அழகிய காலை பொழுதில் ஹர்ஷாவும், ஆத்யாவும் உறங்கி கொண்டிருக்க அம்ருதா மட்டும் அறைக்குள் முகமெல்லாம் புன்னகையோடு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். தன்னவனிடம் தான் கருவுற்றிருக்கும் விடயத்தை எப்படி தெரிவிப்பது என்று விரல் நகங்களை கடித்தபடியே நாணத்துடன் அவள் சிந்தித்து கொண்டிருந்தாள்.
பிறகு ஒரு முடிவு எடுத்தவளாக, உறங்கி கொண்டிருக்கும் ஹர்ஷாவின் கைவளைவுக்குள் புகுந்து கொண்டவள், அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள். ஹர்ஷா மெல்ல விழிகளை திறந்து பார்த்தவன், அம்ருதாவை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்தபடி மீண்டும் உறங்கி போனான்.
அவன் புறம் திரும்பி “ஹர்ஷா.. ஹர்ஷா…” என்று மெல்லிய குரலில் அவள் அழைக்க.. விழிகளை திறக்காமலே கரகரப்பான குரலில் “ம்ம்ம்.. கொஞ்ச நேரம் தூங்கறேன் அம்மு..”என்றவன் அவள் இடையோடு தனது கரத்தை நுழைத்து மேலும் தன்னோடு நெருக்கி கொண்டான்.
உறங்கும் அவனையே பார்த்து கொண்டிருந்தவள், உதட்டோரம் அரும்பிய புன்னகையுடன் ஹர்ஷாவின் கன்னத்தில் மென்மையாக கரம் பதித்தாள். அவளது பார்வை அவனது முகம் முழுவதும் ரசனையாக தொட்டு மீள, அவனது தடித்த அதரத்தில் தன்னுடைய இதழ் கொண்டு மென்மையான முத்தம் ஒன்றை பதித்தாள். அதில் சட்டென தனது விழிகளை திறந்தவன், ஆச்சரியமாக அவளை பார்க்க,
அம்ருதாவோ “ஹர்ஷு.. நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.” என்றதும் ஹர்ஷாவுக்கோ அவளது அழைப்பில் அதிர்ச்சியும், ஆனந்தமும் ஒருசேர வந்தது.
“அம்மு… என்னாச்சு இன்னைக்கு உனக்கு? நீயா வந்து கிஸ் பண்ற, ஹர்ஷுன்னு செல்லமா கூப்பிடற, என்னடி ஆச்சு? இதெல்லாம் கனவா இல்லை நிஜமா” என்று அவன் வியப்பு மாறாமல் கேட்டிட, அவனது கரத்தை பற்றி தன்னுடைய மணிவயிற்றில் பதித்தாள் அம்ருதா.
ஹர்ஷாவின் முகத்தை பார்க்க விடாமல் நாணமது அவளை ஆட்கொள்ள, தன்னுடைய பார்வையை தாழ்த்தி கொண்டவள் வெட்கப் புன்னகை ஒன்றை சிந்தினாள். அவளது புன்னகையை கவனிக்காத ஹர்ஷா, வயிற்றில் கரம் பதித்ததில்,
“என்னமா ஆச்சு.. வயிறு எதுவும் வலிக்குதா? என்ன செய்யுது உனக்கு?” என்று பதறியப்படியே கேட்டு வைக்க, அதில் வெட்கம் அனைத்தும் காணாமல் போய், அவனை பார்த்து புசுபுசுவென கோப மூச்சுக்களை இறைத்தவள், “போடா.. இவனே.” என்று கூறி விட ஹர்ஷாவின் விழிகளோ ஏகத்துக்கும் விரிந்து கொண்டது.
“போடாவா..??” என்று வாய்ப்பிளந்து பார்த்தவன் மறு கணமே புன்னகையுடன் “ஹேய்.. இது ரொம்ப நல்லாருக்கு டி.. இனிமேல் நீ என்னை இப்படியே கூப்பிடுறியா?” என்று கேட்டிட,
“ஹைய்யோ…” என்று வெளிப்படையாகவே தன் நெற்றியில் அறைந்து கொண்டவள், சரியான மக்கு பையனா இருக்கியே டா. என் வயித்துல கை வச்சுட்டு வெட்கப்படுறேன் அது கூட புரியாம லூசு மாதிரி வயிறு வலிக்குதான்னு கேக்குற?” என்றதும்,
எழுந்து அமர்ந்த ஹர்ஷா”என்னது லூசா…?? என்னடி… இன்னைக்கு ஓவராதான் கொஞ்சுற? என்னாச்சு? உனக்கு?”
