அரிமா – 17

4.7
(16)

‘நம்மகிட்டையே சந்தியாவை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறான் எவ்வளவு திமிரு? ம்ஹ்ம்  கொலை பண்றவனுக்கு  திமிருக்கு என்ன குறைச்சல். ச்ச இவனை போய் நல்லவன்னு நம்பி உருகிட்டு இருக்கோமே’ என மனதிற்குள் திட்டியபடி தனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்த மதியை, அறைக்கு நடுவே இருந்த ராட்சத படுக்கை வரவேற்றது .

முறையாக பராமரிக்கப்பட்ட வெள்ளை நிற மார்பில். அறையெங்கும் ரம்மியமாக ஒளிவீசிய சாண்ட்லியர் விளக்கின் அழகு, சுற்றி இருந்த அறிய வைகான ஓவியங்கள். வண்ண வண்ண விளக்குகள் என தங்க கூண்டு போல ஆடம்பரமாக காட்சியளித்த அந்த அறையில் மாட்டிக் கொண்ட சிறு பறவையாக தன்னை உணர்ந்தவளுக்கு, எப்பொழுதும் போல கண்ணீர் தான் வந்தது.

“ஏன் எனக்கு மட்டும் இப்படி? இங்க வந்து இப்படி மாட்டிகிட்டேனே.எப்படி தப்பிக்க போறேன். அப்பாவுக்கும் இவனுங்களுக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியல, இவனுங்க என்னை என்ன பண்ணுவாங்கன்னே தெரியலையே.” என்று  மதுவின் மனம் அரற்ற, உடல் அழுகையில் குலுங்கியது .

அந்த பிரம்பாண்டமான அறையே அவளை வெகுவாக அச்சுறுத்தவும், பெண்ணவளுக்கு மூச்சுமுட்டுவது போல தோன்ற அறையில் இருந்து வெளியேறியவள் ஆதித்யா இருக்கிறானா என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி கீழே வந்தாள் .

ஆங்காங்கே சாம்பல் நிற சபாரியில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் துவாரபாலர்களை கவனித்தாள். எத்தனை பேர் வந்தாலும் துவம்சம் செய்துவிடும் தோரணையில் காட்சியளித்தனர். இறுக்கமான முகத்துடன் அங்கும் இங்கும் நடந்தவர்கள் இவளை கண்டதும் ‘ குட் மார்னிங் மேம் ‘ என்று வணக்கம் வைக்க,

முதலில் தடுமாறியவள் பிறகு பதிலுக்கு தலையசைத்துவிட்டு, நல்லவேளை அவன் கண்ணுல படல, என்று வெளிப்படையாகவே கூறிய மது, வெளிக்காற்றை சுவாசித்தால் இறுக்கம் தளரும் என்றெண்ணி தோட்டத்திற்குள் வந்தாள் .

‘ அவன் ஒரு கெட்டவன், அவன் என்னை ஏமாத்திருக்கான். அவன் ஒரு அரக்கன். அவன் மேல நமக்கு எந்த ஈர்ப்பும் வர கூடாது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாம இங்க இருந்து தப்பிக்கணும் ‘ என்று கண்களை மூடிக்கொண்டு தனக்குத்தானே மது எவ்வளவு தான் சொல்லி கொண்டாலும், பெண்ணவளின் எண்ணம் முழுவதும் ஆணவனே ஆக்கிரமித்திருந்தான். போதாக்குறைக்கு நேற்றிரவு நடந்த முத்த பரிமாற்றம் வேறு அவளது நினைவடுக்கில் வந்து போக, மதுவுக்கு இப்பொழுது தன் மீதே ஆத்திரமாக வந்தது.

********

தன் அலுவலகத்தில் இருந்த சிறு வேலையை முடித்துவிட்டு உணவு கூடத்திற்கு வந்தான் ஆதித்யா. வழக்கம் போல நாகா, வீரா மற்றும் தாரா அவனுக்காக உணவு மேஜையில் காத்திருந்தார்கள் .

” குட் மார்னிங் ஆதி ” – நாகா

” மார்னிங் கைஸ் ” – இருக்கையில் வந்து அமர்ந்தவனின் கண்கள் மதியை தேடின .

” மதி வரலையா “- தாராவிடம் கேட்டான். சட்டென்று அவளது முகம் இறுகியது .

” இன்டெர்க்காம்ல கூப்பிட்டேன் அவ அன்ஸர் பண்ணல. ரூம்க்கு போனேன் அவ அங்க இல்லை ” இயந்திரம் போல கூறினாள் .

“ரூம்ல இல்லையா !” ஆதித்யாவின் தாடை இறுகியது .

” ஆதி ரிலாக்ஸ். கார்டன்ல கூட இருக்கலாம் நான் போய் செக் பண்ணிட்டு வரேன் ” என்று வீரா கூறும் பொழுதே ,

” சார் மேம் கார்டன்ல இருக்காங்க ” என பரிமாறிக்கொண்டிருந்த வேலைக்கார ஆண் இடையிட்டான் .

