ஆரல் -18
ஆரோனுடைய வீட்டுக் கதவு பலமாக தட்டப்பட, வந்திருப்பது ஆரோன் என்று நினைத்தவள் கதவைத் திறக்க போக கதவு தொடந்து தட்டப்படவும் அவனுக்கு போன் செய்து கன்பார்ம் செய்ய அவனோ தான் வரவில்லை என்று சொன்னதும் யாராவிற்கு பயம் பிடித்துக் கொண்டது.
அவனுடன் பேசிக் கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் யாரா.
இங்கு கதவை உடைத்துக் கொண்டிருந்த அந்த ரௌடிளோ நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து தங்களுடைய வலிமை மிகுந்த புஜங்களால் அந்தக் கதவை இடிக்க அந்த மிகப்பெரிய கதவு உடைந்து விழுந்தது.
பின்பு வீட்டின் உள்ளே வந்த அந்த நான்கு தடியர்களோ அந்த வீட்டை முழுவதும் அலசி ஆராய யாரா எங்கும் தென்படவில்லை.
பின்பு ஒவ்வொரு அறையாக அவர்கள் தேடி வர இறுயில் அவள் இருந்த அறையைத் திறக்க முயற்சிக்க, அந்த கதவு பூட்டி இருந்தது.
மீண்டும் அந்தக் கதவை அவர்கள் நால்வரும் தட்ட இங்கு யாராவிற்கோ கை கால் உதற ஆரம்பித்தன. நடுங்கியவாறே,
“சார் சார் அவங்க வீட்டுக்குள்ள வந்துட்டாங்க சார்.. இப்போ நான் இருக்கிற ரூம் கதவையும் தட்டுறாங்க சார்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சீக்கிரம் வாங்க சார்..” என்று அழுதவாறே பேசினாள்.
அதைக் கேட்ட ஆரோனுக்கோ கைகள் முறுக்கேறின.
காரின் வேகத்தை அதிகம் ஆக்கினான்.
“இங்க பாரு யாரா.. நீ எதுக்கும் பயப்படாத.. நான் இதோ பக்கத்துல வந்துட்டேன் பயப்படாம இரு..” என்று முடிந்த அளவுக்கு அவளுக்கு தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளோ தன்னுடைய அழுகையை நிறுத்தவே இல்லை. அந்த அறையின் கதவும் திறக்கப்பட்டது.
கதவு திறக்கப்பட்டதும் அதிர்ந்தாள் யாரா.
“சார் கதவைத் திறந்துட்டாங்க சார்..” என்று அவள் சொல்ல அந்த நான்கு தடியார்களோ அவளைப் பார்த்து இகழ்ச்சியாகப் புன்னகைத்தார்கள். “என்னடி எங்ககிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு பாக்குறியா..? எப்படி வசமாக மாட்டிக்கிட்டியா..” என்று பேசியவாறே அவள் அருகே வர, அவள் வைத்திருந்த ஃபோனின் மூலமாக அவர்கள் பேசுவதைக் கேட்ட ஆரோனுக்கோ கண்கள் சிவந்தன.
“டேமிட்..” என்று உறுமினான்.
அந்த நான்கு தடியர்களும் அவள் அருகே நெருங்கி வந்து அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல முற்பட அவளோ முடிந்த அளவுக்கு போராடினாள்.
“ என்ன விடுங்க.. நான் வரமாட்டேன்..” என்று அவர்களிடம் இருந்து போராடினாள்.
அந்த தடியர்களில் ஒருவன் அவளுடைய கன்னத்தில் “பளார்..” என்று அறைந்தவன்,
“எங்களுக்கே ஆட்டம் காட்டுறியா..? உனக்கு இருக்குடி..” என்றவன்,
“டேய் தூக்குங்கடா இவளை..” என்று சொல்ல மிச்சம் இருந்த மூவரும் அவளை ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தரதரவென இழுத்துச் சென்றார்கள்.
அவளை இழுத்துக் கொண்டு வந்தவர்கள் அந்த வீட்டின் வாயிலை தாண்டும் முன்னர் புயல் போல வந்து நின்றான் ஆரோன்.
