ஹர்ஷ மித்ரனை தனது வீட்டில் கண்ட அம்ருதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “இவர் எப்படிம்மா இங்க?” என்று தன் அன்னையை பார்த்து கேட்க,
அதில் புருவத்தை சுருக்கியவாரே, “உனக்கு இவரை ஏற்கனவே தெரியுமா?” என்றார் காவேரி.
“ம்ம்ம்ம்… இரண்டு முறை பார்த்திருக்கேன்” என்றவள் இரண்டு சந்திப்புகளையும், அதில் அவன் நடந்து கொண்ட விதத்தையும் பற்றி கூற, அதை கேட்ட காவேரிக்கு ஹர்ஷாவின் மீது நம்பிக்கையும், மரியாதையும் பிறந்தது.
அதில் பேச துவங்கியவர், “இவர்தான் அம்ருதா நான் சொன்ன ஹர்ஷ மித்ரன். உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறார். அதை பத்தி உன்கிட்ட பேசாதான் இங்க வந்திருக்கார்” என்றதும் அம்ருதாவுக்கு அதிர்ச்சியே. அவள் மனதில் பல விதமான சிந்தனைகள் ஓட, அவை அனைத்தையும் தள்ளி வைத்தவள் இவர் எப்படிமா நம்ம வீட்டுக்கு வந்தார்? என கேட்க,
உன்கிட்ட நேர்ல பார்த்து பேசணும்னு சொன்னாருடா. அந்த தம்பிய அவரோட அப்பா அம்மாவையும் கூட்டிட்டு வர சொல்லிதான் நம்ம வீட்டு அட்ரசை கொடுத்தேன். ஆனா உன்கிட்ட பேசின அப்புறம்தான் எந்த முடிவையும் எடுக்க முடியும், உன்னோட விருப்பம் இருந்தா மட்டும் அவுங்க பேரன்சை கூட்டிட்டு வரேன்னு சொன்னார்மா.
எனக்கும் அது சரின்னு பட்டதால ஒத்துக்கிட்டேன். ஏன்னா.., உன்னை வற்புறுத்தி எல்லார் முன்னாடியும் கூட்டிட்டு போய் நிறுத்துறதுல எனக்கும் விருப்பம் இல்லை. ஆனா அம்ருதா நீ சொல்றதை வச்சு பார்த்தா நல்லவராதான் தெரியுறாரு. நம்ம ஆத்யாவையும் நல்லா பார்த்துப்பாருன்னு தோணுதுமா.
உன்னோட பிடிவாதத்தையும், நெகடிவ் தாட்ஸ்சையும் விட்டுட்டு ஒரே ஒரு முறை எனக்காக அந்த தம்பிகிட்ட பேசி பாருடா” என்றவர் அந்த இடத்தை விட்டு விலகி செல்ல அவனுடைனான இந்த இரண்டு சந்திப்புகளையும் பற்றி யோசித்து பார்க்கையில் ஹர்ஷாவிடம் எந்த தவறான நோக்கமும் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை. ‘இரண்டு முறையுமே ஆத்யாவுக்காகத்தானே என்னை திட்டினான்..?’ என்று யோசித்த வண்ணமே அவளிருக்க,
அவள் அறையின் முன்னே வந்து நின்றான் ஹர்ஷா. “உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும், என்கூட வெளில வர முடியுமா?” என்று முகத்துக்கு நேரே அவன் கேட்டுவிட, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திருவென விழித்தவளை “வாங்க போகலாம்” என்று விட்டு அவள் பதிலுக்காக காத்திராமல் வாயிற்புறம் முன்னேறி நடக்க துவங்கினான் அவன்.
வேறு வழியின்றி தானும் அவன் பின்னே சென்றவளுக்கு காரின் முன்பக்க கதவை திறந்து விட்டவன் ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான். “ஆத்யா எங்க?” என்று கேட்டவனை வியப்பாக பார்த்தவள், “அவ தூங்கிட்டு இருக்கா” என்றதும்,
“சரி, தூக்கத்திலருந்து விழிக்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”
” இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் “
“அதுக்குள்ள பேசி முடிச்சுடலாம்” என்றவன் அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு அவளை அழைத்து சென்றான்.
காபி ஷாப்பின் உள்ளே நுழைந்தவர்கள் எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அங்கு வெயிடர் மெனு கார்டை அவனிடம் நீட்ட எனக்கு எஸ்ப்ரெஸ்ஸோ, உங்களுக்கு? என கேட்க, எனக்கு கார்டமம் டீ என்றாள் அம்ருதா. அதை கேட்ட பணியாள் ஓகே சார் என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட,
அம்ருதா அவனை நேருக்கு நேர் பார்க்கவே தயங்கியவள் அங்கும் இங்கும் தன் பார்வையை சூழல விட்டாள். ஹர்ஷாவுக்கும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. எப்படியும் ஆரம்பித்து தானே ஆக வேண்டும் என்று என்னியவன் “க்ர்ம்..” என்று தனது குரலை செருமி கொண்டு,
“அம்ருதா.. நான் ஹர்ஷ மித்ரன். ஹர்ஷ மித்ரன் ரெஸ்டாரண்ட் ஓனர். நம்ம ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணினோமே ஒரு ரெஸ்டாரண்ட் அது என்னோடதுதான்” என்று கூற,அம்ருதாவின் விழிகளோ வியப்பில் விரிந்தன.
