அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(9)

5
(4)

“ஹேய் கேப் எல்லாம் புக் பண்ண வேண்டாம் வந்து உட்காரு” என்று அரவிந்தன் அழைத்திட, “நான் காண்பது கனவா” என்று தன் கையை கிள்ளிப் பார்த்தாள் மயூரி.

 

“ஆஆ வலிக்குது, கனவு இல்லை தான்” என்று நினைத்தவள் “அவரையும் கிள்ளிப் பார்ப்போம்” என்று அவனது கையை கிள்ளினாள்.

 

“ஏய் பைத்தியம் எதுக்கு டீ கிள்ளின” என்று அவன் கையை தேய்த்துக் கொண்டே கூறிட , “இல்லை போலீஸ்கார் நீங்க என்னை உங்க கூட பைக்ல வரச் சொன்னிங்களே இது கனவா இல்லை நிஜமா என்ற சந்தேகம் அதான் கிள்ளிப் பார்த்தேன்” என்று சிரித்தாள் மயூரி.

 

“அதுக்கு உன் கையை கிள்ள வேண்டியது தானே” என்றான் அரவிந்தன். “என் கையை தான் ஃபர்ஸ்ட் கிள்ளினேன் அப்புறமும் ஒரு சந்தேகம் அதான் உங்க கையையும் கிள்ளிப் பார்த்தேன்” என்று அவள் கூறிட, “சரியான பைத்தியம் ஒழுங்கா பைக்ல உட்காரு டீ” என்று பற்களைக் கடித்தான் அரவிந்தன்.

 

அவளும் பைக்கில் அமர்ந்து அவனது தோளில் கை வைத்திட, “ஏய் கையை எடு” என்றான் அரவிந்தன். “என்ன போலீஸ்கார் கையை எடுக்க சொல்லுறீங்க நான் விழுந்துட மாட்டேனா?” என்று மயூரி கேட்டிட, “ரொம்ப நடிக்காதே கைப்பிடியை பிடிச்சு உட்காரு” என்றான்.

 

“நீங்க ரொம்ப மோசம் போலீஸ்கார்” என்ற மயூரியை முறைத்தவன் “டோன்ட் கால் மீ போலீஸ்கார். கால் மீ அரவிந்தன்” என்று அவன் கூறிட, “நீங்க போலீஸ் தானே அப்போ போலீஸ்கார்னு கூப்பிடலாம் தப்பில்லை தப்பில்லை” என்று அவள் கூறிட கடுப்பானவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

 

“ஹலோ போலீஸ்கார் கோபத்தில் எங்கேயாவது கொண்டு போய் தள்ளி விட்டுறாதீங்க என் அபிக்கு நான் ஒரே ஒரு பொண்ணு தான்” என்றாள் மயூரி. “உன்னை பெறாமலே இருந்திருக்கலாம்” என்று அவன் நினைத்திட, “உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டுருச்சு போலீஸ்கார் நானும் பிறக்கலைனா என் மம்மியை எல்லோரும் குறை சொல்லுவாங்க” என்று அவள் பேசிக் கொண்டே போக , “வாயை மூடிட்டு வாடீ” என்று அதட்டினான் அரவிந்தன்.

 

அவளும் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டு வந்தாள். “வீடு வந்திருச்சு இறங்கு” என்று அவன் கூறிட, “அச்சச்சோ அதுக்குள்ள வந்துடுச்சா” என்று கூறிய மயூரி, “போலீஸ்கார் போலீஸ்கார் அப்படியே பீச் வரை இன்னொரு ரவுண்டு பைக்ல போயிட்டு வருவோமா?” என்றாள் மயூரி.

 

அவளை முறைத்த அரவிந்தன், “மரியாதையா இறங்கு” என்று கூறிட வேறு வழி இல்லாமல் அவளும் இறங்கி சோகமாக சென்றாள்.

