இதயம் பேசும் காதலே…5

5
(6)

இவன்தான் அந்த பொண்ணுக்காக மெனக்கெடுறான் அவ பாரு இவனுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதாம் எப்படியோ  அந்த தொந்தரவை நான் கூட்டிட்டு போய் வேலைக்கு சேர்த்து விடாமல் அதுவாவே போயிருச்சு அதுவரைக்கும் சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டு கார்மெண்ட்ஸிற்கு  வண்டியை விட்டான் அசோக்.

என்னடா அந்த பொண்ணை வேலையில சேர்த்து விட்டாயா என்ற ரிஷி இடம் நான் ஹாஸ்டலுக்கு போனால் அந்த பொண்ணு ஹாஸ்டல்ல இல்லை. அவளோட  ரூம் மெட் நம்ம கார்மென்ட்ஸ்ல தான் வேலை பார்க்கிறாளாம். இங்கே வேலைக்கு சேர்த்து விடுறேன்னு சொன்னதும் அந்த பொண்ணு கிளம்பி வந்துட்டாலாம் என்றான் அசோக் .

அப்படியா சரி ஓகே விடு என்ற ரிஷி தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தான். அசோக் சென்றதும் எவ்ளோ திமிர் இவளுக்கு நான் இவளுக்காக வேலை மெனக்கெட்டு அவனை அனுப்பி வச்சா அவள் எவளோ ஒருத்தி கூட வேலைக்கு சேரப் போகிறாளாம் என்று நினைத்த ரிஷியிடம் அவள் என்ன செய்தால் உனக்கு என்ன அவள் மேல் எதுவும் ஃபீலிங்க்ஸா என்ற மனசாட்சியிடம் எனக்கு ரெஸ்பெக்ட் கொடுக்காமல் அவள் பாட்டுக்கு அவள் இஸ்டத்துக்கு நடந்துக்கிறாள் அப்போ எனக்கு கோபம் வராதா என்றான் ரிஷி . ரெஸ்பெக்ட் எல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணுற  ஆளா நீ என்ற மனசாட்சியிடம் சரி சரி போய் தொலை என்று மனசாட்சியை அடக்கி விட்டு தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தான் ரிஷி.

சாரி நிலா டெய்லரிங் வேலைக்கு ஆள் எடுத்துட்டாங்களாம் ஹவுஸ் கீப்பிங் வேலை தான் இருக்கு உனக்கு ஓகேவா என்றாள் ஸ்வாதி. பரவாயில்லை சுவாதி இந்த வேலை எனக்கு கிடைச்சதே பெரிய விஷயம் தான் நான் ஹவுஸ் கீப்பிங் வேலையே பாக்கறேன். டெய்லரிங் கூட எனக்கு ஓரளவு தான் தெரியும் ஹவுஸ் கீப்பிங் என்றால் என்ன இடத்தை கூட்டி பெருக்கி சுத்தமா நீட்டா வைக்கணும் யார் யாருக்கு என்னென்ன தேவையோ எல்லாம் கரெக்டா கொடுக்கணும் அவ்வளவுதானே ஒன்றும் பிரச்சனை இல்லை என்றாள் நிலா.

சாரிமா உனக்கு தெரிஞ்சவங்க உன்னை கூட்டிட்டு வந்து இருந்தால் கூட ஒரு வேளை டெய்லரிங் வேலை கிடைச்சிருக்கலாம் என்னால தான் கெட்டுப் போச்சு என்று வருந்திய சுவாதி இடம் இதுல என்ன இருக்கு நான் அதெல்லாம் உன்ன தப்பாவே நினைக்கல என்ற நிலா தனக்கு கொடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

ஏய் நீ இங்கே என்ன பண்ணிட்டு இருக்க என்ற அசோக்கிடம் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் சார் என்றாள் நிலா.

ஒர்க் பண்ணிட்டு இருக்கியா இந்த இடத்தை மாஃப் போட்டு துடைச்சிட்டு இருக்க நீ என்ன வேலைக்கு இங்க வந்த என்ற அசோக்கிடம் டெய்லரிங் வேலைக்கு தான் வந்தேன் அதுக்கு ஆள் எடுத்தாச்சாம்.  ஹவுஸ் கீப்பிங் வேலைதான் ப்ரீயா இருக்குன்னு சொன்னாங்க அதனால சரி நான் இதையே பார்த்துக்கிறேன் என்று சொல்லிட்டேன் சார் என்றாள் நிலா.
சரி ஓகே வேலையை பாருமா என்று கூறிவிட்டு அசோக் சென்று விட்டான்.

என்ன விஷயம் என்ற ரிஷி இடம் நீ வேலைக்கு சேர்த்து விட சொன்னியே  அந்த பொண்ணு இப்போ ஹவுஸ் கீப்பிங் ஒர்க் பண்ணிட்டு இருக்காள் என்றான் அசோக். அதனால என்ன என்ற ரிஷி இடம் என்னடா அதனால் என்னன்னு சர்வ சாதாரணமாக கேட்கிற அந்த பொண்ணு இங்கே ஹவுஸ் கீப்பிங் ஒர்க் பண்ணிட்டு இருக்காள் என்றான் அசோக் .