“நான் உன்னை கோபமா திட்டிட்டு இருக்கேன். உனக்கு இது கொஞ்சுற மாதிரி தெரியுதாடா?”
அதில் புன்னகையித்த படியே அவளை இழுத்து தன் மடிமீது அமர வைத்தவன், “என்னாச்சு என் அம்மு பாப்பாவுக்கு? என்மேல இப்போ என்ன கோபம்?” என்றதும்,
‘இவனுக்கு இப்படியெல்லாம் சொன்னா புரியாது.’ என்று சலித்து கொண்டவள், ‘இதாவது புரியுதான்னு பார்ப்போம்.’ என்று தனது ஒற்றை கரத்தில் மறைத்து வைத்திருந்த கர்ப்ப பரிசோதனை கருவியை அவன் முன்பு எடுத்து காட்ட, அதில் இரண்டு அடர் சிவப்பு நிற கொடுகள் இருப்பதை பார்த்தவனோ அசைவின்றி அப்படியே அமர்ந்து விட்டான். மகிழ்ச்சியில் ஹர்ஷாவின் விழிகளில் நீர் கோர்த்து கொண்டது.
ஆத்யா பிறந்ததிலிருந்து, அவளது குழந்தை பருவத்தில் பார்த்து பார்த்து வளர்க்க தனக்கு கொடுத்து வைக்க வில்லையே என்று எண்ணி இருந்தவனுக்கு, இன்று அம்ருதா வயிற்றில் இரண்டாவது முறையாக தன் பிள்ளை வளர்க்கிறது என்பதை அறிந்ததும் ஹர்ஷாவின் மனதில் எல்லை இல்லாத ஆனந்தம். அது மட்டுமின்றி,
தாரிக்காவுடன் வாழ்ந்த காலங்களில் தன் மீதே குறை என்று அவள் கூறியதை நம்பி இருந்த நேரங்களில் இது போன்ற ஒரு நாள் தன் வாழ்வில் வருமா? என்று ஏங்கிய நாட்களே அதிகம். அதன் பிறகு உண்மை அனைத்தும் தெரிந்தாலும், வாழ்க்கை மீது ஒரு பிடிப்பே இல்லாமல் போனது ஹர்ஷாவுக்கு.
வெறுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவன் முன்னால் வரம் தரும் தேவதையாக வந்தவள், இன்று ஒட்டு மொத்த மகிழ்ச்சியையும் தன் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டாள்.
அதில் விழி நீர் அவன் கன்னம் தாண்டி வழிந்து விட இந்த மகிழ்ச்சியை எப்படி வெளி காட்டுவது என்பதை அறியாதவன் அவள் மடி மீதே படுத்து அழ ஆரம்பித்துவிட்டான். அம்ருதாவிற்கோ உள்ளம் பதற ஆரம்பித்தது.
” ஹர்ஷா.. ஹர்ஷா.. என்ன பண்றீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று பதற்றத்துடன் கேட்டிட எழுந்து அமர்ந்தவன் அழுகையும், புன்னகையுமாக இரண்டும் கலந்த உணர்வை வெளிப்படுத்தியவன், பேச வார்த்தைகளே இன்றி தடுமாறி போனான்.
தன்னுடைய உணர்வை, மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பது புரியாமல் அவள் தாடையை அழுந்த பற்ற அதில் அம்ருதாவின் இதழ்களில் உண்டான இடைவெளியில் தன் இதழ்களை பொருத்தி கொண்டவன் அவளை தீவிரமாக முத்தமிட தொடங்கினான்.
வார்த்தைகளால் அன்றி தன்னுடைய உணர்வுகளை முத்தத்தின் வழியே அம்ருதாவிற்கு புரிய வைத்து கொண்டிருந்தான் ஹர்ஷா.. ஆழமான, உணர்ச்சி மிகுந்த முத்தத்தில் அவன் எவ்வளவு மகிழ்வுடன் இருக்கிறான் என்பது அம்ருதாவிற்கு புரிந்தது. புரிய வைத்தான் ஹர்ஷ மித்ரன்.
