அந்தியில் பூத்த சந்திரனே – 27

5
(3)

பாலா நிரஞ்சனாவின் மேலாடை மீது கரம் பதித்த அடுத்த நொடி பாலாவின் சட்டையை பிடித்து இழுத்த ஹர்ஷா, தனது ஒற்றை கரத்தை இறுக மூடி, தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு பாலாவின் முகத்திலேயே ஓங்கி குத்தினான்.

இதை சற்றும் எதிர் பார்த்திராத பாலாவோ நிலை தடுமாறி கீழே விழ, அம்ருதா நிரஞ்சனாவிடம் சென்றவள் அவளை எழுப்ப முயன்றாள். ஆனால் நிரஞ்சனா தடுமாறியப்படியே இருக்க, அந்த நிலையிலும் தன்னை காப்பாற்ற அம்ருதா வந்து விட்டாள் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது அவளுக்கு.

சிறிது நேரத்திற்கு முன்பாக மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வழியில் சிறிய கோவிலின் அருகே அம்ருதா காரை நிறுத்த சொல்ல, இருவரும் கோவிலுக்குள் சென்று கடவுளிடம் மனதார நன்றி கூறிவிட்டு மீண்டும் காரில் ஏற போகும் நேரம், சற்று தூரத்தில் நிரஞ்சனா செல்வதை பார்த்தாள் அம்ருதா.

“ஹர்ஷா.. அங்க பாருங்க. நிரஞ்சனா போறா. இந்த டைம்ல காலேஜ் போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கா?” என்றதும்,

ஹர்ஷாவும் அவளை பார்த்து, “அவ காலேஜ் கூட இந்த பக்கம் இல்லையே? சம்பந்தமே இல்லாம இவ ஏன் இந்த வழில போறா?” என்று கேட்க, “சரி நீங்க அவளை ஃபாலோ பண்ணிட்டு போங்க, நானே அவளை என்னனு கேக்குறேன் என்று காரினுள் ஏறி கொள்ள, சரி என்றவன் அவளை பின் தொடர ஆரம்பித்தான். ஆனால் சிறிது தூரத்திலேயே நிரஞ்சனா ஒரு வீட்டின் முன்பாக தனது வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, “ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்திருப்பா போல அம்மு..” என்றான் ஹர்ஷா.

“காலேஜ் டைம்ல இவ இங்க என்ன பண்றா. இருங்க பார்த்துட்டு வரேன்” என்றதும், “வேண்டாம் அம்மு. இப்போ நீ அங்க போனா, அவ உன்மேலதான் கோப படுவா” என்றான் ஹர்ஷா. ‘அவர் சொல்வதும் சரிதான்’ என்று எண்ணியவள் இருந்தாலும் மனது கேட்காமல் தன் தாய் காவேரிக்கு அழைத்து பேச “அவளுக்கு இன்னைக்கு லீவ்தான்மா. என்கிட்ட சொல்லிட்டுதான் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போனா” என்றதும்தான் சற்றே நிம்மதி பரவியது அம்ருதாவின் மனதில்.

பிறகு ஹர்ஷாவிடம், “சரி வாங்க வீட்டுக்கு போவோம். என்று கூற இருவரும் அங்கிருந்து கிளம்ப தொடங்கினர். அந்த வீதியின் எல்லையை தொடும்போது தூரத்தில் தாரிக்கா யாருடனோ அலைபேசியில் பேசி கொண்டிருப்பதை பார்த்த ஹர்ஷா சட்டென தனது காரை நிறுத்தினான். அம்ருத்தா என்னவென்று பார்க்க, “அது.. தாரிக்காதானே?” என்றதும் அவன் காட்டிய திசையை நோக்கிய அம்ருதாவோ அதிர்ந்த முகத்துடன் “ஆம்” என்று  என்று தலையாட்டினாள்.

