இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!48

4.7
(14)

Episode – 48

ஆம், ஏற்கனவே தலை வலியுடன் தான் வீட்டுக்கு வந்தான் அவன்.

தாய், இறந்து போன அந்த நாளை அவனால் மறக்க முடியாது அல்லவா. இன்னும் மூன்று நாட்களில், அன்னையின் இறந்த தினம் வர இருந்தது.

அந்த தினம் வந்தாலே அவன் கொதி நிலையின் உச்சத்துக்கு சென்று விடுவான். ஒவ்வொரு வருஷமும், அந்த தினம் அன்று, தாங்கள் இருவரும் அநாதைகள் போல மாறி துயரத்தில் மூழ்கி இருக்க,

அதற்கு காரணம் ஆனவர் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு அவனுக்குள் அப்படி ஒரு ஆத்திரம் வரும்.

அவரைப் பழி வாங்க ஆரம்பித்த பிறகு தான் அவன் அந்த நாள் வந்தால் கொஞ்சம் ஆவது அமைதியாக இருப்பது.

ஒவ்வொரு வருடமும் குறித்த நாளில் ஏதாவது ஒருவிதத்தில் கோடீஸ்வரனை தோற்கடிக்க வைத்தாலோ அல்லது அவரது பணத்தை நஷ்டப்பட வைத்தாலோ ஆதிக்கும் தீரனுக்கும் அப்படி ஒரு ஆனந்தம் உண்டாகும்.

அப்படி இருந்தாலும் அவரை முழுதாக அழிக்க முடியவில்லை. வேரோடு சாய்க்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் வரவில்லை. என ஒவ்வொரு வருஷமும் அவன் மனம் வெம்பி நோகாத நாள் இல்லை.

இப்போதும் அடுத்து வரும் மூன்று நாட்களுக்குள் எப்படி அவரது கதையை முடிப்பது?, அன்னை இறந்த அதே நாளில் அவரின் இறப்பை எப்படி உறுதி செய்வது?, கோடீஸ்வரனை எங்கணம் தீர்த்துக் கட்டுவது? என பலவித யோசனைகளுடன் வீட்டுக்குள் வந்தவனுக்கு அன்னையின் போட்டோவை பார்த்ததும் மகிழ்ச்சி வருவதற்கு பதிலாக பழைய ரணங்கள் யாவும் கீறப்பட்டு விட,

ஹாலில் நின்று, “யார் இந்த போட்டோவை இங்க மாட்டியது?” என பெருங்குரலெடுத்து கத்தினான் அவன்.

அந்த நேரத்தில் ஆதி வீட்டில் இல்லாத காரணத்தினால் தீரனின் கோபத்தை சமன்படுத்துவதற்கு அங்கு யாருமே இருக்கவில்லை.

அவனின் கோபக் குரலில் வீட்டில் இருந்த அனைவரும் ஹாலில் ஒன்று கூட,

தமயந்தியும் பதட்டப்பட்டு கைகளைப் பிசைந்து கொண்டு அவனின் முன்பாக வந்து நின்றாள்.

அவனோ, அனைவரையும் ஒருமுறை கூர்ந்து பார்த்து விட்டு,

போட்டோவை சுட்டிக் காட்டி “யார் இந்த வேலையை செய்தது?” என கைகளால் வினவ,

தமயந்திக்கு கால்கள் தானாக நடுங்க ஆரம்பித்தது.

அங்கிருக்கும் ஒவ்வொருவரும் மாறி மாறி தங்களைப் பார்த்தனரே தவிர தங்களது எஜமானி அம்மாவை காட்டிக் கொடுக்க யாரும் முன் வரவில்லை.

ஆனால் அவளது செய்கையே அவளைக் காட்டி கொடுப்பது போலத் தான் இருந்தது.

அவனின் கூர்மையான பார்வையை தாங்க முடியாது அவளின் கால்கள் நடுங்கி உதற ஆரம்பித்தது.

அவளது செய்கைகளின் மீது கவனம் வைத்து இருந்தவனுக்கு,

அப்போதே தெரிந்து விட்டது இந்த வேலையை செய்தவள் அவள் தான் என்பது.

அதே போல, அவனது பார்வையில் அவளுக்கும் புரிந்து விட்டது. தான் இனி தப்ப முடியாது, மாட்டிக் கொண்டோம் என்று.

அவன் கண்டுபிடித்து இருப்பான் என அவனது ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக காட்டிக் கொடுத்தது.

கண்களை ஒரு கணம் இறுக மூடித் திறந்தவன்,

அனைவரையும் அவரவர் வேலைகளை கவனிக்க போக சொல்லி விட்டு,

தமயந்தியை நோக்கி வந்து, அவளின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு, அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனின் அழுத்தமான பிடி சொன்னது அவனது கோபத்தின் அளவை.

