உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -7

5
(6)

அத்தியாயம் – 7

அன்று…

அனன்யா ஆசைப்பட்டபடி ஹாஸ்டலில் சேர்த்து விட்டிருந்தான் விஸ்வரூபன். 

விஸ்வரூபன் பி.ஜி ஃபைனல் இயரில் இருப்பதால், அவனால் உடனடியாக பிலிப்பைன்ஸ்க்கு திரும்ப செல்ல முடியாமல் போய் விட்டது. அதனால் அவனது நண்பனின் மூலமாகவே ஹாஸ்டலை பற்றி விசாரித்து, அவளை சேர்த்து விட்டான்.

அனன்யா ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஹாஸ்டலுக்கு ஷிப்ட் ஆக… ஆனால் நடந்ததோ வேறு. இருந்தாலும் அதுவும் செம்மையாக தான் இருந்தது. ஹாஸ்டலில் அவளது நட்பு வட்டம் பெருகியது.

ராதிகாவுடன் டைம் ஸ்பென்ட் பண்ணலாம் என்று நினைத்திருந்தாள். அது மட்டும் தான் நடக்கவில்லை.

காலேஜ் டைம் முடிந்த பிறகு ராதிகா பார்ட் டைம் ஜாப்க்கு சென்று விடுவாள். 

பொதுவாக பிலிப்பைன்ஸில் ஸ்டூடண்ட் பார்ட் டைம் ஜாப் செய்ய அலோவுட் கிடையாது. அப்படியே வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான வொர்க் பர்மிட் வாங்க வேண்டும். ராதிகா அதை வாங்கியிருந்தாள். 

அதனால் காலேஜ் முடியவும், வேலைக்கு சென்று விட்டு இரவு தான் திரும்புவாள். 

ஹாஸ்டலில் இருந்த அனன்யாவுக்கு பயங்கரமாக போரடிக்க, அடுத்த அறையில் இருந்தவர்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டாள். நட்போடு சேர்த்து அவர்களது மொழியையும் கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று லூட்டி அடித்தாள். தப்பும், தவறுமாக இவள் பேசும் அழகில் எல்லோரும் தெரித்து ஓட… இவளோ விடாமல் அவர்களைப் படுத்தி எடுத்து, தெலுங்கு, கன்னடம் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டாள்.

தான் கற்றவற்றை இரவு வேலை முடித்து வரும் ராதிகாவிடம் கூறி, அவளது முகத்தில் புன்னகையை வரவழைத்தாள்.

இப்படி அனன்யா, ஹாஸ்டல் வாசம் வந்து ஒரு வாரம் ஆகியிருக்க, நாளை வீக்எண்ட். 

அவள் இந்த வாரம் எப்படியாவது, அவுட்டிங் போகணும் என்று ப்ளான் பண்ணிக் கொண்டு ராதிகாவிற்காக காத்திருந்தாள்.

வேலை முடிந்து களைத்துப் போய் வந்த, ராதிகாவைப் பார்த்தவள்‍, ” சாப்பிட்டியா ராது?” என வினவ.

” ம். சாப்பிட்டேன் அனு. நான் போய் ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வரேன்.”என்றவள் இரவு உடை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

 ” என்ன அனு… இன்னைக்கு யாரும் சிக்கலையா? எங்கேயும் போகாமல் இப்படி உட்கார்ந்து இருக்க?”

” அதெல்லாம் எனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. உன் கிட்ட பேசணும் ராது. அதான் உனக்காக வெயிட்டிங்.” 

” ஏய் அனு. இன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல செம ரஷ். ரொம்ப டயர்டா இருக்கேன். நாளைக்கு பேசலாமா. காலையில் ஃப்ரீயா தான் இருப்பேன். ஈவினிங் தான் வேலை.” என்றவள் தன்னுடைய கட்டிலில் சரிய…

“ராது… தூங்கிடாத. ரொம்ப போர்ரிங்கா இருக்கு. நாளைக்கு அவுட்டிங் போகலாம் வர்றீயா. இங்கே சுத்திப் பார்க்க நிறைய ப்ளேஸ் இருக்கு. ப்ளீஸ் ராது.”

