அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(7)

4.9
(12)

“எந்த ரூட்” என்ற கம்பீர குரலில் அதிர்ந்து போன ரூபிணி மெல்ல திரும்பிட அங்கே நின்றிருந்தது என்னவோ அர்ஜுனன் தான்.

 

“அடச்சே நீங்க தானா நான் கூட அரவிந்தன் மாமாவோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்” என்றாள் ரூபிணி.

 

“நீ ஏன் டா அவனை மாதிரி மிமிக்ரி பண்ணின” என்ற கன்னிகாவிடம் , “ஆமாம் உங்க பையனோட குரல் சூப்பர் ஸ்டார் குரலு அதை நாங்க மிமிக்ரி வேற பண்ணுறோம் த்ரோட் சரியில்லை மம்மி” என்றான் அர்ஜுனன்.

 

“சரியா இருந்துட்டா மட்டும் இவரு அப்படியே எஸ்.பி.பி குரலில் பாட்டு பாடி எல்லோரையும் மயக்கிருப்பாரு போடா டேய் வந்துட்டான் என் மகனோட குரலை கிண்டல் பண்ணிக்கிட்டு” என்றார் கன்னிகா.

 

“பாரு கிழவிக்கு சேட்டையை, ஹலோ தாய் கிழவி அவன் உன் மகன்னா அப்போ நான் யாராம்” என்றான் அர்ஜுனன்.

 

“உனக்கு தான் கல்யாணம் ஆகிருச்சுல அப்பறம் எப்படி எனக்கு மகனா மட்டும் இருப்ப இப்போ நீ ரூபிணியோட புருஷன், தியாவோட அப்பன் ஆனால் என் மகன் அப்படி இல்லையே அவன் இப்போவும் எனக்கு மகன் அவ்வளவு தான்” என்று கொஞ்சம் சளிப்பாகவே கூறினார் கன்னிகா.

 

“அது ஏன் மம்மி இத்தனை சளுப்பா சொல்லுறீங்க” என்ற அர்ஜுனனிடம், “வேற எப்படி சொல்ல சொல்லுற கல்யாணம் பண்ணி அவனுக்குனு ஒருத்தி வந்துட்டாள்னா நானும் எல்லா அம்மாக்களை போல காசி, இராமேஸ்வரம்னு ஆன்மீக பயணம் செல்லலாம்னு ப்ளான் பண்ணினால் நீ ஆன்லைன்ல வேணும்னா ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்பிடு ஆன்மீக பயணம் எல்லாம் உன் வாழ் நாளில் கிடையாதுன்னு சொல்லாமல் சொல்லிட்டு போகிறான் உன் உடன்பிறப்பு” என்றார் கன்னிகா.

 

 

“அத்தை நல்லா காமெடி பண்ணுறீங்க” என்ற ரூபிணியிடம் , “அடியே என் மனக்குமறல் உனக்கு காமெடியா தெரியுதா?” என்ற கன்னிகா, “சரி , சரி உன் புருசனுக்கு நேரமாச்சு ஆஃபீஸ் போகனும் அவனுக்கு சாப்பாடு எடுத்து வை” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

 

 

விடாமல் தன் மொபைல் ஃபோன் ஒலித்துக் கொண்டிருக்க அதில் தெரிந்த நம்பரைக் கண்டு கடுப்பானவன் எடுக்காமல் கோபமாக அமர்ந்திருந்தான்.

 

ஆனால் மீண்டும் மீண்டும் அந்த எண்ணில் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கவும் வேறு வழி இல்லாமல் அதை அட்டன் செய்தாள்.

 

“ஹலோ” என்று எரிச்சலுடன் அவன் பேச ஆரம்பிக்க, “ஹலோ , ஹலோ சார் இந்த மொபைல் ஃபோன்ல ஹஸ்பண்ட்னு உங்க பெயர் பதிவாகி இருந்தது.

 

இங்கே ஒரு பொண்ணு அடிபட்டு மயங்கி கிடக்கிறாள் சார். ப்ளீஸ் உடனே வாங்க” என்று கூறியதும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

“அடிபட்டு மயங்கி கிடக்கிறாளா? எங்கே என்னனு எதுவும் சொல்லாமல் ஃபோனை வச்சுட்டாங்க” என்று நினைத்த அரவிந்தன் மீண்டும் அந்த எண்ணிற்கு அழைத்திட ‘சுவிட்ச் ஆஃப்’ என்ற பதிலே வர அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

 

கண்ட்ரோல் ரூமில் சொல்லி மயூரி யின் மொபைல் எண் கடைசியாக காட்டிய லொக்கேஷனை கேட்டறிந்து அங்கே வேகமாக சென்றான் அரவிந்தன்.

 

 

“என்ன இது ஏதோ ஸ்கூல் போல இருக்கு” என்று நினைத்தவன் தனது பொலேரோவை விட்டு இறங்கி மீண்டும் அவளது எண்ணிற்கு டயல் செய்தான்.

 

இந்த முறை ரிங் போனது. “ஹாய் போலீஸ்கார்” என்ற குரலில் திரும்பினான் அரவிந்தன்.

