அன்னமே 45
அத்தியாயம் 46
சிற்பம் வடிக்க அங்க அளவுகள் தேவை..!
அதற்கு தேவையான அளவுகோல் உபகரணம் தேவை..!
கையையும் கண்களையும் கொண்டு சிற்பம் செய்திடத்தான் முடியுமா..!
முடியுமே..!
ஏற்கனவே செய்த சிலையின் அளவை எடுக்க கண்பார்வையே போதும்…!
சத்தியசீலன் அன்னத்தின் அங்கங்களில் வேட்கையுடன் இரு கரம் கொண்டு உணர்ந்தான். இது போதாதே வேக மூச்சுடன் பின் அழகை உள்ளங்கையால் வதைத்தான்.
ஒரு கரம் அங்கே தேங்க அடுத்தது இடையில் இருந்து மேலே சென்று வதைக்க, அங்கே எச்சில் தடம் பதிக்க அவன் அதரங்கள் ஊர்ந்து சென்றது.
தேகம் முழுவதும் அவன் ஆளுமைக்குள் அடங்கி அடிமையாய் சரண் புக, வலியும் இன்பமாய் போக அவன் மார்பில் அடர்ந்திருந்த ரோமங்களை விரல்களால் சுருட்டி இழுத்தாள்.
அவன் மோகக்காய்ச்சல் அவளையும் பிடிக்க பற்களால் அவன் மார்பெங்கும் கடித்தாள்.
அவள் இடையை தன் உடலோடு சேர்த்து அடக்கினான் அவளை.
சத்தியசீலன் அணைப்பில் சிக்கிய அன்னம் விட்ட அனல் மூச்சில் அவனுக்கு தேகம் மொத்தமும் மோகத்தீ பற்றி எரிய அவளை அடைந்து விட தவித்தான்.
அவள் முகத்தை பற்றி தன்னை பார்க்க செய்தவன் விழிகளால் அவள் விழிகளுக்குள் ஊடுருவினான். அவன் பார்வைக்கு பதிலடி தர நாணம் வந்து தொலைக்க இரு கரத்தாலும் அவனைக் கட்டி மார்பில் முகம் புதைத்தாள் அன்னம்.
மனைவியாய் அன்னம் அடுத்த கட்டம் போக தயாராகத்தான் இருந்தாள். பொண்டாட்டின்னா இதுவும் கடமைதான் என தெரிஞ்சது அவளுக்கு.
ஊதக்காத்து குளிருல அவன் தேக வெம்மை இதமா இருந்துச்சு, ஒட்டிக்கொண்டாள் அவனோடு.
அவள் இடையோடு கரம் வைத்து காட்டுப்புயலா ஆவேசமாய் சுற்று வளைத்து அங்கேயே அவளை அறிய முயற்சி செய்ய,
தளிர் மேனி அவன் ஆண்மை கண்டு அஞ்சி நடுங்க அவனுக்குள் புதையுண்டாள் அச்சமும் ஆர்வமுமா.
பலத்த காற்றுக்கு தேங்காய் தொப்பென்று விழும் சப்தம் காதில் விழ, அவளை விடுவித்தவன், தப்பு செஞ்சவன் போல நெற்றியில் அரைந்து, அவள் பார்வையை தவிர்த்தான்.
“என்னாச்சு” அவன் பக்கத்துல வந்தாள் அன்னம்.
அவள் நெருக்கத்த பாம்பை கண்டவன் கணக்கா நகர்ந்து விலகி,
“அட சாவி இங்க இருக்கு” அவள் கையை விடுவிச்சிட்டு அதுவரை நடந்தது எல்லாமே கனவு என்று இல்லாத சாவிய நோக்கி அவன் போவ.
“என்னாச்சுன்னு கேக்கறேன்” அவன் பக்கம் போவ.
வெரசா வீட்டுக்கு உள்ள போய்ட்டான் சத்தியசீலன்.
தன் தொடுகையை அவன் தவிர்ப்பது தெள்ள தெளிவா தெரிய செருப்படி வாங்கிய மாதிரி ஆச்சு அவளுக்கு.
வீட்டுக்குள் போனவன் நிலை எப்படியோ, இங்க நின்ன அன்னத்துக்கு பாதியில கைவிடப்பட்ட நிலை. அவள் ஆசைய தூண்டிவிட்டுட்டு பாதியில விட்டுப் போனவனை என்னாச்சுன்னு கேட்கவும் அவளுக்கு நாணம் தடுத்துச்சு.
கலைந்து தரையில் கிடந்த முந்தானைய எடுத்து போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ளே போனாள்.
இதுக்கு எதுக்கு அம்புட்டு கஷ்டப்பட்டு கட்டிக்கணும், காப்பாத்தணும். இப்ப விலகி விலகிப் போவனும்னு என்ன அவசியம்? கண்களில் கண்ணீர் அரும்பியது.