” ஈவினிங்குள்ள வந்துடுலாமா அனு. நான் ரெஸ்டாரன்ட்டுக்கு போகணும்.” என்று யோசனையுடன் வினவ.

” ராது… ஒரு நாள் லீவு போடேன் டி.. ஹாஃப் டேல ஒன்னும் பார்க்க முடியாது. என்ன கிண்டல் பண்றீயா? நான் வேண்டும்னா அன்னைக்குள்ள பணத்தை தரேன்” என எப்போதும் போல எதையும் யோசிக்காமல் வார்த்தைகளை விட்டிருக்க.

நொடிப்பொழுதில் முகம் மாற… படுத்திருந்த ராதிகா எழுந்து, அவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே, ” உனக்கு இன்னும் என்னை பற்றி தெரியவில்லை. நான் ஒன்னும் தாங்க முடியாத பணக் கஷ்டத்தில் இல்லை‌. ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றால், சிரமப்படுவதற்கு. என்னுடைய பெற்றோருக்கு சிரமம் கொடுக்க கூடாது என்பதற்காகத் தான் நான் வேலைக்கு போகிறேன். இப்போ எனக்கு பணம் வேண்டும் என்று மேசேஜ் செய்தாக் கூட போதும். என்னுடைய அக்கவுண்ட்ல ஆட்டோமேட்டிக்கா பணம் வந்திருக்கும். இந்த மாதிரி என்னிடம் பேசாதே.” என்று விட்டு ராதிகா உறங்க முயல…

அதன் பிறகு அனன்யாவால் உறங்க முடியவில்லை. அவள் வேண்டுமென்று சொல்லவில்லை. அவளை எப்படியாவது வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் வார்த்தைகளை விட்டிருந்தாள்.

விடுமுறை தினத்தன்று தாமதமாக எழும் அனன்யா, அன்று நேரத்தோடு எழுந்து விட்டாள். 

ராதிகாவோ நேற்று நடந்ததை நினைவில் கொள்ளாமல், தன் போக்கில் எழுந்து விடுமுறை நாளில் செய்வதற்கான வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

அனன்யா, தான் அவள் பின்னேயே சென்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். “சாரி… ராது… நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கலை டி. உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும் தான் நினைச்சேன். வேண்டும்னா நானும் உன்னோட வேலைக்கு வரேன்.” என்று கண்கள் கலங்கக் கூற…

அவள் கூறியதைக் கேட்ட ராதிகா, அவளைப் பார்த்து முறைத்தாள். உள்ளுக்குள்ளோ, ‘ என்ன பொண்ணு இவ. என் மேல இப்படி க்ரேஸா இருக்கிறாளே.’ என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஒன்றும் பேசாமல் தன்னை முறைக்கும் ராதிகாவைப் பார்த்த அனு, ” ஏதாவது பேசு ராது.” என.

“என்ன பேச சொல்ற. நீ தெரிஞ்சுதா பேசுறீயா? இல்ல தெரியாம பேசுறீயா? ஒண்ணுமே புரியல. இதுல என்னோட வேலைக்கு வேற வரேன் என்று சொல்ற… இங்கே வேலைக்கு போகணும்னா, நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு. முதல்ல அதெல்லாம் இருக்கட்டும் ஒரு பக்கம்… உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? ஏற்கனவே என்னோட வந்து ஹாஸ்டல்ல தங்குவதற்கு, உன் வீட்டிலுள்ளவர்களுக்கு பிடிக்கலை.இதுல என்னோட வேலைக்கு வரேன் என்று சொன்னா அவ்வளவு தான்.” என்று அவளைப் பார்த்துக் கொண்டே வினவ…

” அதுவும் சரி தான்.” என்ற அனன்யா கட்டிலில் படுத்துக் கொண்டு ரூஃபை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பாவனையில் சிரிப்பு வர, ” ஏன் அனு அங்கே என்ன பார்க்குற? டாப் ப்ளோர் உள்ளவங்க தெரியராங்களா? ஆனால் என் கண்ணுக்கு தெரியலை.”

