“நம்ம ஆளு பெயர் அரவிந்தனா சரி, சரி நல்ல பெயர் தான். ஆளும் பார்க்க நல்லா அம்சமா தான் இருக்காரு” என்று நினைத்தவள் ரூபிணியுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.
“அப்புறம் மயூ இது தான் எங்க அரவிந்த் மாமா ஃபோன் நம்பர் உங்களுக்கு எதுனாலும் பிரச்சினை இருந்தால் இந்த நம்பருக்கு கால் பண்ணி சொல்லுங்க” என்றாள் ரூபிணி.
“எனக்கு என்ன பிரச்சினை வரப் போகிறது” என்ற மயூரியிடம், “இல்லைங்க ஈவ்டீசிங் அந்த மாதிரி” என்று ரூபிணி கூறிட, “ஓஓ ஓகே ரூபிணி” என்றவள் அவனது மொபைல் எண்ணை சேவ் செய்து கொண்டாள்.
“சரி மயூ நான் போயி சமைக்கனும் பாப்பாவை கொஞ்சம் பார்த்துக்கிறீங்களா?” என்ற ரூபிணியிடம், “சரி பார்த்துக்கிறேன்” என்றாள் மயூரி.
“ஹாய் ஆண்ட்டி” என்று மயூரியின் அருகில் அமர்ந்தாள் தியா. “ஹாய் பாப்பு உன் பெயர் என்ன” என்று மயூரி கேட்டிட , “தியா” என்றாள். “ஓ ஸ்வீட் நேம்” என்ற மயூரி குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
பார்க்கில் இருந்து தியாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் மயூரி. “என்ன சாப்பிடுற பாப்பு” என்று அவள் கேட்டிட , “மம்மு” என்று குழந்தை தன் வயிற்றை தடவிட அவளோ சிரித்து விட்டு அவளுக்கு தோசை வார்த்துக் கொடுத்தாள்.
“தோசை நல்லா இருக்கா பாப்பு” என்ற மயூரியிடம் , “ஆன்ட்டி முட்டை தோசை சூப்பரா இருக்கு தேங்க்யூ” என்றாள் தியா.
அவளது கன்னம் கிள்ளியவள் , “சரி சரி இன்னொரு தோசை சாப்பிடுறியா?” என்று கேட்டாள் மயூரி .
“இல்லை ஆன்ட்டி போதும்” என்ற தியா பாப்பா தன் வயிற்றை தடவி நிறைஞ்சிருச்சு என்று கூறிட, அவளைப் பார்த்து சிரித்து விட்டாள் மயூரி .
“தியா குட்டி” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தான் அரவிந்தன். “மாமா தியா வீட்ல இல்லை” என்ற ரூபிணியிடம், “எங்கேம்மா போயிட்டாள். அம்மாவை காணமே அம்மா கூட வெளியில போய் இருக்காளா?” என்றான் அரவிந்தன்.
“இல்லை மாமா அத்தை எங்க சித்தி கூட கோவிலுக்கு போயிருக்காங்க
தியா வந்து கீழ பார்க்ல மயூரி கூட விளையாடிட்டு இருக்காள்” என்றாள் ரூபிணி .
“மயூரியா அது யாரு?” என்ற அரவிந்தனிடம், “எங்க சித்தி வீடு எதிர்த்த பிளாட்ன்னு சொன்னேன்ல அவங்க பொண்ணு பெயர் தான் மயூரி” என்றாள் ரூபிணி.
“கீழே பார்க்ல பாப்பா இல்லையே” என்ற அரவிந்தனிடம், “ஒருவேளை மயூரி கூட அவங்க வீட்டுல இருந்தாலும் இருப்பாள். மாமா எனக்கு கொஞ்சம் கிச்சன்ல வேலை இருக்கு நீங்க போய் அவளை அழைச்சிட்டு வர முடியுமா ப்ளீஸ்” என்று ரூபிணி கேட்டாள்.
வேறு வழியில்லாமல் அரவிந்தனும் குழந்தையை அழைப்பதற்கு சென்றான்.
“இவங்க ரெண்டு பேரையும் அடிக்கடி அட்லீஸ்ட் மீட் பண்ண வச்சாவது ஏதாச்சும் நல்லது நடந்தா நல்லா இருக்கும் முருகா இந்த இரண்டு துறவிகளையும் இணைத்து வைப்பா” என்று மனதிற்குள் நினைத்தாள் ரூபிணி.
