உயிர் போல காப்பேன்-8

4.8
(29)

அத்தியாயம்-8
பின் தன்னை நிதானித்த ஆஸ்வதி “ம்ம்.. ஆதி.. ட்ரேஸ் மாத்தலாமா. இது வைட்டா இருக்கு”என்றாள் தான் நீளமாக போட்டிருக்கும் லேகங்காவின் பாவாடையை தூக்கிக்கொண்டு முகத்தை சுருக்கியவாறு சொன்னாள்
“ஹான். ஹான். மாத்தலாம்”என்று சர சர வென தான் அணிந்திருந்த பேண்டை கழட்ட செய்தான்.. அதை பார்த்து பதறி “அய்யோ ஆதி என்ன செய்ற”என்றாள் அவனை தடுத்தவாறு முகத்தை திருப்பிக்கொண்டு…திணறலாக……
உடனே அவன் அவளின் இந்த திணறலை மனதில் ரசித்துக்கொண்டே “நீதான ஏஞ்சல் ட்ரேஸ் வைட்டா இருக்கு மாத்தலாம் சொன்ன அதான் கழட்டுற”என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு..
அதில் தன் தலையிலே கொட்டிக்கொண்டு…எதையும் தெளிவா தான் இனி ஆதியிடம் பேசவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டே..“ஈஈஈ… சாரி ஆதி “என்றாள்.. அவளின் இந்த அசட்டு வழிசலும் கூட அவனுக்கு அவ்வளவு அழகாக தெரிந்தது..மனதில் “மை கேண்டி பேபி.”என்று கொஞ்சிக்கொண்டான்..ஆஸ்வதி எதோ ஆதியிடம் பேச வர….. அதற்குள் அவள் அறை கதவு தட்டப்படவும்…”நா போய் பாக்குறேன்…”என்று போய் கதவை திறந்து பார்த்தாள். அங்கே விதுன் நின்றுக்கொண்டு இருந்தான்.
“சாரி மேடம் டிஸ்டர்ப் பன்னுனதுக்கு. சாருக்கு ட்ரெஸ் மாத்த வந்தேன்”என்றான் விதுன்.
உடனே அவள் அவனை உள்ளே விட்டாள்.. உள்ளே வந்ததும்.. தன் கையை இடுப்பில் வைத்துக்கொண்டு விதுனை முறைத்துக்கொண்டு இருந்தாள்.. அதை பார்த்த விதுன். எதோ.. தப்பு செய்துவிட்டமோ என்று அவளை பார்த்து “என்னாச்சி மேடம்”என்றான்
அதில் இன்னும் கடுப்பாகி முறைத்தாள்.
பின் அவளே “சாரா. இவர்.. உங்களுக்கு யாரு இவரு. தாத்தா இப்போதான உங்கள ஆதியொட ப்ரண்டுனு சொன்னாங்க….”என்றாள் ஆதித்தை காட்டி.
“என் ப்ரண்டுதான் மேடம்..”என்றான்
“அப்போ அவர ஏன் சார்னு கூப்டிங்க… உலகத்துலையே இங்க தான் ப்ரண்ட சார்னு கூப்டு நா பாக்குறேன்”என்றாள் ஆஸ்வதி.
“அது வெளில அப்டி கூப்டலாம் ஆனா இங்க வீட்டுக்குள்ள……”என்று இழுத்தான்…விதுன்
“இந்த வீட்டுல யாருக்கு பிடிக்கலைனாலும் ஏன் எனக்கே பிடிக்கலைனாலும் உங்க ப்ரண்ஸிப்ப நீங்க விடக்கூடாது. ஆமா எனக்கு ஏன் பிடிக்கனும். அவரு உங்க ப்ரண்டு தானே அப்போ அவர பேரு சொல்லிதானே கூப்ரனும்…இதுல என் விருப்பம் எங்க இருந்து வந்துச்சி…”என்றாள்
அவன் விதுன் எதும் பேசாமல் நிற்க….. ஆஸ்வதிக்கு புரிந்துவிட்டது.. இங்கு யாரோ தான் ஆதியை அவன் இவன் என்று பேசியதற்கு எதும் சொல்லிருப்பார்கள் என்று உணர்ந்தவள்.
“யாரு என்ன சொன்னாலும் அவர் உங்களுக்கு ப்ரண்டுதான் நாளைக்கு நானே அப்டி கூப்டாதீங்கனு சொன்னாலும் நீங்க இதுல இருந்து மாறக்கூடாது.”என்றாள் கண்டிப்புடன். அவனும் சரி என்று தலை ஆட்ட….