“ப்ச்… உன்னோட அவுட்டிங் போகலாம் என்று ஆசையா இருந்தேன். இப்ப எனக்கு ரொம்ப டிசஃப்பாயிண்டா இருக்கு.” என்ற அனன்யாவைப் பார்த்த ராதிகாவிற்கு வேறோரு உருவம் மனதிற்குள் வந்துப் போனது. உடனே அவளது கவலையைப் போக்க வேண்டும் என்று தோன்ற… ராதிகா அவளை சமாதானம் செய்தாள்.

” ஓகே அனு … பேபியாட்டாம் முகத்தை தூக்கி வச்சிக்காதே. உன்னோட பர்த்டே அன்னைக்கு வேண்டும்னா வரேன். ” என.

” ம்கூம். என் பர்த்டேக்கு சிக்ஸ் மன்த்ஸ் இருக்கு. அப்புறம் என்னோட பர்த்டேக்கு எங்க ஹோல் குடும்பமே வந்து இறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.” என்றுக் கூறி உதட்டைப் பிதுக்கியவள், திடீரென முகம் மலர, ” ராது இப்படி பண்ணினா என்ன? உன் பிறந்த நாளுக்கு அவுட்டிங் போகலாம்.” என.

” அது சரி வராது.”

” ஏன் ராது சரி வராது? அப்போ என் மேல உனக்கு இன்னும் கோபம் போகலையா?” என கண்கள் கலங்க வினவ.

” லூசா நீ… உடனே கண்ணுல டேமை திறந்திட்ட… முதல்ல கண்ணைத் துடை. ப்ரேக் பாஸ்ட் டைம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. வா முதல்ல சாப்பிட்டு வந்துடுலாம் அப்புறமா இதைப் பத்தி பேசலாம்.” என்று அந்தப் பேச்சிற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தவள், கைப்பிடியாக அவளை இழுத்துக் கொண்டு மெஸ்ஸிற்கு சென்றாள். இவர்களுடை அறை தேர்ட் ப்ளோர். மெஸ் இவங்க பில்டிங்குக்கு ஆஃப்போஸிட் பில்டிங். 

ஒரு வழியாக இருவரும் சென்று உணவருந்தி விட்டு வந்தனர்.அறைக்கு வந்தவுடன் மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள் அனன்யா.

” ஏன் அவுட்டிங் போகக்கூடாது ராது?”

” அனு… அது வந்து நம்ம அன்னைக்கு அவுட்டிங் போனா, ஒன்று நம்ம இரண்டு பேரையும், எல்லாரும் சந்தேகமாக பார்ப்பாங்க. இல்லை அங்கே இருக்கவங்களை நம்மலால பார்க்க முடியாது. அதான் சொல்றேன்.” என.

” புரியற மாதிரி சொல்லு ராது.”

” என்னுடைய பிறந்தநாள் பிப்ரவரி ஃபோர்டின்.”

” என்னது பிப்ரவரி ஃபோர்டினா. சூப்பர்… செம்ம போ. இன்னும் நான்கு நாள் தானா இருக்கு உன் பர்த்டேக்கு. சூப்பர். ஆனால் வொர்க்கிங் டேயில் வருது. அவுட்டிங்கெல்லாம் போக முடியாது. நீ சொல்றதும் சரி தான்.” என்று அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

அதுக்கு பிறகு, அவள் வேலைக்கு கிளம்பும் வரை, அது இது என்று உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

ராதிகா அந்தப் பக்கம் நகர்ந்ததும், அனு அவளது அடுத்த அறைத் தோழிகளுடன் வெளியே கிளம்பி விட்டாள்.

அவளுக்கு உடனடியாக ஷாப்பிங் செய்வதற்கு அவசியம் இருந்தது. சண்டேவை விட்டால், அப்புறம் ரிலாக்ஸாக ஷாப்பிங் பண்ண முடியாது.

ராதிகாவின் பிறந்தநாளுக்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருந்தது. அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள்.