” நான் தான் சொன்னேன்ல. போய் கூட்டிட்டு வாரேன்” என்று எழுந்த வீராவை தடுத்த ஆதி ,

” இல்ல நீங்க எல்லாரும் கண்டின்யு பண்ணுங்க நா இப்போ வந்துடறேன் ” – என்ற ஆதி மதியை தேடி தோட்டத்திற்கு சென்றான்  .

பூ செடிகளுக்கு நடுவே கைகளை கட்டிக்கொண்டு இலக்கில்லாமல் எங்கோ வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள் மதுமதி .

” அப்படி என்ன தீவிரமான யோசனை ?” – திடீரென்று தன் பின்னால் கேட்ட கணீர் குரலில் அதிர்ச்சியுடன் திரும்பினாள் .

‘ நான் தானே ஏன் இந்த பயம் ‘ – அவன் மனம் கேட்டது .

‘ உன்னை ஏமாத்திட்டு எப்படி தப்பிக்கணும்ன்னு தான் யோசிக்கிறேன். சொன்னா விட்டுடுவியா ?’ – அவள் மனம் கேள்வி கேட்டது .

இருவரும் ஆளுக்கொன்றை எண்ணியபடி ஒருவரை ஒருவர் பார்க்க விழிகள் ரெண்டும் பின்னிக்கொண்டன .

” என்னை மீறி யாரால உன்னை என்ன செய்ய முடியும் ?”- கேட்டானே ஒரு கேள்வி. சட்டென்று அவனை ஏறிட்டாள். அவள் பார்வையில் கோபம் இருக்கிறதோ என்று ஆதித்யா ஆராய்வதற்குள் தன் பார்வையில் இருந்த கடுமையை குறைத்து கொண்டாள் .

‘ இதை சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும். ‘ தனக்குள் முணுமுணுத்தவள் அவனிடம் புரியாதது போல் பார்த்தாள் .

” இல்லை இவ்வளவு பயம் உனக்கு வேண்டாம்ன்னு சொன்னேன் “

” ம்ம்ம் “இயலாமையில் பேச முடியாமல் ம்ம் கொட்டினாள். ஒரு துளி கண்ணீர் இமை தாண்டி கீழே விழ அவன் பார்க்காத வண்ணம் அதை துடைத்துக் கொண்டாள் . ஆனால் அது ஆதித்யாவின் கழுகு பார்வையில் இருந்து தப்பவில்லை.

” வலிக்குதா ” அடிபட்ட காயத்தை தொட்டுப்பார்க்க கிட்டே நெருங்கினான் .

“இல்லை ” உடனே விலகினாள். அவளுடைய விலகல் அடிவாங்கியது போல அவனுக்கு வலித்தது. சிகையை கோதி அழுத்தமான மூச்சை வெளியிட்டவன் .

” சாரி மதி. உன்னையோ உன் ஃப்ரண்ட்டையோ காயப்படுத்தனும் என்பது என் எண்ணம் கிடையாது. உனக்கு நடந்தது எல்லாமே தப்பு தான், அதை சரி பண்ண தான் நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் புரிஞ்சிக்கோ ” – தவிப்புடன் கூறினான் .

எப்பொழுதும் இருப்பதை விட இன்று அவன் குரலில் தெரிந்த அதிகப்படியான நெருக்கம், அவளது உயிர் வரை சென்று அவளை தாக்கியது .

” சந்தியா பத்திரமா இருக்கா, நீ கவலை படாத. அவளுக்கு எதுவும் ஆகாது. உன்னை இந்த மாதிரி என்னால பார்க்க முடியலை ” – உருகினான். மீண்டும் ஏதோ ஒன்று அவள் உயிர் வரை சென்று தாக்கியது. குழந்தையின் பிஞ்சு பாதத்தின் வருடல் போல அவனது குரலில் இருந்த மென்மை அவளுள் சிலிர்ப்பை ஏற்படுத்த,  ஏதோ அவன் அவளுக்காகவே உருகுவது போன்றதொரு எண்ணம் அவளுக்குள் ஏதேதோ செய்தது.  பொல்லாத ஆசைகள் எல்லாம் எட்டிப்பாரக்க, மதுமதி அதிர்ந்தே விட்டாள்! .

‘ ம…தி ஆர் யு மேட், டோன்ட் ட்ரஸ்ட் ஹிம். இந்த மாதிரி பீலிங்ஸ் எல்லாம் உனக்கு சரி கிடையாது ‘ என்று மனதில் எண்ணியவளுக்கு, சுவாசமே தடைபட்டது போல மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. படபடத்த மனதை ஆழ மூச்செடுத்து தனது கட்டுக்குள் கொண்டுவந்தவள் .