 

அவன் பைக்கை பார்க் செய்து விட்டு வரும் வரை அவள் லிஃப்ட் அருகே நின்றிருக்க, “என்ன இங்கே நின்னுட்டு இருக்க” என்றான் அரவிந்தன்.

 

“எல்லாம் நீங்க வரட்டும்னு தான்” என்றாள் மயூரி. அவளை முறைத்த அரவிந்தன் “நான் படிக்கட்டில் வந்துக்கிறேன்” என்றிட, “அப்போ நானும் படிக்கட்டிலேயே வரேன்” என்று அவள் கூறினாள்.

 

“அறிவே இல்லையா உனக்கு” என்ற அரவிந்தனிடம், “இல்லை நிறையவே இருக்கு” என்று புன்னகைத்தாள் மயூரி. அவளைப் பார்த்து பற்களைக் கடித்தவன் லிஃப்ட்டிற்குள் நுழைய அவளும் பின்னாலையே வந்து விட்டாள்.

 

“நீ என்ன நாய்க்குட்டியா என் பின்னாலையே வர‌” என்ற அரவிந்தனிடம், “ஆமாம் பொம்மேரியன் நாய்க்குட்டி தூக்கி வச்சு கொஞ்சுறீங்களா” என்றாள் மயூரி.

 

“உனக்கு ஒரு கன்னம் பழுத்தது பத்தலைனு நினைக்கிறேன்” என்றான் அரவிந்தன்.

 

“ஆத்தி இந்த போலீஸ்கார் கடுப்பில் இன்னொரு அறை கொடுத்தாலும் கொடுத்துருவாரு” என்று நினைத்த மயூரி மௌனமாகினாள்.

 

லிஃப்ட் நின்றதும் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். அவனுடன் பயணித்த நிமிடங்களை நினைத்து நினைத்து மெத்தையில் சரிந்தவள் அவனைப் பற்றிய கற்பனைகளிலே உறங்க ஆரம்பித்தாள்.

 

 

“என்ன அரவிந்த் மயூரி உன் கூட தான் வந்தாள் போல” என்ற கன்னிகாவிடம், “ஆமாம்” என்று கூறினான் அரவிந்தன். “இரண்டு பேரும் தனியா வரணும் என்று சொல்லி இருந்தால் நாங்க என்ன வேண்டாம்னா சொல்லப் போறோம் உனக்கு வேலை இருக்குனு நீயும், அவளுக்கு வேலை இருக்குனு அவளும் எதுக்கு இந்த டிராமா அடுத்த முகூர்த்தத்திலேயே உங்க கல்யாண தேதியை குறிச்சுடுறேன்” என்றார் கன்னிகா.

 

“அம்மா போதும் உங்க கற்பனையை கொஞ்சம் கட்டுப் படுத்துங்க நான் வேற வேலையா போனேன். அவளும் வேற வேலையா போனாள். எதார்த்தமாக தான் அவளை பார்த்தேன். வயசுப் பொண்ணை நேரங் கெட்ட நேரத்தில் தனியா விட்டுட்டு வரக் கூடாதுனு தான் என் கூட அழைச்சிட்டு வந்தேன். மற்றபடி வேறு எதுவும் இல்லை” என்று கூறி விட்டு வேக வேகமாக தன் அறைக்கு சென்று விட்டான் அரவிந்தன்.

 

“பைக்ல கூட்டிட்டு வரும் அளவுக்கு வந்துருச்சு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துருவான் அந்த நம்பிக்கை இருக்கு” என்று நினைத்த கன்னிகா, “கடவுளே முருகா நீ தான் துணை இருக்கனும்” என்று இறைவனை வேண்டிக் கொண்டார்.

 

 

“என்ன அபி இப்போதும் மயூ என்னை பார்க்க வர மாட்டேனுட்டாளா?” என்றார் பைரவன். “இல்லைங்க அவள்” என்று ஏதோ சொல்ல வந்த அபிராமியிடம், “என் மகளைப் பற்றி எனக்கு தெரியும் அபி என்றவர் நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்கீங்க தானே” என்றார்.

