அரிமா – 19

4.6
(20)

இருளை துரத்திவிட்டு தன் நிலவு காதலியை காதலோடு ரசிப்பதற்காக சூரியன் தன் கதிர்களை பாரெங்கும் பரப்பிக்கொண்டிருக்கும் இந்த ரம்மியமான காலை பொழுதை கூட உணராமல், தனது தூக்கத்தை மொத்தமாக களவுகொடுத்துவிட்டு. வெகு நேரமாக ஒரே நிலையில் அமர்ந்தத்தின் பரிசாக கால்கள் ரெண்டும் உறங்கி போக, மதியின் மதி முகத்தை பார்த்த படியே அமர்ந்திருந்தான் ஆதித்யா .

நேற்று இரவு இருந்த இறுக்கமும் வெறுமையும் இப்பொழுது அவனிடம் இல்லை. மணிக்கணக்காக பார்த்த முகம் தான் ஆனாலும் தெவிட்டவில்லை .நேரம் போவதே தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். மனதில் ஆசை அலை அடிக்க, அவளுடன் கழித்த அனைத்து இனிமையான தருணங்களும் ஆதித்யாவின் மனதை ஆட்கொண்டது.

அன்று டைனிங் டேபிளில் அவளை முத்தமிட்டு சீண்டியது. நேற்று இரவு பொய்யாய் அவளை மிரட்டியது, அதை தொடர்ந்து தன்னவளுடன் தான் கழித்த இனிமையான தருணங்கள் என, பொக்கிஷமான நினைவுகள் அனைத்தும் அவனுக்கு சொர்க்கத்தை காட்ட, உள்ளுக்குள் இனித்தது.

 அப்பொழுது அந்நேரம் பார்த்து ஆதித்யாவின் மகிழ்ச்சியை தட்டிப்பறிப்பது போல அவனது அலைபேசி ஒலிக்க, அலைபேசியின் சத்தத்தில் அவளது உறக்கம் களைந்துவிட கூடாது என்பதற்காக அழைப்பு வந்த மறுநொடி சைலென்டில் போட்டவன், அதன் பின்பே அழைத்தது யாரென்று பார்த்தான், உல்ஃப் 007 என்னும் பெயரை தாங்கி ஆதித்யாவின் அலைபேசி மௌனமாக துடித்துக் கொண்டிருந்தது.

சட்டென்று ஆதியின் முகத்தில் ஒருவித இறுக்கம் குடிகொண்டது. இந்த நிமிடம்வரை அவன் அனுபவித்த மகிழ்ச்சி எல்லாம் காற்றில் கரைந்து போய்விட, உறங்கிக்கொண்டிருந்த கேள்விகள் எல்லாம் இப்பொழுது விழித்துக்கொண்டு அவனை புரட்டி போட்டது.

தான் செய்வது சரியா ?? இந்த இனிமையை அனுபவிக்கும் உரிமை தன் வாழ்க்கை முழுவதும் தனக்கு கிடைக்குமா.?? என விடை தெரியாத இந்த கேள்விகளை மதியை சந்தித்ததில் இருந்து தனக்கு தானே கணக்கில்லாமல் கேட்டுக்கொண்டே இருப்பவன் இதோ இப்பொழுதும் தன் உள்ளம் அறிய கேட்டுக்கொண்டான் .

பதில் தெரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்த தன் நிலையை எண்ணி கோபம் கொண்ட ஆதி,

“என்ன ஆனாலும் உன்னை மட்டும் என்னால காய படுத்த முடியாது மதி ” என்றவன், தன் கடமை அழைக்கவும், மனமே இல்லாமல் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு அங்கிருந்து சென்றான் .

@@@@@@

“சொல்லு ஜூவாலா” கணினியில் வேலை செய்தபடியே அலைபேசியில் இருக்கும் ஜூவாலாவிடம் வினவினான் அர்ஜுன்.

“அது அத்தான் வெளியே போகணும்னு கிளம்பி இருக்க சொன்னீங்க, ஆனா நீங்க இன்னும் வரல நீங்க சொன்ன டைம் தாண்டிடுச்சு, இப்போ என்ன செய்யட்டும்” தயக்கத்துடன் வினவினாள் ஜுவாலா.