இருவருக்கும் ஏதோ சரியில்லை என்று தோன்ற, மீண்டும் காரை திருப்பி கொண்டு வந்த வழியே திரும்ப சென்றனர். நிரஞ்சனா சென்ற வீட்டிலிருந்து சிறிது முன்பாகவே காரை நிறுத்தியவர்கள், வேக வேகமாக வீட்டிற்குள் நுழைய அங்கு பாலா நிரஞ்சனாவிடம் தவறாக நடக்க முயற்சிப்பது தெரிந்தது. இருவருமே இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அதில் ஹர்ஷாவின் முகம் கோபத்தில் இறுக, அம்ருதாவோ செய்வது அறியாது ஒரு நொடி திகைத்து நின்றாள். அதன் பிறகுதான் ஹர்ஷா பாலாவை அடிக்க துவங்கினான். ‘தன்னுடைய வாழ்க்கையில்தான் விளையாடினான் என்றால் இப்போது ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையை சிதைக்க நினைக்கிறானே?’ என்று கோபத்தில் ருத்ர மூர்த்தியாய் மாறியவன் பாலாவை தன் முழு பலம் கொண்டு தாக்க துவங்கினான்.

அதில் சமையலறையில் சென்று விழுந்தவன், இவனை திரும்ப அடிக்க முயன்றால் நிச்சயம் முடியாது என்பதை உணர்ந்தவனாக ஹர்ஷா அறியாதப்படி  அருகில் இருந்த மிளகாய் பொடியை எடுத்தவன் அதை ஹர்ஷாவின் முகத்திலேயே வீசி விட்டு உடலில் இரத்த காயங்களுடன் அங்கிருந்து தப்பித்து சென்றான்.

ஹர்ஷாவோ விழிகளை திறக்க முடியாமல் எரிச்சலில் தவித்தவன் அருகில் இருக்கும் சிங்க் தொட்டியில் தனது முகத்தை நீரால் அடித்து அடித்து கழுவ, ஆனாலும் அவனால் முழுமையாக விழிகளை திறக்க முடியவில்லை. அம்ருதாவோ ஹர்ஷாவிடம் வந்தவள் என்னாச்சு ஹர்ஷா..? என்று பதற்றமான குரலில் கேட்டிட,

ஒன்னும் இல்ல அம்ருதா, நீ முதல்ல சேஃப்பா இரு என்றுவிட்டு கடினப்பட்டு விழிகளை திறந்து பார்க்க, பாலா அந்த இடத்தில் இல்லை. வெளியில் சென்று நாளாபுறமும் தேடியும் எங்கு சென்று மறைந்தான் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தவன் தன்னுடைய முகத்தை மீண்டும் மீண்டும் நீரால் அடித்து கழுவி விட்டு சட்டையையும் கழுவியவன் அதன் பிறகே அம்ருதாவிடம் சென்றான். இவளுக்கு என்ன ஆச்சு பாருங்க என்று அம்ருதா பதற ஹர்ஷாவிற்கு பார்த்த உடனே என்ன நடந்திருக்கும் என்று புரிந்து போனது. அதில்,

“ஒன்னும் இல்ல அம்மு.. நீ முதல்ல பதற்ற படாம இரு” என்றவன் நிரஞ்சனாவை தூக்கிக்கொண்டு தன்னுடைய காருக்கு சென்றவன் காரின் பின் இருக்கையில் அவளை படுக்க வைத்தான். அம்ருத்தா முன் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள, ஹர்ஷா காரை எடுத்ததும் எங்க போறோம் ஹர்ஷா? இந்த நிலைமைல அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போனா பெரிய பிரச்சனை ஆகிடும் என்று கூற,

“தெரியும் அம்மு. என்னோட ஃப்ரெண்ட் கார்த்திக்கோட ஹாஸ்பிடல்க்குதான் போறோம்” என்றவன் நேராக தன்னுடைய காரை, மருத்துவமனையை நோக்கி செலுத்தினான். சிறிய அளவிலான மருத்துவமனைதான் அது. கூட்டம் பெரிதாக இருக்கவில்லை. ஹர்ஷா கார்த்திக்கிடம் வரும் வழியிலேயே அழைத்து விடயத்தை கூறி இருந்ததால் அவனும் நிரஞ்சனாவிற்க்கனா தனி அறையை ஏற்பாடு செய்தவர், அவர்களுக்காக காத்திருக்க தொடங்கினான்.