“அடியே ரூபிணி நீ என்ன வேலை பார்த்துட்டு இருக்கன்னு உனக்கு தெரியுதா?” என்ற மனசாட்சியிடம், “என்ன அங்கிள் ஆப் இந்தியாவா?” என்ற ரூபிணியிடம், இல்லை ஆன்டிஸ் ஆப் இந்தியா கொய்யால உன் புருஷனோட அண்ணனுக்கு புரோக்கர் வேலை பார்த்துட்டு இருக்க” என்றது அவளின் மனசாட்சி.
“அதனால என்ன அவரை விட ரெண்டு வயசு சின்னவரு அர்ஜுன். அர்ஜுனும், நானும் கல்யாணம் பண்ணி எங்களுக்கு ஐந்து வயசுல ஒரு குழந்தையே இருக்கு ஆனால் இன்னும் இவர் கல்யாணம் பண்ணிக்காமல் பேச்சுலராவே சுத்திட்டு இருக்காரு இவருக்கு முன்னாடி எங்க கல்யாணம் நடந்ததுனால தான் இவருக்கு கல்யாணம் ஆகலையோன்னு எனக்கே ரொம்ப கில்ட்டியா இருக்கு அவருக்கும், மயூரிக்கும் சீக்கிரம் கல்யாணம் நடந்து விட்டால் ரொம்ப சந்தோஷம்” என்று நினைத்துக் கொண்டிருந்தாள் ரூபிணி.
வீட்டின் அழைப்பு மணி ஒலித்துக் கொண்டிருக்க, “என்ன இது ஏன் இந்த அம்மா விடாமல் காலிங் பெல்லை அழுத்திட்டு இருக்காங்க அபி நான் என்ன திறக்க மாட்டேனா” என்று கூறிக் கொண்டு சென்று மயூரி கதவை திறக்க ஒரு நிமிடம் அசந்தே விட்டாள் ஆறடியில் அவளது மணவாளன் எதிராக நின்று இருக்கவும்.
“அட நம்ம ஆளு வீடு மாறி எதுவும் கதவு தட்டிட்டாரா?” என்று நினைத்தவள் , “என்ன வேணும்?” என்றாள் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு .
“இவளா இவ தான் அந்த மயூரியா ஆமாம் மத்தியானம் அப்படித்தானே ஏதோ ஒரு பெயர் சொன்னாள் இவள் என்ன பேர் சொன்னால்னு கூட நான் கவனிக்கலை” என்று நினைத்தவன், “தியா இருக்காளா?” என்று கேட்டான் .
“தியாவா எந்த தியா” என்று மயூரி கேட்டிட, “ரூபிணியோட பொண்ணு தியா” என்றான் அரவிந்தன்.
“ரூபிணியோட பொண்ணுக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம் நீங்க ஏன் அவளை எங்க வீட்ல வந்து கேட்டுட்டு இருக்கீங்க” என்றாள் மயூரி .
“தியா ரூபிணிக்கு மட்டும் பொண்ணு இல்லை என் தம்பியோட பொண்ணு” என்ற அரவிந்தன், “தியா குட்டி” என்று அழைத்திட , “பப்பா” என்று ஓடி வந்தாள் தியா.
“பாய் ஆண்ட்டி நான் பப்பா கூட கிளம்புறேன்” என்று தியா அரவிந்தனிடம் தாவிக்கொள்ள , “பயபுள்ள இம்புட்டு நேரமா அதுக்கு கதை சொல்லி பசிக்குதுன்னு சொன்னதும் முட்டை தோசை எல்லாம் சுட்டுக்கொடுத்தேன். என்னை விட்டுபுட்டு பப்பாவாம்ல பப்பா அவரைப் பார்த்துட்டு வேகமாக ஓடுது கொஞ்ச நேரம் நான் உங்களோட வரமாட்டேன். மயூரி ஆண்ட்டி கூடத்தான் இருப்பேன்னு சொல்லி அடம் புடிச்சு நம்ம ஆளை வீட்டுக்குள்ள வரவைக்கும்னு பாத்தால் சரியான சோத்து மூட்டை பயபுள்ளையா இருக்கும் போல” என்று நினைத்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் மயூரி.
“வாசலிலேயே நின்னுட்டு போறீங்க வீட்டுக்குள்ள வரலாமே” என்ற மயூரிடம் , “நோ தேங்க்ஸ்” என்றான் அரவிந்தன்.
அவன் சென்று விட அவனை நக்கல் செய்வதுபோல் , “நோ தேங்க்ஸ்” என்று முகத்தை சுழித்துக் கொண்டு அவள் கூறிக்கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.
