Episode – 45
“என்னது…. என்னைப் பழி வாங்கி, பைத்தியக்காரனாக அலைய விட்டு இப்படி என்னை இல்லாம போக பிளான் பண்ணியது என்னோட இரு மகன்களுமா?, என்னைக்கோ அவங்க இரண்டு பேரோட கதையும் முடிஞ்சுதுன்னு நினைச்சுக் கொண்டு இருக்கன்.”
“இப்போ என்ன மறுபடியும் சரித்திரம் படைக்கிற மாதிரி வந்திருக்கான்கள். எப்படி இவங்கள கவனிக்காம விட்டன். பெரிய தப்பு பண்ணிட்டனே. சே….” என தலையைத் தட்டி யோசித்தவருக்கு,
அப்போது தான் அந்த போலீஸ்காரன்கள் கூறிய இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் கிடைக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
“ஆமா இல்ல…இத்தனை நாளா இந்த ஆங்கில்ல நான் யோசிக்கவே இல்லயே. அது சரி, நாம ஒன்னு ரெண்டு தப்பு பண்ணி இருந்தா தானே…. நிறைய தப்பு செய்ததால தான் இந்த குழப்பம் எல்லாம்?, முளையிலேயே கிள்ளி எறியணும்னு நினைச்சவங்க, இப்போ ஆல மரம் மாதிரி வளர்ந்து நிக்கிறாங்க. ரெண்டு பேரும் ரெண்டு ஸ்டேட்களையும் ஆளுற அளவுக்கு பெரிய கிங்கா வளர்ந்து நிற்கிறாங்க. எப்படி இவங்க ரெண்டு பேரும் என்னோட கண்ணுக்கு மாட்டாம இவ்வளவு தூரம் வளர்ந்தாங்க. சே…. சே…. சொந்த மகன்களையே தெரியாம இருந்து இருக்கனே.”
“இவங்க இரண்டு பேருக்கும் இவ்வளவு காசு எப்படி வந்துச்சு?, ஒன்னுமே இல்லாதவங்க இப்படி ஊரே அசந்து பார்க்குற அளவுக்கு வளர்ந்து நிற்க காரணம் என்ன?, எங்க இருந்து இவங்க மறு கத உருவாக தொடங்கிச்சு?, யாரோ ஒரு பெரிய கை இவங்கள தூக்கி விட்டிருக்கணும், இல்லன்னா இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்து இருக்க மாட்டாங்க. என்ன பத்தி உண்மை தெரிஞ்சவங்க எல்லாரையும் போட்டுத் தள்ளியாச்சுன்னு பார்த்தா…. ஆதி மூல உண்மைகள் தெரிஞ்ச இவனுக ரெண்டு பேரும் இப்படி எனக்கு எமனா வந்து நிற்கிறாங்களே.” என அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டு தனக்குள் புலம்பிக் கொண்டவருக்கு அடுத்து என்ன செய்வது என புரியாத நிலை தான்.
“இரண்டு பேரும் சிறு சிறு வேலைகளில் இருந்தால் கூட பரவாயில்ல, சத்தம் இல்லாம போட்டுத் தள்ளிடலாம். இரு வெவ்வேறு ஸ்டேட்கள்ல மிகப்பெரும் புள்ளிகளா இருக்காங்களே. அந்த மாநிலமே இவங்க பேரை சொன்னா மரியாதை கொடுக்குது.” என எண்ணிக் கொண்டவருக்கு கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலை தான்.
ஒருவன் என்றால் ஒருவாறு நேரடியாக மோதிப் பார்த்து இருப்பார்.
ஆனால் இங்கு இருவர் அல்லவா ராட்சசன் போல அவரை எதிர்த்து நிற்கிறார்கள்.
ஒருவன் மீது கை வைத்தால் மற்றவன் கொதித்தெழுந்து விடுவான் என்பது அவருக்கு நன்றாகவே புரிந்தது.
இருவருக்கு இடையிலும் மோதலை உண்டு பண்ணி பிரிக்கவும் முடியாது. அதற்கான காலமும் இல்லை, அப்படி ஒரு விடயம் நடக்கவும் நடக்காது.
பலதும் யோசித்தவர், இறுதியில், ஒரு முடிவுடன் நிமிர்ந்தார்.
ஒன்று, இனி அவர்கள் இருவரும் வாழ வேண்டும், இல்லையெனில் தான் மட்டும் வாழ வேண்டும் என திடமான முடிவு எடுத்தவர்,
வாழ்வா?, சாவா? என மோதிப் பார்க்க ரெடியானார்.
