எண்ணம் -1

5
(9)

எண்ணம்-1

 

ஈட்&சாட் பாஸ்ட் புட் ஷாப்பில் ஒரு கல்லூரி பட்டாம்பூச்சிகளின் அந்த நாலு இளம்பெண்களும் கல்லூரியின் இறுதி நாளான இன்றைய தினத்தை கொண்டாட வந்திருக்கிறார்கள். 

 

அந்த இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்து, அவர்களை ரசித்து விட்டு தான் சென்றனர்.

 

அதில் ஒருவன் மட்டும் எரிச்சலுடன் அவர்களைப் பார்த்தான்.

‘பப்ளிக்ல எப்படி பிகேவ் பண்ணனும்னு கூடத் தெரியாமல் இருக்குறாங்க. இர்ரெஸ்பான்ஸிபல் இடியட்ஸ்.’ என்று மனதிற்குள் திட்டியவன், தனக்கு முன்பு இருந்த காஃபியை எடுத்து குடித்தான்.

மனதிற்குள் தொழிலில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

 

அவனது யோசனையை தடை செய்வது போலவே மீண்டும், அந்தக் கூட்டத்தில் கலகலவெனப் பேச்சு சத்தம் அதிகமானது.

 

“ஹே! தியா! எங்கடி வர்ஷுவை காணும்… உன்னோட தானே வந்தா. இல்லை அவ தனியா ஸ்கூட்டில வந்தாளா?” என்று சுபிக்ஷா வினவ.

 

தியா பதில் சொல்வதற்குள் ஷாலினி முந்திக் கொண்டு பதிலளித்தாள். “இல்லையே! காலையில் காலேஜுக்கு ஒன்னா தான் வந்தாங்க.” என்றாள்.

 

“இல்லை! ஏதோ கால் வந்தது, அப்புறமா வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்னு சொன்னா?” என்றாள் தியாழினி.

 

“ஓஹோ! அவ லவ்வரோட என்ஜாய் பண்ண போயிட்டா போல.” என்று மஹதி கேலி செய்ய.

 

“கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க ரெண்டு பேரும் உன்னை கழட்டி விட ஆரம்பிச்சுட்டாங்க போல. பார்த்து கவனம் தியா!” என்று அக்கறையாக கூறுவது போல் வம்பிழுத்தாள் சுபிக்ஷா.

 

சுபிக்ஷா, தியாழினி, ஷாலினி, வர்ஷிதா, மஹதி இவங்க ஐந்து பேரும் தான் ஃபைவ் ஸ்டார் டீம். காலேஜில கால் எடுத்து வச்சதுல இருந்து நெருங்கிய தோழிகள். 

 

தியாழினி கலகல பேர்வழி. அவளை பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். அவள் தான் அவர்களது ஃபைவ் ஸ்டார் குழுவின் ஸ்பெஷல் பர்சன்.

 

அப்படி ஜாலியாக போன அவர்களது கல்லூரி வாழ்க்கையின் இறுதி நேரத்தில் வர்ஷிதா காதலில் விழுந்தாள்.

 

அது அப்படி ஒன்னும் பெரிய செயல் இல்லை. ஆனால் அவள் காதலித்ததோ தியாழினி அண்ணனை. அதற்குப் பிறகு அவர்களுக்குள் சிறு சலசலப்பு வரத்தான் செய்தது. வர்ஷிதா மட்டும் தியாவுக்கு முக்கியமானவளாகி விட்டாளே என்ற சிறு பொறாமையினால், தியாவிடம் சில நேரம் கேலி செய்வார்கள்‌. தியாழினி அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டாள்.

 

இப்போதும் சுபிக்ஷா கூறியதைக் கேட்டவளோ, “ வர்ஷு மட்டும் அப்படி நடக்கட்டும். நானும் என் வழியை பார்த்துட்டு சீக்கிரம் ஒரு ஆளை கரெக்ட் பண்ணிட்டு போயிடுறேன். ஓகே!” என்றுக் கூறி கண்ணடித்து சிரித்தாள்.

 

அவள் கூறவும் எல்லோரும் நகைத்தனர்.

 

நிமிர்ந்துப் பார்த்த அந்த ஒருவனோ, தியாழினியை முறைத்தான்.

