இதயம் பேசும் காதலே..6

4.9
(8)

ஷிட் என்ன இது என்ற ரிஷியிடம் பார்த்தால் தெரியலையா வக்கீல் நோட்டீஸ் உன்னோட சொத்துல பங்கு கேட்டு உன்னோட ஸ்டெப் ப்ரதர் ஹரீஷ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறான். உனக்கு தெரியலையா என்ன என்றான் அசோக்.

ஸ்டாப் இட் அசோக் அது எனக்கும் தெரியுது இந்த சொத்து முழுக்க என்னோட அப்பாவோடது ஸ்டெப் ஃபாதருடயது கிடையாது. அப்படி இருக்கும் போது எப்படி அந்த ஹரிஷ் நோட்டீஸ் அனுப்ப முடியும் என்ற ரிஷியிடம் உன் அம்மா பெயரில் இருந்த ப்ரோபர்டி எல்லாம் கூட நீ உன் பெயரில் எழுதிக் கொண்டு விட்டாயாம் அதான் உன் அம்மாவோட பெயரில் இருந்த சொத்தில் உரிமை இருக்கு என்று அவன் கேஸ் போட்டு இருக்கான். அப்பறம் உனக்கு ஃபேமிலி இல்லையாம் அதை ஒரு ரீசனா சொல்லி தான் உன் அம்மாவும் இந்த ப்ரோபர்டில அவனுக்கும் ரைட்ஸ் இருக்குன்னு கேஸ் போட்டு இருக்காங்க என்ற அசோக்கிடம் இவங்களை என்று பற்களைக் கடித்தான் ரிஷி.

ரிஷி நான் சொல்லுறதை கேளு நீ ஏன் ஒரு பொண்ணை கல்யாணம் செய்து கொள்ள கூடாது என்றான் அசோக். என்னோட வயசு முப்பத்தி மூன்று அதுவும் இன்னும் ரெண்டு மாசத்தில் முடிஞ்சு முப்பத்தி நான்கு ஆகிரும் இப்போ போய் நான் கல்யாணம் பண்ணி நான் தான் சொல்கிறேனே எனக்கு கல்யணத்து மேல நம்பிக்கை இல்லை என்று அப்பறமும் ஏன் கட்டாயம் படுத்துற என்றான் ரிஷி.

ரிஷி நீ ஒன்றும் கிழவன் கிடையாது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் இதெல்லாம் நீ பாரக்கிறதே இல்லையா எழுபது வயசு தாத்தாவையே இருபது வயசு பொண்ணு கல்யாணம் பண்ணுதுங்க நீ என்னடான்னா முப்பத்தி மூன்று வயசு ஒரு வயசுனு பீல் பண்ணுற நீ மட்டும் சரின்னு சொல்லு நாளைக்கே உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்றான் அசோக்.

அசோக் பிளீஸ் புரிஞ்சுக்கோ என்ற ரிஷியிடம் சரி என்ன பண்ணுறதா உத்தேசம் உன்னோட சொத்தில் உரிமை கேட்டு இருக்கிற உன் ஸ்டெப் பிரதேர்க்கு பங்கு கொடுக்க போகிறாயா என்ன என்றான் அசோக். நோ வே அது மட்டும் நடக்கவே நடக்காது. அவன் என் ஆபீஸ் ல சாதாரண எம்பிளோயி அதுவே நான் என் அம்மாவுக்காக அவனுக்கு போட்ட பிச்சை. அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் அம்மாவை தூண்டி விட்டு கேஸ் போடுவான் என்று பற்களைக் கடித்தான் ரிஷி.

ரிஷி பிளீஸ் சொல்றதைக் கேளு என்ற அஷோக்கிடம் என்ன கேட்கணும் அவனுக்கு பங்கு கொடுக்கணுமா என்றான் ரிஷி. இல்லை அதை எப்படி நான் சொல்லுவேன் நீ ஒரு பொண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றான் அசோக்.

அசோக்  நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ல என்ன ரீசன்னு உன் கிட்ட ஆல்ரெடி சொல்லி இருக்கேன் என்றான் ரிஷி. ரிஷி நீ ஒன்றும் கடவுள் கிடையாது உன்னோட பிரிடிக்சன் எப்போவும் கரெக்ட்டா இருக்கணும் என்று அவசியம் இல்லை அதனால் தயவு செய்து புரிஞ்சுக்கோ என்றான் அசோக்.

அப்போ நான் கண்டிப்பா கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அதை தானே சொல்லுற என்ற ரிஷியிடம் ஆமாம் என்றான் அசோக்.