“ப்ச்” என்று தன் நெற்றியை நீவிய அர்ஜுன், இன்னைக்கு வேண்டாம் என்று சொல்ல வாயெடுத்தவன், பின்பு தன்னைத் தேடி வந்து பேசிவிட்டு சென்ற தன் தாயின் வார்த்தைகளை எண்ணி பார்த்து,

” சாரி ஜுவாலா கொஞ்சம் பிசி ஆயிட்டேன், சரி நீ ஒன்னு பண்ணு நான் லொகேஷன் அனுப்புறேன், ஒரு ஆறு மணிக்கு போல நீ நேரடியா அங்க வந்திடு, எனக்கும் அந்த டைம்குள்ள வேலை முடிஞ்சிடும் சோ நானும் வந்திடுறேன் . உனக்கு ஓகே தானே “

” ஹான் எனக்கு ஓகே அத்தான்” தன்னவனுடன் சேர்ந்து செல்ல முடியவில்லை என்கிற சின்ன குறை இருந்தாலும், அவனிடம் செலவிடப் போகும் நேரத்தை எண்ணி பார்த்து உற்சாகமாக சரி என்றவள், அதே உற்சாகத்துடன் அவனுக்கு பிடித்த பிங்க் நிறத்திலான புடவையை அணிந்து கொண்டு, தலையில் மல்லிகை சூடி தேவதை போல தயாரானாள்.

பின்பு அர்ஜுன் சொன்னபடி ஆறு மணிக்கெல்லாம் அந்த ஐந்து நட்சத்திர உயர்தர ஹோட்டல் வந்து சேர்ந்தவள், தன்னவனுக்காக ஆசையோடு காத்திருந்தாள்.

ஆறு ஏழு ஆன பொழுது கூட பெரிதாக கலங்கவில்லை, ஆனால் ஏழு எட்டான பொழுது லேசாக கலங்கிய அவள் மனம், அவள் அவனுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டும் அவன் எடுக்காமல் போனதும் இன்னுமே கலங்கிவிட, இரவு பத்து மணியை தாண்டியதும் வெய்ட்டர் வந்து,

“மேம் கிளோஸிங் டைம் ஆகிடுச்சு” என்று சொன்னதும் தான் தாமதம் ஜூவாலாவுக்கு கண்களும் சேர்த்து கலங்கிவிட, வேகமாக வெளியேறினாள்.

@@@@@@@@@@@@@@@

 ஒருபுறம் வேலை கழுத்தை நெரிக்க, அதற்கு நடுவே எதிர்பாராத விதமாக கமிஷனருடன் வேறு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அதில் பிசியானவன், ஜூவாலாவையும் அவளை வர சொன்னதையும் மறந்து போய்விட, வேலையெல்லாம் முடித்து விட்டு நேரம் கடந்து வீட்டிற்கு சென்றான் அர்ஜுன்.

அர்ஜுன் வீட்டிற்குள் நுழைந்த நேரம்,

“வா டா அர்ஜுன் மழையில நல்லா நனைஞ்சிட்ட போல, சரி டின்னர் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா ஏன் இவ்வளவு லேட்?ஆமா ஜூவாலா எங்க?” என்று அவன் பின்னால் எட்டிப் பார்த்தபடி ப்ரீத்தா கேட்கவும்,

 அர்ஜுனுக்கு எல்லாம் நினைவு வந்தது.

 “ச்ச” என்று தன் நெற்றியை நீவிய அர்ஜுனிடம் , வீட்டில் இருந்த எல்லாரும் ஜூவாலா எங்கே என்று கேட்டு பேச வர, அவனோ யார் பேச்சிக்கும் பதில் சொல்லாது, அங்கிருந்து வேகமாக கிளம்பியிருந்தான்.

