” அடிப்பாவி… அப்ப நாலு வருஷமா நீதான் எனக்கு சீக்ரெட்டா ரெட் ரோஸ் கொடுத்ததா… ” என்று விஸ்வரூபன் வினவ…
முகம் சிவக்க தலைக் குனிந்து இருந்தவள், மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து சிரித்தாள்.
” ப்ச்… நான் தான் உன் கிட்ட ஃபர்ஸ்ட் லவ் சொன்னேன் என்று நினைச்சு சந்தோஷப்பட்டேன். பட் நீ எனக்கு முன்னாடியே ரெட் ரோஸ் கொடுத்து, சொல்லாமல் சொல்லிட்டியா காதலை. நான் தான் புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறேன். ” என்று அவள் கை விரல்களை வருடியபடியே கூறியவன், அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தான்.
‘ வழக்கம் போல பிலிப்பைன்ஸில் இருந்து அனன்யா கால் செய்து குடும்பத்திலுள்ள எல்லோரிடம் பேசி முடித்து விட்டு, இறுதியாக விஸ்வரூபனுக்கு அழைத்திருந்தாள்.
” ஹாய் மாம்ஸ்… எப்படி இருக்கீங்க?”
” ம்… இது வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். இப்ப என்ன குண்டைத் தூக்கிப் போட போற அந்துருண்டை?”
” வெரிகுட்… ஆனால் நீ புட் ஸ்டால் தான் போடுவேன் நினைச்சேன்.” என்று கிண்டலாக சிரிக்க…
” அது சரி தான். நானும் அப்படித்தான் நினைத்தேன். பட் சரி வராதுன்னு விட்டுட்டேன்.”
” வொய் அந்துருண்டை?”
” அதுவா மாமா… புட் ஸ்டால் போட்டால், நான் அதை சாப்பிட்டுகிட்டே இருப்பேன். அப்புறம் ஃப்ராஃபிட் குறையும். அப்புறம் அது வேலையும் அதிகம். இதுவே ரோஸ் ஸ்டால் போட்டால் ஜாலியா இருக்கலாம்.
ஒரு ரோஸ் தெர்டி பெசோஸ். மோஸ்ட்லி நிறைய ஸ்டூடண்ட்ஸ், அவங்க சீக்ரெட் க்ரெஷ்ஷுக்கு கொடுக்கிறதுக்கு ரோஸ் வாங்குவாங்க. அவங்க யார் கிட்ட கொடுக்க சொல்றாங்களோ, அவங்கக்கிட்ட சீக்ரெட்டா நாங்க போய் கொடுத்துருவோம். கான்ஃபிடன்ஸியாலிட்டியை மெயின்டைன் பண்ணுவோம். இது ஜாலியாக இருக்கும்.
என்னோட ஸ்டால்ல சீக்கிரம் வித்துடுவேன். அப்புறம் அதில் வேலை இருக்காது. தென் ஜாலியா என் ஃப்ரண்ட்ஸோட உட்கார்ந்து, அரட்டை அடிச்சிக்கிட்டே, வேணுன்றதை சாப்பிட்டுக்குவேன். எப்படி என்னுடைய இராஜதந்திரம்?” என்றுக் கூறி அனு புன்னகைக்க…
” அதுக்கு பேரு ராஜத்தந்திரமில்லை.
சோம்பேறித்தனம். சரி அதெல்லாம் எனக்கு எதற்கு? உன் ஃப்ரெண்ட் தான் பாவம். உனக்கு செஞ்சுக்கொடுத்தே டயர்டாயிடுவா.”
” மாமா… என் ஃப்ரெண்டைப் பத்தி எதுவும் பேசாதீங்க. நீங்க மண்டே இங்கே வருவீங்களா? இல்லையா?”
” ஹேய் அந்துருண்டை நான் எதுக்கு அங்கே வரணும்?”
” மாமா… நான் முதன் முதலா ஸ்டால் போட்டு மணி ஏர்ன் பண்ண போறேன். நீங்க வர மாட்டீங்களா?” என்று பாவமாக அனன்யா வினவ?
” ஏய் லூசு… இங்கே இருக்குற எல்லா ஹாஸ்பிடல்லையும் உனக்கும் ஷேர்ஸ் இருக்கு. உன்னோட அக்கௌண்ட்ல மணி ஆட்டோமேடிக்கா வரும். இதுக்கு போய் இவ்வளவு அலப்பறை பண்ணுற…”
” அதெல்லாம் எனக்கு தெரியாது மாமா. நீங்க வந்து தான் ஆகணும். என்ன செலவாகும்னு பார்க்கிறீங்களா?” என்று அனு கோபப்பட…
” சரி சரி கோபப்படாதே… நான் வரேன்.” என்றவன் சொன்னபடியே வந்தான்.