“மகள்களிடம் இருக்கும் சொத்துக்கள் தன் பெயருக்கு மாற்றப்படாது போனால், தன்னால் ஒரு திட நிலைக்கு வர முடியாது.” என உணர்ந்தவர்,
கடைசிப் போராட்டமாக மோதிப் பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
ஆனால் அவருக்குத்தான் நேரடியாக மோதிப் பழக்கம் இல்லையே.
ஆகவே இப்போதும் குறுக்கு வழியாக என்ன செய்யலாம் என திட்டம் போட ஆரம்பித்தார் அவர்.
அவரது குறுக்குப் புத்திக்கு கூட இருப்பவர்கள் தான் பலம் சேர்ப்பவர்கள் ஆயிற்றே.
ஆகவே அவர்களும் சேர்ந்து கொள்ள, பக்காவாக சதித்திட்டம் போட ஆரம்பித்தவர், அதனோடு சேர்த்து தனது இரு மகன்களின் பழைய கதையையும் கிண்டிக் கிளறி எடுத்து வர சொல்லி அதையும் கணக்கிட்டுப் பார்த்து,
“ஓஹ்…. சதாசிவம் என்கிற ஒரு நபர் தான் இவ்வளவு தூரம் அவங்க இரண்டு பேரும் வளர காரணமா?” என எண்ணிக் கொண்டவர்,
தொடர்ச்சியாக பல திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்.
ஒரே ஒரு திட்டத்தை வைத்து அவர்களை வீழ்த்த முடியாது என்பது அவருக்கு நன்றாகவே புரிந்து இருந்தது.
அவர் திட்டம் போட்டுக் கொண்டு இருக்கும் போது, அவர் இருக்கும் இடத்தை சத்தமே இல்லாமல் கண்டு பிடித்து இருந்தான் ஆதி.
அவர் இருக்கும் இடத்தை தனது ஆட்களை வைத்து சல்லடை போட்டு கண்டு பிடித்தவன்,
அந்த தகவலை உடனடியாக தீரனின் காதுக்கு கொண்டு சென்றான்.
தீரனோ, சற்று யோசித்து விட்டு,
“நம்மள பத்தி, அந்த ஆளுக்கு முழு விஷயமும் தெரிஞ்சு இருக்கும். அதான் போட்டுத் தள்ள அவசரப் படுறார் மனுஷன். சத்தம் இல்லாம அடுத்த ஒரு கிழமையும் அந்த ஆளோட நடவடிக்கைகள பொல்லொவ் பண்ணு. அப்புறம் பார்ப்பம். எப்படியும் உடனே அந்த ஆள் களத்தில இறங்க மாட்டார்டா.” என கூற,
ஆதியும் அதனையே செய்தான்.
அதன் விளைவாக அவர்கள் போடும் திட்டம் பற்றி தெளிவாக தீரனுக்கு தெரிய வந்தது.
பார்கவும், இன்னொரு பக்கம் தனது ஆட்களை வைத்து அந்த விஷயத்தை ஊர்ஜிதம் செய்து தீரனிடம் கூற,
தீரனோ, “இதுவும் நல்லாத்தான் இருக்கு. நாம தேடிப் போகத் தேவையில்ல அவங்களே, நம்மைத் தேடி வர்றாங்க. வரட்டும், சத்தமே இல்லாம எல்லாத்தையும் முடிச்சிடலாம். என்னோட கணக்குப்படி பார்த்தா…. அவங்க எங்கள நெருங்க குறைஞ்சது இன்னும் இரண்டு கிழமை எடுக்கும். அதுக்குள்ள…. நாம செய்ய வேண்டியத செய்து முடிச்சிட்டு, ரெடி ஆகிடலாம்.”
ஆதியுடனும், பார்கவுடனும் சேர்ந்து தனக்குரிய திட்டங்களை வகுத்துக் கொண்டு,
தனக்காக உயிரையும் கொடுக்கத் துணியும் நம்பிக்கையான வேலையாட்களை மாத்திரம் அழைத்து,
அவர்களுடன் சேர்ந்து, ஒரு மீட்டிங்கையும் நடத்தி முடித்து இருந்தவனது உதடுகளில் ஒரு வன்மப் புன்னகை உருவாகி மறைந்தது.
“இன்னும் இரண்டு கிழமையில, இந்தக் கதைக்கு முடிவு கட்டிடலாம்.” என கூறியவன்,
ஆதியை அர்த்தத்துடன் பார்க்க,
அவனும் தலையை ஆமோதிப்பாக ஆட்டினான்.
