உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.8
(9)

அத்தியாயம் 20

மஹி ரெடி ஆகிட்டியா?

இதோ 2 மினிட்ஸ் டா..

நான் ரெடி , ரித்விக் ரெடி, மம்மி தான் லேட் என்று ரித்விக்கிடம் அவளைப் பற்றி கூறி சிரித்துக் கொண்டு இருந்தான்…

மம்மி லேசி கேர்ள் என்று அவனும் சிரித்தான்..

ஓ நான் லேசி யா? நீங்க டேஸ்டா இருக்குன்னு சொல்லி சாப்பிட்டு முடிச்சீங்களே பூரியும் குரு மாவும்; அப்புறம் அந்த கேசரி அதெல்லாம் நான் செஞ்சது தான்…

அது ப்ரிப்பேர் பண்ணாம இருந்தா நானும் ரெடி ஆயிருப்பேன் என்றாள் உதட்டை சுழித்துகொண்டு..

போங்கடா நான் எங்கேயும் வரல என்று  விளையாட்டாக கோபித்துக் கொண்டாள் ‌‌…

அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து கண் அடித்துக் கொண்டு சிரிக்க.

ஐயோ மஹி குட்டி நாங்க சும்மா விளையாட்டுக்கு சொன்னோம் என்று ஒரே நேரத்தில் கூற..

அவளும் சிரித்துக்கொண்டே அந்த பயம் இருக்கட்டும் என்றாள்..

ஏதே நான் உன்னை பார்த்து பயந்தனா என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டான்.. ச்சீ போடா என்று சிணுங்கினாள்…

மம்மிக்கு  கோபம் போயிடுச்சு என்று கத்தினான் ரித்விக்…

வாடா உன் அம்மா மறுபடியும் மனசு மாற முன்னாடி போயிடலாம் என்று காருக்கு சென்று விட்டார்கள்..

வீட்டை பூட்டி விட்டு காரில் கிளம்பி மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றார்கள்…

அடுத்த  வருஷமாவது கல்யாண நாள் அப்ப வெளியே போலாம்..அப்பவும் வந்து எனக்கு பிசின்னு சொல்லிட்டு வந்தா அவ்ளோ தான்… என் அத்தை கிட்ட சொல்லி அடி வாங்கி கொடுத்துடுவேன்…

ஐயோ ! எனக்கு ரொம்பவே பயமா இருக்கு டி என்று பயந்த மாதிரியே கூற..

ம்ம் என்று முறைத்தாள்..

டேடி எனக்கு டாய்ஸ் வேனும் ..

நிறைய வேணும்; அப்புறம் சாக்கி வேணும் என்று கேட்டான்..

ஓகே டா தங்கம்…

அப்போ எனக்கு எதுவும் இல்லையா என்று கேட்டாள்?

உனக்கு தானே நிறையா இருக்கு என்று ஒரு மாதிரி குரலில் அவளைப் பார்த்து கண் சிமிட்டி சொல்ல…

அவளும் அவனைப் பார்த்து அதே மாதிரி கண் சிமிட்டி சிரித்தாள்…

கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்தனர்..

பிறகு நகைக்கடைக்கு சென்று அவளுக்கு அழகிய நெக்லஸ் ஒன்றை பரிசளித்தான்..

அப்பா எனக்கு ஒன்னும் வாங்கலயா…

உனக்கு என்று யோசித்த வாரே மோதிரம் ஒன்றை கொடுத்தான்…

இது உங்களுக்கு என்று அவனுக்கு ஒரு ப்ரேஸ்லெட் ஒன்றை வாங்கினாள் மஹதி…

பிறகு ஷாப்பிங் மால் சென்று சிறிது நேரம் மகனுடன் விளையாடி விட்டு அங்கே சாப்பிட்டு முடித்து; எனக்கு பட்டு புடவை வேணும் என்றாள்..

பீரோ‌ ஃபுல்லா இருக்கு… அப்புறம் எதுக்கு டி?

அதெல்லாம் தெரியாது எனக்கு வேணும் என்று அடம் பிடித்து வாங்கிக் கொண்டாள்..

அப்பாவும் மகனும் கண்ணத்தில் கை வைத்து அவளை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்…

 ஒரு வழியாக ஷாப்பிங் முடித்து கிளம்பினர்…

வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் உறங்கி எழுந்ததும் ஸ்டேசன் கிளம்பிக் கொண்டிருந்தான்…

இன்னைக்கு கண்டிப்பா போகனுமா?

ஆமா டி .. அந்த மர்டர் கேஸ் இருக்கு தானே என்றான்…

ஆமா (ஒரு கல்லூரியின் பெயரை கூறி)நீ அந்த காலேஜ்ல தானே படிச்ச..

ஆமா என்றாள்..

அப்போ உனக்கு இந்த பொண்ணு தெரியுமா என்று கேட்டான் பிரதியின் ஃபோட்டோவை காட்டிய வாரே!.

இவ பிரகதி .. யுஜி வரைக்கும் என் கூட படிச்சா..

நல்ல பொண்ணு சைலண்ட் கேர்ள் டா;

பிஜி கண்டின்யூ பண்ணல.. அதுக்கு அப்புறம் டச் விட்டு போச்சு என்றாள்..

ஏன் பிஜி படிக்கல என்று கேட்டான்?

