இதயம் பேசும் காதலே..2

5
(8)

எவ்வளவு நேரம் ஷவரில் நின்றானோ தெரியவில்லை ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை துவட்டி விட்டு உடைமாற்றி விட்டு வந்து சோபாவில் அமர்ந்து தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான் ரிஷி.

காலை நேரம் மெல்ல கண்விழித்தாள் நிலா.  பெட்டில் படுத்து இருக்கேன் பெட்டுக்கு எப்போ வந்தேன் ஷோபாவில் தானே படுத்திருந்தேன் ஒருவேளை இந்த அங்கிள் என்னை ஏதும் பண்ணிட்டாரா என்று நினைத்தவள் தன்னை நன்றாக பார்க்க உடைகள் எதுவும் கலையவில்லை நல்லவர்தான் என்று நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தாள் நிலா .

அவனோ சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். லேப்டாப் கூட க்ளோஸ் பண்ணாமல் அப்படியே படுத்து தூங்கிட்டு இருக்காரு பொறுப்பே இல்லாத மனுஷனா இருப்பாரு போல எல்லாரும் நிலா மாதிரி பொறுப்பானவர்களாக இருப்பாங்களா என்று தன்னைத்தானே பெருமையாக பேசிக் கொண்டிருந்தவள் எழுந்து சென்று குளியல் அறைக்குள் புகுந்து முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தாள் .

மணி என்ன என்று அவள் பார்க்க எட்டு என காட்டியது இவ்வளவு நேரம் தூங்கிட்டியா நிலா ஐயோ என்று நொந்து கொண்டாள் நிலா. பசிக்குது இந்த அங்கிள் வேற கண்ணு முழிக்காமல் இருக்காரு எப்படி ஆர்டர் பண்ணுறது என்ன ஏதுன்னு எனக்கு தெரியலையே என்று நிலா தவித்துக் கொண்டிருக்கும் அந்த நேரம் அந்த அறையின் கதவு தட்டப்பட்டது.

யாரா இருக்கும் என்று பயந்து கொண்டு இருந்தாள் நிலா. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கண் விழித்தான் ரிஷி.

எப்போ தூங்கினேன் நான் ஏன் சோபாவில் படுத்திருக்கேன் என்று நினைத்தவன் கண்களை நன்றாக கசக்கி விட்டு விழித்து பார்க்க எதிரில் பாவம் போல நிலா அமர்ந்திருந்தாள்.

இவள் யாரு என்று நினைத்தவனுக்கு அப்பொழுதுதான் இரவில் நடந்த விஷயங்கள் ஞாபகம் வந்தது. இந்த குடிகாரி அதுக்குள்ள எந்திரிச்சிட்டாளா என்று நினைத்தவன் சென்று கதவை திறக்க அசோக் நின்றிருந்தான் .என்னடா இன்னும் தூங்கிட்டு இருக்க கிளம்பலையா என்றான் அசோக்.

அட ஆமா இல்ல ஊருக்கு கிளம்பனும் இல்ல மறந்தே போயிட்டேன் என்ற ரிஷி இன்னொரு டிக்கெட் புக் பண்ணு என்றான் .இன்னொரு டிக்கெட் அது யாருக்கு என்ற அசோக் அந்த அறைக்குள்ளே வர நிலா பெட்டில் அமர்ந்திருந்தாள் .

யாருடா அந்த பொண்ணு நீ ரொம்ப நல்லவனாச்சே ஒரு பொண்ணை ரூமுக்கே கூட்டிட்டு வரும் அளவுக்கு மாறிட்டியா என்ன என்ற அசோகின் முகத்தில் குத்தியவன் பொறுக்கி என்னை என்ன உன்னை மாதிரி நினைச்சியா அந்த பொண்ணு பாவம் அவளுக்கு ஹெல்ப் பண்றதுக்காக தான் கூட்டிட்டு வந்தேன் என்றான் ரிஷி.

ஹெல்ப்பா நீ இதுவரைக்கும் எந்த பொண்ணுக்கும் ஹெல்ப் பண்ணி நான் பார்த்ததே இல்லையே என்ற அசோக்கிடம் தேவையில்லாமல் பேசாத நான் சொன்னதை மட்டும் செய் அதுதான் உன்னோட வேலை என்றான் ரிஷி.

சரி சரி என்ற அசோக் டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்க இல்லை மச்சான் ஃப்ளைட்ல டிக்கெட் எல்லாமே புக் ஆயிடுச்சு என்றான். அப்போ சரி நான் இவளை உன்னோட டிக்கெட்ல  கூட்டிட்டு நான் கிளம்புகிறேன் நீ அடுத்த பிளைட் புடிச்சு சென்னை வந்து சேரு. திரும்பவும் எங்கேயும் போய் தொலைஞ்சிடாதா ஒழுங்கா வீட்டுக்கு வா இன்னைக்கு ஈவினிங் குள்ள நீ ஊருக்கு வந்து சேர வில்லை என்றால் நேத்து நைட் நீ எங்கே போனன்னு  உன் வொய்ஃப் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் பார்த்துக்கோ என்றான் ரிஷி.