“சரியான ரோபோவா இருக்கும் போல” என்ற மயூரி , கண்ணாடியின் முன் நின்று , “நம்ம நல்லா தானே இருக்கோம் நமக்கு என்ன குறை ஒருவேளை இந்த ஆளுக்கு பார்வை குறைபாடோ? பார்வை குறைபாடு எல்லாம் இருந்தால் போலீஸ்ல எப்படி எடுப்பாங்க” என்று நினைத்துக் கொண்டிருக்க மீண்டும் வீட்டின் அழைப்பு மணி ஒலித்திட , “அபி வந்துருச்சு போல” என்று கதவை திறக்க வாசலில் அபிராமி ,கன்னிகா இருவரும் நின்று கொண்டிருந்தனர்.
“மயூ இவங்க கன்னிகா நம்ம ரூபிணியோட மாமியார்” என்ற அபிராமி , “வாங்க கன்னிகா” என்றார். அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு “வாங்க ஆன்ட்டி” என்றாள் மயூரி .
“உங்க பொண்ணு ரொம்ப அழகா லட்சணமா இருக்கா அபிராமி” என்ற கன்னிகாவிடம் , “அழகா இருந்து என்ன பிரயோஜனம் இருபத்தி ஐந்து வயசு ஆகுது கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு நானும் தலை தலையா அடிச்சிட்டு இருக்கேன் பார்க்கிற மாப்பிள்ளை எல்லாம் வேணாம் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு சிங்கிள் தான் கெத்துனு சொல்லிட்டு சுத்திட்டு திரியிறாள்” என்று அபிராமி கன்னிகாவிடம் தன் மகளின் அருமை பெருமைகளை கூறினார்.
தன் தாயை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் மயூரி.
“உங்க பொண்ணுக்காட்சும் இருபத்தி ஐந்து வயசு தான் ஆகுது என் பையனுக்கு முப்பத்து ஒரு வயசு ஆகுது கல்யாணம் பண்ணிக்கடா கல்யாணம் பண்ணிக்கடான்னு நானும் தலை தலையா அடிச்சுக்கிட்டேன் அவனைவிட ரெண்டு வயசு சின்னவன் அவன் கல்யாணம் ஆகி அஞ்சு வயசுல ஒரு குழந்தை பெத்து வச்சிருக்கான் அவனுக்கு மூத்தவன் என்னடான்னா முனிவர் மாதிரி கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு காக்கியை மாட்டிக் கிட்டு சுத்துறான்.
கல்யாண பேச்சு எடுத்தாலே எனக்கும் , அவனுக்கும் சண்டை வருது என்னத்த சொல்ல” என்று கன்னிகா புலம்பிட , “ஏன் ஆன்ட்டி உங்க பையனுக்கு பொண்ணுங்கனா பிடிக்காதா?” என்றாள் மயூரி .
“தெரியலையேம்மா? சின்ன வயசுல இருந்தே அவன் அப்படியே இருந்து பழகிட்டான். ரொம்ப சை டைப் யார்கிட்டையும் அனாவசியமா பேச மாட்டான் . குறிப்பாக பொண்ணுங்க கிட்ட அவனுக்கு எல்லாமே நான் தான். என்ன தவிர வேற யார்கிட்டயும் அவ்வளவா நெருங்கவும் மாட்டான்” என்ற கன்னிகா தன் மகனை பற்றி கூறிக் கொண்டிருக்கும் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் மயூரி. “சரிம்மா நான் கிளம்புறேன்” என்ற கன்னிகா கிளம்பி விட்டார்.
“என்ன மயூ தோசை எல்லாம் ஊத்தி இருக்க போல” என்ற அபிராமியிடம், “ரூபிணியோட பொண்ணு தியா வீட்டுக்கு வந்து இருந்தாள். அவளுக்கு பசிக்குதுன்னு சொன்னாள் அதான் தோசை ஊத்தி கொடுத்தேன் உனக்கு ஊத்தி தரட்டுமா” என்று மயூரி கேட்டிட, “இல்லடா நீ உட்காரு அம்மா உனக்கு சுட்டு தரேன்” என்றார் அபிராமி.
“ஆமாம் அபி உனக்கு ஏதாச்சும் அறிவு இருக்கா?” என்ற மயூரியிடம், “ஏன்டி உன்ன விட எனக்கு அறிவு கொஞ்சம் அதிகம் தான்டி” என்றார் அபிராமி.
