“ஐயோ! இங்க என்ன நடக்குது?” என்று அதிர்ந்து தீபா வினவ.
“தீபு! நீ எங்கே இங்க…” என்று ஆச்சரியமாக கேசவ் வினவ.
“ஏன் நான் ஆஃபிஸுக்கு வரக் கூடாதா? வந்ததுனால தானே உங்க லட்சணம் தெரியுது.”
“நான் என்ன பண்ணேன் தீபு.”என்று புரியாமல் வினவினார் கேசவ்.
“ஐய்யோ! ஐயையோ!ஒன்னுமே தெரியாத பச்சமண்ணு பாருங்க. ஆஃபீஸ்னு கூட பார்க்காம ஒரு பொண்ணோட சேர்ந்து குடிச்சிட்டு இருக்கீங்க? இது தான் நீங்க ஆஃபிஸை பார்த்துக்குற லட்சணமா?” என்று இருவரையும் பார்த்து முறைக்க.
தியாழினி, தன் கையிலிருக்கும் மாதுளம் ஜுஸையும், தீபாவையும் பார்த்தவளுக்கு சிரிப்பு பீறிட்டது.
எங்கே தான் சிரிப்பதைப் பார்த்தால், அவர்களுக்கு கோபம் அதிகமாகிவிடுமோ என்று அஞ்சி சிரிப்பை மறைக்க தலையைக் குனிந்துக் கொண்டாள்.
ஆனால் கேசவிற்கு அந்த மாதிரி எந்த வித அச்சமும் இல்லாததால் அடக்கமாட்டாமல் நகைத்தார்.
“கையும் களவுமாக மாட்டிக்கிட்டும் கொஞ்சம் கூட பயப்படாம சிரிக்கிறீங்க. அந்த பொண்ணாவது பயந்துப் போய் நிக்குது” என்று தீபா கூற.
‘என்னது! நான் பயந்துட்டேனா!’ என்று மனதிற்குள் எண்ணிய தியாழினியோ சிரிப்பை அடக்க படாதபாடு பட்டாள்.
“தீபு! இத்தனை வயசுக்கு அப்புறமும் என்னை சந்தேகப்படுறியா டியர்?” என்று நம்பாமல் கேசவ் வினவ.
“ம்! நினைப்பு தான்… நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்கன்னு தெரியும். ட்ரிங்க்ஸ் பண்ண நான் அலோவ் பண்ணலேன்னு புதுசா வேலைக்கு சேர்ந்த பொண்ண பயமுறுத்தி வாங்கிட்டு வந்திருப்பீங்க. என்று அவரை முறைத்துக் கொண்டே கூற.
தீபாவின் பேச்சில் சிரிப்பை அடக்க முயன்ற தியாழனி, கட்டுப்படுத்த இயலாமல் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
கேசவ்வும், தீபாவும் தியாழினியைப் பார்க்க,
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிய தியாழினியோ,”சாரி மேம்! சாரி சார்!”என்றுக் கூறும் போதே மீண்டும் சிரிப்பு வர, நகைத்தாள்.
தீபாவின் இதழ்களிலும் புன்னகை.
தீபாவைப் பார்த்து முறைத்த கேசவ்வோ,” உன் கற்பனை குதிரையே பறக்க விடாதே! பாவம் அந்த பொண்ணு… பயந்துடப் போகுது. நீ சொன்னது போலவே நான் எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டேன். இது ஜஸ்ட் ஜூஸ் தான்.” என்றார்.
“அப்படியா? கலரே வேற மாதிரி இருக்கே!” என்று நம்பாமல் அவர் கையில் இருந்த கிளாஸை வாங்க.
“ஹே! இது தியா வீட்ல இருந்து போட்டுட்டு வந்த ஃப்ரெஷ் ஜூஸ்.” என்று சொல்லிட்டு இருக்கும் போதே, மடக்மடக்கென்று அதை குடித்தும் விட்டார்.
“ஆமாம்! மாதுளம் ஜுஸ்… சுகர், பால் இல்லாமல் நேச்சுரலா இருக்கு.” என்ற தீபாவை பார்த்து பாவமாக கேசவன் விழிக்க.
“இதை வேணும்னா குடிங்க சார்!”தியாழினி தன் கையிலிருந்த க்ளாஸை நீட்ட.
“பரவாயில்லை! நீ குடி மா.” என்று இருவரும் ஒரு சேர கூற.
“இருக்கட்டும் மேம்! சார் குடிக்கட்டும்!” என்று தியாழினி கூற.
மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க மனைவியை முறைத்துக் கொண்டிருந்தார் கேசவ்.
கணவனின் பாசப் பார்வையை உணர்ந்த தீபாவோ,”சாரிங்க! உங்களை விட நான் தான் டயர்டா இருந்தேன். உங்க பையனோட என்னை கோர்த்து விட்டுட்டு ஜாலியா ஆபிஸுக்கு வந்துட்டீங்க.” என்றாள்.
“நீ தானே அவனோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலன்னு சொன்னேன்.”