அதாண்டா கேட்கிறேன் அதனால் என்ன அதுவும் ஒரு வேலை தானே . உன் கிட்ட அவளுக்கு ஒரு வேலை கொடுக்க சொன்னேன் . இப்போ வேலை கிடைச்சிருச்சு அவ்வளவு தான் இதை பற்றி இனி பேச வேண்டாம் என்ற ரிஷி தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

வேலை ரொம்ப கஷ்டமா இருந்துச்சா நிலா என்ற ஸ்வாதியிடம் இல்லை ஸ்வாதி என்றாள் நிலா. பொய் சொல்லாதே ஆபிஸ் ரூம்ல வேலை பார்க்கிறவங்க டீ எடுத்துட்டு வா காபி எடுத்துட்டு வா இதை பிரிண்ட் பண்ணு அதை பிரிண்ட் பண்ணு என்று உன்னை பயங்கரமா வேலை வாங்குவாங்க என்றாள் ஸ்வாதி.

அதனால் என்ன ஸ்வாதி வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்க்கனும் தானே என்றாள் நிலா. நீ ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்க நிலா என்றாள் சுவாதி. சிறு புன்னகையுடன் உறங்கச் சென்றாள் நிலா.

கட கடவென ஒரு மாதம் ஓடிப் போன சுவடே தெரியாமல் போனது. அன்று நிலாவிற்கு சம்பள நாள். சம்பளத்தை பெற்றுக் கொண்டவள் முதல் வேலையாக ரிஷியின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

ஹலோ மிஸ்டர்.ரிஷி என்ற நிலாவிடம் சொல்லுங்க யாரு என்றான் ரிஷி. என்னை மறந்துட்டிங்களா நான் நிலா என்றாள். எந்த நிலா என்ற ரிஷியிடம் மும்பைல மீட் பண்ணி என்னை உங்க கூட ஃப்ளைட்ல எல்லாம் அழைச்சுட்டு வந்தீங்களே என்றதும் ஓ நீயா ஹேய் குட்டி பொண்ணு என்ன ஃபோன் எல்லாம் செய்திருக்க என்றான் ரிஷி.

இன்னைக்கு எனக்கு ஃபர்ஸ்ட் மந்த் சேலரி வந்துருக்கு. நீங்க எனக்கு டிரஸ் வாங்கி கொடுத்திங்களே அதான் அந்த காசுல கொஞ்சம் இப்போ திருப்பி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்று அவள் தயங்கி கொண்டே கூறினாள்.

பரவாயில்லை விடு அது உனக்கு நான் கொடுத்த கிஃப்ட்டா இருக்கட்டும் . இதுக்கு தான் ஃபோன் பண்ணியா சரி வைக்கிறேன் என்றவனிடம் ஒரு நிமிசம் வச்சுராதிங்க என்றாள் நிலா.

சொல்லு என்றான் ரிஷி. அந்த டிரஸ் எல்லாம் கிஃப்ட் அப்படினா நானும் உங்களுக்கு கிஃப்ட் கொடுத்தால் வாங்கிபிங்களா என்றாள் நிலா.

கிஃப்ட் கொடுக்க போகிறாயா சரி கொடு என்று சிரித்து விட்டு ஃபோனை வைத்தான் ரிஷி.

என்ன கிஃப்ட் கொடுக்கலாம் என்று யோசித்தாள் நிலா. அவளது குட்டி மூளைக்குள் அவனுக்கு ஒரு சட்டை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று தோன்றிட ஸ்வாதியுடன் ஒரு மாலுக்கு சென்றாள்.

இது என்ன ஜென்ஸ் டிரஸ் ஷாப்க்கு வந்திருக்கோம் என்ற சுவாதியிடம் என்னை நம்ம ஹாஸ்டலில் சேர்த்து விட்டாங்கன்னு சொன்னேன்ல ஒரு அங்கிள் அவருக்கு தான் டிரஸ் எடுக்க வந்தோம் என்ற நிலா அங்கு இருந்த ஒரு நீல நிற சட்டையை அவனுக்காக வாங்கினாள்.

ஏய் நிலா என்னப்பா இது இந்த சர்ட் இவ்வளவு காஸ்ட்லியா இருக்கு என்ற ஸ்வாதியிடம் அவங்க போடுற ஷர்ட் இதை விட காஸ்ட்லியா இருக்கும் சுவாதி இது ரேட் கம்மி தான் என்றாள் நிலா. சரி என்ற சுவாதி ஹாஸ்டல் ஃபீஸ் போக மிச்ச பணத்துக்கு டிரஸ் எடுத்துட்டியே இந்த மாசம் மற்ற செலவுக்கு என்ன பண்ணுவ என்றாள்.

எனக்கு பெருசா என்ன செலவு இருக்க போகுது கொஞ்சம் காசு இருக்கு பார்த்துக்கலாம் என்ற நிலா ரிஷிக்கு ஃபோன் செய்தாள்.