அவளுக்கு அலையன்ஸ் பார்த்துட்டு இருந்தாங்க…அவ அப்பாக்கு உடம்பு சரியில்லை அதனால் கூட இருக்கலாம் என்றாள்…

இவளா இந்த கேஸ் ல மாட்டி இருக்கா?

ம்ம் ஆமா.. அவளுக்கு இன்னும் மூனு நாள்ல கல்யாணம் என்று கூறிக்கொண்டே சரி டைம் ஆச்சு.நான் வர லேட் ஆகும் என்று சென்று விட்டான்…

இவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது…

நைட் வரட்டும் டீடெய்லா கேட்கனும் என்று நினைத்துக்கொண்டாள்..

பிரகதி வீட்டுக்கு அரவிந்த் வீட்டில் இருந்து வந்திருந்தனர்… யாருக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சங்கடமாக அமர்ந்து இருக்க…

அபிஷேக் பிரகதியிடம்” எப்படி இருக்க என்று கேட்டான்”..

அவளும் ம்ம் பரவால்ல மாமா என்றாள்…

எனக்கு ஒன்னும் இந்த கல்யாணம் நடக்கறதுல‌ இஷ்டம் இல்லை என்று கோபமாக தேவகி சொல்ல.. அனைவரும் அதிர்ந்தனர்..

ஜோதி என்னங்க சம்பந்தி இப்படி சொல்றீங்க…

அவ மேல தப்பே இல்லைன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல..

தேவகியை அடக்கிய சுகுமார்..

அவ என்ன பேசறது ன்னு தெரியாம பேசிட்டா..

 இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும் என்று வாக்குறுதி அளித்தார்..

எனக்கு மட்டும் தான் விருப்பம் இல்லை…

நான் இப்பவே சொல்லிட்டேன்…

நாளைக்கு வந்து என்னை குறை சொல்லக்கூடாது என்று கூறி விட்டார்…

அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ் அபிஷேக் கூற..

அவர் வாயிற் படியில் சென்று அமர்ந்து விட்டார்…

பிரகதி வீட்டில் என்ன சொல்வது என்று தெரியவில்லை,…

மாமா நான் கண்டிப்பாக பிரகதியை நல்ல படியா பார்த்துப்பேன்..

அம்மா ஏதோ கோபத்தில தான் சொல்றாங்க… கொஞ்ச நாள்ல மாறிடுவாங்க என்று கூற…

அவ எங்க ரெண்டு வீட்டுக்கும் ஒரே பொண்ணு..

இப்ப தான் ஒரு பிரச்சினை முடிஞ்சது..

உங்க மேல நம்பிக்கை இருக்கு என்று அருணாச்சலம் கலங்கிய குரலில் கூற..

சம்பந்தி கல்யாண வேலைய பாருங்க..

கண்டிப்பா உங்க பொண்ண நாங்க நல்லா பார்த்துக்குவோம் என்றார்…

இன்னும் சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பி விட்டார்கள்…

ஸ்டேசனில் ரகுவோ அவனுக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து யோசித்துக் கொண்டிருந்தான்..

அந்த பில்லில் குறிப்பிட்டு இருந்த கடைக்கு சென்றான்.‌‌..

அங்கு அந்த பில்லை காண்பித்து விசாரித்து கொண்டான்..

சிசிடிவி கேமரா மூலம் பார்த்து கொண்டான்..அதில் ஒருவன் முகம் ஓரளவு தெரிய; இன்னொருவன் மாஸ்க் அணிந்து இருந்தான்…

கேஸ் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றது…

கொலையாளி யார் என்று தெரிந்து விட்டது..

இன்னும் எங்கு இருப்பார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டான்…

பில் போடுவதற்கு அந்த கொலையாளி கொடுத்த போன் நம்பரை சேவ் பண்ணிக் கொண்டான்…

இப்பொழுது பிரகதி தான் விட்னஸ் என்று எப்படியும் தெரிந்து இருக்கும்..

அதனால் அவள் வீட்டருகே மஃபடியில் ஒரு போலீஸ் கண்காணிக்க இருந்தார்… அப்படியே இரு நாட்கள் நகர்ந்து விட்டது..

கல்யாண வீடு என்று சொல்லும் அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை..

ஒரு சில உறவினர்கள் தவிர அனைவரும் அவளை பார்த்து ஒரு மாதிரி பேசினர்..

இருந்த போதிலும் திருமணத்திற்கு முன் நடக்கும் சடங்குகள் எல்லாம் செய்தனர்…

கடவுளே இருந்திருந்து இப்ப தான் கல்யாணம் முடிவு ஆச்சு.. அதைக் கூட 

எங்கள சந்தோஷமாக அனுபவிக்க முடியாம போயிடுச்சே என்று கௌசல்யா புலம்பிக் கொண்டு இருந்தார்…

அங்கு அரவிந்துக்கும் சடங்குகள் நடந்தது…

யாருக்கு வந்த விருந்தோ என்று தேவகி எதிலும் கலந்து கொள்ளவில்லை..

அங்கு பிரகதி வீட்டில் திருமண மண்டபத்திற்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள்…

அரவிந்த் வீட்டில் முன்கூட்டியே மண்டபத்திற்கு சென்று விட்டார்கள்…

அடுத்த எபி ல அரவிந்த் பிரகதி கல்யாணம் தான்..

கல்யாணத்தில் ஏதும் பிரச்சனை வருமோ?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!