 

“நல்லா இருக்கோமுங்க நீங்க கூட இல்லாத குறை தான்” என்றார் அபிராமி. “இன்னும் நான்கு மாதம் தான் அபி நான் வந்துடுவேன்” என்று மனைவிக்கு ஆறுதல் கூறினார் பைரவன்.

 

“நீங்க வந்த பிறகு தான் நம்ம மயூரியோட கல்யாணம்” என்ற அபிராமியிடம், “மாப்பிள்ளை பார்த்துட்டியா அபி” என்றார் பைரவன்.

 

“இல்லைங்க பார்த்துட்டு தான் இருக்கேன் நல்ல வரன் அமையும்” என்று அபிராமி கூறிட, “கண்டிப்பா அபி” என்ற பைரவன் மனைவிக்கு ஆறுதல் கூறி அவரை அனுப்பி வைத்து விட்டு சிறைக்குள் சென்றார். அன்பு மகளை பத்து, பதினொரு வயதில் பார்த்தது ஒரு முறை கூட அவள் சிறைக்கு வந்து அவரை பார்க்கவில்லை. அந்த வருத்தம் அவர் மனதில் இருந்தாலும் மகளை அவர் ஒருநாளும் வெறுத்ததில்லை.

 

 

“டேய் இங்கே வாடா” என்று மயூரி அழைத்திட, பதுங்கி பதுங்கி வந்தான் அந்த மாணவன் கிஷோர். “நேற்று நைட்டு எங்கே டா இருந்த” என்று அவள் கேட்டிட, “வீட்டில் தான் டீச்சர் இருந்தேன்” என்றான் கிஷோர். “பொய் சொல்லாதே” என்ற மயூரி, “இந்த வயசுலையே பொறுக்கி பசங்களோட சேர்ந்து கஞ்சா இழுத்துட்டு இருக்கியா நீ உன் பேரன்ட்ஸ் வராமல் உன்னை கிளாஸ் ரூம்க்கு போகவே விட மாட்டேன். பிரின்சிபால் கிட்டையும் ஆல்ரெடி கம்ப்ளையன்ட் கொடுத்துட்டேன். உன் பேரன்ட்ஸ் வந்துட்டு இருக்காங்க” என்றாள் மயூரி.

 

“சத்தியமா டீச்சர் நான் எந்த தப்பும் பண்ணவே இல்லை” என்ற அந்த மாணவனை முறைத்தவள், “நீடம் போடுறா” என்றாள். அவனும் மண்டியிட்டு அமர்ந்தான்.

 

அவனது ஸ்கூல் பேக்கை செக் செய்து பார்க்க அதிலும் கஞ்சா சிகரெட்டை ஒழித்து வைத்திருந்தான். “என்னடா இது ரொம்ப நல்லவன் மாதிரி பேசின இதெல்லாம் என்ன” என்ற மயூரி கோபமாக அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.

 

“மேடம்” என்று ஒரு பெண்மணி வர , “யார் நீங்க?” என்றாள் மயூரி. “நான் கௌரி கிஷோரோட அம்மா” என்று அந்த பெண்மணி கூறிட, “என்ன பிள்ளைம்மா வளர்க்கிறீங்க ஸ்கூல் படிக்கிற பையன் பண்ணுற வேலையா இவன் பார்க்கிறான். கஞ்சா இழுத்துட்டு இருக்கான் அதுவும் ராத்திரி பத்து மணிக்கு பீச்ல நாலு பொறுக்கி பசங்க கூட” என்று பற்களைக் கடித்தாள் மயூரி.

 

“உங்க பையன் என்ன பண்ணுறான், ஏது பண்ணுறான் எதுவுமே கண்டுக்க மாட்டீங்களா? நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க உங்க ஹஸ்பண்ட் வரலையா?” என்றாள் மயூரி.