 வண்டியை நேராக ஹோட்டல் நோக்கி செலுத்திய அர்ஜுன், சைலண்டில் கிடந்த தன் அலைபேசியை கையில் எடுக்க, அங்கே வரிசையாக வந்து கிடந்த தன் மனைவியின் மிஸ்ட் காலை கண்டு தன் மீதே கோபம் கொண்டவன், ஜுவாலாவுக்கு அழைக்க, அது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

 அது வரை நிதானமாக இருந்த அர்ஜுனால் அதன் பிறகு நிதானமாக இருக்க முடியவில்லை.

காவலன் அவன் தினம் தினம் பெண்களுக்கு எதிராய் நடக்கும் எத்தனை குற்றங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான், மனம் எதிர்மறையாய் எண்ணும் பொழுதே அவனையும் மீறி அவன் உள்ளம் அவனவளுக்காய் துடிக்க துவங்க, கொட்டும் மழைக்கு நடுவே அக்கம்பக்கம் பார்த்தபடியே வேகமாக வண்டியை செலுத்தினான்.

 ஒருவித படபடப்புடனே பத்து பதினைந்து நிமிடத்தில் அந்த ஹோட்டலை அடைந்தவன், ஏதோ ஒரு ஊந்துதலில் வலது பக்கம் பார்க்க, அங்கே ஒரு ஓரமாக மழையில் நனைந்தபடி நின்று கொண்டிருந்தாள் ஜூவாலா.

 கோபத்தில் பல்லை கடித்தவன், வேகமாக வண்டியில் இருந்து இறங்கி நேரே அவளிடம் வந்து, “ஜூவாலா” என்று தான் ஆரம்பித்து இருப்பான், அதற்குள்,

“அத்தான் வந்துடீங்களா?” என்று கண்ணீர் கலந்த புன்னகையோடு அவள் அவனை ஏறிட, அடுத்த நொடி தன் கோபத்தை விடுத்து, ஜூவாலாவை இழுத்து இறுக்கமாக அணைத்து கொண்டான் அர்ஜுன்.

 அந்த நீண்ட நேர அணைப்பில் மழையின் காரணமாய் பெண்ணவளின் உடலில் சிறு நடுக்கம் பிறக்கவும், தனது அணைப்பில் இருந்து அவளுக்கு விடுதலை கொடுத்தவன். அதன் பிறகு அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. இருவரும் மௌனமாகவே காரில் அமர்ந்திருந்தனர்.

 இங்கே இப்படி இருக்க அங்கே வீட்டில் மிருதுளா ப்ரீத்தாவை ஒரு வழி செய்து விட்டார்,

” என் பொண்ணு மட்டும் இப்ப ஒழுங்கா வீட்டுக்கு வரலைன்னா யாரையும் சும்மா விட மாட்டேன் ” என்று ப்ரீத்தாவிடம் அவர் சீறிக் கொண்டிருக்கும் பொழுதே,

“அம்மா அத்தை கிட்ட ஏன் கத்திக்கிட்டு இருக்க ” என்று கேட்டபடி அர்ஜுனுடன் உள்ளே வந்தாள் ஜுவாலா.

 ஜூவாலாவை கண்டதும் அதுவரை பதற்றத்தில் இருந்த இளமாறனும் அருள்நிதியும் , அவளை அணைத்து நலம் விசாரிக்க, இப்பொழுது அர்ஜுனை பிடித்துக் கொண்ட மிருதுளாவோ அவனை திட்ட துவங்கினார்.

 இதைக் கண்ட ஜுவாலாவோ தன்னவனை தன் தாய் கேள்வி கேட்பதை பொறுத்துக் கொள்ள முடியாது, அவர்களுக்கு இடையே வந்தவள்,

” அத்தான் மேல எந்த தப்பும் கிடையாது. வர முடியாதுன்னு அத்தான் ஏற்கனவே சொல்லிட்டாரு மா, நான்தான் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போய்ட்டு லேட்டா கிளம்பினதால, மழையில மாட்டிக்கிட்டேன், ஃபோனும் சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு” என்க,