” ஹாய் மாம்ஸ்… வந்தது தான் வந்தீங்க. ஒரு ரோஸ் வாங்கிக்கோங்க.” என்று அனு சொல்ல…
” அந்துருண்டை… உதை வாங்கப் போற…” என்றவனின் பார்வையோ, சுற்றிலும் பாய்ந்தது.
சற்றுத் தள்ளி வேறோரு ஸ்டாலில் பிஸியாக இருந்த ராதிகாவை கண்டுக்கொண்டது.
அவளும், அவனை ஒரு பார்வை பார்த்தவள், பிறகு திரும்பிக் கொண்டாள்.
அவளது இன்னொரு தோழியிடம் ஸ்டாலை கொஞ்ச நேரம் பார்த்துக்க சொல்லி விட்டு அங்கிருந்துச் சென்று விட்டாள் ராதிகா.
தன் மாமா வந்ததும், ராதிகாவைப் பார்த்த அனன்யா, அவள் அங்கே இல்லை.
எங்கே போயிருப்பாள் என்ற யோசனையுடன் பார்வையை சற்று தள்ளி செலுத்த, அங்கிருந்த ரோஸ் ஸ்டாலிலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்தாள்.
” மாம்ஸ் ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. இதோ வந்துடுறேன்.” என்றவள், ராதிகாவிற்கு முன்பு நின்று அவளைப் பார்த்து முறைத்தாள்.
ராதிகாவோ சற்று அதிர்ந்து, ” அது …. அனு…” என்று இழுக்க…
” ரகசியமா இருக்கணும்னு என்னோட ஸ்டாலை விட்டுட்டு வேற இடத்துக்கு போயிருக்க ரைட்…” என்று கோவமாகக் கூற…
” அப்படியெல்லாம் இல்லை அனு…”
” சரி… அப்போ யாருக்கு கொடுக்க சொன்ன…” என்று அனு கேட்க…
” ம்கூம்…” என்று முகம் சிவக்க தலையசைத்தாள் ராதிகா.
” நீ சொல்லலைன்னா என்ன? எனக்கு தெரியாதா? எங்க மாமாவுக்கு தானே கொடுக்க சொன்ன?” என்றாள் அனன்யா.
அவள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ராதிகா உறைந்து நிற்க…
” அடிப்பாவி… அப்போ உண்மையா எங்க மாமாவுக்கு தான் கொடுக்க சொன்னீயா…. ஐயோ! எனக்கு போட்டியா வர்றீயா” என்று அனு கிண்டல் செய்ய…
கண்கள் கலங்க ராதிகா, “அனு அப்படி எல்லாம் சொல்லாத… நீ உங்க மாமாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா, நான் உங்களுக்கு நடுவே வர மாட்டேன்.” என்றாள்.
” அட லூசு… சும்மா கேலி தான் பண்ணேன். நீ எங்க மாமாவை கல்யாணம் பண்ணிட்டு வந்தா, எனக்கு தான் ரொம்ப சந்தோஷம். நாம என்னைக்கும் பிரிய வேண்டாம். சரிடி இனிமே ரோஸ் என்கிட்ட தான் வாங்கணும்.” என்றுக் கூறி சிரிக்க…
ஆனால் விஸ்வரூபனோ, அடுத்த வருடத்திலே யாரிடமிருந்து வருகிறது என்று தெரிந்துக் கொண்டான்.
அனன்யா தான் ராதிகாவுக்கான ரோஸை கொடுக்க…
” ஹேய் அந்துருண்டை… யாருடா ரோஸ் கொடுக்க சொன்னா?” என்று விஸ்வரூபன் கேட்டான்.
” சாரி மாம்ஸ். திஸ் இஸ் சீக்ரெட்.” என்று சொல்ல மறுத்தாலும், அவனுக்கு அது ராதிகாவாகத்தான் இருக்க கூடும் என்று மனதிற்குள் ஒரு யுகம் இருந்தாலும், தெரிந்த மாதிரி காண்பித்துக் கொள்ளாமல் இருந்தான்.’
இன்று அதைத்தான் கிண்டல் செய்துக் கொண்டிருந்தான்.