அதில் தானும் அவனை முத்தமிட தொடங்க, இருவரும் அந்த நிமிடத்தில் நீண்ட நேரம் லயித்து இருந்தனர். மெதுவாக தனது இதழ்களை அவளிடமிருந்து பிரித்து எடுத்தவன், தேங்க் யூ அம்மு.., தேங்க் யூ சோ.. மச். இந்த விஷயத்தை உடனே அப்பா அம்மாகிட்ட சொல்லணும் என்று எழுந்து போக முயற்சிக்க,
“ஒரு நிமிஷம் ஹர்ஷா… நான் சொல்றனேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. நம்ம டாக்டர்கிட்ட போய் கான்ஃபார்ம் பண்ணிட்டு, அப்புறமா எல்லார்கிட்டையும் சொல்லலாமே? அப்போதான் எனக்கும் முழு திருப்தியா இருக்கும்.” என்று தயங்கியப்படியே கேட்டிட,
“ஹேய்.. இதுக்கு ஏன் அம்மு தயங்குற? உன் இஷ்டட்டப்படியே செய்வோம்” என்று கூறியவன், “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, நான் ரெடி ஆகிட்டு வந்துடுறேன். நம்ம ஹாஸ்பிடல் போகலாம் ” என்றதும் சரி என தலை அசைத்தாள் அம்ருதா.
இங்கு பாலா தாரிக்காவிடம் வந்தவன், “என்ன தாரிக்கா..? உன்னோட கேஸ் கோர்ட்க்கே வந்துடுச்சு. ஆனாலும் நான் கேட்ட விஷயம் ஒன்னும் நடக்குற மாதிரி தெரியலையே.” என்றதும்,
“ப்ச்.. நீ புரிஞ்சுதான் பேசுறியா? அன்னைக்கு நிரஞ்சனா பேசும்போது நீயும் கேட்டுட்டுதான இருந்த? அவ என்கிட்ட பேசுறதையே அவாய்ட் பண்றா. அப்படி இருக்கும்போது இந்த விஷயத்துல நான் என்ன பண்ண முடியும்?”
“உன்கிட்ட நான் காரணம் கேக்கல. எனக்கு அவ வேணும். ஒரே ஒரு முறை. அவ்வளவுதான். உன்னால இதை கூட பண்ண முடியாதா? முடியாதுன்னு சொன்னா.., நீ வேற பாலாவ பார்ப்ப” என்று மிரட்டலாக அவன் கூற,
“சரி.. சரி… இரு எதையாவது சொல்லி முதல்ல அவளை இங்க வர வச்சுட்டு நான் வெளில போயிடுறேன். அப்புறம் நீ என்னவோ பண்ணிக்கோ. இதுக்குமேல இந்த விஷத்துல என்னால வேற எதுவும் பண்ண முடியாது.”
“சரி.. அது போதும். நீ முதல்ல அவளுக்கு கால் பண்ணு.” என்றதும் நிரஞ்சனாவிற்கு அழைப்பை விடுத்தாள். தாரிக்கா.
மறுமுனையில் அழைப்பை ஏற்ற நிரஞ்சனாவோ,
“உன்கிட்ட ஏற்கனவே நான் சொல்லிட்டேன் தாரிக்கா, எனக்கு கால் பண்ணாதீன்னு. என்று கோபமாக பேசி கொண்டிருக்கும்போதே,
“ஒரு நிமிஷம் நிரஞ்சனா. நான் சொல்றதை கேளு, ரொம்ப முக்கியமான விஷயம். என்னோட வீட்டுக்கு வா பேசுவோம்”
“என்ன விஷயம்? எதுவா இருந்தாலும் ஃபோன்லயே சொல்லு”
“நான்தான் சொல்றேன்ல? ரொம்ப முக்கியமான விஷயம். ஃபோன்லலாம் சொல்ல முடியாது. நீ இந்த ஒரு முறை மட்டும் நேர்ல வா பேசுவோம். இனிமேல் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்.” என்று பதற்றமாக, அவசரமாக அழைத்ததில்,
ஒரு நிமிடம் சிந்தத்தவள், சரி, இந்த ஒரு முறைதான் வருவேன். இனிமேல் எந்த விஷயத்துக்கும் நீ எனக்கு கால் பண்றதோ, நேர்ல கூப்பிடுறதோ வச்சுக்கவே கூடாது. என்றதும்,
“சரி.. சரி.. நீ முதல்ல கிளம்பி வா..” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள். மறுபுறம் நிரஞ்சனாவோ, “இவ்வளவு பதற்றமா பேசுறான்னா ஏதாவது முக்கியமான விஷயமாதான் இருக்கனும்” என்று எண்ணியவள், தன் அன்னையிடம் தன் தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு தன்னுடைய ஸ்கூட்டியில் தாரிக்கவின் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
ஹர்ஷாவும், அம்ருதாவும் ஆத்யாவை அவள் தாத்தா, பாட்டி பொறுப்பில் விட்டு விட்டு வந்தவர்கள் மருத்துவமனையில் மருத்துவரின் அழைப்பிற்காக காத்திருக்க தொடங்கினர்.