அவனால் தன் மனதில் தளிர் விட்ட ஆசையை. ,

” தேங்க்ஸ் ” என உயிர்ப்பே இல்லாத ஒரே வார்த்தையில், அது மலரும் முன்பே கிள்ளி எறிந்தாள். மீண்டும் பட்ட இடத்திலே அடி வாங்கிய உணர்வில் ஆதித்யாவின் முகம் கறுத்துவிட்டது .

ஏனோ அவனை பார்க்க துணிவில்லாமல் மதி தலையை தாழ்த்தி கொள்ள, ஆத்திரத்தை பற்களை கடித்து அடக்கிக்கொண்டான் ஆணவன்.

 மதுவுக்கோ நிமிர்ந்து பார்க்காமலே அவனது பார்வை  கணப்பொழுது கூட விலகாமல் தன் மீதே நிலைத்திருப்பதை உணர முடிய,

‘ ராட்சசன் இப்போ ஏன் இப்படி பார்த்து வைக்கிறான் ‘ உதட்டை கடித்தவள் நிமிராமல் அப்படியே நிற்க, சிறிது நேரம் அவளை தன் பார்வையாலே சங்கடபப்டுத்திய ஆதித்யா,

” வா ” என்றவன் அவளை பார்க்காமல் திரும்பி நடந்தான் .

” எங்க வரணும் ?”- இடையிட்ட அவள் குரலில் நின்றவன் ,

” பிரேக்ஃபாஸ்ட் ரெடியா இருக்கு. எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க வா ” திரும்பி பார்க்காமலே கூறினான் .

‘உன் தொல்லை வேண்டாம்ன்னு தான டா நான் இங்க வந்தேன். இதுல உன் கூட வேற வந்து உக்கார்ந்து சாப்பிடணுமா முடியாது போ டா ‘ மனதிற்குள் சொல்லிவிட்டாள்.. அவனிடம் சொல்ல முடியுமா? முடியாதே !

” எனக்கு இப்போ வேண்டாம் ” நாசுக்காக அவனிடம் இருந்து தப்பிக்க பார்த்தாள் .

ஏது அவனிடம், அதெல்லாம் முடியுமா என்ன??,

” பசிக்குதான்னு கேட்கல வான்னு சொன்னேன் “என்றவன் மதியின் விழிகளை பார்க்காமலே அவளது கரத்தை பிடித்து அழைத்து, இல்லை இல்லை இழுத்து சென்றான் .

அறிந்தது தானே ! என்று அவளது விருப்பம் அவனிடம் நடந்திருக்கின்றது. இப்பொழுது நடக்க, ஒன்றும் செய்ய முடியாத தன் இயலாமையை எண்ணி வேதனையுடன் அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள் மதுமதி .

முழுக்க முழுக்க கண்ணாடியால் ஆனா அந்த பிரம்மாண்ட உணவருந்தும் மேசை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அங்கே நாகா , வீரா மற்றும் தாரா ஆகிய மூவரும் இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர் .

ஆனால் அவர்கள் யாரையும் பார்க்காமல் ஆதித்யாவின் கைபிடித்தபடி அவன் பின்னால் குனிந்த தலை நிமிராமல் மதி நடந்தது வர , அவளை கண்டதும் ,

” ஹாய் மது” வீரா புன்னகையுடன் வரவேற்றான் .

“ஹாய் ” பதிலுக்கு வீராவை பார்த்து புன்னகைத்தவள்.அருகில் இருந்த நாகாவை பார்க்க ,

” குட் மார்னிங் ” என விருப்பமே இல்லாமல் கூறிய நாகா. அவள் பதிலை எதிர்பாராமல் சாப்பாட்டில் கவனமானான். தாராவோ மதியை கண்டுகொள்ளவே இல்லை. புறக்கணிக்கப்பட்ட அவமான உணர்வில் தயங்கியபடி நின்றவளுக்கு ஒரு நாற்காலியை இழுத்து ,அவளை வசதியாக அமரவைத்துவிட்டு, இயல்பாய் அவள் அருகில் அமர்ந்தான் ஆதித்யா .

‘ ம்ம்ம் நடிப்பு சும்மா அள்ளுதே அப்படியே பாலிவுட் போனா. நாலு காசாவது பார்க்கலாம். என்கிட்ட காட்டி ஒரு யூசும் இல்லை. நீ என்ன பண்ணினாலும் மயங்கவே மாட்டேன் டா அரக்கா.. நாற்காலியை நகர்த்தி கொடுத்தா நீ நல்லவனா ! ‘ அவள் மனதிற்குள் எண்ணி கொண்டிருக்கும் பொழுதே , அவளுக்கும் சேர்த்து தானே பரிமாறினான் .

ஆதித்யா மதிக்காக பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு செய்கையையும் அவர்களுக்கு எதிரே இருந்து பார்த்து கொண்டிருந்த தாராவுக்கு எரிச்சலாக இருந்தது.

