இதயம் பேசும் காதலே…8

4.8
(6)

என்ன உனக்கு சமைக்க கூட தெரியாதா என்ற ரிஷி சரி போய் ரெப்ரேஷ் ஆகிட்டு வா என்று கூறிட அவள் தன் அறைக்குள் நுழைந்தாள். இவளை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க இவளுக்கு சேவகம் செய்யணும் போலயே என்று நொந்து கொண்டவன் சென்று இருவருக்குமான உணவை சமைக்க ஆரம்பித்தான்.

மேஜையில் இருந்த அந்த  போத்தலை எடுத்தவள் இந்த ஜூஸ் தானே அன்னைக்கு குடிச்சோம். ரொம்ப பசிக்குது இந்த அங்கிள் சமைக்கும் வரை இதை குடிச்சு பசியை போக்கிக்குவோம் என்று நினைத்தவள் அந்த ஒயினை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.

ஹாய் அங்கிள் என்று போதையில் உலறியவலைக் கண்டு அடியே குடிகாரி இன்னைக்கும் ஒயின் முழுக்க குடிச்சுட்டியாடி இவளோட என்று பற்களைக் கடித்தவன் அவளை இழுத்து வந்து சாப்பிடு என்றான்.

அங்கிள் நிலா உங்களுக்கு பாப்பா தானே பாப்பாவுக்கு நீங்க தான் ஊட்டி விடணும் என்று கொஞ்சிக் கொண்டே கூறினாள் நிலா.

எதே நான் உனக்கு ஊட்டி விடணும்மா கொன்னுறுவேன் ஒழுங்கா சாப்பிடு என்று அவளை அதட்டினான் ரிஷி. இப்போ எதுக்கு என்னை திட்டுறிங்க நிலா பாவம் தானே என்று அழுவது போல அவள் செய்திட சரி டீ நானே ஊட்டி தொலைக்கிறேன் தின்னு என்று அவளுக்கு உணவினை ஊட்ட ஆரம்பித்தான் ரிஷி.

குட் அங்கிள் என்ற நிலாவை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன் சென்று சாப்பிட போக அங்கிள் நீங்க எனக்கு ஊட்டி விட்டீங்க தானே அப்போ உங்களுக்கு நான் தானே ஊட்டி விடணும் என்றவள் உணவினை அவனுக்கு ஊட்ட வர அம்மா தாயே எனக்கு கை இருக்கு நானே சாப்பிட்டுக்கிறேன் என்றான் ரிஷி.

நோ அங்கிள் நிலா தான் ஊட்டுவேன் என்ற நிலா அவனுக்கு ஊட்டி விடுகிறேன் என்று அலம்பல் செய்ய அவனும் அமைதியாகினான். அங்கிள் ஆ என்று அவள் கூறிட அவனும் ஆ என்றான். அவனுக்கு உணவினை ஊட்டி விட்டவள் அவனது வாயை துடைத்து விட்டாள். அவளை ரசித்த படி உணவு உண்டான் ரிஷி. அவனது கண்கள் கலங்கிட அங்கிள் ஏன் அழறிங்க காரமா என்றவள் தண்ணி குடிங்க என்று நீரை கொடுத்தாள்.

அதை குடித்தவன் தேங்க்ஸ் நிலா என்றவன் என் அப்பா உயிரோட இருந்த வரை அவரு ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவேன். அவரு இறந்த பிறகு எனக்கு யாரும் ஊட்டி விட்டதே இல்லை. நீ தான் எனக்கு ஊட்டி விட்டு இருக்க என்று கண் கலங்கினான் ரிஷி.

அங்கிள் எதுக்கு அழறிங்க நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனா என்று கேட்டவள் அவன் தோளில் போதையில் மயங்கி விழ அவளைத் தூக்கிக் கொண்டு அறையில் படுக்க வைத்தான். கிளம்பும் அவனது கையை பிடித்தவள் அங்கிள் என்னை விட்டு போகாதீங்க நிலா பாவம் என்று போதையில் அவள் உலறி அவனை இழுத்துக் கொண்டு இருந்தாள். அவன் பேலன்ஸ் மிஸ் ஆகி அவள் மீது விழ அவனைக் கட்டிக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள் நிலா.

அவனுக்கு தான் அவளது நெருக்கம் ஏதோ செய்ய ஆரம்பிக்க இந்த குட்டி குடிகாரி ஆனால் ஊனால் ஒயின் பாட்டிலை காலி பண்ணிட்டு என்னை கட்டிப் பிடித்து ஏன் டீ என்னை இம்சை படுத்துற என்று அவளை விலக்க முயல அவளோ அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு உறங்கி விட்டாள்.

நான் பாவம் டி குட்டி பிசாசு என்று நொந்து கொண்டவன் கஷ்டப் பட்டு அவளைப் பிரிந்து எழுந்து நேராக குளியல் அறை சென்று சவரில் நனைய ஆரம்பித்தான்.