நடந்த விடயங்கள் அனைத்தும்,
அபர்ணாக்கும், தமயந்திக்கும் தெரிவிக்கப்பட,
சற்று பயந்து போனவர்கள் தத்தமது கணவன்மார்களிடம் விசாரிக்க,
ஆதியோ, “சும்மா பயப்பிடாத பொண்டாட்டி. இதெல்லாம் எப்பவோ நடக்கும்னு எல்லாரும் எதிர் பார்த்தது தானே. நடந்து முடியட்டும். அப்போ தான் எனக்கும் நிம்மதி. என்னோட வாழ் நாள்ல எனக்கு பூரண நிம்மதி கிடைக்கப் போற நாள் அது தான். எங்களோட உயிர் அம்மாக்கு நாங்க நியாயம் செய்ய வேணாமா?” என கூறியவனின் குரல் சற்று கமறியது.
அபர்ணா, அந்தக் குரலில் அவனைக் கலங்கிப் போய்ப் பார்க்க,
“பெத்த அப்பாவே வெறும் மூட நம்பிக்கைக்காக என்னைக் கொல்லத் துணிஞ்சிட்டார். அம்மா, அப்பா இல்லாம வாழுற கொடுமை இருக்கே. அத அனுபவிச்சு இருக்கம். என்ன அழகான வாழ்க்கை?, ரசிச்சு வாழ்ந்து இருக்க வேண்டியது. எல்லாம் அந்த ஆளால பாழாய்ப் போய்ட்டுது. யாரும் அப்பா பத்திக் கேட்டா…. நானும் அண்ணாவும், சதாசிவம் அப்பாவைத் தான் உடனே சொல்லுவம், அவர மாதிரி ஆட்கள் இருந்தா உலகத்தில அனாதைகளே இருக்க மாட்டாங்க. ஆனா என்னோட அப்பா மாதிரி ஆட்கள் இருந்தா…. பெத்த பிள்ளைகளும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும், அனாதை இல்லங்கள் நிறைஞ்சு வழியும்.” என கூறியவன்,
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது தனது அறைக்குள் சென்று கதவை மூட, அவனின் பின்னே ஓடிச் சென்றாள் அபர்ணா.
மறு புறம், “நீங்க கொஞ்சம் யோசிக்கலாமே. அவர் ரொம்ப மோசமான ஆள். அவரால உங்களுக்கு ஆபத்து வரலாம்….” என தமயந்தி பேச ஆரம்பிக்க,
அவளை, ஒரு முறை கூர்ந்து பார்த்த தீனோ,
“அவர் மோசமான ஆளுன்னு இப்போ தான் மேடம்ற்கு தெரியுதா?, உன்னோட கருத்துப்படி நானும் மோசமான ஆள் தானே.” என சற்று இளக்கம் நிறைந்த குரலில் கூறியவன்,
அவளின் அக்கறை தேவையில்லை என்பதை போல கடகடவென எழுந்து சென்று அறைக்குள் புகுந்து கொள்ள,
அவனின் சுடு சொற்களில் கண்களில் கண்ணீர் வர பார்த்தாலும் அடக்கிக் கொண்டவள்,
“எப்படியும் பேசி விடுவது.” என்ற எண்ணத்துடன் அவனின் பின்னாக அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் வருவதைக் கண்டு கொண்டாலும் தன் பாட்டில் பைல்களை தூக்கி வைத்து பார்க்க ஆரம்பித்தவன் அவள் வந்து நின்ற பிறகும் நிமிர்ந்தான் இல்லை.
அவன் வேண்டும் என்றே அப்படி செய்கிறான் என புரிந்து கொண்டவள் அடுத்து வந்த பத்து நிமிடங்களும் அவனின் முன்னாடி கை கட்டியபடியே அவனைக் கூர்ந்து பார்த்தபடி நின்று கொண்டு இருந்தாள்.
“எவ்வளவு நேரத்துக்கு தான் அவனால் அவளை இப்படி நிற்க வைக்க முடியும்?” தன்னையே அவள் பார்த்துக் கொண்டிருப்பது மனதிற்குள் உறுத்த நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்,
பெரு மூச்சு ஒன்றுடன், பைலைத் தூக்கி மேசை மீது போட்டுவிட்டு காலுக்கு மேலே கால் போட்டபடி அமர்ந்து,
“உனக்கு இப்போ என்ன தான் வேணும்?” என கேட்டான்.
