நாட்கள் அதன் போக்கில் செல்ல ஹர்ஷாவும் அம்ருதாவும் சிறந்த தம்பதிகளாக, காதலர்களாக, நண்பர்களாக மாறி போயினர். எந்த நேரமும் ஒருவர் மனம் இன்னொருவரை தேடி கொண்டே இருந்தது. ஹர்ஷா ரெஸ்டாராண்டில் வேலை பார்க்கும் போதும், பிஸியான நேரத்திலும் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் அம்ருதாவிற்கு அழைத்து பேசி விடுவான்.
கல்லூரி காலத்து காதலர்கள் போல இருவரும் காதல் நோய்க்கு ஆட்பட்டு ஒருவருக்கு மற்றொருவர் மருந்தாகி கொண்டிருந்தனர். கீர்த்தனாவும், பார்த்திபனும் எந்த நேரமும் தன் பேத்தி ஆத்யாவுடன் கொஞ்சிக்கொண்டு, அவளுடன் சரிக்கு சமமாய் விளையாடிக்கொண்டு இனிமையாய் பொழுதை கழித்து கொண்டிருந்தனர். இருவரும் சேர்ந்து ஆத்யாவிற்கு தோட்டத்தில் பூக்கள், பறவைகளை காண்பித்து உணவூட்டி கொண்டிருக்க,
இங்கு ஹர்ஷாவோ தனது அறையில் அம்ருதாவின் அழகை இமை சிமிட்டாமால் ரசித்தபடி அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
அடர் சிவப்பு நிறத்தில், வெள்ளி வண்ண சரிகை வைத்து நெய்யப்பட்ட புடவையில் அவள் தேவலோக கன்னிகையாய் மாறி நிற்க, நீண்ட நேரமாய் கண்ணாடி முன்பு தன்னை அழகு படுத்திகொண்டிருக்கும் தன் மனைவியின் ஒவ்வொரு அங்கத்தின் வளைவு நெளிவுகளிலும் தன்னை தொலைத்து அதில் கிறங்கியே போனவன், இதற்கு மேலும் தாங்காது என்று அவளை நோக்கி சென்றான்.
அவள் பின்னால் வந்து நின்றவன் பார்வை மோக பார்வையாக மாறி போக, அவளது மென்மையான வெற்றிடையில் தன்னுடைய வன்மையான கரத்தை பதித்து அழுத்தினான். அவன் கரம் கொடுத்த வெப்பத்தில் அம்ருதாவிற்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வில் சிலிர்த்து அடங்கினாள்.
அந்த உணர்வை தாள முடியாமல் பின்னோக்கி அவன் மீதே சரிந்தவள், “ஹ.. ஹர்ஷா.. எ.. என்ன பண்றீங்க? என்னை விடுங்க” என்றவளது வார்த்தைகள் தந்தியடிக்க,
“என்ன பண்றேன்னு பார்த்தா தெரியல?” என்று அவள் கழுத்தோரம் உதடுகளை உரசியவாறே அவன் கேட்க, அவனது விரல்கள் ஊர்ந்து சென்று அவளது நாபி குழியில் தஞ்சமடைந்தது. மற்றைய கரமோ எக்குத்தப்பான மேடு பள்ளங்களை அழுந்த பற்றியது.
ஏதேதோ பேச உதடு துடித்தாலும் அவன் கரங்கள் செய்யும் வித்தையில் ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை அம்ருதாவிற்கு. தன்னை வீணையென கருதி விரல்களால் மேவியவனின் ஜாலத்தில் மெய் மறந்து போனவள், தன்னை மறந்து அவனுடன் இழைய தொடங்கினாள்.