 

“தான் கெட்ட குரங்கு வனத்தையும் சேர்த்து கெடுக்குமாம் அந்த மாதிரி இவன் மட்டும் கஞ்சா இழுத்துட்டு இருக்கிறது பத்தாதுன்னு இவனோட கிளாஸ்மெட் இரண்டு பேருக்கு சப்ளை பண்ண பேக்ல நாலு பாக்கெட் எடுத்துட்டு வந்திருக்கிறான். போலீஸ் கம்ப்ளையன்ட் கொடுத்து இவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்து விடவா?” என்றாள் மயூரி.

 

“ஐயோ டீச்சர் அப்படி எதுவும் பண்ணீறாதீங்க” என்றாள் கௌரி. “வேற என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க” என்றாள் மயூரி.

 

கௌரி மௌனமாக மகனை முறைத்துக் கொண்டு இருந்தாள். “உங்க ஹஸ்பண்ட் வரலையா மேடம்” என்ற மயூரியிடம் , “அவர் ஜெயிலில் இருக்காரு டீச்சர்” என்றாள் கௌரி.

 

“என்ன சொல்லுறீங்க ஏன்” என்ற மயூரியிடம், “அந்த ஆளு லோக்கல் தாதா கிட்ட அடியாளா இருந்தாரு டீச்சர். செய்யாத கொலைக்கு பழி ஏத்துக்கிட்டு இப்போ ஜெயிலில் கிடக்கிறார். நான் நாலு வீட்டில் பத்து, பாத்திரம் தேய்ச்சு இவனுக்கு கஞ்சி ஊத்திட்டு இருக்கேன் என் கஷ்டத்தை புரியாமல் இப்படி பண்ணிட்டு இருக்கிறான்” என்று அழுதாள் கௌரி.

 

“மேடம் ப்ளீஸ் அழாதீங்க” என்ற மயூரி கிஷோரிடம் திரும்பி “பாரு நல்லா பாரு உன் அம்மா அழறதை பாரு. அவங்க படுற கஷ்டம் உனக்கு தெரியும் தானே” என்றாள் மயூரி.

 

“தெரியும் டீச்சர்” என்று அவன் கூறிட , “அப்புறமும் ஏன் டா பொறுக்கி பசங்களோட சேர்ந்து கஞ்சா இழுத்துட்டு இருக்க” என்றாள் மயூரி.

 

“அம்மாவோட கஷ்டத்தை தீர்க்க தான்” என்று அவன் கூறிட, அவனது கன்னத்தில் “பளார்” என்று அறைந்தாள் மயூரி. “உன் அம்மாவோட கஷ்டத்தை தீர்க்க உன் கூட படிக்கிற பசங்களுக்கு கஞ்சாவை சப்ளை பண்ணுறீயா” என்றாள் மயூரி.

 

“ஐயோ டீச்சர் சத்தியமா இது என் ஃப்ரெண்ட்ஸ்க்கு கொண்டு வரவில்லை. எங்க ஏரியாவில் இருக்கிற கஜா அண்ணா தான் இதை கை மாத்தி விடுறவரு என் பேக்ல வச்சு கொண்டு வருவேன். ஸ்கூல் வாசலில் கஜா அண்ணாவோட ஆளுங்க என் கிட்ட இருந்து வாங்கிட்டு போவாங்க. போலீஸ் ஸ்கூல் பேக் எல்லாம் செக் பண்ண மாட்டாங்க தானே அதனால் தான் அவங்க என்னை வச்சு கஞ்சாவை மாத்திப்பாங்க. அதுக்கு காசு கொடுப்பாங்க. ஸ்கூல் விட்டு மெக்கானிக் செட்ல வேலை பார்க்கிறேன்னு அம்மா கிட்ட பொய் சொல்லி அந்த பணத்தில் கொஞ்சம் சம்பளம்னு அம்மாகிட்ட கொடுத்துருவேன்” என்று கிஷோர் கூறிட கௌரி அவனைப் போட்டு அடிக்க ஆரம்பித்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!