நுழைவு வாசலில் இருந்து ஹால் வரை, மல்லிகை, ஆர்க்கிட், ரோஜா மலர்கள் மணம் பரப்பில் கொண்டு இருந்தன..
சிறிய விளக்குகள் மலர் வளையங்களில் பின்னி, மின்மினி போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.
ஹாலில் இசை “சிறு சிறு காதல் பாடல்கள் போன்ற மெலோடியான பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.
விருந்தினர்கள் வரிசையாக வந்து, பரிசுகள், ஆசீர்வாதங்கள் வழங்கினர்.
ஒவ்வொரு விருந்தினரையும் அரவிந்த், பிரகதி – புன்னகையுடன், நன்றியுடன் வரவேற்றனர்.
தேவகி எதிலுமே கலந்து கொள்ளவில்லை… ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்…
அபிஷேக் திவ்யா இருவருக்கும் தான் மிகுந்த அலைச்சல்… அவளுக்கு உடம்பெல்லாம் ஒரு வலி.. இருந்தாலும் அவள் தானே செய்ய வேண்டும்…அவளுடைய அம்மாவும் அக்காவும் அவ்வப்போது உதவி செய்வார்கள்…
அபிஷேக் தந்தையிடம் அப்பா எல்லாரும் அம்மா ஏன் இப்படி இருக்காங்க ன்னு கேக்கறாங்க?
கல்யாணம் முடியட்டும் அவளுக்கு இருக்கு என்று வேலையை பார்க்க சென்று விட்டார்..
விருந்தினர்கள் மெல்ல குறைந்தார்கள்.
மேடையில் சில நெருங்கியவர்கள் மட்டுமே.
அரவிந்த், பிரகதி – கைகளை இணைத்து, விளக்குகளால் மின்னும் ஹாலை விட்டு வெளியே நடந்தார்கள்.
வெளியே சில ஃபோட்டோக்கள் எடுத்தனர்…மனதில்இனிய சிரிப்புகள்.
சோர்வா இருக்கா என்று கேட்க ?
அவளோ இல்லை என்று தலையாட்டினாள்..
நாளைக்கு நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் தெரியுமா?
நான் ரொம்ப ஹேப்பி தெரியுமா? என்றான்..
எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு என்றாள் …
நான் எப்போதும் உன் கூட இருப்பேன் டி என்று அவளை மென்மையாய் அணைத்து விடுவித்தான்…
ஆரத்தி எடுத்து பின் உள்ளே நுழைந்து… சாமி அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்து..
ஹாலில் அமர்ந்து கொண்டாள்…
அரவிந்த் அவளருகில்…
அவன் அவளது முகத்தைப் பார்த்து ஒரு மெதுவான புன்னகை கொடுத்தான்…
அந்த புன்னகை, அவளது கண்களில் இன்னும் இருந்த கண்ணீரை மறைக்க முயன்றது…
அந்த நேரம், அவளது மனதில் இரண்டு உணர்வுகள் கலந்திருந்தன ..
ஒரு பக்கம் பெற்றோரிடம் இருந்து பிரிவின் வலி, இன்னொரு பக்கம் புதிய உறவுகளின் ஆரம்பம்..
தேவியை தவிர அனைவரும் அவளுடன் நன்றாக பேசினர்..
பாலும் பழமும் கொடுத்தனர்…
பிரகதி நீ கீழே ரூம் கொஞ்ச நேரம் யூஸ் பண்ணிக்கோ…
அரவிந்த் நீ மேலே போய் ரெஸ்ட் எடு என்று அனுப்பி வைத்தார் ஒரு உறவு முறையில் இருந்த பெண்…
திவ்யா பிரகதிய உங்க ரூம்க்கு கூட்டிட்டு போ..இங்க எல்லாரும் இருக்காங்க .. அவளுக்கு சங்கடமா இருக்கும் என்று மேலே அழைத்துச் செல்ல; இதை அறியாத அரவிந்த் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக் கொண்டு கீழே வந்தான்..
என்ன டா கீழ இருக்க.. கொஞ்சம் நேரம் தூங்கி எழும்பு என்று அபிஷேக் கூற ..
இல்ல டா பரவால்ல நான் இங்கயே இருக்கேன் என்று அந்த ரூம் வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தான்…
அபிக்கு புரிந்து விட்டது.. அவனும் உண்மையை சொல்ல வில்லை.. சிரித்துக் கொண்டே கடைக்கு ஏதோ வாங்க சென்று விட்டான்…
அவளோ சிறிது நேரம் தூங்கி எழுந்தாள்…
ஏதோ எடுக்க வேண்டும் என்று அந்த அறைக்குள் சென்றான்.. அவளை காணவில்லை… உறவினர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்..
என்ன அரவிந்த் பிரகதி அப்பவே மேல் ரூம் போயிட்டா என்று அவனை கிண்டல் செய்ய அவனோ அசடு வழிந்து கொண்டு அபிஷேகை பார்த்து ‘ ஏண்டா இப்படி.. அப்பவே சொல்லிருந்தா நான் மேல் ரூம் போய் இருப்பேன் என்றான் “
டேய் டேய் வாட்டர்ஃபால்ஸ கன்ட்ரோல் பண்ணு..
இன்னும் அரை மணி நேரம் கழித்து தான் புரிந்ததா என்று சொன்னான்…
ஹான் ஓகே தான் டா..
அவ என்ன செய்யறான்னு தான் யோசிச்சேன் ; வேற எதுவும் இல்லை டா என்றான் சமாளிக்க…
நீ யாருன்னு எனக்கு தெரியும் டா?
வந்து சாப்பிடு என்றான்…பிரகதி என்று ஆரம்பிக்க அது
திவ்யா பாத்துக்குவா.. நீ சாப்பிட்டுவிட்டு ரெடி ஆகு…