மேடம் ப்ளீஸ் அவனை அடிக்காதீங்க” என்ற மயூரியிடம், “இல்லை டீச்சர் அவன் பாருங்க எவ்வளவு பெரிய காரியம் பண்ணி வச்சுருக்கான்னு இவனை எப்படி சும்மா விடச் சொல்லுறீங்க” என்று அழுதாள் கௌரி.
“நீ சொல்லுறது உண்மையா” என்ற மயூரியிடம் , “சத்தியமா டீச்சர் நான் எதையும் மறைக்கவில்லை” என்று அவன் கூறிட, “வியாபாரம் பண்ணுறவன் நாலு பாக்கெட் வச்சா பண்ணுவான்” என்ற மயூரியிடம், “இல்லை டீச்சர் இரண்டு, மூன்று பார்சல் என் பேக்ல வச்சு கொண்டு வருவேன்” என்று கூறினான் கிஷோர்.
“அப்பறம் இன்னைக்கு மட்டும் என்ன நாலு பாக்கெட்” என்று கேட்டாள் மயூரி. “நேற்று நைட்டு தான் டீச்சர் ஃபர்ஸ்ட் டைம் கஞ்சா இழுத்து பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதை என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னேன் அவங்க வேணும்னு கேட்டாங்க அதான் காஜா அண்ணாவோட ஆளுங்க கொடுத்த பார்சலில் நாலு பாக்கெட் சிகரெட்டை எடுத்து வச்சுக்கிட்டேன்” என்றான் கிஷோர்.
“பாருங்க மேடம் உங்க பையன் பண்ணி இருக்கிற காரியத்தை இவனை போலீஸ்ல பிடிச்சு கொடுக்காமல் வேற என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க” என்றாள் மயூரி.
“டீச்சர் இந்த ஒரு முறை மட்டும் அவனை மன்னிச்சி விட்டுருங்க டீச்சர் இனிமேல் அவன் இந்த மாதிரி தப்பு பண்ணாமல் நான் பார்த்துக்கிறேன்” என்றாள் கௌரி.
“எப்படிங்க மன்னிச்சி விடவா அவன் பண்ணி இருக்கிறது அஃபென்ஸ் இந்த வயசுல கஞ்சாவை கை மாத்தி விடுற அளவுக்கு அவன் வளர்ந்திருக்கிறான். போதாக்குறைக்கு இன்னும் நாலு பசங்களை கெடுக்க முயற்சி பண்ணி இருக்கிறான் இவனை என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க” என்றாள் மயூரி.
“டீச்சர்” என்று அந்த கௌரி அழுது கொண்டு இருந்தாள். “பாரு கிஷோர் உன் அம்மா அழுதுட்டு இருக்காங்க உன் அம்மாவோட கஷ்டத்தை போக்க தப்பான வழியில் நீ பண்ணின காரியம் தான் அவங்களை இன்னைக்கு அழ வச்சுருக்கு. இப்போ நீயே சொல்லு உன்னை என்ன பண்ணலாம்” என்றாள் மயூரி.
“ஏற்கனவே உன் அப்பா ஜெயிலில் கிடக்கிறார் இப்போ நீயும் அவங்களை கஷ்டப் படுத்திட்டு இருக்க” என்ற மயூரியிடம், “நான் ஜெயிலுக்கு போறேன் டீச்சர்” என்றான் கிஷோர். “நான் பண்ணின தப்புக்கு நான் ஜெயிலுக்கு போறேன் டீச்சர் அம்மாவை அழ வேண்டாம்னு சொல்லுங்க” என்றான்.
“ஜெயிலுக்கு போனால் திரும்ப இந்த தப்பை செய்யக் கூடாது என்று தான் அர்த்தம். ஜெயிலுக்கு போயி அங்கே மூன்று வேளை சாப்பிட்டு விட்டு அங்கே கிடைக்கும் சில தவறான நட்புக்களை வைத்து வெளியே வந்து இன்னும் தப்பு பண்ணக் கூடாது” என்று மயூரி கூறிட , “கண்டிப்பா இனிமேல் எந்த தப்பும் செய்ய மாட்டேன் டீச்சர்” என்றான் கிஷோர்.
“உன்னை நம்பலாமா கிஷோர்” என்ற மயூரியிடம், “அம்மா மேல சத்தியம் டீச்சர் இனிமேல் எந்த தப்பும் பண்ணவே மாட்டேன்” என்றான் கிஷோர்.
“ரொம்ப சந்தோஷம் நீ ஜெயிலுக்கு எல்லாம் போக வேண்டாம் உன்னோட கிளாஸ் ரூம்க்கு போ அப்பறம் இனிமேல் நீயும், உன் அம்மாவும் அந்த ஏரியாவில் குடி இருக்க வேண்டாம்” என்றாள் மயூரி.
“டீச்சர்” என்ற கௌரியிடம், “அங்கே இருந்தால் இவன் திருந்தனும்னு நினைச்சாலும் அந்த கிரிமினல் திருந்த விட மாட்டான் அதனால் தான் சொல்கிறேன்” என்றாள் மயூரி.