“நான் தான் சொன்னேன். ஆனால் அவன் இப்படி வச்சி செய்வான்னு கண்டேனா?” தீபாவின் புலம்பலில், தியாழினியோ, அவனது எம்.டியை நினைத்து பயந்தாள்.
‘பெத்த அம்மாவையே இவ்வளவு டார்ச்சர் பண்றான். நான் எதுக்காக இங்கே வந்திருக்கேன்னு தெரிஞ்சா அவ்வளவு தான். நான் காலி. அந்த ஆள் ஆபிஸுக்கு வருவதற்குள் வந்த வேலையை முடிச்சிட்டு ஓடிப் போயிடணும். அவன் கிட்ட சிக்கக் கூடாது.’ என்றவளுக்குத் தெரியவில்லை, சற்று நேரத்திலே, வாலண்டரியாகப் போய் அவனிடம் பேசி வாயடைத்து அவன் நிற்கப் போவதை அறியாமல் தனக்குள் புலம்பியவள், தலையை உலுக்கிக் கொண்டு நிகழ்வுக்கு வந்து தனக்கு எதிரே ஆர்க்யூ பண்ணிக் கொண்டிருந்தவர்களின் பேச்சில் கவனத்தை வைத்தாள்.
“அப்படி என்ன அவன் பண்ணான்? அவனே அடிபட்டு முடியாமல் கிடக்கிறான்?”என்ற கேசவ்வை பார்த்த தீபாவோ,”நீங்க கிளம்பும் போது அரை மயக்கத்துல இருந்ததை வச்சு சொல்றீங்களா? அதெல்லாம் இப்போ தெளிவா இருக்கான்.” என்றார்.
“நல்லது தான்! ஆனா அவன் கேட்கிற கேள்விக்குத் தான் என்னால பதில் சொல்ல முடியலை.”
“ அப்படி என்னதான் ரித்து கேள்வி கேட்டான்.”
“ ஒன்னா, ரெண்டா? அது பாட்டுக்கும் நான்ஸ்டாப்பா கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு இருக்கான். என்னமோ அவன் ஹெட் மாஸ்டர் மாதிரியும் நான் என்னமோ அவனோட வொர்ஸ்ட் ஸ்டூடெண்ட் மாதிரியும் ட்ரீட் பண்றான். நீங்க எதுவும் அவனை கேட்க மாட்டீங்களா?”
“ம்கூம்! உன்னை மட்டுமா, என்னையும் தான் அப்படி நடத்துறான்?” என்றார் கேசவ்.
“எல்லாம் நீங்க கொடுத்த இடம் தான்.” என்றார் தீபா.
“எங்க எந்த பிரச்சனைனாலும் நான் தான் காரணமும்னு முடிப்ப. சரி ஆளை விடுமா.”
“நான் விட்டுடுவேன். ஆனா உங்க பையன் விடமாட்டேன்.”
“ என்ன தீபு சொல்ற? ஒன்னும் புரியல.”
“நான் தலைத்தெறிக்க ஓடி வந்த காரணம். இன்னும் கொஞ்ச நேரத்தில தெரிய வரும் பாருங்க.” என்று தீபா சொல்லி முடிப்பதற்குள்,
“மே ஐ கமின் சார்.” என்று மேனஜரின் குரலும், கதவு தட்டும் சத்தமும் கேட்க.
“இந்தா வந்துடுச்சு!” என்றார் தீபா.
*எஸ் கம்மிங்!” என்ற கேசவ்வோ, ’எந்த பிரச்சனை வரப் போகுதோ. தெரியலையே!’ என்று குழப்பத்துடன் உள்ள வந்த மேனேஜரைப் பார்க்க.
“சொல்லுங்க கோபி!” என்றார் கேசவ்.
“அது வந்து…” என்ற கோபி, தயக்கத்துடன் தியாழினியை பார்த்தார்.
“நான் வேணும்னா வெளியில வெயிட் பண்றேன் சார்.” என்ற தியாழினியோ நகர கூட முயற்சி செய்யவில்லை.
“பரவாயில்லை நீ இருமா. என் பி.ஏ தானே. இனி எல்லா விஷயமும் உனக்கும் தெரியணும்.”என்று அமர்த்தலாகக் கூறினார் கேசவ்.
“சார்! எம்டி சார் ஃபோன் போட்டார்.” என்று தயக்கத்துடன் கூறினார் கோபி.
“என்ன விஷயம் கோபி.”
“நான் எடுக்கலை சார். சிசிடிவி கேமரா பத்தி கேட்பார். என்ன சொல்றதுன்னு தெரியலை.” என்று முகமெல்லாம் வியர்க்க, பயத்துடன் கூறினார்.
“ஏதாவது சொல்லி சமாளிங்க கோபி. நீங்க ஃபோன் எடுக்கலைன்னா தான் டென்ஷனாவான்.” என்ற கேசவ், தன் மனைவியைப் பார்த்து, “இது தான் பிரச்சினையா?” என்று வினவ.