இது ஆதித்யா சக்கரவர்த்திக்கும் அவனுக்கு முக்கியமானவர்களுக்குமான பிரத்தியேக உணவு மேஜை .

அவர்களை தவிர வேறு யாருக்கும் அங்கே உணவு அருந்த அனுமதி இல்லை. அப்படி இருக்க. ஜித்தேரியின் ஜென்ம விரோதியின் மகளுக்கு அங்கே ஒரு இடம் இருக்கின்றது. அதுவும் தனக்கு மிகவும் விருப்பமானவனுக்கு அருகிலே இருக்கின்றது – என்று மிகவும் வருந்திய தாராவுக்கு தொண்டை குழிக்குள் உணவு இறங்க மறுத்தது.

மதியோ பரிமாறப்பட்ட உணவின் மீது கவனம் செலுத்தாமல், தான் இருக்கும் இடத்தையே ஆராய்ந்து கொண்டிருக்க,

” ஏன் சாப்பிடாமலே இருக்க ?” – என ஆதித்யா மதியின் பக்கம் திரும்பி கேட்டான் .

” சாப்பிடுறேன் ” என்றவள் அப்பொழுது தான் தன் தட்டில் இருக்கும் உணவை கவனித்தாள் .

‘ கோதுமை அப்பம் , பல வகை காய்கறிகள் நிறைந்த சாலட் , நறுக்கி வைக்க பட்ட ஆப்பிள் துண்டுகள் , அருகிலே ஒரு கிளாஸ் நிறைய பச்சை நிற திரவம் ‘ இதை கண்டதும் மதியின் வாடிய முகம் மேலும் வதங்கி விட்டது .

‘ சாப்பாடை எங்க டா ??. ஒரு முட்டை கூட இல்லை. ‘ சலித்து கொண்டாள். அவளது பார்வையை வைத்தே அவள் மனதை படித்தவன் ,

” ஏன் சாப்பாடு புடிக்கலையா ?” – என கேட்டான் .

” புடிச்சிருக்கு ” அவனை பார்க்காமலே கூறினாள் .

‘ ஏன் இப்படி எல்லா வற்றையும் கவனிக்கிறான். விட்டா எத்தனை தடவை மூச்சு விடுறேன்னு கூட சொல்லிருவான் போல ‘ – எரிச்சலுடன் விருப்பமே இல்லாமல் உள்ளே தள்ளினாள்.

அப்பொழுது திடிரென்று நாகாவின் அலைபேசி சினுங்க அழைப்பை ஏற்றவன் ,

” ம்ம் சொல்லுங்க “

” வாட் ” என்றான் .

” ஓகே ” என்று அழைப்பை துண்டித்தவன். ஆதித்யாவை அழைத்தான் .

” சொல்லு நாகா “சாப்பிட்டு முடித்திருந்த ஆதித்யா அலைபேசியை தன் கையில் எடுத்தபடி கூறினான் .

” ஆதி அது அவங்க தான்னு உறுதியாகிடுச்சு, என்ன பண்றதுன்னு கேட்குறாங்க ? ” என்றான் நாகா .

ஆதித்யாவின் முகம் தீவீரமாக மாறியது,

 ” புடிச்சு இங்க கொண்டு வர சொல்லு. நான் யாருன்னு அவனுக்கு காட்றேன் ” – மெதுவாக ஒலித்த அவனது குரலில் பூகம்பத்துக்கான அறிகுறி தெரிந்தது .

” ஓகே ஆதி ” என்ற நாகா அலைபேசியில் ஆதித்யா கூறி செய்தியை சற்று முன் தனக்கு அழைத்த நபரிடம் கூறினான் .

 ஆதித்யாவின் அடங்கிய ஒலித்த குரலில் இருந்த குரூரத்தை உணர்ந்து சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்த மதி அவன் முகத்தில் தெரிந்த உக்கிரத்தை கண்டு அவனை மிரட்சியுடன் நோக்கினாள்.  கோரப்பசியில் உறுமும் நரமாமிசனாய் காட்சி அளித்தான் ஆதித்யா.

அதிகப்படியான அச்சம் ஆட்கொள்ள, மிரட்சியுடன் அவனை பார்த்த மதிக்கும் உடலில் ஒருவித நடுக்கம் ஏற்பட,

“என்னாச்சு” காற்று குரலில் வினவினாள்.

 மதியின் நடுக்கத்தையும் பயத்தையும் உணர்ந்து, நீண்ட பெருமூச்சை வெளியிட்டபடி தன்னை நிலைப்படுத்திக்கொண்ட ஆதித்யா இப்பொழுது மதியின் பக்கம் முழுதாக திரும்பினான்.

மதி சுவைப்பதற்காக எடுத்த ஆப்பிள் துண்டில் ஒன்று, அவளது நடுங்கும் கரத்தில் இருந்த குத்து கரண்டியில் சிக்கிக்கொண்டு , அவளின் இதழுக்கு மிக அருகில் நடுங்கும் அவளது கரத்துடன் சேர்ந்து நடுங்கிக்கொண்டிருந்ததை கண்டான் .