ஹலோ என்றவனிடம் நான் நிலா என்றாள். சொல்லு என்ற ரிஷியிடம் உங்களை பார்க்கணுமே என்றாள் நிலா. நான் ஏர்போர்ட் கிளம்பிட்டு இருக்கேன் குட்டி பொண்ணே என்ற ரிஷியிடம் ஓ அப்போ உங்களை பார்க்க முடியாதா என்று பாவமாக கேட்டாள் நிலா.

ஏனோ அவளது குரலில் ஒரு ஏக்கத்தை உணர்ந்தான் ரிஷி. சரி நீ எங்கே இருக்க என்ற ரிஷியிடம் ஹாஸ்டல் பக்கத்தில் உள்ள பஸ் ஸ்டாப்ல தான் இருக்கேன் என்றாள் நிலா. சரி அங்கேயே இரு வந்துடுறேன் என்ற ரிஷி போனை வைத்து விட்டு அசோக் நான் சொல்லுற இடத்துக்கு போ என்றான்.

இப்போ எதுக்கு டா அங்கே நம்ம பிசினஸ் டிரிப் போகனும் ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு என்றான் அசோக். நான் சொல்றதை மட்டும் நீ செய் என்றான் ரிஷி. சொல் பேச்சு கேட்கவே மாட்டான் என்று நண்பனை திட்டி விட்டு அசோக் அவன் சொன்ன அந்த பஸ் ஸ்டாப் அருகே காரை நிறுத்தினான்.

அங்கு நிலா நின்றிருக்கவும் இவளை பார்க்க தான் ஏர்போர்ட் போகணும்னு சொல்லியும் கேட்காமல் இங்கே வரணும்னு அடம் பிடிச்சியாடா என்றான் அசோக்.

அவனை முறைத்து விட்டு காரை விட்டு இறங்கினான் ரிஷி. அவனைக் கண்டு புன்னகைத்த நிலா அவன் அருகில் வந்தாள். ரொம்ப தேங்க்ஸ் என்ற நிலாவிடம் எதற்கு என்றான் ரிஷி. நான் கூப்பிட்டதும் வந்திங்களே என்ற நிலா உங்களுக்கு வாங்கின கிஃப்ட் என்று அந்த கவரை கொடுத்தாள்.

தேங்க்ஸ் குட்டி பொண்ணு எனக்கு ஃப்ளைட்க்கு டைம் ஆச்சு இன்னொரு நாள் நாம மீட் பண்ணலாம் சரியா என்று அவளது கன்னம் தட்டி விட்டு கிளம்பிச் சென்றான் ரிஷி.

என்னடா நடக்குது இங்கே என்ற அசோக்கிடம் என்ன நடக்குது ஒன்றும் இல்லயே என்றான் ரிஷி. அந்த பொண்ணு அப்படி என்ன ஸ்பெஷல் என்றான் அசோக்.

என்ன ஸ்பெஷல் ஒன்றும் இல்லையே என்ற ரிஷியை முரைத்தவன் அவள் வரச் சொன்னால் என்று ஏர்போர்ட் போகும் வழியில் இந்த அவசர மீட்டிங் தேவையா என்றான் அசோக். தேவை தான் என்ற ரிஷி டைம் ஆச்சு வேகமாக வண்டி ஓட்டு என்றிட நண்பனை திட்டிக் கொண்டே வண்டியை ஓட்டினான் அசோக்.

அவள் கொடுத்த அந்த கவரை அவன் பிரித்துக் கூட பார்க்க வில்லை. சொல்லப் போனால் அதற்கு நேரமும் இல்லை.

என்ன யோசனை ரோஹிணி என்ற பானுமதியிடம் ஒன்றும் இல்லை அம்மா என்றார் ரோஹிணி. என்ன விசயம் சொல்லு என்றார் பானுமதி. உன் மருமகன் ரிஷி கிட்ட இருந்து இந்த சொத்து எல்லாத்தையும் வாங்கி நம்ம பிள்ளைகளுக்கு பிரிச்சு கொடு என்று சொல்லி சண்டை போடுகிறார் என்றார் ரோஹிணி.

அவர் எப்படி இந்த சொத்தில் பங்கு கேட்பார். இந்த சொத்து முழுக்க ரிஷியோட அப்பாவுடையது என்ற பானுமதியிடம் ரிஷி தான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறானே அதனால் தான் அவனுக்கு எதுக்கு சொத்து நம்ம பிள்ளைகள் பெயரில் எழுதி வாங்கு என்று சத்தம் போடுகிறார் என்றார் ரோஹிணி.

முதலில் அவனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைக்கணும். அவனுக்கும் வயசு கூடிட்டே போகுது என்றார் பானுமதி. நாம அதுக்கு முயற்சி செய்தாலே அவன் தடை போடுகிறானே என்னை என்ன பண்ண சொல்லுறீங்க என்றார் ரோஹிணி.

நான் ஒரு வழி செய்கிறேன் என்றார் பானுமதி மனதில் ஒரு யோசனையுடன்.

…தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!