அந்த நான்கு தடியர்களில் ஒருவன் முன்னே சென்று ஆரோனை அடிக்க பாய, அவனோ சீறும் புலியைப் போல தன்னுடைய ஒரு காலை தூக்கி அவனுடைய நெஞ்சில் எட்டி மிதிக்க அவனோ தூரத்தில் சென்று விழுந்தான்.
பின்பு யாராவை பிடித்துக் கொண்டிருந்த மூவரில் இருவர் முன்னே வந்து அவனை அடிக்க வர அவர்கள் இருவரையும் லாவகமாக பிடித்து அடித்து நொறுக்கினான் ஆரோன்.
அதன் பிறகு யாராவை பிடித்துக் கொண்டிருந்தவனிடம் வர அவனோ தன்னுடைய கையில் வைத்திருந்த கத்தியால் யாராவின் கழுத்தில் அழுத்தினான்.
யாராவோ பயத்தில் அலறினாள்.
“ சார் என்னை காப்பாத்துங்க.. எனக்கு பயமா இருக்கு சார்..” என்றாள்.
ஆனால் ஆரோனோ ஒவ்வொரு அடிகளாக எடுத்து வர அந்த அடியாளோ,
“இங்க பாருடா இன்னும் ஒரு அடி முன்னாடி வந்தாலும் இவளோட சங்க அறுத்திடுவேன்..” என்று மிரட்டினான்.
ஆரோனோ,
“உன்னால முடிஞ்சா செய்டா..” என்றவனின் நடையும் நிற்கவில்லை.
“ டேய் அவனை ஒன்னும் பண்ணிடாத..” என்று அவனை திசை திருப்ப வலது பக்கம் கையை காட்ட, அந்த அடியாளோ அவன் சொன்ன திசை பக்கம் திரும்பச் சட்டென அவன் அருகே சென்ற ஆரோன், அவன் கையைப் பிடித்து பின்பக்கமாக திருப்பியவன் அவனை அடி வெளுத்து விட்டான்.
பின்பு நால்வரையும் அவன் எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடித்தவன் யாராவின் புறம் திரும்ப அவளோ பயந்து நடுங்கியவாறே இவன் அருகே வந்தவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
அவனோ அவளை ஆதரவாக அணைத்தவன்,
“ஓகே ஓகே பயப்படாதே.. நான் தான் வந்துட்டேன்ல இனி ஒன்னும் நடக்காது..” என்று அவளை தேற்றியவன் தன்னுடைய போனை எடுத்து ஷாமை வரவழைத்தான்.
ஷாம் அங்கே வந்ததும்,
“டேய் இவங்க நாலு பேரையும் நம்ம இடத்துக்கு கொண்டு போய் விசாரி.. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு அத முடிச்சிட்டு நான் வந்து பார்த்துக்கிறேன்..” என்றான்.
ஷாமோ அந்த நால்வரையும் கூட்டிக்கொண்டு அவன் சொன்ன இடத்திற்குச் சென்றான்.
இங்கு யாராவோ பயத்திலேயே அவனை விட்டு விலகவே இல்லை.
அவனுடையக் கையை பிடித்துக் கொண்டே இருந்தாள்.
அவளுடையப் பயத்தை உணர்ந்தவன்,
“இங்கு பாரு யாரா.. அதான் நான் வந்துட்டேன்ல்ல இனியும் ஏன் இப்படி பயப்படுற.. உனக்கு எதுவும் ஆகாது..” என்று அவன் ஆறுதல் சொல்ல அவளுக்கோ கண்ணீர் நிற்கவேயில்லை.
“சார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. என்ன விட்டு எங்கேயும் போகாதீங்க ப்ளீஸ்.. தயவு செஞ்சு என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க..” என்று அழுதாள்.
“ஓகே ஓகே நான் உன்னை விட்டு எங்கேயும் போகல.. தயவு செஞ்சு அழாதே..” என்று அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
“யாரா உன்னோட டிரெஸ்ஸை உடனே மாத்திட்டு வா நாம இங்க இருந்து இப்பவே கிளம்புறோம்..” என்று அவளை ஆடை மாற்ற அனுப்ப அவளோ அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “இல்ல நான் போக மாட்டேன். எனக்கு பயமா இருக்கு சார் என்ன தனியா போகச் சொல்லாதீங்க..” என்றாள்.