விஸ்வரூபன், ராதிகாவின் கைப்பிடித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அனன்யா, ஒருவழியாக ராதிகா தன் காதலை கூறி விட்டாள் போல என்று எண்ணி சிரிப்புடனே அவர்களுக்கு அருகே வந்து அமர்ந்தாள்.
” சாரி ராது… இங்கே ஸ்வீட் எதுவும் கிடைக்கலை. இந்தா இந்த சாஸ் தான் இப்போதைக்கு ஸ்வீட்.” என்ற அனு, சாஸில் நனைத்த பிரஞ்ச் ஃபிரஸை அவளுக்கு ஊட்டி விட்டு, தன்னுடைய மாமனுக்கு ஊட்டி விட்டாள்.
” ஆனாலும் உன் ஃப்ரெண்ட் இப்படி பண்ணி இருக்க கூடாது அனு.” என்று விஸ்வரூபன் கூற…
அதிர்ந்து விழித்தபடியே, ” என்ன மாமா?” என்றாள் அனன்யா.
” பின்னே என்ன நாலு வருஷமா லவ் பண்ணுறா, இவ்வளவு நாள் சொல்லாமல், இப்போ இந்தியாவுக்கு திரும்பும் போது சொல்லுறா! இங்கே இருக்கும் போது சொல்லியிருந்தா, அடிக்கடி வந்துப் பார்த்திருப்பேன். ஜாலியா வெளியில் போய்ட்டு வந்திருக்கலாம். இப்பப் பாரு ஊருக்கு போகும்போது வந்து சொல்றா. அங்க எப்படி அவளை என்னால மீட் பண்ண முடியும்.” என்று குறை கூறுவது போல் கூறியவன், ராதிகாவைப் பார்த்து கண்ணடித்தான்
ராதிகாவோ, அவனை முறைக்க முயன்று, அது முடியாமல் முகம் சிவக்க தலை குனிந்து கொண்டாள்.
இந்த விளையாட்டையெல்லாம் கவனிக்காத அனன்யா தன் தோழிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தாள்.
” ராது எது செய்தாலும் ஏதாவது சொல்லிட்டே இருங்க மாமா. காதலைக்கூட அவ தான் முதல்ல சொன்னா… நீங்க ஒன்னும் இல்லை. எப்படியும் இந்தியா போன உடனே எக்ஸாம் எழுதுவதற்காக சென்னைக்கு வருவா… அப்ப பார்த்து பேசி உங்க காதலை டெவலப் பண்ணிக்கோங்க. இப்போ எனக்கு இன்னொரு பிளேட் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் வேணும். உங்களுக்குக் கொடுத்ததால எனக்கு பத்தலை. நான் வாங்கிட்டு வரேன்.” என்றவள் சென்று இருக்க.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.
” ராதா டியர். நீ தான் ஃபர்ஸ்ட் காதலை சொன்னீயா? என்ன? நான் தானே முதல்ல சொன்னேன். அது அனுவுக்கு தெரியவில்லையே. நீ நாலு வருஷமா ரோஸ் மட்டும் கொடுத்திருக்க. காதலை வாய் வார்த்தையா சொல்லவே இல்லையே.” என்று கண் சிமிட்டிக் கூறினான்.
” நான் ஏற்கனவே வாய் வார்த்தையா என் காதலை சொல்லி இருக்கேனே…” என்று மர்ம புன்னகை பூத்தாள் விஸ்வரூபனின் ராதா…
இன்று…
விஸ்வரூபன், இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்தது, என்று வீடியோ எடுத்து போட்டவன்,
அதற்குப் பிறகே வீட்டிலிருப்பவர்களுக்கு தகவல் சொன்னான்.
அவன் செய்தவற்றையெல்லாம் அருகிலிருந்துப் பார்த்தவள், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், ஹாஸ்டலுக்கு கிளம்பிச் சென்றாள்.
தன்னிடம் சொல்லாமலே செல்லும் ராதிகாவை பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன்.
அதற்குள் வீட்டிலிருந்தும் வந்துவிட்டார்கள்.
சற்றுநேரத்தில் கிருஷ்ணன் கண் விழித்து விட…
ரஞ்சிதம், கௌரி, விஸ்வரூபன் மூவரும் உள்ளே சென்றனர்.
கலங்கிய கண்களுடன் வந்த பெண்கள் இருவரையும் பார்த்து, லேசாக புன்னகைத்து தனக்கு ஒன்றும் இல்லை என்றார். விஸ்வரூபனை நிமிர்ந்துக் கூடப் பார்க்கவில்லை.
