தன் மகளின் புடவையின் முன்சுருக்கத்தை சரி செய்தபடி, “செம்பா நாங்க கோவிலுக்கு வர கொஞ்சம் நேரம் ஆகும். மாட்டை கொண்டு குகன் வயல்ல கட்டிட்டு வாறேன். உங்க அப்பா கோவிலுக்கு போய்ட்டார். எவனாவது குடிக்க கொடுத்துருப்பான். குடிச்சிட்டு எங்கேயாவது விழுந்து கிடக்காமல், நீ பார்த்து உன் பக்கத்துலயே இருக்க வை சரியா.?”
“சரிம்மா” என்றவள் வெளியே வர, “அண்ணி” என அழைத்தபடி வீட்டிற்குள் வந்தார் ராசாத்தி.
“அடியாத்தி என் மருமக எம்பூட்டு அழகு. என் கண்ணே பட்டும் போல” என செம்பாவிற்கு திருஷ்டி கழித்த தன் அம்மாவை முறைத்தாள் கோகி.
“ஏன்டி முறைக்கிற?”
“அப்போ நான் அழகா இல்லையா. உன் கண்ணுக்கு உன் மருமக மட்டும்தான் அழகோ!”
“அதான் உன் அத்தை இருக்காளேடி உன்னை தலையில் வச்சி கொண்டாட, அவ உன்னை கொஞ்சுவாள் போ.”
“யத்தையோவ்”
“இதோ வர்றேன் தங்கம், என வெளியே வந்தவர் ‘அடடே என் மருமகளா இது’ என கோகியின் கண்ணம் பிடித்து கொஞ்ச, எப்படி பாத்தியா என் அத்தையை என புருவத்தை உயர்த்தினாள்” கோகி.
ராசாத்தி சிரித்தபடியே இருவரின் தலையில் பூவை வைத்துவிட்டார்.
“உன் மருமக அமைதியின் சிகரம் போல, நான் சண்டைக்காரி போல, அவகிட்ட வாயைகொடுத்தால் தெரியும்” என மனதிற்குள் நினைத்து சிரித்தவள், “சரிம்மா” அதான் வீட்ல வச்சி நூறு தடவை சொல்லிட்டியே திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்தாதம்மா.”
“என்கிட்ட சரின்னு சொல்லிட்டு யார்கிட்டயாவது வாயடிச்சன்னு தெரிந்தது காலுக்கு கீழே தோலை உறிச்சிடுவேன்.”
“ம்மா அதான் சரின்னு சொல்லிட்டேன்ல ஆளை விடு, வா செம்பா” என இருவரும் கோவிலுக்கு கிளம்பினர்.
கோவிலுக்கு வந்தவள். முதலில் தேடியது தன் அப்பாவைதான். நல்லசிவத்தை பார்த்து, ஒரு இடத்தில் அமரவைத்துவிட்டு, கோவிலில் திருவிழாவிற்கு கடை போட்டிருக்க, அதை பார்க்க வந்தனர் இருவரும்.
“செம்பா அங்கே பாறேன். வளையல் கடை. எனக்கு கண்ணாடி வளையல் வாங்கிகொடு”
“அதுலாம் வேணாம்டி. நம்ம செய்ற வீட்டு வேலைக்கு உடனே உடைஞ்சிடும். அதுவுமில்லாமல் வேலைக்கு போனால் கண்ணாடி வளையல் போட கூடாதுல்ல கோகி”
“ப்ளிஸ் டி நான் வீட்டுக்கு வந்து போட்டுக்குறேன்.”
“சரி வா, என வளையல் கடைக்கு அழைத்து சென்றவள், அவள் அணிந்திருந்த பால்வண்ண தாவணிக்கு ஏற்ற நிறத்தில் வளையல் வாங்கிகொடுத்தாள்.”
“அழகா இருக்கு செம்பா, உனக்கும் வாங்குடி”.
“ம்ப்ச், சும்மா இருடி. நீ போட்டுருக்கல்ல போதும் வா” என அங்கிருந்து கோகியை கஷ்டபட்டு அழைத்து வர,
“செம்பா” என்றாள் மறுபடியும்…
“இப்போ என்னடி வேணும்.”