அம்ருதாவை அழைத்த மருத்துவர், அவளது உடலை பரிசோதித்து பார்த்தார். பிறகு வெளியில் காத்திருந்த ஹர்ஷாவையும் அழைத்தவர் இருவருக்கும் வாழ்த்து கூறி, மருத்துவ அறிக்கையை அவர்களிடம் கொடுத்தார். அதனை பெற்று கொண்டவர்களிடம்,
“அம்ருதாவோட வயித்துல ஐம்பது நாள் கரு வளர்ந்திருக்கு. ஹார்ட் பீட் வர ஆரம்பிச்சுடுச்சு. கர்ப்பப்பைல சரியான இடத்துலதான் கரு பொருந்தி இருக்கு. சோ.. எந்த பிரச்னைனையும் இல்ல.” என்றதும் இருவரது முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.
“குழந்தை வளர்ச்சிக்காகவும், சத்துக்காகவும் சில டேப்ளட்ஸ் எழுதி தரேன், மன்த்லி ஒன்ஸ் செக் அப் கூட்டிட்டு வந்தா மட்டும் போதும்” என்று சில மாத்திரைகளை எழுதி கொடுத்ததும், இருவரும் மருத்துவருக்கு நன்றி கூறி விடை பெற்றனர்.
நிரஞ்சனா தாரிக்கா வீட்டிற்கு வந்த சமயத்தில் தாரிக்கா அங்கு இல்லை. பாலா மட்டுமே இருக்க, “தாரிக்கா இங்க பக்கத்துலதான் போயிருக்கா, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று நல்லவன் போல பேசியவன், தனியே சென்று அவள் அறியாத வண்ணம் அவளுக்காக தயாரித்த பழச்சாரில் ஒரு வித போதை மருந்தை கலந்தான்.
அதை அவள் முன்பு நீட்ட, அதீத தாகத்தில் இருந்தவளோ எந்த கேள்வியும் கேக்காமல் அதை வாங்கி பருகினாள். அதில் பாலாவின் முகமோ வெற்றி களிப்பில் மின்னியது.
நிரஞ்சனாவின் பார்வை சிறிது சிறிதாக மங்களாக தெரிய ஆரம்பிக்க, தன்னுடைய சுய நினைவை அவள் இழக்க தொடங்கியப்போதே, அவளை தன்னுடன் சேர்த்து அணைத்த படியே, படுக்கை அறைக்கு அழைத்து சென்றான் பாலா. மெத்தையின் மீது அவளை கிடத்தியவன் பார்வை நிரஞ்சனாவின் மீது தவறாக படிந்தது.
“எவ்வளவு நாள் உனக்காக காத்திருந்தேன் தெரியுமா? இன்னைக்கு உன்னை அனு அனுவா ரசிச்சு அனுபவிக்க போறேண்டி. எங்க நீ எனக்கு கிடைக்காமலே போய்டுவியோனு ரொம்ப பயந்துட்டேன்.” என்றவனது பார்வை அவளது தலை முதல் கால் வரை ஒரு முறை தொட்டு மீண்டது.
அரைகுறை மயக்கத்தில் இருந்தவளுக்கு பாலா பேசுவது நன்றாக கேட்டாலும் அவனை எதிர்க்க முடியாத நிலை.
நேரத்தை கடத்த விரும்பாதாவன், அவளது துப்பட்டாவில் கைவைத்து அதனை ஒரே இழுவையாக இழுத்து தூக்கி எறிய, நிரஞ்சனா விழிகளில் இருந்து கோடாக வழிந்தது உவர் நீர்.
“வேண்டாம்… என்னை விட்டுடு..” என்றவள் வார்த்தைகள் கூட முனகளாக வெளிப்பட, அதை சற்றும் பொருட்படுத்தாதவன் அடுத்ததாக அவளது மேலாடையின் மீது கரம் பதித்தான்.