“ஆமா ரொம்ப அதிகம் தான் அந்த ஆண்ட்டிகிட்ட ஏன் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சிங்களா சுத்துறேன்னு சொல்லிட்டு இருக்க” என்ற மயூரியிடம், “அதுதானடி உண்மை அவங்க நம்ம சொந்தக்காரங்க அவங்களுக்கு தெரிஞ்சு ஏதாச்சும் நல்ல மாப்பிள்ளை இருந்தால் உனக்கு பார்ப்பாங்க இல்லையா? அதனால தான் சொல்லி வச்சேன் என் பொண்ணு சிங்கிளா இருக்கான் கல்யாணம் பண்ணிக்க மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கேன்னு சொல்லி நல்ல மாப்பிள்ளையா பாருங்க மறைமுகமா சொன்னேன்” என்ற அபிராமியிடம் , “நல்ல மாப்பிள்ளை வேற எங்கே பார்க்க அதான் அவங்க வீட்ல இருக்கே ஒரு ரோபோ அதை பிடிச்சு கட்டி வச்சாலும் எனக்கு சந்தோஷம்தான்” என்று அவள் மனதிற்குள் நினைக்க, “என்னடி எப்ப பாத்தாலும் எதையாவது யோசிச்சிட்டு இருக்க” என்றார் அபிராமி.
“எனக்கு அறிவு இருக்கு மம்மி” அதனால தான், “நான் யோசிச்சுட்டே இருக்கேன்” என்ற மயூரியின் தலையில் கொட்டியவர், “இந்தா பிடி தோசை சாப்பிடு” என்று மகளுக்கு தட்டில் தோசையை வைத்து கொடுத்தார். “தேங்க்யூ” என்று கூறிவிட்டு அவள் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்
“என்ன தியா புதுப் பழக்கமா இருக்கு அடுத்தவங்க வீட்ல எல்லாம் ஏன் சாப்பிடுற” என்று அரவிந்த் கேட்டிடற , “பப்பா அது அடுத்தவங்க வீடு இல்லை அபி பாட்டி வீடு. அங்கே இருக்கிற மயூரி ஆண்ட்டி ரொம்ப ஸ்வீட் தெரியுமா? என்கிட்ட எவ்வளவு ஜாலியா பேசுனாங்க தெரியுமா? அவங்க நிறைய டாய்ஸ் எல்லாம் கொடுத்தாங்க எனக்கு விளையாட” என்று மயூரியின் புகழை பாடிக் கொண்டிருந்தாள் தியா . அரவிந்தனுக்கு ஏனோ அவள் மயூரியை பற்றி பேசுவதை கேட்க எரிச்சலாக இருந்தது.
“சரிமா நீ தூங்கு” என்று அவளை மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுக்க குழந்தையும் தூங்கிவிட்டாள்.
“மாமா” என்ற ரூபிணியிடம், “சொல்லும்மா” என்றான் அரவிந்தன் .
“சாப்பிடுறீங்களா?” என்று ரூபிணி கேட்டிட அம்மாவும் ,அர்ஜுனனும் வரட்டும் என்று கூறி விட்டான் அரவிந்தன்
“என்ன ரூபி ஒரே யோசனையா இருக்க சாப்பிடும் போது கூட எதையோ யோசிச்சிட்டு இருந்த” என்ற கன்னிகாவிடம் , “அத்தை இன்னைக்கு நான் ஒரு விஷயம் பண்ணேன். நம்ம அரவிந்த் மாமாக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணுமே அதுக்காக” என்ற ரூபினி காலையில் தன் கணவன் தன்னிடம் கூறியதை சொல்லி விட்டு பாப்பாவை அழைத்து வர அரவிந்தனை அனுப்பி வைத்ததையும் கூறினாள்.
“நிஜமாவா சொல்ற அந்த பொண்ணு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கான்னு உங்க சித்தி சொன்னாங்க” என்றார் கன்னிகா.
“அவளுக்கு புடிச்ச மாதிரி மாப்பிள்ளை வரட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருந்திருப்பாள் அத்தை அவளுக்கு நம்ம அரவிந்த் மாமாவை புடிச்சிருக்கலாம்” என்று ரூபிணி கூறிட , “இந்த ரோபோவை அவளுக்கு புடிச்சிருக்கா சத்தியமா சொல்றேன் என்னால நம்ப முடியல நீ சொல்றது எதுவும் பிராங்க் இல்லையே” என்ற கன்னிகாவிடம், “ஏன் அத்தை உங்க கிட்ட பிராங்க் பண்றது மட்டும் தானா எனக்கு வேலை” என்றாள் ரூபிணி.
…தொடரும்….