உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்+21

4.8
(5)

அத்தியாயம்- 21 

 

அன்று…

 

ஆகாஷும், ஆதவனும் சென்ற பிறகு அங்கு அமைதியே ஆட்சி செய்தது‌.

 

 கிருஷ்ணன், ” ஏன் அனு மா… அவங்க வீட்டுக்கு எல்லாம் போயிருக்க? ஆனா எங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல.” என்றுக் கேட்க…

 

“அப்படி இல்ல மாமா… அவங்க வீட்ல ஒரு பார்ட்டி. அதுக்காகத் தான் போனேன். அன்எக்ஸ்பெட்டாட தான் ஆகாஷ் அறிமுகப்படுத்தினான்.” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

 

” ஓ‌.. காட். இதுவே தப்பு இல்லையா அனு மா. உன் கிட்ட சொல்லாமல், எப்படி அந்த பையனே முடிவெடுக்கலாம்?” என்று கிருஷ்ணன் வழக்கத்திற்கு மாறாக துளைத்து, துளைத்து கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

 விஸ்வரூபனோ, தன் தந்தை பேசுவதால் கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தான்.

 

” சாரி மாமா… அவன் பண்ணது தப்பு தான். நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.” என்று பாவமாக கிருஷ்ணனைப் பார்த்தாள்.

 

கிருஷ்ணன் பரிதவித்தாரோ, இல்லையோ… ருக்குமணிக்கு பேத்தியைப் பார்த்து தாளவில்லை. அவர்கள் பேச்சிற்கு இடையே புகுந்தார்.

 

” அதனால என்ன கிருஷ்ணா? பார்க்க பசங்க, நல்ல பசங்களா தானே தெரியுறாங்க. இரண்டு பேரும் டாக்டருக்கு படிச்சிருக்காங்க. நல்ல வசதியாகத் தான் இருப்பாங்க. இல்லைன்னா என்ன? நம்ம அனுவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டு, நம்ம ஹாஸ்பிடலில் பார்த்துக்க சொல்லுவோம். இது ஒரு விஷயமா? ” என்று பேத்திக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டு வந்தார்.

 

இதற்காகவே அனன்யா விஷயத்தில் கிருஷ்ணன் தலையிடமாட்டார். விஸ்வரூபனையே பார்த்துக்கொள்ள சொல்லுவார். இன்று தாள முடியாமல் கேட்க, வழக்கம் போல தனது தாயின் குறுக்கீட்டை விரும்பவில்லை.

 

ஒரு முறை கண்களை மூடித் திறந்தவர், விஸ்வரூபனைப் பார்க்க…

 

அவனோ, தான் பார்த்துக் கொள்வதாக, கண்களாலே தந்தையிடம் தெரிவித்தவன், பாட்டியிடம் திரும்பி, ” பாட்டி… நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கத் தெரியுமா? அவங்க யாரு? குடும்பம் இருக்கா? அவங்க எப்படிப் பட்டவங்க? என்று எதுவும் தெரியாமல் நீங்க ஏதாவது சொல்லாதீங்க. எல்லா விஷயத்திலும் கண் மூடிட்டு சப்போர்ட் பண்ற மாதிரி இதிலையும் செய்யாதீங்க.” என்று கண்டிப்புடன் கூற.

 

” டேய் ரூபா… அதுக்கு தான் முதல்ல அவங்களை வீட்டுக்கு வரச் சொல்லுவோம். வர்றவங்க கிட்ட நீ விசாரி. பெரியவங்க சொன்னா ஏதாவது காரணம் இருக்கும். எல்லாத்துக்கும் அச்சானியமா தடை சொல்லாம… உங்க அப்பனை ஒரு நல்ல நாள் பார்க்க சொல்லு.” என.