அதற்கான பர்ச்சேஸிற்கு அருகிலிருக்கும் மாலிருக்கு, தோழிகளுடன் சென்று வேண்டியதெல்லாம் வாங்கி வந்து, பக்கத்து அறைத்தோழியிடமே வைத்திருக்க சொல்லி விட்டாள். கேக் வாங்கும் பொறுப்பையும், அவளிடமே கொடுத்து இருந்தாள்‌. 

மூன்று நாட்கள் கழித்து இரவு, ராதிகா நேரத்தோடு தூங்கியதும், பக்கத்து அறையிலிருந்த திங்ஸை எடுத்து வந்து, ஃப்ரெண்ட்ஸோடு சேர்த்து அறையை டெகெரேஷன் செய்தாள் அனன்யா.

அனைவரும் சத்தமிடாமல் சைகையில் பேசிக் கொண்டு பலூனை ஊதி ஆங்காங்கே தொங்க விட்டனர். ரூம் டெக்கரேஷனுக்காக வாங்கியவற்றை வைத்து அறையை அழகுப் படுத்தியவர்கள், கேக்கை எடுத்து வைத்து மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டு லைட் ஆஃப் செய்தனர்.

அனன்யா, ராதிகாவை எழுப்ப… அயர்ந்து உறங்கியிருந்தவள் பதறி எழுந்தாள்.

அவளைப் சுற்றி இருந்தவர்கள், ” ஹாப்பி பர்த்டே டூ யூ.” என்று பாட்டு பாடியபடியே, அவர்கள் வாங்கி வைத்து இருந்த ஸ்பேரையை அடிக்க… அங்கு அவள் மேல் நுரை பொங்கியது.

  இன்ப அதிர்ச்சியில் அவளால் ஒன்றும் பேச முடியவில்லை.

” வா… முதல்ல கேக் கட் பண்ணலாம்.” என்று ராதிகாவை அழைத்துக் கொண்டு சென்றாள் அனன்யா.

 கேக்கை வெட்டி ராதிகா, அனன்யாவுக்கு ஊட்டினாள்‌. அதற்குப் பிறகு அன்று இரவு யாரும் உறங்கவே இல்லை‌. பர்த்டே பேபிக்கு கிஃப்ட் கொடுத்து விட்டு, அவளுக்கு சில டாஸ்க் கொடுத்தனர்.

அவர்கள் சொன்னதைக் கேட்ட ராதிகாவோ, ” ம்கூம்… என்னால டான்ஸ்ஸெல்லாம் ஆட முடியாது. நான் வேண்டும்னா பாடவா.” என.

” நீ வேண்டும்ன்னா பாட்டு பாடிக்கிட்டே, டான்ஸ் ஆடு. எங்களுக்கு நோ ப்ராப்ளம். இங்கே இது தான் ரூல்ஸ். பர்த்டே பேபி நாங்க கொடுக்குற டாஸ்க் எல்லாத்தையும் செய்யணும். டாட். ” என்று எல்லோரும் ஆர்ப்பாட்டம் செய்…

ராதிகா அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தாள். ராதிகா ஆடும் போதே, எல்லோரும் சேர்ந்து ஆட்டம் போட, நல்ல ஜாலியாக அன்றைய பொழுது போனது. 

 மறுநாள் கல்லூரிக்கு சென்று, அங்கும் லஞ்ச் ப்ரேக்கில் கேக் வெட்ட, கொண்டாட்டம் தொடர்ந்தது. அனன்யாவின் அன்பைப் பார்த்து, ராதிகாவின் கண்ணில் ஒரு துளி நீர் துளிர்த்தது.

இன்று…

கிருஷ்ணன் வகுப்பு முடிந்து போகும் போதும், இவர்கள் இருவரையும் யோசனையுடனே பார்த்து விட்டு சென்றார்.

அடுத்து, அடுத்து வகுப்புகள் இருக்க… ராதிகாவிற்கு ஆதவனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு வழியாக லஞ்ச் ப்ரேக்கில் கேண்டீனுக்கு அவனை அழைத்துக் கொண்டு சென்றவள், வளவளவென்று பேசினாள்.