“ஆமாம்! நான் வீட்ல இருக்கும்போது உங்களுக்கு ட்ரை பண்ணான். உங்களை ரீச் பண்ண முடியலை. என் கிட்ட டென்ஷனா கத்துனான். அதான் நான் கிளம்பி வந்துட்டேன்.”
“ஏதாவது சொல்லி சமாளி!”என்று தப்பிக்கப் பார்த்தார் கேசவ்.
மீண்டும் கோபியின் ஃபோன் அடிக்க.
தயக்கத்துடன் எடுத்தார் கோபி.
“சார்!”
“என்ன கோபி? இனி நான் ஆஃபிஸுக்கு வரவே மாட்டேன்னு முடிவு பண்ணிட்டியா? ஃபோனே எடுக்க மாட்டேங்குற?”
“நோ சார்! ரெஸ்ட் ரூம் போயிருந்தேன். சாரி சார்…” என்று படபடக்க.
“ம்! சி.சிடிவி கேமரா ஏன் என் ஃபோன்ல தெரிய மாட்டேங்குது?”என்று நேரடியாவே கேள்வி வர.
“ரிப்பேர் சார்.” என்று சின்னக் குரலில் கூற.
“வாட் ரிப்பேரா? எப்போதிலிருந்து ரிப்பேர். ஏன் இன்னும் சரி பண்ணலை?”என்று கேள்விக் கணைகளைத் தொடுக்க.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கோபி முடித்தார்.
“ஓகே! அப்போ சி.சி.டி.வி கேமரா வொர்க் ஆகுது. எனக்கு மட்டும் தான் கனெக்ட் ஆகலை. ரைட்…”
“சார்…” என்று இழுத்தான் கோபி.
“பைன்! டாடை எனக்கு கால் பண்ண சொல்லு.” என்று ரித்திஷ்ப்ரணவ் ஃபோனை வைத்து விட.
“என்னாச்சு?” என்று தீபாவும், கேசவும் வினவ.
“சார்! ரித்திஷ் சார் கெஸ் பண்ணிட்டார். உங்களை ஃபோன் பண்ண சொன்னார்.”
“ஏதாவது சொல்லி சமாளின்னு தானே சொன்னேன்.” என்று கேசவ் படபடக்க.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த தியாழினியோ,”என்ன பிரச்சினை சார்?” என்று வினவினாள்.
“இங்கே நடக்குறதை ரித்திஷ் சார் ஃபோன்லயும் கவனிக்க முடியும். இப்போ எம்.டி சார். அந்த கனெக்ஷனை மட்டும் கட் பண்ண சொல்லிட்டார். அதை அவர் கெஸ் பண்ணிட்டார். எம்டி சார் கிட்ட பேசணும்னு ரித்திஷ் சார் சொல்றாரு.” என்று கோபி கூற.
அங்கிருந்த மூவரையும் ஒரு பார்வை பார்த்தவள்,” சார்! நான் வேணும்னா பேசட்டுமா!” என்று கேட்க.
நெஞ்சில் கையை வைத்து அதிர்ந்தார் கோபி.
“ நீ என்ன பேசப்போற? அவன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. அதுவுமில்லாமல் என் ஃபோன்ல இருந்து பேசுனா, அதுக்கும் சேர்த்து திட்டுவான்மா.” என்றார் கேசவ்.
“ நான் உங்க பிஏ தானே சார். நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். உங்க விருப்பப்படி ரித்திஷ் சார் ஃபோன்ல சி.சிடிவி கேமரா கனெக்ட் பண்ணக் கூடாது தானே. நான் பார்த்துக்குறேன்.” என்று நம்பிக்கையாக பேசும் தியாழினியிடம் தலையாட்டுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை கேசவிற்கு,
அவரது ஒற்றை தலையாட்டலிலே முகத்தில் புன்னகைப் பூக்க.
“சார் ஃபோன்!” என்று தியாழினி கேட்க.
கோபியை பார்த்தார் கேசவ்.
‘யார் பெத்த புள்ளையோ? முத நாளே வேலையை விட்டு போகப்போகுது.’ என்று இரக்கமாகப் பார்த்துக் கொண்டே மேஜையில் இருந்த ஃபோனை எடுத்து, லாக்கை ரிலீஸ் செய்து ரித்திஷ்ப்ரணவிற்கு அழைப்பு விடுத்தவர், தியாழினியிடம் ஃபோனை நீட்டினார்.
“ஹலோ! ரித்திஷ்ப்ரணவ் ஹியர்!” என்ற அழுத்தமான குரலில், காதிலிருந்து வேகமாக நகர்த்தியவள்,’ ஓ காட்! உடம்பு சரியில்லாதவர் குரல் மாதிரியா இருக்கு.’ என்று காதை தேய்த்துக் கொண்டு, அவனிடம் பேச முயன்றாள்.
“ஹலோ! யார் பேசுறீங்க?” என்று இந்த முறை வினவியவனின் குரலில் எச்சரிக்கை உணர்வு அதிகமானது.