எந்த பொண்ணு என் பக்கத்தில் வந்தாலும் எனக்கு இந்த மாதிரி உணர்வுகள் வந்ததே இல்லை ஆனால் இந்த குட்டி பொண்ணு என் பக்கம் வந்தாலே என் உடம்பு எல்லாம் சூடாகுதே இவளை கிட்ட நெருங்கவே விடக் கூடாது என்று நினைத்தான்.

ஆனால் அவனால் இனி அவள் நெருக்கம் இல்லாமல் இருக்க முடியுமா என்று அவனைப் பார்த்து விதி சிரித்தது.

அதிகாலை கண் விழித்த நிலா  சுற்றி முற்றி பார்த்தாள். நாம எங்கே இருக்கிறோம் என்று யோசித்தவள் இது ஹாஸ்டல் ரூம் இல்லயே சுவாதி என்று அழைத்திட சுவற்றில் ரிஷியின் புகைப்படம் இருப்பதைக் கண்டவளுக்கு அப்பொழுது தான் ஞாபகம் வந்தது இன்று தனக்கும் , அவனுக்கும் திருமணம் என்பதே. அமைதியாக எழுந்தவள் குளித்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

ரிஷி மாப்பிள்ளை போல வேஷ்டி சட்டையில் அமர்ந்திருக்க அவன் அருகில் வந்தவள் அங்கிள் நீங்க வேஷ்டி சட்டையில் சும்மா கெத்தா இருக்கீங்க என்றாள். அவன் அவளை முறைக்கவும் சாரி மிஸ்டர்.ரிஷி கரெக்ட்டா என்று கேட்டாள்.

நிலா உன் கிட்ட திரும்பவும் கேட்கிறேன் உனக்கு இந்த கல்யாணத்தில் என்று அவன் கேட்டிட எனக்கு முழு சம்மதம் என்றவள் வேண்டும் என்றால் இன்னைக்கு நம்ம கல்யாணம் நடக்க வேண்டாம் ஒரு வாரம் நீங்களும் , நானும் கணவன் , மனைவி போல வாழலாம் என்னை அப்பறம் கூட நீங்க கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று நிலா கூறிட என்ன பேசுற நீ என்றான் ரிஷி.

உங்களுக்கு தான் என் மேல நம்பிக்கை வர வில்லையே என்று அவள் கூறிட  அந்த நேரம் சரியாக வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ரிஷி சென்று கதவினை திறக்க வாசலில் அசோக், பாரதி இருவரும் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வரவேற்றவன் பாரதியின் கையில் ஒரு பார்சலை கொடுத்து நிலாவை ரெடி பண்ண சொல்ல அவளும் நிலாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.

என்னடா இன்னும் ஒரு மாதிரியாவே இருக்க என்ற அஷோக்கிடம் இந்த கல்யாணம் சரியா வருமா என்னோட சொத்து பிரச்சனைக்கு நிலாவோட வாழ்க்கையை பழி கொடுக்கிறேனோனு தோன்றுகிறது மச்சான் என்றான் ரிஷி.

சும்மா முட்டாள் தனமாக பேசாதே ரிஷி. அந்த பொண்ணுக்கும் உன் மேல ஆசை இருக்கு அதனால் தான் வயசு ஒரு பெரிய விஷயமே இல்லை என்று சொல்லி இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறாள் என்றான் அசோக். இல்லடா என்று அவன் ஏதோ சொல்ல வர அசோக் என்று பாரதி அழைத்திட இருவரும் திரும்பினார்கள்.

அழகு தேவதை போல பட்டு சேலையில் அதற்கேற்ற நகைகளோடு ,அளவான ஒப்பனையுடன், அழகு சிலை போல நின்றிருந்தாள் நிலா. அவளைக் கண்ட ரிஷி ஒரு நிமிடம் சொக்கி தான் போனான். அவளோ முதல் முறையாக புடவை அணிந்து இருப்பதால் ஒரு மாதிரி கூச்சமாக இருப்பது போல உணர்ந்தாள்.

ஏய் நிலா ஏன் நெளிஞ்சுட்டு இருக்க ரிலாக்ஸா இரு என்று கூறினாள் பாரதி. இல்லை ஆண்ட்டி ஃபர்ஸ்ட் டைம் புடவை அதுவும் பட்டுப் புடவை கட்டி இருக்கிறேன் அது தான் ஒரு மாதிரி கூச்சமா இருக்கு என்று கூறினாள்.

அண்ணா நிலா எப்படி இருக்கிறாள் என்று பாரதி கேட்ட பிறகே நினைவுக்கு வந்தான் ரிஷி. ஹான் நல்லா இருக்கிறாள் பாரதி என்ற ரிஷி வாங்க போகலாம் என்று கூறிட நால்வரும் கோவிலுக்கு சென்றனர்.