“எனக்கு ஒன்னும் வேணாம்டி செல்லகுட்டி, துரத்துல உங்க பாலா மாமா மாதிரி ஒரு ஆள் நிற்க்கிறாங்க” என்றதும்… உடனே அந்த இடத்தை பார்த்தாள்.
“மாதிரியில்ல, அவருதான்.”
“ஓஹ் அந்த அப்பத்தா சொன்னாங்கல்ல, திருவிழாவுக்கு அவங்க நண்பர்கள் எல்லாரும் வாறாங்கன்னு”
“ம்ம்ம்” என்றவள் விழிகளும் அந்த இடத்தை சுற்றி அலைபாய்ந்தது.
பாலாவும் செம்பருத்தி நிற்பதை கவனித்தவன், தன் நண்பர்களை விட்டு தனியாக அவளை நோக்கி வந்தான்.
“செம்பா, அண்ணா இங்கேதான் வருதுடி.”
“வந்தால் வரட்டும் நமக்கென்ன?”
“பாலா அண்ணா கூட பேசமாட்டியா?”
“அவங்ககிட்ட பேசி தேவையில்லாத பட்டபெயர் எல்லாம் வாங்க நான் தயாராக இல்லை.”
“அதே நேரம் பாலா அவர்களிடம் வந்தான்.”
“அண்ணா எப்படி இருக்கிங்க?” என்ற கோகியிடம்…
“நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்க?”
“நல்லாயிருக்கோம்.”
“செம்பா எப்படி இருக்க?”
பதில் பேசவில்லை. எங்கேயோ பார்வையை வைத்திருந்தாள்.
“என்கிட்ட ஏன் பேசமாட்ற செம்பா. நான் என்ன பண்ணேன்.”
இப்போதும் பதில் இல்லை. பார்வை வேறு இடத்தை வெறித்தது.
“செம்பா உங்கிட்டதான் பேசுறேன்”
“தயவு செய்து, இங்கே இருந்து போங்க. உங்க அம்மா என்கிட்ட பேசுவதை பார்த்தால் பெரிய பிரச்சனை ஆகும்.”
“அதை நான் பார்த்துக்கறேன்.”
“எப்படி பார்ப்பிங்க, எல்லார் முன்னாடியும் என்னையும், என் குடும்பத்தையும் அசிங்கமா பேசுவாங்களே, அதை பார்ப்பிங்களா?, இல்லை உங்க அம்மா ஓடுகாலி, உன் அக்கா ஓடுகாலி, நீ எவனை பிடிச்சிட்டு ஓடப்போற, இல்லை இன்னும் எவனும் வசதியா சிக்கலையான்னு கேவலமா பேசுவாங்களே, அதை பார்த்து ரசிக்க போறிங்களோ!” என்றவளின் கோபத்தை பார்த்தபடி, “என் செம்பாவுக்கு இவ்வளவு கோபம் வருமா? அதுவும் என்கிட்ட”
“ம்ப்ச் ப்ளிஸ் மாமா, தயவு செய்து போங்க, உங்க அம்மா மேல உள்ள கோபத்தை உங்ககிட்ட காட்டிட போறேன்.”
“ஏன் பாப்பா இப்படி பேசுற. இந்த மாமா உன்கிட்ட பேசக்கூடாதா..?”
“ஆமா, பேசவேண்டாம்.”
“செம்பா , உனக்கு என்ன பைத்தியமா, அண்ணா முகமே மாறிடுச்சிடி, ஏன்டி அவர்கிட்ட இப்படி பேசுற?”
“நீ வாயை மூடு கோகி.”
“செம்பா நான் சொல்றதை கேளு”
“கோகி விடு. அவ எங்க அம்மா மேல உள்ள கோபத்தை என்கிட்ட காட்டுறாள்” என்ற பாலாவை பார்த்தவள்.
“அவங்களுக்கே தெரியிதுல்ல, முதல்ல இங்கே இருந்து போக சொல்லு கோகி.”
“சரி நான் போறேன். இங்கேதான் இன்னும் இருபது நாளுக்கு மேல் இருக்க போறேன். அதுக்குள்ள என் பாப்பாவுக்கு என் மேல உள்ள கோபம் போய்டும்னு நினைக்கிறேன் என்றவன் அங்கிருந்து மெதுவாக நடந்தான்.”