“இல்லை டீச்சர்” என்று தயங்கிய கௌரியிடம், “உங்களுக்கான உதவிகள் எல்லாம் கிடைக்கும். என்னை நம்புங்க என் அம்மா உங்களை மாதிரி ஆதரவற்ற பெண்களுக்காக வெல்ஃபேர் ஆர்கேனிசேசன் நடத்துறாங்க உங்களுக்கு வேலை , தங்க இடம் எல்லாம் அவங்க ஏற்பாடு பண்ணி தருவாங்க” என்றவள் , “இந்த அட்ரஸ்க்கு போங்க அங்கே ரேவதினு ஒரு மேடம் இருப்பாங்க அவங்க கிட்ட அபிராமி மேடம் அனுப்பினாங்கனு மட்டும் சொல்லுங்க” என்றாள் மயூரி.
“ரொம்ப தேங்க்ஸ் டீச்சர்” என்ற கௌரியிடம் , “நீங்க பெத்தவங்க நாங்க டீச்சர் அவ்வளவு தான் வித்யாசம் அவன் எனக்கும் பையன் தான் அவனோட எதிர்காலம் நல்லா இருக்கனும்னு எனக்கும் அக்கரை இருக்கு” என்ற மயூரி கௌரியை அனுப்பி வைத்தாள்.
“டீச்சர் பிரின்சிபால் கிட்ட சொல்லிட்டேன்னு சொன்னீங்க” என்ற கிஷோரிடம், “அப்படி சொன்னதால் தானே நீ உண்மையை சொல்லியிருக்க” என்ற மயூரி , “உன் அம்மா மேல சத்தியம் பண்ணியிருக்க அதை காப்பாத்து” என்று கூறி விட்டு அவனை அனுப்பி வைத்தாள்.
“என்ன விஷயம் வரச் சொன்ன” என்ற அரவிந்தனிடம், “என்னோட ஸ்டூடண்ட் கொடுத்த ஸ்டேட்மெண்ட்” என்ற மயூரி கிஷோரிடம் பேசியதை வீடியோ எடுத்து வைத்திருந்தாள். அதை அரவிந்தனிடம் காட்டினாள்.
“அந்த பொறுக்கி ஜனாவை” என்று பற்களைக் கடித்தவனிடம் , “எனக்கு ஒரே ஒரு ஃபேவர் நீங்க பண்ணனும்” என்றாள் மயூரி.
“உன் ஸ்டூடண்ட் பெயர் வெளியே வரக் கூடாது அது தானே” என்று அவன் கேட்டிட , “ஆமாம்” என்றாள் மயூரி. “கண்டிப்பா” என்ற அரவிந்தன், “அப்பறம் ரொம்ப தேங்க்ஸ் இந்த கேஸ்ல ஹெல்ப் பண்ணினதுக்கு” என்றான்.
என்ன போலீஸ்கார் எனக்கு போயி தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு நாம இரண்டு பேரும் லவ்வர்ஸ். லவ்வருக்கு யாராவது தேங்க்ஸ் சொல்லுவாங்களா என்று அவள் கூறிட அவளை முறைத்தவன் கிளம்பி விட அவளோ புன்னகைத்து விட்டு தானும் சென்று விட்டாள்.
என்ன சொல்லுறடா என்ற கஜாவிடம் ஆமாம் தல நம்மளை போலீஸ் ரவுண்ட் அப் பண்ணிருச்சு என்றான் அவனது இன்ஃபார்மர். எப்படி என்ற கஜாவிடம் எல்லாம் அந்த இஸ்கூல் பையன் கிஷோரால தான் நம்ம வஜ்ரத்தோட சேர்ந்து நைட்டு பீச்ல டோப்பு அடிச்சுருக்கான் அதை அவனோட டீச்சர் பார்த்துட்டாளாம். பள்ளிகோடத்தில போட்டு அவனை மிரட்டி நம்ம விஷயத்தை கறந்து போலீஸ் கிட்ட போட்டுக் கொடுத்துட்டாள் தல என்றான் அவன்.
இன்னும் ஐந்து நிமிசத்தில போலீஸ் உன் வூட்டுக்கு வந்துரும் தல தப்பிச்சுரு என்று கூறி விட்டு ஃபோனை வைத்தான் அந்த இன்ஃபார்மர்.
பொடியனை நம்பினதுக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்துட்டான் என்று புலம்பிய கஜா தப்பிச் செல்ல நினைத்து பின் வாசல் வழியாக வெளியே செல்ல முயல ஓங்கி அவன் நெஞ்சில் மிதித்தான் அரவிந்தன்.
அவன் மிதித்த மிதியில் பறந்து சென்று விழுந்தான் கஜா. அவன் எழுவதற்குள் சரமாரியாக அரவிந்தன் அடித்திட நிலைகுலைந்து போனான் கஜா.
அடித்ததோடு மட்டும் இல்லாமல் நடுத்தெருவில் வெறும் ஜட்டியோடு கையில் கைவிலங்கு மாட்டி அவனை காவல் நிலையம் வரை இழுத்துக் கொண்டு சென்றான்.
அவனை காவல் நிலையத்திலும் அடித்து நொறுக்கி விட்டான்.