 ” இதெல்லாம் ஒரு காரணமாடி யார்கிட்டயாவது ஃபோன் வாங்கி பேச வேண்டியதுதானே. இல்ல ஒரு கேப் புடிச்சு தான் வீட்டுக்கு வர முடியாதா” என்ற தாயை முறைத்து பார்த்த ஜூவாலா,

 ” இப்ப என்னம்மா உனக்கு வேணும். எனக்கு தலை எல்லாம் வலிக்குது என்னை விடேன் ” என்று சொல்ல, அதன் பிறகு யாரும் யாரையும் கேள்வி கேட்கவில்லை அவளை ஓய்வெடுக்க கூறிவிட்டு, அனைவரும் சென்று விட, இப்பொழுது அங்கே அர்ஜுனும் ப்ரீத்தாவும் மட்டும் தான் இருந்தார்கள்.

அர்ஜுனுக்கு தாயைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. அப்பொழுது அர்ஜுனை நெருங்கிய ப்ரீத்தா அவனது விழிகளை பார்த்து,

” இப்ப மது மட்டும் ஜுவாலா இடத்துல இருந்திருந்தா இப்படி மறந்திருக்க மாட்டல்ல ” என்று கேட்டுவிட, அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“அம்மா” என்று ஏதோ பேச வாய் எடுத்த அர்ஜுனை, வேண்டாம் என்பது போல தன் கரம் உயர்த்தி தடுத்த ப்ரீத்தா,

” ஆனா ஜூவாலா உன்னுடைய ஒரு வார்த்தைக்காக காத்திருந்தா அர்ஜுன், இதோ உன்னை யாரும் திட்டிட கூடாது, உன்னை யாரும் தப்பா பேசிட கூடாதுன்னு தான் மேலயே பழிய போட்டுக்கிட்டு, உனக்காக அவ அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு போறா. அதுக்கு என்ன காரணம்ன்னு நினைக்கிற? ” என்று பிரீத்தா அர்ஜுனனை பார்த்து கேட்க, அவனோ தெரியாது என்பதாய் தன் தலையை இடம் வலமாக அசைத்தான்.

“உன்னை அவ காதலிக்கிறா டா அது கூடவா உனக்கு புரியல. உனக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்றேன் அர்ஜுன், நீ அவ கழுத்துல தாலி கட்டினதுனால ஒன்னும் அவ உன்னை காதலிக்கல, அவ உன்னை காதலிச்சதுனால மட்டும் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிச்சா.

இன்னைக்கு நேத்துலாம் இல்லை ரொம்ப வருஷமா உன்னை மட்டுமே லவ் பண்ணிட்டு இருக்கா.

 நீ அவளை காதலிக்கலன்னு தெரிஞ்சும் உன்னை லவ் பண்றா இன்னும் லவ் பண்ணிட்டே இருப்பா.

உன்னை உனக்காக காதலிக்கிற பொண்ணு அவ, பாவம் டா ஜூவாலா. உன் காதல் உனக்கு கிடைக்கல என்கிறதுக்காக, அவ காதல உதாசீனப்படுத்தாத . காதலிக்கிறது மட்டும் சுகம் இல்லை காதலிக்கப்படுறதும் சுகம் தான் அர்ஜுன். புரிஞ்சி நடந்துக்கோ இதுக்கு மேல உன் இஷ்டம்” என்று கூறிவிட்டு சென்று விட, அர்ஜுனோ அதே இடத்தில் தன் கால்கள் வேருன்ற அப்படியே நின்று விட்டான்.

@@@@@@@

உறங்காமல் இருப்பது ஒன்றும் ஆதித்யாவுக்கு புதிதான விஷயம் இல்லை என்பதால் அவன் கண்களில் எந்த சோர்வும் இல்லை. மதியின் அறையை விட்டு வெளியே வந்தவன் தன் அறைக்குள் சென்றதும் உல்ஃப் 007க்கு அழைப்பு விடுத்தான். சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை தான் உடனே அழைப்பை துண்டித்தவன். பிறகு வழமையாக அணியும் கோர்ட் சூட்டை தவிர்த்து விட்டு சாதாரண உடற்பயிற்சிக்கான உடையை அணிந்துகொண்டு ஓட்டுனரின் துணையின்றி தானே காரை ஓட்டிச்சென்றான் .