ஹர்ஷா மருத்துவமனையை அடைந்ததும் நிரஞ்சனாவை தூக்கி கொண்டு கார்த்திக் கூறிய அறையை நோக்கி செல்ல அம்ருதாவும் அவர்களை பின் தொடர்ந்தாள். அறைக்குள்  நுழைந்தவன் அவளை மெத்தையின் மேல் கிடத்த, இருவரையும் வெளியே காத்திருக்க சொன்ன கார்த்திக் அவளுக்கான சிகிச்சையை மேற்கொண்டான்.

சிறிது நேரத்திற்கு பிறகு சிகிச்சை முடிந்ததும்

வெளியே வந்த கார்த்திக் தன்னுடைய அறையை நோக்கி செல்ல, ஹர்ஷாவும் அம்ருதாவும் அவனை பின் தொடர்ந்தனர். உள்ளே நுழைந்த கார்த்திக் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொள்ள, இருவரையும் அமர சொன்னவன் பேச தொடங்கினான்.

“இது ஒரு ரேர் ட்ரக். இதெல்லாம் இவனுங்களுக்கு எங்கிருந்துதான் கிடைக்குமோ தெரியலை. நல்ல வேலை ரொம்ப ஸ்ட்ரோங் கிடையாது. நீ உடனே கூட்டிட்டு வந்தனால நான் அவங்க ப்ளட் சாம்பிள்ஸ் எடுத்துட்டேன். ஆறு மணி நேரத்துல பழைய நிலைக்கு திரும்பிடுவாங்க. உனக்கு கூடிய சீக்கிரம் ரிப்போர்ட் கொடுக்கிறேன். நீ போலீஸ் கம்பளைண்ட் கொடு” என்றதும் சரி என்றான் ஹர்ஷா.

இருவரும் அறையை விட்டு வெளியேறியதும், “அம்ருதா நீ உங்க அப்பா அம்மாவுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லிடு” என்றான் ஹர்ஷா.

“அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்பாடுவாங்க ஹர்ஷா. வேண்டாமே. ஏதாவது காரணம் சொல்லி அவ சரி ஆனதும் நம்மளே வீட்ல கொண்டுபோய் விட்டுடலாம்”

“எப்படி இருந்தாலும் போலீஸ் கம்ப்ளைன்ட்  கொடுக்கும் போது அவங்களுக்கு தெரிய தானே போகுது? நீ அவங்கள கூப்பிடு. நானே பொறுமையா சொல்லி புரிய வைக்கிறேன்” என்றதும் அவளுக்கும் அதுவே சரி என்று தோன்ற,

“சரி” என்றவள் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது அன்னை காவிரிக்கு அழைப்பை விடுத்தாள். மறுபுறம் அழைப்பை ஏற்ற காவிரி, சொல்லு அம்ருதா, என்றதும் அம்மா..  ****  இந்த ஹாஸ்பிடலுக்கு வரீங்களா என்று மருத்துவமனை பெயரையும், வரும் வழியையும் கூறிதும், “யாருக்கு என்னமா ஆச்சு? எதுக்கு ஹாஸ்பிடல் வரணும்?” என்று பதறியப்படியே கேட்டார் காவேரி

“ஒன்னும் இல்லம்மா, நிரஞ்சனாவை நாங்க பார்த்தோம்னு சொன்னேன்ல. அவளை கூப்பிட்டு பேசிட்டு இருக்கும்போது திடீர்னு மயங்கி விழுந்துட்டா.” என்றதும்

“அய்யயோ.. என்ன ஆச்சு நிரஞ்சனாவுக்கு?”

“ஒன்னும் இல்லமா சாதாரண மயக்கம்தான். நீங்க நேர்ல வாங்க பேசிக்கலாம்.” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.

காவேரி தன் கணவன் ஆறுமுகத்தை அழைத்து விடையத்தை கூற இருவரும் சேர்ந்து மருத்துவமனை வந்து சேர்ந்தனர். ஹர்ஷா இருவரையும் அழைத்து கொண்டு தனி அறைக்கு சென்றவன், நடந்த விடயங்கள் அனைத்தையும் பொறுமையாக எடுத்து கூற இருவருக்கும் நிரஞ்சனாவை கொன்று விடும் அளவிற்கு கோபம் வந்தது.