ரிஷி, நிலா இருவரின் திருமணமும் கோவிலில் எளிமையாக நடந்து முடிந்து ரெஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்யப்பட்டது.

அப்பறம் ரிஷி ஒரு வழியாக கல்யாணம் முடிஞ்சுருச்சு உனக்கு இப்போ ஃபேமிலி இருக்குன்னு எவிடன்ஸ் எல்லாம் கோர்ட்ல சப்மிட் பண்ணிட்டோம் அப்படினா சொத்து பிராப்ளம் சரியாகிரும் என்றான் அசோக். முதலில் அதை செய் என்றவன் நிலா வா நாம கிளம்பலாம் என்று மனைவி அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

இந்த வீடு யாருடையது அங்கிள் இல்லை இல்லை ஹஸ்பாண்ட் என்றாள் நிலா. அது என்ன ஹஸ்பண்ட் ரிஷின்னே கூப்பிடு என்று சொன்னவன் இந்த வீடு என்னோடது சாரி இனிமேல் நம்முடையது என்றான்.

என்ன சொல்லுறீங்க வக்கீல் சார் என்று அதிர்ந்து போனான் ஹரிஷ். என்னாச்சு ஹரிஷ் ஃபோன்ல யாரு என்று வந்தாள் அவனது மனைவி சில்வியா.

எல்லாம் போச்சு சில்வி  எல்லாம் போச்சு அந்த ரிஷிக்கு கல்யாணம் ஆகி விட்டதாம் என்று கூறினான் ஹரிஷ். என்ன சொல்லுறீங்க ஹரிஷ் எப்படி இது சாத்தியம் என்றாள் சில்வியா.

எனக்கு ஒன்றும் புரியவில்லை சில்வி இப்போ தான் வக்கீல் ஃபோன் பண்ணினார். அவனோட மேரேஜ் சர்டிபிகேட் கோர்ட்ல சப்மிட் பண்ணி கேசை ஒன்னும் இல்லாமல் செய்து விட்டானாம் என்று பற்களைக் கடித்தான் ஹரிஷ்.

எப்படி அவருக்கு கல்யாணம் சாத்தியம் நாம தான் பொண்ணு என்று உங்க அம்மாவும், பாட்டியும் பேசினாலே அதை கெடுத்து விட அவரால் குடும்ப வாழ்க்கையில் ஈடு பட முடியாதுன்னு சொல்லி ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்கிறோமே என்று சில்வியா கோபத்தில் கத்தினாள். இப்போ ஏன் சில்வி நீ கத்திட்டு இருக்க அம்மாவும் , பாட்டியும் வந்து விட போறாங்க என்றான் ஹரிஷ்.

வரட்டுமே எனக்கு என்ன அவங்களை பார்த்து பயமா என்ன என்றாள் சில்வியா. இனிமேல் கொஞ்சம் நாம அடக்கி தான் வாசிக்கணும் என்ற ஹரிஷ் அவன் நேரா அவனோட ஃபிளாட்டுக்கு தான் போவான் அதனால் கொஞ்ச நாளைக்கு பொறுமையா இருப்போம் என்று தன் மனதில் இருந்த திட்டத்தை ஹரிஷ் மனைவியிடம் கூறினான். அவளுக்கும் அவனது திட்டம் புரியவும் கொஞ்சம் அமைதியாகினாள்.

ரோஹிணி என்ற பானுமதியிடம் சொல்லுங்க அம்மா என்று வந்தார் ரோஹிணி. ரிஷி கல்யாணம் செய்து கொண்டு அவன் மனைவியோட வீட்டுக்கு வருகிறான். அவங்களை வரவேற்கனும் நீ ஆரத்தி எடுத்து கொண்டு வா என்றார் பானுமதி.

என்ன கல்யாணம் செய்து கொண்டானா என்ன சொல்லுறீங்க அம்மா அவனோட அம்மா நான் உயிரோட தானே இருக்கிறேன். என்கிட்ட கூட சொல்லாமல் கல்யாணமா. அவனுக்கு எப்படி பட்ட இடத்தில் இருந்து எல்லாம் நான் பொண்ணு பார்த்திட்டு இருக்கிறேன் என்று கடுகடுத்தார் ரோஹிணி.

ரோஹிணி அதை விடு ஒரு வழியாக நம்ம ரிஷிக்கு கல்யாணம் ஆகி விட்டதே அதுவே போதும். நான் சொன்னதை மட்டும் நீ செய் என்றார் பானுமதி.

வாசலில் ரிஷி, நிலா இருவரையும் கண்ட பானுமதி, ரோஹிணி, மதிமாறன் மூவரும் அதிர்ந்து போய் விட்டனர்.

….தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!