மெல்ல தந்தையின் கைகளைப் பற்றிய விஸ்வரூபன், ” பா… ரிலாக்ஸா இருங்க. உங்க இஷ்டப்படியே கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்று சம்மதம் சொல்ல…
” என்னப்பா… அப்பா செத்துடுவேனு பயந்துட்டீயா? இல்லை நம்ம ஹாஸ்பிடலில்ல ஏதும் போதி மரம் இருக்கா…” என்று கிண்டல் பண்ண…
” அப்பா…” என்று தயங்கிய விஸ்வரூபன், ‘ எப்படி இருந்தாலும் அவருக்கும் எல்லாம் தெரிய வரும்.’ என்று எண்ணியவன், சற்று முன் நடந்ததை அவரிடம் மெல்லிய குரலில் கூறினான்.
அதற்குப் பிறகு என்ன… அது ஹாஸ்பிட்டல் என்பதையும் மறந்து கிருஷ்ணன் வேகமாக திருமணத்தை நடத்த திட்டம் தீட்டினார்.
” டாட்… கிண்டல் பண்றீங்களா? இன்னைக்கு ஃபுல்லா அப்சர்வேஷன்ல இருக்கணும். நீங்களே ஒரு டாக்டர். உங்களுக்கத் தெரியாததா? இரண்டு நாளாவது ஃபுல் ரெஸ்ட்ல இருக்கணும்.” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, சீஃப் டாக்டர் வந்தார்.
” ஹலோ… டாக்டர்… ஹவ் ஆர் யூ ஃபீலிங் நவ்.” என்றார் சீஃப் டாக்டர்.
அடைப்பும் இரண்டு எடத்துல தான் இருந்தது. இதுலே சரியாயிடும். கொஞ்சம் ஃபுட் டயட் ஃபாலோ பண்ணனும் டாக்டர். டூடேஸ் இருந்து ஹெல்த் கண்டீஷனை இம்ப்ரூவ் பண்ணிட்டு போங்க டாக்டர்.” என
” ஓகே.” என்ற கிருஷ்ணன், ராதிகாவை நினைத்து பெருமிதம் கொண்டார்.
சீஃப் டாக்டர் சொன்னதை கண்டுக்கொள்ளாமல், கௌரியிடம் திரும்பிய விஸ்வரூபன், ” அத்தை… நீங்க அம்மாவோட வீட்டுக்கு கிளம்புங்க. அப்பாவை நான் பார்த்துக்குறேன்.” என்று அவர்கள் இருவரையும் படாதபாடு பட்டு அனுப்பி வைத்தான்.
அவர்களை வீட்டுக்கு அனுப்பியதே நல்லதாக இருந்தது. ஏனென்றால் விடியற்காலையில் புயல் போல் ராதிகாவின் வீட்டிலிருந்து அவளது பெற்றோர் வந்திருந்தனர்.
அவர்கள் காண வந்தது விஸ்வரூபனைத்தான்…
வாட்ஸ்அப்பில் வந்ததைப் பார்த்த ராதிகாவின் பெற்றோர், கலங்கித் தவித்தனர்.
நிச்சயத்தார்த்தம் முடிந்து விட்டது. சீக்கிரமே கல்யாணம் என்று விஸ்வரூபன் கூறிய வீடியோவை அனுப்பியதோடு மட்டுமல்லாமல் கூடவே, ” முதல் மனைவி இறந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குள் அடுத்த திருமணத்திற்கு அடி போட்டாயிற்று. கேட்டால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள என்று விடுவார்கள். பணம் இருந்தால் வந்து விழ பெண்களா இல்லை இந்த நாட்டில்… ” என்று கேவலமாக எழுதியும் அனுப்பி இருந்தான்
அதைப் பார்த்ததும், இரவே தஞ்சாவூரில் இருந்து கிளம்பியவர்கள், ராதிகாவை கூட சந்திக்காமல் நேராக அங்கு வந்து விட்டனர்…
துணைக்கு விக்ரம் கூட வந்திருந்தான். வந்தவன், சுந்தரிக்கு தெரியாமல், ராதிகாவுக்கு பலமுறை முயற்சி செய்து, இப்போ தான் அவளை காண்டாக்ட் செய்ய முடிந்தது.
அதற்குள் சுந்தரி பேசாக் கூடாததை பேசி விட்டாள்.