அப்படி எதுவும் சொல்லி தொலைஞ்சிராதடா அப்புறம் ஆத்தா மாரியாத்தா சாமி ஆட ஆரம்பிச்சிடுவாள். என்னை டிவோர்ஸ் கூட பண்ணிடுவாள் என்ற அசோக்கிடம் அவ்வளவு பயம் இருக்கு தானே அப்புறம் ஏன் இந்த சீப்பான வேலை உனக்கு என்றான் ரிஷி. அதெல்லாம் ஒரு கிக்குடா உனக்கு அதெல்லாம் புரியாது என்ற அசோக்  தன் அறைக்கு கிளம்பி சென்று விட்டான்.

என்ன அப்படியே இருக்க போய் குளிச்சிட்டு கிளம்பு என்ற ரிஷியை பாவமாக பார்த்தாள் நிலா. என்ன ஆச்சு என்றவனிடம் எனக்கு பசிக்குது அங்கிள் என்றாள் நிலா. பச் எத்தனை தடவை சொல்லுறது அங்கிள் என்று கூப்பிடாதேன்னு என்றவனை அப்பாவியாக பார்த்தவள் சாரி தெரியாமல் சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க பசிக்குது என்றாள் நிலா.

சரி என்றவன் இருவருக்குமான உணவை ஆர்டர் செய்தான். இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு வந்துரும் சாப்பிட்டுவிட்டு கிளம்பு என்றான் ரிஷி. எப்படி கிளம்புவ உன் கிட்ட வேற டிரஸ் இல்லையே என்ற ரிஷியிடம் பரவாயில்லங்க நான் இதையே போட்டுட்டு கிளம்புறேன் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றாள் நிலா.

உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என் கூட நீ வரும்போது இப்படி அழுக்கு டிரஸ் போட்டுக் கொண்டு வருவியா பிச்சைக்காரி மாதிரி இருக்க உன்னை கூட்டிட்டு நான் எப்படி வெளியில் போவது என்ற ரிஷி தன் நண்பன் அசோக்கிடம் போனில் நிலாவிற்கு உடை எடுத்துக் கொண்டு வர சொன்னான் .உன்னோட டிரஸ் சைஸ் என்ன என்ற ரிஷியிடம் அவள் தயங்கிக்கொண்டே தனது உடையின் அளவை கூறினாள் .

எதுக்கு இப்படி தயங்கி தயங்கி சொல்லுற என்ற ரிஷி கதவு தட்டப்படும் ஓசை கேட்கவும் சாப்பாடு வந்துருச்சுன்னு நினைக்கிறேன் நீ சாப்பிடு என்று சொல்லி சாப்பாட்டினை வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.

ரொம்ப தேங்க்ஸ் நான் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு என்ற நிலா கடகடவென சாப்பிட ஆரம்பித்தாள் . ரெண்டு நாளாச்சா என்ற ரிஷியிடம் ஆமாம் அங்கே போனதுல இருந்து எனக்கு என்னவோ அங்கே உள்ள சாப்பாடு பார்த்தாலே பயமா இருந்துச்சு. சாப்பாட்டுல மயக்க மருந்து எதையாவது கலந்து கொடுத்து எனக்கு தெரியாமல் என்னை எதுவும் பண்ணிடுவாங்கன்னு பயந்துட்டே நான் சாப்பிடாமல் இருந்தேன் என்று கூறிய நிலாவின் கண்கள் கண்ணீரை சிந்தியது.

அவளது கண்ணீரை துடைத்து விட்டவன் சும்மா சும்மா அழுதுட்டு இருக்க கூடாது. இந்த ஊர்ல இருந்து உன்ன கூட்டிட்டு போய் தமிழ்நாட்டில விட்டு விடுகிறேன். அங்கே நீ பிழைச்சுப்ப  தானே என்ற ரிஷியிடம் கண்டிப்பா அங்கிள் இந்த ஊரு விட்டு போயிட்டேன்னா நிம்மதியா இருக்கும் என்றாள் நிலா.

ஐயோ சாரி நான் என்ன பண்றது என் வாயில அங்கிள் அங்கிள்னு தான் வருது மன்னிச்சுக்கோங்க என்ற நிலாவை பார்த்து புன்னகைத்தவன் உனக்கு அப்படித்தான் கூப்பிடனும்னு வருதுன்னா கூப்பிட்டுக்கோ ஒன்றும் பிரச்சனை இல்ல என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றான் ரிஷி.

இனிமேல் அங்கிள் என்று கூப்பிடக்கூடாது என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள் நிலா. ரொம்ப நல்லவரு என்று நினைத்துக் கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

மீண்டும் அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும் பயந்து கொண்டே எழுந்து மெல்ல கதவை திறந்தாள் .வாசலில் அசோக் தான் நின்றிருந்தான். ரிஷி இல்லையா என்ற அசோக்கிடம் அவங்க குளிச்சிட்டு இருக்காங்க என்றாள் நிலா.