அறைக்குள் வந்ததும், அவளை உதறித் தள்ளி விட்டவன்,

“சொல்லுங்க மேடம், யார கேட்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க நீங்க?, எதுக்காக இப்போ அம்மாவோட போட்டோவை எடுத்து வெளில மாலை போட்டு வைச்சீங்க?, யாரு உங்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்தது மேடம்?, நான் கொடுத்தனா?…. எனக்கு அப்படி கொடுத்ததா நினைவு இல்லையே.” என ஒரு விதமான குரலில் கேட்டுக் கொண்டே போக,

அவனது கேள்விகளுக்கு உடனடியாக பதில் கூற முடியாது, எச்சில் விழுங்கி கண் கலங்க அவனைப் பார்த்தவள்,

“நான் உங்க பொண்டாட்டி. அந்த உரிமை எனக்கு இருக்கு தானே. நான் என்னோட மாமியாருக்கு செய்றத நீங்க என்ன கேட்குறது. சும்மா என்ன மிரட்டாம போங்க சார்.” என பதிலுக்கு கூறி விட,

இருந்த கொதி நிலை இன்னும் கூடிப் போக,

“ஏய்…. நானும் போனாப் போகுதுன்னு பார்த்தா என்ன ஓவரா தான் பேசுறாய், ஓவரா தான் செய்றாய். உன்னோட இஷ்டத்துக்கு நடந்து கொள்ள, இது ஒண்ணும் உன்னோட வீடு இல்லை. என்னோட கோட்டை இது. இங்க இருக்கிறதுன்னா…. நான் சொல்றத கேட்டுக் கொண்டு இருந்து தான் ஆகணும். இல்லன்னா….” என ஆரம்பித்தவன்,

அடுத்த வார்த்தையை கூறாது முடித்து விட,

அவனின் பேச்சில் முற்றிலும் உடைந்து போன பெண்ணவள்,

அவனை நோக்கி, “இல்லன்னா…. சொல்லுங்க.

அது தான் வாய் வரைக்கும் வந்தாச்சே. சொல்லி முடிங்க.” என ஊக்கினாள்.

அவனும் ஒரு கணம் அவளைக் கூர்ந்து நோக்கி விட்டு,

“தாராளமா வெளில போகலாம்.” என கையைக் காட்ட,

“ஓஹ்….” என விரக்தியாக சிரித்தவள்,

“சரி நான் போறேன். ஆனா உங்க மனசில என் மேல கோபம் இல்ல. வன்மம் இல்லன்னு சொல்லுங்க நான் போய்டுறன். என் மேல காதல் இருக்குன்னு சொல்லுங்க. உங்க மனசுல எனக்குன்னு ஒரு குட்டி இடம் இருக்குன்னு சொல்லுங்க. நான் சத்தம் இல்லாம போய்டுறேன்.” என அவள் அப்போதும் விடாப்பிடியாக நிற்க,

சலிப்புடன் தலையை இரு புறமும் ஆட்டியவன்,

“இல்ல அது மட்டும் முடியாது. என் மனசு உணராம…. ஒத்துக் கொள்ளாம ஒருநாளும் உன்ன என்னால ஏத்துக்க முடியாது. அப்படி நான் செய்தா…. அது நான் என் மனசுக்கு செய்ற பெரிய துரோகம். அத என்னால செய்யவே முடியாது.”

“ஓஹ்…. அப்போ நான் என்ன செய்தா உங்க கோபம் போகும். அதையாவது சொல்லுங்க. என்னால முடிஞ்சா நான் கண்டிப்பா பண்றேன் ப்ளீஸ். இப்படியே இருந்தா எப்படிங்க?, எத்தனை நாள் தான் இந்த கோபத்தோட அலைவீங்க. கொஞ்சம் எனக்காக இறங்கி வாங்களேன்.” என கெஞ்ச,

அப்போதும், ஒரு மரத்த பார்வை ஒன்றை தமயந்தியை நோக்கி செலுத்தியவன்,

“எந்த அப்பாக்காக நீ என் பேச்ச மீறிப் போனீயோ…. அந்த அயோக்கியன உன்னால நேருக்கு நேர் பார்த்து ஒரு அறை அறைய முடியுமா?, அப்படி அறைய முடியும்னா…. நான் உன்ன மன்னிக்க ரெடியா இருக்கேன்.”

“அந்த ஆள் உன் கையால அடி வாங்கணும். அத நான் பார்க்கணும். அவ்வளவு தான் விஷயம். உன்னால செய்ய முடியுமா?”

“……………………..”

“என்ன மேடம் நிறையப் பேசினாய். இப்போ எதுவுமே பேச மாட்டேன்குறாய்?” என தீரன் வினவ,

“இது தான் உங்கள நெருங்க இருக்கிற ஒரே வழின்னா நான் செய்ய ரெடி. ஆனா அதுக்கு முதல்ல மிஸ்டர் கோடீஸ்வரன் இருக்கிற இடம் எனக்கு தெரியணும். உங்களுக்கு தானே அவர் இருக்கிற இடம் தெரியும். சொல்லுங்க போய் நீங்க சொன்னத செய்திட்டு வரேன்.” என பதிலுக்கு விறைப்பாக கூற,

அவளின் பதிலில், ஒரு கணம் உள்ளுக்குள் மெச்சுதல் தோன்றினாலும் வெளியில் காட்டாது, மறைத்துக் கொண்டவன்,