‘ பயந்துவிட்டாள் ‘ அவன் மனம் சொன்னது.

” மதி யூ ரிலாக்ஸ், ஒன்னும் இல்லடா நான் ” என்று ஆரம்பித்த ஆதித்யாவின் பார்வை இப்பொழுது அவளது விழிகளை சந்தித்தது. அவனது பார்வை அவளது வதனத்தை படித்தது. அரண்ட விழிகள்! அதிர்ச்சியில் துடிக்கும் இதழ்கள்! வெளிறிப்போன முகம்!

‘இப்போ அப்டி என்ன நடந்ததுன்னு  இவ்வளவு பயப்படுறா ?? ப்ச் ‘ என எண்ணிய ஆதித்யா,  தன் கண்களை இறுக்கமாக மூடி நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன், மதியை நெருங்கி , அவளது நெற்றி ஓரம் வந்தாடிய சிகையை மெதுவாக அவளின் காதோரம் சொருகி,  மதியின் வதனத்தை தன் இரு கரங்களுக்குள் ஏந்தி, தன் பார்வையால் அவளை ஊடுருவினான்.

 ஆணவனின் பார்வையில் இருந்த நெருக்கம் மதுவை தடுமாறச் செய்ய, இப்பொழுது அவளது உடல் இன்னுமே நடுங்க,அவனோ அவளது நடுக்கத்தை உள்வாங்கியபடியே,

  “பயப்படாதடா நான் பாத்துக்கிறேன்” என்ற ஆதித்யா உருக்கமான குரலில் கூறி அவளது நெற்றி அருகே குனிந்த தருணம், சட்டென்று சுயத்திற்கு வந்தவள் அவனது மார்பில் கை வைத்து,

” எல்லாரும் இருக்காங்க” என்றாள் தவிப்பாக.

எங்கே ஏடாகூடமாக ஏதாவது செய்து விடுவானோ என்கிற பயத்தில், அப்படி கூறி அவனை விட்டு மதி விலக பார்க்க, அதைப் புரிந்து கொண்டவனோ,

 ” ஓ அப்போ நம்ம பெட் ரூம் ஓகே வா ”  என தன் இதழைக் கடித்து சிரிப்பு அடக்கிக் கொண்டு, இயல்பாய் கேட்பது போல கேட்க, அவனது கேள்வியில் இன்னும் அதிர்ந்த பெண்ணவளோ அதே அதிர்ச்சியுடன் விழிகள் அகல அவனைப் பார்க்க, தன் புருவத்தை ஏற்றி இறக்கியவனை,அவளுடைய படபடப்பும் வெட்கமும் வெகுவாக ரசிக்க வைத்தது. ஆதியோ இன்னும் அவளை சீண்டும் பொருட்டு,

“இல்லை ஹனி மூன் சுயூட் ஏதும் வேணுமா? எனக்கு எதுனாலும் ஓகே” என்று ராகமாய் கேட்க,  இங்கே இவளுக்கோ இதயம் தாளத் தப்பி துடிக்கத் துவங்கியது.

‘அடப்பாவி’ பெண்ணவளின் முகமோ செவ்வானமாய் சிவந்து விட,  மதுவால் தன் முன்னே  அமர்ந்திருப்பவனை இப்பொழுது நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை, ஒருவித இன்ப படபடப்புடனே அவள் அமர்ந்திருக்க, அவளது நாணத்தை வெகுவாய் ரசித்த அவளின் ரசனைக்காரனோ,

“யோசிச்சு சொல்லு” என்று கூறி

சுற்றி இருந்த யாரையும் பொருட்படுத்தாது அவளது மூக்கின் நுனியில் மென்மையாக தன் இதழை பதித்துவிட, இதை சற்றும் எதிரிபார்க்காத மதி அதிர்ச்சியில் தன் வாயை திறந்த சமயம், அவளது நடுங்கும் மென்கரத்தை மென்மையோடு உறுதியாக பற்றியவன். அதிர்ச்சியில் திறந்திருந்த அவளது வாய்க்குள் கரண்டியால் ஆப்பிள் துண்டை ஊட்டினான் .