“ஏன் செம்பா இப்படி பேசுற? என கேட்க போனவள், கலங்கிய பெண்ணவளின் விழிகளை கண்டு பேசுவதை நிறுத்தினாள்..
“என்னடி? கண்ணு கலங்கிருக்கு?”
“மாமா கஷ்டபட்டிருக்கும்ல”
“ஆஹ்…. பேசுவதையும் பேசிட்டு இப்போ சொல்லு”
“சரி வா, நம்ம வீட்டுக்கு போகலாம்.”
“முடியாது, எனக்கு பசிக்குது நான் சாப்பிட்டுதான் வருவேன். அத்தை அம்மா வந்திருப்பாங்க, வா அங்கே போகலாம் என அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வந்தனர் இருவரும்.”
திருவிழா ஆரம்பிக்கும் முதல்நாள் அவரவர் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், அவர்களால் முடிந்த காணிக்கை, நேர்த்திக்கடன் என சமையலுக்கு தேவையான பொருள்கள் வாங்கி கொடுப்பர். அதை வைத்துதான் கோவிலின் திருவிழா முடியும் ஐந்து நாட்களும் அன்னதானம் வழங்கப்படும்.
கோவிலில் மதிய பூஜை முடிந்து, சாப்பாடு பந்தி நடைபெற்று கொண்டிருந்தது.
“செம்பா, கோகி சாப்பிட உணவு பாறிமாறியபடி பாலா அந்த பக்கமாய் நின்றிருந்தான்.”
சாம்பாருக்காக ஒருவர் அவனை அழைக்க, பாலா அவர்களை கடந்து செல்ல போக…
“அண்ணா இங்கே சாம்பார் ஊத்துங்க, அங்கே எங்கே போறிங்க? என்ற கோகியை முறைத்தான். இதோடு ஆறாவது தடவை அவனிடம் கேட்கிறாள்”.
அவள் பக்கத்தில் அந்த சாம்பார் வாளியை வைத்துவிட்டு, “இதோட ஆறாவது தடவை சாம்பார் கேக்குற சாப்பிட கேக்குறியா? இல்லை குடிக்கிறியா?”
“நல்லா இருக்குல்ல அண்ணா, அதான் கேட்டேன். இதுக்கு போய் இந்த பச்சை மண்ணுமேல நீங்க கோப படலாமா?” என பாவமாக முகத்தை வைத்தபடி கேட்க,
பாலா சிரித்தபடியே “அதுக்குன்னு இப்படியா”…
“நல்ல சாப்பாடு சாப்பிடிருந்தால் கேட்க மாட்டாளுங்க, என்னைக்காவது ஒருநாள் நல்ல சாப்பாடு கிடைக்குது ஊத்திவிடு தம்பி, நல்லா வயிறார சாப்பிடட்டும்” என அங்கே வந்தாள் மங்கை.
“அதை ஓசி சோறு திங்கிறவ சொல்றாள் பாரு கோகி. கஞ்சி குடிச்சாலும் எங்க உழைப்பிலதான் சாப்பிடுறோம். கல்யாணம் முடிந்து பதினாறு வருஷம் ஆனதுக்கு அப்புறமும் அப்பன் காசை புடுங்கி திங்கிறவங்களாம் எங்களை பேச வந்துட்டாங்க, இந்த புழைப்பு புழைக்கிறதுக்கு எங்கேயாவது போய்” என பேச வந்த செம்பாவிடம்,
“ஏய், என மங்கை கத்திக்கொண்டு வர….
“என்ன ரொம்ப கத்துற, பார்த்து வாய் கிழிஞ்சிட போகுது.”
“யாரை பார்த்துடி நீ ஓசி சோறு சொன்ன..?”
“உன்னைத்தான். வேற யாரை சொல்ல..? உண்மையை பேசினால் மட்டும் வலிக்குதோ, நீயும் பேசினல்ல, அப்போ நானும் பேசுவேன். நானா உன்னை தேடி வரலை. எங்க வேலையைத்தான் பாக்குறோம். நீயா வந்து வாங்கி கட்டிக்கிற, அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.” என்றாள் செம்பா.