புதுசா வாங்கிப்போட்ட கட்டில் ஒய்யாரமா கெடக்க, அதை வெறிச்சுப் பாத்தவ அதில படுக்காம தரையில விரிச்சுப் போட்டு படுத்தாள்.
தொட்டாவே பாவம்னு விலகிப்போற மனுஷனுக்கு பக்கத்துல படுத்தா மட்டும் ஆவுமா. எதுக்கு தேவையில்லாம தொந்தரவு பண்ணிக்கிட்டுன்னு நெனைக்க நெனைக்க கண்ணீர் அரும்ப எத்தன தடவ துடைக்க, முந்தானையை இழுத்து முகத்தை மூடி படுத்தாள்.
பாதுகாப்பை ஒரு முறை உறுதி செஞ்சுட்டு உள்ள வந்தவன் அன்னம் தரையில படுத்திருக்க பாத்து, ஒன்னும் கேக்காம சட்டைய கழட்டி மாட்டினான்.
அவன் வந்தது தெரிஞ்சும் அசையாம படுத்திருந்த அன்னத்துக்கு அவன் இருக்கற சத்தம் இல்லாம போவவும் ‘அப்ப நாம நெனச்சதுதான் சரி. பக்கத்துல படுக்கறது கூட புடிக்கல இவருக்கு’ கண்ணை துடைத்தாள்.
அவள் மீது ஏதோ இதமாய் படரவும் அசையாம கவனித்தாள் என்னவென்று. அவன் போர்த்தி விட்டிருந்தான் அவளுக்கு.
அவ பக்கத்துலயே விலகிப் படுத்தான் வெறும் தரையிலயே.
அவன் தன்னை விட்டுக் கொடுக்காம இருக்கான்னு நெஞ்சுக்குள் நிம்மதி பிறந்தது அவளுக்கு.
எதையும் விரிக்காம படுக்கறார் தரை சில்லுன்னு இருக்குமே அவளுக்கு அவன் மேல அக்கறை வந்துச்சு.
அவ பக்கத்துல படுத்தவன் “படுக்க ஆவாத கட்டிலும் மெத்தையும் எதுக்கு. வெளியே தூக்கி போட்டு எரிச்சுப்புடலாமா?” அமைதியா அவன் குரல் ஒலிக்க,
அத்தன வசவு வாங்கிட்டு வாங்கி போட்டது எரிக்கறதுக்கா, எந்திரிச்சு உக்காந்து அவனை பாத்தாள்.
“அனாவசியமா பேசிட்டு இருக்காத சொல்லிட்டேன். அம்புட்டு காச போட்டு வாங்கிட்டு எரிக்கறேன்னு சொல்ற?”
“நீ படிச்சவதான?” கேட்டான்.
“இப்ப எதுக்கு அது?” புரியல அவளுக்கு.
“நீ பேசறத நீயே யோசி தெரியும்” அவனும் எந்திரிச்சு உக்கார.
“இப்ப என்ன இங்கயே படுக்கறதா இல்ல கட்டில்லயா?” அவகிட்ட கேட்டான்.
அவனுக்கு பதில சொல்லாம எதுக்கு இங்க வந்து படுத்தோமுன்னு அவள் சிந்தித்தாள்.
அவனுக்கோ செலவு பண்ணிட்டான்னு சண்ட போட்டதுக்கு கோச்சிட்டு தனியா படுக்கறான்னு நெனச்சிட்டான்.
“போய் படு வரேன்” அவனை போகச் சொல்லிட்டு எந்திரிச்சவள் லைட்ட அணைச்சிட்டு கட்டில்ல வந்து படுத்தாள்.
அத்தனை இடம் இருக்க கட்டில்ல ஓரமா படுத்திருந்த அவன் பக்கத்துல உரசுராப்புல படுத்தாள் அன்னம். ஒருவேள அவனா நெருங்க தயக்கமா இருந்தாலும் நாமளா போனா அது மறையுமோன்னு நெனச்சாள்.
அவள் தேகம் உரச, எந்திரிச்சான், “எனக்கு தூக்கம் வருது அன்னம். நாளைக்கு தலைக்கு மேல வேல கெடக்கு. உங்கூட ராவு முச்சூடும் படுத்து எந்திருச்சி விளையாண்டா காலம்பற நேரத்துல எந்திரிக்க உடம்பு வளையாதுடி. வெளியே கூட போய் படுத்துக்கறேன் என்னை விட்டு தள்ளிப் போய் படு அன்னம்” சொன்னான்.
“தள்ளிப் போறதா?” திட்டுக்கிட்டு கேட்டாள்.