அவனோ அவளுடைய முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி கொண்டவன்,
“இங்கு பாரு நான்தான் உன் கூடவே இருக்கேன்ல..உனக்கு எதுவும் ஆகாது தைரியமாக போய் டிரஸ் மாத்திட்டு வா. நான் சொல்றேன்ல என்னை நம்பு..” என்று அவளுடைய நெற்றியில் தன்னையும் அறியாமல் முத்தம் பதித்தான்.
அவளுடைய தலையும் சரி என்று ஆடியது.
பின்பு அவனைப் பார்த்தவாறே தன்னுடைய அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு வர அவளை அழைத்துக்கொண்டு அந்த இரவோடு இரவாக அங்கிருந்து கிளம்பினான்.
அங்கிருந்து கிளம்பியவன் நேராக தன்னுடைய அப்பா அம்மா வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
அவர்கள் வீட்டிற்கு வரும்போது விடிந்திருந்தது.
அவர்களது வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்க ஆரோனுடைய அக்காதான் கதவைத் திறந்தாள்.
அங்கு நிற்கும் தனது தம்பியைப் பார்த்து இன்பமாக அதிர்ந்தாள் அவள்.
“டேய் ஆரோன் எப்படிடா இருக்க.. எப்ப வந்த நீ.. இங்க வர்றதா ஒரு வார்த்தை கூட சொல்லல..” என்றவளின் பார்வை அவன் மேல் இருந்து அவன் அருகில் நிற்கும் யாராவின் மேல் கேள்வியாக விழுந்தது.
அதை புரிந்து கொண்ட ஆரோனோ “அக்கா இவ பேரு யாரா.. ஒரு சின்ன பிரச்சனை கொஞ்ச நாள் இங்க தான் இருப்பா..” என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வர அப்பொழுது அவனை தடுத்தது அவனுடைய தந்தையின் குரல்.
“டேய் அங்கேயே நில்லுடா..” என்றார். அவனோ தன்னுடைய காலை முன்னே எடுத்து வைக்கப் போனவன் அப்படியே நின்று விட்டான்.
அவருடைய அந்த சத்தத்தை கேட்டு உள்ளே இருந்த அவனுடைய அம்மாவும் வெளியே வந்து பார்த்தவர் தன்னுடைய மகனைக் கண்டு அதிர்ந்தார்.
அவன் அருகில் நிற்கும் பெண்ணையும் கேள்வியாக பார்த்தார்.
“இவனை யார் இங்க வர சொன்னது..” என்று அவனுடைய தந்தை கேட்க அவனோ அவரைக் கண்டு கொள்ளாமல்,
“அக்கா கொஞ்ச நாள் தான் இங்கே இருப்போம்.. அதுக்கப்புறம் நாங்க இங்க இருந்து போயிருவோம் நீங்க சொல்லுங்க..” என்றான்.
அவனுடைய அக்காவோ அவனையும் தந்தையையும் மாறி மாறிப் பார்க்க அவரோ,
“இது குடும்பமா வாழ்கிற வீடு ரோட்ல போற பொண்ணையெல்லாம் கூட்டிட்டு வந்து இங்க தங்க முடியாதுன்னு சொல்லுமா..” என்றார்.
அவனுக்கோ கோபம் சுள்ளென வந்தது.
“அக்கா ரொம்ப பேச வேண்டாம்னு சொல்லுங்க.. இவள் ஒன்னும் யாரோ ரோட்டுல போற பொண்ணு கிடையாது இவ..” என்று சொல்ல வந்தவன் சொல்ல முடியாமல் தடுமாறினான்.
அப்பொழுது அவனுடைய அப்பாவோ, “சொல்லுடா யாரு அந்த பொண்ணு.. உன்னால சொல்ல முடியலல.. அப்போ உனக்கு இங்க இடமும் கிடையாது இங்கிருந்து போ..” என்றார்.
அவனோ தன்னுடைய தந்தையை முறைத்தவன்,
“அக்கா இவ நான் கட்டிக்க போற பொண்ணு.. இப்ப நான் உள்ள வரலாம்ல..” என்று கேட்க அவளோ பாவம் போல திரும்பவும் தன் தந்தையைப் பார்த்தாள்.
