் கன்னம் தாண்டி வழிய,
“இத்தனை நாளா எத்தனை முறை உனக்கு நான் படிச்சு படிச்சு சொல்லியிருப்பேன். எதுவும் பேசாத, நம்ம பையனே ஏத்துக்கும்போது உனக்கு என்ன பிரச்சனைன்னு. நீ கேட்டியா? சும்மா பணம் போகுதே போகுதேன்னு அடிச்சுகிட்ட? இப்போ எதுக்கு வருத்தப்படுற? அவ நம்ம வாரிசுனதும் மனசு தவிக்குதோ..?
உனக்காகலாம் நான் எதுவும் பேச போறது இல்ல கீத்து. நீ ஆரம்பிச்சு வச்ச பிரச்சனையை நீதான் முடிக்கணும்” என்றவர் எழுந்து தன் அறைக்கு சென்று விட்டார்.
இங்கு வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தாள் அம்ருதா. அவளிடம் வந்த ஹர்ஷாவோ அவள் தோள் மீது கை வைக்க, அதை கோபமாக தட்டி விட்டவள் வேறு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள். ஆத்யாவும் உறங்கி போயிருக்க, அவளை மெத்தையில் கிடத்தியவள் கோபமாக பால்கனியில் சென்று அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள்.
அவளை நோக்கி சென்றவன் இதழின் ஓரம் புன்னகை வைத்தவாறு, பின்னாலிருந்து அவளை அணைத்து கொண்டான். மீண்டும் அவனை விலக்கி விட, அதில் மேலும் தன்னோடு இறுக்கி அணைத்தவன் அவள் காது மடலின் அருகில் சென்று “என்ன கோபம் என் அம்மு பாப்பாவுக்கு?” என்று கேட்டிட,
“முதல்ல என்னை விடுங்க, என்னை வீட்டை விட்டு வெளில போக சொல்லி அவ அவ்வளவு பேசுறா, நீங்க எதுவுமே பேசாம அமைதியா இருக்கீங்க?” என்று கோபமாக கேட்க,
“அவ ப்ளான் என்னனு முழுசா தெரிஞ்சதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு இருந்தேன் அம்மு. உன்னை என்ன அப்படியா விட்டுடுவேன் நான்?” என்றவன் அவளது முகத்தை தன்னை நோக்கி திருப்பியதும் கண்ணீருடன் நிற்பவளை பார்த்தவன் கலங்கி போனான்.
“ஹேய்… என்னாச்சுடி? அதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சுல?”
“நான் ஒரு நிமிஷம் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? எங்க ஆத்யாவையும் என்னையும் பிரிச்சு, எங்க அம்மா வீட்டுக்கே என்னை அனுப்பிடுவீங்களோன்னு எல்லாம் நினைச்சு பயந்துட்டேன்” என்றதும்
“நான் போய் அப்படியெல்லாம் செய்வேனா அம்மு. நீயும் என் மகளும்தானடி என்னோட வாழ்க்கையில மறுபடியும் சந்தோஷத்தை கொண்டு வந்தீங்க. உங்களை விட்டு இனி என்னால இருக்கவே முடியாது” என்று உணர்ந்து கூறினான்.
அதன் பிறகும் ஏதோ சிந்தனையிலேயே இருந்தவளை பார்த்து “இன்னும் என்னடி? என்னை நம்பவே மாட்டியா?” என்று கேட்டிட,
“அது இல்ல, ரொம்ப நேரமாவே என் மனசுல வேற ஒரு சந்தேகம் ஓடிக்கிட்டு இருக்கு” என்றிட,
“எல்லாமே சரிதான். ஆனா நடந்து முடிஞ்ச எதுவுமே உங்களுக்கு தெரியாதுனா உங்களோட குழந்தை எப்படி என்னோட வயித்துல?” என்று தயக்கத்தோடு கேட்டவளை பார்த்து,
“அதுவா… நான்தான் ஏற்கனவே சொல்லி இருந்தேனே. குழந்தை பிறக்காததுக்கு நான்தான் காரணம்னு தாரிக்கா சொன்னான்னு. அந்த டைம்ல அவ ஃப்ரெண்ட்டோட ஹாஸ்பிடல் போய் செக் பண்ணினா. அப்போ டெஸ்ட்க்காக எடுத்த ஸ்பெர்ம் யூஸ் பண்ணிருப்பா” என்றதும் அவள் முகம் தெளிவாகியது.
“இன்னும் வேற எதுவும் சந்தேகம் இருக்கா பொண்டாட்டி?” என்று கிண்டலாக கேட்டிட அதெல்லாம் ஒன்னும் இல்ல என்றவளோ மீண்டும் முகத்தை திருப்பி கொள்ள,
“ஹ்ம்ம்ம்.. மறுபடியுமா? இப்போ என்ன?” என்றான் அவள் கோபத்தின் காரணம் புரியாமல்.
“என்ன இருந்தாலும் தாரிக்கா என்னை வீட்டை விட்டு வெளில போன்னு சொல்லும்போது நீங்க எனக்காக பேசியிருக்கணும்” என்றதும்
‘இது வேலைக்கு ஆகாது, உன்னை எப்படி சமாதானம் பண்ணனும்னு எனக்கு தெரியும்’ என்று எண்ணியவன் அவள் முகத்தை தன்னை பார்க்கும்படி திருப்பியவன் பட்டென அவள் இதழை கவ்வி கொண்டான்.
என்னவென்று யோசிக்கவே நேரமில்லாமல் அவன் செய்த செயலில் ஹர்ஷாவை தன்னை விட்டு பிரிக்க முயற்சி செய்து முடியாமல் போகவே, அவன் மார்பிலேயே பட் பட்டென அடிக்க, அது அவனுக்கு வலித்தால்தானே?
அவன் முத்தமிடுவதில் மட்டும் தீவிரமாக இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவனை அடிப்பதை நிறுத்தியவள் தானும் அவன் முத்தத்தில் பங்கேற்க தொடங்கினாள். இதழும் இதழும் சண்டையிட்டு கொள்ள இவர்களது சண்டை காற்றோடு கரைந்து காணாமல் போனது.