மதியின் இதழ்களோ இப்பொழுது தானாய் மூடிக்கொள்ள அவளது பதற்றம் மேலும் அதிகரித்தது. தன் இதழ் பட்ட ஸ்பரிசத்தில் இன்னுமே  சிவந்து போன அவளது மூக்கின் நுனியை ரசனையுடன் தட்டியவன்,

“இப்போதைக்கு உன்னை கடிச்சு சாப்பிடுற எண்ணம் எல்லாம் இல்லை. ஸோ ரிலாக்ஸ் ” என்று ஒற்றை கண்ணடித்து குறும்பாக கூறிவிட்டு புன்னகையுடன் எழுந்து கொள்ள, இப்பொழுது அதே குறும்புடன் அவனை ஏறிட்டவள்,

 “மிஸ்டர் ஆதித்யாவுக்கு எதுவும் தெரியலைன்னு நினைக்கிறேன் முதல்ல கல்யாணம் பண்ணனும் அப்புறம் தான் மத்ததெல்லாம்” என்று கூறி ஓரக்கண்ணால் ஆதித்யாவை பார்க்க,

 மனம் விட்டு தன்னிடம் உரிமையுடன் கேலி  பேசுவபவளை  வியப்புடன் பார்த்தவனோ, அவளின் ஓரவிழி பார்வையை ரசித்தபடி, “எப்போ தாலி கட்டணும்” என்று கேட்டு புருவம் உயர்த்த, இன்பமாக அதிர்ந்தாள் பெண்ணவள்.

சற்றுமுன் வரை ஆதித்யா மீது அவள் கொண்ட அத்தனை எதிர்மறை எண்ணங்களும் இப்பொழுது மாயமாய் அவளின்  எண்ணத்தை விட்டு மறைந்து போயிருக்க, அந்த நொடி இன்பம் அவளை எங்கோ பறக்கச் செய்தது.

தனக்குள்  தோன்றிய பரவச புன்னகையை அவனிடம் காட்டாது தலை தாழ்த்தி மறைத்துக் கொண்டவள், “ஏதோ எல்லாத்துக்கும் பெர்மிஷன் கேட்கிற மாதிரி சொல்றீங்க ” என்று குனிந்த தலை நிமிராது கேட்டுவிட,

 ஆச்சரியத்துடன் தன்னவளை பார்த்த ஆதித்யா,

“ஓ இனிமே எதுக்கும் பெர்மிஷன் கேட்க வேண்டாம்ன்னு சொல்ற ரைட்” ‘எதுக்கும் ‘ என்ற வார்த்தையை அழுத்தி சொன்னவனின் இதழுக்குள் சிரிப்பு.

புரிந்தும் புரியாத நிலையில், ” என்..ன சொல்றீங்க ? புரி. யல” இப்பொழுது தடுமாற்றத்துடன் கேட்டாள் .

” புரியலையா !! அப்போ புரியற மாதிரியே சொல்லிருவோம் ” என்றவன் , மெல்ல குனிந்து அவளது காதருகே தன் மீசை உரச,  தன்னவளுக்கே உரிய தன்னவளின் சுகந்தத்தை சுவாசித்து தன் உயிர் கூட்டை நிரப்பியபடி, ஏதோ சொல்ல வரவும் தன் குரலை செருமி கொண்டு அவனிடம் இருந்து விலகியவள்,

“எனக்கு எதுவும் புரிய வேண்டாம்” என்று கூறிவிட்டு குனிந்து கொண்ட நேரம், ஆதித்யாவும் மென் சிரிப்புடன் எழுந்து கொள்ள, அப்பொழுது அங்கே வந்த துரியனின் கண்களில் மது புன்னகையுடன் உணவருந்தும் காட்சி பட்டுவிட,

“ஏய்” என்ற துரியனின் அடித் தொண்டை சீற்றத்தில், இத்தனை நொடிகள் அவள் முகத்தில் இருந்த அத்தனை இன்பமும் வடிந்து போக,   மிரட்சியுடன் துரியனை பார்த்தாள்.

அவனோ, ” உன்னை யார் இங்க உட்கார்ந்து சாப்பிட சொன்னா கிளம்பு” என்று மீண்டும் சீற, பாதி உணவு இன்னும் மீதம் இருக்கும் நிலையில் அவமான உணர்வுடன் எழுந்து கொண்டவள் ஆதித்யாவை அடிபட்ட பார்வை பார்த்தபடி அங்கிருந்து சென்றாள்.

இந்த காட்சியை கண்டு வன்மமாய் புன்னகைத்துக் கொண்ட தாரா அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட , இது எதையுமே கவனிக்காதது போல நாகா சாப்பிடுவதிலே கவனமாக இருக்க, வீராவுக்கு தான் மதியை பார்க்க சங்கடமாக இருந்தது .

@@@@@@@@@@

 தனக்குள் எழுந்த அழுத்தத்தை மறைத்துக் கொண்டு தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள மிகவும் சிரமப்பட்ட ஆதித்யா, தன்னையே  பார்த்துக் கொண்டிருந்த நாகாவை பார்த்துவிட்டு கண்களை இறுக்கமாக மூடித் திறந்தவன்,

” வா துரியா சாப்பிடுறியா” என்று துரியனிடம் கேட்க  ஆதித்யாவிடம் மறுத்தவன்,

 “இவ இங்க என்ன பண்ணிட்டு இருக்கா ஆதி, இவள பார்த்தாலே எரிச்சலா இருக்கு”  என்று கோபத்துடன் கேட்க,

” உன்கிட்ட இருக்கிற எல்லா கேள்விக்கும் அன்னைக்கே நான் அன்சர் பண்ணிட்டேன் துரியா, இதுக்கு மேலயும் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னா உன் இஷ்டப்படி என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ  ” என்று அழுத்தமாக கூறினான் ஆதித்யா.