ஆதித்யாவின் கார் பல மணிநேர பயணத்திற்கு பிறகு ஜெம் பிட்னெஸ் சென்டர் என்று பெயர் பொறிக்கப்பட்ட வானுயர்ந்த கட்டிடத்தின் நுழைவாயிலை அடைந்தது .

காரை பார்க்கிங் ஏரியாவில் பார்க் செய்தவன். பாஸ்கெட் பால் கோர்ட்டை அடைய. அங்கே ஏற்கனவே இருந்த ஒருவன் பந்தை பாஸ்கெட்டில் போட முனைந்த நேரம்,

 ” என்ன விஷயம்?? ” என பந்தை அவன் கையில் இருந்து தட்டி பறித்தபடி கேட்டான் ஆதித்யா .

” அர்ஜுன் ரொம்ப சீரியஸா உன்னை சிக்க வைக்கிறதுக்கான எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்கான் . ஹீ மே ரீச் யூ. அவன் மட்டும் அப்படி பண்ணிட்டா நமக்கு தான் தேவையில்லாத டென்ஷன் “

ஆதித்யாவின் முக மாற்றை பார்த்தபடி கூறியவன் அவன் அசந்த நேரம் அவன் கையில் இருந்த பந்தை பறித்துக்கொண்டு அதனை நிலத்தில் தட்டியபடி ஓட ஆரபிக்க , சுதாரித்து கொண்ட ஆதி புயலாய் அவனை நெருங்கி ,

” நெவெர், நான் முடிவை நோக்கி நெருங்கிட்டு இருக்கேன் சோ அவன் என்னை நெருங்கும் பொழுது நான் ஆட்டத்தையே முடிச்சிருவேன் ” என உறுதியாக கூறினான்.

பின்பு அந்த புதியவன் கூடையில் போட வந்த பந்தை கண நேரத்தில் மீண்டும் பறித்து எடுத்து, நிலத்தில் தட்டியப்படி லாவகமாக பாஸ்கெட்டில் போட்டான் ஆதித்யா.

 இப்பொழுது ஆட்டம் சூடு பிடிக்க. கூடையில் போட்ட பந்தை தவறாமல் பிடித்து கொண்ட அந்த புதியவன் , “நம்ம இனப்பார்மற் ஹார்ஸ் 8 ஹஸ் பின் ஷாட் டவுன் ” என்ற மறுநொடி ஆதித்யாவின் கண்கள் தகித்தது.

” யாரு ?”ஓடி வந்த ஆதித்யா அந்த புதியவனின் கையில் உள்ள பந்தை தட்டியபடி கேட்டான் .

” நோ ஐடியா இன்டர்னல் ரிப்போர்ட்ஸ் இன்னும் வரல”

“பதுங்கி இருந்த ஓநாய் வெளியே வர ஆரம்பிச்சுருச்சு,” என்ற ஆதித்யாவை தள்ளியபடி ஓடி வந்து,

” அப்போ சிங்கம் எப்போ தன்னுடைய வேட்டைய ஆரம்பிக்க போகுது ” என்று கேட்டவன், பந்தை எடுக்க முயற்சிக்க,

 உடனே சுதாரித்துக்கொண்ட ஆதித்யா நிலத்தில் விழாமல் தன்னை சமாளித்தவன் வேகமாக ஓடிவந்து ,

” ஆடவிட்டு முடிகிறது தான் என் ஸ்டைல் சோ சிட் பேக் அண்ட் ரிலாக்ஸ் ” என்றபடி பந்தை மீண்டும் பாஸ்கெட்டில் போட, மெலிதாய் புன்னகைத்த அந்த புதியவன் ,

“இன்கேஸ் தயாளனை நம்மளால நெருங்க முடியலன்னா, மதுமதி வில் பீ அண்டர் சஸ்பெக்ட் லிஸ்ட்.” என்று சொல்ல இப்பொழுது ஆதித்யா கூடைக்குள் போட்ட பந்து குறி தவறி கீழே விழுந்தது .