 

” பாட்டி… என் செல்லப் பாட்டி.” என்று அவர் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவள், 

 

விஸ்வரூபனிடம், ” மாம்ஸ் பாட்டியே ஓகே சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன சீக்கிரமா ஒரு நல்ல நாளைப் பார்த்து, அவங்களை வர சொல்லுங்க. நீங்க என்ன வேணுமோ விசாரிச்சுக்கோங்க‌. ஆனா ஆகாஷைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என்றுக் கூறியவள் உற்சாகத்துடன் அவளது அறைக்குச் சென்றாள். 

 

 பாட்டியோ அவளையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

” பாட்டி… அவங்க குடும்பத்தைப் பத்தி விசாரிக்கிறதுக்கு முன்னாடி, நீங்க வீட்டுக்கு வரச் சொல்றது எனக்கென்னவோ தப்பா படுது. என்னவோ போங்க… ” என்று விட்டு அனுவின் அறைக்குச் சென்றான்.

 

 கிருஷ்ணன் இறுக்கமாக இருக்க… கௌரி,” அண்ணா… ” என கலக்கமான குரலில் அழைத்தாள்.

 

தன் முகத்தை இயல்பாகக்கிக் கொண்டு, ” நீ கவலைப்படாதே கௌரி. ரூபன் பார்த்துப்பான்.” என்றுக் கூறி விட்டு அவரும் அங்கிருந்து அகன்றார்.

 

 ” நீ கவலைப்படாதே கௌரி. பார்க்கும் போதே நல்ல பசங்களாத் தான் தெரியுறாங்க. ரூபன் அப்படி ஒன்னும் அனுவை விட்டுட மாட்டான்.” என்று சமாதானம் செய்தார்.

 

அனுவின் ரூமிற்கு சென்ற விஸ்வரூபனோ, கதவில் சாய்ந்து, கையைக் கட்டிக்கொண்டு அனுவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 அவளோ, ஆகாஷிடம் பேசிக் கொண்டிருந்தாள். ” ஆக்ஸ்… எங்க பாட்டி ஓகே சொல்லிட்டாங்க. என்னைக்கு அங்கிள்‍, ஆன்ட்டிக்கு ஃப்ரீ என்று சொல்லு… அன்னைக்கு எங்க வீட்ல மீட் பண்ற மாதிரி பார்த்துக்கலாம்.” என்று சொல்ல.

 

ஆகாஷோ, ” ஆதி தான் அப்செட்டா இருக்கான். அவனால உனக்கு எதுவும் ப்ராப்ளம் வந்துடுச்சோ என்று புலம்பிட்டே இருக்கான்.” என.

 

” அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ முதல்ல ஃபோனை ஆதிக்கிட்ட குடு.” என்றாள் அனன்யா.

 

” ஹேய் ஆதி… நீ எனக்கு நல்லது தான் செய்துருக்க. நானே வீட்ல சொல்லணும்னா, என்னைக்கு சொல்லிருப்பேனோ. தேங்க் யூ சோ மச்…” என்றுக் கூறிக் கொண்டே திரும்ப, அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஸ்வரூபனை பார்த்து விட்டாள்.

 

” சரி… ஆதி… அப்புறம் பேசுறேன். பை.” என்று வைத்தவள், மெல்ல விஸ்வரூபன் அருகே சென்றாள்.

 

” மாம்ஸ்…” என்றாள்.

 

” மேடம் பெரிய மனுஷி ஆகிட்டீங்க. எங்களுடைய அனுமதியெல்லாம் தேவையில்லை.” என.

 

” ஏன் மாமா… நான் காதலிக்க கூடாதா? ஆக்ஸ் என் கிட்ட லவ் சொன்னப்ப கூட,

உங்க கிட்ட கேட்டுட்டு தான் ஓகே சொல்லணும் என்று வந்தேன். பட் நீங்க தான் பிஸி‌. எனக்காக ஐந்து நிமிடம் ஒதுக்கக் கூட முடியலை.” என்றாள் அனன்யா.

 

விஸ்வரூபனுக்கோ குற்ற உணர்ச்சியாக இருந்தது.