 ஆதித்யா அவ்வாறு கூறவும்,

 ” டேய் என்ன நம்பிக்கை அது இதுன்னு பேசிட்டு இருக்க, உன்னை நம்பாம யாரை நம்ப போறேன். அவள பார்த்ததும் டென்ஷன் ஆயிடுச்சு, கண்ட்ரோல் பண்ணனும்னு தான் நினைக்கிறேன் கோபம் வந்திடுது, சரி கிளம்பலாமா” என்று கேட்க,

” ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்ணுடா நான் வந்துடறேன் ” என்ற ஆதித்யா நாகாவை பார்த்து கண்ணை காட்ட,  நாகா துரியனுடன் சென்றான்.

@@@@@@

மீண்டும் அதே ஏமாற்றம்! மதுவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இவ்வளவு நேரம் அவன் கொடுத்த அத்தனை இன்பமும் ஒன்றுமில்லை என்பது போல் அல்லவா ஆகிவிட்டது.

 துடைக்க துடைக்க கண்ணீர் வேறு விடாமல் வழிந்து கொண்டே இருக்க,

‘உனக்கு நல்லா வேணும், எத்தனை தடவ தான் ஏமாற போற’ என்றது அவளது மனம். எவ்வளவு பட்டாலும் மீண்டும் மீண்டும் அவனிடமே செல்லும் தன் மனதை எண்ணி கோபம் கொண்டவள், இனி என்ன ஆனாலும் அவனிடம் பேச கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

பின் அவள் தான் என்ன செய்வாள், அழ வைத்து கொண்டே இருக்கிறானே.

 மது உறுதி எடுத்து முழுதாக ஒரு நிமிடம் கூட ஆகிருக்காது, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தான் ஆதித்யா.

 கதவு திறந்து கொண்ட விதத்திலே  வந்தது யார் என்று மதிக்கு புரிந்து விட, வேகமாக கண்ணீரை துடைத்து கொண்டவள், என்ன ஆனாலும் அவன் முன்பு இனி அழக்கூடாது என்கிற உறுதியுடன் அமர்ந்திருந்தாள்.

தன்  அழுத்தமான காலடிகள் நிலத்தில் பதிய நடந்து வந்த ஆதித்யா உணவு அடங்கிய தட்டை அவள் முன்பு இருந்த டேபிளில் வைத்தவன், “சாப்பிடு மதி” என்றான். அவளிடம் அசைவில்லை மிகவும் இறுக்கமாக அமர்ந்திருந்தாள். கண்களை மூடி திறந்த ஆதித்யாவோ மெதுவாக வந்து மதுயின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன், அவளது கரத்தை பிடித்து விட, அவ்வளவுதான் வேகமாக  அவன் பிடியிலிருந்து தனது கரத்தை உருவி கொண்டவள், ஆதித்யாவை விட்டு விலகி நின்று தீயாய் முறைக்க அந்நேரம் பார்த்து அங்கே வந்த வீராவும் இதை பார்த்துவிட, ஆதித்யா அதன் பிறகு அங்கே நிற்கவில்லை, மதுவை சாப்பிட வைத்து  அவளை பார்த்துக் கொள்ளுமாறு வீராவிடம் கூறியவன், வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.

@@@@@@@@

“வாங்க அம்மா என்ன ஆச்சு  ஆஃபீஸ்க்கு வந்து இருக்கீங்க? ” என்றும் இல்லாமல் தன்னைத்தேடி தன் அலுவலகத்திற்கே வந்த தன் தாயை ஆச்சரியமாக பார்த்தான் அர்ஜுன்.

” ஏன்டா ஏதாவது விஷயம் இருந்தா தான் வரணுமா, பையன பாக்க அம்மா வரக்கூடாதா” என்று பிரீத்தா சொல்லும் பொழுதே அர்ஜுனுக்கு ஓரளவு ப்ரீத்தா எதைப்பற்றி பேச வந்திருப்பார் என்று புரிந்துவிட, நிதானமாக தாயைப் பார்த்தான்.

“காலையில சாப்பிடாம வந்துட்ட போல சாப்பிட வா” சாப்பாடை எடுத்து வைத்த படி மகனை அழைக்க, மறுக்காது  வந்து அமர்ந்தவன், ” நீங்க சாப்டீங்களா அம்மா” சாப்பிட்ட படி வினவினான்.