 

“வர மாட்டீங்களோனு பயந்துட்டேன். நல்ல வேளை வந்துட்டீங்க” என்று புன்னகைத்தாள் மயூரி. அவளை கோபமாக முறைத்தவன் “ஆக்சிடென்ட்” என்று கேட்டிட , “இன்னைக்கு எங்க ஸ்கூலில் லாஸ்ட் இயர் ஸ்டடிஸ், ஸ்போர்ட்ஸ்னு ஃபர்ஸ்ட் வந்த ஸ்டூடண்ட்ஸ்க்கு ப்ரைஸ் கொடுக்க ஒரு சின்ன பங்க்சன் வச்சுருக்கோம். அதுக்கு சீஃப் கெஸ்ட்டா உங்களை போல் ஒரு ஐபிஎஸ் அதிகாரி வந்தால் நல்லா இருக்குமேன்னு பிரின்சிபல் சொன்னாங்க‌. நீங்க என்னோட நெய்பர் அதான் உங்க கிட்ட பேச சொன்னாங்க. நான் நார்மலா பேசினாலே நீங்க முகத்தை திருப்பிட்டு போறவரு உங்களை எப்படி வர வைக்கிறதுனு யோசிச்சேன். சரி கடைசியா எனக்கு ஆக்சிடென்ட்னு சொல்லி பார்க்கலாம்னு வேற பொண்ணு பேசுற போல வாய்ஸ் மாத்தி பேசினேன் வொர்க் அவுட் ஆகிடுச்சு. அப்போ என் மேல உங்களுக்கும் லவ் இருக்கு” என்று சிரித்த மயூரி யின் கன்னம் பழுத்தது அரவிந்தன் கொடுத்த அறையில்.

 

 

அவளோ தன் கன்னத்தில் கை வைத்தபடி அவனையே பார்த்துக் கொண்டு இருக்க , “அறிவு இல்லை உனக்கு. நான் என்ன உன்னை மாதிரி வேலை வெட்டி இல்லாமல் கழுத்தில் ஒரு விசிலை மாட்டிக்கிட்டு சுத்திட்டு இருக்கேனா? முட்டாள் நீ ஒரு ஆளுன்னு உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சுன்னு வந்தேன் பாரு என்னை சொல்லனும்” என்று கோபமாக திட்டியவன் மேலும் ஏதோ சொல்ல வர , “அரவிந்தன் சார் வந்துட்டீங்களா?” என்ற படி அந்த பள்ளியின் தாளாளர் வர அவன் மயூரியை முறைத்து விட்டு அவருடன் பேச சென்றான்.

 

 

“நீங்க வந்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார்” என்று அவர் பேச ஆரம்பிக்க , அரவிந்தனும் மரியாதை நிமித்தமாக அவருடன் பேசி விட்டு விழா மேடைக்கு சென்றான்.

 

மயூரிக்கு கன்னம் எரிய ஆரம்பித்தது. “என்னா அறை அடப்பாவி ஜிம் பாடி போலீஸு என் மேல இம்புட்டு கோபமாயா உனக்கு” என்று மனதிற்குள் புலம்பியவள் அவன் அடித்ததில் சிவந்து போன தன் முகத்தை பவுண்டேசன், காம்பேக்ட் பவுடர் என்று முகத்திற்கு சுண்ணாம்பு அடித்து சரி செய்து கொண்டு விழா மேடைக்கு வந்தாள்.

 

அங்கேயும் அவளை பார்க்கும் போது எல்லாம் அவன் பார்வையில் அக்னியை கக்கிட மௌனமாக தலை கவிழ்ந்து நின்று கொண்டு இருந்தாள் மயூரி.

 

பங்க்சன் முடியவும் அவன் கிளம்பிட “எக்ஸ்கியூஸ்மீ” என்று அவன் பின்னால் ஓடி வந்தாள் மயூரி.

 

“என்ன” என்று அவன் கோபமாக கேட்டிட, “இதை மறுத்து வச்சுட்டு வந்துட்டீங்க” என்று ஒரு பொக்கேவை நீட்டினாள் மயூரி.

 

அவளை முறைத்த அரவிந்தன் , “உன் மேல இருக்கிற கோபத்துக்கு அந்த கரஸ்பாண்டன்ட் மட்டும் வராமல் இருந்தாரு அடிச்சே கொன்னுருப்பேன். இன்னொரு முறை என் கிட்ட அநாவசியமாக விளையாடாதே” என்று அவன் எச்சரித்து விட்டு சென்று விட அவள் தான் தலையில் கை வைத்து அமர்ந்தாள்.

