ஐயோ ரொம்ப நேரம் தூங்கிட்டேனா என்று நினைத்துக்கொண்டு வாஷ் ரூம் சென்றாள்..
திவ்யா நக்ஷத்திராவுக்கு உடை மாற்றிக் கொண்டு இருந்தாள்…
அக்கா நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல..
பரவாயில்ல டா; அப்புறம் நைட் ஃபுல்லா முழிக்கணும்.. அதனால் தான் உன்ன டிஸ்டர்ப் பண்ணல என்றாள் திவ்யா..
ஐயோ அக்கா என்று பதறி போய் சும்மா இருங்க அக்கா என்று கூச்சத்தோடு கூறினாள்…
ம்ம் நாங்களும் இந்த சம்பவம் எல்லாம் தாண்டி தான் வந்தோம்; சும்மா ஃப்ரீயா இரு…
இப்பவே நல்லா ரெஸ்ட் எடு.. பொண்ணு பார்க்க வந்தப்பவே அரவிந்த கண்ட்ரோல் பண்ண முடியலை… இப்ப நீ வேற அவன் வைஃப் ஆகிட்டயா இனி சொல்லவே வேண்டாம் என்று சிரித்தாள்…
அப்போது தான் அவனுடைய குறும்புத்தனம் நியாபகம் வந்தது…
அவள் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது..
என்ன மேடம் நெர்வஸா இருக்கா.. ரிலாக்ஸ் டா…
இந்த உனக்கு ஹாட் பாக்ஸ் ல சாப்பாடு இருக்கு.. சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகணும்..
இல்லை அக்கா எனக்கு பயமா இருக்கு?
ஒன்னும் இல்ல பிரகதி ஜஸ்ட் ரிலாக்ஸ் என்று கூறி அவளை சாமாளித்து சாப்பிட வைத்து, ஒரு ஃசாப்ட் சில்க் புடவை தேர்ந்தெடுத்துக் கொடுத்தாள் திவ்யா…
தலை நிறைய பூ வைத்து விட ..
அக்கா இவ்ளோ வேண்டாம்..
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது..
ஜஸ்ட் என்ஜாய் த மொமெண்ட் என்று அலங்காரம் செய்து விட்டாள்..
மம்மி எனக்கு லிஸ்டிக் என்று அவளுக்கு தெரிந்த மொழியில் குழந்தை கேட்க..
அச்சோ இங்க வா என்று அவளுக்கும்
போட்டு விட்டாள்..
குட்டி இப்பவே மேக்கப் ல இன்ட்டெரெஸ்டா இருக்கா என்று பிரகதியும் கொஞ்சினாள்..
அக்கா நீங்க பார்க்க டல்லா இருக்கீங்க என்றாள் …
ஆமா பிரகதி அலைச்சல் இருந்துச்சு அதனால அப்படி இருக்கும்.. இன்னைக்கு நல்லா தூங்கனும்…
அரவிந்த் கீழ் அறையில் தயாராகிக் கொண்டு இருந்தான்.. அவனுக்கு பதட்டம் ஒருபுறம் சந்தோஷம் ஒரு புறம் என்று இருந்தான்..
அங்கு இருந்தவர்கள் அவனை கிண்டல் செய்து கொண்டே இருந்தனர்…
எப்போதும் ஜாலியாக இருக்கும் அரவிந்த்க்கே வெட்கம் வந்து விட்டது என்றாள் பிரகதியை சொல்லவும் வேண்டுமா?…
எப்ப டா அவளைப் பார்ப்போம் என்று இருந்தது… இந்தா பெர்ஃப்யூம் அடிச்சுக்கோ.. நான் தலை சீவி விடறேன் என்று அபிஷேக் தான் எல்லாம் செய்தான்..
நான் என்ன சின்ன பாப்பா வா?
ம்ம்ம்ம் என்று சொல்லி விட்டு
அபிஷேக் அவனை அணைத்து விடுவித்தான்.. வெக்கம் எல்லாம் படுறியே ; நெஜமாவே நீ தானா இது என்று கிண்டல் செய்ய…அபி நீயுமா.. ஐ ஃபீல் ஷை டா..
போதும் டா டேய் வந்து சாமி கும்பிடு என்று அழைத்துச் சென்றான்.சாமி கும்பிட்டு சுகுமார் வந்து அவனுக்கு திருநீறு பூசி விட, அபிஷேக் அவனை அறைக்கு அழைத்துச் சென்றான்.. ஆல் தி பெஸ்ட் என்றான்.. ச்சீ போடா என்று அவன் உள்ளே சென்று கதவைத்து விட்டான்..
அபிஷேக் அவன் அறை வாசலில் நின்று திவ்யாவை அழைக்க.
அவன் ரூம் போயிட்டான் என்றான்..
அவளும் ஓகே நீங்க போங்க நான் அவள அனுப்பிட்டு வரேன் என்று விட்டாள்..
பிரகதி தான் வெட்கப் பட்டு சிவந்து போய் விட்டாள்..
இங்க வெட்கப் பட்டது போதும்… மீதி உன் ரூம்க்கு போய் வெட்கப் பட்டு என்றாள் திவ்யா..
சரி டா டைம் ஆச்சு ரூம்ல பால் எல்லாம் இருக்கு .. வா கீழே போய் சாமி கும்பிட்டு வரலாம் என்று அழைத்துச் சென்றாள்… அவள் சாமி கும்பிட்டு நிற்க அந்த உறவும் பெண்மணி வந்து திருநீறு பூசி விட்டார்..தேவகி தான் எதிலுமே கலந்து கொள்ளவில்லையே..