“ம்ம். ஆதி..”என்றாள் தன் கணவனை. அதுவரை விதுன் உள்ளே வந்ததில் இருந்து அவளின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தவன். தன்னவளின் பேச்சையே ரசித்துக்கொண்டிருந்தவன் ஆஸ்வதி அவன் பக்கம் திரும்பும்போது முகத்தை மாற்றிக்கொண்டான்..
“ம்ம்.. என்ன ஏஞ்சல்” என்று ஓடி வந்தான் ஆதி. அவர்கள் பேசுவதை கேட்காமல் அது வரை தன் காரினை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தவன் போல காரினை கையோடு எடுத்துவந்து…
“ஆமா என்ன மட்டும் ப்ரண்டா ஏத்துக்கிட்டிங்களே இவங்களுக்கு ப்ரண்டே இல்லையாம் இவங்க தானே நா வரதுக்கு முன்னாடி உங்கள நல்லபடியா பார்த்துக்கிட்டது.. அப்போ இவங்கள நாம ப்ரண்டா ஏத்துக்கலமா”என்றாள் ஆஸ்வதி
“ஐய்யோ பாவம் உனக்கு ப்ரண்டே இல்லையா,.”என்றான் விதுனை பாவமாக பார்த்தவாரு. விதுனும் இல்லை என்று தலை ஆட்ட….”அப்போ சரி நாம இனி ப்ரண்டு..”என்று அவனை நோக்கி கையை நீட்டினான் ஆதி..
அதில் ஒரு நிமிடம் விதுன் கண்கள் கலங்க நின்றிருந்தான். அதனை ஆதி தன் ஆழமான பார்வையால் பார்த்திருந்தான்.விதுனின் நிலை ஆதிக்கு புரியதான் செய்தது ஆனால் ஆதி தனக்கு நடந்த கொடூரத்தை நினைத்தால் வாழ்க்கை அவனுக்கு அவ்வளவு இழப்பை மட்டும் தான் தந்திருக்கிறது.அதற்கு எல்லாம் அவன் பதிலடி கொடுக்கதான் இப்போது அவன் இந்த நிலையில் இருக்கிறான் அவனது முகம் ஒரு நிமிடம் வெறியில் சிவந்து போனது.. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை ஒன்னும் செய்யாமல் விட அவன் ஒன்றும் புத்தர் இல்லையே அவனும் துக்கமும். வேதனையும் முழுதாக அனுபவிக்கும் மனிதன் தானே.. தனக்காக தன்னை மட்டும் நேசித்த ஒரு உயிரை அல்லவா அவன் காவு கொடுத்துவிட்டான். அதை நினைக்க நினைக்க இப்போதே அதற்கு காரணமானவர்களை கொல்லும் அளவிற்கு வெறி வந்தது அவனுக்கு.…ஆனால். ஆனால் எதனால் இந்த கால தாமதம் என்று அவனிற்கு தெரியவில்லையே. இப்படியாக ஆதி மனதில் நினைத்துக்கொண்டு சிலையாக நிற்க…
“என்னாச்சி ஆதி.”என்று ஆதியின் தோளை ஆஸ்வதி தொடவும் தான் அவனுக்கு நினைவே வந்தது அதுவரை அவன் கை விதுனிடம் தான் இருந்தது ஆதி விதுனின் முகம் காண அவன் முகமோ. பளீர் என்று இருந்தது…
பின் இருக்காதா. எவ்வளவு நாள் கழித்து தன் நண்பன் உரிமையுடன் கை நீட்டுகிறான்.. அதை பார்த்து அவன் தலையை ஆட்டிக்கொண்டே ஆதிக்கை இறுக்கமாக கட்டிக்கொண்டான்..அவனின் இந்த இறுகிய அணைப்பு அதும் நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த அணைப்பு ஆதிக்கும் தேவை போல தான் இருந்தது.. விதுன் கண்கள் கலங்கிவிட்டது..பின் இருக்காதா. கிட்டதட்ட 20 வருடத்திற்கு மேலான நட்பாகிற்றே..