அவளை பார்த்தவன், “சொல்லி உன் மனச காயப்படுத்த வேண்டாமேன்னு பாக்கறேன். என்ன விட்டு தள்ளி இரு” சொன்னான் அவள் முகத்த பாக்காம.
“என்னாச்சு நா என்ன தப்பு பண்ணே” கேட்டாள். புருஷன் தள்ளிப் போன்னு சொல்றது எம்புட்டு அசிங்கம் ஒரு பொண்ணுக்கு அன்னத்துக்கு முகமெல்லாம் அவமானத்துல சுண்டிப் போச்சு.
திரும்ப படுத்தவன், “நா பொறுக்கிதான் முரடந்தான் அன்னம். ஆனாக்கா பொம்பளை பொறுக்கி இல்ல. உன்ன கட்டிக்கிட்டு நல்லா வச்சிக்க ஆசைப்பட்டேன். அம்புட்டு ஆச உம்மேல. என்னடா அடிச்சு துன்புறுத்துனவனுக்கு ஆசை காதலான்னு உனக்கு தோனும். ஆனா அப்பவும் இப்பவும் நா தேடுன ஒரே பொண்ணு நீதான் அன்னம்” வெறுமையா சொல்லிட்டு,
“ஒரு நா படுத்தா உன் மேல இருக்க ஆச வடிஞ்சு போவுமுன்னு சொன்னடி நீ. நீ சொன்னா மாதிரி அவுசாரிகூட படுக்கத்தான் ஆவேன் நா. உன்ன மாதிரி கோவில் செலைய தொட்டு பாக்க கூட தகுதி இல்லடி எனக்கு”
அவன் சொன்ன வார்த்தைகள் அவளை கொல்லாமல் கொன்னது. அதெல்லாம் தன் வாய் மொழியாக வந்தவைன்னு பட அவனையே வெறிச்சு பார்த்தாள்.
“நா கோவத்துல சொன்னது அது. இன்னும் மறக்கலையா” கண்ணீர் குரலில் கேட்டாள்.
“மறக்க அது ஒண்ணும் கணக்கு பாடம் இல்லையே புள்ள. வாழ்க்கைகாக உங்கிட்ட கெஞ்சிட்டு நின்ன நேரம் அது. பிடிக்காத ஒருத்தன் கூட பொழைக்க நா என்ன வக்கத்து போனவளான்னு கேட்டு எம்மனச நொறுக்கிட்ட புள்ள” இரைந்தான்.
“எதுக்கு என்ன கட்டிக்கிட்ட. அப்படியே போ வேண்டியதுதான. இப்படி கட்டிக்கிட்டு வந்து நடந்தத சொல்லிக் காட்டனுமுன்னு என்ன வந்துச்சு” அவளும் பதிலுக்கு சீற.
“உங்கண்ணன் எங்கால்ல விழுந்துட்டான். அவனுக்காக புள்ள. கட்டிக்கிட்டாச்சு நீ ஒரு ஓரமா நா ஒரு ஓரமா ஒரே வீட்டுக்குள்ள பொழைப்போம்” சுளுவா சொல்லிட்டான் ஆனா முடியுமான்னுட்டு யோசிக்கல.
“எனக்கு உன்ன புடிக்கும்” அன்னம் தவிப்போடு தங்கள் வாழ்க்கைய சீர் படுத்த நெனச்சாள்.
“எப்ப இருந்து” அவன் கேள்வி.
“நீ என் கழுத்துல தாலி கட்டுன அப்ப இருந்து. அதுக்கு முன்ன உன்ன பத்தின நெனப்பு குழப்பமா வந்துட்டு போச்சு. புரியல அப்ப” அன்னம் பதிலுறைத்தாள்.
“இல்ல அன்னம் உனக்கு இன்னும் குழப்பமாத்தான் இருக்கு. தாலி கட்டிக்கிட்டதுக்காவ என்கூட வாழ பாக்குற. உன் கண்ணுல காதல் இல்ல” மறுத்தான் அவளை.
“அப்படி இல்ல” அன்னம் மறுத்தாள்.
“உம் மனசுல நா வந்துட்டேன்னா எனக்கே தெரியும் அன்னம். அப்ப முடிவெடுப்போம் நாம ஒண்ணா இருக்கறத பத்தி” சொன்னவன் “இப்ப தூங்கு. மனச போட்டு குழப்பிக்காத. குறை மனசோட வாழ்க்கையை ஆரம்பிச்சா நல்லதுக்கில்ல அன்னம்” கண்களை மூடினான்.
அவனை விட்டு தள்ளி போய் படுத்த அன்னம் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராம அழுதாள். தன் விதிய நெனச்சு.
புருஷன் தள்ளி வைக்கறது எம்புட்டு கொடுமைன்னு அன்னத்துக்கு புரிய வலிச்சது அவளுக்கு.