அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(6)

4.9
(7)

“நான்தான் உனக்கு ஆல்ரெடி சொன்னேனே அவன் ஒரு ரோபோட்ன்னு நீ தான் புரிஞ்சுக்க மாட்டேங்குற எந்திரன் ரோபோக்கு காதல் வந்தது மாதிரி இந்த அரவிந்தன் ரோபோக்குளையும் காதல் முளைக்கும்ன்னு நீயும் , அம்மாவும் ஏதாவது பிளான் பண்ணினால் அது அப்படியே நடந்துவிடுமா? என் அண்ணா எந்திரன் ரோபோ கிடையாது அதைவிட பயங்கரமான ரோபோட் அவனுக்கு ஃபீலிங்ஸ் இருக்கா இல்லையான்னு எனக்கே தெரியாது. அம்மா, தம்பி எங்ககிட்டயே அவன் நெருங்க மாட்டான் அவன் அதிகமா பேசுறான் அப்படின்னா அது அம்மா கிட்ட தான் அதுவும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேச மாட்டான். அப்படி இருக்கும்போது ஒரு பொண்ணு வந்து அவன் கிட்ட பேசினால் உடனே பேசிருவானா? என்ன” என்றான் அர்ஜுனன்.

 

“சும்மா அப்படியே பேசாதீங்க அர்ஜுன் உங்களுக்கு கில்டியாவே இல்லையா? நமக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு உங்க அண்ணன் உங்களைவிட இரண்டு வயசு மூத்தவர் கல்யாணம் பண்ணிக்காமல் இப்படி சுத்திட்டு இருக்காருன்னு உங்களுக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லையா? பொறுப்பே இல்லையா?” என்றாள் ரூபிணி .

 

“பொறுப்பு அக்கறை கவலை எல்லாமே இருக்கு ஆனால் அவன் தான் ஒத்துக்க மாட்டேங்கிறானே ஒருத்தன் என்ன ஆனாலும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லி வீம்பாக இருக்கிறான். அவனை வம்படியா நீ கல்யாணம் பண்ணி தான் ஆகணும்னு ஃபோர்ஸ் பண்ண முடியாது.

 

நீ முதல்ல அதை புரிஞ்சுக்கோ” என்றான் அர்ஜுனன் .

 

“சப்பைக் கட்டு கட்டாதீங்க அர்ஜுன் எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு ஒருவேளை நமக்கு முதலில் கல்யாணம் நடந்ததுனால தான் உங்க அண்ணனுக்கு கல்யாணம் நடக்கலையோன்னு எங்க சொந்தக்காரங்க எல்லாம் என் காது படவே பேசுறாங்க அண்ணா இருக்கும்போது தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சா எப்படி அந்த அண்ணனுக்கு கல்யாணம் நடக்கும்னு உங்களுக்கு அதை பத்தி எல்லாம் கொஞ்சம் கூட அக்கறையே இல்லை” என்றாள் ரூபிணி.

 

“எனக்கு அக்கறை இல்லாமல் இல்லை ரூபி அவன் ஒத்துக்க மாட்டேன் என்கிறான் அது ஏன் உனக்கும், அம்மாவுக்கும் புரிய மாட்டேங்குது எனக்கு கல்யாணமே வேண்டாம் அப்படின்னு சொல்ற ஒருத்தனை நீ கல்யாணம் தான் பண்ணிக்கணும்னு சொல்லிட்டு ஃபோர்ஸ் பண்ண முடியாது அதுவும் அவன் கிட்ட கண்டிப்பா முடியாது.

 

புரிஞ்சிக்க வேண்டியது நான் இல்லை நீயும், அம்மாவும் தான் கொஞ்ச நாள் போகட்டும் அவனாவே மனசு மாறி உங்க கிட்ட வந்து எனக்கு ஒரு பொண்ணு புடிச்சி இருக்கணும் சொல்லலாம் அதுவரை கொஞ்சம் நீங்க வெயிட் பண்ணினால் என்ன” என்றான் அர்ஜுனன்.

 

“அர்ஜுன்” என்று அவள் ஏதோ சொல்ல வர, “போதும் ரூபிணி என் குடும்பத்து மேல் உனக்கு ரொம்ப அக்கறை இருக்கு என் அம்மா ,அண்ணன் ரெண்டு பேரு மேலயும் நீ ரொம்ப அக்கறையா இருக்க அது எனக்கு தெரியும். என் மேலயும் கொஞ்சம் அக்கறையா இரு” என்று சொல்லி அவன் கண்ணடிக்க அவனை முறைத்தாள் ரூபிணி.