அவரோ “சும்மா வாய் வார்த்தைகளால் கட்டிக்க போற பொண்ணுன்னு சொன்னா மட்டும் உள்ள இடம் கொடுக்க முடியாது. அப்படி உண்மையிலேயே நீ அந்த பொண்ணைத் தான் கட்டிக்க போறேன்னா அவள் கழுத்துல தாலியை கட்டிட்டு உள்ள வா இல்லேன்னா அப்படியே வெளிய போ..” என்று திட்டவட்டமாக கூறினார்.
“அக்கா அவர் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறாரு.. அதான் நான் கட்டிக்க போற பொண்ணுன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன..” என்று கோபமாகக் கேட்க,
“இங்க பாருடா உன்னோட கோபத்துக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. என்னோட முடிவு இது ஒன்னு தான்.. அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டுறதா இருந்தா உள்ள வா.. இல்லைனா அப்படியே போ இதுதான் என்னோட முடிவு..” என்று சொல்ல, அவனோ என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான்.
ஆரோன் யாராவின் கழுத்தில் தாலியைக் கட்டுவானா..?
ஆரல் -19
ஆரோன் யாராவை தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு அழைத்து வர, அவனுடையத் தந்தையோ அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினால் மட்டுமே உள்ளே வர முடியும்.
இல்லையென்றால் வெளியே போ என்று வாதாட அவனும் செய்வதறியாது திகைத்து நின்றான்.
யாராவோ அங்கு நடக்கும் விடயத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அவனைப் பாவம் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கோ தற்சமயம் அவளின் பாதுகாப்பு அவசியம். அவளை என்நேரமும் தன்னுடனே அழைத்துச் செல்ல முடியாது.
அவளை நம்பகமான ஒரு இடத்தில் பாதுகாக்க வேண்டும்.
என்று எண்ணியவன் அவளைத் தன் பெற்றோர் இருக்கும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
ஆனால் இவர்களோ இவனுக்கு இப்படி செக் வைக்க யாராவை ஒரு முறை பார்த்தான்.
அவளும் அவனைத் தான் பார்த்தாள்.
பின்பு ஒரு முடிவு செய்தவனாக,
“சரி இப்ப என்ன இவள் கழுத்துல நான் தாலி கட்டணும் அவ்வளவுதானே கட்டுறேன்..”
என்று இறுகிப்போய் கூறினான் .
அதைக்கேட்ட அவனது குடும்பத்திற்கோ ஏக சந்தோஷம். இவனுக்கு இப்படி நடந்தால் தான் திருமணம் என்று ஒன்று நடக்கும் என்று நினைத்தவர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஆரோனின் தந்தையோ அவன் தவறான வழிக்குச் செல்லும் பொழுது வீட்டில் இருக்கக் கூடாது என்று கூறிவிட்டார்.
ஆனால் அவனை அதிலிருந்து எப்படி வெளியே கொண்டு வருவது என்று அவருக்குத் தெரியவில்லை.
இப்பொழுது அவனாகவே ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான் என்றால் நிச்சயமாக அது தவறாக இருக்காது என்று நினைத்தார்.
“அம்மாடி திவ்யா நம்ம பூஜை அறையில் இருந்து மஞ்சைக் கயிரை எடுத்துட்டு வந்து அவன் கைல கொடு..” என்றார்.
தந்தை கூறியதைக் கேட்ட திவ்யாவோ சரி என்றவள், வேகமாக பூஜை அறைக்குச் சென்று அவசரமாக சாமியை கும்பிட்டு அங்கு இருந்த அந்த மஞ்சள் கயிரில் மஞ்சள் கிழங்கை கட்டியவள் சாமி பாதத்தில் வைத்து எடுத்து வந்து தன் தந்தையின் கையில் கொடுக்க, அவரும் அதை வாங்கியவர் தன் மகனின் முன் நீட்டினார்.
அவனோ அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், கண்ணை மூடி திறந்து அந்த தாலிக் கொடியை தன் கையில் வாங்கி யாராவின் கழுத்தில் கட்டினான்.
அதை கட்டும் பொழுது அவளுக்கு மட்டும் கேட்கும் படி, அவள் காதில் “சாரி யாரா.. எனக்கு வேற வழி தெரியல.. ப்ளீஸ் என்ன தப்பா நினைச்சுக்காத இப்போதைக்கு எனக்கு உன் பாதுகாப்பு தான் முக்கியம். அது நீ இங்கே இருந்தால்தான் நடக்கும் என்னோட சூழ்நிலையை கொஞ்சம் புரிஞ்சுக்கோ..” என்று சொல்ல அவளோ சரி என சம்மதம் கூறினாள்.