 

‘நாம அவளிடம் பேசியிருந்தா, அனு இவ்வளவு பிடிவாதமாக இருந்திருக்க மாட்டாள்.’ என்று நினைத்தவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

 

” அனு… வர்ற சண்டே அவங்களை வீட்டுக்கு வர சொல்லு. நான் அவங்களை பார்த்துட்டு தான், எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுவோம். கொஞ்சம் பொறுமையா இரு.”

 

” அதெல்லாம் நீங்க ஓகே பண்ணிடுவீங்க‌. எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா. அப்புறம் ராதுக் கிட்ட இப்போ எதுவும் சொல்லாதீங்க. ஆகாஷோட வீட்ல இருந்து வந்துட்டு போகட்டும். நான் தான் அவக் கிட்ட சொல்லுவேன்.” என்றுக் கூறி அனு புன்னகைக்க… 

 

” ம் சரி அனு…” என்றவனோ மனதிற்குள், ‘ நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்.’ என்று வேண்டிக் கொண்டான். ஆனால் நடந்ததோ வேறு. யாருடைய சப்போர்ட் இருக்கு என்று அனு உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்காளோ, அவங்களே ஆகாஷின் பெற்றோரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லப் போவதை அறியவில்லை.

 

இதை எதையும் அறியாத பேதைப் பெண் அனன்யா, மறுநாள் உற்சாகமாக கல்லூரிக்கு கிளம்பினாள்.

 

பாட்டியிடம் மட்டும்,” ஈவினிங் லேட்டாகத் தான் வருவேன் ருக்கு.” என்று விட்டு ஓடி விட்டாள்.

 

” வாடி எப்படியும் இங்க தானே வந்தாகணும். என்னையே பேர் சொல்லிக் கூப்பிடுறீயா.” என்று கத்திக் கொண்டிருந்தார்.

 

” எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான்.” என்றபடியே உணவருந்த அமர்ந்தாள் கௌரி.

 

” பாவம் டி குழந்தை. எதுவும் சொல்லாத. நல்லபடியா, அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைச்சுட்டா, இந்த உசுரு நிம்மதியா போய் சேரும்.” என்று கண்கள் கலங்க.

 

” அனு… நல்லபடியா இருப்பா. எதுக்கு இப்போ கண் கலங்குறீங்க. மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்ற அன்னைக்கு என்ன செய்யணும்? டின்னருக்கு தான் வருவாங்க என்று அனு சொன்னா? டிஃபன் வீட்ல செஞ்சுடலாம். ஸ்வீட் வீட்ல செய்யலாமா? இல்லை கடையில் வாங்கலாமா அத்தை.” என்று ரஞ்சிதம்,அவரது மனதை பேத்தியின் விஷேஷத்தில் திசை திருப்பினார்.

 

அவர் நினைத்தது போலவே ருக்குமணி அன்னைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கலானார்.

 

” ரஞ்சிதம்… என்னதான் கடையில வாங்கி செய்தாலும், வீட்டில் செய்வது போல் இருக்காது. அதனால் வீட்டிலே செஞ்சிடலாம். மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும் என்று அனுக்கிட்ட கேட்டு, அதையே மெனுவா செஞ்சுடுவோம். அப்புறம் வீட்டை கிளீன் பண்ண சொல்லணும்.” என்று இருவரும் திட்டம் போட்டுக் கொண்டிருக்க…

 

 கௌரியோ, ‘மாமியாரையும், மருமகளையும் திருத்தவே முடியாது.’ என்று நினைத்துக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.

 

 இவர்கள் இங்கு இப்படி ப்ளான் போட அனுவோ, காலேஜுக்குச் சென்றவள் எப்போது தான் காலேஜ் க்ளாஸ் ஹவர் முடியும் என்று காத்திருந்தாள்.

 

வகுப்புகள் முடியவும், அவனை இழுத்துக் கொண்டு அருகிலுள்ள பார்க்கிற்க்குச் சென்றாள்.

 

” அனு… என்னாச்சு… உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? காலையிலிருந்து நானும் கேட்டுட்டு இருக்கேன். அப்புறமா சொல்றேன் என்று இப்படி மனுஷனைப் படுத்துற.” என்று ஆகாஷ் கேட்க.

