இதயம் பேசும் காதலே…(9)

4.8
(4)

என்ன இது ஆரத்தி தட்டை கையில வச்சுட்டு சிலை மாதிரி நின்றால் என்ன அர்த்தம் கல்யாணம் பண்ணி என் வைஃப் கூட வந்து இருக்கேன் ஆர்த்தி எடுக்காமல் வேடிக்கை பார்த்துட்டு நிற்கிறீங்க என்ன பாட்டி இதெல்லாம் என்றான் ரிஷி.

ரிஷி இந்த பொண்ணு என்ற பானுமதி பாட்டியிடம் என்னோட வைஃப் நிலா என்றான் ரிஷி.  பானுமதி அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை நிலாவை பார்த்து அதிர்ச்சியில் ரோகினி சிலையாக நிற்க ஆரத்தி எடுப்பீங்களா, மாட்டீங்களா என்று ரிஷி அதட்டிட அந்த குரலில் நினைவுக்கு வந்தார் ரோகினி.

இதோ எடுக்கிறேன் என்ற ரோகினி நிலா ,ரிஷி இருவருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தார். இது தான் என்னுடைய வீடு. என் அப்பா கட்டின வீடு தான் ஆனால் இப்போ இங்க இருக்கிறவங்க யாரும் அப்பாவுக்கு சொந்தக்காரங்களா அப்படின்னு கேட்டால் கிடையாது என்றான் ரிஷி .

நீங்க உங்க அப்பாவுக்கு சொந்தம் தானே ரிஷி என்ற நிலாவிடம் பரவாயில்ல நிலா நல்லாவே பேச ஆரம்பித்து விட்டாய்  போல என்ற ரிஷி நீ சொல்றதும் சரிதான் என்றவன் சரி‌ நாம நம்ம ஃப்ளாட்டிற்கு கிளம்பலாம் என்றான்.

ரிஷி நாம ஏன் தனியா போகணும் இந்த வீடு உங்களோடு தானே ,இந்த குடும்பமும் உங்களோடது தானே என்றாள் நிலா .

இந்த வீடு என்னோடது தான் ஆனால் இந்த குடும்பம் என்னோட தான்னு கேட்டால் கண்டிப்பாக கிடையாது அதைமுதலில் புரிஞ்சுக்கோ இவங்க என் அம்மா தான் ஆனால் இப்போ இவங்க மிஸ்டர் மதிமாறனோட வைஃப் .அவர் தான் மிஸ்டர் மதிமாறன் என்று ரிஷி கூறிடா நிலா ஒரு அர்த்தமுள்ள பார்வையை அவர் மீது பதித்தாள். நிலாவின் பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் மதிமாறன் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார்.

இது ஹரிஷ் அவருடைய பையன் இது ஹரிஷ் வைஃப் சில்வியா என்றான் ரிஷி.

அண்ணா இந்த பொண்ணு நம்ம ஆபீஸ்ல ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்தவங்க தானே என்றான் ஹரிஷ் .ஆமாம் இப்ப என்ன ஹவுஸ் கீப்பிங் ஒரு ஒர்க் தானே அது என்னமோ கேவலமான வேலை மாதிரி பேசிட்டு இருக்க என்றான் ரிஷி.

இல்லை அண்ணா  கேவலமான வேலை என்று சொல்லவில்லை அங்கே வேலை பார்த்த பொண்ணுதான்னு சொன்னேன் என்ற ஹரிஷிடம் ஆமாம் நேற்று வரை அவள் ஹவுஸ் கீப்பிங் ஒர்க் பண்ணின பொண்ணு தான் இன்னைக்கு ரிஷியோட வைஃப் என்னோட எல்லா பிசினஸ்லையும் அவளுக்கு ஷேர் உண்டு என்னோட வாரிசு நிலா மட்டும் தான். இனி என் சொத்துக்களுக்கு வேற யாரும் உரிமை கொண்டாடி விட்டு வர முடியாது அன்டர்ஸ்டாண்ட் என்றான் ரிஷி.
ஹரிஷ் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு நின்று விட்டான்.

நிலாவிடம் வா நிலா நம்ம ரூமுக்கு போகலாம் என்று மனைவியை அழைத்துக்கொண்டு சென்றான் ரிஷி .

அம்மா அந்த பொண்ணு என்ற ரோகிணியிடம் எனக்கும் அப்படித்தான் தோணுது எப்படி இவள் ரிஷி கூட என்றார் பானுமதி. ஒருவேளை அந்த பொண்ணுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு தான் ரிஷியை கல்யாணம் பண்ணிக்கிட்டாளா என்ற ரோகினி இடம் நீயே பயந்து எதையும் காட்டிக் கொடுக்காதே என்ற பானுமதி உன் புருஷன் எங்கே என்றார் .