 அந்தப் புதியவனோ ஆதித்யாவை பார்த்தபடியே,

” இன்டர்னல் ரிப்போர்ட் கிளியர்னு வந்தாலும், ஷீ ஹஸ் டூ ஃபேஸ் சம் ப்ரோசிஜர்ஸ். ” என்று சொல்ல, மறுநொடியே ஆதித்யாவின் முகம் விகாரமாய் மாறியது.

ஆனாலும் சில நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஆதித்யா,

” சந்தியா எப்படி இருக்கா ?” என கேட்டபடி காலில் கிடந்த பந்தை உதைத்து தள்ளியவன், அதை லாவகமாக கூடையில் போட்டுவிட்டு, வியர்வையில் குளித்திருந்த தனது மேல் டி ஷர்டை கழற்றியவன், ஸ்விம்மிங் பூளில் குதிக்க ஆயத்தமாக ,

” கண்முழிக்கல மத்தபடி அவுட் ஆஃப் டேஞ்சர்.” என்று அந்த புதியவன் கூறினான்.

 அதன் பிறகு அந்த புதியவனின் விழிகளை அழுத்தமாக பார்த்த ஆதித்யா,

” மதி பத்தின சோர்ஸ் எதுவும் என் பார்வைக்கு வர்றதுக்கு முன்னாடி ஈகில் கிட்ட போக கூடாது ” என்றான் திடமாக.

” வாட்? பட் ” என அதிர்ச்சியோடு ஆரம்பித்தவனை,

” உன்னை ஹயர் பண்ணினது நான். சோ ஒபே மை ஆர்டர்ஸ் ” என ஆதி கட்டளையிட்டான்.

 எதிர்த்து பேச முடியாத ஆதித்யாவின் குரல், சொன்னதை மட்டும் செய் என சொல்லாமல் சொல்ல, புதியவன் திகைப்பில் நிற்க, மிக உயரத்துக்கு சென்ற ஆதித்யா தன் உடலை வளைத்தபடி தண்ணீருக்குள் பாய்ந்தான்.

உல்ஃப் 007 – ஆதித்யா சக்கரவர்திக்கு இருக்கும் முக்கியமான உளவாளிகளில் முதன்மையானவன். வெகுநாட்களுக்கு பிறகு அவனிடம் இருந்து அழைப்பு வந்திருக்க. ஊருக்குள் இருக்கும் பிட்னெஸ் சென்டருக்கு சென்றான் ஆதி.

மிக பெரிய நீச்சல் குளம். ஜிம் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான தனி தனி மைதானங்கள் என்று சிட்டியின் மையத்தில் இருக்கும் அந்த பிட்னெஸ் சென்டரில் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்க, இது போன்ற இவர்களின் ரகசிய சந்திப்புக்கு இதுவே ஏற்ற இடம். மனிதர்களோடு கலந்துகொண்டு உடற்பயிற்சி செய்தபடி தங்களின் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதால் யாருக்கும் இவர்கள் மீது சந்தேகம் வராது .

இதை போல் தான் இந்த பாதாளவாழ் குழுக்களில் அடிதடி கொலை கொள்ளை கடத்தல் செய்பவர்கள் மட்டுமே இருப்பது கிடையாது இவர்களுக்குள்ளும் அட்வைசர் , லீடர், கமாண்டர், சோல்ஜர் பல பதவிகள் இருக்கின்றது.

ஆலோசகர்கள் தாங்கள் எடுக்கும் முடிவை தலைவர்களுக்கு தெரிவிக்க. அதை சரியாக திட்டம் தீட்டி வீரர்களின் உதவியுடன் சிறு பிழை கூட வராமல் நடத்தி முடிக்க வேண்டியது கமாண்டர் எனப்படும் தளபதிகளின் பொறுப்பு .

வீரர்கள் அனைவரும் அவர்கள் செய்யும் வேலைகளின் அடிப்படையில் பல குழுக்களாக பிரிந்திருக்கின்றனர்.