அவளது கூந்தலை எடுத்து முன்னாள் போட்டவன் முதுகில் உதட்டால் ஊர்வலம் நடத்தவே, இதற்கு மேல் நிற்க முடியாமல் கால்கள் வழுவிழந்ததை போல அவள் சரிய தொடங்க, தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்தவன்,
“காலைலயே ஏன்டி என்னை இப்படி பாடாப்படுத்துற? ரொம்ப நல்லவனா இருந்தேன்டி. என்னை எந்த நேரமும் இப்படி யோசிக்கிற மாதிரி மாத்திட்ட? நீதான்டி என்னை கெடுக்குற” என்றவனோ ஒரே சுழற்றில் அவளை முன் பக்கமாக திருப்பி அவள் செவியோரம் மூச்சு காற்று தீண்டும் நெருக்கத்தில் சென்றவன், கிறக்கமான குரலில் “கொல்றடி அம்மு..” என்றான்.
அவன் வார்த்தைகளாலும், செயல்களாலும் நாணம் வந்து ஒட்டிக்கொள்ள ஹர்ஷாவை இறுக அணைத்து கொண்டவள் அவன் திண்ணிய மார்பில் முகம் புதைத்தாள்.
தன் அம்முவின் தாடையை பிடித்து உயர்த்தி தன்னை பார்க்க செய்தவன், “நீ எனக்கு வேணும்.. இப்போவே.. உனக்கு ஓகே தான?” என்றவனின் விழிகள் கூட மோகத்தால் சிவந்து இருந்தது. அவன் கேள்விக்கு வார்த்தைகளால் அல்லாமல் இமை மூடி தனது சம்மதத்தை தெரிவித்தாள் அம்ருதா.
அவள் சம்மதம் கிடைத்த அடுத்த நொடி அவளது செவ்விதழின் மேல் தனது தடித்த அதரங்களை பொருத்தியவன் தன் இதழ் கொண்டு அதை ஆளவும் துவங்கினான்.
அவளை இரு கரத்திலும் ஏந்தியவன் முத்தமிட்டபடியே கட்டிலுக்கு செல்ல அவன் கழுத்தை சுற்றி பூ மாலையாக கரங்களால் கோர்த்து கொண்டாள். அவனது முகத்தில் தெரிந்த உணர்வுகளை பார்த்தவளுக்கு இதய துடிப்பு அதிகரித்தது.
அம்ருதாவை படுக்கையில் கிடத்தியவன் பால் போன்ற மேனியில் மேலாடையை விலக்கி முத்தமிட்டு முத்தமிட்டு உதடுகளால் தீண்டி, அவள் உணர்வுகளை தூண்டி விட்டவனை தன்னோடு சேர்த்து அணைத்தவள் வெட்கம் துறந்து தன்னை மறந்து அவனுடன் இழைய துவங்கினாள்.
“அம்மு.. ஐ லவ் யூ டி” என்றபடியே அவளிடம் முன்னேறி செல்ல, “ஐ லவ் யூ சோ மச் ஹர்ஷா.. ” என்றவளும் வழி விட்டு நிற்க, இருவரது வெற்றுடல் தேகமும் ஒன்றாகி காதலின் அடுத்த கட்ட தேடலை துவங்கி அதில் தொலைந்தும் போயினர்.
காலையிலேயே ஹர்ஷா செய்த வேலையில் மீண்டும் குளித்து முடித்து தயாராக வேண்டிய நிலை அம்ருதாவிற்கு. அதில் அவனை செல்லமாக முறைக்க, ஹர்ஷா அவளை பார்த்து சிரித்து வைத்தான்.
“இனிமேல் சேலை கட்டாத அம்மு. நீ புடவைல இவ்வளவு அழகா இருந்தா நான் என்ன செய்ய முடியும்?” என்றவன் அவளை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்ட, அம்ருதாவின் முகம் மீண்டும் வெட்கத்தில் சிவந்து போனது.
இருவரும் மீண்டும் தயாராகி கை கோர்த்தப்படி கீழிறங்கி வர பார்த்திபன், கீர்த்தனா இருவருக்குமே அவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து மனம் மகிழ்ந்து இதழ்கள் தானாக விரிந்து கொண்டது.
இது போல எப்போதும் இருவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என எண்ணி கொண்டது பெரிற்றவர்களின் மனம்.