 

அவன் தோளில் சாய்ந்து, ” எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆக்ஸ். நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். சண்டே ஈவினிங் ஃப்ரீ தானே. அங்கிள், ஆன்டி, ஆதியை அழைச்சிட்டு வந்துடு.”

 

” நீ எனக்கு ஃபோன் பண்ணி உங்க பாட்டி சம்மதம் சொல்லிட்டாங்கன்னு சொன்னதும் தான் பயம் கொறஞ்சது.

ஒருவேளை உங்க மாமாவுக்கு கட்டி வைத்து விடுவார்களா என்று ஒரே டென்ஷன்.” என.

 

” சேச்சே… எங்க ரெண்டு பேருக்குமே அந்த மாதிரி தாட்ஸ் கிடையாது. அதுவுமில்லாமல் எங்க மாமா சின்சியரா லவ் பண்ணிட்டு இருக்காங்க. என்னோட ஃப்ரெண்ட் ராதிகாவைத் தான் மாம்ஸ் லவ் பண்ணிட்டு இருக்காங்க. ராதிகாவை தெரியும்ல…” என.

 

” ம் நல்லா தெரியும். தினமும் இரண்டு, மூணு தடவையாவது அவங்களைப் பத்தி பேசாமல் இருக்க மாட்டியே.” என்று சொல்லி சிரிக்க…

 

அவளும் சிரித்தாள்.

 

” எங்க வீட்டுக்கு நீங்க வரும்போது, நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி கலர்ல டிரஸ் பண்ணுவோமா… மேட்சிங், மேட்சிங் எல்லாரும் நிச்சயதார்த்தம் கல்யாணத்துல தான் போடுவாங்க. நாம கொஞ்சம் டிஃப்ரெண்டா இருப்போம். ” என்று தனது கலர் கலரான கனவுகளைக் கூறினாள்.

 

அவளது கல்யாணத்தில் நடக்காது என்பதால் முன்கூட்டியே தெரிந்தது போல் செய்தாளோ!

 

நாட்கள் வேகமாக செல்ல, அந்த ஞாயிறு மாலையும் வந்தது.

 

வீட்டிலுள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தனர்.

 

 கௌரியும் அன்று ஓய்வு என்பதால், ரஞ்சிதத்துக்கு கிச்சனில் உதவி செய்து கொண்டிருந்தாள்.

 

வேலையாட்கள் ஒரு பக்கம் உதவ, உணவு எல்லாம் தயாராக இருந்தது. 

 

இவர்கள் காத்திருக்கும் போதே, இன்னோவா க்ரிஸ்டா கார் போர்டிகோவில் வந்து நின்றது.

 

ஆகாஷும், ஆதவனும் முதலில் வீட்டிற்குள் நுழைய… அனுவோ வெட்கத்தில் சிவந்தாள்.

 

இருவரும் நீல கலரில் உடை அணிந்திருந்தனர்.

 

 அவர்கள் பின்னே வந்த இருவரையும் பார்த்து, கௌரி அழுவதைப் போல இருக்க… கிருஷ்ணனும், ரஞ்சிதமும் திகைத்து நின்றனர். விஸ்வரூபன் ஒரு எமர்ஜென்சி என்று வெளியே சென்று இருந்தான்.

 

பாட்டிதான் முதலில் சுதாரித்து, ” எங்கே வர்றீங்க? என் வீட்டுக்கு வர்றதுக்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?” என்று ஆங்காரமாக வினவ.

 

ஆகாஷுன் பெற்றோருக்கு அப்போது தான் அவரையே நியாபகத்திற்கு வந்தது. ஆகாஷும், ஆதவனும் பேச்சிழந்துப் போய், தர்மசங்கடத்துடன் இருக்கும் தாய், தந்தையை பார்த்து யோசனையில் ஆழ்ந்தனர்.