“ஹ்ம்க்கும்.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. வாய் வார்த்த ஒண்ணுக்கும் உதவாது. உனக்கு தேவைன்னா நீ தான் இறங்கி வேலை செய்யணும். என்னோட முடிவ நான் சொல்லிட்டேன் இனி உன் விருப்பம்.” என கூறியவன்,

மனதில், “இப்படி ஏதும் சொன்னா தான் இவ அமைதியா இருப்பா. இல்லன்னா என்னையும் டென்ஷன் ஆக்கிக் கொண்டு இருப்பா. ஒழுங்கா வேலை செய்ய முடியாது. இவள காயப்படுத்திட்டு நான் மட்டும் நிம்மதியாவா இருக்கன். எல்லாம் என் நேரம். சே…. தெரியாம ஒரு காதல பண்ணித் தொலைச்சுட்டன்.” என எண்ணிக் கொண்டவன்,

அதிர்ந்து நின்றவளை ஒரு முறை நோக்கி விட்டு விறு விறுவென வெளியில் சென்று விட்டான்.

அவன் போன பின்பும், அவன் கூறிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உருப் போட்டுப் பார்த்தவள், நிறைய யோசனைகளுக்குப் பிறகு, திடமான ஒரு முடிவுக்கு வந்தாள்.

அவளது முகத்தில் இது நாள் வரையும் இல்லாத அளவுக்கு ஒரு வித தீவிரம் உருவாகி இருந்தது.

மனதிற்குள், “இந்த பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களுக்குள்ள நானே முடிவு கட்டுறன். என்னோட காதல் எவ்வளவு உண்மையானது, வலிமையானது என்கிறத உங்களுக்கு நான் புரிய வைக்காமல் விடமாட்டேன். இந்த முயற்சியில என்னோட உயிர் போனாலும் எனக்கு அத பத்தி எந்த கவலையும் இல்லை தீரா.” என உருப்போட்டுக் கொண்டவள்,

ஒரு விபரீதமான முடிவையும் குறித்த கொஞ்ச நேரத்திற்குள் எடுத்து முடித்து இருந்தாள்.

அதற்கு அடுத்து வந்த இரு நாட்களும் தீரன் அவளின் முகத்தை பார்த்தால் கூட அவனின் முகத்தை தமயந்தி பார்க்கவும் இல்லை, அவனிடம் எந்த காரணத்துக்காகவும் நெருங்கவும் இல்லை.

ஏன் அவன் இருக்கும் இடத்தில் கூட தமயந்தி இருப்பது இல்லை.

தீரனுக்கே, தான் பேசியது அதிகப் படி என தெரியும். அதனால் வந்த குற்ற உணர்வுடன், அவள் விலகிப் போவதும் சேர்ந்து உள்ளுக்குள் மனம் வருந்தினாலும், வெளியில் முடிந்த வரையிலும் அமைதியாகவே இருந்தவன்,

“எல்லாம் முடிய பார்த்துக்கலாம்.” என எண்ணி அவளை அவளது போக்கில் விட்டு விட்டான்.

அபர்ணாவும், சிவகாமி அம்மாவும் கூட,

“தீரன் கடிந்து கொண்டானா?” என கேட்டதோடு நிறுத்திக் கொண்டனர்.

பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

தீரன், மிகவும் தீவிரமாக, நுணுக்கமாக பிளான் போட்டு, அதனை நடை முறைப்படுத்த ஆதியுடன் கோடீஸ்வரன் இருக்கும் இடத்துக்கு குறித்த நாளில் செல்ல,

அங்கே அவனை வரவேற்கவென அவனது மனையாளை கட்டி வைத்து இருந்தனர் கோடீஸ்வரனும், அவனது ஆட்களும்.

அந்த இடத்தில் மனைவியை எதிர் பாராதவன் அதிர்ந்து போய் நிற்க,

எந்த வித பயமும் இல்லாமல் அவனை கூலாக எதிர் கொண்டாள் தமயந்தி.

அதோடு, அவன் சொன்னது போல கோடீஸ்வரனுக்கு அவள் அறைந்தும் இருந்தாள்.

அதுவும் சும்மா அல்ல.

கோடீஸ்வரனின் கன்னங்கள் இரண்டும் சிவந்து போய், கை விரல்கள் அடையாளம் பதியும் வண்ணம் அறைந்து இருந்தாள் அவனின் மனையாள்.

தீரன் எங்கணம் மனைவியை காப்பாற்ற போகிறான்?

தமயந்தியை வைத்து கோடீஸ்வரன் ஆடப் போகும் ஆட்டம் என்ன?

யார் கதை, யாரினால் முடித்து வைக்கப்படப் போகிறது?

அடுத்த எபி நாளைக்கு கண்டிப்பா வரும் மக்காஸ் 😍😍😍

கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். இன்னும் இரண்டு எபிகள் மட்டும் தான் இருக்கு..

படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க மக்காஸ் 😍😍

மறக்காம படிச்சிட்டு கருத்த சொல்லுங்க மக்காஸ். கதை முடிய இரு நாட்கள் மட்டும் தான் தளத்தில் இருக்கும்…

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!48”

Leave a Reply to தாரதி Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!