இங்கு நிரஞ்சனாவோ தன் காதலனுக்கு எத்தனையோ முறை அழைத்து பார்த்துவிட்டாள். ஆனால் அவன் எடுப்பதாகவே இல்லை. அதில் கோபம் எல்லையை தாண்ட, மனதினுள் ‘உனக்கு அவ்வளவு ஆகிடுச்சா? இனி நீயா கால் பண்ற வரைக்கும் நான் உனக்கு கால் பண்ணவே மாட்டேன்டா.’ என்று உறுதியாக எண்ணிக்கொண்டவள், அலைபேசியை தூக்கி தூர எறியும் தருணம் தாரிக்காவிடமிருந்து அழைப்பு வந்தது.
‘இவ எதுக்கு இப்போ கால் பண்றா?’ என்று சிந்தித்த வண்ணமே அழைப்பை ஏற்று காதில் வைக்க, மறுமுனையில் தாரிக்காவோ “நிரஞ்சனா, நம்ம ப்ளான்ல ஃபர்ஸ்ட் ஸ்டெப் வச்சாச்சு. கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணி, நோட்டீஸ் கூட அனுப்பியாச்சு.” என்றதும் நிரஞ்சனாவின் மனமோ இத்தனை நாட்கள் எதிர் பார்த்த செய்தி கிடைத்த மகிழ்சியில் துள்ளி குதித்தது.
“உண்மையாவா சொல்ற தரிக்கா? அப்போ இந்நேரம் அவங்க வீட்ல எல்லாரும் அப்படியே ஷாக் ஆகி நின்றுப்பாங்கல்ல? அதுவும் அந்த அம்ருதா முகம் இப்போ பார்க்க எப்படி இருக்கும் அதை நினைக்கும்போதே.. ஆ.. அதை நேர்ல பார்க்க முடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு.” என்றாள் நிரஞ்சனா.
“இந்நேரம் குடும்பமே உக்காந்து கண்ணீர் விட்டு அழுதுட்டு இருப்பாங்க. எல்லாம் உன்னாலதான் நிரஞ்சனா. நீ மட்டும் அன்னைக்கு தேவையான டாக்குமெண்ட்ஸ் எடுத்து கொடுக்கலைன்னா இவ்வளவு சீக்கிரம் என்னால இதெல்லாம் செஞ்சிருக்கவே முடியாது” என்று கூற,
“அந்த அம்ருதா அழறதை பார்க்க நான் என்ன வேணாலும் செய்வேன் தாரிக்கா. அவளுக்கு எதிரா எல்லா ஆதாரத்தையும் அம்ருதா ரூம்ல இருந்து நான்தான் எடுத்து கொடுத்தேன்னு யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்.
சோ… அதை மட்டும் நீ வெளில தெரியாம பார்த்துக்கோ. உனக்கு வேற என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் பண்றேன்.” என்று கூறி கொண்டிருக்கும்போதே காது மடல் கிழியும் அளவிற்கு நிரஞ்சனாவின் கன்னத்தில் ஆறுமுகம் விட்டார் ஒரு அறை.
அதில் அவளது அலைபேசி சுவற்றில் பட்டு கீழே விழுந்ததில் உடைந்து போய் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
மறுப்புறம் தாரிக்காவோ, “ஹலோ… நிரஞ்சனா.. ஹலோ..” என்றவள் மீண்டும் அழைத்து பார்க்க.. முடியாமல் போகவே, பேட்டரி காலியாகி இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.
நிரஞ்சனா இதை சற்றும் எதிர் பார்த்திருக்கவில்லை. கன்னம் சிவந்து, வீங்கி போய் எரிச்சலும் வலியுமாக விழிகளில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கன்னம் தாண்டி வழிந்தது.
அவள் முடியை இறுக பற்றியவர், “ஏன்டி… நாயே.. உன்னோட அக்காவுக்கு இவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணிட்டு உன்னால எப்படிடி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம இருக்க முடியுது?” என்றவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள் நிரஞ்சனா.