அத்தை என்று வந்த மதிமாறனிடம் எல்லாம் உன்னால தான் நீ பண்ணுன பாவம் தான் விருச்சமா வந்து நிற்கிறதோ என்று பயமா இருக்கு என்றார் பானுமதி.

நான் என்ன பாவம் பண்ணினேன் என்று மதிமாறனிடம் நல்லா யோசிச்சு பாரு உனக்கே தெரியும் என்ற பானுமதி வந்தவள் எதுக்கு வந்திருக்காள்ன்னு தெரிய வில்லை ஆனால் அவள் இந்த வீட்ல இருக்க கூடாது. அது மட்டும் புரிஞ்சுக்கோங்க எவ்வளவு சீக்கிரம் அவளையும், ரிஷியையும் பிரிக்கிறோமோ  நமக்கு நல்லது ரிஷிக்கு கல்யாணம் ஆகணும்னு நினைச்சேன் ஆனால் இந்த பொண்ணு கூட நடக்கணும்னு நான் நினைக்க வில்லை என்ற பானுமதி இடம் ஆமாம் அம்மா நானும் அப்படித்தான் என்றார் ரோகினி. தெரியுது சரி ஓகே இப்போதைக்கு நம்ம எதுவும் பேச வேண்டாம் என்றார் பானுமதி.

அம்மா இந்த பொண்ணை பார்த்தா ரொம்ப சின்ன பொண்ணா இருக்காளே இவளுக்கு என்ற ரோகிணியிடம் சின்ன பொண்ணு தான் ஆனாலும் கொஞ்சம் நாம் உஷாரா இருக்கிறது நமக்கு நல்லது ஒருவேளை அவளுக்கு ஏதாவது விஷயம் தெரிஞ்சு ரிஷியை கல்யாணம் பண்ணி இருந்தால் என்றால் எதுவுமே தெரியாமல் இந்த வீட்டுக்கு வந்து இருந்தால் என்றால் பிரச்சனை இல்லை ஆனாலும் ஒரு விஷயம் சொல்றேன் இவளை எவ்வளவு சீக்கிரம் இந்த வீட்டை விட்டு  அனுப்ப முடியுமோ அதுக்கான வேலைகளை பாருங்க என்றார் பானுமதி .

சரிங்கம்மா என்ற ரோகிணியும் தன் கணவன் மதிமாறனுடன் தன் அறைக்கு சென்றார் .பானுமதி ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தார். நல்லா தெரியும் இவளோட பேஸ்கட் அப்படியே அந்த அனுராதா மாதிரி தான் இருக்கு இவளோட அம்மா பேரு என்னன்னு கேட்கணுமே என்ற பானுமதி ரிஷி அறைக்கதவை தட்டினார் .

என்ன நிலா இங்கேயே இருக்கலாம் என்று சொல்லிட்ட என்ற ரிஷியிடம் இது தான் உங்க வீடு அங்கிள் அப்போ நம்ம இங்கதான் இருக்கணும் என்றாள் நிலா.

அங்கிள்ன்னு என்னை சொல்லுறதை நிப்பாட்ட மாட்டியா என்ற ரிஷியின் அருகில் நெருங்கி வந்தவள் அங்கிள் என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்க என்றாள் நிலா .

அங்கிள் என்றால் என்ன நீயே சொல்லு நான் தேர்ட்டி பிளஸ் சரி தேர்ட்டி ஃபோர் இன்னும் சில மாசத்துல தேர்ட்டி ஃபைவ்  நீ சின்ன பொண்ணு அதனால் என்னை அங்கிள்ன்னு சொல்லுற என்ற ரிஷியிடம் மை டியர் மக்கு ஹஸ்பண்ட் அங்கிள் என்றால் மாமா என்று அர்த்தம் இது கூட தெரிய வில்லை நீங்கள் எல்லாம் என்ன ஹஸ்பண்ட் என்றாள் நிலா .

உங்களை அங்கிள்னு கூப்பிடுவது எனக்கு புடிச்சிருக்கு என்ற நிலா விடம் நீ என்னை அங்கிள்ன்னு ககூப்பிடுறது எனக்கு பிடிக்கல ரிஷின்னே சொல்லு என்றான் .

சொல்ல முடியாது நேற்று வரைக்கும் நான் அப்படி கூப்பிட்டு உங்களுக்கு பிடிக்கலைன்னு சொல்றதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் இருந்துச்சு இப்போ உங்களுக்கு அந்த ரைட்ஸ் கிடையாது என்று கூறி அவன் பக்கத்தில் வந்தாள் நிலா.

எதற்கு இப்படி பக்கத்தில் வர இதோ பாரு நிலா என்னோட பிராபர்ட்டி என் கையை விட்டு போக கூடாது அதுக்காக தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் மற்றபடி எனக்கு உன் மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லை அதனால நீ தள்ளியே இரு என்றான் ரிஷி.