அப்போ சரி எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சு இருக்கு அவளை உன்னால எனக்கு கல்யாணம் செய்து வைக்க முடியுமா என்றான் ரிஷி. யாருடா அந்த பொண்ணு உன்னோட கல்லு மனசையும் கறைத்தது என்ற அசோக்கிடம் நிலா என்றான் ரிஷி.

அவள் சின்ன பொண்ணுடா என்ற அசோக்கிடம் உன்னால முடிஞ்சா அவளை எனக்கு கல்யாணம் செய்து வை இல்லையா இனிமேல் என் கிட்ட கல்யாணம் பற்றி பேசாதே என்று கறாராக கூறி விட்டான் ரிஷி.

அடப்பாவி இவனுக்கு நிஜமாவே அந்த சின்ன பொண்ணு மேல ஆசையா இல்லை அவள் சம்மதிக்க மாட்டாள் என்று தெரிந்து கொண்டு வேண்டும் என்றே அவள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறானா என்று குழம்பி போனான் அசோக்.

உன்னை குழப்ப தான் அசோக் எனக்கு அந்த பொண்ணு வேண்டும் என்று சொன்னேன். அவள் ரொம்ப சின்ன பொண்ணு கண்டிப்பா என்னை கல்யாணம் செய்து கொள்ள அவள் சம்மதிக்க மாட்டாள் என்று நினைத்த ரிஷி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

அவனது கோபம் எல்லாம் அவனது அம்மா ரோஹிணி மீதும் அவர் பெத்த மகன் ஹரிஷ் மீதும் தான் நிறைந்து இருந்தது. அந்த ஹரிஷை என்ன பண்ணுறேன்னு பாரு என்று நினைத்த ரிஷி அவனது அலுவலகத்தில் மார்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்த ஹரிஷை வேலையை விட்டு தூக்கினான் ரிஷி.

அண்ணா என்னை ஏன் டெர்மினேட் பண்ணுனிங்க என்ற ஹரிஷிடம் உன்னோட வொர்க் எனக்கு பிடிக்கலை அதனால் கெட் அவுட் என்றான் ரிஷி.

கோபம் தலைக்கு ஏறிட வீட்டுக்கு வந்தான் ஹரிஷ். என்ன ஹரிஷ் இவ்வளவு கோபமாக இருக்கீங்க என்றாள் அவனது மனைவி சில்வியா. அந்த ரிஷி என்னை வேலையை விட்டு நிறுத்திட்டான் சில்வி என்று கோபமாக சுவற்றில் ஓங்கி குத்தினான் ஹரிஷ்.

ஹரிஷ் அதுக்கு ஏன் உன்னை நீயே ஹர்ட் பண்ணிக்கிற அதான் கேஸ் போட்டு இருக்கோமே அவரோட மொத்த சொத்துமே நமக்கு தான் யூ டோண்ட் வொர்ரி என்ற சில்வியாவை அணைத்துக் கொண்ட ஹரிஷ் தேங்க்ஸ் ஹனி யூ ஆர் மை ஸ்ட்ரெஸ் பஸ்டர் எப்போவுமே எனக்காக பாசிட்டிவா தான் நீ பேசுவ என்றான் ஹரிஷ்.

அவளும் புன்னகைத்து விட்டு உன் அண்ணன் நிச்சயம் கல்யாணம் செய்து கொள்ள மாட்டாரு. அப்படியே கல்யாணம் செய்து கொள்ள நினைத்தாலும் அதை தடுக்க தான் நாம் இருக்கோமே டியர் அப்பறம் என்ன என்றாள் சில்வியா. அதை சொல்லு என்று வில்லத்தனமாக சிரித்தான் ஹரிஷ்.

சொல்லுங்க அங்கிள் என்கிட்ட என்ன பேச போறீங்க என்றாள் நிலா. என்ன அங்கிளா என்ற அசோக்கிடம் ஆமாம் அங்கிள் தான் என்றாள் நிலா. அவளை முறைத்தவன் அந்த பைத்தியக் காரன் உன்கிட்ட எப்படித் தான் மயங்கினானோ என்று நினைத்துக் கொண்டு உனக்கு ரிஷியை பிடிக்குமா என்றான்.

ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும் இல்லைனா என்னோட லைஃப் என்ன ஆகிருக்குமோ தெரியலை என்றாள் நிலா. அவனுக்கும் உன்னை பிடிச்சிருக்காம் உன்னை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறான் என்றான் அசோக்.

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்த நிலா என்ன சொன்னீங்க நான் போய் அவரை கல்யாணம் செய்து கொள்ளுவதா என்றாள் நிலா. ஏன் அவனுக்கு என்ன குறைச்சல் வயசு கொஞ்சம் உன்னை விட அதிகம் என்ற அசோக் உன்னோட வயசு என்ன என்றான். பதினெட்டு என்ற நிலாவிடம் அவனை விட பதினைந்து வயசு சின்ன பொண்ணா நீ என்றான்.