இந்தா பிடி என்று ஒரு கவரை நீட்டினான் அசோக் . என்ன இது என்ற நிலாவிடம் உனக்கு டிரஸ் தானே வாங்கிட்டு வர சொன்னான் அதுதான் பிடிச்சிக்கோ என்ற அசோக் ரெண்டு பேரும் சீக்கிரம் ரெடி ஆகுங்க நான் பார்க்கிங்கில் வெயிட் பண்றேன்னு அவன் கிட்ட சொல்லிடு என்று கூறிவிட்டு அசோக் சென்றுவிட கதவை அடைத்து விட்டு உள்ளே வந்தாள் நிலா.

அந்த நேரம் சரியாக குளித்து முடித்து டவலுடன் வெளியே வந்தான் ரிஷி. அவனை வெறும் துண்டுடன் கண்டவளுக்கு உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது. அச்சச்சோ என்ன இவரு இப்படி வந்து நிற்கிறார் ஐயோ என்று பயந்து கொண்டே முகத்தை திருப்பிக்கொண்டு நின்றிருந்தாள் நிலா.

இப்போ எதற்கு இவள் இப்படி பயந்த படி நிற்கிறாள் என்று யோசித்தவன் அப்பொழுதுதான் தான் வெறும் டவலுடன் இருப்பதை கண்டு இதுதான் இவள் திரும்பி நிற்க காரணமா சரி என்று அவன் உடையை எடுத்துக் கொண்டு ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்பு நின்றான். நீ இன்னும் குளிக்க போக வில்லையா என்று அவன் கேட்கவும் இதோ போகிறேன் என்று அசோக் கொடுத்த உடையை அப்படியே எடுத்துக் கொண்டு அவள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

இது என்ன டிரஸ் இவ்ளோ காஸ்ட்லியா இருக்கு அதுவும் இல்லாம இது என்ன கவுன் மாதிரி இருக்கு அய்யய்யோ இதை போட்டுட்டு எப்படி வெளியில் போறது என்று யோசித்துக் கொண்டே இருந்தாள் நிலா . அவன் குளியலறைக் கதவை தட்டி இன்னுமா குளிக்கிற என்றிட  இதோ வரேன் என்றவள் அந்த உடையை அணிந்து கொண்டாள் .

அது அவளுக்கு முழங்கால் அளவுக்கு தான் இருந்தது அதற்கு கீழ் தனது கால்கள் அப்படியே தெரிவது போல் உணர்ந்தவள் தயங்கியபடி வெளியில் வந்தாள் .என்ன ஆச்சு ஏன் பதற்றமா இருக்க என்ற ரிஷியிடம் இந்த டிரஸ் போட்டுட்டு எப்படி வெளியில் வருவது என்று தயங்கிக்கொண்டே கூறினாள் நிலா.

நல்லாதான் இருக்கு அழகான டால் மாதிரி இருக்க என்ற ரிஷி சரி கிளம்பலாமா என்றான். நல்லாவா இருக்கு என்று அவள் மீண்டும் கேட்க நல்லா தான் இருக்கு இப்ப என்ன நீ சின்ன பொண்ணு தானே இந்த டிரஸ்ல அழகா தான் இருக்க வா என்று அவளை அழைத்தான் ரிஷி. நான் ஒன்றும் சின்ன பொண்ணு இல்லை எனக்கு பதினெட்டு வயசு ஆயிடுச்சு என்றாள் நிலா. அவன் சிரித்து விட்டு சரிங்க பெரிய மனுஷி ஃப்ளைட்டுக்கு நேரம் ஆச்சு என்றான்.சரி இருங்க நான் தலையாவது சீவிக்கிறேன் என்று கூறிவிட்டு தலையை சீவிக் கொண்டு அவனுடன் கிளம்பினாள் நிலா.

வெள்ளை நிற கவுனில் தேவதை போல தான் இருந்தாள் நிலா . தன்னை ஒரு முறை கண்ணாடியில் ரசித்து விட்டு அவனிடம் வந்து போகலாம் என்று கூறினாள். சரி வா கிளம்பு என்று அவனும் அவளை அழைத்துக் கொண்டு சென்றான். இருவரும் விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அவளுக்கு சீட் பெல்ட் அணியக் கூட தெரியவில்லை அவன் தான் அணிவித்து விட்டான். ப்ளைட்ல ஃபர்ஸ்ட் டைம் வரியா என்ற ரிஷியிடம் ப்ளைட்டையே இப்போ தாங்க முதல் முதலாக பக்கத்தில பார்த்திருக்கேன். வானத்துல பறக்கும் போது பார்த்தது அவ்வளவுதான் என்றாள் நிலா . என்ன சொல்லுற என்ற ரிஷியிடம் ஆமாம் ட்ரெயின் டிக்கெட் எடுக்க கூட காசு இல்லாத ஒரு பிச்சைக்காரியை ஃபர்ஸ்ட் டைம் பிளைட்ல கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று அவள் சிரிக்க அவன் மௌனமாக அவளையே பார்த்தான்.

…. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!