” நான் அப்பவே சாப்ட்டுட்டேன்,  உன் பொண்டாட்டி தான் இன்னும் சாப்பிடல” அடுத்த வாய் சாப்பிட போனவன், ஒரு கணம் நிமிர்ந்து தன் தாயை பார்த்துவிட்டு,

“பசிச்சா சாப்பிடுவாம்மா” என்றவன் மீண்டும் உண்ண துவங்க,

” பூரி ரொம்ப நல்லா இருக்குல்ல, இன்னும் ஒன்னு சாப்பிடு ” என்றவரிடம், “போதும்மா” என்றவன் தட்டில் அவர் வைத்த உணவை மட்டும் சாப்பிட்டு விட்டு எழுந்தவன், கை கழுவி விட்டு தன் தாயின் அருகே வந்து அமர்ந்து விட, இருவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நீண்ட நேர மௌனத்திற்கு பிறகு,

” ஜுவாலா ரொம்ப நல்ல பொண்ணு அர்ஜுன் ” பிரீத்தா தான் உரையாடலை தொடங்கினார்.

“அத்தை உன்கிட்ட சண்டை போட்டாங்களா”

” பொண்ண பெத்தவங்க டா கேட்க தான் செய்வாங்க “

” என்ன சொன்னாங்க” கோபமாக வினவினான் அர்ஜுன்.

” அவங்க சொல்றது இருக்கட்டும், நீ என்ன முடிவு பண்ணி இருக்க டா”

“என் முடிவா அதுக்கெல்லாம் எனக்கு உரிமை இருக்கா என்ன? ” விரக்தியாக கேட்டான்.

“அர்ஜுன் “

” எனக்கும் மனசு இருக்கும்மா அதை ஏன் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க”

” புரியாம இல்லடா ஆனா ஜுவாலா ரொம்ப பாவம் “

“அப்போ நான்”

” அர்ஜுன் முடிஞ்சு போனதையே எத்தனை நாள் தான் பேசிட்டு இருக்க போற, புதுசா வாழ்க்கைய ஆரம்பி டா. ஜுவாலாவ புரிஞ்சுக்க முயற்சி பண்ணு, இந்த வாழ்க்கைய ஏத்துக்க முயற்சி பண்ணு. பொண்ண பெத்தவங்களுக்கும் பயம் இருக்கும்ல. அவங்க பொண்ணு வாழனும்னு அவங்களும் நினைப்பாங்கல்ல”

“ஆனாம்மா” என்று ஏதோ கோபமாக சொல்ல வந்த அர்ஜுன் தன் தாயின் முகத்தை பார்த்து அப்படியே அமைதி ஆகி விட்டான், அவனால் மற்றவர்களிடம்  நடந்து கொள்வது போல பிரீத்தாவிடம் நடந்து கொள்ள முடியவில்லை. தாயிடம் அதிகம் அன்பு வைத்திருப்பவனால் அவரை எதிர்த்துப் பேச முடியவில்லை.

” இப்ப நான் என்னம்மா பண்ணனும்” சோர்வாக வினவினான்.

“இது” என்றவர் ஒரு ரசிதை அவன் கையில் கொடுத்து, ” உனக்கும் ஜுவாலாக்கும் நான் நைட் டின்னருக்கு டேபிள் புக் பண்ணி இருக்கேன், இது அதோட ப்பாஸ். அவளுக்கு ஃபோன் பண்ணி அவள சாப்பிட சொல்லிட்டு, டின்னருக்கு நீயே அழச்சிட்டு போற மாதிரி அவளை ரெடியா இருக்க சொல்லு ” என்றார். அவனோ இதெல்லாம் தேவையா என்பது போல தன் தாயை பார்க்க,

” டின்னர் தானடா கூட்டிட்டு போ, அப்பதானே உங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும் “

” வரும்னு உங்களுக்கு தோனுதா”

” மதுவை முழுசா உன் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டு, ஜூவாலாவோட புருஷனா மட்டும் அவள பாரு, கண்டிப்பா நீ அவளை புரிஞ்சிக்குவ ” என்றவர் மகனின் தோளில் தட்டி விட்டு சென்றுவிட, வெகு நேரம் சிந்தனையில் இருந்த அர்ஜுன்,  தனது அலைபேசியை கையில் எடுத்தான்.

 அலைபேசியின் சிணுங்களில், தனது சிந்தனையில் இருந்து மீண்ட ஜூவாலா, அலைபேசியின் தொடுதிரையில் தெரிந்த அர்ஜுனின் பிம்பத்தை பார்த்து முகம் மலர உடனே அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க அத்தான்” புன்னகையுடன் கூறினாள்.

“நைட் டின்னருக்கு போகணும் ரெடியா இரு” என்றவன் அலைபேசியை அணைக்கும் தருவாயில்,

” ஒரு நிமிஷம் ஜுவாலா என்றவன்”, சில நொடி தயக்கத்துக்கு பிறகு,

“சாப்பிடு ஜூவாலா, பசியோட இருக்காத” என்று கூறி அழைப்பை அணைத்து விட, இங்கே ஜூவாலாவுக்கு சந்தோஷத்தில் தலைக்கால் புரியவில்லை.

காதல் சொல்வான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!