திடீரென்று நினைவு வந்தவளாய், ” ஆதி… உன்னோட ஃபேஸ்புக் ஐடியை சொல்லு. உனக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் தரேன்.” என்றுக் கூற…

அவனும் தனது ஐடி நேமை சொன்னான்.

ராதிகா சாப்பிட்டுக் கொண்டே, அவனுக்கு ரெக்வெஸ்ட் அனுப்ப…

அந்த ஐடி நேமைப் பார்த்தவன் தன்னை மீறி, அடக்கமாட்டாமல் நகைத்தான்.

அவனது சிரிப்பை ரசித்தவள், பொய்யாக முறைத்தாள்.

 ஹலோ… எதுக்கு இப்படி ஒரு சிரிப்பு… அப்படி ஒன்னும் காமெடியான பேரில்லையே. கஷ்டப்பட்டு யோசிச்சு‍, நான் ஒரு ஃபேக் ஐடி ஓபன் பண்ணியிருக்கேன்…” என.

” ஓ… இது தான் உன் ஃபேக் ஐடியா. இது வேறயா. நான் சிரிச்சதுக்கு காரணம். நம்ம ப்ரொபஸர் ஞாபகம் வந்திடுச்சு. அதான் சிரிச்சுட்டேன். பட் கிருஷ்ணனின் காதலி பெயர் சூப்பர். உண்மையா சொல்லு… சார உனக்கு ஏற்கனவே தெரியுமா?”

“இல்லை. ஆனால் எங்கோ பார்த்த மாதிரியே இருக்கு ஆதி… ஏதோ கோ இன்ஸிடென்ட்.”

“ஆமாம் உன் பேருல ஏன் ஓபன் பண்ணலை. அப்புறம் இதை பேக் ஐடி சொன்னா யாரும் நம்ப மாட்டார்கள். கிருஷ்ணனின் காதலி, ராதா ஆர் ராதிகா தானே.” என்றவன் சிரிக்க.

அவனது கேள்விக்கு இயல்பு போல பதிலளித்தாள்.” ஆதி… என் பேருல இருந்த அந்த ஐடியை க்ளோஸ் பண்ணிட்டேன்.” என்றவள் யோசனையில் ஆழ்ந்தாள். ‘ அப்போ அவனுக்கு நான் யாருன்னு தெரிந்திருக்குமோ . ‘ என்று குழப்பத்தில் இருக்க.

“ராதிகா… ஏன் டல்லாயிட்டா‌?” என ஆதவன் வினவ.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆதி. சின்ன யோசனை. இன்னைக்கு தான் நாம ஃப்ரெண்டா ஆனோம். சோ இன்னிக்கு நாம சாப்பிட்டதற்கான பில்லை நீயேப் பே பண்ணிடு.” என்று சொல்ல. 

அதற்கு மெலிதாக புன்னகைத்தான் ஆதவன். உணவு முன்பே வந்திருக்க… அதை உள்ளே தள்ளிக் கொண்டு, எப்ஃபியில் நுழைந்திருந்தாள். 

அதற்குள் அவனுடைய பழைய மெசேஜ்களுக்கெல்லாம் லைக் போட்டுக் கொண்டிருந்தவள், அப்பொழுது தான் அன்று அவனின் பிறந்தநாள் என்பதை கவனித்தாள்.

” ஹே ஆதி… உனக்கு இன்னைக்கு பிறந்தநாளா ?” என்று வினவ.

“ஆமாம்.” என்று தலையசைத்தவன், அவள் இன்னும் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து, ” நீ மெதுவா சாப்பிட்டு வா. நான் பில் பே பண்ணிட்டு கிளம்பறேன்.” என்று விட்டு கிளம்ப…

” ஆதி‌… வெயிட்… நானும் வரேன்.” என்றவள், உணவை அவசர அவசரமாக விழுங்கி விட்டு ஆதவனைத் தொடர்ந்தாள். அதற்குள் அவன் கேண்டீனிலிருந்து வெளியே சென்றுக் கொண்டிருந்தான்.