 

“என்னடி இது ரொமான்ஸ் பண்ற டைம்ல முறைச்சிகிட்டு இருக்க” என்ற அர்ஜுனன் தன் மனைவியை அணைத்துக் கொண்டான்.

 

 

“இந்த அபியோட ஒரே இம்சை தூங்குறவங்களை எழுப்பினால் பாவமாம். ச்சே இப்போ பாரு ஜிம்முக்கு லேட் ஆகிடுச்சு. நைட்டு என் ஆளை கரைக்ட் பண்ணுறது எப்படின்னு யோசிச்சு, யோசிச்சு தூங்க லேட் ஆகிடுச்சு அதனால் கொஞ்சம் அசந்துட்டேன். இந்த அம்மாவுக்கு பொறுப்பு வேண்டாம் பிள்ளை எழுந்து ஜிம்முக்கு போவாளேனு” என்று புலம்பிக் கொண்டே ஜிம்முக்கு வந்தாள் மயூரி.

 

அவளது மணவாளனோ வெயிட் தூக்கிக் கொண்டு இருந்தான். அவனைக் கண்டவளது முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசமானது.

 

“ஐ நம்ம ஆளு அடப்பாவி இவ்வளவு வெயிட் தூக்குறான். செம்ம பீஸ் தான். அந்த வெயிட் தூக்கிற போலீஸ்கார் கண்டிப்பா நம்மளையும் ஃப்யூச்சர்ல தூக்கிருவாரு” என்று நினைத்துக் கொண்டே அவனருகில் சென்றாள் மயூரி.

 

“ஹாய் போலீஸ்கார்” என்ற குரலை கேட்டதும் எரிச்சலுடன் திரும்பினான் அரவிந்தன். அவனைப் பார்த்து புன்னகைத்த மயூரியை முறைத்தவன் அந்த இடத்தில் இருந்து சென்று ட்ரெட்மில்லில் ஓடிக் கொண்டிருக்க அவளும் அவன் அருகில் இருந்த மற்றொரு ட்ரெட்மில்லில் மெல்லமாக ஓட ஆரம்பித்தாள்.

 

“என்னங்க போலீஸ்கார் நீங்க ஒரு ஹலோ கூட சொல்ல மாட்டீங்களா?” என்றாள் மயூரி. அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ஆனால் அதை எல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் அவனுடன் மேலும், மேலும் பேசிக் கொண்டே இருந்தாள் மயூரி.

 

“என்ன பிரச்சினை உனக்கு” என்று அவன் கேட்டிட, “பிரச்சினையா அது ஏகப் பட்டது இருக்கே அதை எல்லாம் சொல்ல ஒரு நாள் போதாதே நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா லிஸ்ட் போட்டு சொல்றேன். அவசரமா இருக்கிற பிரச்சினை உங்களை எப்படி கரெக்ட் பண்ணுறதுங்கிறது தான்” என்றாள் மயூரி.

 

அவள் இவ்வாறு சொன்னதும் மேலும் கடுப்பானவன், “ஜிம்முக்கு கூட நிம்மதியா வர முடியலை” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கோபமாக சென்று விட்டான்.

 

“என்ன இவரு ரொம்ப தான் ஓவரா பண்றாரு. நீங்க என்னை விட்டு விலகி போக போகத் தான் உங்களை எப்படியாவது அடையனும்னு எண்ணம் வருது” என்று நினைத்துக் கொண்டு, “சரி சரி ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு கிளம்பலாம்” என்று ஜிம்மை விட்டு வெளியே வந்தாள்.

 

“இடியட், இடியட், இரிட்டேட்டிங் இடியட் இவளை பார்த்தாலே எரிச்சலா இருக்கு. போலீஸ்கார், போலீஸ்கார்னு நக்கலா வேற கூப்பிட்டு மேலும் மேலும் கடுப்பேத்துறாள்” என்று பற்களைக் கடித்தான் அரவிந்தன்.

 

“என்ன அரவிந்த் யாரை திட்டிக்கிட்டே வர” என்ற கன்னிகாவை முறைத்தவன், “எல்லாம் உங்களால் தான்” என்று தாயிடம் தன் கோபத்தை காட்டி விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

 

“என்ன அத்தை மாமா ஏன் கோபமாக போகிறார்” என்ற ரூபிணியிடம், “நம்ம வீட்டு துர்வாசர் கோபம் படாமல் இருந்தால் தான் ஆச்சரியப் படனும் சரி சரி நீ போயி சமையல் வேலையை பாரு” என்ற கன்னிகா மருமகளிடம் கூறிட அவளும் சமையலறைக்குள் நுழைந்தாள்.