இதில் மிக முக்கியமான குழுக்கள் என்றால் அது ஒன்று ஆத்தியாவின் தலைமையில் இயங்கும் தகவல் சேமித்தல், திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் குழு.

இதில் இந்த ஒரு ( தகவல் சேமிக்கும் குழு ) குழு மட்டும் மாஃபியாவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கீழ் அவர்களின் தேவைக்கேற்ப ஒன்று அல்லது ரெண்டுக்கும் மேற்பட்ட குழுக்கள் வரை ஒருத்தருக்கொருத்தர் அறியாமல் ரகசியமாக செயல்படுவார்கள்.

கிரேக்க மற்றும் ரோம புராண கதா பாத்திரத்தில் வெட்ட வெட்ட ரெட்டிப்பாய் வளரும் ஹைட்ரா போல. இந்த மாஃபியாக்கள் ஆங்காங்கே நடக்கும் என்கவுண்டரில் வீழ்த்தப்பட்டாலும் மேலும் மேலும் ரெட்டிப்பாக வலிமை பெற முக்கிய காரணம், ஆற்றல் மிக்க வல்லுநர்களால் தரமாக செயல்பட்டு வரும் அவர்களின் தகவல் சேமிக்கும் குழு மற்றும் அவர்களது இறுக்கமான ஒழுங்கமைக்கப்பட்ட நெறிமுறைகள்.

அதனால் தான் மாஃபியாவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்கள் என்கிறார்கள் .

மாஃப்பியா (Mafia) என்றாலே உருளும் தலைகள். சிதறும் ரத்த துளிகள். காதை கிழிக்கும் வெடிகுண்டின் சத்தம். துப்பாக்கி தோட்டா. போதை. பரத்தமை. என்று நீங்கள் நினைத்திருந்தால் அது மிகவும் தவறு.

 மும்பை மாஃபியாவுக்கும் பாலிவூடுக்கும் திரைத்துறைக்கு இடையே ஒரு ரகசியமான பந்தம் பச்சன் காலத்தில் ஆரம்பித்து இப்பொழுதும் தொடர்கிறது .

பல நிழல் உலக டான்கள் திரைப்பட தயாரிப்பாளர்களாகவும். ஏன் நடிகர்களாக கூட வளம் வந்திருந்தார்கள் என்பது ஏட்டில் இருந்து மறைக்கப்பட்ட சரித்திரம்.

மாஃப்பியா என்றாலே ஆண்கள் மட்டும் தான் என்று இதுவரை எண்ணியிருந்தால் இன்றோடு அந்த எண்ணத்தை மனதில் இருந்து அளித்துவிடுங்கள் கங்குபாய் காத்தியாவாடி போன்ற மாஃப்பியா ராணிகள். மும்பை தாத்தாக்களையே அலறவிட்ட கதையும் உண்டு.

மேலும் மாஃப்பியாவில் இவர்களை போன்ற உளவாளிகள் மனதளவிலும் உடலளவிலும் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.நம் கூடவே இருந்து கொண்டு நம்மை பற்றின ரகசியங்களை கச்சிதமாய் கடத்தி உரிய இடத்தில் சேர்ப்பதில் வல்லுநர்கள்.

இவர்கள் கொண்டு வரும் செய்திகளை தலைவர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் தெரிய படுத்தி. முறையான திட்டங்களை தீட்டி காரியத்தை கண கச்சிதமாய் செயல்படுத்துவது கமாண்டர் எனப்படும் தளபதிகளின் பொறுப்பு.

 அப்படி ஒரு முக்கியமான கடமையை நிறைவேற்ற தான் உல்ஃப் 007னை காண வந்த ஆதித்யா தன் கண்களை மூடிக்கொண்டு தன் உடலை பேலன்ஸ் செய்தபடி தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த நேரம், உல்ஃப் 007னிடம் இருந்து அவனுக்கு கை மாற்றப்பட்ட கருப்பு நிற பென்ட்ரைவ் மீது ஆதித்யாவின் பார்வை அழுத்தமாக பதிந்திருந்தது.

 

காதல் சொல்வான்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!