உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.9
(10)

அத்தியாயம் 27

அரவிந்த் தயாராகி கீழே வந்தான்..

கார்ல தானே போற என்று தேவகி கேட்டார் ?

ஆமாம் என்று தலை ஆட்டினான்..

பாத்து போயிட்டு வா.போகும் போது அவளுக்கு பூ வாங்கிட்டு போ என்றார்..

ம்ம் சரி மா..

தேவகி தான் பேசிக் கொண்டு இருந்தார்.. அவன் ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான்…

கிளம்பும் போது அழுகக் கூடாது என்று அழுகையை கட்டுப்படுத்தினார்…

ஓகே மா நான் கிளம்புறேன் என்று அவரை அணைத்து விடுவித்தான்..

போகும் வழியில் ஒரு கடைக்கு சென்று அவளுக்கு ஒரு பொருள் வாங்கினான்; பூ வாங்கினான்.,

அரை மணி நேரத்தில் பிரகதி வீட்டை அடைந்தான்…

வாங்க மாப்பிள்ளை என்று அனைவரும் அவனை அழைத்தனர்..

அனைவரையும் பார்த்து சிரித்தான்..ஆனால் கௌசல்யாவை கண்டு கொள்ளவே இல்லை…

மாப்பிள்ளை ஒரு நிமிஷம் என்று அர்த்தி தட்டை எடுத்து வந்தார் ஜோதி..

பிரகதி என்று அழைக்க அவள் வரவே இல்லை…

மாப்பிள்ளை அது வந்து அவ அண்ணைக்கு வந்து ரூம்குள்ள போனவ தான் யாரு கூப்பிட்டும் வரல..

அண்ணி தான் ஏதோ சமாதானம் செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட வச்சாங்க..

அதுக்கு மேல அவங்க நாளும் முடில என்றார் கண்ணன்..

மாமா நீங்க இருங்க நான் போய் கூப்பிட்டு வரேன் என்று அவள் அறைக்கதவை தட்டினான்..

அவள் திறக்கவே இல்லை..

ஏய் மாப்பிள்ளை வந்திருக்காங்க டி என்று ஜோதி குரல் கொடுத்தார்..

உள்ளே இருந்து ” நீங்க பொய் சொல்றீங்க” என்று பதில் வந்தது..

நேத்து அப்படி சொல்லத்தான் அவ கதவை திறந்தா என்றார் ஜோதி..

அத்தை நீங்க கீழே போங்க நான் அவள கூப்பிட்டு வரேன் என்று சொன்னான்..

மறுபடியும் கதவை தட்டினான் கதவு திறக்கவே இல்லை..

ஹேய் நான் அரவிந்த் வந்திருக்கேன் கதவை ஓப்பன் பண்ணு டி..

இல்லை ஜோதி மா நீங்க பொய் சொல்றீங்க என்றாள்..

அவனுக்கு சிரிப்பு வந்தது..

இவளுக்கு காது கேக்காதோ?

என் வாய்ஸ்க்கும் அவங்க வாய்ஸ்க்கும் வித்தியாசம் தெரியாதா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

ஏண்டி என் ஆம்பிள வாய்ஸ்கும் லேடிஸ் வாய்ஸ்க்கும் வித்தியாசம் தெரியாதா என்று கேட்க?

அவளுக்கு ஒரு நிமிஷம் எதுவுமே புரியவில்லை…

உடனே மெத்தையிலிருந்து வேகமாக வந்து கதவைத் திறந்தாள்..

அவனைப் பார்த்து அவனை கட்டிக்கொண்டு அழுதாள்..

சாரி அரவிந்த் என்று விம்மித் கொண்டு அழுதாள்..

அவள் இருந்த கோலத்தை பார்த்து அரவிந்த்க்கு அதிர்ச்சி..

தலை எல்லாம் கலைந்து, கண்கள் எல்லாம் அழுது சிவந்து வீங்கி போய் இருந்தது..

எப்பொழுதும் அவள் உடையில் இருக்கும் நேர்த்தி இப்பொழுது இல்லை..

என்ன டி இது இப்படி இருக்க?

அவளை பார்த்து செய்யறது எல்லாம் செஞ்சிட்டு இப்படி அழுதா சரியாகிடுமா?

இல்லைங்க அது வந்து என்று கூற..

ஃபர்ஸ்ட் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா என்றான்..

ஒரு டூ மினிட்ஸ் என்று அவள் ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்று ஒரு குளியல் போட்டு; வேறு உடையில் அழகாக வந்தாள்..

சரி வா கீழே போகலாம் என்று அழைத்துச் சென்றான்..

வாசலில் வந்து நின்ற இருவருக்கும் ஆர்த்தி சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார்கள்..

இந்த முறையெல்லாம் சந்தோஷமா செய்ய வேண்டியது இப்படி ஆயிடுச்சு என்றார் வருத்தமாக..

அதற்குள் பக்கத்து வீட்டில் இருந்து சிலர் வந்தனர்…

அக்கா பாலும் பழமும் கொடுங்க என்று அவர்களில் ஒருவர் வாங்கி கொடுத்தார்..

ஏன் பிரகதி பூ வைக்கலயா என்று கேட்க?

அவனும் அவளுடைய தலையை பார்த்தான்..

ஆண்டி நான் வாங்கி இருக்கேன்; எடுத்துட்டு வரேன் என்று எழுந்திரிக்க..

தம்பி நீங்க இருங்க; ஷீலா சாவி வாங்கிட்டு போய் எடுத்து வா என்று அனுப்பி வைத்தார்..

அந்தப் பெண்ணோ ஐந்து முலம் பூவை எடுத்து வர; அனைவரும் வாய்க்குள் சிரித்தனர்..