வா மேல ரூம் போலாம் என்று அழைத்துச் செல்ல.. பிரகதிக்கு கால்கள் எடுத்து வைக்கவே சிரமமாக இருந்தது.. குப்பென்று வேர்க்கத் தொடங்கியது..
அக்கா ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு என்றாள்.. அவளை அணைத்து கொண்டு ரிலாக்ஸ் டா.. அவன் உன் அரவிந்த் தான்.. உன்னை ஹர்ட் பண்ணாம பார்த்துக்குவான் என்று சிலபல அட்வைஸ் அள்ளித் தெளித்து ரூம் வாசலில் விட்டாள்.. ஆல் தி பெஸ்ட் உள்ள போ என்று சொல்ல..
பிரகதியோ கதவில் கை வைப்பதும் எடுப்பதும் இப்படியே செய்ய ; பொறுமை பறந்து போனது திவ்யாவிற்கு.. என்னம்மா பண்ற நீ! என்று அவளருகில் சென்று கதவை வேகமாக தட்டி விட்டு அவள் அறைக்கு ஓடியே விட்டாள் திவ்யா..
ஐய்யோ என பதறி விட்டாள் பிரகதி..
கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தான்..
பிரகதியை பார்த்து அவன் மூச்சடைத்து நின்றான்.. உள்ளே வா பிரகதி..
தயக்கத்துடன் எப்படியோ உள்ளே வந்து விட்டாள்.. அவள் பதட்டம் வெளிப்படையாகவே தெரிந்தது..
அரவிந்த் கதவை சாத்தி விட்டு கட்டிலில் அமர்ந்தான்…
இங்க வந்து உட்காரு என்றான்..
இல்லை நா இங்கேயே இருக்கேன் என்று சுவற்றில் சாய்ந்து கொண்டாள்..
நைட் ஃபுல்லா இப்படியே நிற்க போறியா?
இல்லை அப்படி இல்லை எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு மாமு என்றாள்…
நீ நின்னா எனக்கு கால் வலிக்கும் டி என்று அவளை அமர வைத்தான்..
ரூம்ல டெக்கரேசன் நல்லா இருக்குல்ல…
அவளோ அறையை சுற்றி பார்த்தாள்..
ம்ம் ஆமா என்றாள்…
அவள் கையை பிடித்தான்… சட்டென எழுந்து விட்டாள் ..
இல்லை டி மோதிரத்தை தான் பார்க்கலாம் ன்னு கைய புடிச்சேன் என்றான்…
இந்தா தண்ணி குடி; கொஞ்சம் ரிலாக்ஸ் டி நான் ஒன்னும் செய்ய மாட்டேன்…
ஓகே…
உங்க அம்மா ஏன் இப்படி?
என்ன பிடிக்கலையா?
அப்படி எல்லாம் இல்லை டி.. கொஞ்ச நாள்ல மாறிடுவாங்க…
சாரி என்னால தான் உங்க கிட்ட கூட பேசல..
அதெல்லாம் பேசுவாங்க என்கிட்ட பேசாமா இருக்க மாட்டாங்க…
என்னால தான் எல்லாருக்கும் பிரச்சினை என்று அழுது விட்டாள்..
அடியே அழுகாத.. நான் எதுமே நினைக்க மாட்டேன்.
அவள் கண்களை துடைத்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்…
மாமு ப்ளீஸ் எனக்கு என்று ஆரம்பிக்க..
எனக்கு தெரியும் டி… நீ ரிலாக்ஸா தூங்கு என்றான்..
தேங்க்ஸ் என்றாள்…
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ஜஸ்ட் ஹக் மட்டும் பண்ணு என்றான்..
சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் அணைத்து கொண்டு தூங்கி போனார்கள்.. நான் உனக்கு துணையாக இருப்பேன் என்பது போல ஒரு அணைப்பு அவனிடம்..அந்த அணைப்பு பிரகதிக்கு இதமாய் இருந்தது..
அபிஷேக் அறையில்..
அம்மா அப்பா எல்லாம் ரீச் ஆயிட்டாங்கலா ?
ம்ம் கால பண்ணி பேசிட்டேன் என்றாள்..
இன்னைக்கு பேபிக்கு கண் பட்டிருக்கும்.. அழகா இருந்தா என்றான்…
நாளைக்கு ஹாஸ்பிடல் போலாமா டி..
ஃபேஸ் டல்லா இருக்கு..
ஆமா போயிட்டு வரலாம்..
உங்க அம்மா கிட்ட பேசுங்க.. இப்படி இருந்தா எல்லாரும் பிரகதி ய தான் தப்பா நினைப்பாங்க..
ம்ம் அப்பா பேசறேன்னு சொன்னாங்க..
திவி.. திவி ..
என்ன டா..
ஒரு கிஸ் குடு டி…
எனக்கு பழையது எல்லாம் நியாபகம் வருது டா ..
வெட்கப் படறியா?
ஆமா என்று அவனை கட்டிக்கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கி விட்டார்கள்..
அடுத்த நாள் அழகாக விடிந்தது…ஆனாலும்
அந்த சந்தோசம் சிறிது நேரத்தில் காணமல் போய்விடும் என்று யாருக்கும் தெரியாமல் போனது…