அவள் தாரிக்கவிடம் தன்னை மறந்து பேசி கொண்டிருக்கும் போதே, ‘தன் மகளை கல்லூரியில் விட்டுவிட்டு செல்வோம், தாராகிவிட்டாளா?’ என்று பார்க்க வந்த ஆறுமுகம் அவள் பேசிய அனைத்தையும் கேட்டு விட்டார்.
அவர் மனம் முழுவதும் ஆத்திரத்தில் பற்றி எரிய துவங்க, தன் ஆத்திரம் தீரும் மட்டும் நிரஞ்சனாவை அடி வெளுக்க ஆரம்பித்தார். நிரஞ்சனாவின் அலறல் சத்தமும் ஆறுமுகம் அவளை அடிக்கும் சத்தமும் சமையலறையில் வேலை பார்த்து கொண்டிருந்த காவேரிக்கு கேட்க, என்னவோ ஏதோ என்று ஓடி வந்தார் காவேரி.
ஆறுமுகத்தை அடிக்க விடாமல் தடுத்து பிடித்தவர் “என்ன ஆச்சு? ஏன் இப்படி மாட்டை அடிக்கிற மாதிரி பிள்ளையை போட்டு அடிக்கிறீங்க?” என்று இருவருக்கும் இடையில் வந்து நின்று கேட்க,
“அவ என்ன காரியம் பண்ணி வச்சிருக்கா தெரியுமா?” என்று ஆத்திரத்துடன் நடந்த விடயங்கள் அனைத்தையும் கூறி முடித்தார் ஆறுமுகம்.
இதை கேட்ட காவேரிக்கும் கோபம் எல்லையை தாண்ட தன் பங்கிற்கு தானும் அவளை நாலு அறை விட்டவர் “ஏதோ சின்ன பொண்ணு, லூசு தனமா ஏதாவது பேசிட்டு இருக்குறன்னு நெனச்சா? இவ்வளவு தூரத்துக்கு போய்ட்டியா நீ?
ஏன்டி என் வயித்துல வந்து பொறந்து இப்படி கேவலமா நடந்துக்குற? அவ உன் அக்காதான? அவ மேல உனக்கு என்ன அப்படி ஒரு வெறி? நீயெல்லாம் நல்லாருப்பியா?” என்று அழுது கொண்டே கேட்டார் காவேரி.
அதே தருணம் ஹர்ஷா வீட்டை விட்டு வெளியேறும் நேரம், “சார்.. போஸ்ட்…” என்று நீதிமன்ற நடவடிக்கை அலுவலர் வந்து நிற்க, ஹர்ஷா அவர் அருகில் வந்து நின்றான். “இங்க யார் சார் ஹர்ஷ மித்ரன்?” என்றதும் “நான் தான்” என்றான் ஹர்ஷா.
“உங்களுக்கு போஸ்ட் வந்திருக்கு. சைன் பண்ணிட்டு வாங்கிக்கங்க” என்றதும் ‘என்னவா இருக்கும்?’ என்ற குழப்பமான மனநிலையுடன் ஹர்ஷா கையெழுத்திட்டு, வாங்க அவர் நன்றி கூறிவிட்டு கிளம்பி விட்டார்.
திரும்ப வீட்டிற்குள் வந்து அதை பிரித்து படிக்க ஆரம்பித்ததும் ஹர்ஷாவின் முகம் இறுக தொடங்கியது. வெளியே சென்ற ஹர்ஷா மீண்டும் வீட்டிற்கு வந்ததை பார்த்த குடும்பத்தினர் அனைவரும் அவன் அருகில் வந்து நிற்க, “என்னப்பா? என்ன அது?” ஏன் உன் முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு?” என்றார் பார்த்திபன்.
“எல்லாம் அந்த தாரிக்கா பார்த்த வேலைதான். பிள்ளை தனக்குதான் சொந்தம்னு ஆத்யா கஸ்டடிக்காக கோர்ட்ல கேஸ் போட்டிருக்கா. வர பதினாரம் தேதி கோர்ட்ல ஆஜர் ஆக சொல்லி நோட்டீஸ் வந்திருக்கு” என்றதும் குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.