மயூ என்று வந்த அபிராமியிடம் அப்பா எப்படி இருக்கிறாரு என்றாள். ரொம்ப தான் அக்கறை இந்த அக்கறை இருக்கிறவள் நேரில் வந்து பார்த்து அப்பா எப்படி இருக்கிறாருனு தெரிஞ்சுக்கணும் என்று அபிராமி கூறிட மௌனமாகினாள் மயூரி.
எனக்கு அக்கறை இல்லைன்னு நினைக்கிறியா அபி என்றாள் மயூரி. அவளது கண்கள் கலங்கி இருப்பதைக் கண்ட அபிராமியோ ச்சே அம்மா உன் கிட்ட விளையாடினேன் செல்லம் அப்பா நல்லா இருக்காரு அவரைப் பற்றி நீ கவலைப்படாதே என்று கூறி மகளை அணைத்துக் கொண்டார் அபிராமி.
ரொம்ப தேங்க்ஸ் என்ற அரவிந்தனிடம் தேங்க்ஸ் சொல்ல தான் வரச் சொன்னீங்களா நான் கூட என் கிட்ட ஐ லவ் யூ சொல்ல வரச் சொன்னீங்கனு நினைச்சுட்டேன் என்றவளை அவன் முறைத்திட இல்லை போலீஸ்கார் தேங்க்ஸ் நீங்க ஃபோன்லையே சொல்லி இருக்கலாமே அதை தான் சொன்னேன் என்றாள் மயூரி.
உன் உதவியால தான் அந்த கஜாவை அரஸ்ட் பண்ணினேன் அதற்கு நன்றி சொல்லிட்டு அந்த ஸ்டூடண்ட் எங்கே இருக்கிறான், அவன் நமக்கு சாதகமாக வாக்குமூலம் கொடுப்பானா என்று கேட்க தான் வரச் சொன்னேன் என்றான் அரவிந்தன்.
அவன் ஸேஃபா இருக்கான். அவன் கண்டிப்பா வாக்குமூலம் கொடுப்பான் ஆனால் அவனோட ஃபேஸ் மீடியாக்கு தெரியக் கூடாது அப்பறம் அவன் மேல் கேஸ் என்று தயங்கினாள் மயூரி.
பொய்மையும் வாய்மை யிடத்த
புரை தீர்ந்த நன்மை…
திருக்குறள் நீ படிச்சதில்லையா நல்லது நடக்கனும்னா பொய் பேசலாம். உன் ஸ்டூடண்ட் அம்மாவோட கஷ்டத்தை போக்க கஞ்சா விக்கலை அம்மாவோட உயிரை காப்பாற்ற தான் கஜா சொன்ன வேலையை செய்தான்னு தான் ஜட்ஜ் கிட்ட சொல்லப் போறேன். அதுவும் இல்லாமல் அவன் சின்ன பையன் அவனோட எதிர்காலம் பற்றி அவங்களும் யோசிப்பாங்க அதனால அவனோட படிப்புக்கு எந்த பாதிப்பும் வராது. அவன் மைனர் ஜெயிலுக்கும் போக மாட்டான் என்று அரவிந்தன் கூறிட ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் போலீஸ்கார் என்றாள் மயூரி.
சரி கிளம்பு என்று அவன் கூறிட ஹலோ என்ன ஒரு கூல் ட்ரிங்க்ஸ் கூட வாங்கி தராமல் கிளம்புனு சொல்லுறீங்க நான் பாவம் இல்லையா என்றாள் மயூரி.
ஜூஸா நான் ஏன் உனக்கு வாங்கி கொடுக்கனும் என்றவனிடம் காம்ப்ளிமென்ட் உங்க கேஸ்க்கு நான் ஹெல்ப் பண்ணினேனே என்று அவள் கூறிட நீ பண்ணினது சின்ன ஹெல்ப் தான். இந்த கேஸ்ல இன்னும் பெரிய புள்ளிகள் எல்லாம் இருக்காங்க. இந்த கஜா ஒரு டீலர் தான். இவனைப் போல சிட்டியில் இன்னும் நூறு பேர் சுத்துறாங்க எல்லோரையும் பிடிக்கனும் அதனால் எனக்கு நிறைய வேலை இருக்கு என்னை ஆளை விடு என்று அவன் கிளம்பி விட கஞ்சப் பிசுனாறி ஒரு ஜூஸ் தானே கேட்டேன் அது கூட வாங்கித் தராமல் ஓடிட்டாரு என்று நினைத்த மயூரி நாம ஜூஸ் குடிச்சிட்டு கிளம்பலாம் என்று ஜூஸை ஆர்டர் செய்தாள்.
என்ன அபி எப்போ வந்தீங்க என்று கன்னிகா கேட்டிட காலையில் தான் வந்தேங்க என்றார் அபிராமி.
மயூ அப்பா எப்போ வராரு என்று கன்னிகா கேட்டிட இன்னும் ஆறு மாதத்தில் ரிலீஸ் ஆகிருவாரு என்றார் அபிராமி. அவர் வந்ததும் மயூரிக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் என்றார் அபிராமி.