 

அவளோ தன்னை ஓருத்தன் முறைத்துக் கொண்டிருப்பதைக் கூட கண்டுக்கொள்ளாமல், தோழிகளுடன் சலசலத்துக் கொண்டிருந்தாள்.

 

“பசிக்குதுடி! எங்க நம்ம ஆர்டர் பண்ணது வரவே இல்லை.” என்று தியாழினி புலம்ப.

 

பேரர் சரியாக அவர்கள் ஆர்டர் செய்ததை எடுத்துக் கொண்டு வந்தார்.

 

அப்படியே பேச்சும், சிரிப்புமாக அதை நொறுக்க ஆரம்பித்தனர்.

 

“ அடுத்து என்ன பிளான்?” என்று சுபிக்ஷா வினவ.

 

“அப்புறம் என்ன? எனக்கு ஒரு மில்க்ஷேக்!”என்று தியாழினி கூற.

 

 அவளை வெட்டவா, குத்தவா என்பது போல் எல்லோரும் பார்த்தனர்.

 

“ என்ன மச்சி? எல்லோரும் இவ்வளவு பாசமா பார்க்குறீங்க?”என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு வினவ.

 

“ஓவர் ஆக்ட் உடம்புக்கு ஆகாதுடி செல்லம். நாங்க கேட்டது அடுத்து என்ன செய்ய போற? மேல படிக்கப் போறீயா? இல்லை வேலைக்கு போகப் போறியா?” என்று சுபிக்ஷா வினவ‌‌.

 

“ஓ! அதை கேட்க்குறிங்களா? நான் கூட சாப்பிட்டத்துக்கு அப்புறம் என்ன ப்ளான்னு நினைச்சுக்கிட்டேன். ம்! உங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சிடுச்சு. நீங்க வேலைக்குப் போறீங்க. நான் என்ன பண்றது? சும்மா தான் இருக்கணும்.” 

 

“ஹே தியா! நீ ஒழுங்கா இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணயிருந்தா உனக்கும் வேலைக் கிடைத்திருக்கும். உனக்கு தான் இன்ட்ரஸ்ட் இல்ல‌.” என்றாள் ஷாலினி.

 

“அதான் தெரியுதுல. அப்புறம் ஏன் டி தொணதொணக்குறீங்க.”

 

“அப்புறம் என்னடி பண்ண போற? மேல படிக்க போறியா?” என்றாள் சுபிக்ஷா.

 

“ ஆள விடுங்கடி! இருபத்திஒரு வயசு வரைக்கும் ஓடிக்கிட்டே இருந்துட்டேன். கொஞ்ச நாளாவது ரிலாக்ஸா இருக்கணும். வீட்ல சும்மா இருக்கணும். சும்மா இருக்கிறது போரடிச்சு போகணும். அந்த அளவுக்கு என்ஜாய் பண்ணனும் நினைச்சிட்டு இருக்கேன் டி.” என்றாள் தியாழினி.

 

“ வாட்?” என்று அதிர்ச்சியாக ஷாலினி வினவ.

 

“ஷாக்கை குற! ஷாக்கை குற!” என்று கேலி செய்தாள் தியாழினி.

 

“பீ சீரியஸ் தியா! இதுக்காகவா காலேஜ்ல விழுந்து விழுந்து படிச்ச? நான் கூட கேம்பஸ் இன்டர்வியூக்கு வந்த கம்பெனிஸ் உனக்கு பிடிக்கலைப் போலன்னு நினைச்சேன். நமக்குன்னு ஒரு வருமானம் இருக்கணும். எல்லாத்துலையும் விளையாட்டா இருக்காதே.” என்று அக்கறையாக கூறினாள் சுபிக்ஷா.

 

“ சரிங்க பாட்டி! உங்க ராமயணத்தை அப்புறமா கண்டினியூ பண்ணுங்க. இப்போ நான் கேட்ட மில்க்ஷேக்கை ஆர்டர் போடு. அப்படியே அந்த தர்ஷூவுக்கு பீட்ஸா ஆர்டர் பண்ணு. எப்படியும் அவ வரப்போறதில்லை.” என்று சாப்பிடுவதிலே கவனத்தை செலுத்தினாள் தியாழினி.

 

தலையில் அடித்துக் கொண்டு அவள் கேட்டதை செய்தாள் சுபிக்ஷா.