மேலும் தொடர்ந்தவன் “எனக்கு நாலு வருஷம் முன்னாடியே டிவோர்ஸ் ஆகிடுச்சு. நான் டிவோர்ஸ்க்கான ரீசனையோ, இல்ல என்னோட எக்ஸ் வைஃப் பத்தின டீடெயில்சையோ ஷேர் பண்ணிக்க விரும்பல. அதே போல நீங்க என்கிட்ட உங்க பாஸ்ட் லைஃப் பத்தி சொல்லணும்னும் நான் எதிர்பாக்கல.”
என்று கூறியவனை வித்யாசமாக பாத்தாள் அம்ருதா. அதை புரிந்து கொண்டவன்,
“ஏன்னா கடந்த காலம் எதுவா இருந்தாலும் அது முடிஞ்சுடுச்சு. முடிஞ்சு போன விஷயத்தை பத்தி பேசறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. எதிர்காலத்துல அந்த நினைவுகளை ஒரு பாரமா தூக்கி சுமக்க வேண்டாம்னு நான் நினைக்கிறேன். இது என்னோட ஒப்பீனியன்தான். ஒருவேளை நீங்க தெரிஞ்சுக்கணும்னு விருப்பப்பட்டா நான் சொல்ல ரெடி” என கூறிட,
படபடவென அவன் பேசி முடித்ததும் அம்ருதா என்ன பதில் கூறுவது என புரியாமல் தடுமாறினாள். “அ.. அது.. அது வந்து..” என அவள் தயங்கிட,
“ஃபீல் ப்ரீ அம்ருதா, என்கிட்ட பேச நீங்க தயங்க வேண்டிய அவசியம் இல்ல”
“நீங்க கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனச்சா யாரை வேணும்னாலும் பண்ணிக்கலாமே? ஏன் ஒரு குழந்தையோட இருக்க என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறீங்க?”
“சிம்பிள்… ஏன்னா எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. ஒரு பொறுப்பான, தைரியமான பொண்ணா உங்களை பார்த்ததுனால, நீங்க என் வாழ்க்கை துணையா வந்தா நல்லாருக்கும்னு நான் நினைக்கிறேன்.”
“ஆனா ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்க நான் எப்படி உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியும்னு நீங்க நினைக்குறீங்க?”
“ஏன் ஒரு குழந்தைக்கு அம்மான்னா ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்ன?”
அதில் புருவத்தை உயர்த்தியவன், “என்னோட பார்வை எப்படி இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி?
இந்த கல்யாணத்துக்கு நீங்க சம்மதிச்சா நம்ம கல்யாணம் நடந்த அப்புறம், நீங்க என்னோட மனைவி, ஆத்யா என்னோட சொந்த குழந்தைதான். எந்த இடத்திலும் நான் அவளை வேற ஒருத்தரோட குழந்தையா பாக்கவே மாட்டேன் “
“பேசறதுக்கு எல்லாமே நல்லாருக்கும், நீங்க ஒத்துக்கிட்டாலும், உங்க வீட்ல சம்மதிக்கணுமே? அவுங்க என் குழந்தையை ஏத்துப்பாங்களா?”
“தெரியல அம்ருதா.. ஹானஸ்ட்லி இதுக்கு என்கிட்ட பதில் இல்ல. என் அப்பாவும், அம்மாவும் ஆத்யாவை ஏத்துக்கிட்டாதான் நீங்க என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா?”
“நீங்க என்னை நம்பி வந்தா, உங்களுக்கும் ஆத்யாவுக்கும் நான் பொறுப்பு. நீங்க சம்மதிச்ச அடுத்த நிமிஷம் ஆத்யா என்னோட பொண்ணுதான். ஆனா என்னை சுத்தி உள்ளவங்களும் ஏத்துக்கணும்னு நீங்க நெனச்சா அதுக்கு இப்போ என்கிட்ட எந்த பதிலும் இல்லை.
ஆனா என்னால ஒன்னு மட்டும் உறுதியா சொல்ல முடியும். யாராலையும் ஆத்யாவுக்கும், உங்களுக்கும் எந்த மன கஷ்டமும் வராம நான் பார்த்துப்பேன் என்று அவன் பேசி கொண்டே இருக்க அவர்கள் ஆர்டர் செய்த காஃபியையும், டீயையும் எடுத்து வந்தார் வெயிட்டர். அதை அவர்கள் அருந்த தொடங்க, சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.