“இப்போ உங்களுக்கு ஓகேவா இவள் கழுத்துல நான் தாலி கட்டிட்டேன்.
இப்ப நாங்க உள்ள வரலாம் தானே..” என்று அவன் தந்தையைப் பார்த்து கேட்க, அவரோ உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் அவனிடம் விரைப்பாகவே,
“ம்ம் ம்ம்.. அதான் தாலி கட்டிட்டல்ல இப்ப நீ உள்ள வரலாம்..” என்று சொன்னார்.
யாராவின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே அடி எடுத்து வைத்தவன் நேராக தன்னுடைய அறைக்குச் செல்ல போக அப்பொழுது அவனைத் தடுத்த அவனுடைய அக்காவோ, “டேய் ஆரோன் இருடா.. அந்த பொண்ணு நெத்தியில குங்குமம் வச்சிட்டு போடா..” என்று சொல்ல அவனோ அவளை முறைத்தவன்,
“அக்கா.. அந்த ஆளு தான் புரிஞ்சுக்காம பேசுறாருன்னா நீயும் ஏன் கா..” என்று அவளிடம் கேட்க அவளோ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு,
“இல்லடா தம்பி தாலி மட்டும் கட்டுனா போதுமா நெத்தியில குங்குமமும் வச்சா தானே பூர்த்தியாகும்..” என்று இழுத்து சொல்ல, அவனோ தன் தலையில் அடித்துக் கொண்டவன்,
“சரி வாங்க வைக்கிறேன்..” என்று யாராவைக் கூட்டிக்கொண்டு பூஜை அறைக்கு முன்னே சென்றவன், அங்கு சாமி பாதத்தில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டான்.
“இப்போ ஓகேவா இப்பவாவது நான் போகலாமா..?” என்றவன் அவர்களுடைய பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாகத் தன்னுடைய அறைக்குச் சென்றான்.
யாராவோ அவன் விட்டுச் சென்ற அதே இடத்தில் பிரம்மை பிடித்தவள் போல நின்றிருந்தாள்.
தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தின் ஆரம்பம் இப்படியா இருக்க வேண்டும் என்று நினைத்தவள் வருந்தினாலும் தன் மனதிற்கு பிடித்தவனின் கையால் தாலி வாங்கியது மகிழ்ச்சியை கொடுத்தது.
அவள் அருகில் வந்த அவனுடைய அக்கா திவ்யாவோ,
“ஏய் பொண்ணு உன் பெயர் என்ன..?” என்று கேட்டாள்.
“யா யாரா..” என்று மெதுவாக கூறினாள்.
“ம்ம் நைஸ் டிஃபரண்டா இருக்கு.. சரி சரி அவன் மேல போய்ட்டான் நீ சீக்கிரம் போ இல்லன்னா கோபப்பட்டு எதையாவது உடைப்பான் சீக்கிரம் போ..” என்று கூற,
அவளோ “ம்ம்..” என்றவள் அவன் சென்ற திசையை நோக்கி பின்னே சென்றாள்.
அவர்கள் இருவரும் மேலே சென்றதும் இங்கு அவனுடைய அப்பா அம்மா அக்கா மூவரும் அமர்ந்திருக்க அவருடைய அப்பாவோ,
“பாத்தியாம்மா இவனை அதான் கல்யாணம் பண்ணிட்டான்ல்ல பெத்தவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா.. அவன் பாட்டுக்கு போறத பாரு..” என்று நொடித்துக் கொள்ள அதற்கு அவனுடைய அம்மா சென்பகமோ,
“ம்ம் ஏங்க பேச மாட்டீங்க.. அவனே ஏதோ இக்கட்டான சூழ்நிலையில தான் கல்யாணம் பண்ணி இருக்கான்.. இதுல நம்ம கிட்ட ஆசிர்வாதம் வாங்காதது தான் உங்களுக்குக் குறையா போச்சா. மெதுவா பேசுங்க அவன் காதுல விழுந்துச்சுன்னா அதுக்கும் வேற ஆடுவான் தேவையா..?” என்று கேட்க,
அவரோ “ஆமா ஆமா நீ சொல்றதும் சரிதான் அவன் நம்ம சொல்றத என்னைக்கு கேட்டிருக்கான்.