 

 அவள் மட்டும் தலையில் அடித்துக் கொள்ளவில்லை. அங்கிருந்த அவனும் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான். மனதிற்குள் தியாழினியை திட்டிக் கொண்டே சென்றான். ‘ இந்த ஜென்ரெஷன்ல இப்படி ஒரு லேஸி கேர்ளை நான் பார்த்ததே இல்லை. இவக் கூட எல்லாம் கொஞ்சம் நேரம் கூட யாராலும் இருக்க முடியாது.’ என்று புலம்பியவனுக்குத் தெரியவில்லை. இனி அவள் அவனோடு தான் இணைப்பிரியாமல் சுற்றப் போகிறாள்‌ என்று அறியாமலேயே அவன் காரை நோக்கி சென்றான்.

 

ஏதோ தனக்குத் தானே பேசி தலையசைத்து செல்பவனையே விழி அகல பார்த்தால் தியாழனி.

 

 அவள் தோளிலே ஒரு அடி அடித்து, “என்ன வாயில இருந்து ஜொள்ளு ஊத்துது.” என்று ஷாலினி கூற.

 

 வேகமாக வாயைத் துடைத்துக் கொண்டாள் தியாழினி.

 

எல்லோரும் அவளைப் பார்த்து கேலியாக சிரிக்க‌‌.

 

“இல்ல யார் பெத்த புள்ளையோ! தன்னைத் தானே தலையில அடிச்சுகிட்டு, ஏதோ முணுமுணுத்துட்டு போச்சேன்னு பார்த்தேன்.”

 

“சைட்டடிச்சிட்டு பேச்சைப் பாரு.” என்று மஹதி கேலி செய்ய.

 

“சரி! சரி! ஓவரா ஓட்டாதீங்க. ஆளை விடுங்கடி.” என்று சரண்டரானாள் தியாழினி.

 

ஒரு வழியாக எல்லோரும் சாப்பிட்டு முடித்து அங்கிருந்து கிளம்ப‌.

 

தியாழினியும் பார்க்கிங்குக்கு சென்று அவளது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, அவளது போன் அடித்தது.

 

‘என்ன வர்ஷு வந்துட்டாளா? ஆச்சரியமா இருக்கே.’ என்று தனக்குள் பேசிக் கொண்டே போனை எடுத்தவள், அதை ஆன் செய்துக் கொண்டே சுற்றிலும் பார்த்தாள்.

 

வர்ஷிதாவை காணவில்லை.

 

“வர்ஷு எங்கடி இருக்க?” என்று வினவ.

 

அவளோ, “தியா! தியா! ” என்று அழைத்து விட்டு, எதுவும் கூறாமல் அழுதாள்.

 

“என்னாச்சு வர்ஷு? எதுக்கு அழற?” என்று வினவ.

 

அவளோ எதுவும் சொல்லாமல் அழுதுக் கொண்டே இருக்க.

 

“ சரி நான் ஃபோனை வைக்குறேன். நீ அழுது முடிச்சிட்டு எனக்குக் கூப்பிடு.“ என்று தியாழினி கூற.

 

“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன் நீ போனை வைக்கவானு கேக்குற?” என்று கோபமாக வினவினாள் வர்ஷிதா.

 

“ நீ சீரியஸா பேசிட்டு இல்லம்மா… சீரியஸா அழுதுட்டு தான் இருக்க. அதான் நான் ஃபோனை வைக்கட்டுமான்னு கேட்டேன். எவ்வளவு நேரம் தான் நீ எதாவது சொல்லுவேன்னு வெயிட் பண்றது.”என்றாள் தியாழினி. ‌

 

“அது வந்து உங்க அண்ணன்…” என்று இழுக்க.

 

“அண்ணனுக்கு என்னடி?” என்று சலிப்பாக வினவினாள் தியாழினி.

 

“உங்க அண்ணன் நம்பளை ஏமாத்திட்டார்டி.” என்று மீண்டும் வர்ஷிதா அழ.

 

“இப்போ அழாம என்ன விஷயம்னு சொல்றியா? இல்லை நான் ஃபோனை வைக்கவா?” என்று கோபமாக தியாழினி வினவ‌‌.

 

“எனக்கு பயமா இருக்கு. வச்சுடாதே.”

 

“சரி சொல்லு ! நீ எங்க இருக்க? வீட்ல தானே.”