 

மாலை வீட்டிற்கு வந்த பிறகும் கூட அவன் அடித்தது அவளுக்கு எரிச்சலாக தான் இருந்தது. முகம் கழுவி அவள் நிமிர இப்பொழுதும் கூட அவனது விரல் தடம் தன் கன்னத்தில் பதிந்து இருக்க, “அய்யய்யோ இப்போ அபி கேட்டால் நான் என்ன பதில் சொல்லுவேன். உன் வருங்கால மருமகன் ஆசையா தடவிக் கொடுத்தாருன்னா சொல்ல முடியும்” என்று நினைத்தவள் தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

 

“மயூ, மயூ” என்று சத்தமிட்டார் அபிராமி. “என்ன அம்மா” என்று வெளியே வந்தாள் மயூரி. “நான் கிளம்புறேன்” என்று அவர் கூறிட‌ , “எங்கே அபி” என்றாள் மயூரி. “மறந்துட்டியா இன்னைக்கு தேதி என்ன” என்று அபிராமி கேட்டிட அப்பொழுது தான் காலண்டரை பார்த்தாள் மயூரி.

 

“ஸாரிம்மா மறந்துட்டேன்” என்ற மயூரி , “பத்திரமா போயிட்டு வா” என்று தன் தாயை அனுப்பி வைத்தாள். அபிராமியும் கிளம்பும் அவசரத்தில் மகளின் கன்னத்தை பார்க்க வில்லை.

 

தன் அன்னையை நினைத்து வருந்திய மயூரி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

 

பசிக்கவும் எழுந்தவள் சரி கடையில் எதுனாலும் வாங்கி சாப்பிடலாம் என்று வெளியே கிளம்பினாள்.

 

லிஃப்ட்டில் கன்னிகா, அரவிந்தன் இருவரும் நிற்பதைக் கண்டவள் கன்னிகாவை பார்த்து புன்னகைத்து விட்டு அமைதியாக நின்றாள்.

 

“மயூரி என்னம்மா இது உன் கன்னம் இப்படி வீங்கி போய் இருக்கு. விரல் தடம் மாதிரி இருக்கு” என்று கன்னிகா அவள் கன்னத்தில் தொட்டு பார்த்திட , “ஆ வலிக்குது ஆண்ட்டி” என்றாள் மயூரி.

 

அப்பொழுது தான் அரவிந்தனும் அவளது கன்னத்தை பார்க்க அவனது விரல் தடங்கள் அவளது கன்னத்தில் இருந்தது. “இவளுக்கு இதெல்லாம் பத்தாது” என்று நினைத்துக் கொண்டு கோபமாக திரும்பிக் கொண்டான்.

 

“அம்மா எங்கே?” என்று கன்னிகா கேட்டிட, “அம்மா ஊருக்கு போயிட்டாங்க ஆண்ட்டி” என்ற மயூரி மௌனமாக நிற்க , “உங்க அம்மாவுக்கு கோபம் கூட வருமா?” என்றார் கன்னிகா.

 

“ஏன் ஆண்ட்டி அப்படி கேட்கிறீங்க” என்ற மயூரியிடம் , “என்ன தான் கோபம் இருந்தாலும் வயசுக்கு வந்த பொண்ணை இப்படித் தான் விரல் தடம் பதியும் அளவுக்கு அடிப்பாங்களா? அபிராமி வரட்டும் அவங்க கிட்ட நான் கேட்கிறேன்” என்றார் கன்னிகா.

 

“ஐயோ,‌ ஆண்ட்டி என் அம்மா என்னை அடிக்கலாம் மாட்டாங்க என்னை அடிச்சது என்னோட லவ்வர்” என்று மயூரி கூறிட, அரவிந்தனுக்கு தான் புறையேறியது.

 

 

“லவ்வரா?” என்று கன்னிகாவும் அதிர்ந்து போனார்.

 

“அடி பாதகத்தி என் மகன் கிட்ட நீ ஃபோனில் பேசுனனு அவன் சொன்னானே. இப்போ எவனோ லவ்வர் அடிச்சுட்டான்னு சொல்லுறீயே அப்போ நீயும் நோ பால் தானா?” என்று நினைத்த கன்னிகா , “எங்கே போற மயூரி” என்றார்.

 

“பசிக்குது ஆண்ட்டி அதான் சாப்பிட போகிறேன்” என்று அவள் கூறிட, “நாங்க கூட ஹோட்டலுக்கு தான் போகிறோம் நீயும் வாயேன்” என்றார் கன்னிகா.

 

“வேலியில் போற ஓணானை வேட்டியில் எடுத்து போட்டுக்கிட்டது போல இந்த அம்மா ஏன் இவளை நம்ம கூட கூப்பிடுறாங்க” என்று நினைத்த அரவிந்தன் ஏதோ சொல்ல வாயெடுக்க, “இல்லை ஆண்ட்டி நீங்க உங்க பையன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண வெளியே சாப்பிட போறீங்க நான் ஏன் நடுவில் நந்தி மாதிரி” என்றாள் மயூரி.

 

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மயூரி அர்ஜுன், ரூபி, தியா மூன்று பேரும் முன்னமே போயிட்டாங்க. அரவிந்த் வர லேட் ஆனதும் நாங்க இப்போ போகிறோம்” என்றார் கன்னிகா.

 

“அவளே வரலைன்னு சொல்கிறாள் இப்போ தான் அவளை கூப்பிட்டுட்டு இருக்காங்க” என்று நினைத்த அரவிந்தன் கோபமாக டிரைவர் சீட்டில் அமர வா மயூரி என்று அவளை அவனருகில் அமர வைத்தார் கன்னிகா.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!