“பாலா, என்னை இப்படி பேசுறாள். நீ பார்த்துட்டு நிக்கிற” என தம்பியிடம் புகார் வாசிக்க
அவனோ “நீ பேசுனது தப்புக்கா” என முடித்துவிட்டான்.
“ஓஹ் உன் அத்தை மகள்ன்னு மயக்கத்துல அவளுக்கு சப்போர்ட் பண்றியா, இரு அம்மாகிட்ட போய் சொல்றேன்.”
“போ சொல்லு, எனக்கென்ன? என தோளை குலுக்கியபடி சாம்பார் வாளியை தூக்கி கொண்டு நகர்ந்தான் பாலா.”
“கோகி , செம்பா இருவரையும் முறைத்தபடி நகர்ந்தாள் மங்கை”
“செம்பா இந்த அழுகுன தக்காளி ஏதாவது ஏழறையை கூட்டிட போகுது.”
“இது வேற அது வேற கோகி. இது என் தன்மானம். என்னை ஒருத்தர் கோவலமா பேசும்போது என்னால் பார்த்துடுட்டு சும்மா இருக்கமுடியாது. ஆனால் அவர்கிட்ட பேசினால் உடனே அந்த சொர்ணாக்கா என் குடும்பத்தையும் , ஓடி போய் கல்யாணம் பண்ண என் அக்காவையும், சேர்த்து வச்சி மொத்தமாக என் அம்மாவை பேசுவாள். அவங்களை எதிர்த்து போசினால் அம்மா என்கிட்ட தான் சண்டைக்கு வரும். என்னை தானே பேசுறங்க, உன்னை பேசலையே.! என்ன இருந்தாலும் என் அண்ணண் குடும்பம். அவங்களை நீ எப்படி அசிங்கமா பேசலாம்னு சொல்லும். அதனால், நம்ம அவங்ககிட்ட பேசாமல் ஒதுங்கிபோறது நல்லது. ஆனால், இந்த மங்கை மட்டும் அடிக்கடி என்னை தேவையில்லாமல் சீன்டி பாக்குறாள்.
“சரி விடு இந்த தக்காளியை ஒருநாள் நான் நசிக்கிடுறேன்.”
“சரி போகலாம் வா, என இருவரும் வீட்டிற்கு கிளம்பினர். சந்திரா, ராசாத்தி இருவரும் இரவு கோவிலில் கூத்து நடக்கும் என்பதால் அதை பார்த்துவிட்டுதான் வருவார்கள். சிவம் பெண் பிள்ளைகளுக்கு துணையாக வீட்டிற்கு வந்துவிட்டார்.”
“வித்யா கண்ணாடி வளையலை பார்த்ததும் தினேஷிடம் கேட்க அவளுக்கு வாங்கி கொடுத்தான். அதை பார்த்த ஆத்விக்கும் ஆசையாக இருந்தது.”
“வித்யா நானும் வளையல் போடவா?” என கேட்டவளை வேற்று கிரகவாசிபோல பார்த்தாள் வித்யா.
“என்னடி அப்படி பாக்குற.?”
“நீயா கேட்குற…? வளையல் போடுறது, கொலுசு போடுறது, பூ வைக்கிறது எல்லாம் பட்டிக்காடுன்னு சொல்லுவ, இப்போ என்ன தீடிர்னு?”
“ம்ப்ச், நீ போட்டுருக்கல்ல, அதை பார்த்ததும் எனக்கும்
வளையல் போடனும்னு தோணுது.”
“சரி வா என ஆத்விகாவிற்கும் அவள் அணிந்திருந்த சல்வாருக்கு இணையாக இளம் பச்சை நிறத்தில் வளையல் எடுத்தாள். கைகளுக்கு அழகாக இருக்க, அதையே ரசித்து பார்த்தாள் ஆத்வி.”
“ரொம்ப அழகா இருக்கு ஆத்வி.”
“ம்ம்ம்ம், ஐ லைக் இட்”
அப்போது அந்த இடத்திற்கு பாலாவும் கோகுலும் வந்தனர்.