ஹாஸ்பிடலுக்கு வந்ததும் ரிசப்ஷனில் கிருஷ்ணனை பற்றி விசாரித்துக் கொண்டிருக்க…
அப்போது தான் கேண்டீனுக்கு சென்று காஃபி அருந்தலாம் என்று நினைத்த விஸ்வரூபன், கிருஷ்ணனை பார்த்துக்கொள்ள நர்ஸை இருக்க சொல்லி விட்டு, வெளியே வந்து இருந்தான்.
தன் தந்தையைப் பற்றி விசாரிப்பதை, கவனித்து அவர்கள் அருகே சென்றான்.
‘ யார்? இவர்கள்? ‘ என்று மனதிற்குள் நினைத்தவன், அவர்களைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான்.
” அப்பாவை பார்க்க வந்தீங்களா? வாங்க…” என்று கிருஷ்ணன் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான்.
உள்ளே சென்றவர்களை அறியாத பார்வைப் பார்த்தார் கிருஷ்ணன்.
‘அப்பாவுக்கும் இவங்க யாரென்று தெரியாதா ‘ என்று யோசனையுடன் அவர்களை ஆராய்ந்தான் விஸ்வரூபன்.
” நான் ராதிகாவோட அம்மா.” என்றாள் சுந்தரி.
“வாங்க சம்பந்தி அம்மா… நானே உங்களைப் பார்க்க வரலாம் என்று இருந்தேன்.” என்றுக் கூறி கிருஷ்ணன் புன்னகைக்க.
” மன்னிச்சுக்கங்க… இதுக்கு நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். நீங்க உங்க ஸ்டேட்டஸுக்கு தகுந்த மாதிரி பொண்ணு பாருங்க. எங்களை விட்டுருங்க.” என்று சுந்தரி கூற…
கிருஷ்ணன் அதிர்ந்து தன் மகனைப் பார்க்க… அவனோ தனக்கும் அங்கு நடக்கும் பேச்சு வார்த்தைக்கும் யாதொரும் சம்பந்தமில்லை என்பது போல் இருந்தான்.
” அது…” என்று கிருஷ்ணன் ஏதோ கூற வருவதற்குள், புயல் போல் ராதிகா நுழைந்தாள். ஒரே நாளில் ஆளே மாறியிருந்தாள்.
இரவு முழுவதும் அனுவை நினைத்து அழுதுக் கரைந்தவள், தூங்கவில்லை.
காலையிலே விக்ரம் அழைத்து தாங்கள் இங்கே வந்திருக்கும் விவரத்தைக் கூற… பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.
” மா… என்ன மா இதெல்லாம்… ” என்று ராதிகா தடுக்க…
” நீ சும்மா இரு ராது… என்ன நினைச்சுட்டு இருக்காங்க? அவங்க ஹாஸ்பிடல்ல வேலைப் பார்த்தா என்ன வேண்டுமானாலும் பேசுவாங்களா? உன்னை இரண்டாம் தாரமா கட்டி குடுக்கணும் எந்த அவசியமில்லை. அவங்க புள்ளைக்கு ஆயா வேலைப் பார்க்க நீ வேணுமா?” என்று சுந்தரி பொரிய…
” ஏம்மா இப்படி பேசுறீங்க. நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சினு அவங்களே சொல்லுவாங்களே. இனி கல்யாணம் நடத்தி வைக்கலைனா நமக்குத் தான் சங்கடம்.” என்று கிருஷ்ணன் கூற…
அவருக்கு எதுவும் பதிலளிக்காமல் தன் மகளைத் தான் பார்த்தார் சுந்தரி. சண்முகமோ, மகள் எது செய்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று திடமாக நம்பினார்.
” ராது… நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா?” என்று சுந்தரி கேட்டார். அவர் இன்னமுமே தன் மகளை நம்பினார். ‘பேசியது எல்லாம் விஸ்வரூபன் தானே. ஒரு வேளை தன் மகளை மிரட்டிருப்பானோ.’ என்று எண்ணியே இரவோடு இரவாக கிளம்பி வந்திருந்தவர், அந்தக் கேள்வியைக் கேட்டார்.
அந்த கேள்வியில் தன் மகள் தன் அனுமதி இல்லாமல் செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை வீற்றிருந்தது.
அவள் என்ன பதில் கூறப் போகிறாள் என்று தெரிந்துக் கொள்ள, அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன். உள்ளுக்குள்ளோ, ‘ ராதிகாவின் அழுதழுது சிவந்து வீங்கியிருந்த முகத்தைப் பார்த்து வருந்தினான்.’
தலை குனிந்து இருந்த ராதிகா “உண்மை தான் எங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் நடந்து விட்டது.” என்றுக் கூறினாள்.