அதை பார்த்து ஆஸ்வதிக்குமே கண்ணில் கண்ணீர் துளிர்ந்தது. ஏனென்றால் ஆஸ்வதி விதுவை முதல் முறை பார்த்ததில் இருந்தே அவன் கண்கள் ஆதித்தை ஏக்கமாக தான் பார்த்தது.. அதனை உணர்ந்து தான் ஆஸ்வதி அப்படி செய்தாள்…
“சூப்பர் அண்ணி..”என்று ரூமின் வாசலில் சத்தம் கேட்டு திரும்பினர் அங்கு அனுஷா கண் கலங்க நின்றுக்கொண்டு இருந்தாள். அவளுக்கு தான் தெரியுமே தன் ஆதி அண்ணனின் விதுவுடனான நட்பை பற்றி.. இவ்வளவு வருடம் கூடவே இருந்து அல்லவா பார்த்திருக்கிறாள். அதும் விதுன் ஆதித்தை நினைத்து வருந்துவதையும்.. அவனை ஏக்கமாக பார்ப்பதையும்…அவள் ஆஸ்வதி பக்கம் வந்து.”அண்ணி நானும் இவ்ளோ நாள் இதுக்கு தான் போராடிட்டு இருந்தேன். ஆனா என்னால இத செய்ய முடில…. ஆனா நீங்க வந்தோனெ பன்னிட்டிங்க…”என்றாள் அவளை கட்டிக்கொண்டு.
“ஆஆ…. ஏஞ்சல் விது என்ன நசுக்குறான்.”என்றான் ஆதி. உதட்டை பிதுக்கிக்கொண்டு
அதை கேட்டு அங்கு அனைவரும் சிரிக்க அதை பார்த்து ஆதியும் ஒன்னும் புரியவில்லை என்பது போல சிரித்தான்
“தாங்க்ஸ்மா..”என்றான் விதுன் அதற்கு மேல் அவனால் எதும் பேசமுடியவில்லை..
“ரொம்ப நல்லா இருக்கு யாராச்சும் தங்கச்சிக்கு தாங்க்ஸ் சொல்லுவாங்களா” என்றாள் ஆஸ்வதி முறைத்துக்கொண்டே.
அதனை கேட்டு விதுன் அவளை பாசமாக பார்த்தான்.
“உங்கள்ட ஒன்னு கேட்கவா”என்றாள் ஆஸ்வதி விதுனை பார்த்து.
“இன்னுமே நானே இவர பாத்துக்கிறேன் அப்போதா கொஞ்சம் பழகும். அப்புறம்.. என்று ஆஸ்வதி தயங்க…
“சொல்லுமா”என்றான் விதுன்
“அப்பறம் எனக்கு ஒரு தங்கை மட்டும் தா கூட அண்ணா இல்லனு ரொம்ப நாளா ஒரே ஏக்கமா இருக்கும் அதனால உங்கள அண்ணானு கூப்டவா”என்றாள் விழிகளை விரித்து.அழகாய். அதில் ஒருவன் வீழ்ந்தே போனான்…
அதில் இன்னும் இன்னுமே உணர்ச்சிவசப்பட்ட விதுன் கண்கள் கலங்க… சரி என்று தலையசைத்தான், இந்த உலகில் யாரும் இல்லாதவனுக்கு ஆதி கிடைத்த போது கிடைத்த அதே மகிழ்ச்சி இன்று தன்னை அண்ணா என்று அழைத்த போது இருந்தது.
“சரி சரி என்ன யாரும் என்ன கண்டுக்க மாட்றீங்க… நா போறேன்..”என்று கோவமாக திரும்பினாள் அனு
“ஹெய் அனி அப்டிலா இல்லடா.”என்றாள் ஆஸ்வதி..
“ஈஈஈ…… அண்ணி சும்மா “என்று பற்களை அழகாய் காட்டி புன்னகைக்க… அதில் ஒருவனும் வீழ்ந்து போனான்..”ம்ம் சொல்லவந்ததையே மறந்துட்டேன் பாருங்க தாத்தா உங்கள சாப்ட கீழ வர சொன்னாங்க”என்றாள் அனு..
“ம்ம்.. அண்ணா நீங்க இன்னிக்கி ஒரு நாள் அவருக்கு ட்ரேஸ் மாத்திவிடுங்க நாளைல இருந்து நா பாத்துக்கிறேன்”என்று உள்ளே சென்று 5நிமிசத்தில் இளம் மஞ்சள் நிறத்தில் அழகிய புடவையை கட்டிக்கொண்டு தலையில் அதே சேலையில் முக்காடு இட்டு வெளியில் வந்தாள் அதை பார்த்த அனி ஒரு நிமிடம் இமைக்க மறந்து பார்த்தாள். ஆஸ்வதி அவள் அருகில் வந்து “போலாமா அனி”என்றாள்..