அவனுடைய பேச்சில் அவளுக்கு சிறிது நம்பிக்கை பிறந்தாலும் உடனே எந்த பதிலையும் கூற விரும்பாதவள், சரி மிஸ்டர். ஹர்ஷா. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் யோசிச்சு சொல்லட்டுமா? என்று கேட்க,
ஓகே.. அம்ருதா.. இது என்னுடைய காண்டாக்ட் டீடெயில்ஸ் என்று தனது அலைபேசி என் அடங்கிய அட்டையை அவளிடம் நீட்ட,
அதை பெற்று கொண்டவள் அதனை தன் கை பைக்குள் வைத்து கொண்டிருக்கும் நேரம் அவனது அலைபேசி ஒலிக்க தொடங்கியது. எக்ஸ்கியூஸ் மீ, என்றவன் அழைப்பை ஏற்று காதில் வைகத்து அவன் பேச தொடங்க, நிமிர்ந்து அவனின் முகத்தை ஆராய்ச்சியாய் நோக்கினாள்.
இறுக்கமான முகம், கம்பீரமான தோற்றம், கோதுமை நிறம் என அடர்ந்த கேசத்துடன் பார்க்கவே அட்டகாசமாக இருந்தான். தினமும் உடற்பயிற்சி செய்வதற்க்கு அடையாலமாக அவன் உடல் இறுகி புஜங்கள் இரண்டும் அவன் சட்டையுடன் ஒட்டிப் போய் இருக்க,
அவன் விழிகளை நோக்கி பார்வையை செலுத்தும் நொடி அவனும் அவளை பார்த்து விட இருவரது பார்வையும் ஒருசேர மோதி கொண்டன. அதில் படபடத்து போனவள் சட்டென தன் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டாள். அதில் அவன் உதட்டில் சிறு கீற்று புன்னகை விரிந்தது.
பிறகு பணத்தை செலுத்தியவன் அவள் புறம் திரும்ப, “ட்டூ டேய்ஸ்ல என்னோட முடிவை சொல்றேன் மிஸ்டர். ஹர்ஷா..” என்று கூறவே,
“ஓகே அம்ருதா. டேக் யோர் ஓன் டைம்” என்றதும்,
“ஹ்ம்ம்ம்.. கிளம்பலாமா? ஆத்யா தூக்கத்துல இருந்து எழுந்திரிக்கிற டைம் ஆகிடுச்சு? என்று கேட்டிட, அவனும் சரி என்று எழுந்து நடக்க துவங்கினான். இவளும் அவனை பின் தொடர, ஏதோ சிந்தனையிலேயே சென்றவள் எதிரே வரும் காரை கவனிக்காமல் நடந்து கொண்டிருக்க அது அவளை மோதுவது போல் வந்தது. சட்டென அவள் கரத்தை பற்றி இழுத்ததில் அவன்மீதே மோதி நின்றாள் அம்ருதா.
“பார்த்து நடங்க அம்ருதா” என்றவன் முகமும் பதற்றத்தை தத்தெடுத்தது. அவளுக்காக அவன் பதறுவதை கண்டவள் மனம் கொஞ்சமே கொஞ்சம் அவன் புறம் சாய தொடங்கியது.
அதன் பிறகு அவள் கரத்தை பற்றியப்படியே அவனுடைய காருக்கு அழைத்து சென்றவன் கார் கதவை திறந்து விட, அவள் அமர்ந்ததும் காரை அவள் வீட்டை நோக்கி செலுத்த துவங்கினான். போகும் வழி எங்கும் இருவரும் ஒரு வார்த்தையும் பேசி கொள்ளவில்லை.
வீட்டை அடைந்தவன் அவள் புறம் திரும்ப காரை விட்டு இறங்கும் முன்பு ஒரு முறை அவன் புறம் திரும்பி “சரி அப்போ நான் கிளம்புறேன்” என்றாள். பதிலுக்கு “சரி” என்பது போல் அவன் தலையசைத்ததும் வெளியேறியவள் தனது வீட்டிற்குள் சென்று விட்டாள்.
காரை எடுத்து கொண்டு கிளம்பியவனுக்கு இவ்வளவு நேரம் அவளுடன் இருந்த நிமிடங்கள் இனிமையாகவும் இப்போது தனித்து இருப்பது வெறுமையாகவும் தெரிந்தது. “நீங்க என்ன சொல்ல போறீங்களோன்னு இருக்கு அம்ருதா. ப்ளீஸ்.. சீக்கிரம் ஓகே சொல்லிடுங்க” என்றவன் எண்ணங்கள் முழுவதும் அம்ருதாவே நிறைந்து இருந்தாள்.