 

 

இன்று… 

 

“ஷ்யூர் ஆதி. கண்டிப்பா உன்னை என் வீட்டுக்கு இன்வைட் பண்றேன்.” என்றாள் ராதிகா.

 

” சரி ராது… ஆனால் மறந்துடாத… புது பொண்ணு வேற… அந்த பிஸில என்ன டீல்ல விட்டுடப் போற.”

 

” அப்படியெல்லாம் ஒன்றும் நான் மறக்க மாட்டேன். இல்லன்னா இன்னைக்கு ஈவினிங்கே என்னோட வா. எங்க வீட்டுக்கு போகலாம்.என்று முடித்துவிட்டாள்.

 

” ஹேய் ராது… வீட்ல பர்மிஷன் கேட்க வேண்டாமா? நீ பாட்டுக்கும் கூப்பிடுறே. நான் சும்மா கிண்டலுக்கு தான் சொன்னேன். இன்னொரு நாள் பார்க்கலாம் .” என்று ஆதவன் அங்கு செல்வதை தவிர்க்க பார்க்க…

 

” அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அது என்னோட வீடும் கூட. என்னோட நீ வா.” என்று அவள் விடாப்பிடியாக காலேஜ் முடியவும் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்.

 

அவள் சென்ற நேரம், ஆதவனுக்கு நல்ல நேரமோ என்னவோ…

 

 வீட்டில் ரஞ்சிதம் மட்டுமே இருந்தாள். 

ஆதவன் உள்ளே நுழைய தயக்கத்துடன் இருக்க… அவனை கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றாள் ராதிகா.

 

உள்ளே ரஞ்சிதம் மட்டும் குழந்தையுடன் இருக்க… 

 

” அத்தை… என்னோட ஃப்ரெண்ட் ஆதி.” என்று அவனை அறிமுகம் செய்ய.

 

ரஞ்சித்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டே, தலையாட்டி விட்டு, ” இதோ பேசிட்டு இருங்க வரேன்.” என்றவர் நுழைத்துக் கொண்டார்.

 

குழந்தையோ, ராதிகாவைப் பார்த்ததும், அவளிடம் தாவி சென்று இருந்தது.

 

ஆதவன், குழந்தையிடம் சென்று விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். குழந்தையோ, சிரித்துக்கொண்டே, அவனிடம் தாவியது.

 

ஆசையாக வாங்கியவன், அழுத்தமாக குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, விளையாடிக் கொண்டிருந்தான்.

 

 அதை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.

 

அதற்குள் ரஞ்சிதம், இருவருக்கும் காஃபி, ஸ்னாக்ஸை வேலையாட்கள் மூலம் குடுத்து விட்டிருந்தார்.

 

முதலில் விருந்தோம்பல் கடமையை செய்தவர், அடுத்து கிருஷ்ணனுக்கு அழைத்திருந்தார். ” என்ன செய்வது?” என்று கேட்பதற்காக … 

 

ஆனால் அவரோ எடுக்கவில்லை, என்றதும் அவரது பதட்டம் அதிகமானது.

 

 ஆனால் அவரைக் காப்பது போல் அந்த நேரம் விஸ்வரூபன் வந்தான்.

 

 அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. அவனது வீட்டு ஹாலில் உட்கார்ந்து காஃபிக் குடித்துக் கொண்டே, அவந்திக்குட்டியை கொஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்து, உடம்பெல்லாம் தீப்பிடித்தாற்போல இருந்தது.

 

” மா… ” என்று வேகமாக கத்த…

 

 பதறியடித்துக் கொண்டு வந்தார் ரஞ்சிதம். 

 

” முதல்ல குழந்தையை வாங்கிட்டு போங்க.” என்று கர்ஜிக்க…

 

ரஞ்சிதமும் நடுக்கத்துடன் குழந்தையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.

 

 ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வரேன் என்று மாடிக்குச் சென்றிருந்த ராதிகா, விஸ்வரூபனது குரலில் வேகமாக இறங்கி வந்தாள்.