அவளும் சற்றும் தாமதம் இன்றி,
“நீங்க தான் எனக்கு வேணும் மாமா.” என கூறி விட,
இப்படி அதிரடியான ஒரு பதிலை எதிர்பாராதவன் ஒரு நிமிஷம் ஜெர்க்கானாலும் குரலை செருமிக் கொண்டு,
“உனக்கு கொஞ்சம் கொழுப்பு கூடித் தான் போச்சுது. என்னடி பயம் விட்டுப் போச்சா?” என உறுமல் குரலில் கேட்க,
தமயந்தியோ, சற்றும் அசராது, “ஆமா, கூடித் தான் போச்சுது. ஆனா கொழுப்பு இல்ல மிஸ்டர் புருஷன். உங்க மேல இருக்கிற காதல் கூடிப் போச்சுது. இப்போ என்ன அதுக்கு?, எனக்கு நீங்க வேணும். வாழ்க்கை முழுக்க வேணும் போதுமா?, உங்களுக்கு ஏதும் ஒன்னு நடந்தா…. அத என்னால தாங்கிக் கொள்ள முடியாது.”
“ஓஹ்…. இது எப்போதில இருந்து மேடம். நீங்க தான் என்ன ரொம்ப வெறுத்து ஒதுக்கினீங்களே.. இப்போ மட்டும் எப்படி லவ் வந்திச்சு. உண்மை எல்லாம் தெரிஞ்ச பிறகா….” என கேலிக் குரலில் தீரன் கேட்க,
அவனை ஆழ்ந்து பார்த்தவள், “உங்க மேல எனக்கு எப்போ காதல் வந்துது என்கிறது இங்க பிரச்சனை இல்லை. எவ்வளவு ஆழமா உங்கள காதலிக்கிறன் என்கிறது தான் முக்கியம்.” என அழுத்தமாக கூற,
தனது காயத்தின் வடுவை ஒரு முறை வருடி விட்டு, “உங்க காதலின் ஆழம் பற்றி எனக்கு நல்லாவே தெரியும் மேடம்.” என அதற்கும் கிண்டல் செய்தான் அவன்.
அதற்கு மேலும் அவனிடம் பேச விரும்பாது பால்கனிக்கு சென்று நின்று கொண்டவளின் மனது,
அவனுக்கு கோடீஸ்வரனால் எதுவும் ஆகக் கூடாதுன்னு வேண்ட ஆரம்பித்தது.
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,
அவளின் மன மாற்றம், நன்கு புரிந்தாலும், அவள் தன்னை நம்பாததை இன்னுமே அவனால் மன்னிக்க முடியவில்லை.
அவனின் காதல் கொண்ட மனம் காயப் பட்டுப் போனதை அவள் மறுக்க முடியாதே.
அந்த நாள் மாலை முடிந்து இராப் பொழுது ஆரம்பிக்கத் தொடங்கிய பிறகும், அவள் அங்கிருந்து அசைவது போலத் தெரியவில்லை.
தீரனுக்கு, அவள் அப்படி நிற்பது மனதைப் பிசையச் செய்ய,
“இவளோட…. என்ன இம்சை பண்றா….” என முணு முணுத்தவன்,
அவளின் அருகில் சென்று, குரல செரும,
பட்டென்று, அவனை நோக்கி திரும்பியவள், கண நேரத்தில் அவனின் கன்னத்தில் முத்தம் பதித்து விட்டு,
“பரவாயில்ல, என் புருஷனுக்கு, என் மேல கொஞ்சம் பாசம் இருக்கு தான்.” என கூற,
அவளது செய்கையில், கன்னத்தை தொட்டுப் பார்த்தபடி அவளை முறைத்துப் பார்த்தான் தீரன்.
பதிலுக்கு அவனை நோக்கி கண்ணை சிமிட்டியவள், “வரேன் புருஷா. சீக்கிரம் சாப்பிட வாங்க. இனி அடிக்கடி இப்படி ஷாக் ஆக வேண்டி வரும். ரெடியா இருந்து கொள்ளுங்க.” என கூறி விட்டு ஓடிச் செல்ல,
தீரனின் உதட்டில் யாருக்கும் தெரியாத ஒரு சிறு புன்னகை தோன்றி மறைந்தது.
தீரன் மனம் மாறி, தமயந்தியை புரிந்து கொள்வானா?
கோடீஸ்வரன் திட்டம் நிறைவேறுமா?, இல்லை தீரனின் திட்டம் நிறைவேறுமா?
அடுத்த எபி திங்கள் வரும் மக்காஸ் 😍😍😍
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். இன்னும் மூன்று எபிகள் தான் இருக்கு..
படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க மக்காஸ் 😍😍
மறக்காம படிச்சிட்டு கருத்து சொல்லுங்க மக்காஸ்.
Waiting for next epi sis
நன்றி நன்றிடாம்மா