அங்கிள் நிலா பாவம் அவளை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு இப்படி நீ யாரோ நான் யாரோன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் என்றாள் நிலா. இதோ பாரு நிலா உனக்கும், எனக்கும் பதினாறு வயசு வித்தியாசம் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணினதே நான் தப்புனு சொல்கிறேன்.

என்னோட சுயநலத்துக்காக நான் உன்னோட லைஃபை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேனோன்னு எனக்கே பீல் ஆகுது என்ற ரிஷியிடம் நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க என்ற நிலாவை பார்த்து மீண்டும் முறைதான் ரிஷி. ஏஜ் இஸ் ஜஸ்ட்  நம்பர் ஓகே , யூ லுக் மக்கள் , சோ ஹாட் என்றாள் நிலா.

இன்னும் நான்கு வருஷத்துல நான் செத்து போயிட்டேன் வச்சுக்கோ உன் லைஃப் என்ன ஆகும் என்றான் ரிஷி . அங்கிள் ப்ளீஸ் கல்யாணம் ஆன அன்னைக்கே செத்துப் போயிருவேன்னு  அபசகுணம் பிடிச்ச மாதிரி பேசுறீங்க என்ற நிலாவிடம் ரியாலிட்டியை சொன்னேன் இது உன்கிட்ட புரிய வைக்க நான் ரொம்ப முயற்சி பண்ணேன் இந்த கல்யாணம் வேண்டாம் என்று நான் சொன்னேன் அவசியமானு கேட்டேன் நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன என்னோட சிச்சுவேஷன் நானும் கல்யாணம் பண்ணி கிட்டேன்.

இப்போ எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு உன்னோட லைஃப் ஸ்பாயில் பண்ணிட்டு இருக்கேன் அப்படின்னு என்ற ரிஷி இடம் இன்னும் நான்கு வருஷத்துல நீங்க இறந்து போயிடுவீங்கன்னு எப்படி நீங்க நம்புறீங்க என்றாள் நிலா .

என் ஃபேமிலியோட சாபமா என்னன்னு தெரியல என் தாத்தாவும் நாற்பது வயசுல இறந்து போயிட்டாரு, என் அப்பாவும் நாற்பது வயசுல இறந்து போயிட்டாரு அப்போ நானும் என்ற ரிஷியின் வாயில்  விரலை வைத்தவள் நாற்பது வயசு அப்படிங்கறது எல்லாம் ஒரு எல்லையா சொல்லுங்க இப்போ நான் ரோட்ல நடந்து போகிறேன் ஆப்போசிட்ல ஏதாவது ஒரு வண்டி வந்து என் மேல அடிச்சி நான் ஸ்பாட்லயே செத்து போய்டுறேன். அவ்வளவுதான் லைஃப் நீங்க ஏன் தேவையில்லாமல் யோசிக்கிறீங்கன்னு எனக்கு புரியவில்லை என்றாள் நிலா.

அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் என்று நம்மளால சொல்ல முடியாது அதனால் இன்னைக்கு இருக்கிற சந்தோசத்தை அனுபவிக்கலாமே என்றவள் அப்பறம் அங்கிள்  நீங்க சாகலாம் மாட்டீங்க அதுக்கு நிலா கேரண்டி என்று சிரித்தாள் நிலா .

சரி ஓகே என்னவோ பண்ணு நாம இங்கேயே ஸ்டே பண்றதா இருந்தால் அவங்க சமைக்கிறது தான் நம்ம சாப்பிட்டாகணும். எனக்கு அவங்க சமைக்கிறதை சாப்பிடுவதில் உடன்பாடு இல்லை என்றான் ரிஷி.

அப்போ நீங்களே சமைச்சு தாங்க நம்ம ரெண்டு பேருக்கும் என்ற நிலாவை முறைத்தான் ரிஷி .அங்கே உனக்கு நான் சமைச்சு கொடுத்தேன் ஓகே இங்கே நான் தான் உனக்கு சமைச்சு கொடுக்கணும்னா எப்படி என்ற ரிஷியிடம் எனக்கு தான் சமைக்க தெரியாதே என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்ட நிலாவை முறைத்தான் ரிஷி.

உன்னை எல்லாம் வர கோபத்துக்கு அடிச்சு கொல்ல போறேன் பாரு என்ற ரிஷியிடம் ஐயோ அங்கிள் கோவம் எல்லாம் படாதீங்க நான் உண்மையை தானே சொன்னேன் எனக்கு தான் சமைக்க தெரியாதே என்றாள் நிலா. தெரியலன்னா கத்துக்கோ என்ற ரிஷியிடம் கத்துக்கணுமா நீங்க கத்துக் கொடுத்தீங்கனா கத்துக்குவேன் என்றாள் நிலா.

அவன் ஏதோ சொல்ல வர அந்த நேரம் அவர்களது அறைக் கதவை தட்டினார் பானுமதி.

யாரு இப்படி ரூம் கதவை தட்டுறது கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் என்ற ரிஷி சென்று கதவைத் திறந்தான்.

….. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!