” ஆதி…”என்று கத்திக் கொண்டே ஓடியவள், க்ரவுண்டில் பிடித்து விட்டாள். 

” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி.” என்று மூச்சு வாங்கிக் கொண்டே கூற…

“தேங்க்ஸ் ராதிகா.” என்றவனின் குரலில் சுரத்தே இல்லாமல் இருந்தது.

” ஏன் இவ்ளோ டல்லா இருக்க ஆதி. உன்னையப் பார்க்கும் போது, என்னைப் பார்ப்பது போலிருக்கிறது.” என்றவள், ஆனால் ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு தேவதை என் வாழ்க்கையில் வந்து வாழ்க்கையை வண்ணமயமாக்கினாத் தெரியுமா? பிறந்தநாளை அப்படிக் கொண்டாடுவா?” என்றவள், ‘ அதெல்லாம் போனவருடத்திற்கு, முந்தின வருடத்தத்தோடு முடிந்து விட்டது.’ என்பதை மட்டும் மனதிற்குள்ளே கூறிக் கொண்டாள்.

” இன்னைக்கு ஈவினிங் என்னோட ஹோட்டலுக்கு வர்ற… என்னோட ட்ரீட்.” என்றாள் ராதிகா.

” ப்ச்‌. ராதிகா… இப்போ பர்த்டே செலிபிரேட் பண்ற மூட்ல இல்லை. ப்ளீஸ் லீவ் இட்.” என்றான் ஆதவன்.

” வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் ஆதி. உன்னால முடிஞ்சா என் கிட்ட ஷேர் பண்ணு. இல்லன்னா பரவால்ல. நான் சொல்றதை கேளு.ஏழு வருஷத்துக்கு முன்னாடி நானும் இப்படி தான் இருந்தேன். பிறந்தநாள் விழா கொண்டாடுறதெல்லாம் பெரிசா இன்ட்ரெஸ்ட் காட்ட மாட்டேன். ஆனா அதுக்கப்புறம் எனக்கு ஒரு ஃப்ரெண்ட் வந்தா தேவதை மாதிரி. எல்லாத்தையும் தலைகீழா மாத்தி அஞ்சு வருஷம் அந்த அளவுக்கு என்ஜாய் பண்ணோம். அதுக்கப்புறம் ஒரு வருஷம் கூட ஒன்னும் தெரியல. இப்போ பழையபடி என் வாழ்க்கை ஆரம்பித்தப் புள்ளிக்கே போய் விட்டது.

நான் அதைப்பற்றி எல்லாம் மறந்துட்டு, இப்போ நான் சிரிச்சிட்டு இல்லையா? கவலைய நினைச்சுக்கிட்டே இருந்தா நமக்கு சரி வராது.

கப்பல் கடலில் போகும் போது, அந்த கடல் இருக்குற தண்ணி எல்லாத்தையும் எடுத்துக் கொண்டால், அந்த கப்பல் மூழ்கிவிடும். அது தனக்குள்ள அந்த தண்ணீரை உள்வாங்காமல் இருக்கிறதால தான் கப்பலால் சமாளிக்க முடியுது. அதே மாதிரி தான் நம்மளோட கவலையெல்லாம் நம்ம மனசுல ஏத்திக்கக் கூடாது. கவலை நம் வாழ்க்கையில் இருந்துக் கொண்டே தான் இருக்கும். நாம் அதை ஒதுக்கிட்டு வாழ்க்கையில் முன்னேறனும்.” என.

” நானும் என் கவலைகளை மறக்கணும் என்று தான் நினைக்கிறேன். பட் முடியலை. சின்ன வயசில் இருந்தே பெத்தவங்க இருந்தும், அன்புக்கு ஏங்குவோம். ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு தேவதை வந்து எங்க வாழ்க்கையை நீ சொன்ன மாதிரி மாத்தினா. ஆனால் அது கானல் நீர் ஆகிப் போனது. ” என்று சொன்னவனின் கண்கள் கலங்கியது. 

இருவரும் தேவதை என பேசியது ஒருவரைத் தான் என்று அப்பொழுது அவர்களுக்குத் தெரியவில்லை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!