அவள் கைகளில் இருந்த வளையலை பார்த்த பாலா “என்ன உலக அதிசயம்லாம் நடக்குது” என்க…
ஆத்வி பாலாவை பார்க்க,
அவளை வீணாக கோபப்படுத்த வேண்டாம் என அடுத்த நொடியே “சரி சாப்பிடலாம் வாங்க”, என்றான் பாலா.
“ஆமா பந்தி வைக்கிற இடத்துலே ஏதோ பஞ்சாயத்தாமே” என தினேஷ் கேட்க,
“உனக்கு யாருடா சொன்னது?”
“கோகுல்தான்”
“நீ என்கூடதானடா இருந்த, அதுக்குள்ள எப்படி எனக்கு தெரியாமல் சொன்ன?.”
“டேய்.. நீ அங்கே பேசிட்டு இருக்கும்போது தினேஷ் கால் பண்ணாண். அதான் சொன்னேன்.”
“சரி வாங்க சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம். ராத்திரி அலங்கார பூஜை நடக்கும். அதற்குள் சமரும் வந்திருந்தான். அப்போது எல்லாரும் சாமிகும்பிட வரலாம்.
“நீ என்னடா கையில் மஞ்சள் கயிறு கண்டிருக்க?”
“நாளைக்கு நான் பால்குடம் எடுக்கனும்டா. வருஷம் தோறும் எடுக்குறதுதான்.” அதுக்குதான் இந்த காப்பு கயிறு கட்டுவாங்க”
“சீக்கிரம் கல்யாணம் முடியனும்னு வேண்டிகிட்டியா?” என கோகுல் கேட்க,
“கண்டிப்பாடா. மெடிக்கல் கேம்ப் முடிந்த உடனே வித்யா வீட்ல போய் பொண்ணு கேட்கனும்.” என்றான் தினேஷ்.
“நாங்க இருக்கோம்டா கவலைபடாதே.” என பாலா சொல்ல…,
“தினேஷ், நீ சமர் இருக்குற வரைக்கும் கவலைபடாதே. அவனே உன் காதலையும் சேர்த்து வைப்பான். வேற யாரோட உதவியும் தேவையில்லை” என பாலாவை பார்த்து நக்கலாக ஆத்வி சொல்ல,
“ஆமா, இந்த ஆத்விகா அம்மையார் சொல்றது சாரிதான், வாங்கடா பசிக்குது சாப்பிட்டு தூங்கலாம்” என அழைத்து சென்றான் கோகுல்.
இங்கே வீட்டிற்கு வந்த செம்பாவின் மனது தவியாய் தவித்தது தன்னவனின் முகத்தை பார்க்க. அவளுக்கானவனை மனம் தேடுகிறது. தெரிந்தும் தெரியாதது போல எவ்வளவு நாட்கள் நடிக்க முடியும். அவனை தவிர வேறு வாழ்க்கை இல்லையென வாழ்பவள். அவனை ஏற்க மட்டும் தயங்குவது ஏனோ?
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.8 / 5. Vote count: 10
No votes so far! Be the first to rate this post.
Post Views:582
1 thought on “இதயமே இளகுமா அத்தியாயம் 7”
DEEPA V
சூப்பர் சூப்பர்…
செம்பா அந்த மங்கைக்கு சரியான பதிலடி கொடுத்தாள் மிக அருமை…
கோகி உண்மையில் செம்பாவிற்க்கு இருக்கும் பக்குவம் உணக்கு இன்னும் வரவில்லை டா…
செம்பா கூறுவது போல் அவள் பாலா விடம் பேசினால் அவன் அம்மா தேவை இல்லாத கதை கட்டுவாள்…
சூப்பர் சூப்பர்…
செம்பா அந்த மங்கைக்கு சரியான பதிலடி கொடுத்தாள் மிக அருமை…
கோகி உண்மையில் செம்பாவிற்க்கு இருக்கும் பக்குவம் உணக்கு இன்னும் வரவில்லை டா…
செம்பா கூறுவது போல் அவள் பாலா விடம் பேசினால் அவன் அம்மா தேவை இல்லாத கதை கட்டுவாள்…
நாளை.சமர்.– செம்பா.சந்திப்பதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்