 

“நான் என்ன பண்ணினேன் நீ யாரையோ திட்டிட்டு வந்த அது யாருன்னு கேட்டேன் அது ஒரு குத்தமா” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கன்னிகா கேட்டிட, அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

 

“ஸாரிம்மா யார் மேலையோ உள்ள கோபத்தை உங்க கிட்ட காட்டிட்டேன்” என்ற அரவிந்தன் தன் அன்னையின் மடியில் படுத்துக் கொண்டான்.

 

“என்னப்பா வேலைக்கு கிளம்பிட்டு இப்படி அம்மா மடியில் படுத்துட்டு இருக்க” என்ற கன்னிகாவிடம், “ஒரு பத்து நிமிஷம்மா ப்ளீஸ்” என்று அவன் கூறிட மகனின் தலையை கோதி விட்டார் கன்னிகா.

 

 

“அம்மா மேல கோபத்தை காட்டக் கூடாதுனு நினைக்கிற, ஆனால் முடியலை அப்படித் தானே” என்ற கன்னிகாவிடம், “ஆமாம்” என்று தலையசைத்தான் அரவிந்தன்.

 

“அம்மா ஒரு வழி சொல்லவா” என்ற கன்னிகா, “பேசாமல் நீ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டன்னு வை நீ அநாவசியமாக அம்மாகிட்ட கோபத்தை காட்ட வேண்டாம். யார் மேல் கோபம் இருந்தாலும் உன் பொண்டாட்டி கிட்ட காட்டு ,அவளும் பதிலுக்கு உன் கிட்ட கோபத்தை காட்டுவாள். நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு சமாதானம் ஆகும் அழகை ரசித்துக் கொண்டே அம்மா ஹாயாக பாப்கார்ன் சாப்பிட்டுட்டு இருப்பேன்” என்றார்.

 

“அம்மா உங்களை” என்று அவர் மடியில் இருந்து எழுந்தவன், “அங்கே சுத்தி இங்கே சுத்தி கல்யாணம், கல்யாணம் அதில் தான் வந்து நிற்கிறீங்க” என்றான் அரவிந்தன்.

 

“குருடி கண்ணுக்கு தான் ஆசைப்படுவாள் அது போல தான் இந்த கன்னிகா என் மூத்த மகன் அரவிந்தனோட கல்யாணத்தை பார்க்கனும்னு ஆசைப் படுகிறேன் தப்பா அரவிந்த்” என்றார் கன்னிகா.

 

“அம்மா எதுவும் தப்பு கிடையாது ஆனால் என்னோட முடிவை நீங்க மதிக்கனும். எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை ப்ளீஸ் விட்டுருங்க” என்றவன், “சரி எனக்கு வேலைக்கு நேரமாச்சு” என்று கூறி விட்டு அவன் சென்று விட்டான்.

 

“நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாய் போனது” என்று நினைத்த கன்னிகா வெளியே வர, “என்ன அத்தை மாமா சாப்பிடாமல் கூட வேலைக்கு போயிட்டாங்க” என்றாள் ரூபிணி.

 

“அவன் போகிற வழியில் எதுனாலும் ஹோட்டலில் சாப்பிட்டுக்குவான் நீ எனக்கு சாப்பாட்டை எடுத்து வை” என்றார் கன்னிகா.

 

“என்ன அம்மா நீங்க உங்க மகன் சாப்பிடாமல் போறாரு நீங்க சாப்பாடு எடுத்து வைன்னு சொல்லுறீங்க” என்றாள் ரூபிணி. “மருமகளே மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு நீ சத்தமா பேசுற” என்ற கன்னிகா, “என் மகன் ஒன்னும் பச்சை குழந்தை இல்லை அவனை விட்டுட்டு நான் சாப்பிட, முப்பத்து ஒரு வயசு ஆகுது அவனுக்கு அதனால் அவன் சாப்பிலைன்னு நான் கவலைப் பட மாட்டேன் நீ சாப்பாடு எடுத்து வை” என்று சிரித்தார்.

 

ரூபிணியும் சிரித்துக் கொண்டே உணவினை பரிமாறினாள். “உன் சித்தி பொண்ணு மயூரிக்கு நம்ம வீட்டு துர்வாசர் ஃபோன் நம்பரை கொடுத்தது நீ தானே” என்றார் கன்னிகா.

 

“ஆமாம் அத்தை என்ன ஆச்சு” என்ற ரூபிணியிடம், “அந்த பொண்ணு இவனுக்கு ஃபோன் பண்ணி பேசி இருப்பாள் போல” என்றார் கன்னிகா.

 

“அப்போ நாம போற ரூட் கரெக்ட் தான் போல” என்று ரூபிணி கூறிட, “எந்த ரூட்” என்ற கம்பீர குரலில் அதிர்ந்து போனாள் ரூபிணி.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!