அவள் அமைதியாக அவனை பார்த்திட அவனுக்கு ஒரு ஹெல்ப் மாதிரி இந்த கல்யாணத்தை நினைச்சுக்கோ அவன் உன்னை காப்பாத்தி இப்போ நீ ஒரு வேலை பார்த்துக் கொண்டு இருக்க அவன் தானே காரணம். வயசு வித்தியாசம் பார்த்து இந்த கல்யாணம் என்று கூற வந்த அசோக்கிடம் அவருக்கு வயசு அதிகம் அப்படின்னு நான் உங்க கிட்ட எதுவும் சொன்னேனா.

நீங்கள் ஏன் திரும்ப திரும்ப அதே காரணத்தை சொல்லிட்டு இருக்கீங்க. அவரோட வசதிக்கு என்னை போய் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறாரே அதனால் தான் நான் தயங்கினேன். வயசு எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை .

அப்பறம் கல்யாணம் ஒன்றும் வியாபாரம் இல்லை. அவரு எனக்கு ஒரு உதவி பண்ணி இருக்காரு நானும் அதற்கு பதிலாக கல்யாணம் செய்து கொள்ள எனக்கும் அவரை பிடிக்கும். அவரை கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் தான் ஆனால் அவரோ நான் வேலை பார்க்கிற கம்பனியொட ஓனர் நான் அங்கே ஹவுஸ் கீப்பிங் வேலை பார்க்கிற பொண்ணு அதான் எனக்கு யோசனையா இருக்கு மற்ற படி எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் தான் என்றாள் நிலா.

நிஜமா தான் சொல்லுறியா என்ற அசோக்கிடம் ஆமாம் அங்கிள் நிஜமா தான் சொல்கிறேன் என்றாள் நிலா. சரி அப்போ ரெடியா இரு இன்னும் ஒரு வாரத்தில் உனக்கும், ரிஷிக்கும் கல்யாணம் என்றான் அசோக். ஈவ்னிங் என்னோட மனைவியும் ,நானும் வந்து உன்னை எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போகிறோம். இனிமேல் நீ ஹாஸ்டலில் இருக்க வேண்டாம் என்று கூறி விட்டு அசோக் சென்று விட்டான்.

என்னப்பா சொல்லுற நிஜமா என்றாள் சுவாதி. ஆமாம் என்ற நிலாவிடம் நம்ம ஓனர் உன்னை விட பதினைந்து வயசு மூத்தவரு நிலா அவரை போய் எப்படி நீ கல்யாணம் செய்து கொள்ளுவ கொஞ்சம் கூட அறிவே இல்லையா உனக்கு என்றாள் சுவாதி.

ஏஜ் இஸ் ஜஸ்ட் நம்பர் சுவாதி அவரை நல்லா பாரு ஹீ வாஸ் சோ ஹாட் அண்ட் ஹன்ட்சோம் என்ற நிலாவை பார்த்து உனக்கு பணத்தாசை பிடிச்சு இருக்கு. அதான் காசுக்காக , பகட்டுக்காக இப்படி ஒரு கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்க என்றாள் சுவாதி.

அவளை பார்த்து புன்னகைத்த நிலா கரெக்ட்டா சொல்லிட்டியே என்று கூறி விட்டு தனது உடைகளை எல்லாம் பேக் செய்தாள்.

என்னடா சொல்லுற அவள் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னாளா என்றான் ரிஷி. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா என்றான் அசோக்.

எனக்கு குழப்பமா இருக்கு நான் நிலாவை பார்க்கணும் என்றான் ரிஷி. ஈவ்னிங் நானும் பாரதியும் அவளை எங்க வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விடுவோம். நீ அங்கே வந்து பாரு என்று கூறினான் அசோக்.

இவன் நிஜமா தான் சொல்கிறானா அந்த பொண்ணுக்கு என்ன பைத்தியமா என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லி இருக்கிறாள். என் வயசு என்ன ,அவளோட வயசு என்ன என்று யோசித்தவன் அவள் கிட்ட பேசலாம். அப்பறம் ஒரு முடிவுக்கு வரலாம் என்று நினைத்தான்.

என்ன சொல்லுற அசோக் நிஜமாவே ரிஷி அண்ணா கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னாரா என்றாள் அசோக்கின் மனைவி பாரதி. நான் என்ன பொய்யா சொல்கிறேன் நிஜம் தான் பாரு ஆனால் பொண்ணுக்கு தான் வயசு ரொம்ப கம்மி என்றான் அசோக்.

….தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!