 

” என்னாச்சு…” என்று பதறிய அவளை அலட்சியம் செய்து விட்டு, ஆதவனைப் பார்த்து, ” கெட் லாஸ்ட்.” என்றான்.

 

” விஷ்வா ஸ்டாப் தி நான்ஸென்ஸ். ஹீ இஸ் மை கெஸ்ட்.” என்றாள் ராதிகா.

 

ஆதவனோ, குழந்தையை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தான். அதான் பலமுறை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லியிருந்தும், திரும்ப அந்த வீட்டிற்கு வந்திருந்தான்.

 

இப்போதோ மனதிற்குள் ஒரு சின்ன நிம்மதி. ராதிகா அவனுக்கு ஆதரவாக பேசியதைக் கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

 

கோபத்தை கட்டுப்படுத்த அமைதியாக கண்மூடி நின்று கொண்டிருந்தான் விஸ்வரூபன். ஆனால் ராதிகா விடாமல், கேள்விக் கேட்க.

 

” அந்த ஆதவன் என் வீட்டுக்குள்ள வரக்கூடாது அவ்வளவு தான்.” என்றவன் வேகமாக வெளியே சென்று விட்டான்.

 

‘ எனக்கு இந்த வீட்டில் எந்த உரிமையும் இல்லையா.’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். யாரிடமும் பேச பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று விட்டாள்‌.

 

 இரவு உணவிற்கு வந்தப் போது, எல்லோருடைய முகமும் ஒரு மாதிரியாக இருந்தது. அதைப் பார்த்த ராதிகாவிற்கு குழப்பம். 

 

‘ஆதி அப்படி என்ன செய்தான்? அவனுக்கும், இந்த குடும்பத்திற்கும் என்ன பிரச்சினை? ஒன்றும் புரியலையே! ‘ என்று நினைத்துக் கொண்டே உணவருந்தினாள்.

 

கிருஷ்ணன், ” ராதிகா சாப்பிட்டதும் கார்டனுக்கு வா. உன்னிடம் கொஞ்ச பேசணும்.” என்றார்.

 

“சரி.” என்று தலையாட்டியவள், அவர் பின்னே சென்றாள்.

 

” ஆதவனோடு பேச்சு வச்சுக்காத ராதிகா. நம்மக் குடும்பத்தோட, அவன் எந்தவித தொடர்பு வச்சுக்கிறதை நான் விரும்பலை.” என…

 

” ஏன் அங்கிள்? ஆதி மேல கோபமா இருக்கீங்க. ஒரு வேளை, அந்த வீடியோ அவன் போட்டதா நினைக்கிறீங்களா? இல்லையே… ஃபர்ஸ்ட் வந்த வீடியோல ஆதியை, விஷ்வா அடிக்கிற மாதிரி தானே இருந்தது. அப்போ ஏற்கனவே இரண்டு பேருக்குள்ள பகையா? அப்போ ஆதி என்னை யூஸ் பண்ணிக்கிட்டானா? அந்த வீடியோஸை அவன் தான் போட்டானா… ஐயோ! தலையே வெடிச்சுடும் போல இருக்கே.” என்று புலம்ப.

 

” காம் டவுன் ராதிகா. ஆதவன் அந்த வீடியோவை எல்லாம் போடலை. அது என் மேல் உள்ள கோபத்துல, ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணுற ட்ரைனிங் டாக்டர் பண்ண வேலை.

 

அங்கே வேலைப் பார்க்குற நர்ஸை, லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணான். அதுக்காக வார்ன் பண்ணேன். 

 

அந்த கோபத்துல என் பையனோட கேரக்டரை டேமேஜ் பண்ண நினைத்தான்.

 

ரூபன் வார்ன் பண்ணி விட்டுட்டான். இனிமேல் அவனால எந்த தொந்தரவும் வராது. ஆதவன் விஷயம், ரூப

ன் தான் சொல்லணும். சரி மா, நீ போய் படு.” என்றார்.

 

உள்ளே வந்தவளுக்கோ உறக்கம் தான் வருவேனா என்றிருந்தது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!