ஆனா இன்னைக்கு அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டுன்னு சொன்னதும் கேட்டுட்டானே எனக்கு அதுதான் புரியல..” என்று சொல்ல, அவனுடைய அக்காவோ
“அப்பா அம்மா நீங்க எதை நினைச்சும் கவலைப்படாதீங்க அவன் என்ன செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்.. கண்டிப்பா அவனே சொல்லுவான் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருப்போம்.. இத்தனை நாளா நம்மளுக்கு இருந்த ஒரு பெரிய கவலை இன்னையோட முடிஞ்சிருச்சு.. இனி அவன் வாழ்க்கையில சந்தோஷமா இருப்பான்னு நான் நம்புறேன். அதனால நீங்க அவன்கிட்ட எதுவும் கேட்காதீங்கப்பா. அவனை அவன் போக்கில் விடுங்க..” என்றாள் திவ்யா.
இவர்கள் கீழே ஆரோனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, அவனோ தன்னுடைய அறைக்கு வந்தவன் குளித்து முடித்து ஆடையை மாற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியேற அப்பொழுது தான் யாரா அந்த அறைக்குள் வர எதிர்பாராமல் இருவரும் முட்டிக்கொண்டனர்.
அவர்கள் முட்டியதில் யாராவின் நெத்தியில் இருந்த குங்குமம் ஆரோனின் நெற்றிக்கு இடம் மாறியது.
அவனுடைய அந்த கலையான முகத்திற்கு அந்த குங்குமம் அவனை ஏகத்துக்கும் அழகாக காட்டியது.
அதில் சற்று கிறங்கினாள் யாரா. பின்பு சட்டென, சாரி சார் பாக்காம வந்துட்டேன்.
மன்னிச்சிடுங்க..” என்று மன்னிப்பு கேட்டாள்.
அவனோ, “இட்ஸ் ஓகே.. உனக்கு ஏதும் அடி படலையே..?” என்றவன், “இங்க பாரு யாரா நான் ஒரு முக்கியமான வேலை விஷயமா வெளிய போறேன்.
உன்ன தனியா விட்டு போனா பாதுகாப்பு இல்லைன்னு சொல்லிட்டு தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன்.. இங்க நீ ரொம்ப பாதுகாப்பா இருப்ப சரியா அதனால நீ இங்க ஃப்ரீயா இருக்கலாம்.
ஆனா ஒரு கண்டிஷன் இந்த வீட்ட விட்டு நீ வெளியே எங்கேயும் போகக்கூடாது புரியுதா..” என்றான் ஆரோன்.
அவளும் சரி என்று கூறினாள்.
“சரி பார்த்து ஜாக்கிரதையா இரு நான் கிளம்புகிறேன்..” என்றவன் விறுவிறு என்று கீழே இறங்கி வந்தான்.
அவன் வருவதை பார்த்து அவனுடைய தந்தையோ,
“டேய் எங்கடா அதுக்குள்ள கிளம்புற..” என்று கேட்க அவனோ அவர் பக்கம் திரும்பியவன்,
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன்..” என்றான் ஆரோன்.
“டேய் இப்பதான் உனக்கு கல்யாணம் நடந்துருக்கு..
அதுக்குள்ள வெளிய கிளம்புற..” என்று கேட்க,
“நீங்க சொன்ன மாதிரி அவள் கழுத்துல தாலி கட்டியாச்சு அதோடு முடிஞ்சு போச்சு இதுக்கு அப்புறம் என்ன செய்யனும்னு நீங்க சொல்லாதீங்க..” என்று கிளம்பி விட்டான்.
“அப்பா என்னப்பா நீங்க.. நான் தான் சொன்னேன்ல அவனை அவன் போக்கில் விடுங்க.. அவன் தப்பா எதுவும் பண்ண மாட்டான்..
இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் அவன் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கான்..
நீங்க இப்படி ஏதாவது சொல்லி இங்க இருந்து போக வச்சிடாதீங்க..” என்று தன் தந்தையிடம் கூறினாள் திவ்யா.
Super sis 💞