 

“இல்லை! நாங்க ஹாஸ்பிடல்ல இருக்கோம்.”என்றாள் வர்ஷிதா.

 

“அண்ணனுக்கு என்ன ஆச்சு?” என்று வினவிய தியாழினிக்கு இப்போது பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

“உங்க அண்ணன் பாய்ஸன் குடிச்சிட்டார். நான் நம்ம வீட்டுக்கு பக்கத்தில உள்ள ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்.” என்று ஒரு வழியாக விஷயத்தைக் கூறியிருந்தாள் வர்ஷிதா.

 

“ நீ பயப்படாதே!இதோ பத்தே நிமிஷத்தில அங்க இருப்பேன்.” என்றவள் வேகமாக வண்டியை ஓட்டினாள்.

 

 அதற்கு வேகமாக மனதிற்குள் எண்ணங்கள் ஓடியது. ‘அண்ணனுக்கும், வர்ஷுக்கும் எதுவும் சண்டையா? வர்ஷு அண்ணனை அடிச்சுட்டாளோ? அதான் அண்ணன் பாய்ஸன் சாப்பிட்டானா? ஒன்னும் புரியலையே?” என்று எண்ணிக் கொண்டே அங்கு விரைந்தாள்.

 

அந்த பெரிய மருத்துவமனையின் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு அரக்கப் பறக்க ஓடி வந்தவள், எதிரே வந்த ஒரு பெண்மணியிடம்,” ஐயோ! டாக்டர்! எங்க அண்ணனுக்கு என்ன ஆச்சு? எப்படியாச்சும் எங்க அண்ணனை காப்பாத்துங்க டாக்டர்?”என்று அவரது கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச.

 

“அய்யே! உனக்கு கண்ணு, கிண்ணுத் தெரியுமா இல்லையா? நான் டாக்டர் இல்லைமா. இங்கே கூட்டி பெருக்குற ஆயாம்மா. முதல்ல கையை விடும்மா! கூட்டி, பெருக்கி தொடைக்கணும். நீ வேற நேரங்காலம் தெரியாமல் கைப்பிடுச்சுக்குனு‌‌.” என்று சடசடக்க.

 

படக்கென்று கையை விட்டவள், ‘ஙே.’ என்று விழித்தாள்.

 

அவளைப் பார்த்து பரிதாபப்பட்ட அந்த ஆயாம்மாவோ, “ தோ பாரு மா! அங்க போய் கேளுங்க. உங்க அண்ணனைப் பத்தி சொல்லுவாங்க.” என்றார்.

 

“அடச்சே! ரிஷப்ஷன்ல தானே விசாரிக்கணும்‌.” என்று தன் தலையில் தட்டிக் கொண்டவளோ அங்கு ஓடினாள்‌.

 

“ஐயோ! எங்க அண்ணனுக்கு என்னாச்சு? இப்போ அவர் எப்படி இருக்கார்?” என்று பதறினாள் தியாழினி. 

 

“முதல்ல உங்க அண்ணன் பேரைச் சொல்லுங்க.” என்று அந்த ரிசப்ஷனிஸட் வினவ.

 

“நேத்ரன்! தனது அண்ணனின் பெயரைக் கூறினாள்.

 

“ஓ! அந்த பாய்ஸன் கேஸா. நவ் ஹீ ஈஸ் ஆல்ரைட். பயப்பட வேண்டாம். ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல ஒன் நாட் ஒன்ல இருக்காங்க.” என்றுக் கூறிப் புன்னகைத்தாள்.

 

வேகமாக படியேறியவளின் நெஞ்சம் அண்ணனை நினைத்துத் துடித்தது.

 

பதற்றத்தோடு சென்றவள் கண்டது என்னவோ, காலை அகட்டி படுத்துக்கிட்டிருந்த நேத்ரனை தான்.

 

அவன் படுத்திருந்த கோலத்தைப் பார்த்ததும் புசுபுசுனு கோபம் வந்தது.

 

“டேய் எருமை! என்னடா பிரச்சனை? கொஞ்ச நேரத்தில

உசுரே போயிடுச்சு. பயந்து போய் ஓடி வந்தா, சார் பப்ராக்கான்னு படுத்துட்டு ஒய்யராம இருகக.” என்று அவனை கைப்பையால் காலிலே ஓங்கி அடித்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!