“ம்ம்.. அண்ணி நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க அண்ணி..”என்றாள் அனு
அதில் சிறிதாக முகம் சிவந்து வெட்கப்பட்ட ஆஸ்வதி ஆதி கண்களுக்கு பேரழகியாக தெரிந்தாள்.“அப்படியா. ம்ம்.. நீயும் அமுல் பேபி மாறி அழகா இருக்க”என்றாள் ஆஸ்வதி
“போங்க அண்ணி”என்றாள் அனி வெக்கப்பட்டுக்கொண்டே தலையை குனிந்தவாறு.. அவள் தலை குனிந்திருந்தாலும் தன்னவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆனால் எதிர்தரப்பில் தான் பார்வை எங்கோ வெறித்தவாறு நின்றிருந்தான் அதில் அனி முகம் சுருங்கினாலும் தன்னை சமாளித்துக்கொண்டாள்.
ஆஸ்வதிக்கு அனியை ரொம்ப பிடித்துவிட்டது. எப்போதும் குழந்தை போல பேசும் அவளை பார்க்க அவளுக்கு தன் தங்கையின் நியாபகம் வந்தது.. அவளும் இப்படிதான் பெயருக்கு தான் அவள் வேறு தாயின் வயிற்றில் பிறந்தவள். ஆனால் அவள் நடவடிக்கை எல்லாம் ஆஸ்வதிக்கு அவள் அம்மா உயிருடன் இருந்தால் எப்படி உணர்வாளோ அப்படிதான் ஆஸ்வதியும் உணர்ந்தாள்.. அது பிடிக்காமல் தான் ஆஸ்வதி சித்தி இன்னும் ஆஸ்வதி மேல் கோவம் வளர்த்துக்கொண்டார்..
அனிக்கும் கூட ஆஸ்வதியை ரொம்ப பிடித்துவிட்டது.. ரொம்ப நாட்களுக்கு பின் தன் தாயின் பாசத்தை அவளிடம் உணர்ந்தது போல் தோன்றியது.
இவரகள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதற்குள் விதுன் ஆதித்திற்கு அழகாக வீட்டில் அணியும் டிசர்ட்டும், சார்ட்ஸும் அணிவித்து அழைத்துவந்தான்.. அதற்குள் பல முறை விதுன் ஆதியை கூர்மையாக பார்த்துக்கொண்டு இருந்தான்.. அவனது பார்வையை ஆதி உணர்ந்தாலும் எந்த பிரதிலிப்பையும் அவன் கொடுக்கவில்லை..கீழே அழைத்து வந்தான்
கீழே அனைவரும் சாப்பிட டைனிங் டேபிளில் அமர…. தாத்தா இவளை பார்த்து சிரித்துவிட்டு..”வாமா உட்காரு..”என்றார்..
அதை கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அவளை முறைக்க….. அவளோ அதை பார்க்கவில்லை தாத்தாவை பார்த்து தலை அசைத்துவிட்டு ஆதித்தின் அருகில் உட்கார்ந்தாள் அவன் அவளிடம் எதோ பேசிக்கொண்டே இருந்தான். அவளும் அதற்கு பதில் சொல்லிக்கொண்டே அவனுக்கு ஸ்பூனில் சாப்பாட்ட எடுத்து ஊட்டுவிட்டுக்கொண்டு இருந்தாள் அதை பார்த்த தாத்தாவிற்கும், விதுனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.. ஆனால் மற்றவர்களுக்கு. அதும் ப்ரேமிற்கு ஆதித் மேல் கோவமாக வந்தது..
“என்னபா கண்ணா.. உனக்கு ஏஞ்சல பிடிச்சிருக்கா..”என்றார்
“ம்ம்.. தாத்தூ. ஏஞ்சல் என்ட சூப்பரா பேசுறா… அது மட்டும் இல்லாம விது கூட எங்கூட ப்ரண்ட் ஆக்கிட்டா.”என்றான் கண்கள் மின்ன…. அதை கேட்டு தாத்தா விதுனை பார்த்து சிரிக்க…. மற்றவர்கள் அனைவரும் ஆஸ்வதியை பார்த்து முறைத்தனர்.
“என்ன இவ நடந்துக்குறத பார்த்தா சீக்கரமா இவன சரி பண்ணிடுவா போல இருக்கு.”என்றார் அபூர்வா தன் அருகில் உட்கார்ந்திருந்த தன் அண்ணன் அஜயிடம். அவரும் ஆம் என்று தலை ஆட்ட…..”இவள சும்மா,…விடக்கூடாது”என்று பரத் தன் அருகில் உட்கார்ந்திருக்கும் தன் மனைவிடம் சொன்னார் ஆக மொத்தன் அனைவரது மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது..”ஆஸ்வதி ஆதி..”மட்டுமே..
இனி என்ன ஆவாள்

(உயிர் காப்பாளா)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

1 thought on “உயிர் போல காப்பேன்-8”

Leave a Reply to Babubuvana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!