அதீத கோபத்தில் இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்த விடயத்தை போட்டு உடைத்தார் காவேரி . ” அம்ருதா விஷயத்துல, தாரிகாவுக்கு ஹாஸ்பிடல் சர்டிபிகேட், தேவையான ஆதாரம் எல்லாத்தையுமே அம்ருதா ரூம்ல இருந்து எடுத்து கொடுத்ததே நிரஞ்சனாதான். உங்ககிட்ட சொன்னா நீங்க வருத்தப்படுவீங்கனுதான் நாங்க சொல்லவே இல்ல.

அன்னைக்கு அவ்வளவு அடிச்சும் இவ கொஞ்சம் கூட திருந்தவே இல்ல. எவ்வளவு தைரியம் இருந்தா திரும்ப தாரிகா வீட்டுக்கு போயிருப்பா?” என்றதும் அம்ருதாவுக்கும் ஹர்ஷாவுக்கும் அதிர்ச்சி தான்.

தாரிகா அவளது தோழியின் மருத்துவமனையில்தான் தேவையான கோப்புகளை வாங்கியிருப்பாள் என்று நினைத்திருக்க, நிரஞ்சனா இப்படி செய்திருப்பாள் என்று இருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலே கோபம் வந்தாலும் தற்போது நிரஞ்சனா இருக்கும் நிலையில் அதை காட்ட இருவருமே விரும்பவில்லை.

எப்படியோ ஆறுமுகம் காவேரி இருவரையும் ஹர்ஷா சமாதானம் செய்துவிட மருத்துவர் கூறிய நேரத்திற்கும் ஒரு மணி நேரம் மேலாகவே சுயம் அடைந்தாள் நிரஞ்சனா. அவளது மனம் முழுவதும் குற்ற உணர்வு ஆக்கிரமித்தது. ‘இவ்வளவு வருடங்களாக அம்ருதாவை எப்படியெல்லாம் நோகடித்திருப்பேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அக்கா என்றும் பாராமல் பொறாமையில் கெடுதலை மட்டுமே செய்திருக்க, அதை எதையுமே மனதில் வைத்து கொள்ளாமல் இன்று என்னை அந்த பாலாவிடமிருந்து காப்பாற்றி விட்டாளே’ என்று மனதிற்க்குள் கூனி குறுகி போனாள் நிரஞ்சனா.

காவேரிக்கும், ஆறுமுகத்திறக்கும் நிரஞ்சனாவின் மீது அளவு கடந்த கோபம் இருந்தாலும், நல்லவேளையாக தவறாக எதுவும் நடக்காமல் மாப்பிள்ளை காப்பாற்றி விட்டார் என்ற நிம்மதியும் இருந்தது. ஹர்ஷாடம் சென்றவர்கள், “ரொம்ப நன்றி மாப்பிள்ளை. நீங்க மட்டும் இல்லைன்னா இன்னைக்கு என் பொண்ணோட நிலைமை என்ன ஆகியிருக்கும்? ரொம்ப நன்றி மாப்பிள்ளை.” என்றவர்களிடம்,

நன்றியெல்லாம் வேண்டாம் மாமா. அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவான்? நம்ம பாலா மேல போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கனும். என்றதும் முதலில் தயங்கியவர்கள், பிறகு தங்களது இரு பெண்களின் வாழ்க்கையையும் கெடுப்பதையே குறிக்கோளாக கொண்ட அந்த பாலாவையும், தாரிக்காவையும் விட்டுவிட கூடாது என்று எண்ணி ஒப்பு கொண்டனர்.

கார்த்திக் கொடுத்த மருத்துவ சன்றிதலை பெற்று கொண்டவர்கள், நிரஞ்சனாவையும் அழைத்து கொண்டு நேராக காவல் நிலையத்திற்க்கு சென்று நடந்ததை கூறி பாலா, தாரிக்கா இருவரது பெயரிலும் புகார் ஒன்றை அளித்தனர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!