ஏண்டி பிரகதி நீ ரொம்ப குடுத்து வெச்சவ தான் டி என்று அவளை கிண்டல் செய்து கொண்டார்கள்..

அவன் வாங்கி வந்த பூ அனைத்தும் பிரகதி யின் தலையில் வைத்து விட்டார்கள்..

கௌசல்யா அனைவருக்கும் டீ கொடுத்தார்..

வீடே கலகலவென இருந்தது..

பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்தாள் கேட்க வேண்டுமா என்ன?

அரவிந்துக்கே வெட்கம் வந்தது…

வந்தவர்கள் சிறிது நேரத்தில் கிளம்பி விட்டார்கள்..

இரவு உணவிற்கு விருந்து செய்திருந்தனர்..

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டு விட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..

மாப்பிள்ளை எங்களுக்கு கொஞ்ச நேரத்தில கார் வந்திரும்.. நாங்க கிளம்பிடுவோம்..

நாங்க வரதுக்கு எப்படியும் நாலு நாள் ஆயிடும்..

சனிக்கிழமை வந்திருவோம்..

 கோர்ட்டுக்கு பாத்து போயிட்டு வாங்க என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கார் வரும் சத்தம் கேட்டது…

சரி மாப்ளே நாங்க கிளம்பறோம்…

நீங்க பாத்து இருங்க..

எல்லாரிடமும் சிரித்து பேசினான்.. ஆனால் கௌசல்யாவிடம் மட்டும் தவிர்த்து விட்டான்…

நாளைக்கு மாப்பிள்ளை கூட கோவிலுக்கு போயிட்டு வா மா.

மேலும் சிலவற்றை அவளுக்கு சொல்லி விட்டு இருவரிடமும் விடை பெற்று கிளம்பி விட்டார்கள்…

பிரகதி அவர்களின் வண்டி தெரு முனை செல்லும்வரை வெளியே நின்றாள்..

பிறகு கேட்டை பூட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்…

நீங்க டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோங்க என்று அவன் சூட்கேஸை அவர்கள் அறைக்கு தூங்கிச் செல்ல..

நானே எடுக்கறேன் என்று அவளிடமிருந்து வாங்கி மேலே சென்று உடை மாற்றி விட்டு கீழே வந்தான்…

டிவி பாருங்க என்று ரிமோட்டை அவனிடம் கொடுத்தாள்…

அவள் தயங்கி தயங்கி தான் அவனிடம் பேசினாள்…

தவறு அவள் மேலும் தானே இருந்தது..

அர்விந்த் ஸாரி என்றாள்..

அவளை பார்த்து விட்டு மீண்டும் டிவியை பார்த்தான்..

அரவிந்த் என்று அவன் கையை பற்றிக் கொண்டு அவள் பேச ஆரம்பிக்க..

போதும் நீ எதுவும் பேச வேண்டாம்..

உன்கிட்ட எனக்கு பேச பிடிக்கல..

ஏன் அரவிந்த் இப்படி சொல்றீங்க..‌

வேற எப்படி பேச சொல்ற;

ஒரு ஃபோன் பண்ணி கூட பேசல..

திவ்யா அண்ணிக்கு இப்படி ஒரு ப்ராப்ளம்ல அவங்க கூட இருந்திருக்கலாம்.. ஆனா நீ உன் அம்மா பேச்ச கேட்டு வந்துட்ட..

அவங்க கூட இருந்திருக்க வேண்டாம்..

ஆனா அந்த பாப்பாவ நீ உன் கூட வெச்சிருக்கலாம்..

அப்பா பாப்பா வ அவர் கூட கடைல வச்சு பாத்துகிட்டாரு…நம்ம விஷயம் தெரிஞ்சு கூட அவங்க என்ன தான் கேட்டாங்க..

நீ ஏன் அரவிந்த் பிரகதி கூட 

நிக்கல்ன்னு .‌

சாரி அரவிந்த் தப்பு தான்..

நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்..

அம்மா தான் என்ன வலுக்கட்டாயமா கூட்டிட்டு போய்டாங்க..

இங்க வந்து அப்பா அம்மாவ அடிச்சிட்டாங்க தெரியுமா?

என்று அழுக ஆரம்பித்து விட்டாள்..

தயவு செய்து அழுகாத; இப்படி அழுதா எனக்கு பிடிக்காது…

என் அம்மா மேல தான் தப்பு..

நான் இல்லைன்னு சொல்ல முடியாது..

ஆனா உனக்கு சப்போர்ட் பண்ணி தானே நானும் அப்பாவும் இருப்தோம்..

ஹாஸ்பிடல ஏதும் பேச வேண்டாம்ன்னு தான் அமைதியா இருந்தோம்..

ஆனா நான் அவ்ளோ தூரம் போகாத ன்னு சொல்லியும் போயிட்ட..

உனக்கு ஒரு ப்ராப்ளம் வந்த டைம்ல உனக்கு ஹெல்ப் தேவை பட்டது‌‌..

ஆனா யாரோட எமர்ஜென்சிலயும் நீ கூட இருக்க மாட்ட அப்படி தான..

அட்லீஸ்ட் ஒரு கால் பண்ணி கேட்டியா டி?..

சும்மா ஒரு ப்ராப்ளம் வந்தா அழுகறது..

டோன்ட் இரிடேட் மீ ரதி என்று அவன் அறைக்கு சென்று விட்டான்..

ச்சே நான் ரொம்ப

செல் ஃபிஷா நடந்துட்டேன்…

அரவிந்த் சொல்றதுல என்ன தப்பு இருக்கு

என்று மீண்டும் அழுக ஆரம்பித்தாள்…

அறைக்கு வந்த அரவிந்துக்கு அவன் பேசியது அதிகப்டியாகவே தோன்றியது ‌..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!